December 08, 2010

தூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்

அண்மையில் வெளிவந்த புதிய திரைப்பாடல்களில் எனக்கு மேலும் பிடித்த (2+1) பாடல்களைத் தருவதாக சொல்லி ஒரு வாரத்துக்குப் பின்னர் அந்தப் பாடல்களோடு இந்த இடுகையில் சந்திக்கிறேன்.

முன்னைய பாடல் ரசனைப் பதிவுகள்...


இரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்ஐலே ஐலே குத்துது கொடையுது !!!

(இதற்கு முந்திய பதிவில் மரண மரதன் மொக்கையில் இறங்கி சாதனை நிலை நாட்டிய நண்பர்கள்,பதிவுலக சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். அதைக் கொஞ்சமாவது நிறுத்த ஒரே வழி இது தான் என்று தெரிந்தது.


தூறல் நின்றாலும் - சிக்கு புக்கு


தாத்தா வயதானாலும் இதயம் இளமையாக இருக்கும் கவி மார்க்கண்டேயர் வாலியின் காதல் வரிகளோடு இனிக்கும் பாடல் இது.
ஹரிஹரன்- லெஸ்லி லூயிஸ் ரஹ்மானின் Bombay Dreams இசையைக் கொஞ்சம் உருவிக் கொண்டாலும் இதயம் வருடும் இசை பாடலை மனசுக்குள் இறுகப் பூட்டி விடுகிறது.

ஹரிஹரனின் காந்தக் குரல் காதலின் பிரிவுத் துயரை எங்கள் மனதிலும் உணர்ச்சியோடு பிணைக்கிறது.
கூடவே சூபி (Sufi ) பாணி இசையில் உயிரைப் பிழியும் வடலி சகோதரர்களின் குரல் இனிமை.

மூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி எடுக்கும் அருமையான பாடல் இது. ஒரு நாள் காலையில் ஒலிபரப்பினாலும் நாள் முழுக்க இந்த வரிகள் என்னை முணுமுணுக்க செய்துவிடும்.
இசையின் மந்திரமும் வாலியின் வரிகளுடன் சேர்ந்து கட்டிப்போட்டுவிட்டன என்னை.

வாலி திரை இசைப் பாடல்களில் பல ரசிகரை ஈர்க்கக் காரணமாக இருந்த சந்த சுவை நயம் இப் பாடலிலும் கலக்குகின்றன.

இனியும் உன் பேரை என் நெஞ்சோடு 
ஒட்டி வைப்பதா 
எனது பொருள் அல்ல நீதான் என்று 
எட்டி வைப்பதா

திரையில் பாடல் எப்படி எனப் பார்த்து ரசித்தவர்கள் சொல்லுங்கள்..

மனது எல்லை தாண்டி ரசித்த சில வரிகள்...

இரவில் தூங்காது இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

திரைப்படம் - சிக்கு புக்கு
பாடியவர்கள் - ஹரிஹரன்,வடலி சகோதரர்கள்
பாடல் - கவிஞர் வாலி
இசை - ஹரிஹரன்- லெஸ்லி லூயிஸ் 

உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும் போதும் 
எனை போக விடு 


கண்மணி
எனை போக விடு 
கண்மணி
கண்மணி


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 


இரவில் தூங்காது இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 
உயிரே உயிரே .......


உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் 
காதல் உண்டானதே 


எனை போக விடு
கண்மணி


விழிகள் என்கின்ற வாசல் வழியாக 
காதல் உள்சென்றதே 
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு 
ஒட்டி வைப்பதா 
எனது பொருள் அல்ல நீதான் என்று 
எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 


இரவில் தூங்காது இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்


கண்ணிரெண்டில் மோதி - உத்தமபுத்திரன் 


முதல் தரம் கேட்டபோது பெரிதாக ஈர்க்காத இந்தப் பாடல்,அடுத்த தரம் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது.படம் பார்த்த பின் காட்சிகள்,ஜெனீலியாவின் சிரிப்பு,படபடக்கும் கண்களால் மேலும் பிடித்துக் கொண்டது.

புதிய பாடலாசிரியர் ஒருவர் ஏக்நாத்(நான் தான் முன்னர் இவர் பற்றி அறியவில்லையோ தெரியாது).அழகான வரிகளைக் கொஞ்சம் கிராமிய நயத்துடன் தந்திருக்கிறார்.
சின்ன சின்ன சிலிர்க்க வைக்கும் உவமைகளும் அழகான நயங்களும்.. அருமை.

முத்தக்கட்டு மொழி அழகில்  
குத்திக்குத்தி கொன்னவளே 
சிக்கிக்கிட்ட என் மனசை 
ஊறவச்சி தொவைச்சவளே 
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே 

இன்னுமொரு ரசித்த வரி வெகு இயல்பான வரி...
என் இரவின் நிலவே

கொஞ்சம் இருண்டிருக்கும்(!?) தனுஷுக்கும் ஒளியான ஜொலியான ஜெனீலியாவுக்கும் இருள்-நிலவு உவமை பொருந்துகிறதே..

இளையவர் என்பதால் இளமையாக இனிமையாக யோசிக்கிறார் ஏக்நாத்..

பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி

கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க 
பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே 

பாடலின் இனிமையான இசைககட்டோடு நயமாக,லயமாக வரிகளும் சந்தத்துடன் பயணிப்பது அழகு.
பயணப் பாடல்கள் பொதுவாகவே மனதை ஈர்ப்பது தமிழ்த் திரைப்பாடல்களில் வழமை தானே..

பாடகர் நரேஷ் ஐயர். இவரது குரல் எல்லாப் பாடல்களிலும் எனக்குப் பிடிப்பதில்லை. குரலில் பெண் தன்மை கூடவே கலந்திருப்பதாக நினைக்கிறேன்.சில பாடல்களில் இவரை அதிகமாக ரசித்தும் இருக்கிறேன். அதில் ஒன்று இந்த உத்தமபுத்திரன் பாடல்.

விஜய் அன்டனி தன குத்து,கும்மல் பாடல்களைப் போலவே இப்படி ரசனையான நல்ல பாடல்களையும் கலந்து தருவதால் தான் இன்னும் நிலைத்து நிற்கிறார்.அருமையான மெலடி இசை தந்தமைக்கு அவருக்கும் பாராட்டுக்கள்.

வரிகளை சுவைத்து பாடலையும் ரசியுங்கள்.
தனுஷின் அப்பாவித் தனமான முக பாவங்கள் மேலும் ஒரு ரசனை.


திரைப்படம் - உத்தம புத்திரன் 
பாடியவர்கள் - நரேஷ் ஐயர்
பாடல் - ஏக்நாத்
இசை - விஜய் அன்டனி   

கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே  
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை  
வேண்டியே உன்னிடம் நான் தொலைந்தேனே 


என் உயிரின் உயிரே 
என் இரவின் நிலவே  
என் அருகில் வரவே 
நீ தருவாய் வரமே ஓ......  


ஊருக்குள்ள கோடிப் பொண்ணே யாரையும் நெனைக்கலையே 
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே  
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி  
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி  


கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே  
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை  
வேண்டியே உன்னிடம் நான் தொலைந்தேனே 


ஓ ஓ.. ஏதோ ஒண்ணு சொல்ல  
என் நெஞ்சுக்குழி தள்ள
நீ பொத்திவச்ச ஆசையெல்லாம் 
கண்ணு முன்னே தள்ளாட 
கண்ணாம்மூச்சி ஆட்டம் 
என் கண்ணுக்குள்ள ஆட 
நீ சொல்லும் சொல்லும் சொல்லை கேட்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட 
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சுக்குள்ள சிறகடிக்க
கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க
பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே


ஒம்முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டுவிரல் தீண்டையில
நின்னுப்போச்சு எம்மூச்சு
பஞ்சு மெத்தை மேகம்
அது செஞ்சிவச்ச தேகம்
நீ தூரத்துல நின்னாக்கூட
பொங்கிடுதே என் மோகம்
முத்தக்கட்டு மொழி அழகில் 
குத்திக்குத்தி கொன்னவளே
சிக்கிக்கிட்ட என் மனசை
ஊறவச்சி தொவைச்சவளே 
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே


ஊருக்குள்ள கோடிப் பொண்ணு யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி 


கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைந்தேனே 


என் உயிரின் உயிரே 
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ......


இந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கையிலேயே இன்னும் ஒரு பாடல் மனசுக்குள்ளே ஆரவாரமில்லாமல் நுழைந்துகொண்டுள்ளது என்று நினைக்க இன்னொரு பாடலும் நீ என்னையும் ரசிக்கிறாயே என்கிறது.. ;)
எனது ரசனைகள் நீண்டவை.. அதனால் பதிவுகளும் நீளாமல் அந்த இரு பாடல்களையும் ஒன்றாக நாளை உருகி உருகி ரசிக்கவா?

அந்த இரு பாடல்கள் எவையென்று Any guess????
.
பி.கு - நேற்று இலங்கையில் க.பொ.த உயர்தர முடிவுகள் வெளிவந்திருந்தன. நான் அறிந்த பலருக்கு நல்ல முடிவுகள்.. ஒரு சிலர் இம்முறை தவறி விட்டார்கள்.
உங்களுக்கு எல்லாம் ஆறுதல் சொல்ல நான் அந்தர் தந்த ஒரு இடுகை.. வாசிச்சு ஆறுதல் அடையுங்க தம்பி,தங்கைகளே.. ;)


ஃபெயில் பண்ணிப்பார்
22 comments:

ஜீ... said...

//மூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி எடுக்கும் அருமையான பாடல் இது//
:-)

ஜீ... said...

//மூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி எடுக்கும் அருமையான பாடல் இது//
:-)

ஜீ... said...

அதெல்லாம் அனுபவிச்சவங்களுக்கு தானே அண்ணே தெரியும்? என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு... :-(

Subankan said...

//அந்த இரு பாடல்கள் எவையென்று Any guess????
//

நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்

தகிடு தத்தம் - மன்மதன் ====>>

ஒன்றாவது சரியா?

ம.தி.சுதா said...

பாழாப் போன டயலக்காரனுக்கு முதல்ல சங்கு ஊதணும்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

இரண்டு பாடல்களும் மிக அருமை...
இவற்றுள் ஒரு ஒற்றுமை...இரண்டும் அமைதியாக ஆரம்பித்து அமைதியாகவே முடியும் பாடல்கள்.....

கண்ணிரண்டில் மோதி...பாடல்..

கேட்டதும் மனதை களவாடிய பாடல்...
ஒரு முறை விடியலில் நான் இந்த பாடலை கேட்டு பெற்றேன் என ஞாபகம்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி எடுக்கும் அருமையான பாடல் இதுஃஃஃஃ

உண்மையாகத் தான் அண்ணா மிகவும் மென்மையாய் வருடிய பாடல்..

ஃஃஃஃஃஃவரிகளைக் கொஞ்சம் கிராமிய நயத்துடன் தந்திருக்கிறார்.ஃஃஃஃஃ

ஆமாம் பாரதிராஜா பாடல் கேட்ட ஒரு பெருமிதம் இருந்தது...

அருமை அண்ணா.. 3 தலைப்புக்களும் மிகவும்கவர்ச்சியனது தெரிவிற்கு நன்றிகள்..

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

///உன் சுண்டுவிரல் தீண்டையில
நின்னுப்போச்சு எம்மூச்சு////
mmmmmmmmmmmmmm....

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி ////
ஏன் நெருப்பு பார்வையோ....? ஏம்மா இங்கயும் வாங்களேன்...குளிர் காயலாம்....hi hi hi

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

////என் இரவின் நிலவே

கொஞ்சம் இருண்டிருக்கும்(!?) தனுஷுக்கும் ஒளியான ஜொலியான ஜெனீலியாவுக்கும் இருள்-நிலவு உவமை பொருந்துகிறதே..///

அப்ப நமக்கும் பொருந்தும்...நன்றி அண்ணே....

Bavan said...

//தூறல் நின்றாலும் - சிக்கு புக்கு//

இன்னும் கேட்கவில்லை கேட்கிறேன்..:)

//கண்ணிரெண்டில் மோதி - உத்தமபுத்திரன் //

வாவ் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..:D

//அந்த இரு பாடல்கள் எவையென்று Any guess????//

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ - எங்கேயும் காதல் And நீல வானம் நீயும் நானும் - மன்மதன்===>>

:P

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

தூறல் நின்றாலும்...பாடல்
கேட்டதுமே வடமொழிப்பாடலை தமிழில் கேட்ட பெருமிதம்...(எனக்கு வடமொழி இசையில் ஒரு தனி பிரியம்)

ஃஃஃஃஃமூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி எடுக்கும் அருமையான பாடல் இது.ஃஃஃஃஃஃஃ

உண்மைதான் அண்ணா...மூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி சமுத்திரம் வரை கொண்டுசென்று வரும் பாடல்....


ஃஃஃஃஃஃதூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே ஃஃஃஃஃஃஃஃஃ
வாலி u great......

கார்த்தி said...

உத்தம புத்திரன் பாடல்கள் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது!
அதில் எனக்கு பிடித்தது அஜிஸ்இ ஜனனி ஐயர் பாடிய ”துாறல் தேடும்” பாடல்தான். அருமையான காதல் மெலடி பாடல் அது. இயக்குனருக்கு என்னநடந்ததோ தெரியவில்லை எதிர்பார்த்து சென்ற எனக்கு அப்பாடலை திரைப்படத்தில் காணமுடியவில்லை.

எனது guessing:
1.எங்கேயும் காதல் படத்தில் அலாப் ராஜு பாடிய ”எங்கேயும் காதல்” பாடல்
2.அடுகளம் படத்தில் GV PrakashKumar பாடிய ”யாத்தே யாத்தே” பாடல்

Jana said...

அண்ணே..நீங்கள் குறிப்பிட்ட இரண்டுபாடல்களும் எனக்கு பிடித்தமானவையே. அதிலும் இரண்டாவது ரொம்ப பிடிக்கும். அடுத்து நீங்க நினைச்ச பாடல் இரட்டும் புரியுது ஆனால் சொல்லமாட்டேனே!!!

கன்கொன் || Kangon said...

முதலாவது பாட்டு இனித்தான் கேக்கோணும். :-(

இரண்டாவது பாட்டு இனித்தான் ஒழுங்காக் கேக்கோணும். :-(

நீங்கள் பதிவிட்டாப் பிறகு பாக்க வரிகளெல்லாம் நல்லாயிருக்கு, குறிப்பாக முதலாவது.

// எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய் //

அருமை.

guessing விளையாட்டுக்கு நான் வரேல. தோற்க விரும்பேல. ;-)

S.ரமேஷ். said...

அன்பிற்கினிய நண்பரே...,

நல்ல பாடல் வரிகள். + ரசனையான பதிவு.

இனி
நேயர்(வாசகர்) விருப்பம்.
1 . ஆஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணங்கள்.
2 . இங்கிலாந்தின் வெற்றிபயணம் ஆசியாவிலும் தொடருமா?
3 . உலககோப்பை- ஆசிய அணிகளின் தேர்வு - உங்கள் சாய்ஸ்
4 . கும்மி பதிவுக்காக வரும் நாட்களில் - விருதகிரி விமர்சனம்.

இவற்றில் ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றினால்...?
மகிழ்ச்சி.

நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...,
அன்புடன்.ச.ரமேஷ்.

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

அடுத்த பதிவில்...-
1)ஆடுகளம் “யாத்தே யாத்தே...”(உன்ன வெள்ளாவி வைச்சு வெளுத்தாங்களா...வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா...
)
“அய்யய்யோ...நெஞ்சு அலயுதடி...”

2)மன்மதன் அம்பு “தகிடதத்தோம்...”

“நீல வானம்...நீயும் நானும்...”

correct..??

யோ வொய்ஸ் (யோகா) said...

காவலன் பாடல் விமர்சனத்துக்காக உங்கள் பக்கம் வந்தால் என்னை ஏமாற்றி விட்டீர்களே லோஷன்

sinmajan said...

அந்த இரண்டு பாடலும்:
1)நெஞ்சில் நெஞ்சில் - எங்கேயும் காதல்
2)ஐயையையோ- ஆடுகளம்

வந்தியத்தேவன் said...

மன்மதன் அம்பு பாடலை எதிர்பார்த்தேன். பார்க்கின்றேன்.

Open Talk said...

Ohh man.... I too love these two songs!!!!!!!!!!

மதுரகன் - மனதில் தெறித்த சாரல்கள் said...

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் மிகவும் அருமையான பாடல்... நானும் மூஞ்சிப் புத்தகத்தில் இதைப்பற்றி எழுதி இருந்தேன்...
கசல் பாணியில் ஒரு தமிழ்ப்பாடலைக் கேட்ட உணர்வு என்னுள் ஏறிட்டது..
வாலிப வாலியின் வரிகளும் அருமை..
"தூற‌ல் நின்றாலும் சார‌ல் நின்றாலும்ஈர‌ம் ம‌ண்ணிலே !
தூர‌ச் சென்றாலும்தொலைவில் நின்றாலும்எண்ண‌ம் உன்னிலே !!
இர‌வில் தூங்காதுஇமைக‌ள் ஓர‌ம்நீ தான் நிற்கிறாய்...
என‌து தூக்க‌த்தைநீ தான் வாங்கிஎங்கே விற்கிறாய்"

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified