இன்று திரையுலகில் நான் அதிகம் நேசிக்கும் நடிகர்/கலைஞர் கலைஞானி கமலஹாசனின் பிறந்தநாள்.
பதிவுலகம் வந்து மூன்றாவது ஆண்டுக்குள் நான் கால் பதித்துள்ள நிலையில்,இம்மூன்றாண்டிலுமே கமலின் பிறந்த நாளுக்கு விசேடமாகப் பதிவொன்று போடவேண்டும் என பெரிதாக ஐடியா பண்ணியுமே கடைசியில் ஏதாவது ஒரு அவசர வேலை காரணமாக வெளியூர் பயணமாக நேர்ந்து விடும்..
இம்முறையும் அப்படியே..
நண்பர்களுடன்.குடும்பத்துடன் திருகோணமலையில் நான் இருக்கும் நாளில் தான் கலைஞானியின் பிறந்தநாள்..
இருக்கும் இடத்தில் இருந்து நாள் முழுக்க ஊர் சுற்றும் களைப்பில் நான் 'ப்ளான்' பண்ணி வைத்துள்ள விசேட பதிவை அவசர அவசரமாக அரை குறையாகப் பதிவிட மனம் இடம் தரவில்லை.
என் முன்னைய பதிவுகளில் இதுவரை ஏழு பதிவுகளில் கொஞ்சமாவது கமலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
அவற்றுள் இருந்து காலப் பொருத்தமாக ஒன்றை இந்நாளில் கமலுக்குப் பிறந்தநாள் பரிசாக :)
கமலின் 'ம' வரிசைப் படங்கள் பற்றி என் பார்வையில் கொஞ்சம் சீரியசாக மொக்கையோடு அலசிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..
என்ன அதிசயம் பாருங்கள்..
அடுத்து வரப்போகும் கமலின் புதிய படமும் 'ம' தான்..
மன்மதன் அம்பு..
கமலின் அண்மைக்கால ஆஸ்தான இயக்குனர் K.S.ரவிக்குமார், அன்பே சிவத்துக்குப் பின் மாதவன்,முதல் தடவையாக ஜோடியாக த்ரிஷா..
ஒரு கலவை மசாலா ரெடி..
கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஒரு ரசிகனாக.. ஒரு தொடர்வோனாக.. ஒரு வாசகனாக (கமலின் பல திரைப்படங்களை ஏன் பேட்டிகளைக் கூட நான் ஆழமாக வாசிப்பதால்) மனமார வாழ்த்துகிறேன்.
நீங்கள் ஒவ்வொரு ஆண்டு அதிகமாக வாழ வாழ திரையில் நாம் வித்தியாசங்களை,ரசனைகளின் உயரங்களை அதிகமாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.. எனவே கொஞ்சம் சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்.
----------------------------------
என் முன்னைய பதிவிலே 'ம' வரிசை பற்றி ஒரு மினி ஆராய்ச்சி செய்திருக்கிறேன்..
மன்மதன் அம்பு ஜெயிக்குமா நீங்களும் சொல்லுங்கள் ;)
மீண்டும் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி உங்களை அழைத்து செல்கிறேன்.. இது 2008 ஆம் ஆண்டு டிசெம்பரில் பதிவிட்டது..
முன்பு சொன்னவற்றில் எத்தனை சரிவந்துள்ளது.. எத்தனை வெறும் ஊகங்களாகப் போயுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
-----------------------------------------------
உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..
எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்..
காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..
இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.
பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..

அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை..
கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..
ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பெரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..
பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..
அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெற்ற திரைப்படம் தான்..
கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்..
எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..
இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)
ஆனால்
அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்..
இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..
-------------------------------------------------
முன்னைய பதிவின் மீள் பதிப்பு எனினும் எந்தவொரு விஷயத்தையும் மாற்றவில்லை.
'ப்ளான்' பண்ணி (மனசுக்குள் தான்) வைத்துள்ள கமலுக்கான விசேட விரிவான பதிவு விரைவில்..
அதற்குள், கமல் பற்றிய என் முன்னைய இம்மூன்று பதிவுகளையும் கூட நீங்கள் கொஞ்சம் மீள அசை போடலாம்..
பதிவுலகில் என் ஆரம்பக் கட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பதிந்தது..
நான்,சினிமா இன்னும் பல...
இவை இரண்டும் கடந்த ஆண்டில் பதிவேற்றியது..
கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..
கமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்
என் இனிய கமலுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!
எந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம் வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..
காத்திருக்கிறோம்..
23 comments:
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
உலக நாயகனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)
கமலின் பிறந்தநாளுக்கு ட்ரீட் தரும் ஐடியா இருக்கா..:P #திருமலையில்_நிறைய_ஹோட்டல்கள்_உண்டு..:P
//அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)//
"மொக்கை", "மசாலா" கூட ம வரிசையில்தான் !
பிறமொழி ஆக்கங்களைச் "சுட்டு" எடுக்கப்படும் படங்களில் கமல் நடிக்காமல் இருந்தால் மட்டும் போதும், ம வரிசைப் பெயரிருந்தாலும் திரையரங்குகளில் நான் சென்று பார்ப்பேன்.
என்னுடைய வாழ்த்துக்களும் உலகநாயகன் கமலஹாசனுக்கு உரித்தாகட்டும்
கமல்ஹாசனின் ம வரிசை வெற்றிப்படங்கள்
மன்மத லீலை
மூன்றாம் பிறை
மைக்கேல் மதன காமராஜன்
மகளிர் மட்டும் (தயாரிப்பு, கெளரவ வேடம்)
மதனோற்சவம் (மலையாளம், வெள்ளிவிழாப்படம்)
மரோசரித்திரா (கன்னடம் , 1 வருஷம் ஓடியது)
நான் உங்களிடம் இன்னமும் எதிர்பார்த்தேன்
உங்கள் தலைவரைப் பற்றி நான் எழுதியது முடிந்தால் படியுங்கள்
http://sridharshan.blogspot.com/2010/11/10.html
//மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.//
********
இந்த ஒரு வயத்தெரிச்சல் சமாச்சாரத்தை விட்டாலன்றி அவரும், நீங்களும் உருப்பட வழியே இல்லை..
இதை நான் மட்டுமே சொல்வதாக நினைத்து கொள்ளக்கூடாது... பெரும்பான்மையோரின் கருத்தும் இதுவே...
கா சேது .. பிற மொழிப்படங்கள் நாங்க பாக்கிறதில்லைங்க..என்னவோ நல்ல படங்களை தானே எடுக்கிறாரு .அது போதும் . இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் என் இனிய கமலுக்கு .. எப்போதும் கமல் .. கமல் மட்டும்
கடவுளுக்கு சக கடவுளின் வாழ்த்துக்கள்.
Wishing a happy birthday for Kamal Ji
ரஜனியிடம் இருக்கும் பெரும்தன்மை ஏனோ அவரின் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இல்லை.
சேது அவர்களே கிட்டத்தட்ட 7 கோடி தமிழ்பேசும் மக்களில் எத்தனை பேர் ஆங்கிலப் படம் பார்ப்பார்கள். ஆங்கில இலக்கியங்களை மொழிபெயர்த்தல் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகின்றதோ அதேபோல் உலக சினிமாக்களின் தழுவல்களையும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)
//மூன்று,நான்கு நாட்களின் பின்னர் இந்தியா எத்தனை ஓட்டங்களால்/விக்கெட்டுக்களால் வென்றது என்று தெரிந்துகொண்டால் சரி..//
unga kanippu poi
nan solren NZ will win
kanikka theriya vittal enakku oru sms thanga
nan solren.
k
// நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..//
மொக்கை மசாலா திரைப்படங்களை 100 நாள் ஓட வைக்கும் தமிழ் ரசிகர்களுக்கு மகாநதி, அன்பே சிவம், குணா போன்ற திரைப்படங்களின் அருமை தெரியாமல் போனது வருத்தமான விடயம்.
// எந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம் வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..//
வேண்டாம் அண்ணா. சன் குழுமத்தின் மீது உள்ள வெறுப்பால் அது எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் தேவையற்ற விமர்சனங்கள் வரும்.
இன்று தமிழ் சினிமாவில் புதுமைகளை காட்டும் ஒவ்வொரு நடிகனுக்கும் கமலின் முயற்சிகள் வழிகாட்டியாக இருந்திருக்கும், இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கமல் என்றொரு கலைஞன் தமிழ் சினிமாவில் தோன்றியிராவிட்டால் நாம் இந்நேரம் மசாலாக்களில் மிதந்து கொண்டிருப்போம். மேலும் ஆங்கில படங்களின் சண்டைக் கட்சிகளை சுட்டு படம் எடுக்கும் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் மத்தியில் நல்ல கதைகளை கொண்ட பிற மொழி படங்களை தமிழுக்கு கொண்டுவரும் தைரியம் கமலுக்கு மட்டும் தான் உண்டு.
வாழ்த்துக்கள் கமல்.
அண்ணா நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும் என்பார்கள் அது போல் தான் கமல் படங்களும் அந்தக் காலப் பகுதியில் புரியது புரியும் போது தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளமாட்டார்கள். அன்பே சிவத்தில் சுனாமி என்றார். யாரு மனதில் வைத்திருந்தோம் இதைத் தான் சொன்னார் என்பது அது வந்தபின் தானே தெரிந்தது.
வாழ்த்துக்கள் அண்ணா...
கானா பிரபா:
//கமல்ஹாசனின் ம வரிசை வெற்றிப்படங்கள்
மன்மத லீலை
மூன்றாம் பிறை
மைக்கேல் மதன காமராஜன்
மகளிர் மட்டும் (தயாரிப்பு, கெளரவ வேடம்)
மதனோற்சவம் (மலையாளம், வெள்ளிவிழாப்படம்)
மரோசரித்திரா (கன்னடம் , 1 வருஷம் ஓடியது)//
மோகம் முப்பது வருசம் (1976), மீண்டும் கோகிலா (1981), மங்கம்மா சபதம் (1985) இவை வெற்றிப் படங்கள் இல்லையா?
கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
ரிபீட்டு
//கமலின் பிறந்தநாளுக்கு ட்ரீட் தரும் ஐடியா இருக்கா..:P #திருமலையில்_நிறைய_ஹோட்டல்கள்_உண்டு..:P//
கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கமலைப்பத்தி அவரைவிட அதிகமா ஆராய்ச்சி பண்னி இருப்பீங்க போல.. அருமை நண்பா.. கமல் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
anna kamalum rajiniyum inaiyappovathaka arinthen unmaya?.........
மோகம் முப்பது வருசம் (1976), மீண்டும் கோகிலா (1981), மங்கம்மா சபதம் (1985) இவை வெற்றிப் படங்கள் இல்லையா?//
மோகம் முப்பது வருஷம் சுமாரான படம், மீண்டும் கோகிலா, மங்கம்மா சபதம் தோல்விப்படங்களே
Post a Comment