November 21, 2010

மசசிகி - ஞாயிறு மசாலா

ன்னர்/கிந்த/காராஜா 


இலங்கையின் ஜனாதிபதி இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் பதவியேற்றதும் அவரது அறுபத்தைந்தாவது பிறந்தநாளும் தான் கடந்த வாரத்தின் சூடான செய்திகள்..
ஆசியாவிலேயே இப்படியொருவர் பதவியேற்றதில்லை (எந்த மன்னரும் கூட) என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
பிறந்தநாள் முதல் நாள்,பதவியேற்பு அடுத்த நாள். எதையுமே ப்ளான் பண்ணி பண்ண மாமாவை (மகிந்த மாமா தானே) அடிக்க உலகிலேயே ஆள் கிடையாது.
அடுத்த கட்டத் திட்டமிடலும் அப்படித் தானே?

ஆயுள்வரை அவர் பெயர்,அவர் தம் குடும்பப் பெயர் சொல்ல சட்டவாக்கமும் வந்தாச்சு,திட்டங்களும் பல போட்டாச்சு.
மக்களின் வரிப்பணம் லட்சக் கணக்கில் இந்தக் கோலாகலக் கொண்டாட்டங்களுக்கு கொட்டப்பட்டது என்றாலும் பெரும்பான்மையான பொதுமக்களுக்கு (தமிழரும் சேர்த்து) இதுபற்றி கவலை கிடையாது என்றே தோன்றுகிறது.

இதெல்லாம் இனி இப்படித்தான் என்று பழகிவிட்டது என்றும் சொல்லலாம்.. மறுபக்கம் ஒருபக்கம் ஆட்சியில் உறுதி,இன்னொருபக்கம் அபிவிருத்தியில் தீவிரம் என்று நினைக்கிறார்களோ?

தமிழர் பகுதிகளில் மீள்குடியேற்றம் மட்டும் கொஞ்சம் மந்தகதியில் என்றாலும்,வீதிகள் விருத்தியாவதும் ஏனைய வசதிகளும் ஒப்பீட்டளவில் ஏனைய ஆட்சிகளை விட மிக வேகமாக.
தங்கள் குடும்பங்களுக்கு என்ன பரம்பரைக்கே சேர்த்தாலும் பரவாயில்லை;தமக்கு அதில் ஒரு சில சதவீத அளவிலாவது ஏதாவது செய்து தந்தால் போதும் என்று திருப்திகாணும் மக்கள் அல்லவா.. 
மன்னராட்சியில் எல்லாம் சுபிட்சம்.
ஆனால் நடுநிலை நின்று பார்த்தல் நாடு ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டிருப்பது தெரிகிறது.. வீதிகள்,கட்டடங்கள்,முதலீடுகள்,புதிய வர்த்தக முயற்சிகளில்.. (யுத்தம் முடிவுற்றதும் முக்கிய காரணம்)
எம் மக்களுக்கும் எதிர்பார்க்கும் தீர்வைத் தந்தால் இன்னும் அமைதி காணலாம்..


நாளை புதிய அமைச்சரவை..


கிரிபத்தில்(பாற் சோறு) கின்னஸ் கண்ட மகாராஜா நாளை அமைச்சரவையை நீட்டி மேலும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்ப்புக்கள் உள்ளன.

மேலும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராகப் பதவியேற்க  உள்ளார்.
நமக்கெல்லாம் தெரிந்த முகம் தான்.

இதேவேளை பலரும் எதிர்பார்த்த ஒருவர் - இளவரசர் தனக்குப் பதவியேதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.
 இளவரசராக இருக்கையில் இன்னொரு பதவி எதற்கு என நினைத்தாரோ?

இதற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 'சேர்ந்து செயற்பட விருப்பம்' என்று சாதகமான சேதியை மன்னரின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக அனுப்பியுள்ளது.
பார்க்கலாம்..

இனிமேல் எல்லாம் இப்படித்தான் ...க்தி


நேற்று இலங்கையின் தனியார் வானொலிகளில் ஒன்றான சக்தி FMஇன் பன்னிரெண்டாவது பிறந்த நாள்.
இலங்கையின் இரண்டாவது இருபத்துநான்கு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பு இது.
என் வானொலி வாழ்க்கையை ஆரம்பித்துவைத்த இடம்.

எழில்வேந்தன் அவர்களின் முகாமைத்துவத்தில் மூன்று அறிவிப்பாளர்களுடன் ஒக்டோபர் முதலாம் திகதி நாம் பரீட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்தோம்.
நேரடியாக ஒலித்த முதல் குரல் அடியேனது.அதில் இன்று வரை ஒரு பெருமை.
'சக்தி' எனப் பெயர் சூட்டி (உரிமையாளர் தமிழர் என்பதால் இந்தப் பெயரை அவரும் மிக விரும்பியிருந்தார்) எழில் அண்ணா மங்களகரமாக ஒலிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது அதே ஆண்டு நவம்பர் 20 .
அதன் பின் பல்வேறு அரசியல்,பொருளாதார ஆள் மாற்றங்களால் நான் இப்போது வெற்றியின் பணிப்பாளராக..

ஆரம்பித்துவைத்தவர்கள் உங்கள் பெயர்களை நேற்று நன்றிக்காகக் கூட சொல்லவில்லையே என்று ஒரு சில நேயர்கள் நேற்று ஆதங்கபட்டிருந்தார்கள்.
இதனால் எனக்கொன்றும் கவலையில்லை.
இதுந நன்றிகெட்டதனமும் அல்ல..
வானொலிகளுக்கிடையில் வர்த்தகப் போட்டி இருக்கையில் இன்னொரு போட்டி வானொலியின் பணிப்பாளரைத் தம் நேயர்களுக்கு ஞாபகப்படுத்த யார் தான் விரும்புவர்?

ஆனால் மிகப் பொருத்தமான,மகிழ்ச்சியான விடயம், நான் பயிற்றுவித்த,என் தம்பிபோன்ற, சூரியனில் நான் முகாமையாளராக இருந்தவேளை என்னுடன் பணியாற்றிய காண்டீபன் தான் இப்போது சக்தியின் பணிப்பாளர்.

அத்துடன் நேற்று சக்தியின் பிறந்தநாள் அன்று சக்தி வானொலி அறிவிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் அனேக தொலைகாட்சி அங்கத்தவர்களையும்,மாலை இடம்பெற்ற 'நீலாவணன் காவியங்கள்' நூல் வெளியீட்டில் சக்தியின் பிதாமகர் எழில் அண்ணாவையும், என்னுடன் சக்தியின் ஒலிபரப்பை முதல் நாளில் ஆரம்பித்த சகோதரி ஜானு-ஜானகியையும் சந்தித்தது.

உலகம் பன்னிரண்டு ஆண்டுகளில் எப்படியெல்லாம் சுற்றுகிறது....

சக்தி எனக்கு அறிமுகமும் களமும் தந்தது.. 
சூரியன் எனக்கு மேலும் அதிக நேயர்களைத் தந்தது. பதவியும் தந்தது.
வெற்றி இப்போது வெற்றிகளை மேலும் தருகிறது.. இன்னும் தரும்.

சக்திக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்..


சித்தன் 

இன்று மாலை நான்கு மணிக்கு கொழும்பு,பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் என் நண்பரான சித்தன்(உண்மைப் பெயர் இப்போதுவரை வேண்டாம் என்பது அவர் வேண்டுகோள்) தன ஆக்கங்களின் தொகுப்பான 'கிழித்துப் போடு' என்பதை வெளியிடுகிறார்.

வீரகேசரி வாரவளிஈட்டில் அவரது சித்தன் பதில்கள் அம்சம் பலரைக் கவர்ந்தது.
இலங்கையின் மதன் என்று நான் வேடிக்கையாகப் பாராட்டுவதுண்டு.

இதில் வேடிக்கை பலர் நான் தான் இந்த 'சித்தன்' என்று நினைத்துக்கொண்டிருபது..
கடந்த காதலர் தினத்துக்கு சித்தனின் பிரதியொன்றை நாம் 'வெற்றி'இல் வித்தியாசமான தயாரிப்பாகத் தந்ததுவும் ஒரு காரணம்.

வித்தியாசமான,ஆழமான சிந்தனையாளர்.
புதிய முயற்சிகள் என்று சிந்திக்கும் இவரது இன்றைய நூல் வெளியீடும் புதுமையோடு இருக்கும் என்று உறுதி சொல்லியுள்ளார்.
வர முடிந்தால் வாருங்களேன்..

இதோ சித்தனின் அழைப்பு..


கிரிக்கெட் 

'உங்கள் நாக்கின் நிறம் கருப்பா?' என்று இல் ஒரு நண்பர் எனக்கு கேள்வி அனுப்பியுள்ளார்..

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிட நாடு இந்தியா நியூ சீலாந்திடம் தடுமாறுது..
தென் ஆபிரிக்காவை பாகிஸ்தான் சமநிலைப்படுத்துது..
மொக்கை அணியாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளோ இலங்கையையே மொத்துது..

இதெல்லாம் தான் காரணம் என்று அவர் கேள்வியில் புரிந்தது.....

அதான் நாக்பூரில் இந்தியா கலக்குதில்ல ;)

ஆனால் எதுக்கும் ஆஷஸ் தொடங்க முதலே நம்ம பிரியத்துக்குரிய ஆஸ்திரேலியா தடுமாறுவதால்..
இப்போதைக்கு என் கோஷம்...
Go England Go..
Ashes is for England..

யாரும் அன்றூ ஸ்ட்ரோசுக்கோ,அன்டி ப்ளவருக்கோ போட்டுக் குடுத்திடாதீங்கோ..  
வாழ்க விக்கிரமாதித்தன்..

20 comments:

Unknown said...

//ஆசியாவிலேயே இப்படியொருவர் பதவியேற்றதில்லை (எந்த மன்னரும் கூட) என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.//
:))

டிலீப் said...

//இளவரசர் தனக்குப் பதவியேதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.
இளவரசராக இருக்கையில் இன்னொரு பதவி எதற்கு என நினைத்தாரோ?//

அது உம்மை அண்ணா
மசசிகி - ஞாயிறு மசாலா சூப்பர்

KANA VARO said...

//காண்டீபன் தான் இப்போது சக்தியின் பணிப்பாளர்.//

எதிர்பார்த்த... நல்ல விடயம்....

என்.கே.அஷோக்பரன் said...

//லட்சக் கணக்கில்//

???

கோடிக்கணக்கில் என்று சொல்லுங்கள்... ஏறத்தாழ 500 கோடி வரையில் செலவாம் (2 நாள் விழாக்கள், கொண்டாட்டங்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் என மொத்தச் செலவு)...

எஸ்.கே said...

இந்த மேட்சில இந்தியா ஜெயிக்கும்னு நினைக்கிறேன்/ஆசைப்படுறேன்!!

கன்கொன் || Kangon said...

ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள். :-) #வால்பிடிப்போர் சங்கம்.

// தமிழர் பகுதிகளில் மீள்குடியேற்றம் மட்டும் கொஞ்சம் மந்தகதியில் என்றாலும்,வீதிகள் விருத்தியாவதும் ஏனைய வசதிகளும் ஒப்பீட்டளவில் ஏனைய ஆட்சிகளை விட மிக வேகமாக. //

உண்மைதான்.
அதை தமிழர் பக்கமும் காட்டினால் நாட்டில் எந்தக் குழப்பமும் இருக்காதே.
தமிழ்க் கூட்டமைப்பின் முடிவும் வரவேற்கத்தக்கதே. (உள்குத்து ஏதும் இல்லாதவரை)


// மேலும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். //

தாங்கள் விரும்பும்போது தாங்கள் வாக்களித்த ஒரு நபரைப் பொது இடத்தில் கேள்விகேட்கும் உரிமை வேண்டும்.
இவரின் கடந்தகாலக் கருத்துக்கள் நிறையவற்றை இவருக்கே போட்டுக்காட்டி விளக்கம் கோரவேண்டும்.
பச்சோந்திகள்.
அரசாங்கத்துடன் சேர்வது பிரச்சினையில்லை, ஆனால் காலகாலமாக அவர்களை எதிர்ப்பதுபோல் நடித்துவிட்டு, அரசுடன் சேர்பவர்களை பிழையானவர்கள் என்று விளக்கமெல்லாம் கொடுத்துவிட்டு இப்போது தானே அப்படிச் செய்வது. :-(

சக்திக்கு வாழ்த்துக்கள்...

சித்தன்: நித்திரை கொண்டுவிட்டேன். :-(

கிறிக்கற்: ஹி ஹி... ;-)

நல்ல கலவைப் பதிவு. :-)))
அரசியல்பகுதியை இரசித்தேன். ;-)

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

ஒருத்தர் கடல் படை மற்றவர் இளவரசர் என்றிங்க அப்போ இன்னொருத்தர் வெள்ளையும் சுள்ளயுமாய் துண்டுபோடாம நிக்கிறாரே அவர் என்ன செய்கிறார் ? கண் பட்டுடுமேன்னு மறச்சு வசிருகாங்க போல ...... அனாலும் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள்ள வைத்திருப்பதற்கும் ஒரு தில்லு / ஆளுமையும் வேணும் . இவர்களில் என்னமோ இருக்குதப்பா .. எங்களுக்கும் தீர்வைதந்திருக்கப்பா உங்களுக்கு எங்க ஊரிலும் கட்டவுட் வச்சு பிறந்த நாள் கொண்டாடுறம் ... அந்த மாமக்கள்தான் இப்போ எங்கள தடுக்கிரதுக்கில்லையே..

நிரூஜா said...

மகாராஜா வாழ்க.

//நமக்கெல்லாம் தெரிந்த முகம் தான்.
நீங்களா??? #சும்மா

//உலகம் பன்னிரண்டு ஆண்டுகளில் எப்படியெல்லாம் சுற்றுகிறது....
அது ரெம்ப வருசமாவே இப்பிடித்தானண்ணா சுத்துது

//சக்தி
சக்திக்கு வாழ்த்துக்கள்; இப்போதெல்லாம் வானெலி கேட்பதே அரிது, அதிலும் சக்தி கேட்பது அரிதிலும் அரிது.

//சித்தன்
வரரோனும் எண்டு தான் இருந்தனான். சொந்த ஆணிபுடுங்கும் வேலைகள் இருந்ததால் முடியவில்லை ;)

//Ashes is for England..
"புலி வருது கதை" தான் இந்த முறை நடக்கும் போல இருக்கு....!

அஜுவத் said...

நேயர்களைத்தந்த சூரியனே உங்கள் கஷ்டத்தில் ஒரு வரிச்செய்தி கூட சொல்லவில்லயே!!!!!!!!!............:)

Shafna said...

உங்களுக்கு மாமா என்றால் எங்களுக்கும் அப்படித்தானே? So happy birthday to மாமா...கிரி பத் இல் கிண்ணஸ் வரத்தான் கோதுமை விலையேற்றமா? எது எப்படியோ நாடு இப்போ அழகாய் வளர்வதை பாராட்டித்தான் ஆக வேண்டும்... சக்திக்கு உங்கள் மனந்த்திறந்த பாராட்டையும்,வாழ்த்தையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்..எனது வாழ்த்து முதலில் உங்களுக்கே...சக்தி வானொலியை எனக்கு கேட்கப்பிடிக்காது...

KUMS said...

சக்தி வானொலி பற்றிய பதிவு கடந்த காலங்களை ஞாபகப்படுத்துகின்றது. அஞ்சனன் அண்ணாவும் நீங்களும் நடாத்திய முத்துக்கள் பத்து, சனிக்கிழமை ஆனந்த இரவு இப்படி பல நிகழ்ச்சிகள் மனதில் அப்படியே இருக்கின்றன. உங்கள் ELE நாடகத்தை மறக்க முடியுமா? ம்ம்ம்ம்.. அது ஒரு கனாக்காலம். எழில் அண்ணா, அஞ்சனன் அண்ணா, ராம் பிரசன் அண்ணா இவர்கள் தற்போது எங்கு எப்படி இருக்கிறார்கள் என்று அறியத் தர முடியுமா??

// ஆனால் எதுக்கும் ஆஷஸ் தொடங்க முதலே நம்ம பிரியத்துக்குரிய ஆஸ்திரேலியா தடுமாறுவதால்.. இப்போதைக்கு என் கோஷம்...
Go England Go.. Ashes is for England.. //
இங்கிலாந்து வெல்லும் என்று இருந்த கொஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது..... :)

amirthan said...

Superb பதிவு மிகவும் பிடித்திருந்தது எமது மாமன்னரை பற்றியதும் கூடவே எப்படி உங்களாள மட்டும் முடியுதுனு தான் தெரியல. எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா???? வெற்றி அலைவரிசை internet ல் கேட்க முடியுமா முடிந்தால் link i அனுப்பவும் pls

SShathiesh-சதீஷ். said...

//மன்னர்/மகிந்த/மகாராஜா
// இந்த தலைப்பின் கீழ் நீங்கள் எழுதி இருப்பதால் எனக்கு உங்களை யாரெண்டு தெரியாது. ஆமா நான் யார். நான் உங்களை எங்கேயும் பார்த்திருக்கேனா? உங்களுக்கும் என்னை தெரியாது தானே.

//சக்தி//
முதலில் சக்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இங்கே தானே முதலில் உங்களை தொடர தொடங்கினேன். நீங்கள் தந்த சக்தியின் முத்துக்கள் பத்து, ஆனந்த இரவு மற்றும் ராம்பிரசன்னா அண்ணாவின் தமிழுக்கு அமுதென்று பெயர் என் அபிமான நிகழ்ச்சிகள்.

வாழ்த்தும் விடயத்தில் எந்த வானொலி என பார்க்காமல் வாழ்த்தும் வெற்றியின் பண்பு இதில் மெச்ச தக்கது. கடந்த வருடம் சூரியன் பிறந்த நாள் என நினைக்கின்றேன் பன்னிரண்டு மணிக்கு நான் வெற்றி சார்பாக வாழ்த்தியது நினைவிருக்கு.

//சித்தன்//
நிகழ்வு சிறக்கட்டும்.

//கிரிக்கெட்//
விக்கிரமாதித்தன் கிட்ட யாரும் விளையாடமுடியுமா ஏன்னா?

ஷஹன்ஷா said...

பொதுவாக அனைத்தும் அருமையாக உள்ளன...ராஜா வாழட்டும் விடுவோம்...
அரசருக்கு பிறகு இளவரசர் தானே....

சக்தி-
உங்களை நாம்(யாழ்ப்பாண மக்கள்) சூரியன் ஊடாகவே ரசிக்க முடிந்தது...
இப்போ அதுவும் கேட்பது இல்லை....தனியே வெற்றியில் வெற்றியாக....

கிரிக்கட்- அட போங்கண்ணா....சச்சினுக்கு வாழ்த்து சொல்லுறேன் என்று அவரையும் அனுப்பீட்டீங்க...
ஒரு வேளை டோனி சதம் அடிப்பார் என்றும் யாருக்கும் சொன்னீங்களா....??
அவரும் போய்டார்...
நல்ல வேளை டிராவிட் பற்றி வாயே திறக்கல...திறந்திருந்தா....!!!!

ஷஹன்ஷா said...

cricket:- ஏன் அண்ணா டிராவிட் மேல என்ன கோபம்........

ம.தி.சுதா said...

அண்ணா கொஞ்சம் பிந்தீட்டுது மன்னிக்கவும்...

பதவியேற்புப் பற்றி...
இது நாமே எம் தலையில் அள்ளிப் போட்ட சேறு (நாம் புறக்கணித்த தேர்தலை சொல்கிறேன்..)

சக்தி..
முத்துக்கள் பத்தின் மூலம் என் கவிதைகளுக்கு களமமைத்துத் தந்தவர்களுக்கு கட்டாயம் வாழ்த்தும் நன்றியும் சொல்லியே ஆகணும்... (அதுக்கே ஆறு ரூபாய் புடுங்கீட்டாங்கப்பா..)

தங்கள் பெயரை சொல்லாதது ஒரு பொருட்டே அல்ல... வேகிய பணியாரம் வேகாத பணியாரத்தை பார்த்தக் கொண்டிருந்தால் கருகிப் போய் விடும்.. விளங்குமென நினைக்கிறேன்..

விளையாட்டு...
இந்த அக்டோபஸ் வந்து தான் தங்களுக்கு ஆப்பு வைத்துவிட்டது... அது நிறத்தை வைத்துத் தான் சாத்திரம் சொன்னது பலருக்குத் தெரியாது.. இந்த தொடுப்பில் ஆதாரம் இருக்கிறது...

http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_27.html

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

வந்தியத்தேவன் said...

லோஷன் அங்கிள் நானும் மாமா மஹிந்தரும் மாமாவா? தமிழர்களை அவர்கள் தேர்ந்தெடுத்த பாஉக்களே நினைப்பதில்லை. தேவாரம் பாடியவர் மாமாவுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் கூடிக் குலாவும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

அந்தவகையில் நமக்குத் தெரிந்தமுகம் அமைச்சராகவில்லை.
சக்தி அந்தநாள் ஞாபகங்கள் வந்து போகின்றது. எப்படி ஒரு பாடசாலையில் அங்கே கற்பித்த ஆசிரியர்களை விசேட நாட்களில் ஞாபகப்படுத்துகின்றார்களோ அதேபோல் பழைய அறிவிப்பாளர்களையும் ஞாபகப்படுத்தியிருக்கலாம்.

கிரிக்கெட் விக்ரமாதித்தன் வாழ்க. அப்படியே இதையே தொழிலாக வைத்து கொஞ்சம் சம்பாதித்துக்கொள்ளவும்(பணத்தை அல்ல நீங்கள் எதிர்வு கூறும் அணிகளின் ரசிர்களின் எதிர்ப்பை)

ஆனால் இந்த வந்தியத்தேவனின் எதிர்வு கூறல் இம்முறை இங்கிலாந்துதான் ஆஷஸ் வெல்லும்.

Vijayakanth said...

வணக்கம் தாயகம் எழிலண்ணாவோடு செய்தது கலக்கல். ஒரு போயா நாள் ஒரு பேய் டிராமா செய்தீங்களே... இன்னும் ஞாபகம் இருக்கு...நீங்களும் அஞ்சனன் அண்ணாவும் சேர்ந்து செய்ற நிகழ்ச்சிகளை ரொம்பவும் மிஸ் பண்றேன்...உண்மைய சொல்லன்னுமேண்டா எனக்கு இப்போ எந்த வானொலியிலும் வர்ற நிகழ்ச்சிகள் மனசில ஒட்டுதில்ல....வெற்றியும் சேர்த்து தான் சொல்றேன்...காலமாற்றமா இருக்கலாம்...!

தெரிஞ்ச முகத்தவரை பற்றி கட்டாயம் சொல்லணும். இன்னும் நம்ம மலையக சனங்கள் நம்பி நம்பி ஏமாந்து போறாங்க....சாட்சிக்காரன் கால்ல விழுறத விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்துட்டு போகலாம்... :(

இளவரசரும் வில்லியம் பாணியில ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் கேட்பாரோ தெரியல :P

யோ வொய்ஸ் (யோகா) said...

மகாராஜா மற்றவர்களை விட நாட்டுக்கு(ம்) அதிகம் செய்கிறார் என்பது உண்மைதான்.

சக்தி வானொலி தொடங்குகையில் சரியாக பெயர் கூறி ஒரு சிறிய வானொலிபெட்டியை பரிசாக பெற்றேன். பள்ளி காலத்தில் அவ்வானொலியில் சக்தியில் உங்களது எழிலண்ணாவின்னது மேலும் பலரதும் குரல்களை கேட்டு கொண்டே படித்திருக்கிறேன். (அதுதான் பரீட்சையில் கோட்டை விட்டுட்டேனோ?)


கிரிக்கட் இந்தியா வென்றுவிட்டது. ஒரு மாதிரி உங்கள் சொல் பலித்துவிட்டது. ஆஷஷில் பார்த்து கொள்வோம்.

Anonymous said...

How dare you,Although Good luck for this type of blogs

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified