நீளம்.. ரொம்பவே நீளம்..

7/29/2010 01:22:00 PM

(25) Comments

தலைப்பைப் பார்த்திட்டு நீ........ளமான பதிவென்று வந்த வேகத்திலேயே ஓடிடாதேங்கோ.. 
வழக்கத்திலேயே சிறு பதிவென்று நீளமாக நீட்டி முழக்கும் இவன் நீளமோ நீளம் என்றால் எத்தனை கிலோ மீட்டர் என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஆனால் இன்று நான் சொல்லப்போற இந்த விஷயத்தில் நானெல்லாம் பிச்சை வாங்கிற அளவுக்கு நீளமாக நீட்டுகிற நண்பர்கள் இருக்கிறார்கள்..


அதிகமாக யோசிக்காதீங்க.. 


பொதுவாக மின்னஞ்சல் வைத்திருப்போர் மின்னஞ்சல்கள் அனுப்பும்போது கீழே ஒரு கையொப்பம் (எங்கள் பெயர்+இதர விபரம்) இட்டு அனுப்புவோம் தானே..
Email signature 


உதாரணமாக நான் அனுப்பும் மின்னஞ்சல்களில்.. 


LOSHAN
http://arvloshan.com/



இவ்வாறு இருக்கும்.


(அலுவலக மடல்களுக்கு என் அலுவலக மின்னஞ்சலைப் பயன்படுத்துவதால் இதைக் குறுக்கி வைத்திருக்கிறேன்)


சிலர் அடிக்கடி இந்த மின்னஞ்சல் ஒப்பங்களை மாற்றிக் கொள்வார்கள். 
தங்கள் பீலிங்க்சை இந்த ஒப்பங்களில் காட்டிக் கொள்வார்கள்..


உ+ம் - கங்கோன் 
கொஞ்ச நாள் தன் படத்தைப் போட்டுப் பயமுறுத்திக் கொண்டிருந்தவர், 


இப்போது 


--
K.Gopikrishna

என்று காதலில் உருகுகிறார். 
இவரால் தாங்க முடியாத பாரமென்றால்????


வலைப்பதிவுகள் வைத்திருக்கும் பலர் (என்னைப் போல) தங்கள் வலைப்பதிவுகளை இணைத்து ஒப்பம் இட்டுக் கொள்வர்.
உ+ம் 





அன்புடன்
சுகுமார் சுவாமிநாதன் - வலைமனை

கொஞ்சம் மேலே கொஞ்சம் அட்வான்சாக..
நம்ம பன்மொழிப் புலவர்/பதிவர் அஷோக்பரன்


--
N.K.Ashokbharan
என்.கே.அஷோக்பரன்
එන් කේ අශෝක්භරන්
एन.के.अशोकभरण
एन के अशोकभरन
εν κε ασηοκβηαραν
אן קה אשוקבהרן
إن ك أشكبحران
አን ቀ አሾቅብሃራን
ఎం.కే.అశోక్బరన్
ಎನ್.ಕೆ.ಅಶೋಕ್ಬರನ್
എന്‍.കെ.അശോക് ബാരന്‍

www.nkashokbharan.com
contact@nkashokbharan.com





இப்படிப் பல பேர் பலவிதம்..


நிறையப் படித்தவர்கள் தங்கள் பட்டங்களையும் பதவிகளையும் இதில் சேர்த்துக் கொள்வார்கள்.
அவர்களது முயற்சிகளின் வெற்றியைக் காட்டிக் கொண்டாட வேண்டாமா?


தொழில் புரியும் இடங்கள் மாறினால் அவற்றைக் காட்டவும் இந்த மின்னஞ்சல் ஒப்பங்கள் உதவுகின்றன.


இப்படித்தான் நம்ம நண்பர் பதிவர் ஆதிரை (ஸ்ரீகரன்) தன் புதிய பதவி/அலுவலகத்தை சேர்த்து மின்னஞ்சல் ஒப்பமாக (பாவம் - பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்)ஒரு கும்மியில் அனுப்பிவைத்தார்.


A.Srikaran

Software Engineer
********** ************* 
(Member of the *** Group)
Tel No : +94 112 *********
Fax No : +94 112 ********
Mobile : +94 *** ********
Website : www.********.com
E-Mail : srikaran.a@*******.com
            : caskaran[at]gmail[dot]com



அதற்கு ரிவிட் அடிக்க பசுப்பையன் மது.. அதாங்க 'நா',மதுயிசம் புகழ் Cowboy மது தன்னைப் பற்றி வரிக்கு வரி விலாவாரியாக அடுத்த மடலிலே கும்ம ஆரம்பித்தார்..


Mathuvathanan Mou
Software Engineer
B.Sc (Hons)
********* INTL (Pvt) Ltd
(Member of **********)
Member of Sri Lankan Tamil Bloggers
Member of Mounasamy's Family
Student of University of Moratuwa
Student of Vidyanada College
Student of Kalaimahal Vidyalayam
Customer of Dialog Telekom
Customer of Airtel Sri Lanka
Customer of HSBC
Customer of ComBank
Tel No : +9411*********
Ext : 234
Mobile : +94*********
Fax : +94112***********
Website : www.********.lk
Blog : www.n-aa.blogspot.com
email : cowboymathu[at]gmail[dot]com
           cowboymathu[at]yahoo[dot]com
           bla

           bla
           bla
           



இதற்கெல்லாம் கொடுமையாக பாட்டி வடை கதை புகழ் (கவிஞர் ) பவன்
இவரது முன்னைய ஒப்பம்..
--
http://nbavan7.blogspot.com/
▌│││▌▌▌▌│ │▌ ││▌▌│▌®
Best regards from - BAVAN



Bavananthan Nithiananthan
Member of Sri Lankan Tamil Bloggers
Student of Colombo Hindu college
Student of Koneswara Hindu college
Member of Young enemies sports club
Member of Bloggers sports club
Member of TAMILCRICKET blogspot
Member of Facebook
Member of Twitter
Member of Gmail
Member of yahoo
Member of MSN
Member of Skype
Member of orkut
Member of COE
Member of Facebook
Member of yaadevi 
Member of Indli 
Member of Tamilmanam 
Customer of Dialog Telekom
Customer of Airtel Sri Lanka
Customer of HNB
Card holder of NSB
Customer  of SLT broad band
Traveler of 155 bus
Tel no - 077********

தரங்கம் புகழ் சுபாங்கன்..

இவரது முன்னைய (அண்மைக்கால) ஒப்பம் -

Subankan Balasubramaniam
<Just because you believe something doesn't make it true>

Subankan Balasubramaniam
Electrical Engineer in 1 year
முக்கால் B.Sc (Hons)
கால் ACMA
******* ******** & Equipment (PVT) Ltd Trainee
(Sole agent of *******)


Member of Sri Lankan Tamil Bloggers
Member of Balasubramaniam's Family

Student of University of Moratuwa
Student of Jaffna Hindu College
Student of Kokuvil Hindu College
Student of Alvai Sinnathambi Vidyalayam

Customer of Dialog Telekom
Customer of Airtel Sri Lanka
Customer of HNB
Customer of ComBank
HNB Card Holder
COM BANK Card holder
National inentity Card Holder
University inentity Card Holder
IESL Student Member
Citizen of Sri Lanka
Tel No : +94112*********
Mobile : +9477********
Blog : www.subankan.blogspot.com
email : subankanb[at]gamil[dot]com
           subankan[at]yahoo[dot]com
           bla
           bla

இப்போதைக்கு இந்த நீளமான ஒப்ப வதை இவ்வளவோடு நிற்கிறது..
நல்ல காலம் லண்டன் புலம்பெயர் வந்தியர் இன்னும் தூக்கத்திலிருந்து எழும்பவில்லை போலிருக்கு..
அவர் எவ்வளவு நீளமாக திட்டம் வச்சிருக்கிராரோ தெரியவில்லை.

(இத்தனை தகுதிகள் உள்ள நண்பர்களைப் பெற்றதில் அளவற்ற பெருமை தான்)

இதிலிருந்து தெரிவது யாதெனில்,மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு எவராவது தொல்லை கொடுப்பவராக இருந்தால் இதே போல நீங்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள்,உங்கள் குடும மூதாதையர்,பரம்பரை விஷயங்கள்,இன்ன பிற இத்யாதிகள், விரும்பினால் உங்களுக்குப் பிடித்த சாப்பாடுகள்,கிடைக்கும் பட்டங்கள் இதையெல்லாம் சேர்த்துக் கோர்த்து அடிக்கடி அவருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அனுப்புகின்ற மின்னஞ்சலை விட இந்த ஒப்பம் பெரிதாக இருக்கட்டும். வெறுத்துப் போய் ஓடியே போய் விடுவார்கள்..

ஆனால் மறந்தும் உங்கள் காதலியின் (காதலிகளின்) பெயர்கள்,கிரெடிட் கார்ட் இலக்கங்கள்,கடவுச் சொற்களையெல்லாம் போட்டுத் தொலைச்சிராதீங்க.. 

அப்பிடியே உங்க ஒப்பங்களையும் பின்னூட்டமாப் போட்டுட்டுப் போறீங்க..

(இந்த நண்பர்ஸ் எல்லாரும் ரொம்ப நெருக்கம் என்பதால் கோவிக்க மாட்டாங்க.. இன்னும் சிலரின் சுவாரஸ்ய ஒப்பங்கள் இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட privacyக்காகவும் இதர சிக்கல்களைத் தவிர்க்கவும் இங்கே சேர்க்கவில்லை)

அப்போ வர்ட்டா? ;)


பி.கு - கடைசியாக ஆதிரையிடமிருந்து எனக்கு வந்த சிறு குறிப்பு -
'இனிமேல் என் மின்னஞ்சலில் பெயர் கூட இருக்காது.. இப்ப போதுமா?' 


25 Responses to "நீளம்.. ரொம்பவே நீளம்.."

  • Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu

    மின்னஞ்சல் ஒப்பங்களை பற்றிய இவ்விழிப்புணர்வுப் பதிவென்று .. ;-)

    அப்புறம், படத்தில் இருப்பவர் தலைகீழாகவா இருக்கிறார்????

  • Mohamed Faaique

    இப்படியெல்லாம் அடுத்தவனை கடுப்பேத்த முடியுமா? இது தெரியாம எத்தனையோ பேரை தப்பிக்க விட்டுட்டோமே!

  • Subankan

    இக்கி இக்கி

    //அப்புறம், படத்தில் இருப்பவர் தலைகீழாகவா இருக்கிறார்????//

    LMAO

  • Subankan

    ஆங், எதையோ மறந்துட்ட‍ன் போல இருக்கே

    :)))))))))

  • ஆதிரை

    கும்மி??

    அப்படியென்றால்????

  • வதீஸ்-Vathees

    அப்பாடா நான் இந்த லிஸ்ட்டில இல்லை தப்பிச்சேன்...ஹி...ஹி...

  • வதீஸ்-Vathees

    அப்பாடா நான் இந்த லிஸ்ட்டில இல்லை தப்பிச்சேன்...ஹி...ஹி...

  • என்.கே.அஷோக்பரன்

    ROFL!

  • tamildigitalcinema

    உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

  • Anuthinan S

    இந்த விசயம் இவ்வளவு சீக்கிரம் பதிவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

    பவன் ஒன்றை விட்டு விட்டார்.
    Member of veddipayal sangam
    சேர்த்து கொள்ளட்டும்

    இப்பயும் மற்றவரை கொலை செய்யலாம் என்று தகவல் தந்த அண்ணாவுக்கு நன்றிகள்!!!

  • கன்கொன் || Kangon

    ஹி ஹி....

    காலையில் போட்டி பார்க்கச் செல்லும் அவசரத்தில் பதிலளிக்க முடியவில்லை, ஆனால் மது அண்ணாவின் ஒப்பத்தை மிகவும் இரசித்தேன்....

    என்றாலும் எல்லாவற்றிலும் இந்த அப்பாவி கங்கோனை சேர்க்கிறீர்களே, இது தகுமா? அடுக்குமா? ;)


    // அப்புறம், படத்தில் இருப்பவர் தலைகீழாகவா இருக்கிறார்???? //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  • Bavan

    அவ்வ்.. அந்த கன்கொனின் படத்தைப்பார்த்து அடிக்கடி பயந்திருக்கிறன்..:P

    //கொஞ்சம் மேலே கொஞ்சம் அட்வான்சாக..
    நம்ம பன்மொழிப் புலவர்/பதிவர் அஷோக்பரன்//

    ஆ...:-o

    //இவரது முன்னைய ஒப்பம்..//

    அதுக்குப்பிறகு இருப்பது என் வளர்ச்சிக்கட்டங்கள்..:P:P:P

    //LOSHAN
    http://arvloshan.com///

    ROFL... :P

  • Ahamed Suhail

    A.I.Ahamed Suhail
    B.Sc(Applied Sciences)

    Announcer in THendral(SLBC)

    Member of Intly
    Member of Tamil Manam
    Member of Ulavu
    Member of Ismail's Family
    Member of Bright Institute
    Member of SFO (Smart Friends Org.)
    Member of Muslim Majlis RUSL
    Member of Fun & Fun only Group
    Member of Tamilbeat.com
    Member of Oosai.com
    Member of Tamilwire.com
    Member of Facebook
    Member of Gmail
    Member of Yahoo

    HpCompaq 610 Laptop Holder
    HUAWEI E1553 Dongle Holder
    Nokia 2210 Phone Holder
    Minmi Mp3 Player Holder
    Minmi Mp4 Player Holder
    BOC Card Holder
    Seylan visa Card Holder
    Com Card Holder
    National Identity Card Holder
    University Identity Card Holder
    SLBC Identity Card Holder
    Driving Licence Holder
    "Vanolik Kuyil" Award Holder

    Fan of Srilanka Cricket Team
    Fan of Murali
    Fan of Sana
    Fan of Malinga
    Fan of Mahela
    .....
    .....
    .....
    Student of Rajarata University of Srilanka
    Student of M.M.M.vid(National School) Sammanthurai.
    Student of D.S.Senanayaka College
    Student of Bright Institute

    Customer of Mobitel
    Customer of Dialog
    Customer of Airtel Sri Lanka
    Customer of Etisalat
    Customer of Hutch
    Customer of Comercial Bank
    Customer of Bank of Ceylon
    Customer of Seylan Bank
    Customer of Niyas Hotel
    Customer of Vijaya Hotel
    Customer of Sammanthurai saapattukkadai
    Customer of Grand Eastern Hotel

    Tel No : +94672*********
    Mobile : +9471*********
    Mobile : +94777*********
    Mobile : +9472*********
    Mobile : +9475*********
    Mobile : +9478*********

    Blog : www.aiasuhail.blogspot.com
    email : aiasuhail@gmail.com
    *********@*********
    *********@*********
    *********@*********

    இப்போதைக்கு இது போதும். இப்போ நான் தூங்கப்போறன் அப்பாலிக்கா வந்து ஆள் டீடெய்ல்ஸ் சொல்லுறன்.ok?
    இப்போ... நானும் வர்ட்டா...?

  • யோ வொய்ஸ் (யோகா)

    நல்லா சிரிச்சேன்.. எனது ஒப்பத்தை போட்டு பார்த்தேன்

    யோகா
    மெம்பர் ஒப் வருத்தமில்லா வாலிபர் சங்கம்

  • LOSHAN

    Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
    மின்னஞ்சல் ஒப்பங்களை பற்றிய இவ்விழிப்புணர்வுப் பதிவென்று .. ;-)//

    நன்றி மது.. உங்களுக்குப் புரிந்துள்ளது.



    அப்புறம், படத்தில் இருப்பவர் தலைகீழாகவா இருக்கிறார்????//

    அப்படியா தெரியுது? ;)

    மதுயிசம் அகெய்ன்?
    =======================

    Mohamed Faaique said...
    இப்படியெல்லாம் அடுத்தவனை கடுப்பேத்த முடியுமா? இது தெரியாம எத்தனையோ பேரை தப்பிக்க விட்டுட்டோமே!//

    இன்னும் தாமதமில்லை.. தேடிப் பிடியுங்கள்.ஆட்களை முடியுங்கள்.

  • LOSHAN

    Subankan said...
    ஆங், எதையோ மறந்துட்ட‍ன் போல இருக்கே

    :)))))))))//

    அதானே பார்த்தேன்..

    ====================

    ஆதிரை said...
    கும்மி??

    அப்படியென்றால்????//

    அம்மியுடைய அக்கா..

  • LOSHAN

    வதீஸ்-Vathees said...
    அப்பாடா நான் இந்த லிஸ்ட்டில இல்லை தப்பிச்சேன்...ஹி...ஹி...//

    இது உண்மையிலேயே கவலையா? சந்தோஷமா?

    கவலைஎன்றால் பகுதி இரண்டு போடலாம்..
    உடனே மின்னஞ்சல் அனுப்புங்கள்.
    ======================

    என்.கே.அஷோக்பரன் said...
    ROFL!//

    தகுந்த நேரம் மடல் அனுப்பியமைக்கு நன்றிகள்..
    பார்த்து உருளுங்கள்.பேராதெனியா பிரண்டு விடும் ;)

  • LOSHAN

    tamildigitalcinema said...
    உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil///

    அழைப்புக்கு நன்றி..

    =============

    Anuthinan S said...
    இந்த விசயம் இவ்வளவு சீக்கிரம் பதிவாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை.//

    உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?



    பவன் ஒன்றை விட்டு விட்டார்.
    Member of veddipayal sangam
    சேர்த்து கொள்ளட்டும் //

    தலைவரே சொன்னாப் பிறகு பவன் விடுவாரா?



    இப்பயும் மற்றவரை கொலை செய்யலாம் என்று தகவல் தந்த அண்ணாவுக்கு நன்றிகள்!!!//

    மூசிக் ஸ்டார்ட் :)

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...

    காலையில் போட்டி பார்க்கச் செல்லும் அவசரத்தில் பதிலளிக்க முடியவில்லை,//

    எந்தப் போட்டி?

    ஓ பந்துவீச்சாளர்களைப் படுகொலை செய்யும் பந்தாட்ட டெஸ்ட் போட்டியா?



    ஆனால் மது அண்ணாவின் ஒப்பத்தை மிகவும் இரசித்தேன்....//

    ஆரம்பித்து வைத்தவர் இல்லையா?



    என்றாலும் எல்லாவற்றிலும் இந்த அப்பாவி கங்கோனை சேர்க்கிறீர்களே, இது தகுமா? அடுக்குமா? ;)//

    எதையும் தாங்கும் இதயமடா நீ..


    // அப்புறம், படத்தில் இருப்பவர் தலைகீழாகவா இருக்கிறார்???? //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//

    எச்சூஸ் மீ.. மது உங்கள் படங்களை சொல்லவில்லை ;)

    (இன்னும் சின்னப் பையனாகவே இருக்கிறான் - நல்லவன்)

  • கன்கொன் || Kangon

    // எச்சூஸ் மீ.. மது உங்கள் படங்களை சொல்லவில்லை ;)

    (இன்னும் சின்னப் பையனாகவே இருக்கிறான் - நல்லவன்) //

    ஹி ஹி...
    அவர் எந்தப் படத்தை என்று சொன்னார் என்று அறிய முடியாத அளவுக்கு நான் இருக்க நான் அவர் இல்லை.... ;)

  • LOSHAN

    Bavan said...
    அவ்வ்.. அந்த கன்கொனின் படத்தைப்பார்த்து அடிக்கடி பயந்திருக்கிறன்..:P //

    நல்ல காலம் சிறு குழந்தைகள் பதிவுலகப் பக்கம் இல்லை ;)




    //இவரது முன்னைய ஒப்பம்..//

    அதுக்குப்பிறகு இருப்பது என் வளர்ச்சிக்கட்டங்கள்..:P:P:P //

    இன்னும் வளரலையா? வடை நிறையத் தின்றால் வளரலாமாம்..

    அனலிஸ்டுகள் சொல்கிறார்கள் ;)

  • LOSHAN

    Ahamed Suhail said...
    A.I.Ahamed Suhail
    B.Sc(Applied Sciences)//

    இவ்வளவோடு நிறுத்திக் கொள்வது என் உடல்நிலைக்கு நலம்.


    இப்போதைக்கு இது போதும். இப்போ நான் தூங்கப்போறன் அப்பாலிக்கா வந்து ஆள் டீடெய்ல்ஸ் சொல்லுறன்.ok?//

    வேணாம் ராசா.. நல்லாத் தூங்குங்க..இவ்வளவு நீளத்துக்கு நல்லாத் தூங்கவேண்டும்
    =================

    யோ வொய்ஸ் (யோகா) said...
    நல்லா சிரிச்சேன்.. எனது ஒப்பத்தை போட்டு பார்த்தேன்

    யோகா
    மெம்பர் ஒப் வருத்தமில்லா வாலிபர் சங்கம்//

    அவ்ளோ தானா?

    முன்பிருந்த ஐயனார் கத்தி.. அருவா.. அது இது???

  • LOSHAN

    கன்கொன் || Kangon said...

    ஹி ஹி...
    அவர் எந்தப் படத்தை என்று சொன்னார் என்று அறிய முடியாத அளவுக்கு நான் இருக்க நான் அவர் இல்லை.... ;)//

    ஒருவர் இல்லாவிட்டால் என்னவெல்லாம் ஆட்டம்?

    மாமோய் ஓடி வாங்கோ..

  • சே.குமார்

    நல்லா சிரிச்சேன்..!

  • SShathiesh-சதீஷ்.

    ரொம்ப நீளமான பின்னூட்டம் ஒன்று இடப்போகின்றேன்.....கட்டாயம் (முடிந்தால் பிரசுரிக்கவும்.)























































































































































    எப்புடி


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.