November 16, 2010

ஐலே ஐலே குத்துது கொடையுது !!!

முந்தைய இடுகையின் தொடர்ச்சியாக, ஏனைய பாடல்களைப் பற்றி..


ஐலே ஐலே - பாஸ் என்கிற பாஸ்கரன்


இந்தப் பாடல் நா.முத்துக்குமார் எழுதியது. 
பல்வேறு முத்த வகைகள் பற்றி முத்து முத்தாக,அழகாக சொல்கிறார் கவிஞர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய் பிரகாஷ் பாடி இருக்கிறார்.
அண்மைக்காலத்தில் அருமையான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளரின் இசையிலும் பாடிவரும் விஜய் பிரகாஷின் குரலை அன்பே சிவம் - பூவாசம் பாடலில் இருந்து ரசித்து வருகிறேன்.
மனதை வசீகரித்து வருடும் ஒரு அமைதியான குரல்.


கொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..


இப்போது அநேகமாக ஒவ்வொரு ரஹ்மான் படத்திலும் பாடுகிறார்.
ஹோசானா - விண்ணைத் தாண்டி வருவாயா
வீரா - ராவணன்
காதல் அணுக்கள் - எந்திரன்


இந்தப் பாடலையும் மேலும் மெருகேற்றுவது விஜய் பிரகாஷின் குரலில் உள்ள காந்தத் தன்மை தான். அனுபவித்துப் பாடுகிறார்.


யுவனின் இசை துள்ளலுடன் துடிப்பாகவும் பாடல் வரிகளை மூழ்கடிக்கமலும் இருப்பதால் ஈர்க்கிறது.


வரிகள் கவித்துவம் என்றில்லாமல் இளமையாக,எளிமையாக இருக்கின்றன..


புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அனலிருக்கு குளிரிருக்கு எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டடி மேலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமானதை போலே
ஏதோ ஓர் மோகம் இது ஏகாந்த தாகம்


முத்தம் பற்றி சிந்தித்தாலே கவிஞர்கள் குஷிஆகி விடுகிறார்களோ?


பல்லவியில் பக்குவமாக ஆரம்பித்து, சரணத்தில் உலக இயக்கமே முத்தத்தால் என்று அறிவிக்கிறார் முத்துக்குமார்..
முத்தங்கள் மோதிக்கொண்டால் தான்
உலகம் சுத்தும்


அடுத்து வரும் வரிகளில் முத்தம் தா கண்மணி என்று ஏக்கத்துடன் கோருவது விஜய் பிரகாஷின் குரலிலும் அழகாக வெளிப்படுகிறது.
ரசித்தேன்..


இன்னும் ரசித்த வரிகள்..


அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆகாயம் தாண்டசொல்லுதடி காதல் முத்தம்
அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்


கதைக் காட்சிப் பொருத்தமாகவும் இருப்பதால் அழகாகவும் இருக்கிறது..
இதுவரை பிடிக்காவிட்டாலும் இனிப் பிடிக்கும். கேட்டுப் பாருங்கள்..

எப்பூடி?
முத்தத்தின் சுவையும் முத்தம் தரும் முத்தியும் புரிந்தததா?குத்துது கொடையுது - நகரம் - மறுபக்கம்


வைரமுத்து தன்னை எந்திரனுக்குப் பின்னர் இளமைப்படுத்தி இருக்கிறார் போலும்.. அதுசரி இனி தன் வாரிசுடனும் போட்டியிட வேண்டுமே..
முப்பதாண்டுகள் ஆகியும் இவரது பேனாவின் மையும்,பாடல்களில் காதல் மையும் இன்னும் தீரவில்லை.


குத்துது கொடையுது கூதல் அடிக்குது
உச்சி மண்டையில பூச்சி ஊருது
ஏய் அடியேய் பாரதி என்ன சொல்ல நினைத்தாய் நீ


குழந்தைபோல அருகே வந்து
பறவைப்போல பறந்த கண்மணி
அடியேய் பாரதி என்ன சொல்ல நினைத்தாய் நீ
தாயைப் போல நெருங்கி வந்து
நுரையைப் போல உடைந்த கண்மணி
அடியேய் பாரதி
என்ன சொல்ல நினைத்தாய் நீ


நெஞ்சாங்கூட்டில் நீதான் என்று
சொல்ல நினைத்தாயோ
என் நெஞ்சு திறந்து பாருங்கள் என்று சொல்ல நினைத்தாயோ
தந்தம் போலே என் முகம் என்று சொல்ல நினைத்தாயோ
அட தங்கத்தில் ஏன் தாடிகள் என்று சொல்ல நினைத்தாயோ
புத்தியில் காதல் தட்டுது என்று இப்போது
சொல்ல நினைத்தாயோ
இல்லை பொத்தான் தறிகளைக் கொடுங்கள் என்று
சொல்ல நினைத்தாயோ
மல்லிகப்பூ வச்சிக்கிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு மல்லுக்கட்ட வேண்டுமென்று
நினைத்தாயோ......


அடியே பாரதி .....


நான் தான் உனது காதலி என்று சொல்ல நினைத்தாயோ
உன் நைட்டி எல்லாம் நனைந்தது என்று
சொல்ல நினைத்தாயோ
பார்வைகளாலே வார்த்தைகள் நூறு
சொல்ல நினைத்தாயோ
நீ பருவமடைந்த நான்காம் ஆண்டை சொல்ல நினைத்தாயோ
சுடிதார் தாவணி எதேதேன்று
என்னிடம் சொல்ல நினைத்தாயோ
சுங்குடி சேலையில் வரவா என்று
கண்களால் கொல்ல நினைத்தாயோ
சுந்தரிய கண்டதும் நான் எந்திரிக்க வேண்டும் என்று
மந்திரிக மந்திரிக்க நினைப்பாயோ....


என்ன சொல்ல நினைத்தாயோ
நெஞ்சைதிறந்து சொல்வாயோ இல்லை கொல்வாயோ யே யே (அடியே)
அண்மைக்காலத்தில் தன் தனியான இசைப் பாணியால் இளைய நெஞ்சங்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் தமன் தான் இசை. விறுவிறுப்பான,வித்தியாசமான மெட்டும், இடையிடையே வரும் ஜாலியான ரப்பும் பாடலுக்கு இளமை கொடுத்துக் கலக்குகிறது.


நவீன் மாதவின் கம்பீரக் குரல் தரும் சுவை புதிது..
எந்தவொரு வரியையும் தனித்து சொல்லாவிட்டாலும்,அத்தனை வரிகளிலும் அளவாக காதல்,ஏக்கம்,குறும்பு,கொஞ்சம் காமம் என்று வைரமுத்து இளமை ததும்பி இனிக்கும் வரிகள் தந்துள்ளார்.

அடியே பாரதி.. என்ற இறுதிக் கூவல் ஒரு தடவை கேட்டால் ஒரு நாள் முழுதும் மனசில் நிறைந்திருக்கும்...

ஆனால் 'நகரம்-மறுபக்கம்' சுந்தர்.C நடிக்கும் படமாம்.. அதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
ஏற்கெனவே எனக்குப் பிடித்திருந்த 'கதறக் கதறக் காதலித்தேன்' பாடலுக்கு நடந்த கதை இந்தக் 'குத்துது கொடையுது'க்கும் நடந்திடுமோ என்று..


பாடல் வரிகளை வேறு கவனியுங்கள்.. ;)
கதறக் கதற , குத்துது கொடையுது 


அடுத்த இரண்டு பாடல்களையும் இதே இடுகையில் தந்தால் இன்னும் நீண்டிடுமே..
அதற்குள் இந்த வாரத்தில் இன்னொரு பாடலும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.


அதனால் மீண்டும் அடுத்த 2 + 1பாடல்களுடன் இன்னொரு பதிவு வரும்..


அதுவரை இந்த இரு பாடல்களையும் கொஞ்சம் ரசியுங்களேன்..

17 comments:

கன்கொன் || Kangon said...

ஆ!
எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன், நீங்கள் கேட்ட அளவுக்கு அதிகமாக/விரும்பிக் கேட்டிருக்க மாட்டேன் என்றாலும், விரும்பிக் கேட்டிருக்கிறேன்....

அடுத்த பாகத்தையும் எழுதுங்கள், அடுத்த பகுதியில் எனக்குப் பிடித்த பாடல்கள் தான் வருகின்றனவா என்று.

:-)))

Unknown said...

//கொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..//
True!
இதுவரை பிடிக்காவிட்டாலும் இனிப் பிடிக்கும். கேட்டுப் பாருங்கள்.:))

Bavan said...

//கொஞ்சக் காலம் பெரிதாக அறியப்படாமலிருந்த விஜய் பிரகாஷ் பலரையும் ஈர்த்தது நான் கடவுள் பாடலான ஓம் சிவோஹம் மூலமாக..//

எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்..:)

மற்றையவை கேட்டிருக்கிறேன், உங்கள் அளவுக்கு பிடித்துப்போகவில்லை..;)

//அடுத்த பாகத்தையும் எழுதுங்கள், அடுத்த பகுதியில் எனக்குப் பிடித்த பாடல்கள் தான் வருகின்றனவா என்று.//

அதே பார்க்கலாம்..:D

அஜுவத் said...

2 superb songs.........

Vathees Varunan said...

New Trend ...)

Unknown said...

உண்மைய சொல்லனும்ன்னா நா முதல் பாடல் பாத்திருக்கேன்,இரண்டாவது கேள்விப்பட்டது கூட இல்ல..
உங்களுக்கு வித்தியாசமான ரசனை தான் பொங்கல் ச்சா போங்கள் அண்ணா!!

Unknown said...

உண்மைய சொல்லனும்ன்னா நா முதல் பாடல் பாத்திருக்கேன்,இரண்டாவது கேள்விப்பட்டது கூட இல்ல..
உங்களுக்கு வித்தியாசமான ரசனை தான் பொங்கல் ச்சா போங்கள் அண்ணா!!

ஆர்வா said...

சொல்லிட்டீங்க இல்லை.. கேட்டுப்பார்த்திடுவோம் லோஷன்... தமனோட பிருந்தாவனம் பாட்டு கேட்டீங்களா??

ஷஹன்ஷா said...

....//அன்பென்னும் வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆகாயம் தாண்டசொல்லுதடி காதல் முத்தம்
அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்..///

என்னையும் கவர்ந்த வரி...
அம்மா என்னை திட்டும் போது சட்டென முணுமுணுக்கும் வரி...

...//அதனால் தான் எங்கும் கேட்குதடி வெற்றிச்சத்தம்...// அருமை...அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்...

குத்துது கொடையுது...பாடலில்
ஒப்பீட்டளவில் பார்க்கையில் காமம் அதிகமாக கலக்கப்பட்டது-திணிக்கப்பட்டது போல் தெரிகிறது...திரைப்படம் வெளிவரட்டும் பார்ப்போம் காட்சிகள் எப்படி என்று........

anuthinan said...

நகரம் மறுபக்கம் பாடல் கேட்டது இல்லை....

மற்றையது சுப்பர் அண்ணா!!!

Vijayakanth said...

vara vara unga rasanaiyum oru type ah thaan irukkuthu....:)

Kaviyarangan said...

நன்றி, நன்றி; 'அடியே பாரதி' பாடலிற்கு (அறிமுகப்படுத்தியதட்கு).

//குழந்தைபோல அருகே வந்து
பறவைப்போல பறந்த கண்மணி
...
தாயைப் போல நெருங்கி வந்து
நுரையைப் போல உடைந்த கண்மணி\\

Muhammad Ali_ன் Float like a butterfly, sting like a bee வரிகளின் அடிதளத்தை நினைவுறுத்தினாலும்
வைரமுத்துவின் பாவனை மிஞ்சிவிட்டது; Romantic Era கவித்துவத்தை இன்றெழுதியும் ரசிக்கவைப்பவர் வைரமுத்து!

அதனிலும், சராசரி தமிழ் பெண்களின் உளவியலை வெளிப்படுத்தும் ஒரு ஒழுங்கும் இப்பாடலில் நான் கண்டேன்!

ம.தி.சுதா said...

அண்ணா நல்லதொரு பார்வை.. ரசனைகள் ஒவ்வொருத்தருக்கும் வேறுபட்டது என்று சொன்னாலும்.. சிலருக்கு ஒன்றாகவே இருக்கும் உதாரணம் இந்தப் பாடல்கள் தான்.
////தந்தம் போலே என் முகம் என்று சொல்ல நினைத்தாயோ
அட தங்கத்தில் ஏன் தாடிகள் என்று சொல்ல நினைத்தாயோ /////
அதிலும் இந்த வரிகள் சிந்திக்க வைத்து சிலாகிக் வைக்கிறது...

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

என்ன ரசனையண்ணா உங்கடது!அன்பே சிவம் பட‌ பூவாசம் பாடல் விஜய் ஜேசுதாஸ் பாடவில்லையா!

குத்துது குடயுது பாட்டு சூப்பர் அண்ணை..(பகிர்விற்கு நன்றி)

//தாயைப் போல நெருங்கி வந்து
நுரையைப் போல உடைந்த கண்மணி//

//மல்லிகப்பூ வச்சிக்கிட்டு
ஜல்லிக்கட்டு காளையோடு மல்லுக்கட்ட வேண்டுமென்று
நினைத்தாயோ...// இந்த வரிககை வாசித்த போது சிரித்து விட்டேன்...சூப்பர்!!(ரொம்ப பிடித்திருக்கிறது!)

//நெஞ்சாங்கூட்டில் நீதான் என்று
சொல்ல நினைத்தாயோ
என் நெஞ்சு திறந்து பாருங்கள் என்று சொல்ல நினைத்தாயோ//நிறைய இளைஞர்களில் ஏக்கத்திற்குரிய வரிகள்!

புத்தியில் காதல் தட்டுது என்று இப்போது
சொல்ல நினைத்தாயோ!!!!ம்ம்...ம்ம்..(உணரமாட்டாங்களா!!!)

கார்த்தி said...

விஜய் பிரகாசின் பிரபலமான பாடல் என்னவோ அன்பேசிவம் படப்பாடல்தான். ஆனால் தமிழிற்கு பாடகராக விஜய் பிரகாசை அறிமுகப்படுத்தயவர் யார் தெரியுமா?
இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 2003ஆண்டு ரகசியமாய் படம் மூலம்

Shafna said...
This comment has been removed by the author.
Shafna said...

Arumai..arumai..

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner