August 05, 2010

ஊருக்குத் தான் உபதேசமா? - வந்தேமாதரம்

இன்று வந்தேமாதரம் தளத்தில் ஒரு பதிவு வாசித்தேன்.. 
நல்ல பதிவு.
அண்மையில் நம்ம அப்பாவி ஜாக்கி அண்ணனும் (ஜாக்கி சேகர்) இப்படி ஒரு காப்பி அடி மன்னனால் பாதிக்கப்பட்டுள்ளார். விஷயத்தை வாசித்தபோது ஜாக்கி அண்ணனை நினைத்துப் பாவமாக இருந்தது.


வந்தேமாதரம் சசிக்குமார் பதிவுலகுக்கு நன்மையாக ஒரு பதிவைத் தந்துள்ளார் என்று இன்ட்லியில் ஒரு வாக்கும் குத்திவிட்டுக் கொஞ்சம் கீழே பார்த்தால்.. 
சிவப்பு வட்டமிட்டுக் காட்டியிருக்கும் பதிவின் லிங்க்..
எங்கேயோ வாசித்த தலைப்பாயிருக்கே என்று வாசித்தால்..
அட..
இதைக் கொஞ்சம் பாருங்களேன்..
படங்கள் கூட மாற்றாமல்.. நான் இட்ட அடுத்த நாள் உங்கள் தளத்தில் இந்தப் பதிவு.. நல்ல காலம் நீங்கள் தமிளிஷ்,தமிழ்மணத்தில் பகிரவில்லை. 


அண்ணே சசி.. 
//நாம் தினமும் கிடைக்கும் கொஞ்சம் ஒய்வு நேரங்களில் கூட ஒய்வு எடுத்து கொள்ளாமல் உடலை வருத்தி கொண்டு நம்மால் முடிந்த வரை சிறப்பான பதிவை எழுதுகிறோம். இதை நம் நண்பர்களும் வாசகர்களும் படித்து மகிழ்வார்கள். ஆனால் சில ஈன பிறவிகள் நாம் சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டு நோகாமல் நோம்பு கும்பிட்டு வந்தார்கள் ஆனால் இனிமேல் அப்படி எதுவும் அவர்களால் பண்ண முடியாது உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்தை கூட அவன் காப்பி செய்ய முடியாது.//


இப்படியெல்லாம் நீட்டி முழக்கி இருக்கும் உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா?
இவ்வளவு நாளும் நான் கவனிக்கவில்லை.


இப்படி இன்னும் என்னென்ன யார் யாருடையதை சுட்டு உங்களுடையதாக்கியுள்ளீர்களோ?


ஏன் இந்தப் பிழைப்பு?
குறைந்தபட்சம் ஒரு நன்றி?
அண்மையில் என்னுடைய எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பதிவையும் இதய பூமி என்ற இணையத்தளத்தில் விமலன் என்பவர் சுட்டுப் போட்டுள்ளார்.(அறியத் தந்த கங்கோனுக்கு நன்றி)
சிறு எழுத்துப் பிழை ஒன்று..அதுவும் மாறாமல் அப்படியே ஈயடிச்சான் கொப்பியாக..


அந்த இணைய நிர்வாகிக்கு இது குறித்து தகவல் அனுப்பினேன்.. ம்ஹூம்.. ஒரு பதில் இல்லை.
சசிக்குமாருக்கும் பின்னூட்டம் அனுப்பினேன். பிரசுரிக்கவில்லை. 


ஊருக்குத் தான் உபதேசமா?


நண்பர்ஸ்.. உங்கள் பதிவுகளும் பத்திரம்..


வேடிக்கை - சசியின் இன்னொரு பதிவு 'காப்பி அடிப்பவர்களுக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க


சிரிப்பதா அழுவதா? 

20 comments:

கன்கொன் || Kangon said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை...
முன்பெல்லாம் நிறையவே கோபம் வரும் இவற்றிற்கெல்லாம், இப்போது பச்சோந்திகளைக் கண்டு பழகிவிட்டது.... :(

எல்லோருமே தங்களை வெளியில் நல்லவர்களாகவும், உத்தமர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள், ஆனால் பலரின் எழுத்துக்களுக்கும் அவர்களின் நடத்தைகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை... :(

வாழ்க...

Mohamed Faaique said...

இந்த நோய் ஒரு தொற்று லோஷன் அண்ணா. யாரும் விதிவிலக்கல்ல.. ஒரு சிலரை தவிர...

sinmajan said...

திருடர்களே திருட்டை ஒளிப்பது பற்றி பதிவிடுகிறார்கள் அண்ணா..
திருடனாப் பார்த்து திருந்தா விட்டால்..

சசிகுமார் said...

நண்பரே மன்னிக்கவும் இது நான் உங்களின் தீவிர ரசிகன் அப்பொழுது எனக்கு பிடித்த பதிவை நான் உங்கள் தளத்தில் இருந்து என் தளத்தில் சேமித்து வைத்து இருந்தேன். மற்ற படி அதை வைத்து பெயர் வாங்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு இல்லை. நான் அதை எந்த திரட்டிகளிலும் இணைக்கவில்லை. இவ்வளவு நாளாக நான் label விட்ஜெட்டை பிளாக்கில் வைத்து இல்லை அதனால் வரை நான் செய்த தவறு என்னை அறியாமலே என் தளத்தில் இருந்துள்ளது. என்னை மன்னிக்கவும் நண்பரே. என் தவறை அறிந்து தற்போது அந்த பதிவை நீக்கி விட்டேன் . மிகுந்த வேதனையாக உள்ளது. என்னை மன்னிக்கவும்.

Anonymous said...

வந்தேமாதரம் தள தகவல்கள் குறிப்பாக பிளாக்கர் டிப்ஸ் தகவல்கள் முழுவதும் ஒரு ஆங்கில வலைத்தளத்தின் காப்பியே ஒரு முறை Page View Counter Html கோடில் அந்த தளத்தின் பெயரையும் அதை உருவாக்கியவர் கொடுத்திருந்தார் ஆனால் அவர் அதை விளம்பரத்துக்காக கொடுத்திருக்கிறார் அந்த TAG நீக்கினாலும் பிரச்சினை இல்லை ஆனால் அது தெரியாத இந்த வந்தேமாதரம் தள நிர்வாகி அதையும் சேர்த்து காப்பி எடுத்து எழுதியிருந்தார் கொஞ்சமாவது இந்த HTML பற்றி தெரிந்திருந்தால் குறைந்த பட்சம் அந்த தளத்தில் தள முகவரியாவையாவது நீக்கியிருப்பார் விடுங்கள் நண்பரே இவங்கள எல்லாம் திருத்த முடியாது

சசிகுமார் said...

நண்பரே எனக்கு எந்த மெயிலும் அனுப்பவில்லையே நண்பா. நான் நண்பர்களுடன் விளையாட்டாக செய்தது அதை வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் செய்ததே. நீங்கள் அதை பற்றி ஏதேனும் எனக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தால் கண்டிப்பாக நீக்கி இருப்பேன்

வந்தியத்தேவன் said...

ஹாஹா உங்கள் வெள்ளவத்தை பதிவு ஈமெயிலிலும் நல்லா ஓடித்திருந்தது ஹிஹிஹி. திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. இன்டெர்போலில் முறையிடுங்கள்

Anuthinan S said...

அண்ணே பதிவு சேர வேண்டியவரை போய் சேர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்!!!!

ஆனால்,இப்படி பாதிக்கபட்ட நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள்!! மாற்று வழி என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை எனக்கு

Sridhar said...

ஸ்ரீதர் . S
என்னே மனிதர்கள், வேறொருவருடைய கஷ்டப்பட்ட உழைப்பை தனதென்று கொள்வதில் என்ன பெருமை? இதில் பேரு வேற பெரிய்ய்ய பேர். தாய் மண்ணே வணக்கம் .

Admin said...

லோஷன் அண்ணா இவங்கள எல்ல திருத்த முடியாது... விடுங்க போய் தொலையட்டும்...

chosenone said...

கருமம்... கருமம் ...

யோ வொய்ஸ் (யோகா) said...

என்ன செய்ய லோஷன் பதிவு திருட்டை தடுக்க பதிவர்கள் நாங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்.

திருட்டு பதிவர்களை இப்படி பொது இடத்தில் சுட்டி காட்டி எல்லாருக்கும் தெரியவைக்க வேண்டும், காரணம் இவர்களை வேறு எந்த வகையிலும் தடுக்கவியலாது.

பதிவு திருட்டு பற்றி எனக்கும் அனுபவமொன்று உண்டு. இலங்கை பதிவர்கள் பலருக்கு அது பற்றி தெரியுமென்ற நினைப்பில் “இருக்கிறம்”

ira kamalraj said...

கவலைப்படாதிங்க அண்ணே சரக்கு உதிரத்தில் இருக்கவுங்க எல்லாம் பயப்பட தேவைல

கிருத்திகன் said...

பதிவைத் தூக்கீட்டார்

LOSHAN said...

கன்கொன் || Kangon said...
என்ன சொல்வதென்று தெரியவில்லை...
முன்பெல்லாம் நிறையவே கோபம் வரும் இவற்றிற்கெல்லாம், இப்போது பச்சோந்திகளைக் கண்டு பழகிவிட்டது.... :(//

ம்ம் புரிகிறது..

எல்லோருமே தங்களை வெளியில் நல்லவர்களாகவும், உத்தமர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள், ஆனால் பலரின் எழுத்துக்களுக்கும் அவர்களின் நடத்தைகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை... :(//

ம்ம் நானும் சிலரை(வெகு சிலரை) இவ்வாறு உணர்ந்தேன்.

நான் அப்படியல்ல என நம்புகிறேன்..====================================
Mohamed Faaique said...
இந்த நோய் ஒரு தொற்று லோஷன் அண்ணா. யாரும் விதிவிலக்கல்ல.. ஒரு சிலரை தவிர...//

ஒவ்வொரு வரும் பாதிக்கப்படும் போது தானே தெரிகிறது.

தொற்றுநோய்க்கான கிருமிகளைக் கண்டறிந்து அழிக்கத் தான் இப்படியொரு பதிவு

LOSHAN said...

sinmajan said...
திருடர்களே திருட்டை ஒளிப்பது பற்றி பதிவிடுகிறார்கள் அண்ணா..
திருடனாப் பார்த்து திருந்தா விட்டால்..//

அது தான் கோபம் வந்தது..
====================

LOSHAN said...

சசிகுமார் said...
நண்பரே மன்னிக்கவும் இது நான் உங்களின் தீவிர ரசிகன் அப்பொழுது எனக்கு பிடித்த பதிவை நான் உங்கள் தளத்தில் இருந்து என் தளத்தில் சேமித்து வைத்து இருந்தேன்.//

பிடித்த பதிவை புக்மார்க் பண்ணி வைப்பது பற்றி அறிந்துள்ளேன்., இதென்ன வித்தியாசமான சேமிப்பாக இருக்கிறது?மற்ற படி அதை வைத்து பெயர் வாங்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு இல்லை. நான் அதை எந்த திரட்டிகளிலும் இணைக்கவில்லை.//

சேமித்து வைத்தது எப்படி பதிவாக மாறியது?
அதிலும் கடைசி வரிகள் மட்டும் இல்லாமல்.. அப்படியே படங்களோடு?


இவ்வளவு நாளாக நான் label விட்ஜெட்டை பிளாக்கில் வைத்து இல்லை அதனால் வரை நான் செய்த தவறு என்னை அறியாமலே என் தளத்தில் இருந்துள்ளது. என்னை மன்னிக்கவும் நண்பரே. என் தவறை அறிந்து தற்போது அந்த பதிவை நீக்கி விட்டேன் . மிகுந்த வேதனையாக உள்ளது. என்னை மன்னிக்கவும்.//

இந்தப் பதிவைப் பிரசுரித்தபிறகாவது உங்களுக்குத் தெரிநிதிருக்குமே..நீங்கள் சொல்லும் காரணம் எதுவும் நம்பும்படியாக இல்லை.உங்கள் நேர்மையை நான் இன்னும் சந்தேகிக்கிறேன்.நான் அனுப்பிய இரு பின்னூட்டங்களையும் பிரசுரிக்கவில்லை நீங்கள்.

அப்படி இருக்கையில் குறித்த பதிவை அகற்றியதால் மட்டும் நான் உங்களை மன்னிக்க நான் ஒன்று மகாத்மா இல்லை.

LOSHAN said...

சசிகுமார் said...
நண்பரே எனக்கு எந்த மெயிலும் அனுப்பவில்லையே நண்பா. நான் நண்பர்களுடன் விளையாட்டாக செய்தது அதை வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் செய்ததே. நீங்கள் அதை பற்றி ஏதேனும் எனக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தால் கண்டிப்பாக நீக்கி இருப்பேன்//நான் அனுப்பிய இரு பின்னூட்டங்களையே பிரசுரிக்காத நீங்கள் நான் மெயில் அனுப்பியிருந்தால் நீக்கி இருப்பீர்களா?
நானே இப்போது தானே பார்த்தேன்.

LOSHAN said...

வந்தியத்தேவன் said...
ஹாஹா உங்கள் வெள்ளவத்தை பதிவு ஈமெயிலிலும் நல்லா ஓடித்திருந்தது ஹிஹிஹி. திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. //

ம்ம் எனக்குமே ஐந்தாறு தடவை தாங்கள் எழுதியதையும் நல்லா இருக்கா என்று கேட்டு அனுப்பியவர்களும் இருக்கிறார்கள்.. ;)இன்டெர்போலில் முறையிடுங்கள்//

உங்களுக்கு கிட்டத் தானே எனக்காக ஒரு தடவை சொல்லிடுங்களேன்..
===============================

Anuthinan S said...
அண்ணே பதிவு சேர வேண்டியவரை போய் சேர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்!!!!//

ம்ம்ம்..ஆனால்,இப்படி பாதிக்கபட்ட நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள்!! மாற்று வழி என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை எனக்கு//

இப்படி அம்பலப்படுத்தி அவமானப்படுத்துவது தான் ஒரே வழி

Anonymous said...

http://vandhemadharam.blogspot.com/2010/01/blog-post_18.html

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24826

நக்கீரன் செய்தியையே சுட்டு போடுறார் தல. இத என்னன்னு சொல்லுறது. இன்னும் எத்தனையோ?

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified