July 05, 2010

தோனி - ரணில் என்னாச்சு?

இரண்டு தலைவர்களைப் பற்றி இரு விதமான பரபரப்புக்கள்..

#1

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் சத்தமில்லாமல் திடு திப்பென்று நேற்றுத் திருமணம் முடித்துவிட்டார்..
மணமகள் அவரது பள்ளித் தோழியாம்..இருந்திட்டுப் போகட்டும்.
அதுக்காக இப்படி ஒரு தகவல் கூட இல்லாமல் இப்படியா செய்வது?

தீபிகா,லக்ஸ்மி ராய்,நம்ம அன்புள்ள அசின் கதை எல்லாம் என்னாகிறது?

மோட்டார் பைக்,மொடேல்லிங்,ஹோட்டல் அறை,பிறந்தநாள் பார்ட்டி இதெல்லாம் சும்மா லுலுலாய்க்கா?? ;)

ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு தோனியைப் பாராட்டத் தோன்றுகிறது.

லக்ஷ்மிராய்,அசின், தீபிகா இந்த அக்காமாரெல்லாம் நெருங்கிய நட்பு,வேறொன்றுமில்லை, 'அதுக்கு' பின் நெருக்கமானோம்.. இதுக்குப் பின் நெருங்கினோம் என்றெல்லாம் மறுப்பறிக்கை மாதிரி விளம்பரம் செய்துகொண்டிருந்த நேரம் தோனி இதுபற்றி பொருட்படுத்தாமல்,மௌனமாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாரே அதை சொன்னேன்.

அது இன்னா வேலை என்று துருவக் கூடாது..
அது அவர் வேலை.

 ஆனால் அசின் இலங்கை வந்திருக்கும் நேரம் பார்த்து அவசர அவசரமாக ஏன் தோனியின் திருமணம் நடந்தது?

இதுக்கும் அதுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ?

(சும்மா ஏதாவதொன்றை இப்படிக் கிளப்பி விட்டாத்தானே பரபரன்னு பத்திக்கும்..)


அசின்னுக்கும் காலம் நல்லா இல்லைப் போல இருக்கு.. 
தமிழ்த் திரையுலகம் ரெட் கார்ட் காட்டப் போகுது..
தோனியும் எஸ்கேப்.
இலங்கைக்கு அவர் வந்தும் நான் சந்திக்கப் போகவில்லை. ;)

யாராவது நல்ல ஒரு வெத்திலை சாத்திரியைப் பார்ப்பது நல்லது..


தோனியின் அவசரத் திருமணம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட ஒன்றல்ல.. அது நல்லபடியாகத் திட்டமிடப்பட்டு ஒழுங்கான முடியில் நடந்த ஒன்று என்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார் ஹிந்தி நடிகை பிபாஷா பாசு.
இவங்க தோனியின் நெருங்கிய நண்பியாம்.

ஆனால் படப்பிடிப்பு காரணமா பிபாஷா போக முடியல.. இவரது காதலர் ஜோன் ஏப்ரகாம் போயிருக்கிறார்.
மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் மிக முக்கிய இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களும் மிஸ்ஸிங்..
ஹர்பஜன்,ரெய்னா,நெஹ்ரா,ரோஹித் ஷர்மா, R.P.சிங் என்று மிகச் சிலரே கலந்து கொண்டார்களாம்.

7ஆம் திகதி மும்பையில் நடக்கும் விருந்துபசாரத்தில் நான் உட்பட ஏனைய VIPகள் கலந்துகொள்வார்கள் என்று தோனியின் தரப்பு சொல்கிறது.

புதிய இன்னிங்க்ஸ் ஆரம்பித்திருக்கும் புயல் வேக தலைவர் தோனிக்கும் இனி அவரை வழிநடத்த உள்ள தலைவி சாக்ஷிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்..

இப்படி அப்படி சர்ச்சைகளை கிசு கிசுக்களை எவனாவது கிளப்பி விட்டுட்டே இருப்பான்.. அதையெல்லாம் பொருட்படுத்தாம உங்களுக்குள் ஒற்றுமையாக,உண்மையாக வாழ்வைக் கொண்டு நடத்துங்க..


#2


இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் அதன் வழி எதிர்க் கட்சித் தலைவராகவும் உள்ள ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய சர்ச்சையை பரபரப்பைக் கிளப்பி விட்டார்.

தன்னை ஆளும் தரப்பின் சர்ச்சை நாயகன் மேர்வின் சில்வா கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

ரணிலுக்கு இந்த பத்து வருடமாக் காலம் அவ்வளவு நல்லா இல்லை.. 20 தேர்தல்களில் ஐ.தே.க - UNP இவர் தலைமையில் தோற்று சாதனை படைத்தாச்சு.. இது உலக சாதனையாக இருக்கலாம்? ;)

இப்போது இவரது தலைமையை மாற்ற உட்கட்சி மறுசீரமைப்பு நடந்துவரும் வேளையில் (இன்று தான் அந்த புதிய ஆலோசனைகள் அடங்கிய முழு அறிக்கை ரணிலிடம் கையளிக்கப்படுகிறது) இன்றைய இந்தப் பரபரப்பு..

இப்போ என்னுடைய இன்னொரு சந்தேகம்..

இதுக்கும் அதுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ?
அண்மையில் வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்ற பொது ரணில் விக்ரமசிங்க மீது யாரோ போத்தல் எறிந்ததும் நடந்தேறியது.

யாரை என்று சந்தேகப்படுவது?
உள்ளுக்குள்ளும் எதிரிகள் இருக்கும் போது..
இத்தனை தடவை தோற்றும் மனுஷன் இறங்க மாட்டேங்கிறாரே என்று ஐ.தே.க விலேயே எதிர்ப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் அதிரடி ஹீரோ ஏன் இவரை அட்டாக் செய்ய முயலவேண்டும்?

ஆர்ஜென்டீனா உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து அவுட் ஆகியவுடன் மரடோனா பதவி விலகப் போகிறேன் என்கிறார்..
நைஜீரியா தோற்றுவிட்டது என்றவுடன் அந்த சிறிய அணியின் தலைவர் காணு எல்லாம் காணும் என்று போய்விட்டார்.

இந்த செய்தியை எல்லாம் யாராவது ரணிலுக்கு சொல்லமாட்டார்களா?

கட்சியின் மறுசீரமைப்பு பற்றிய அறிக்கையை முழுக்க வாசித்த பிறகாவது ஏதாவது நல்ல முடிவு எடுப்பாரா பார்ப்போம்..

 

7 comments:

வந்தியத்தேவன் said...

டோணிக்கு வாழ்த்துக்க்கள்

ரணில் படம் கலக்கல்.

Mohamed Faaique said...

ஆர்ஜென்டீனா உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து அவுட் ஆகியவுடன் மரடோனா பதவி விலகப் போகிறேன் என்கிறார்..
நைஜீரியா தோற்றுவிட்டது என்றவுடன் அந்த சிறிய அணியின் தலைவர் காணு எல்லாம் காணும் என்று போய்விட்டார்.

இந்த செய்தியை எல்லாம் யாராவது ரணிலுக்கு சொல்லமாட்டார்களா?

Superb...

கன்கொன் || Kangon said...

டோணிக்கு வாழ்த்துக்கள்...
ஏதோ ஒருநாளைக்கு 5 லீற்றர் எண்டு நகைச்சுவை எல்லாம் இருக்கு உங்களப் பற்றி, பாத்து செய்யுங்கப்பு. ;)

ஆனால் டோணி ஆர்ப்பாட்டமே இல்லாமல் திருமணத்தை முடித்தது சிறப்பே, தனிப்பட்ட வாழ்க்கைகளுக்குள் தேவையற்று நாம் உட்புகக் கூடாது.

ரணில் - துரதிஷ்ரசாலி என்றும் சொல்லலாம்.
அத்தோடு இப்ப சஜித் வந்தா சஜித் உம் வாற 10, 15 தேர்தலில தோற்க வேண்டித்தான் வரும்.
பேசாம பலியாடா அந்த மனுசனயே விடுங்கப்பா....

Vathees Varunan said...

உண்மையிலே டோணி ஒரு திறமைசாலிதான்...ஒத்துக்கொள்ளுறன்இதுக்கு மேலையும் நான் ஒன்றும் சொல்லவரலை

அடுத்தது மதிப்புக்குரிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐயா பற்றி சொல்லத்தான் வேணும்... இந்த நாட்டில் இனப்பிரச்சனை பூதாகரமாக மாறுவதற்கு ஐ.தே.க வும் ஒரு காரணம் அதனுடைய விளைவுகளைதான் அந்த கட்சி இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பது பொதுவான கருத்து. அதனால் ஐ.தே.கவின் தலைவராக இருக்கும் ரணிலுக்கும் கெட்ட காலம். ஆனாலும் தலைமை பதவியை விட்டுட்டு போறதில்லையென்று மனுசன் ரொம்ப விடாப்பிடியாகத்தான் இருக்குது.பதவி ஆசை யாரைத்தான் விட்டது...

//ஆனால் அசின் இலங்கை வந்திருக்கும் நேரம் பார்த்து அவசர அவசரமாக ஏன் தோனியின் திருமணம் நடந்தது?//
நல்லா கிளப்புறாங்கைய்யா??

அஜுவத் said...

innakki thaane thirumanam; mudinjithu enreenga.........

என்.கே.அஷோக்பரன் said...

ரணில் விக்ரமசிங்ஹ விலக வேண்டும்? - அடுத்தது என்ன? அடுத்த தலைவர் யார்? இது போன்ற கேள்விகள் ஐக்கிய தேசியக் கட்சியினரிடையேயும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடமும் அதிகம் இருக்கிறது. சஜித் பிரேமதாஸவின் பெயர் அடிபடுகிறது, ஆனால் அவர் இன்னும் “தேசிய” அளவில் தலைவராக வர காலம் எடுக்கும், மேலும் இன்றைய நிலையில் ஆட்சி மாற்றம் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் நடப்பது கடினம் போலத் தான் தெரிகிறது. இங்கிருக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களும், சிறுபான்மை சிறுபான்மையின மக்களும் இந்த ஆட்சிக்கு ஆதரவாகவே இன்னும் இருக்கிறார்கள், ஆனால் இப்படியே விலைகள் தலைக்கு மேல் எகிறி, இலங்கை சீனா மற்றும் இந்தியாவின் பிச்சையில் வாழும் நாடாக முழுமையாக மாறி, ஆசியாவின் எத்தியோப்பியாக மாறும் நிலை வரும் போது இந்த மக்கள் விழிப்பார்கள் என நம்பலாம், அப்போதுகூட இந்த “மகாராஜாவை” ஆதரிக்கும் கூட்டம் ஒன்று இருந்துகொண்டுதான் இருக்கும், ஆனால் அப்போது இந்த “மகாராஜா” தனது பரிவாரங்களுடன் ஏதாவதொரு தீவை விலைக்கு வாங்கி குடியேறியிருப்பார்! அதன் பின் இந்த மினி எத்தியோப்பியாவை மீட்டெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியல்ல எந்தக் கொம்பனாலும் முடியாமல் போய்விடும்!

அப்ப நாங்கள் எல்லாம் எங்க இருப்பம்? - நாங்களும் புலன்...சீ...புலம் பெயர்ந்த தமிழராகிவிடுவோம்! ;-)

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner