2011 உலகக் கிண்ணத்தின் இறுதி முன்னோட்டம் - B பிரிவு அணிகள் பற்றிய அலசல்

2/19/2011 12:56:00 PM

(11) Comments



உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது போட்டி நடைபெறக் கிட்டத்தட்ட  ஒரு மணித்தியால நேரமே இருக்கையில் இம்முறை B பிரிவில் விளையாடும் அணிகள் ஏழினையும் பலம்+பலவீனங்களுடன் அலசும் பதிவைத் தருகிறேன்.


பங்களாதேஷ் 

இம்முறை உலகக் கிண்ணத் தொடரை இணைந்து நடத்தும் மற்றொரு நாடு. அண்மைக்காலமாக குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் முன்னேற்றத்தைக் காட்டிவரும் ஒரு இளமைத் துடிப்புள்ள அணி. இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் களம் இறங்குகிறது.

பலம் - உள் நாட்டிலேயே அனைத்து முதல் சுற்றுப் போட்டிகளும் இடம் பெறுகின்றன.(ஆடுகளம்+ரசிகர்கள்)
அணியின் பெரும் தூண்களான சுழல் பந்துவீச்சுக் குவியல்.
அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.
ஷகிப் அல் ஹசன் என்ற சகலதுறைக் கதாநாயகத் தலைவர்
துடிப்பான களத் தடுப்பு


பலவீனம் - வேகப் பந்துவீச்சு நம்பகமானதல்ல
பெரிய அணிகளுடன் இது போன்ற பெரிய சர்வதேசப் போட்டிகளில் மோதி முன்னேறும் அனுபவக் குறைவு
கொஞ்சம் பலவீனமான இடை வரிசைத் துடுப்பாட்டம்


நட்சத்திரம் - ஷகிப் அல் ஹசன் - தனியோருவராகத் தன பந்துவீச்சு+துடுப்பாட்டம் மூலமாக ஒரு போட்டியை மாற்றவோ வெற்றி கொள்ளவோ கூடிய அனுபவஸ்தர். இளவயதிலேயே தலைமைப் பொறுப்பைத் தடுமாற்றமின்றி செய்து நிரூபிப்பவர்.

அப்துர் ரசாக்,தமீம் இக்பால் ஆகியோரும் கவனிக்கக் கூடியவர்களே.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - நயீம் இஸ்லாம் - சுழல் பந்துவீசும் சகலதுறை வீரர். கொஞ்சம் அதிரடியாக ஓட்டங்களும் குவிக்கக் கூடியவர்.
பங்களாதேஷ் அணியில் நிறைந்து காணப்படும் சுழல் பந்துவீசும் சகலதுறை வீரர்கள் வரிசையில் இம்முறை தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.


பங்களாதேஷ் இம்முறை பிரிவு ரீதியிலான போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை நிச்சயம் வீழ்த்தும். சிலவேளைகளில் இங்கிலாந்தையும் கவிழ்க்கும் என நம்புகிறேன். எனவே கால் இறுதி நிச்சயம். அதற்கு மேலே செல்வது சந்தேகம். ஆனால் சென்றால் நிச்சயம் சந்தோசம்.
உலகக் கிண்ணம் வெல்லாத ஒரே ஒரு ஆசிய அணியும் இம்முறை சாம்பியன் ஆகட்டுமே.


இங்கிலாந்து

அதிக தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியும் (ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக) இன்னும் உலகக் கிண்ணம் வெல்லாத துரதிர்ஷ்டசாலி அணி.(1979,1987,1992)
ஆனாலும் இறுதியாக இறுதிப் போட்டியில் விளையாடியாது 1992ஆம் ஆண்டில்.
அதற்குப் பிறகு அரையிறுதிக்குக் கூட வரமுடியாது போயுள்ளது.
இம்முறையும் திடீரென form இழந்த அணியாகத் தோன்றுகிறது.

பலம் - அனுபவமும்+ஆற்றலும் கொண்ட துடுப்பாட்ட வரிசை
சமநிலையான பந்துவீச்சாளர் வரிசை
பீட்டர்சன்,ட்ரோட் ஆகியோரின் துடுப்பாட்ட formம் ப்ரோடின் கடைசி இரு பந்துவீச்சுப் பெறுபேறுகளும் தரும் நம்பிக்கை

பலவீனம் - ஆசிய ஆடுகளங்களில் முன்பிருந்தே சாதிக்கத் தவறுகின்றமை
மோர்கன் காயமடைந்தது
ஸ்வான் முழு குணமடையாதது
சுழல் பந்துவீச்சாளருக்கு எதிராக இன்னமுமே தடுமாறுவது

நட்சத்திரம் - கெவின் பீட்டர்சன் - அண்மைக்காலத்தில் இங்கிலாந்தைத் தனியோருவராக துடுப்பாட்டப் பக்கமாகத் தூக்கிச் செல்கிறார்.இம்முறை பலீனமடைந்துள்ள இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசைக்குப் பலம் சேர்க்க ஆரம்ப வீரராக இறங்குகிறார். இவரது அதிரடிகளும் சுழல் பந்துவீச்சுக் கையாள்கையும் தெரிந்ததே.. எனினும் புதிய பொறுப்பில் பீட்டர்சன் சறுக்குவதும் சாதிப்பதும் தான் இங்கிலாந்துக்கு வழிகாட்டும்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - மைக்கேல் யார்டி - சுழல் பந்துவீசும் இந்த சகலதுறை வீரர் ஏற்கெனவே தான் விளையாடியுள்ள போட்டிகளில் தன்னை நிரூபித்தே வந்துள்ளார். சாதகாமான ஆடுகளங்களில் இம்முறை சாதிப்பார் என நம்புகிறேன்.

கால் இறுதி வரை செல்லத் தடையில்லை. அதற்கு மேலே இம்முறையும் முடியாது.
முதல் சுற்றில் பங்களாதேஷுடனான போட்டியை ஆவலுடன் பார்க்கிறேன். யார் வெல்வது என்று.



இந்தியா

இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிஎனக் கருதப்படும் மிகப் பலம் வாய்ந்த அணி. 83ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற பிறகு இன்னொரு உலகக் கிண்ணம் வேண்டித் தவியாய்த் தவிக்கிறது. கடந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு முதல் சுற்றோடு வெளியேறிய பின் இம்முறை மிகப் பெரும் எதிர்பார்ப்பின் அழுத்தத்துடன் ஆனால் பலமான வாய்ப்புக்களுடன் நுழைகிறது.

பலம் - மிகப் பலம் + அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசை
சாதனை படைத்த தனித்து ஜொலிக்கும் நட்சத்திர வீரர்கள்
உள் நாட்டு ஆடுகளங்களில் இடம்பெறவுள்ள போட்டிகள்
அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள்
சில நிமிடங்களில் போட்டியின் போக்கைத் திசை மாற்றும் அதிரடி வீரர்கள் - சச்சின், சேவாக், பதான், யுவராஜ், தோனி

பலவீனம் - அடிக்கடி தொய்ந்து போகும் பந்துவீச்சு வரிசை
உள்நாட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு + எதிர்பார்ப்பு தரும் மேலதிக அழுத்தம்

நட்சத்திரம் - சச்சின் டெண்டுல்கர் - சாதனைகளின் பெட்டகம்.அதிக உலகக் கிண்ண ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமை;ஒரே தொடரில் கூடுதல் ஓட்டங்களைக் குவித்தவர் என்ற உலகக் கிண்ண சாதனைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் ஆறாவது உலகக் கிண்ணத்திலாவது சம்பியனாக விடைபெரவேண்டும் என்ற வெறியோடு குதிக்கிறார்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - விராட் கோஹ்லி - கடந்த ஒன்றரை வருடமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இளைய நட்சத்திரம். உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தால் தன் ஸ்தானத்தைத் தக்க  வைத்துக் கொள்வார். களத்தடுப்பிலும் இந்தியாவின் மிகச் சிறந்தவராக மாறிக்கொண்டு வருகிறார்.

கிண்ணம் வெல்லக் கூடிய பிரகாசமான வாய்ப்புக்கள் தெரிகின்றன. வழமையான கடைசி நேரத் தடுமாற்றங்கள் இல்லாவிட்டால் கபில் தேவின் பின்னர் தோனி இந்தியாவின் புது வரலாற்றை எழுதுவார்.



அயர்லாந்து


கடந்த உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை அதிர்ச்சிகரமாகத் தோற்கடித்து வெளியேற்றியதிலிருந்து பெரிய அணிகளைத் தோற்கடிக்கும் வல்லமை இருக்கிறது என்பதைத் தொடர்ச்சியான சிறப்பான பெறுபேறுகளின் மூலம் காட்டிவரும் அணி. எதிர்காலம் பிரகாசமானது என்றாலும் இம்முறை வாய்ப்புக்கள் குறைவு.

பலம் - இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் பெற்ற அனுபவத்துடன் போராடக் கூடிய வீரர்கள்
பெரிய அணிகளையும் தடுமாற வைக்கும் கட்டுக்கோப்பான அணி

பலவீனம் - நிரூபிக்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் இன்மை
ஆசிய ஆடுகளப் பரிச்சயம் குறைவு

நட்சத்திரம் - போல் ஸ்டேர்லிங் - அண்மைக் காலத்தில் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்.அனுபவத்தை இத்தொடரில் மேலும் அதிகமாக்கிக் கொள்வார்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஜோர்ஜ் டோக்ரெல் - இளம் வயதிலேயே சுழல் பந்துவீச்சில் பிரகாசிக்கும் டோக்ரேலுக்கு தனது திறமைகளைக் கட்ட சிறந்ததொரு சந்தர்ப்பம்.

முதல் சுற்றைத் தாண்டாது. நெதர்லாந்தை வெல்வது நிச்சயம்.



நெதர்லாந்து

96ஆம் ஆண்டிலிருந்து உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகிறது.(99 தவிர) இந்த உலகக் கிண்ணத்தின் மிகப் பலவீனமான அணிகளில் ஒன்று.

பலம் - டென் டூஷேட் என்ற ஒரு அனுபவம் வாய்ந்த சகலதுறை வீரரும் இன்னும் சில குறிப்பிடத் தக்கோரும்

பலவீனம் - பலவீனமான பந்துவீச்சு வரிசை
நம்ப முடியாத துடுப்பாட்ட வீரர்கள்
வெற்றிக்கான வாய்ப்புக்கள் குறைவு

நட்சத்திரம் - ரயன் டென் டூஷேட் - சர்வதேச ரீதியிலும், இதைவிட அதிகமாக இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளிலும் தன்னை நிரூபித்துல்லவர்.
சர்வதேசத் தரமிக்க ஒரு சகலதுறை வீரர்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டோம் கூப்பர் - தென் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வரும் வீரர்.பெற்றோர் வழியாக நெதர்லாந்துக்காகவும் விளையாடும் வாய்ப்புப் பெற்றவர்.
நேர்த்தியான துடுப்பாட்ட வீரர். நெதர்லாந்து எதிர்பார்க்கும் துடுப்பாட்ட ஸ்திரத்தன்மையை வழங்குவார்.

அடுத்த சுற்று வாய்ப்பு அறவே இல்லை. தனி நபர்களின் அசாத்திய முயற்சிகள் அயர்லாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினால் நெதர்லாந்துக்கு எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகும்.



தென் ஆபிரிக்கா


முதலாவது உலகக் கிண்ணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள துரதிர்ஷ்டசாலிகள்.அரையிறுதிகளுக்கு மூன்று தடவை வந்தது இதுவரை மிகச் சிறந்த பெறுபேறு. இம்முறை அரையிறுதிகளுக்காவது வரும் என்று எதிர்பார்க்கப்படும் நான்கு அணிகளில் ஒன்று.

பலம் - மிகப் பலம் வாய்ந்த,நிரூபிக்கப்பட்ட துடுப்பாட்ட வரிசை
மிகச் சிறந்த ஆரம்ப வேகப் பந்துவீச்சாளர்கள்
கலிஸ்,அம்லா ஆகியோரின் ஆசிய ஆடுகளப் பெறுபேறுகள்

பலவீனம் - தனித்துப் போட்டிகளை வெல்வர் என்ற நம்பிக்கை தராத சுழல் பந்துவீச்சாளர்கள்
அணியின் ஆறாம்,ஏழாம் இடங்கள் பற்றிய சந்தேகம்
முக்கியமான தருணங்களில் சறுக்கி,சொதப்பும் பலவீனம்

நட்சத்திரம் - ஜாக்ஸ் கலிஸ் - உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரர் என்ற முத்திரையே இவர் பற்றிச் சொல்லப் போதுமே. தென் ஆபிரிக்காவின் முதுகெலும்பு.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ரொபின் பீட்டர்சன் - ஒரு நாள் போட்டிகளுக்கேற்ற சுழல் பந்துவீச்சாளர்.அண்மைக் காலத்தில் விக்கெட்டுக்களை எடுத்து முன்னேறி வருகிறார். சாதகமான ஆடுகளங்களில் இம்முறை பிரகாசிப்பார் என நம்புகிறேன். கொஞ்சம் துடுப்பெடுத்தாடவும் கூடியவர்.

அரையிறுதி உறுதி என்று கணக்குகள் சொன்னாலும், பாகிஸ்தானுடன் கால் இறுதி வரும் எனில் தென் ஆபிரிக்காவின் சொதப்பும் குணம் (choking) இம்முறையும் துரதிர்ஷ்டசாலிகள் ஆக்கலாம்.



மேற்கிந்தியத் தீவுகள்

முதல் இரண்டு உலகக் கிண்ணங்களை வென்ற அன்றைய முடி சூடா மன்னர்கள். இப்போது வெல்வது எப்படி என்று மறந்து போயுள்ளார்கள். இறுதியாக அரையிறுதி வந்து நான்கு உலகக் கிண்ணங்கள் ஆகிறது. அணிக்குள்ளும் சபைக்குள்ளும் இருக்கும் குழப்பங்கள் இம்முறையும் வாய்ப்புக்களை மங்கலாகவே வைத்துள்ளன.

பலம் - அனுபவம் வாய்ந்த மூன்று துடுப்பாட்ட வீரர்கள்.
சர்வானின் தற்போதைய form.
கெய்ல் அதிரடிக்கத் தொடங்கினால் எதிரணிகளைத்  திணறடிக்கும் இயல்பு

பலவீனம் - நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் இன்மை/குறைவு
அணியின் சமநிலைக் குழப்பம்
முக்கியமான இரு வீரர்களின் (பரத், கார்ல்டன் போ) உபாதைகள்

நட்சத்திரம் - ராம்நரேஷ் சர்வான் - அனுபவம் வாய்ந்த வீரர். கொஞ்சக் காலக் கவனிப்பாரற்ற நிலையிலிருந்து மீண்டு இப்பொது தொடர்ந்து கலக்குகிறார். ஆசிய ஆடுகளங்களுக்கேற்ற துடுப்பாட்டப் பிரயோகங்களும் இணைப்பாட்டங்களை உருவாக்கக் கூடிய இயல்பும் அணிக்கு உபயோகமானவை.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - சுலைமான் பென் - இவரது நடத்தைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட, ஆசிய ஆடுகளங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தேவையான சுழல்பந்துவீச்சுப் பலத்தை வழங்குவார் என நம்புகிறேன்.உயரமும் பந்தை வீசும் கோணமும் பென்னுக்கு இம்முறை வாய்ப்புக்களையும் விக்கெட்டுக்களையும் தரலாம்.

நட்சத்திரங்கள் சிலர் இருக்கும்போதும் இந்த அணியின் தடுமாற்றங்களும் குழப்பமும் கால் இறுதி வாய்ப்புக்களையும் இல்லாமல் செய்யும் என்றே கருதுகிறேன். நட்சத்திரங்கள் ஜொலித்தால் பங்களாதேஷை வென்று(வங்க மண்ணில் இது அவ்வளவு இலகுவல்ல) கால் இறுதி வரை செல்ல முடியும்.

-------------------------

மீண்டும் வலியுறுத்துகின்ற விடயங்கள்...


இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நடக்கவே அதிக வாய்ப்பு என்று பல பெரிய விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் சொல்வதைப் போலவே நானும் அபிப்பிராயப் படுகிறேன்.




 இம்முறை உலகக் கிண்ணம் இரு நீல சீருடை அணிகளில் ஒன்றின் இரண்டாவது உலகக் கிண்ணம்.




இவை என் ஊகங்கள், கணிப்புக்கள் மட்டுமே.. கால நிலை,கள நிலை, குறித்த நாளின் வீரர்களின் பெறுபேறுகள் முடிவுகளை மாற்றி மூக்குடைக்கலாம்.



இன்று இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கின்ற இந்திய-பங்களாதேஷ் போட்டி முதல் வாங்க கிரிக்கெட் உலகக் கிண்ண ஜோதியில் கலக்கலாம் :) களிக்கலாம்.
இன்றைய முதல் போட்டி இந்தியாவுக்கு சாதகம் அதிகமாக இருந்தாலும், பங்களாதேஷ் அணியை யாரும் - இந்திய நட்சத்திர வீரர்கள் உட்பட - குறைத்து மதிப்பிட முடியாது.

They are not just ORDINARY.

92இல் ஆஸ்திரேலியா - நியூ ஸீலாந்து இணைந்து நடத்திய உலகக் கிண்ணத் தொடரில் முதல் போட்டி நியூ சீலாந்தில் நடந்ததும் அதில் Defending Champions + Favorites ஆஸ்திரேலியாவை அப்போது யாரும் எதிர்பாராத நியூ ஸீலாந்து வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததும் ஞாபகம் வந்து தொலைக்கிறது...

விறுவிறுப்பான போட்டியொன்றை உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்..
ரசிப்போம்..


*** நாளை இலங்கையின் முதலாவது போட்டி (கனடாவுக்கு எதிராக) பார்க்க ஹம்பாந்தோட்டை செல்கிறேன்.



யாருக்கு 2011 உலகக் கிண்ணம்? அணிகளின் அலசல்

2/18/2011 11:57:00 PM

(8) Comments


உலகக் கிண்ண அலசல்களின் முக்கியமான கட்டம் இது.. 


பதினான்கு அணிகளில் பல்வேறு விற்பன்னரும் நான்கு அல்லது ஆறு அணிகளை இலகுவாகத் தட்டி விட்டு எட்டு அணிகளோடு தங்கள் ஊகங்களை வெளியிட்டு வந்தாலும் விளையாட்டில் எதிர்வுகூறல்களை வெளியிடும் ஒவ்வொருவரும் Upsets என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் எதிர்மாறான முடிவுகளுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற பொது விதிக்கமைய நான் இரு பிரிவுகளிலும் உள்ள பதினான்கு அணிகளையுமே சுருக்கமாகப் பார்க்கவுள்ளேன்.

அதற்கு முதல் ஆசிய ஆடுகளங்களில் இந்த உலகக் கிண்ணம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ள அணியாகப் பந்தயக்காரர்களால் (உத்தியோக பூர்வ/அங்கீகரிக்கப்பட்ட) தற்போது வரிசைப்படுத்தப்பட்டுள்ள அணிகள்..

Outright World Cup 2011 Odds - 

 PaddypowerBoylesportsBet365TotesportWilliamhillVCBet
India311/411/411/4-5/2
Sri Lanka7/29/29/24-9/2
South Africa11/25511/2-11/2
Australia11/211/255-5
England11/2877-8
Pakistan8887-8
New Zealand20202020-20
West Indies20162020-22
Bangladesh33404033-40
Zimbabwe200250250200-200
Ireland500500500500-1000
Canada1000100020001000-2000
Holland750100020001000-2000
Kenya1000100020001000-2000

பிரிவு A


ஆஸ்திரேலியா

நடப்பு உலக சாம்பியன். நான்காவது தொடர்ச்சியான உலகக் கிண்ணம் வெல்லும் கனவு அண்மைக்காலத் தடுமாற்றங்களால் கலைந்து கொண்டுள்ளது. மொத்தமாக நான்கு உலகக் கின்னங்களைத் தம் வசம் வைத்துள்ள அசுர அணி.

பலம் - இந்நாள் சாம்பியன் என்ற பட்டம். வெற்றிகளை எப்படியாவது பெற்றுத் தருவார்கள் என்று நம்பியிருக்கக் கூடிய நட்சத்திர வீரர்கள்.
எந்த ஆடுகளத்திலும் எதிரணிகளைத் திணறடிக்கும் வேகப் பந்துவீச்சு

பலவீனம் - அண்மைக்கால form இழப்பும்,தோல்விகளும் தந்துள்ள நம்பிக்கையீனமும் 
பல போட்டிகளை தனித்து வென்று கொடுத்த அனுபவம் வாய்ந்த மைக் ஹசி இல்லாமை
நம்பகமான சுழல் பந்துவீச்சாளர் இன்மை

நட்சத்திர வீரர் - ஷேன் வொட்சன் - அதிரடி formஇல் இருக்கிறார். அண்மைக்காலமாக  ஆஸ்திரேலிய Run machine இவர் தான். பந்துவீச்சும் உபயோகப்படும்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டேவிட் ஹசி - தமையனின் இழப்பை வேறு விதமாக நிரப்பக் கூடியவர். இவரது சாதுரியமான சுழல் பந்துவீச்சும் ஆசியக் களங்களில் கலக்கும்.

மறு பிரிவில் இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் காலிறுதியில் எதிர்கொள்ளாவிட்டால்  எப்படியும் அரையிறுதி நிச்சயம். 



கனடா

தகுதிகாண் சுற்றின் மூலமாக வாய்ப்புப் பெற்ற அணி.
பல புலம்பெயர்,ஆசிய வம்சாவளி வீரர்கள் மூலமாகக் கட்டமைக்கப்பட்ட அணி.

பலம் - ரிஸ்வான் சீமா,ஆசிஷ் பகாய், குராம் சொஹான் போன்ற வெகு சில நட்சத்திரங்கள்.
பலவீனம் - பெரிய அணிகளை வெல்ல முடியாத நிலை; அணி இன்னும் சர்வதேச தரத்தில் இல்லை.

நட்சத்திர வீரர் - ரிஸ்வான் சீமா - ஓரளவு குறிப்பிடத்தக்க சகலதுறை வீரர். பாகிஸ்தானிய வம்சாவளி வீரரான இவரிடம் அசுர அடிகளையும் போராட்ட குணத்தையும் பார்க்கிறேன்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - நிதின் குமார் - கனடாவின் சச்சின் என்று இவரை அழைக்கிறார்களாம். இது கொஞ்சம் ஓவர் என்றாலும்,கனடாவிலேயே பிறந்து அணிக்குள் இளவயதில் நுழைந்துள்ள இவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

எந்தவொரு அணியையும் வெல்ல முடியாது.கொஞ்சமாவது போராடினால் அவமானத்தையும் எதிரணிகளுக்கு புதிய உலக சாதனைகளை வழங்குவதையும் தவிர்க்கலாம்.



கென்யா

தகுதிகாண் சுற்றினூடு வந்துள்ள மற்றொரு அணி. முழுமையான  ICC அந்தஸ்தை இன்னும் பெற உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யக் காத்துள்ள திறமையுள்ள அணி. ஐந்தாவது தொடர்ச்சியான உலகக் கிண்ணம். 

பலம் - எதிரணிகளை எதிர்பாராத நேரங்களில் கவிழ்த்து விடக்கூடிய அணி. 
டிகொலோ, ஓடோயோ போன்ற சர்வதேசத் தரமான சகலதுறை வீரர்கள்

பலவீனம் - தொடர்ச்சியாகப் பெறுபேறுகளைக் காட்ட முடியாதுள்ளமை.
ஆரம்பப் பந்துவீச்சும் ஆரம்பத் துடுப்பாட்டமும் பலவீனமானவை

நட்சத்திர வீரர் - ஸ்டீவ் டிகொலோ - ஐந்தாவது உலகக் கிண்ணத்திலும் இவரையே நம்புகின்றது கென்யா. தற்காலிக ஓயவிளிருந்து மீண்டும் விளையாட வந்துள்ளது இந்தக் கிழட்டு சிங்கம். நேர்த்தியான துடுப்பாட்டமும், நம்பகமான சுழல் பந்துவீச்சும் இவரது சொத்துக்கள்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஸ்ரேன் வோடேர்ஸ் - லாவகமான துடுப்பாட்டப் பிரயோகங்கள் கொண்ட இளம் துடுப்பாட்ட வீரர்.கொஞ்சம் நம்பிக்கை தரும் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.

கனடாவை வீழ்த்தினாலும் சிலவேளை சிம்பாப்வேயை வீழ்த்தினாலும் அதற்கு மேல் 'பெரிய' அணிகளை வீழ்த்த முடியாது.
எனவே முதல் சுற்றோடு விடை பெறும்.



நியூ ஸீலாந்து

இதுவரை உலகக் கிண்ண இறுதியையும் எட்டாத அணி. ஆனால் கடைசி மூன்று உலகக் கிண்ணத் தொடர்களிலும் அரையிறுதிப் போட்டிகளுக்கு வந்துள்ள சகலதுறை அணி.

பலம் - அணியில் நிறைந்துள்ள சகலதுறை வீரர்கள்
இறுதிவரை போராடக் கூடிய துடுப்பாட்ட அணி.

பலவீனம் - பந்துவீச்சினால் வென்றுகொடுக்கும் ஆற்றல் கொண்ட சுழல் பந்துவீச்சாளர் இன்மை.
வெட்டோரியின் அண்மைக்கால சறுக்கல்கள்
பெரிய இணைப்பாட்டங்களைத் தொடர்ந்து அமைக்க முடியாத மத்திய வரிசை.

நட்சத்திரம் - பலரும் வெட்டோரியைக் குறிப்பிட்டாலும் எனக்கென்னவோ இம்முறை ரைடர்,டெய்லர் இருவரது துடுப்புக்களில் தான் நியூ சீலாந்தின் முன்னேற்றம் தங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.
இருவரதும் துடுப்பாட்டப் பாணிகள் வெவ்வேறானவை.
ரைடர் - அதிரடி
டெய்லர் - நிதானம் பின்னர் அடித்தாடல்
நம்பி இருக்கக் கூடியவர்கள்

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - டிம் சௌதீ 
மிக இளவயதில் அணிக்குள் வந்தாலும் கொஞ்சம் சொதப்பி இப்போது தான் ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். வேகம், கட்டுப்பாடான பந்துவீச்சு அத்துடன் பந்துகளை மாற்றக் கூடிய சாதுரியம் என்று கலக்குவார். கொஞ்சம் துடுப்பெடுத்தாடிப் போட்டிகளை மாற்றக் கூடியவரும் கூட.

கால் இறுதி நிச்சயம்.அதற்கப்பால் முன்னேறினால் அனைவரும் பிரகாசித்துள்ளார்கள் என்று அர்த்தம். பெரும்பாலும் நான்காவது தொடர்ச்சியான அரையிறுதி வாய்ப்பு இல்லை என்றே சொல்வேன்.



பாகிஸ்தான்

ஒரு தடவை உலக சாம்பியன். ஒரு தடவை ஆஸ்திரேலியாவிடம் இறுதியில் தோற்ற அனுபவம்.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறிய கசப்பான அனுபவத்தைக் கழுவ வேண்டிய கடப்பாட்டோடு,அண்மைக்கால சூதாட்ட சர்ச்சைகள், உல் வீட்டுச் சண்டைகளைத் துடைத்தெறியவும் பாகிஸ்தானுக்கு இன்னொரு கிண்ணம் தேவைப்படுகிறது.

பலம் - இறுதிவரை போராடி போட்டிகளின் போக்கை மாற்றக் கூடிய வெகு சில அணிகளில் ஒன்று.
அதிரடித் துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட நீண்ட துடுப்பாட்ட வரிசை.
கலக்கக் கூடிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள்.
அப்ரிடி+ரசாக் என்ற அசுர பலங்கள்.

பலவீனம் - உள்வீட்டில் ஒற்றுமையின்மை.
நம்ப முடியாத் தன்மை. சில நேரங்களில் எப்படித் தோற்க முடியாதோ அப்படியெல்லாம் தோற்பார்கள்.
இப்போதைய பலவீனமான வேகப் பந்துவீச்சு.

நட்சத்திரம் -  பூம் பூம் ஷஹிட் அப்ரிடி - சகலதுறைத் திறமையும் துணிச்சலான தலைமைத்துவமும் கொண்ட பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம்.நம்பி இருக்க முடியாமை தான் இவரில் உள்ள சொற்ப ஐயம். இவர் ஜொலித்தால் இன்னொரு பாகிஸ்தான் சரித்திரம் உருவாகலாம்.
இன்னொருவரையும் குறிப்பிடலாம்..
அப்துர் ரசாக் -  எந்தப் போட்டியையும் எட்டாம் இலக்கத்தில் வந்தாலும் நின்று அதிரடித்து மாற்றக் கூடிய பலம். நம்பகமான மித வேகப் பந்துவீச்சு.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - அஹ்மத் ஷேசாத் - அண்மைக்காலத்தில் அதிரடிக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.யாரை எடுப்பது என்று அண்மைக் காலத்தில் தடுமாறி வந்த பாகிஸ்தான் தேர்வாளருக்கு ஆறுதல் அளித்துள்ளவர்.

கால் இறுதி உறுதி.எதிரணியின் நேரம் கெட்ட நேரமாகவும் அன்று பாகிஸ்தான் வீரர்களின் மன நிலையைப் பொறுத்தும் அரையிறுதியைப் பற்றி யோசிக்கலாம்.
என் ஊகப்படி தென் ஆபிரிக்கா தான் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் அநேகமாக மோதும்.அப்படியாயின் இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தான் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடினால் அரையிறுதி செல்கிறது.



இலங்கை

96இல் உலகக் கிண்ணம் வென்று, கடந்த உலகக் கிண்ண இறுதியில் கில்க்ரிஸ்ட்டினாலும் மோசமான காலநிலையினாலும் கிண்ணத்தை இழந்த பிறகு இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள அணி.

சொந்த நாட்டில் முதல் சுற்றின் ஐந்து போட்டிகள் என்பது மிக வாய்ப்பான விடயமே.

பலம் - சரியாக செட்டாகியுள்ள அணி
பலமான முதல் நான்கு அல்லது (சமரவீரவுடன்) ஐந்து துடுப்பாட்ட வீரர்கள்.
மிக சாதகமான உல் நாட்டு ஆடுகளங்கள் +பழக்கமான இந்திய ஆடுகளங்கள் + காலநிலை
முரளி+மாலிங்க
சிறந்த களத்தடுப்பு

பலவீனம் - கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்கள் குவித்துத் தரக்கூடிய அதிரடி வீரர் ஒருவர் இன்மை.
நம்பி இருக்க முடியாத கீழ்,மத்திய வரிசைத் துடுப்பாட்டம்.
ஐந்தாவது பந்துவீச்சாளர் யார் என்ற சிறு குழப்பம்.

நட்சத்திரம் - சங்கக்கார,மஹேல,தில்ஷான் ஆகிய மூவரில் ஒருவர் தொடர்ந்து ஜொலித்தால் ஜெயிக்கலாம் என்பது என் ஊகம்.
எனினும் இம்முறை ஆடுகளத் தன்மைகளைப் பொறுத்தவரை டில்ஷானின் ஆரம்பத் துடுப்பாட்ட அதிரடியும் பின்னர் பகுதி நேரப் பந்துவீச்சின் மூலம் கிடைக்க இருக்கும் விக்கெட்டுகளும் பெறுமதியானவை என நம்புகிறேன்.
அத்துடன் அவரது மின்னல் வேகக் களத்தடுப்பு.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - இருவர் இம்முறை எழுச்சி பெறக கூடியவர்கள் என நம்புகிறேன்.
திலான் சமரவீர - அமைதியாக நிதானமாக டெஸ்ட் விளையாடிக் கொண்டிருந்தவர்,கிடைத்த அண்மைய ஒரு நாள் வாய்ப்புக்களை அதிரடியாகப் பயன்படுத்தி ஐந்தாம் இலக்கத்தில் நிரந்தரமாகியுள்ளார்.
ஆனால் அதே நிதானமும் அழகான துடுப்பாட்டப் பிரயோகங்களும் கண்கவர்ந்தவை.

ரங்கன ஹேரத் - இடது கை மந்திரவாதியாக அமைதியாகத் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கி வருகிறார்.எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கக் கூடியதான பந்துவீச்சு இவருடையது. பல துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆபத்துக் காத்துள்ளது.

கிண்ணம் வெல்லக் கூடிய வலிமையான அணி.
அரையிறுதி,இறுதிகளில் நாணய சுழற்சியும் வாய்ப்பாக அமைந்தால் இரண்டாவது உலகக் கிண்ணம் நிச்சயம்.


  
சிம்பாப்வே 

83ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வரும் நாடு. கடந்த முறைகளைப் போலவே இம்முறையும் அரையிறுதி வாய்ப்புக் கிடைக்காது போலவே தெரிகிறது. உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளால் அழிந்து போன கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப முனைந்து கொண்டுள்ளார்கள்.

பலம் - கட்டுப்பாடாகப் பந்துவீசக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள்.
சிறந்த களத்தடுப்பு

பலவீனம் - ஓரிருவர் தவிர நம்ப முடியாத துடுப்பாட்ட வரிசை.
அச்சுறுத்தக் கூடிய வேகப் பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை.

நட்சத்திரம் - பிரெண்டன் டெய்லர் - நம்பி இருக்கக் கூடிய ஒரு துடுப்பாட்ட வீரர். சர்வதேசத் தரமுடையவர் என்ற சொல்லக் கூடிய ஒருவர். அண்மைக்காலமாக  ஓட்டங்களை மலைபோல குவித்து வருகிறார்.

நான் எதிர்பார்க்கும் புதிய நட்சத்திரம் - ஷோன் எர்வின் - இடது கையரான இவர் நம்பிக்கையான சகலதுறை வீரர். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஜொலிப்பார் என நம்புகிறேன்.

முதல் சுற்றைத் தாண்டாது.

-------------------

A பிரிவின் ஏழு அணிகளைப் பார்த்துவிட்டால் மூச்சு முட்டுகிறது.. கண்களும் ஓய்வு கேட்கின்றன. இன்று நேரம் கிடைத்தது அவ்வளவு தான்.

நாளை இந்திய - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டம் ஆரம்பிக்கும் பிற்பகல் நேரத்துக்கிடையில் B பிரிவு அணிகள் ஏழையும் பார்க்கலாம்.

இவை என் ஊகங்கள், கணிப்புக்கள் மட்டுமே.. கால நிலை,கள நிலை, குறித்த நாளின் வீரர்களின் பெறுபேறுகள் முடிவுகளை மாற்றி மூக்குடைக்கலாம்.

 

 





உலகக்கிண்ணம் - விக்கிரமாதித்த விளையாட்டு - உலகக் கிண்ண அலசல் 4

2/18/2011 09:36:00 AM

(19) Comments



உலகக் கிரிக்கெட் ரசிகர்களை ஆவலுடன் காக்க வைத்திருந்த உலகக் கிண்ணம் நாளை பிற்பகல் ஆரம்பிக்கும் இந்திய - பங்களாதேஷ் போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

நேற்று பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற கோலாகல ஆரம்ப விழாவில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவினால் பத்தாவது கிரிக்கெட் உலகக் கிண்ணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.



(ஆனால் கொடுமை மூன்று நாடுகளினதும் கலை,கலாசார வெளிப்பாடுகளைக் காட்டும் கலை நிகழ்ச்சிகளில் கெட்ட ஒரே தமிழ்ப்பாடல் இந்தியா கொண்டுவந்த நாக்க முக்கா.. இலங்கை சார்பாக இராஜ் பாடிய Lion nationஇல் ஒரு தமிழ் வசனம் வந்தது. கண்டி நடனங்கள், முகமூடி ஆட்டங்களினிடையே மருந்துக்கேனும் தமிழ்ப் பாடல்களோ தமிழ் நடன வகையோ இலங்கை சார்பாக வராதது கவலை தந்த விடயம். அந்தவேளையில் நேர்முக வர்ணனையில் இணைந்துகொண்ட ரசல் ஆர்னல்ட் முகமூடி நடனத்துக்கு மட்டும் விளக்கம் கொடுத்தார்)

ஒவ்வொரு முன்னாள் வீரரும் (அநேகர் இந்நாள் விமர்சகர்கள்/வர்ணனையாளர்கள்) பத்திரிகையாளர்களும் தத்தம் பார்வையில் இவர்கள் தான் சாம்பியன்கள் என்றும் கறுப்புக் குதிரைகள் இவர்கள் என்றும் அறிவிக்கிறார்கள்.

இதில் வேடிக்கை சிலர் அடுத்த நாளே மாறிக் கொள்வது.
இவர்களுடன் பார்க்கையில் எம் வலைப்பதிவர்கள்,எமதே எமதான அனலிஸ்ட்கள் ஏன் விக்கிரமாதித்தர்கள் சொல்வதும் சான்று பகர்வதும் பரவாயில்லைப் போல் தெரிகிறது.

Arm chair critics are way better this time...

இந்தியா தான் இம்முறை சம்பியனாகும் என்று சொல்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சொந்த மண்ணில் போட்டிகள் இடம்பெறுவதும் பழக்கமான காலநிலையும் முக்கிய காரணங்கள்.இவை தவிர உலகின் மிகப் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசை;அண்மைக்கால ஒருநாள் வெற்றிகள் என்று பல சேர்ந்து இந்தியாவில் இம்முறை சம்பியனாகக் கூடிய பெரும் வாய்ப்புள்ள அணிஎன்று சொல்ல வைக்கின்றன.

ஆனால் 1983இல் இந்தியா உலகக் கிண்ணம் வென்றது முதல் ஒவ்வொரு உலகக் கிண்ணத்தின் போதுமே இந்தியாவைத் தான் favorites என்று உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னர் சொல்வது வழக்கமாகிப் போனது. 99 முதல் ஆஸ்திரேலியா தொடர்ந்து வென்று வந்த நேரமும் பலருக்கு இந்தியா தான் favorites.

90 கள் முதல் இந்தியாவை மையப்படுத்தியே கவர்ச்சியும் பணமும் விளம்பரமும் நிறைந்த கிரிக்கெட் கட்டிஎழுப்பப்பட்டதே இந்தியா ஒரு கிரிக்கெட் வல்லரசாக ஊடகங்கள்+விமர்சகர்களால் இன்றுவரை அடையாளப் படுத்தப்படுவதற்கான காரணம்.
சச்சினும் தோனியும் (இவர்களாவது பரவாயில்லை யுவராஜும் ஹர்பஜனும் கூட) கிரிக்கெட் தெய்வங்களாக அதிகமாக இந்திய விளம்பரங்களாலேயே மாற்றப்பட்டார்கள்.

இதனாலேயே கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா கிண்ணம் பெறும் வாய்ப்பை இழந்த போதெல்லாம் இந்திய ரசிகர்கள் கோபமும் விரக்தியும் அடைந்ததும், தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியாவை மையப்படுத்திய விளம்பரங்கள் குறைந்ததும், அதன் பின் உலகக் கிண்ணமே தொய்ந்து போனதுமான தோற்றம் ஏற்படுத்தப்பட்டதும் ஆகும்.

இந்தியாவின் ஆதிக்கம் கொண்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் கூர்மை மிகு குழுவும் உலகக் கிண்ண ஏற்பாட்டுக் குழுவும் கடந்த முறை பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு பெரும் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறிய ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்று தீர்க்கதரிசனமாக யோசித்து (அதுவும் ஆசியாவில் இடம்பெறும் இம்முறை தொடரில் நிகழ்ந்தால் அதைப் போல அனர்த்தம் ஒன்றிராது) முதல் சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து நேரடியாக knock out முறையிலான காலிறுதிகளைத் தேர்வு செய்தார்கள்.
(2007ஆம் ஆண்டுத் தொடர் போல நீண்ட நாட்கள் இழுபடாமல் இருக்கவும் இந்த யோசனை சிறந்ததே என்பதே பரவலாகப் பேசப்பட்டது)

படுமோசமாக விளையாடினால் ஒழிய எந்தவொரு 'பெரிய' அணியும் முதல் சுற்றோடு வெளியேற வாய்ப்பில்லை.



இன்னொரு கோலத்தையும் அவதானித்தேன்..

முதல் இரு முறை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியாளர்கள். 1975,1979.
அடுத்த இரு முறைகளும் மிகக் குறைவாக எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெற்றிக் கிண்ணத்தை ஏந்தின.

83இல் கபில் தேவின் இந்திய அணியோ, 87இல் அலன் போர்டரின் ஆஸ்திரேலியாவோ நட்சத்திர அணிகளாக இருக்கவில்லை.

தங்கள் தலைவர்களைத் தவிர பெரிய நட்சத்திரங்களோ,தனித்து நின்று போட்டிகளை வென்று கொடுக்கும் வீரர்களையோ கொண்டிராத அணிகள். ஆனால் தேவையான போட்டிகளில் அபாரமாக ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி வெள்ளக் கூடிய அணிகளாக விளங்கியதால் சம்பியனாகின.

அடுத்த இரு முறையும் போராடக் கூடிய ஆனால் எதிர்பார்க்கப்படாத அணிகள் தங்கள் ஆக்ரோஷமான தலைவர்களாலும் மதியூக உப தலைவர்களாலும் வெற்றி பெற்றுக் கொண்டன.
92இல் இம்ரான் + மியண்டாட் . 96இல் அர்ஜுன+அரவிந்த 
இரு இடது கையர்கள் இந்த இரு கிண்ண வெற்றிகளிலும் தங்கள் அணிகளைத் தூக்கி நிறுத்தினார்கள்.
92இல் வசீம் அக்ரம். 96இல் சனத் ஜெயசூர்யா.

இந்த இரு உலகக் கிண்ண வெற்றிகளும் பாகிஸ்தானிலும் அதைவிட அதிகமாக பின் இலங்கையிலும் தந்த கிரிக்கெட் எழுச்சியும் வளர்ச்சியும் எழுத்துக்களால் இலகுவாக சொல்லிவிட முடியாதவை.

அடுத்த மூன்றும் ஆஸ்திரேலியாவுக்கென எழுதி வைத்தவை.1999,2003 & 2007
மூன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் ஒரு சுவாரஸ்ய ஒற்றுமை; மூன்றிலுமே தோற்றுப் போனவை ஆசிய அணிகள்.

இம்முறை மீண்டும் இதே வென்ற அணிகளில் ஒன்று வெல்வதற்கே சாத்தியங்கள் அதிகமாகத் தெரிகின்றன.

உலகக் கிண்ணம் வெல்லாத அணிகளான இங்கிலாந்தோ,நியூ சீலாந்தோ வெல்ல அறவே வாய்ப்பில்லை என்று இப்போதே பகிரங்கமாக சொல்லி வைத்துவிடலாம். 

தென் ஆபிரிக்க அணி சொல்ல முடியாத அணி.. ஆனாலும் எனக்கென்னவோ ஸ்மித்தின் இந்த அணியின் மீது சாம்பியன் என்ற முத்திரையைக் குத்திப் பார்க்க முடியவில்லை.

இங்கிலாந்து இன்னமும் தனது அணியைப் பரீட்சித்துக்கொண்டே இருப்பதால் உலகக் கிண்ணக் கனவு அவர்களுக்குக் கடந்த முறை வென்ற T 20 உலகக் கிண்ணத்துடனே கரைந்துவிடும் என்றே தோன்றுகிறது.

அடுத்து பங்களாதேஷ். ஆனால் இவர்கள் வென்றால் ஆச்சரியப்படவும் போவதில்லை; கவலைப்படவும் போவதில்லை.

முதல் இரு தடவை உலகக் கிண்ணம் வென்றாலும் 96இன் பின் அரையிறுதியையே எட்டிப் பார்க்காத மேற்கிந்தியத் தீவோக்ளுக்கும் இம்முறை வாய்ப்பில்லை.

எனினும் இம்முறை முன்னெப்போதும் இல்லாத மாதிரியாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புக்கள் ஆதிகமாகவே கானப்படுகின்றன.
ஆனாலும் அந்த இரு நாடுகளில் ஒன்று பாகிஸ்தானாக இராது என்றே நம்புகிறேன்.பாகிஸ்தானும் அண்மைக்கால இலங்கை மழை போல ஊகிக்க முடியாதவாறு இருந்தாலும் இறுதி வரை நடைபோடும் பலம் இல்லை என்றே ஊகிக்கிறேன்.

இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நடக்கவே அதிக வாய்ப்பு என்று பல பெரிய விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் சொல்வதைப் போலவே நானும் அபிப்பிராயப் படுகிறேன்.

காரணம் இந்த ஆஸ்திரேலிய அணி சம்பியனாகும் அணியாகத் தோன்றவில்லை. போராடி வெல்லக் கூடிய ஆற்றலோ, எந்த சூழ்நிலையிலும் வெல்லும் ஆற்றலோ இந்த ஆஸ்திரேலியாவிடம் தெரியவில்லை.

எனவே இப்போதே பிரகடனப்படுத்துகிறேன் இம்முறை உலகக் கிண்ணம் இரு நீல சீருடை அணிகளில் ஒன்றின் இரண்டாவது உலகக் கிண்ணம்.
இந்தியா வென்றால் சொந்த நாட்டில் வைத்து உலகக் கிண்ணம் வென்ற முதல் அணியாகும்.
இலங்கை வென்றால் போட்டிகளை நடத்தில் உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது தடவை.

கடந்த வெற்றி போட்டிகளை இலங்கை நடத்திய போதும் பாகிஸ்தானிய மண்ணில் பெறப்பட்டது.

இன்னொரு அதிசயம் இதுவரை விக்கெட் காப்பாளராக இருந்த அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதில்லை.
தோனி, சங்கா இருவருமே சரித்திரங்களை மாற்றுவதில் விருப்புடையவர்கள்.


*** பதினான்கு அணிகளின் பலம் பலவீனங்களை அலசலாம் எனப் புறப்பட்டு பொதுவாகவே பதிவை இட்டுவிடவேண்டி வந்துவிட்டது.
அடுத்த பதிவாக அணிகளை சுருக்கமாகத் தனித் தனியாக அலசவுள்ளேன்.

இந்தப் பதிவில் அந்தந்த அணிகள் பற்றி சொல்லியுள்ள விஷயங்களை அங்கே முடியுமானவரை தவிர்க்கிறேன்.



பயிற்சிப் போட்டிகள் + பலம்&பலவீனங்கள் + பிரேமதாச - உலகக் கிண்ண அலசல் - 3

2/17/2011 03:06:00 PM

(11) Comments


இதோ வந்துவிட்டன உலகக் கிண்ணப் போட்டிகள்..நாளை மறுதினம் முதலாவது போட்டி.. எப்படி வேகமாக ஓடுகின்றன நாட்கள்.

நாளை மறுதினம் இந்த கிரிக்கெட் கோலாகலத் திருவிழா ஆரம்பம்.
இன்று மாலை டாக்காவில் மாபெரும் ஆடம்பர ஆரம்ப விழா வேறு..

ஆரம்ப விழாவுக்கான அரங்கம் 

அணிகளை உறுதிப்படுத்தி தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும் பயிற்சிப் போட்டிகளில் நாளை இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் ஒரே ஒரு பயிற்சிப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.

நடந்து முடிந்த பயிற்சிப் போட்டிகளில் (ஒவ்வொரு அணிக்கும் தலா இரு போட்டிகள்) பெரிய அதிர்ச்சிகள் என்று எவையும் இல்லாவிட்டாலும் சிறு எலிகள் பெரும் புலிகளை வீழ்த்திய, தடுமாற வைத்த ஆச்சரியங்கள் நடந்தே இருக்கின்றன.

Minnows என்று சொல்லப்படுகின்ற வலிமை குறைந்த நாடுகள் பெப்ரவரி ஆறாம் திகதி முதல் ஆப்கானிஸ்தானையும் அழைத்து மத்திய கிழக்கில் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வந்திருந்தன.

இதில் ஆப்கானிஸ்தான் கனடாவை வீழ்த்திய ஒரே ஒரு போட்டியைத் தவிர ஏனைய போட்டிகள் எல்லாம் எதிர்பார்த்த அணிகள்  வெற்றியீட்டியதாக அமைந்திருந்தன.

ஆப்கானிஸ்தான் இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் முழுமை அந்தஸ்து பெறாத நான்கு அணிகளை விட சமயங்களில் பலம் வாய்ந்தது என்பது எனது திடமான எண்ணம்.

இம்மாதம் 12 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பித்த ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிப் போட்டிகளில் (இவை எவற்றுக்குமே ஒருநாள் அந்தஸ்து இல்லை என்பது முக்கியமானது) இரண்டே இரண்டு அதிர்ச்சிகள்.

தற்போது டெஸ்ட் விளையாடும் பத்து அணிகளும் தப்பித்துக்கொள்ள நெதர்லாந்து அணியிடம் கென்யாவும், ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றத்தைக் காட்டி எதிரணிகளை அசத்திவரும் அயர்லாந்து அணியிடம் சிம்பாப்வேயும் சிக்கித் தோற்றுப் போயின.

ஏனைய பெரிய அணிகளில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையிலிருந்து இந்தியாவிடம் படுமோசமாக சுருண்டதையும்0 பார்க்கையில் அரையிறுதி வரை இந்த அணி வருமா என்ற சந்தேகம் வருகிறது.
ஆனால் பொன்டிங் & கிளார்க்கின் அரைச் சதங்கள் தூங்கிக் கொண்டிருந்த ராட்சர்கள் விழிப்புக்கு வந்துவிட்டார்கள் என்ற சிறு நம்பிக்கையை ஆஸ்திரேலியாவுக்கும் ரசிகர்களுக்கும் வழங்குகிறது.

நேற்று கனடாவிடம் இறுதி வரை திக்கித் திணறி 16 ஓட்டங்களால் தப்பித்துக் கொண்ட இங்கிலாந்தும் இன்னும் தங்கள் அணிக்கட்டமைப்பை உறுதி செய்யவில்லை என்பது அவர்களின் தடுமாற்றத்தைக் காட்டுகிறது.இப்போது பீட்டர்சன் ஆரம்ப வீரராகக் களம் இறங்குவாராம்.மத்திய வரிசையில் ட்ரொட்டின் formஐ நம்பி எடுக்கப்பட்ட முடிவு இது போல் தெரிகிறது.
நேற்று கனடாவின் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் தடுமாறியபோதும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்டுவர்ட் ப்ரோட் கைப்பற்றிய ஐந்து விக்கெட்டுக்கள் இங்கிலாந்துக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுத்திருக்கும்.
கொஞ்சம் நம்பிக்கை !?

பாகிஸ்தான் ஆரம்பத்தில் பங்களாதேஷிடம் தடுமாறி,பின் ஷேசாத்,மிஸ்பாவின் சதங்களின் உதவியால் அபாரமாக வென்றது. வழமையான நம்ப முடியாத,எதிர்வு கூறமுடியாத பாகிஸ்தான்.

தென் ஆபிரிக்க அணி தனது இரு போட்டிகளிலும் லாவகமாக வெற்றிஈட்டிக் கொண்டது.பலவீனம் என்று எந்தவொரு அம்சத்தையும் அவதானிக்க முடியவில்லை.ஆனால் அவர்கள் தடுமாறும் நெருக்கடியான தருணங்கள் வரும்போதே பலவீனங்களைத் தெரிந்துகொள்ளலாம்.இப்போதைக்கு அரையிறுதிக்கு நிச்சயமான வாய்ப்புக்கள் தெரிகின்றன.

இலங்கை, இந்திய அணிகள் தத்தம் பயிற்சிப் போட்டிகளில் பெற்ற அபார வெற்றிகள் மீண்டும் இவ்விரு அணிகளும் தான் இம்முறை Favorites என்பதை உறுதிப் படுத்தி இருக்கின்றன.
     சொந்த மண்ணில் கிண்ணம் கிட்டுமா?

துடுப்பாட்ட வரிசைகளை உறுதிப் படுத்தி இருப்பதோடு,பந்துவீச்சாளர்களின் சமநிலையையும் இந்த இரு போட்டிகளில் இவை சரியாக அடையாளம் கண்டிருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் நான்.

இவ்விரண்டு அணிகளுக்குமே முதல் சுற்றின் எல்லாப் போட்டிகளும் பகல்-இரவுப் போட்டிகளாக அமைந்திருக்கின்ற நிலையில் இலங்கை இரண்டாவது போட்டியில் மின் விளக்குகளின் ஒளியில் துடுப்பெடுத்தாடி இலகுவாக வென்றிருந்தது.
ஆனால் இந்தியா இரு போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றும் இரவில் துடுப்பெடுத்தாடிப் பயிற்சி பெற விழையாதது ஆச்சரியமாக இருக்கிறது.

அனேக மைதானங்களில் இரவு மின்னொளியில் பனி ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று எதிர்வுகூறல்கள் இருக்கும் நிலையில் இந்திய,இலங்கை சுழல்பந்து வீச்சாளர்களின் கையாள்கை குறித்து அறிய ஆவலாக இருக்கிறது.
இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சிப் போட்டிக்குப் போயிருந்த வேளையில் இரவு எட்டு மணிக்குப் பிறகு மைதானத்தின் புற்கள் ஈரமடைவதை அவதானித்தேன்.



ஆனாலும் இலங்கையில் கண்டி - பள்ளேகளை மைதானம் தவிர்ந்த ஏனைய இரு மைதானங்களிலும் பனி+ஈரலிப்பு அவ்வளவு பாரதூரப் பிரச்சினையாக இராது என்றே நினைக்கிறேன்.

சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டியாக இந்த உலகக் கிண்ணம் அமையும் பட்சத்தில் பங்களாதேஷ் அணியிடமும் ஒரு பார்வை வைத்துக் கொள்ளுங்கள்.கால் இறுதிக்குள் நிச்சயம் வரப் போகிறவர்கள் (தங்கள் சொந்த நாட்டிலேயே அத்தனை போட்டிகளையும் விளையாடவுள்ளதால் தம பிரிவில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துவார்கள் என நம்புகிறேன்.. சிலவேளைகளில் இங்கிலாந்தையும் கவிழ்க்கலாம்) அந்த நாள் அவர்கள் நாளாக அமையும் பட்சத்தில் அரையிறுதிக்குள் அதிரடியாக நுழையக் கூடும்.

சுழல் பந்துவீச்சாளர்களை அடுக்கி வைத்துள்ள சிம்பாப்வேயும் கவனிக்கக் கூடியதே.ஆனால் கால் இறுதிக்குள் நுழைவதாயின் அவர்கள் இலங்கை,ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,நியூ ஸீலாந்து ஆகிய அணிகளில் ஒன்றையாவது வீழ்த்தவேண்டி இருக்கும்.

பிரேமதாச மைதானத்துக்கு சென்றவேளையில் அவதானித்தவை -
கிட்டத்தட்ட இரு வருடங்களுக்குப் பிறகு இந்த மைதானத்துக்குப் போட்டியோன்றைப் பார்க்கப் போயிருந்தேன்.

அன்றைய பயிற்சிப் போட்டியில் நான் க்ளிக்கிய சில படங்களின் தொகுப்பு இங்கே...

Warm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்



உலகக் கிண்ணத்துக்காக மீள நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மைதானம் மேலும் வசதிகளை உள்ளடக்கி இருக்கிறது.



வெளிப்புற வலைப் பயிற்சித் திடல்கள், அதிக வசதிகள் கொண்ட ஊடகவியலாளர் மண்டபங்கள்,அதிக பாதுகாப்பு, மேலும் வசதியான மல,சல கூடங்கள், பெரிய வாகனம் நிறுத்தும் இடங்கள்..
பார்வையாளருக்கான அரங்கங்கள் மேலும் பெரிது படுத்தப்பட்டிருப்பது இலங்கையின் முன்னணி ஒரு நாள் அரங்கம் என்ற பெயரை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தின் புற்றரைகளில் இன்னும் கொஞ்சம் புற்கள் இருந்தால் மேலும் பொலிவாக இருக்கும் என்ற ஒரேயொரு ஆதங்கம் தான்.
ஆடுகளம் முன்பைப் போல தட்டை இல்லை என்பதும் அறிந்த உறுதியான தகவல்.

உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் மைதானம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகளை ICC வலியுறுத்தி இருந்த அடிப்படையில் அரங்கத்தின் உள்ளேயும் சூழவுள்ள இடங்களிலும் சில விதிமுறைகள் காவல்துறையினரால் விதிக்கப்பட்டுள்ளன.

சூழவுள்ள பிரதேசங்களில் சுத்தம் பேணப்படல்
மைதானத்தை சூழ வெளியேறும் ஐந்து பிரதான வீதிப் பாதைகள்
வாகனங்கள் வீதிகளுக்கு அருகாமையில் நிறுத்தப்பட முடியாது
அருகேயுள்ள தொடர்மாடிக் குடியிருப்புக்களிலும் அண்மையில் உள்ள புற்றரைகள், வெட்டவெளிகளிலும் துணிகள் காயப்போட முடியாது
வீதிகளில் மேற்சட்டை இல்லாமல் ஆண்கள் நடமாட முடியாது
திருத்தப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலில் செருப்பாவது அணியவேண்டும்
அரங்கத்தின் உள்ளே உள்ள சகல பணியாளர்களுக்கும் அடையாள அட்டைகள். + இறுக்கமான பாதுகாப்பு
பிரதான வீதியிலிருந்து உள்ளே பிரவேசிக்கையிலேயே தெளிவான தகவல்களை அறிவிக்கும் வழிகாட்டிப் பலகைகள் சிரமங்களைக் குறைக்கின்றன.

எமக்கென ஒதுக்கப்பட்ட ஊடகவியலாளர் பகுதிக்கு செல்ல எந்தவொரு சிக்கலும் இருக்கவில்லை.வாகனத்தில் நான் இருக்கையிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகப் பொறுப்பு அதிகாரி நலம் விசாரித்து,என் அனுமதி அடையாள அட்டையை சரிபார்த்து அன்றைய நாளுக்கான இலவச அனுமதியையும் வாகன நிறுத்துமிட நுழைவுச் சீட்டையும் வழங்கி அனுமதிக்கிறார்.(உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இலவச உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கி இருந்தாலும் ஏகப்பட்ட விண்ணப்பங்கள் காரணமாக ஒவ்வொரு போட்டியாகத் தான் பார்த்துப் பார்த்து மூன்று நாட்களுக்கு முன்னர் தொடர்புகொண்டு அனுமதிக்கிறார்கள். உதாரணமாக நாளை மறுதினம் இடம்பெறும் முதல் போட்டிக்கு இலங்கையின் அனேக ஊடகவியலாளருக்கு அனுமதியில்லை)

எமது பகுதிக்குள்ளே நுழைந்தவுடன் யின் ஊடக முகாமையாளர் பிரையன் மேகற்றோயிட் வசதிகள் பற்றிக் கேட்டறிகிறார்.ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உதவியாளர்கள் சகல தகவல்கள்+உதவிகளுக்கும் கையருகே நிற்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து வந்திருந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய போது இந்த வசதிகளை சிலாகித்தார். Best in Asia என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் ஜிப்சன் இப்போதிருக்கும் formஇல் இலங்கையின் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக ரங்கன ஹெரத்தைக் குறிப்பிடுகிறார்.

எமது வெற்றி FM வானொலி மூலமாக இலவச உலகக் கிண்ண டிக்கெட்டுக்களை வழங்கிக் கொண்டிருப்பதால் இப்போது தினமும் எக்கச் சக்க தொலைபேசி அழைப்புக்கள் மூலமான டிக்கெட் வேண்டுகோள்கள். ஆனால் எல்லோருக்கும் கொடுக்க முடியாதே.

எம்மிடம் இருக்கும் டிக்கெட்டுகள் நேயர்களுக்கு மட்டுமே.. இருப்பவற்றில் வரும் வரிசையில் அதிர்ஷ்ட அடிப்படையில் நேயர்களுக்கு போட்டி டிக்கெட்டுக்களை வழங்குகிறோம்.



இலங்கை - பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுக்களுக்கு ஏக வரவேற்பு.
காரணம் இலங்கை - ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டிக்கெட்டுகள் எங்கேயும் கிடைக்காது. ஊடகவியலாளனாக இருப்பது இந்த வகையிலும் அதிர்ஷ்டமே.

மீண்டும் உலகக் கிண்ணம் நம் நாடுகளுக்கு வர எப்படியும் பத்து,பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் இம்முறை ஒரு போட்டியையாவது பார்த்துவிடுங்கள்.

இன்று மாலை டாக்காவில் இடம்பெறும் ஆரம்ப விழாவில் ஷங்கர் மகாதேவன் - எஹ்சான்- லாய் குழுவினருடன் , எனக்கு மிகப் பிடித்த ஆங்கிலப் பாடகர் பிரையன் அடம்சும் கலக்கப் போகிறார்கள். பார்க்கப் போகிறேன்.. தொலைக்காட்சியில் தான்.

இன்றைய ஆரம்ப விழாவில் ஒவ்வொரு அணிகளின் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் மட்டுமே கலந்துகொள்வர் என்று கூறப்படுகிறது.

***
நாளை நேரம் கிடைத்தால் ஊகங்கள்,எதிர்வு கூறல்களுடன் அணிகள் பதின்னான்கையும் பார்க்கவுள்ளேன்.





அதிமுக்கியமான ஏழாம் இலக்கம் - உலகக் கிண்ண அலசல் 2

2/11/2011 04:32:00 PM

(18) Comments



இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றிய செய்திகள்,ஆய்வுகள்,கணிப்புக்கள் பல வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஆசிய ஆடுகளங்களில் இந்த உலகக் கிண்ணம் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ள அணியாகப் பந்தயக்காரர்களால் (உத்தியோக பூர்வ/அங்கீகரிக்கப்பட்ட) வரிசைப்படுத்தப்பட்டுள்ள அணிகள்..

Outright World Cup 2011 Odds - Click To Bet

PaddypowerBoylesportsBet365TotesportWilliamhillVCBet
India3311/411/411/45/2
Sri Lanka49/29/29/255
Australia511/211/259/211/2
South Africa11/25511/29/211/2
England513/26656
Pakistan8815/2789
New Zealand201620201620
West Indies201620162022
Bangladesh334040335050
Zimbabwe200200250100200200
Ireland5005005005005001000
Canada100010002000100010002000
Holland75010002000100010002000
Kenya100010002000100010002000


ஆடுகளத் தன்மைகள், கால நிலைக்கும் வெப்ப தட்பத்துக்கும் ஏற்ப தம்மைப் பழக்கப்படுத்தல், நாணய சுழற்சிகள், சுழல் பந்துவீச்சு, அதிரடித் துடுப்பாட்டங்கள் என்று பல விஷயங்கள் இம்முறை ஒவ்வொரு அணிக்குமான வெற்றி வாய்ப்புக்களைத் தீர்மானிக்கும் விடயங்களாக சொல்லப்படும் நேரத்தில், என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணிகளின் துடுப்பாட்ட வலிமையுடன் அந்தந்த அணிகளின் சமநிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு தான் வெற்றிகள் தீர்மானிக்கப்படப் போகின்றன என்ற அடிப்படை அம்சத்தில் தான் நான் நோக்குகிறேன்.அந்த வகையில் இந்த உலகக் கிண்ண வெற்றியாளரையும் ஒவ்வொரு போட்டிகளில் அணிகளின் வெற்றிகளையும் பெருமளவில் தீர்மானிக்கப் போகின்ற காரணி என நான் நினைப்பது அணிகளின் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் தான்.

அணியொன்றில் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான பாலமாக அமைந்து அணிக்கான ஓட்ட வேகத்தை அதிகரிப்பது அலது விக்கெட்டுக்கள் சரியும் வேளையில் அணியைப் பாதுகாப்பது என்ற முக்கியமான கடமைகள் மட்டுமல்லாமல், வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கையில் ஒருநாள் போட்டிகளில் பரவலாகப் பேசப்படும் விடயமான முடித்துவைத்தல்(Finishing) என்பதையும் சரியாக நிறைவேற்றவேண்டிய கடப்பாடும் இந்த ஏழாம் இலக்க வீரருக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்புக்களாகின்றன.

ஏழாம் இலக்க வீரர் சகலதுறை வீரர்கா அமைவது ஒவ்வொரு அணிக்கும் மேலதிக வளம்+பலம்.

தரவுகள் ரீதியாக இதனை நிரூபிக்க எனது அன்புக்குரிய அனலிஸ்ட்டின் உதவியை நாடினேன். (தன் பெயரை அவர் வெளியிட வேண்டாம் என்று கேட்டதனால் பெயரைக் குறிப்பிடவில்லை.)

ஒரு நாள் சர்வதேச வரலாற்றில் ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்களின் மொத்தப் பெறுபேறுகள்..
Overall figures
overall7961971-201130994922115880333139*21.3410653775.408252395

Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அணிகளின் ஏழாம் இலக்கப் பெறுபேறுகள்

View overall figures [change view]
Start of match date greater than or equal to 1 Oct 2008 remove greater than or equal to 1 Oct 2008 from query
Totals in terms of batting team switch totals
Ordered by matches won (descending)
Page 1 of 1Showing 1 - 17 of 17First pageFirst Previous pagePreviousNext Next page Last Last pageReturn to query menu
Cleared query menu
Overall figures
Australia2009-2011714523031.9536.105.25350131investigate this query
India2008-2011684123041.7838.015.6741488investigate this query
Sri Lanka2008-2011573420031.7032.515.18411115investigate this query
South Africa2008-2011433013002.3040.315.77399119investigate this query
Bangladesh2008-2010512427000.8828.364.73320124investigate this query
England2008-2011512427000.8830.555.23347117investigate this query
Zimbabwe2008-2010542133000.6325.844.6835144investigate this query
New Zealand2008-2011552029060.6827.455.12336103investigate this query
Ireland2008-201027198002.3730.754.77325147investigate this query
Pakistan2008-2011471927010.7027.065.0038575investigate this query
Netherlands2009-201018108001.2529.194.56304125investigate this query
West Indies2008-2011451030050.3326.995.04319128investigate this query
Afghanistan2009-20101697001.2827.734.6229588investigate this query
Canada2009-201019711010.6325.974.56288108investigate this query
Kenya2008-201033626010.2322.434.39285112investigate this query
Scotland2009-201017611000.5424.414.23286104investigate this query
Bermuda2009-2009202000.0035.715.00259-investigate this query

Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் அணிகளின் ஏழாம் இழக்க வீரர்களின் பெறுபேறுகள்..


Start of match date greater than or equal to 1 Oct 2008 remove greater than or equal to 1 Oct 2008 from query
Batting position equal to 7 remove equal to 7 from query
Grouped by team remove team from query
Ordered by runs scored (descending)
Page 1 of 1Showing 1 - 17 of 17First pageFirst Previous pagePreviousNext Next page Last Last pageReturn to query menu
Cleared query menu
Overall figures
Australia132009-2011715314126463*32.41132795.2503111110investigate this query
Zimbabwe142008-20105447710238625.57137274.560827720investigate this query
Pakistan82008-201147447980109*26.48856114.481337539investigate this query
New Zealand142008-20115546993575*25.27116580.250457318investigate this query
Sri Lanka142008-2011574178046623.64103177.98052599investigate this query
India122008-201168431480310527.6891088.241446127investigate this query
Bangladesh92008-201051411477664*28.74106872.650325510investigate this query
England122008-201151421072460*22.6285684.570115116investigate this query
West Indies92008-2011453856536219.7870392.880124821investigate this query
South Africa102008-201143351256857*24.6959196.100143312investigate this query
Kenya72008-2010332925415820.0370576.730354510investigate this query
Ireland82008-2010271954386031.2859973.12021364investigate this query
Afghanistan62009-2010161222206022.0028377.73022195investigate this query
Scotland72009-2010171422044617.0039751.3800291investigate this query
Canada112009-2010191411724913.2327961.6400373investigate this query
Netherlands82009-2010181311682914.0026164.3600276investigate this query
Bermuda22009-20092212321*23.002592.0000030investigate this query


Power Play 3 அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஏழாம் இலக்கத்தில் ஓட்டங்கள் குவித்த வீரர்கள்..


Overall figures
Mahmudullah (Ban)2008-201033