April 01, 2010

போடுங்கம்மா வோட்டு..

தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் தேர்தலில் நிற்கும் எனது நண்பரொருவர் தனக்கு கொஞ்சம் காரசாரமான பிரசார உரை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டிருந்தார்.
அவரது அன்பைத் தட்ட முடியாமல் உரை ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தேன்.


அவர் முதலிலேயே சொல்லி வைத்தது போல மக்களைக் கொஞ்சம் உற்சாகப் படுத்தி அவர்களிடமிருந்து கை தட்டல்களை வாங்குவதற்கென்றே சில விஷயங்களையும் பொடி வைத்து, சூடாக எழுதிக் கொடுத்திருந்தேன்.


பார்த்துக் கொள்ளுங்கள்;தயார்ப் படுத்தி வாசிப்பது போலல்லாமல் பேசுங்கள் என்றெல்லாம் எச்சரித்தே கொடுத்தேன்.


கூட்டம் நடைபெற்ற அடுத்த நாள் காலையில் அரசியல்வாதி நண்பரின் செயலாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


"என்னைய்யா இப்படியா பேச்சு எழுதிக் கொடுப்பீர்.. நம்ம ஆளு நேற்று சொதப்பிட்டார் லோஷன்"


"அதிர்ச்சியுடன் ஏன் என்னாச்சு? நல்லாத் தானே எழுதிக் குடுத்தேன்"


"சும்மா எழுதிக் குடுக்க வேண்டியது தானே.. அதென்ன சிட்டுவேஷன் எல்லாம் எழுதிக் குடுத்தீங்க?" என்றார் செயலாளர்.


அதுக்குப் பிறகு தான் விஷயமே புரிந்தது..


நம்மவர் கைதட்டல் வாங்கவேண்டுமென்று எழுதிய பஞ்ச் வசனங்களுக்குப் பிறகு 'கைதட்டலுக்கு சிறு இடைவெளி கொடுங்கள்' என்று தடித்த எழுத்துக்களில் எழுதிக் கொடுத்திருந்தேன்.
நம்ம ஆள் அதையும் சேர்த்து வாசித்திருக்கிறார்..


நல்ல காலம் வாக்காளப் பெருந்தகைகள் மொத்தாமல் பக்குவமாக சிரித்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்.. ஆனால் வாக்கு இவருக்குத் தான் போடுவார்களா என்பது முடிவுகள் வந்த பிறகு தான் தெரியும்.
மக்கள்ஸ் கொஞ்சம் யோசித்துப் பார்த்து செய்யுங்க.. ;)


அதுக்குப் பிறகு ஒரே ஒரு நிம்மதி.. நம்ம ஆள் என்னிடம் பிரசார உரை,புண்ணாக்கு என்று எந்தவொரு விடயமும் கேட்பதில்லை..


பி.கு - அண்மையில் இன்னொரு அன்புக்குரிய & நன்றிக்குரிய அரசியல் தர்மசங்கடம் இடம்பெற்றது. அதுபற்றி பிறகு சொல்கிறேனே.அதுக்கு முதலில் தற்போதைய அரசியல்,தேர்தல் கள நிலவரங்கள் பற்றி எப்படியாவது ஒரு பதிவு இட்டுவிடுகிறேன்.


15 comments:

nadpudan kathal said...

அண்ணா இப்பவே அரசியல் உரை எழுதி பலகிரமாறி இருக்குது !!!! அப்பா எதிர்கால விடிவெள்ளி நீங்கதான் போல!!!


வாழ்த்துக்கள் அண்ணா!!!!

Naseer from Dubai said...

i like your articles,

thanks

கன்கொன் || Kangon said...

// போடுங்கம்மா வோட்டு.. //

போட்டாச்சு போட்டாச்சு...

//அவரது அன்பைத் தட்ட முடியாமல் உரை ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தேன்.//

முதற்கட்டம் முதற்கட்டம்....
அடுத்த கட்டம் நீங்களே உங்களுக்கு எழுதுவது? :P


// 'கைதட்டலுக்கு சிறு இடைவெளி கொடுங்கள்' என்று தடித்த எழுத்துக்களில் எழுதிக் கொடுத்திருந்தேன்.
நம்ம ஆள் அதையும் சேர்த்து வாசித்திருக்கிறார்.. //

ஹா ஹா ஹா....
கஞ்சிபாய்கள், சிங்கப்பூர் சீலன்களை எல்லாம் ஒரே அடியில் தூக்கிக் கடாசிவிட்டார்...
விளங்கீரும்....


//மக்கள்ஸ் கொஞ்சம் யோசித்துப் பார்த்து செய்யுங்க.. ;) //

ஹா ஹா...
விளங்குது விளங்குது :P



பதிவுக்காகக் காத்திருக்கிறோம்... :)

வந்தியத்தேவன் said...

லோஷன் அரசியல் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக கால் வைக்கின்றீர்கள் போலிருக்கின்றது. வாழ்த்துக்கள்

நிரூஜா said...

எதிர்கால வடக்கின் வசந்தமே... வாழ்க்க... வழர்க உன் புகழ்...!
நக்கலுக்கு சொல்லேல்ல அண்ணா...!
உண்மையாவே நல்லோர் சிலராவது அரசியலுக்கு வரவேணும் என்ற அவா தான். :)

தமிழ் மதுரம் said...

நிரூஜா


எதிர்கால வடக்கின் வசந்தமே... வாழ்க்க... வழர்க உன் புகழ்...! //


கிழிஞ்சுது போங்கோ? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாவாம் ஆன்ரி!


யோ யாரது அது பின் வரிசையிலை இருந்து லோசனை உசுப்பி விடுறது? ஏன் லோசன் நல்லா இருக்கிறது யாருக்கும் பிடிக்கேல்லையோ?


வடக்கிற்கு எப்ப தான் வசந்தம் வருமோ?

Unknown said...

ஏண்ணே, சிங்களன் யாருக்காவது எழுதிக் குடுத்துட்டீங்களா??

அந்த எடத்துல ஏன் இப்பிடி வருதுன்னு யோசிக்கக் கூடவா முடியல?

எல்லா ஊர்லயும் அரசியல்வியாதிங்க ஒரே மாதிரி தான் இருக்குங்கபோல

Subankan said...

LMAO

//வந்தியத்தேவன்
லோஷன் அரசியல் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக கால் வைக்கின்றீர்கள் போலிருக்கின்றது. வாழ்த்துக்கள்
//

ஆமால்ல..., வாழ்த்துகள்

வேந்தன் said...

தேரை இழுத்து தெருவுல விடப்போறாங்க.... பார்த்து லோஷன்.
நல்லவேளை முற்றுப்புள்ளி, கமா, ஆச்சரியகுறி,.. என்று எதையும் சொல்லவில்லை

Anonymous said...

அண்ணா உங்களை சிலர் அரசியலுக்கு வர சொல்றார்கள். வேண்டாம் அந்த சனியன் பிடித்த சாக்கடை ...
நிம்மதியா வாழுங்க.
வடிவேல் ஸ்டைலில் சொல்வதென்றால் ..
போய் புள்ளைங்க இருந்த படிப்பிங்கையா...

ராகுலன்
மட்டகளப்பு

யோ வொய்ஸ் (யோகா) said...

அரசியலா நமக்கும் அதுக்கும் தூரமப்பா

Vijayakanth said...

கொஞ்சம் இடைவெளி விடுங்கன்னு சொன்ன இங்கிதம் கூட தெரியாமல் அரசியலுக்கு வர்றது நாட்டுக்கு வந்த கேடு....

இனி லோஷன் கிட்ட இப்டி கேடு வரக்கூடாதுன்னு சொல்லாம சொன்னது உங்க ஸ்டைலு .....

இதை வாசிச்சுட்டு சிரிக்கிறதா..சிந்திக்கிறதா...இல்லாட்டி அழுறதான்னு புரியாம முழிக்கிறது நம்ம விதி...!

Anonymous said...

நாம் நன்றாகவே யோசித்து விட்டோம் எலும்புத் துண்டங்களுக்காக இனமானத்தை விலைபேசி கூழைக் கும்பிடு போடும் முட்டாள்களுக்கோ அல்லது புத்திஜீவிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி அசிங்கப்படுபவர்களுக்கோ எங்கள் வாக்கு இல்லை. என்பதனை. அத்துடன் என் வீட்டு சுவரை அசிங்கபடுத்தும் கூட்டத்திற்கும இல்லை வோட்டு வேட்டுத்தான்.

யாழ்

ஈழச்சோழன் said...

லோசன்...இது முட்டாள்கள் தினத்துக்கான உங்கள் விசேட பதிப்பா...நான் ஒன்றும் முட்டாள் அல்ல இந்த கதையை நம்ப..........கி...கி...கி

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner