தமிழக மீனவர் கொல்லப்படுவது நிறுத்தப்படவே வேண்டும்.எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
எங்கள் சகோதர்கள் இங்கே இறந்தபோது எமக்காக அழுதவர்கள் இறக்கையில் நாம் கண்ணீர் சிந்தாவிடில் மனிதரும் இல்லை;தமிழரும் இல்லை.
ஆனால் இந்தக் கொலைகள் பற்றிய மாபெரும் எழுச்சியில் இலங்கைத் தமிழ் மீனவர்களின் நாலாபக்க பிரச்சினைகளும் மூழ்கிப் போகும் அபாயமும் இருப்பதை மறக்காதீர்.
ஆழ்கடல் மீன்பிடித் தடை தற்போது குறைந்து, வலைகள் முன்பு பறிக்கப்பட்டு இப்போது கொஞ்சம் மூச்சுவிட ஆரம்பிக்கும் நேரம் இந்தியப் பெரிய மீன்பிடிப் படகுகளினால் வலைகள் அறுக்கப்பட்ட வறிய இலங்கை மீனவருக்காகக் குரல் கொடுக்க யார் உள்ளார்கள்?
அங்கே கொலைகள்.. இங்கே எம் மீனவர்களின் தற்கொலைகள்..
கொலைகளை நிறுத்த அழுத்தம் கொடுப்போம்..
தத்தம் எல்லைகளை யாரும் மீறாமலும் பார்த்துக் கொள்வோம்.
உண்மையை சொன்னால் துரோகி என்னும் சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும் தெரிந்த விஷயங்களை யதார்த்தமாக சொல்லவே இந்தப் பதிவு...
அண்மையில் சமூக வலைத்தளங்களில் இந்திய மீனவர்களின் படுகொலைகள் பற்றிப் பிரம்மாண்டமாக எழுந்த எதிர்ப்பலைகளால் அந்த மீனவர்களுக்கு நல்ல விடிவு கிடைத்தால் மகிழ்ச்சியே.. அதே போல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது இலங்கையின் அப்பாவி-ஆதரவற்ற மீனவர்களுக்கும் நல்லது நடக்கட்டும்.
அரசியல்வாதிகள் திடீரென விழித்தது என் என்று எல்லோருக்குமே தெரியும்.. ஆனால் வலையுலக எழுத்தாள நண்பர்களின் #tnfisherman ஒற்றுமையும் மாபெரும் எழுச்சியும் பெருமை தருகிறது.
ஆனால் இங்கேயும் தாமதம் ஏன் என்ற கேள்வி எழுகிறது? ஐந்நூறு பேர் இறந்த பிறகுதான் இத்தனை பேரின் கண்களும் விழித்தனவா?
அடுத்தது அடுத்த வல்லரசு இந்தியா தன் கடற்படையையும் ஆதிக்கத்தையும் இவ்வளவு நாளும் இப்போதும் கூட இந்த விடயத்தில் ஈடுபடுத்தாமல். குறைந்தபட்சம் குரலையும் கூட எழுப்பாமல் இருந்துவிட்டு இப்போது பதறுவது குரூர நகைப்பாக இல்லை?
இன்னும் இலங்கையைக் கண்டிப்பதாக இல்லை.. ராஜதந்திரம் என்பது இது தானோ?
அரசியலில் இவையும் சகஜம் எனும்போது கேவலமாக உள்ளது.
இதே வேளையில் தான் பலரும் அறியாமல்/அறிய விரும்பாமல் இருக்கும் எம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் அவலங்களையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
ஆனால் இங்கேயும் தாமதம் ஏன் என்ற கேள்வி எழுகிறது? ஐந்நூறு பேர் இறந்த பிறகுதான் இத்தனை பேரின் கண்களும் விழித்தனவா?
அடுத்தது அடுத்த வல்லரசு இந்தியா தன் கடற்படையையும் ஆதிக்கத்தையும் இவ்வளவு நாளும் இப்போதும் கூட இந்த விடயத்தில் ஈடுபடுத்தாமல். குறைந்தபட்சம் குரலையும் கூட எழுப்பாமல் இருந்துவிட்டு இப்போது பதறுவது குரூர நகைப்பாக இல்லை?
இன்னும் இலங்கையைக் கண்டிப்பதாக இல்லை.. ராஜதந்திரம் என்பது இது தானோ?
அரசியலில் இவையும் சகஜம் எனும்போது கேவலமாக உள்ளது.
இதே வேளையில் தான் பலரும் அறியாமல்/அறிய விரும்பாமல் இருக்கும் எம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் அவலங்களையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
வலையுலக நண்பர்கள் சிலர் தத்தம் சமூகத் தளங்களில் முன்வைத்த கருத்துக்களை அவர்களின் அனுமதியில்லாமலேயே இங்கே பயன்படுத்திக் கொள்கிறேன்.
"இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன" - http://www.virakesari.lk/n ews/head_view.asp?key_c=27 971
யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்! (காணொளி இணைப்பு) - Express News - Virakesari Onl
www.virakesari.lk- Muralitharan Mauran
இதில் வினவு தளத்தில் வந்த கட்டுரைக்கு கிருத்திகன் இட்ட பின்னூட்டம் முக்கியமானது.
--
கிருத்திகன்
இந்தப் பிரச்சினையில் நீங்கள் அடிக்கடி சொல்கிற முதலாளிகள் தயவு நிறையவே இருக்கிறது என்பது உண்மை வினவு. என்னுடைய தந்தையாரிடம் சமீபத்தில் இன்பர்சிட்டிப் பகுதி மீனவர் ஒருவர் (யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்மித்த கடலோர ஊர் இன்பர்சிட்டி) சொன்னதாக ஒரு கருத்தைச் சொன்னார். ‘உண்மையிலேயே இந்திய மீனவகர்கள் கடல்தாண்டி வருகிறார்கள். பெரிய, நவீன இயந்திரப்படகுகள் மூலம் வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள் (மீன்களை அள்ளிக்கொண்டு செல்கிறார்கள் என்று வாசிக்கவும்). எங்கள் வயிற்றில் அடிப்பதோடு மட்டுமில்லாமல், எங்களை மிரட்டக்கூடச் செய்கிறார்கள். அவர்களை இராணுவம் சுடுவதில் தப்பில்லை’ என்பதாக அந்த மீனவர் சொல்லியிருக்கிறார்.
12 hours ago · ·1 person
Muralitharan Mauran
கிருத்திகன்
இனி, சுடப்பட்ட தமிழக மீனவர்களைப் பார்ப்போம். யாருமே பெரிய, நவீன இயந்திரப்படகுகளில் வைத்துச் சுடப்படவில்லை. சின்னப் படகுகள் அல்லது கட்டுமரங்களில் வைத்துத்தான் சுடப்பட்டிருக்கிறார்கள். பெரிய நவீன இயந்திரப்படகுகளில் மீனள்ளி உழைத்துவாழ்ந்த கொழுத்த முதலைகளாயில்லாத அன்றாடங்காய்ச்சிகளே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.அப்படியானால் ‘தங்களை மிரட்டிக்கூட மீன் பிடிக்கிறார்கள்’ என்று இன்பர்சிட்டி மீனவரால் சொல்லப்பட்ட அந்த பெரிய நவீன இயந்திரப்படகுக்காரர்கள் யார்? அவர்கள் ஏன் கொல்லப்படுவதில்லை? வெறுமனே வயிற்றுப்பிழைப்புக்காக மீன்பிடிப்பவர்கள் எல்லைதாண்டும்போது கடமையைச் செய்கிற இலங்கைக் கடற்படை ஏன் இந்த பெரிய நவீன இயந்திரப்படகுகளைக் கண்டுகொள்வதில்லை? அப்படியான படகுகள் பற்றிய செய்திகளே வருவதில்லையே, ஏன்? எங்கேயோ என்னவோ தவறு நடக்கிறது. அன்றாடங்காய்ச்சிகளான இலங்கை மீனவனும், இந்திய மீனவனும் வஞ்சிக்கப்படுகிறார்கள். யாரால்? எல்லைதாண்டி, இலங்கை மீனவனின் உழைப்பைத்திருடிவருகிற ‘அந்தக் குழு’ பாதுகாப்பாகத் திரிய, அடுத்தநாள் பிழைப்புக்கு வருபவர்களைக் கொல்கிற இலங்கை அரசு ‘சனநாயகச் சோசலிசக் குடியரசு’. அதை வேடிக்கை பார்ப்பது ‘அடுத்த வல்லரசு’.
இந்தத் தகவலகள் எனக்குத் தரக்கூடிய பதில், ‘இந்தக் கொலைகள் கடல் எல்லை, இயற்கை வளம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு நடைபெறுவதில்லை. பாதுகாக்கப்படுவது பெருமுதலாளிகளின் நலன்கள் மட்டுமே’.
12 hours ago · ·4 people
Muralitharan Mauran
இலங்கை "சிங்கள" கடற்படை, தமிழக "தமிழ்" மீனவர்கள் என்று மட்டுமே பார்க்கப்படுகிற இந்தப்பிரச்சினை பற்றின பெரும் கோசத்தில் இந்தத்தாக்குதல்களின் பின்னாலிருக்கக்கூடிய அச்சுறுத்தும் வேறு அக்கறைகள், வேறு நிகழ்ச்சி நிரல்கள் பற்றிய சிறு ஊகம்தானும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது ஆபத்தானது.
இதுவரை வந்தவற்றுள் வினவின் இந்தக்கட்டுரைதான் ஓரளவுக்காவது பரந்த தளத்தில் இப்பிரச்சினையைப் பார்க்க முயன்றிருக்கிறது [ http://www.vinavu.com/2011/01/28/tnfisherman/ ] ஆனால் இதுபற்றி இன்னும் விரிவாக கதைக்கப்படவேண்டும்.
12 hours ago · ·2 people
அறுக்கப்படும் வலைகளை விட இழக்கப்படும் உயிர்கள் முக்கியமானவையே.. ஆனாலும் அறுக்கப்படும் வலைகளாலும் இங்கே பலரது ஜீவனோபாயத்துக்கான வழிகள் பறிக்கப்படுகின்றன என்பதைக் கொஞ்சமாவது உலகுக்குக் கொண்டுவர என் பதிவு உதவினால் மகிழ்ச்சியே.
மீண்டும் அழுத்தமாகவே சொல்கிறேன்..
கொலைகளை நிறுத்த அழுத்தம் கொடுப்போம்..
தத்தம் எல்லைகளை யாரும் மீறி எளியவர் வயிற்றில் அடிக்காமலும் பார்த்துக் கொள்வோம்.
காரணம் பெரியண்ணன் அனுப்பும் பெரிய அக்கா நிருபமாவின் வருகையினால் எங்கள் சின்ன அண்ணர் உடனடியாக தன் தாக்குதல்களை நிறுத்தலாம். ஆனால் எம்மவரைக் கவனிக்கவும் குரல் கொடுக்கவும் யார் இருக்கார்?
# உணர்ச்சிவசப்படலைக் கடந்த ஆக்கபூர்வமான,யதார்த்த கருத்துகள்,விமர்சனங்களுக்குக் காத்திருக்கிறேன்.
11 comments:
சிறிது நேரம் கழித்து உங்களை மெயிலில் தொடர்பு கொள்கின்றேன். துரோகிப் பட்டம் கொடுக்கவெல்லாம் இல்லை.
:-)
இது பற்றிய சில ஆக்கபூர்வமான உரையாடலுக்காகதான்.
நன்றி.
//எங்கள் சகோதர்கள் இங்கே இறந்தபோது எமக்காக அழுதவர்கள் இறக்கையில் நாம் கண்ணீர் சிந்தாவிடில் மனிதரும் இல்லை;தமிழரும் இல்லை.//
நிச்சயமாக அதனால் தான் பல இலங்கையர்களும் பங்கெடுத்துள்ளார்கள்.
//உண்மையை சொன்னால் துரோகி என்னும் சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும் தெரிந்த விஷயங்களை யதார்த்தமாக சொல்லவே இந்தப் பதிவு...//
சொன்னால் துரோகி சொல்லாவிட்டால் ஹிட்டுக்காக எழுதுபவர்கள் என்ற பட்டம், விரைவில் எம்மையும் அரசியல்வாதியாக்கிவிடுவார்கள்
//அடதது அடுத்த வல்லரசு இந்தியா தன் கடற்படையையும் ஆதிக்கத்தையும் இவ்வளவு நாளும் இப்போதும் கூட இந்த விடயத்தில் ஈடுபடுத்தாமல். குறைந்தபட்சம் குரலையும் கூட எழுப்பாமல் இருந்துவிட்டு இப்போது பதறுவது குரூர நகைப்பாக இல்லை? //
சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இந்திய கடற்படையின் ஒரு கப்பல் வந்திருந்தது அதனைப் பார்த்த சென்னை வாசிகள் ஆகாஓகே என்று புகழ்ந்தார்கள். (கலைஞர் செய்திகள்).
//இதே வேளையில் தான் பலரும் அறியாமல்/அறிய விரும்பாமல் இருக்கும் எம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் அவலங்களையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.//
இதைத்தான் நானும் சுட்டிக்காட்டினேன், ஒரு அடிமை என்ன அகதியாம். நாங்கள் அகதியாக இருந்தாலும் மானத்துடன் இருக்கின்றோம் அடிமைகளோ இத்தாலிக்காரிக்கு சேலை துவைக்கின்றார்கள், கருணாநிதியின் மஞ்சள் கலர் கோவணம் துவைக்கின்றார்கள்.
நல்ல நடுநிலையான பதிவு.
//# உணர்ச்சிவசப்படலைக் கடந்த ஆக்கபூர்வமான,யதார்த்த கருத்துகள்,விமர்சனங்களுக்குக் காத்திருக்கிறேன்.//
தங்கள் பதிவும் உணர்ச்சிவசப்படலைக் கடந்து யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளதே. பாரட்டுகள். பல இலங்கைப் பதிவர்களின் பல்வேறு கருத்துக்களையும் உள்ளடக்கியிருப்பதும் சிறப்பானதே.
எனது கருத்துக்களையும் வாசிப்பதற்கு பல பழைய கட்டுரைகளுக்குத் தொடுப்புகளையும் பின்னர் பதிவேன். தற்போதைக்கு நேரம் ஒதுக்கவியலவில்லை.
//உண்மையை சொன்னால் துரோகி என்னும் சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும் தெரிந்த விஷயங்களை யதார்த்தமாக சொல்லவே இந்தப் பதிவு.//
உண்மை லோஷன்.. கொலையோ, தற்கொலையோ இரண்டுமே தவிர்க்கபட வேண்டியதே...
என்னுடைய கருத்துக்கள் ஏற்கனவே மேலே தெளிவாக உள்ளதால் வருகையைப் பதிவு செய்கிறேன்...
மீண்டும் சொல்கிறேன்,
கொலை யார் செய்தாலும், எதற்காகச் செய்தாலும் தவறு தான்.
உங்களைப் போன்ற ஒரு பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்ட ஒருவர் யதார்த்தபூர்வமாக இந்த விடயத்தை அணுகியிருப்பது நம்பிக்கை தருகிறது.
அன்பிற்கினிய நண்பரே...,
@@...தமிழக மீனவர் கொல்லப்படுவது நிறுத்தப்படவே வேண்டும்.எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை...@@
உண்மை...உண்மை...உண்மை...
@@...ஆனால் இந்தக் கொலைகள் பற்றிய மாபெரும் எழுச்சியில் இலங்கைத் தமிழ் மீனவர்களின் நாலாபக்க பிரச்சினைகளும் மூழ்கிப் போகும் அபாயமும் இருப்பதை மறக்காதீர்...@@
இதில் என்ன அபாயம்? - புரியவில்லை...நண்பரே...
தயவுசெய்து எங்களது பிரச்சனையின் தாக்கத்தை உணருங்கள். காலம் காலமாக சுடப்பட்டு...இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் (தனி)தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இப்போதுதான் எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் இதற்கு தீர்வு கிடைக்கட்டும்...,பிறகு தானாக இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு நல்வழி பிறக்கும்-பிறக்க வைப்போம். சில சமயங்களில் பிரச்சனைகளின் எண்ணிக்கை கூடினால் பார்ப்பதற்கே(தீர்ப்பதற்கே) மலைப்பை தரும். இந்திய நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளைப் போல தீர்ப்பு வருவதற்குள் நாடி தளர்ந்து விடும்.எனவே நீங்களும் ஆதரவு தாருங்கள்.
@@...உண்மையை சொன்னால் துரோகி என்னும் சமூகத்தில் நாம் வாழ்ந்தாலும்..@@
@@...அண்மையில் சமூக வலைத்தளங்களில் இந்திய மீனவர்களின் படுகொலைகள் பற்றிப் பிரம்மாண்டமாக எழுந்த எதிர்ப்பலைகளால் அந்த மீனவர்களுக்கு நல்ல விடிவு கிடைத்தால் மகிழ்ச்சியே.. அதே போல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது இலங்கையின் அப்பாவி-ஆதரவற்ற மீனவர்களுக்கும் நல்லது நடக்கட்டும்...@@
நண்பரே..., இங்கு யாரும் 100% தூய்மையானவர்கள் இல்லை. நாம் எல்லோரும் ஒரு கட்டத்தில் சந்தர்ப்பவாதிகளே.... இதனை சொல்வதால் நீங்கள் துரோகி இல்லை. துரோகி என்று நினைப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட்டதால் தான் இந்த பதிவு சற்று சொதப்பியிருக்கிறது. சில விசயங்கள் மறுபடியும்(மீண்டும்..மீண்டும்) வந்திருக்கிறது.
நல்ல பதிவு....முடிந்தால் எடிட் செய்து சொல்ல வந்ததை தெளிவாக துணிந்து சொல்லுங்கள். வெற்றி நமக்கே...
அன்புடன் ச.ரமேஷ்.
என்னுடைய கருத்துக்களும் மேலே இருப்பதால் மீண்டும் கூறுகிறேன் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது
ஒரு விஷயத்தை இங்கே சொல்லியாகவேண்டும்... வலைகளை அறுக்கும் இந்திய மீனவர்களிடம் இழந்ததைவிட இலங்கை மீனவர்கள் இலங்கை அரச படைகளிடம் இழந்தவை நிறைய. தங்கள் கடலுக்குள்ளேயே எத்தனையோ தடவை வேட்டையாடப்பட்டார்கள் என்பதையும் மறத்தலாகாது.
நீங்கள் சொல்வதுபோல் இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு என்பதட்காக இந்தியா தமிழ் மீனவர்களை கொன்று கடலில் வீசுவதை ஆதரிக்கிறீர்களா ,லோஷன் ?
500 மீனவர்கள் இறக்கும் வரை போராடதால் இனி போராடவே கூடாதா ?
Anonymous அவர்களுக்கு
லோஷன் அப்படியெல்லாம் எங்கு சொல்லுகிறார்? பதிவின் முதலாவது வரியையாவது திரும்பவும் வாசிக்கவும்.
A= இலங்கை தமிழ் மீனவர்களுக்கு பாதிப்பு
B= இந்தியா தமிழ் மீனவர்களின் கொலை
A உம் வேண்டாம் B உம் வேண்டாம் எனவே லோஷனும் பின்னூட்டங்கள் இட்டோரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். எனது நிலைப்பாடும் அதுவே.
தங்களது ஏரணமானது A தவிர்க்க வேண்டுமாயின் B தவிர்க்க இயலாது; B தவிர்க்க வேண்டுமாயின் A தவிர்க்க இயலாது. அது தவறான கணிப்பு.
ஆங்கிலத்தில் win-win எனச் சொல்வார்களே அறிந்ததில்லையா?
ஆதி
பார்த்திங்களா லோசனண்ண.....
நீங்கள் தமிழக மீனவர்களை குறை கூறினீர்கள். ஆனால் தமிழக மீனவர்களை அச்சுறுத்தி இலங்கை கடலுக்கு அனுப்பியது அரசியல் வாதிகளே. ஒரு மீனவன் இன்னொரு மீனவனின் பிழைப்பை கெடுக்க மாட்டான். அது போக இலங்கையில் தமிழ் மீனவர்கள் படும் துயரம் வித்தியாசமானது. மீனவ கிராமங்களுக்கு சென்று அவர்களின் நிலை குறித்து ஒரு பதிவு எழுதுங்களேன். தமிழக மீனவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என மறைவரசியல் செய்து இலங்கை என்பதன் பின்னணியில் தமிழ் மக்கள் மேல் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள மேலாதிக்கங்களை பேசாது நாசுக்காக எழுதியிருக்கும் உங்கள் ஆக்கம் படித்து சற்று வருத்தமாய் இருந்தது. நடுநிலை தேவை ஆனால் இலங்கையில் எந்த ஊடகுமும் நடுநிலையில்லை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். அதனால் நாசுக்கான பக்கச்சார்புகளில் நீங்கள் ஈடுபடுவது தவிர்க்கப்பட முடியாததே.
-ஆதி-
Post a Comment