June 20, 2011

ஐந்து படங்கள், ஒரே பதிவு


நேரமின்மை காரணமாக சேர்த்து வைத்து இந்த இரு வாரங்களில் நேரம் கிடைத்த போதெல்லாம் pause, rewind, forward செய்து பார்த்து முடித்த சில +  திரையரங்கு சென்று பார்த்த சில திரைப்படங்களின் சுருக்கமான பார்வை....

குள்ள நரிக் கூட்டம் 


பெரிய பில்ட் அப்புகள், தேவையற்ற விஷயங்கள் அற்ற சுவாரஸ்யமான திரைக்கதை.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த வேலையற்ற இளைஞன் காதல் வயப்பட்டு பின் பொறுப்பானவனாக மாறிப் போலீஸ் வேலை தேடும் கதை.
சராசரிக் கதையாக இருந்தாலும் ரசனையாகக் கதை சொல்லும் விதமும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும் ரசனை.
விஷ்ணு முதலாவது படமான பலே பாண்டியாவிலேயே ரசிக்க வைத்தவர். இந்தப் படத்திலும் துரு துரு என்று கலக்குகிறார்.

கதாநாயகி ரம்யா நம்பீசன் சட்டென்று மனதில் இடம் பிடித்துவிட்டார்.

சிறிது நேரமே வருகிற அப்புக்குட்டியும், கலகலக்க வைக்கிற சூரியும், விஷ்ணுவின் அண்ணனாக, அப்பாவாக வரும் நடிகர்களும் ரசிக்க வைத்துள்ளார்கள்.
புதிய ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மணன், Red one ஐ மிஞ்சும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைக் கொண்ட ARRI D21 என்கிற கேமராவினை இந்தியாவிலேயே முதல் முறையாகப் பயன்படுத்தி குள்ள நரிக் கூட்டத்தைப் படம் பிடித்திருக்கிறார்.
பாடல்களில் விழிகளிலே அற்புதம்.
இயக்குனர் ஸ்ரீ பாலாஜிக்கு நல்ல வாய்ப்புக்கள் வருமிடத்தில் ஒரு கலக்கு கலக்குவார். பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.


ஈசன்


மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. சசிக்குமாரின் இயக்கத்திலே இதுவரை வந்த படங்களிலே வித்தியாசமான கதை +களம்.
நட்சத்திரங்கள் யாரும் இல்லாமல், கதையையும் பாத்த்திரங்களையும் பலமாக அமைத்து நகர்த்தியுள்ளார்.
திருப்பங்கள், எதிர்பாராத சம்பவங்கள் மூலம் ஒரு திருப்தியான thriller படம் பார்த்த மகிழ்ச்சி.
அமைச்சராக வருபவர், அவரது உதவியாளர்(நாடோடிகள் படத்திலும் ஏற்கெனவே பார்த்தேன்), சமுத்திரக்கனி, வைபவ் மற்றும் அந்த சின்னப் பையன்(தயாரிப்பாளர் + நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன்) ஆகியோரின் நடிப்பு மனதில் நிற்கிறது.
சமுதாயத்தின் ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் விதமும், அமைச்சர் தெய்வநாயகம், மகனின் பெயர் செழியன், மகனை நம்பித் தான் அரசியல் சாம்ராஜ்யம் என்னும் பல இடங்கள் எதையோ சுட்டுவது போல் இருக்கின்றன.
வியாபார சக்கரவர்த்தி ஹெக்டே விஜய் மல்லையாவை ஞாபகப்படுத்துகிறது.
பாடல்கள் தான் படத்தின் பலவீனமாக இருக்கவேண்டும். (ஜில்லா விட்டு பாடல் தவிர)

சசிக்குமாரின் இயக்கம் என்பதால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே விறுவிறுப்பையும் நேர்த்தியையும் எதிர்பார்த்தேன். ஆனாலும் 
திரையரங்கில் பார்த்திருக்கலாமே என்று நினைக்கவைத்த படம்.


எத்தன்


ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் எத்தன் காதலாலும் அப்பாவின் பாசத்தாலும் நல்லவனாகும் வழக்கமான கதை.
ஹீரோ விமல் கலகலப்பாக நடித்திருக்கிறார்.
அவரை சுற்றியே கதை நகர்கிறது.
ஆனாலும் கடன் கொடுத்து அலையும் இயக்குனர் சிங்கம்புலியும், தந்தையாக வருகிற ஜெயப்பிரகாஷும் என்னைக் கவர்ந்தார்கள்.
சில இடங்கள் சிரிக்க வைத்தாலும், பெரிதாக படம் கவரவில்லை.
சில வசனங்கள் மனதாரப் பாராட்டக் கூடியவை.
பசங்க, களவாணிக்குப் பிறகு அதே போன்ற விமலைப் பார்ப்பது சலிப்பு.
பாடல்கள் பெரிதாக எடுபடாதது எத்தனைக் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது.


பொன்னர் சங்கர்


பலர் பார்க்கவேண்டாம் என்று பயமுறுத்தினாலும் பார்த்தே ஆகவேண்டும் என்று இருந்தேன்.
காரணங்கள் மூன்று..
கலைஞரின் வசனங்கள் இந்தக் காலத்தில் எப்படி இருக்கின்றன எனப் பார்க்கும் ஆர்வம்.
தியாகராஜன் அள்ளி வீசிய பணத்தின் பிரம்மாண்டம்
பல விளம்பரங்களில் நான் ரசித்த திவ்யா பரமேஸ்வரன் எப்படி கதாநாயகியாக நடிக்கிறார் என்று பார்க்கும் ஆர்வம்.
திவ்யா பரமேஸ்வரன்

இரண்டு தடவை கொழும்பு சினிசிட்டிக்குப் போயும், நாங்கள் நால்வரே பொன்னர் சங்கர் பார்க்க வந்ததால் போட மாட்டேன் என்று விட்டார்கள்.
ஏமாற்றத்துடன் இருந்த எனக்கு பிரசாந்த், தந்தை தியாகராஜனுடன் (வீரகேசரி ஏற்பாட்டில்) இலங்கை வந்தபொழுது அவர்களுடனேயே சேர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இப்படித் தான் சொதப்புவார்கள் என்று தெரிந்தே பார்த்ததால் அந்தளவு கடுப்பாகவில்லை.
அவ்வளவு பணத்தையும், இத்தனை நட்சத்திரங்களையும் வீணாக்கியது தான் அநியாயம்.

பிரசாந்த் இவ்வளவு காலம் திரையுலகில் இருந்தும் இப்படி ஒரு கற்சிலை மாதிரியே வந்து போவது தான் வெறுப்பேற்றுகிறது.
அவரைப் போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாத நாயகிகள்.. (நம் அபிமான திவ்யாவும் தான் :( )

வசனங்களில் விசேடம் இல்லை. பல காட்சிகளின் பிரம்மாண்டம் ரசிக்க வைக்கிறது.
பொன்னியின் செல்வன் இவர்களிடம் அகப்பட்டுவிடக் கூடாதே என்பது மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.
தமிழக ஆட்சி மாறியதால் அது நடக்காது என்பது திருப்தி.


கண்டேன்


ஓசி டிக்கெட் என்பதால் பார்த்தால் நேர விரயம் மட்டுமே ஒரே பிரச்சினை என்று மனதைத் தேற்றிக் கொண்டு போன படம்..
பாடல்கள் ஏற்கெனவே பிடித்திருந்ததனால் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தாலும் போதும் என்று பார்த்தால், சந்தானம் இல்லாமல் படத்தை நினைத்தால் பயங்கரமாக இருந்திருக்கும்..

பல இடங்களில் சந்தானம் சிரிப்பு வெடிகளைத் தூவி இருக்கிறார்.
காதலில் நண்பன்னா மாமா வேலை பார்க்கணும், சர்க்கரைக்கட்டி இன்னைக்குக் கரைஞ்சிருவான்..,FRIENDSHIP நா தமிழில் பலி ஆடுன்னு அர்த்தமா?. ஜட்டி வாங்கக் காசு கேட்கும் இடம், இப்படி பல பல..
பேசாமல் சந்தானத்தையே ஹீரோவாகப் போட்டிருக்கலாம்.

சாந்தனு முதலாவது படத்தில் இருந்தே சொதப்பி வருகிறார். கதாநாயகியும் அவருக்கு எந்தவொரு படத்திலும் வாய்ப்பதாக இல்லை. ஆனால் இந்த நாயகி ரேஷ்மி கொஞ்சம் பார்க்கப் பரவாயில்லை )சில ஆடைகளில்,சில காட்சிகளில்)

பாடல் காட்சிகளும் நடனங்களும் சூப்பர். ரசிக்க வைத்துள்ளார் நடன இயக்குனர் ராபர்ட்.

ஆசிஷ் வித்யார்த்தி, விஜயகுமார் வீணடிக்கப்பட்டுள்ளார்கள்.

புதிய இயக்குனர் முகில் பிரபுதேவாவின் உதவியாளராம். பாவம்.
அடுத்த முறையாவது ஒழுங்காக முயற்சிக்கட்டும்.

ஹர்ஷுவுக்காக அவனுடன் சென்று பார்த்த ஆங்கிலப் படங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..
ரியோ
குங் பூ பண்டா


-------------------------------இத்தனை படங்களுடன் என் மனதைப் பாதித்த ஒரு பதிவையும் உங்களுடன் பகிர்கிறேன்..
மனதில் வலி ஏற்படுத்தும் சிறு சிறு விடயங்களையும் ஒரு சிலருடனாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும்..

இந்தப் பதிவும் அப்படித் தான்.. 

படித்தால் இந்தப் பதிவினை எழுதியவனுக்காக மட்டுமல்லாமல், இந்த வலிகளை இன்று இலங்கையில் உணரும் பல ஆயிரக்கணக்கானவருக்காகவும் அழுவீர்கள்.
இந்தப் பதிவை வாசித்த கண்ணீர் காயாமல் நான் இட்ட பின்னூட்டம்.... 

வாசித்த பின் அழுதேன்.. :(

தந்தை என்ற உறவு எவ்வளவு முக்கியமானது என்று நான் தந்தையான பின்னர் உணர்ந்தேன்..
தந்தை இல்லாத நாட்கள் ஏழை ஏன் மகனும் சின வயதிலேயே உணர்ந்துவிட்டான்..
இன்று உங்கள் பதிவை வாசித்த பின்னர் தற்செயலாக நான் திரும்பாவிடில் அவனுக்கும் இதே நிலை தான் என்பதை வலியுடன் உணர்ந்தேன்.

உங்கள் அம்மாவுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்..
நீங்கள் ஒரு நல்லவனாக இன்று சமூகத்தில் உயர்ந்து உங்கள் அப்பாவை மட்டுமல்லாமல் அம்மாவையும் கௌரவப்படுத்தியுள்ளீர்கள்.
வாழ்க்கையை மேலும் வென்று உங்கள் அன்னைக்கு மேலும் பெருமையைச் சேருங்கள்.

என்னால் முடிந்தவரை இந்தப் பதிவை என் நண்பர்களுக்கும் நேயர்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளேன்.


10 comments:

SShathiesh-சதீஷ். said...

யாரிது புதுசா திவ்யா?

maruthamooran said...

குள்ளநரிக்கூட்டம்- ரசிக்கலாம்.

ஈசன்- கவரவில்லை.

பொன்னர்- சங்கர்: பார்க்கவில்லை. எப்படியாவது பார்க்கவேண்டும். ஒரு பாடலில் ஏற்பட்ட ஈர்ப்பு. அதுதவிரவும், “பல்பு“ வாங்கி நீண்ட நாட்கள் ஆகிறது.

எத்தன்- சும்மா பார்க்கலாம் ரகம்.

கண்டேன்- பார்க்கவில்லை.

Ashwin-WIN said...

ஈசன்: என்னைக்கவர்ந்த படங்களில் ஒன்று.. அந்த சின்ன பையனுக்காக பாத்த்தது..
பொன்னர் சங்கர்- வீண் பிரம்மாண்டம்.. காட்சிகளிலோ கதையிலோ கோர்வையே இல்லை.

அனுதிணனின் பதிவினை பகிர்ந்தது சிறப்பு..

Unknown said...

குள்ளநரிக்கூட்டம்,ஈசன் ரசித்த படங்கள்.ஈசனில் மயான இன்பம் பாடல் அருமை. ரம்யா நம்பீசன் படம் என்னதான் மனதை கொள்ளையடித்தாலும் மாவீரன் காஜல் தூக்கி சாப்பிட்டு விட்டார்.
அவன் இவன் பார்க்கலையா?

Anonymous said...

அண்ணா, விமர்சனம் அத்தனையும் உண்மை.ஆனால் விஷ்ணுவிற்கும், ஒளி்ப்பதிவாளர் லக்ஷ்மனிற்கும் முதல் படம் வெண்ணிலா கபடிகுழு ..!!!!

Mathuran said...

விமர்சனங்கள் லேட்டாக வந்தாலும் அருமையாக இருக்கிறது அண்ணா

Shafna said...

5 விமர்சனங்களையும் படித்ததில்,எதை ஆர்வத்துடன் பார்ப்பது எதை எப்ப வேணுன்னாலும் பார்ப்பதுன்னு விளங்குது..அப்படியே பார்த்துட்டா போச்சு... இலங்கை அப்பாக்களுக்கு பார்த்தேன்..ஒரு தந்தையின் ஆதங்கம்,ஒரு மகனின் ஏக்கம்,ஒரு தாயின் ஏக்கம் கலந்த முயற்சி கண்டேன்.. உங்கள் பின்னூட்டம் மேலும் நெருட வைக்கிறது.. நீங்கள் வீடு திரும்பாவிட்டால் உங்கள் மகனும் ஏங்கிப் போவானென்று எழுதி நீங்களும் மனம் நொந்தழுது எங்களையும் ஏன் அழ வைக்குரிங்க?...இப்படியெல்லாம் இதன் பிறகு சொல்லக்கூடாது சரியா? 5 படம் பார்க்க வைத்து இறுதியில் அழவும் வச்சிட்டீங்க...

anuthinan said...

என் பதிவை பகிர்ந்து என் போன்ற பலரின் அடையாளங்களை நினைவுபடுதியமைக்காக நன்றிகள் அண்ணா!!!!

கார்த்தி said...

குளடளநரிக்கூட்டம் பாக்கல நல்ல கொப்பிக்காக வெயிட்டிங்
ஈசன் நல்ல மர்மபடம். ஆன இடையிலயே யார் கொலைகாரன் என்று இலகுவாக சொல்லாம சொல்லிட்டாங்க!
/* சசிக்குமாரின் இயக்கத்திலே இதுவரை வந்த படங்களிலே வித்தியாசமான கதை +களம். */
சசிக்குமார் சுப்பிரமணியபுரமும் ஈசனும்தானே இதுவர எடுத்திருக்கார்! நாடோடிகள ஹிரோ பசங்க படத்தில தாயாரிப்புமட்டும்தானே?

எத்தன் படத்தில கதையெண்டு ஒண்டும் இல்லாட்டியும் விமலில் கலகல நடிப்பால நல்லா இருந்தது!

பொன்னார் சங்கர் பாக்கல

கண்டேன் மிககேவலமா இருக்கம் எண்டு எதிர்பாத்தததால சந்தானத்தின்ர பகிடி காப்பாற்றி ஏதோ பறுவாயில்லை என்று நினைக்க வைச்சது!

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner