
முன்பு வாசித்த கதை ஒன்று...
எதிரே ஒரு பௌத்த துறவி வந்து கொண்டிருந்தார்.அவரைக் கண்டதுமே உடனடியாக ஓடிச்சென்று பணிவுடன் பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கினர் அசோகர்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு மனம் பொறுக்கவில்லை.ஒரு மாபெரும் சக்கரவர்த்தி ஒன்றுமில்லாத ஒரு துறவியின் பாதத்தில் விழுந்து வணங்குவதா என்று பொருமினார்.
அரண்மனை வந்தவுடன் மன்னருக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்."எத்தனை எத்தனை தேசம் வென்ற பெருமை மிகுந்த மணிமகுடம் தாங்கும் தங்கள் சிரம் யாரோ ஒரு பரதேசியின் காலில் படுவதா?" என்று வருத்தமும், அதிர்ப்தியும் கலந்த குரலில் சொன்னார் அமைச்சர்.
மன்னர் அசோகர் பதிலேதும் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தார். ஒரு சில நாட்களின் பின்னர் மன்னர் அமைச்சரை அழைத்தார்.
"அமைச்சரே, எனக்கு உடனடியாக மூன்று தலைகள் வேண்டும்.
ஒரு ஆட்டின் தலை, ஒரு கரடித்தலை, ஒரு மனிதத் தலை உடனடியாக கொண்டு வாருங்கள்" உத்தரவிடுகின்றார் அசோகர்.

கரடி வேட்டையாடப்பட்டு - கரடித்தலையும் தயார்.
மரண தண்டனைக் கைதி ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு மனிதத் தலையும் பெறப்பட்டது.
மன்னரிடம் அவர் கேட்டபடியே மூன்று தலைகளையும் கொண்டு போனார் அமைச்சர்.
அசோகச் சக்கரவர்த்தி "மிக நல்லது அமைச்சரே இப்போதே இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று சந்தையில் விற்று வாருங்கள்" என்று உத்தரவிடுகின்றார். (அப்போது மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேற வேலையே இருந்திருக்காது போல)
அமைச்சர் சந்தைக்கு மூன்று தலைகளோடும் போனார்.
ஆட்டின் தலை முதலில் விலை போனது.
கரடியின் தலையும் பாடம் பண்ணி வீட்டில் வைக்க என்று யாரோ ஒரு பந்தாக்காரர் வாங்கிப் போனார்.
மனிதத் தலையை மட்டும் வாங்குவார் யாருமில்லை; மாறாகப் பார்ப்பவர் எல்லோரும் அருவருப்புடனும் அச்சத்துடனும் விளகிப்போயினர்.
மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார் அமைச்சர்.
"சரி பரவாயில்லை மனிதத் தலையை மட்டும் இலவசமாகக் கொடுத்துப் பாருங்கள்" என்று சொன்னார் அசோகர்.
ம்ஹூம்...
யாரும் வாங்குவதாயில்லை.
மன்னர் இலவசமாகக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியும் கூட யாருமே வாங்குவதாயில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் அசோகச் சக்கரவர்த்தியிடம் சொல்கின்றார்.
பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை நினைவூட்டிய அசோகர், "பார்த்தீரா அமைச்சரே, உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்" என்று விளங்கினாராம் அசோகர்.
தலை பற்றித் தெரிந்து கொண்ட அமைச்சர் தலைகுனிந்து, தலையாட்டினாராம்.
வாசித்த பின் கொஞ்சநேரம் யோசித்து பார்த்தேன்,
அசோகர் சொன்னது சரி.
எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!
பி.கு-
எப்ப 'தல' அஜித் கலைஞர் கலந்து கொண்ட அவருக்கான பாராட்டு விழாவில் ஐயா என முறைப்பாட்டை முன்வைத்தாரோ, அன்றிலிருந்து தலயின் தலை உருளாத நாளில்லை என்று சொல்லலாம்..
ரஜினி கை தட்டியது,பின்னர் கலைஞரை சந்தித்தது ..
இப்போது அவருக்கு படங்கள் நடிக்க முடியாதவாறு தடையாம், எந்தவேளையிலும் கைதாவாராம் என்றெல்லாம் பரபரப்பு வேறு கிளம்பி இருக்கு.
கலைஞர் டிவி யிலும் முன்பு 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' விளம்பரத்தில் இசைஞானிக்கு அடுத்தபடியாக, விஜய்க்கு முதல் போடப்பட்டு வந்த அஜித்தின் பெயர் இப்போதெல்லாம் மிஸ்ஸிங்...
இன்று அந்நிகழ்ச்சியில் அவர் பேச்சும் கட்டா? பார்த்தவர்கள் சொல்லுங்கள்..
இதுக்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஜாகுவார் தங்கம் இவர்களின் தலைகளும் உருள்கின்றன.
எங்கு பார்த்தாலும் தல,தல என்றே பேச்சு இருக்கும் நேரத்தில் தான் தலையைப்பற்றிய என் முன்னைய பதிவொன்றும் ஞாபகம் வந்தது..
இன்று சனிக்கிழமையாதலால் அதை ரிப்பீட்டடடிக்கிறேன்.. :)
வாசிக்காதவர்கள் வாசிச்சுக்கொங்கோ.. வாசிச்சவங்க மறுபடி ஞாபகப்படுத்திக்கொங்கோ..
முக்கிய குறிப்பு -
இன்று காலமான இலங்கையின் பிரபல சகலதுறைக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களையும் கவலையுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
அவருடனான எனது ஞாபகப் பகிரலுக்கு நேரம் தேவைப்படுவதால் அதை திங்கள் பதிவிடுகிறேன்.
29 comments:
நல்ல கதை அண்ணா...
ஆழமான அர்த்தம்...
என்னைப் பொறுத்தவரை அஜித் கதைத்ததை வரவேற்கிறேன்.
கட்டாயப்படுத்தல் பிழையானது தானே...
பக்கத்திலிருந்து தடவிக் கொடுத்த பலருக்கு அஜித் இன் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பேதுமில்லை.
எனக்கு பொதுவாக அஜித்தைப் பிடிக்காது, எனினும் அந்தப் பேச்சிற்குப் பின்னர் அஜித் மீதான பார்வை மாறியிருக்கிறது.
ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானதை உங்கள் மூலம் தான் அறிகிறேன்.
ஆத்மா சாந்தி அடைவதாக...
மித்திரன் வாரமலரில் வாரந்த்தோறும் அவர் எழுதிய கட்டுரைகள் சுவாரசியமானவை. நல்ல கலைஞர் உண்மையில் இது ஒரு பேரிழப்புத்தான்.
ஜாகுவார் தங்கத்தின் தலை எங்கே உருள்கிறது அவர்தான் அவசியமில்லாமல் தன் பெயரை போட்டுக்கொள்ள கேவலமான அரசியல் செய்கிறார்.
அஜித்தை முதலில் இருந்தே பிடித்ததுக்கு காரணம் .உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோ அவர் தான்... வேட்டி கட்டின ஆம்பிளை
தமிழ் திரையுலகம் என்ன போரட்டங்கள் செய்தாலும் எந்த தீர்வும் கிடைக்க போவதில்லை அது உண்மை அதை உண்மையோடு ஒத்து கொண்டமைக்காக அஜித்தை பாராட்டலாம். அது தவிர தலை, தளபதி, புயல் என்று அடையாளபடுத்த இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழ் திரையுலகத்திற்கு என்னதான் செய்து விட்டார்கள் இவர்கள்??? சமூக, அரசியல் விடையங்களை அரசியல்வாதிகளே பார்த்து கொள்வார்கள் என்று சொன்னால் இவர்கள் அது சார்ந்த திரைப்படங்களை நடிக்க கூடாது அல்லது அதன் மையப் பொருள் கொண்டு சினிமா எடுக்க கூடாது. பணமும், சமூகத்தை திரையில் பிரதிபலிப்பதன் மூலம் ரசிகர்களை சம்பாதித்து கொள்ள முடியும் என்றால் அதற்காக பங்களிப்பும் செய்ய வேண்டும். எனது நண்பர் சொன்னது போல "
"தல, சமூக விசயங்கள், அரசியல் விசயங்களில "இன்டஸ்ட்ரி" ஈடுபடக்கூடாதெண்டு துணிஞ்சு கர்ஜித்தாய்! அந்த "இன்டஸ்ட்ரி" சமூகப்படங்கள், அரசியல் படங்களையும் எடுக்கக்கூடாதெண்டு ஒரு போடு போடமாட்டியா?"
//எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!//
உண்மைதான்! இப்போது கிடைக்கும் மேலதிக நேரத்தில் பௌத்தம் பற்றிப் படிக்கிறேன் - இவ்வருடம் முடியமுன் பௌத்தம் பற்றிய பதிவொன்று எழுதும் எண்ணமுண்டு!
கதை அருமை... மற்றப்படி இந்த சினிமா, தென்னிந்திய அரசியல் பற்றி சொல்வதற்கில்லை. என் கவலையெல்லாம் இந்தக் கேவலமான இந்திய அரசியல் கலாசாரம் இங்கும் தொற்றிக்கொண்டதுதான். இந்தியா என்ற அருமையான தேசத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசியல் கலாசாரம் இல்லையென்றால் இப்போது இந்தியா இன்னும் நல்ல நிலையில் இருந்திருக்கும்!
அண்ணா கதை சூப்பர், எனக்கு இன்றுதான் தெரியும், தலைக்கு மதிப்பில்லைத்தான், ஆனா கரடியாப்பிறந்திருந்தா திரும்பவும் மனுசன் குறூப் சோக்கேஸ்ல போய் மாட்டுப்படணும்..SO மனிதனே பரவாயில்ல...ஹிஹி
//எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை//
அரசியல் மாதிரிக்கிடக்கு, நோ கமண்ஸ்...
//இப்போது அவருக்கு படங்கள் நடிக்க முடியாதவாறு தடையாம்//
விஜய் ரசிகர்களே ஓடி வாங்கோ.. உங்களுக்கு இனிப்பான செய்தி..:p
//இதுக்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஜாகுவார் தங்கம் இவர்களின் தலைகளும் உருள்கின்றன.//
ஆமாம் அண்ணா ஜகுவார் தங்கத்தின் வீட்டை தல ரசிகர்கள் தாங்கினாங்களாமே..ஹிம்ம்
//இன்று காலமான இலங்கையின் பிரபல சகலதுறைக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களையும் கவலையுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.//
ஆம் நான் பாடசாலை போகும் போது அடிக்கடி கண்ணால் கண்ட கலைஞர்களில் ஒருவர்,
உங்கள் மூலம்தான் செய்தி அறிந்தேன்,
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...:(
புத்தரின் கதை சூப்பர். முந்தி எங்கயோ கேட்ட ஞாபகம்.
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி,
ஸ்ரீ அண்ணாவின் இழப்பு இலங்கைக் கலைத்துறைக்கு ஒரு பேரிழப்புத்தான்.
அஜித் பேசியது நியாயம் என்றாலும் ஏன் மற்றவர்கள் எல்லாம் மௌனமாக இருந்தனர் என்று விளங்கி கொள்ளவேண்டும் இப்ப கருணாநிதி காலில் விழுந்த பின்னாவது விளங்கும் என்று நினைக்கின்றேன்
//நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"//
இறுதியில் நிலையறிந்து தாழ்ந்தது தானே. ஆனால் நடந்தது மாறி.
உண்மையில் அஜித் ஒரு அப்பாவி.. என்ன கதைப்பது என்ன செய்வது என்ன நடிபப்து என்று தெரியாத ஒரு ஆஜானுபாகு.. முரளியின் கதையைப்பொல் அதையும் விடுவதை விடுத்து அவரைக்கைது செய்வதற்கு ஸ்கெட்ச் போடுவது திரு ஐயகோவின் தில்லாலங்கடி விளையாட்டுக்களில் ஒன்று.. எப்பிடித்தான் வெட்கம் கிட்கம் இல்லாமல் போய் கதிரை வழிய குந்தியிருக்கிறாரோ தெரியேல்ல.. ஏதொ செய்து துலையட்டும்.. சமயோசிதம் இல்லாமல் அரசிய்ல சினிமா ஊடகம் மூன்றிலும் தப்பிப்பிழைப்பது கடினம்.. அது ரஜினியிடமும் அஜித்திடமும் இல்லை.. நல்ல பதிவு.. தொடரந்து இப்படியான பதிவுகளை இடுங்கள்.. அசோகன் கதையை ரசித்தேன்..
அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே ஜீனா எண்டு ஒருக்கா செக் பண்ணிப்பாக்கோனும்.
//நல்ல பதிவு.. தொடரந்து இப்படியான பதிவுகளை இடுங்கள்//
றிப்பீட்டு
நேர்மையாவும் வெளிப்படையாவும் கதைக்கப்போய் தான் ஏற்கனவே ஊடகத்துக்கு பேட்டி குடுக்கிறதை தவிர்த்தார் நம்ம தல. இப்போ இன்னொரு சிக்கல். அவர் சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மையே. அரசியல் சாயம் இல்லாததால் கமல் இன்றும் நிலைக்கிறார். கட்சி துவங்கப்போகிறேன் என்று சொன்ன விஜய் வாங்கிக்கட்டிக்கொண்டார். ரஜினி ஒகேனக்கல் விவகாரத்தில ரொம்ப பாதிக்கப்பட்டார். எங்களுக்கு நடிகர்கள் தான் வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகள் அல்ல. கருத்தை தைரியமாக சொன்ன அஜித்துக்கு ஒரு சபாஷ். இப்படி விமர்சனம் வரும் என்று தெரியாமலா அஜித் பேசியிருப்பார். இதிலிருந்து அஜித்துக்கு எதிரா யார் யார் கூவுராங்களோ அவங்க தான் அஜித் குறிப்பிட்ட அழுத்தம் தருபவர்கள் என்று புரிஞ்சுக்கலாம்.
கலைஞர் டிவி அஜித்தை ஓரம் கட்டியது எனக்கும் புரிந்தது....அடுத்த சனிக்கிழமை பார்க்கலாம் உண்மையா இருட்டடிப்பு செய்யுறாங்களா என்று.....
ஸ்ரீதர் பிச்சையப்பாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்....!
அதெல்லாம் சரி!மேடையில் வீராவேசமாக பேசிவிட்டு அப்புறம் ஏன் தனியா கலைஞரை சந்திக்கிறார்? தமிழன்.. தமிழன்..என்று சொல்பவர்கள் கடைசியில் ஏன் ஜாதி சங்கங்களில் நுழைந்து கொள்கிறார்கள்?
நல்ல அர்தமுள்ள கதை முதலில் சொல்லப்பட்டது... //எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை// அண்ணா இப்ப காணுகிற நீங்க சொன்ன அறமுணர்ந்தவர்கள் எனப்படுபவர்கள் சிவகாமி சபத நாகநந்திகளே தான்..... மற்றது காலம் சென்ற சிறிதர் பிச்சையப்பா அவர்களின் இழப்பு... "அப்புறமென்ன" எனும் ஒரு புத்தகத்தில் அட்டைப்படமாக இவர் வரைந்திருந்த படத்தை இன்று தான் வவுனியா புத்தகக்கண்காட்சியில் பாரத்தேன்... சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் ..
தல எப்பவும் தல தான்.
என்றும் தல எதிலும் தல இன்றும் தல எப்பவும் தல
கன்கொன் || Kangon said...
நல்ல கதை அண்ணா...
ஆழமான அர்த்தம்...//
ம்ம் உண்மை..
என்னைப் பொறுத்தவரை அஜித் கதைத்ததை வரவேற்கிறேன்.
கட்டாயப்படுத்தல் பிழையானது தானே...//
இதுவும் சரியே..
பக்கத்திலிருந்து தடவிக் கொடுத்த பலருக்கு அஜித் இன் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பேதுமில்லை.//
அதே..
எனக்கு பொதுவாக அஜித்தைப் பிடிக்காது, எனினும் அந்தப் பேச்சிற்குப் பின்னர் அஜித் மீதான பார்வை மாறியிருக்கிறது.//
எனக்கு முன்பிருந்தே அவரது தன்னம்பிக்கை&விடாமுயற்சி பிடிக்கும்
ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானதை உங்கள் மூலம் தான் அறிகிறேன்.
ஆத்மா சாந்தி அடைவதாக...//
ம்ம்
தர்ஷன் said...
மித்திரன் வாரமலரில் வாரந்த்தோறும் அவர் எழுதிய கட்டுரைகள் சுவாரசியமானவை. நல்ல கலைஞர் உண்மையில் இது ஒரு பேரிழப்புத்தான்.//
உண்மை தான்.. அவருக்கும் தன்னைப் பேணிக்காத்துக்கொள்ளத் தெரியவில்லை.
ஜாகுவார் தங்கத்தின் தலை எங்கே உருள்கிறது அவர்தான் அவசியமில்லாமல் தன் பெயரை போட்டுக்கொள்ள கேவலமான அரசியல் செய்கிறார்.//
கேவலமான ஒருவர்.. முன்பு பாலியல் பலாத்கார வழக்கிலும் சிக்கி அரசியல் ஆதரவினால் தப்பியவர் தானே இவர்..
==================
S.Sudharshan said...
அஜித்தை முதலில் இருந்தே பிடித்ததுக்கு காரணம் .உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோ அவர் தான்... வேட்டி கட்டின ஆம்பிளை//
ஏற்றுக் கொள்கிறேன்
Anonymous said...
தமிழ் திரையுலகம் என்ன போரட்டங்கள் செய்தாலும் எந்த தீர்வும் கிடைக்க போவதில்லை அது உண்மை அதை உண்மையோடு ஒத்து கொண்டமைக்காக அஜித்தை பாராட்டலாம். அது தவிர தலை, தளபதி, புயல் என்று அடையாளபடுத்த இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழ் திரையுலகத்திற்கு என்னதான் செய்து விட்டார்கள் இவர்கள்??? சமூக, அரசியல் விடையங்களை அரசியல்வாதிகளே பார்த்து கொள்வார்கள் என்று சொன்னால் இவர்கள் அது சார்ந்த திரைப்படங்களை நடிக்க கூடாது அல்லது அதன் மையப் பொருள் கொண்டு சினிமா எடுக்க கூடாது. பணமும், சமூகத்தை திரையில் பிரதிபலிப்பதன் மூலம் ரசிகர்களை சம்பாதித்து கொள்ள முடியும் என்றால் அதற்காக பங்களிப்பும் செய்ய வேண்டும். எனது நண்பர் சொன்னது போல "
"தல, சமூக விசயங்கள், அரசியல் விசயங்களில "இன்டஸ்ட்ரி" ஈடுபடக்கூடாதெண்டு துணிஞ்சு கர்ஜித்தாய்! அந்த "இன்டஸ்ட்ரி" சமூகப்படங்கள், அரசியல் படங்களையும் எடுக்கக்கூடாதெண்டு ஒரு போடு போடமாட்டியா?"//
ஆகா அனானி.. தலக்கு இதை அனுப்பி விடுறேன்..
=============================
=======================
என்.கே.அஷோக்பரன் said...
//எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!//
உண்மைதான்! இப்போது கிடைக்கும் மேலதிக நேரத்தில் பௌத்தம் பற்றிப் படிக்கிறேன் - இவ்வருடம் முடியமுன் பௌத்தம் பற்றிய பதிவொன்று எழுதும் எண்ணமுண்டு!//
ஷா அருமை.. இதுக்குக் கூட நேரம் இருக்கா?
கதை அருமை... மற்றப்படி இந்த சினிமா, தென்னிந்திய அரசியல் பற்றி சொல்வதற்கில்லை. என் கவலையெல்லாம் இந்தக் கேவலமான இந்திய அரசியல் கலாசாரம் இங்கும் தொற்றிக்கொண்டதுதான். இந்தியா என்ற அருமையான தேசத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசியல் கலாசாரம் இல்லையென்றால் இப்போது இந்தியா இன்னும் நல்ல நிலையில் இருந்திருக்கும்!//
இல்லை அசோக் எங்கள் அரசியல் கலாசாரம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமானது.. ;) இந்தியாவில் காமெடி.. எங்கள் நாட்டிலோ கேவலம்..
Bavan said...
அண்ணா கதை சூப்பர், எனக்கு இன்றுதான் தெரியும், தலைக்கு மதிப்பில்லைத்தான், ஆனா கரடியாப்பிறந்திருந்தா திரும்பவும் மனுசன் குறூப் சோக்கேஸ்ல போய் மாட்டுப்படணும்..SO மனிதனே பரவாயில்ல...ஹிஹி//
ஹா ஹா.. எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய் பாவிப்பயலே..
//எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை//
அரசியல் மாதிரிக்கிடக்கு, நோ கமண்ஸ்...//
நல்ல கதை.. இப்படி இளைஞர் எல்லாம் விலகிப் போனால் எப்படி ஒரு அரசியல் மாற்றத்தை எங்கள் நாட்டில் ஏற்படுத்துவது?
//இப்போது அவருக்கு படங்கள் நடிக்க முடியாதவாறு தடையாம்//
விஜய் ரசிகர்களே ஓடி வாங்கோ.. உங்களுக்கு இனிப்பான செய்தி..:p //
அதுதான் அடுத்ததா வரோ வந்திருக்காரே. ;)
//இன்று காலமான இலங்கையின் பிரபல சகலதுறைக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்களையும் கவலையுடன் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.//
ஆம் நான் பாடசாலை போகும் போது அடிக்கடி கண்ணால் கண்ட கலைஞர்களில் ஒருவர்,
உங்கள் மூலம்தான் செய்தி அறிந்தேன்,
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...:(//
ம்ம்ம்
//இப்படி இளைஞர் எல்லாம் விலகிப் போனால் எப்படி ஒரு அரசியல் மாற்றத்தை எங்கள் நாட்டில் ஏற்படுத்துவது?//
அண்ணா!
உங்களுக்கு 25 வயசு தானே? இளைஞர் தானே? நீங்கள் ஏன் மாற்றத்த ஏற்படுத்தக்கூடாது? :P
நீங்கள் இறங்குங்கோ...
நீங்களும் இளைஞர் தான்.... :D
VARO said...
புத்தரின் கதை சூப்பர். முந்தி எங்கயோ கேட்ட ஞாபகம்.
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி,//
அதான் நான் முன்பு இட்ட பதிவு.. ;)
ஸ்ரீ அண்ணாவின் இழப்பு இலங்கைக் கலைத்துறைக்கு ஒரு பேரிழப்புத்தான்.//
உண்மை..
==============
Anonymous said...
அஜித் பேசியது நியாயம் என்றாலும் ஏன் மற்றவர்கள் எல்லாம் மௌனமாக இருந்தனர் என்று விளங்கி கொள்ளவேண்டும் இப்ப கருணாநிதி காலில் விழுந்த பின்னாவது விளங்கும் என்று நினைக்கின்றேன்//
உண்மை தான்.. கலைஞர் யாரு?
அம்மணமான ஊரில் இவர் என் கோவணம் உடுத்தார்? அப்படித் தானே கேக்குறீங்க அனானி? ;)
===================
archchana said...
//நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"//
இறுதியில் நிலையறிந்து தாழ்ந்தது தானே. ஆனால் நடந்தது மாறி.//
ம்ம்ம்ம் எங்கள் நாடு எல்லாவற்றிலும் விதிவிலக்கு தானே..
புல்லட் said...
உண்மையில் அஜித் ஒரு அப்பாவி.. என்ன கதைப்பது என்ன செய்வது என்ன நடிபப்து என்று தெரியாத ஒரு ஆஜானுபாகு.. முரளியின் கதையைப்பொல் அதையும் விடுவதை விடுத்து அவரைக்கைது செய்வதற்கு ஸ்கெட்ச் போடுவது திரு ஐயகோவின் தில்லாலங்கடி விளையாட்டுக்களில் ஒன்று.. எப்பிடித்தான் வெட்கம் கிட்கம் இல்லாமல் போய் கதிரை வழிய குந்தியிருக்கிறாரோ தெரியேல்ல.. ஏதொ செய்து துலையட்டும்.. சமயோசிதம் இல்லாமல் அரசிய்ல சினிமா ஊடகம் மூன்றிலும் தப்பிப்பிழைப்பது கடினம்.. அது ரஜினியிடமும் அஜித்திடமும் இல்லை..//
உண்மை தான் புல்லட்.. அரசியலில் சமாளிக்க கபடமும்,சந்தர்ப்பவாதமும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். வெளிப்படை,வெகுளிப் பேச்சுக்கள் வீழ்த்திக் கவிழ்த்துவிடும்..
தன்னை வாழ்த்திப் பாடி ஆடி மன்னவனே,கிண்ணவனே எனப் போற்றிப் புகழப்படும் விழாக்களில் வெட்கமில்லாமல் குந்தி இருப்பதில் இருந்தே கலைஞர் மீதான கொஞ்சநஞ்ச மதிப்பும் அகன்றுவிட்டது.
நல்ல பதிவு.. தொடரந்து இப்படியான பதிவுகளை இடுங்கள்.. அசோகன் கதையை ரசித்தேன்..//
நன்றி புல்லட். கிரிக்கட் தவிர எது எழுதினாலும் தங்களுக்குப் பிடிக்குமே.. ;)
====================
Subankan said...
அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே ஜீனா எண்டு ஒருக்கா செக் பண்ணிப்பாக்கோனும்.//
ஆமாங்கோவ்.. அவர் மஞ்சள் துண்டு.. நம்மவர் சிவப்பு துண்டு.. அவ்வளோ தான்.. ;)
//நல்ல பதிவு.. தொடரந்து இப்படியான பதிவுகளை இடுங்கள்//
றிப்பீட்டு//
நன்றீ
Vijayakanth said...
நேர்மையாவும் வெளிப்படையாவும் கதைக்கப்போய் தான் ஏற்கனவே ஊடகத்துக்கு பேட்டி குடுக்கிறதை தவிர்த்தார் நம்ம தல. இப்போ இன்னொரு சிக்கல். அவர் சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மையே. அரசியல் சாயம் இல்லாததால் கமல் இன்றும் நிலைக்கிறார். கட்சி துவங்கப்போகிறேன் என்று சொன்ன விஜய் வாங்கிக்கட்டிக்கொண்டார். ரஜினி ஒகேனக்கல் விவகாரத்தில ரொம்ப பாதிக்கப்பட்டார். எங்களுக்கு நடிகர்கள் தான் வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகள் அல்ல. கருத்தை தைரியமாக சொன்ன அஜித்துக்கு ஒரு சபாஷ். இப்படி விமர்சனம் வரும் என்று தெரியாமலா அஜித் பேசியிருப்பார். இதிலிருந்து அஜித்துக்கு எதிரா யார் யார் கூவுராங்களோ அவங்க தான் அஜித் குறிப்பிட்ட அழுத்தம் தருபவர்கள் என்று புரிஞ்சுக்கலாம்.//
ஆமாமா.. ஆனால் திமுகவும், முகவும் நடத்தும் துவேஷ போராட்டங்களைக் கேட்கவே வெறுப்பாக இருக்கிறது..
கலைஞர் டிவி அஜித்தை ஓரம் கட்டியது எனக்கும் புரிந்தது....அடுத்த சனிக்கிழமை பார்க்கலாம் உண்மையா இருட்டடிப்பு செய்யுறாங்களா என்று.....//
ம்ம்ம் பார்த்து சொல்லுங்கள்.
ஸ்ரீதர் பிச்சையப்பாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்....!//
ம்ம்
===============
இளங்கோ said...
அதெல்லாம் சரி!மேடையில் வீராவேசமாக பேசிவிட்டு அப்புறம் ஏன் தனியா கலைஞரை சந்திக்கிறார்? தமிழன்.. தமிழன்..என்று சொல்பவர்கள் கடைசியில் ஏன் ஜாதி சங்கங்களில் நுழைந்து கொள்கிறார்கள்?
February 21, 2010 1:13 PM
இலங்கன் said...
நல்ல அர்தமுள்ள கதை முதலில் சொல்லப்பட்டது... //எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை// அண்ணா இப்ப காணுகிற நீங்க சொன்ன அறமுணர்ந்தவர்கள் எனப்படுபவர்கள் சிவகாமி சபத நாகநந்திகளே தான்.....//
ஆகா நல்லதொரு உதாரணம்
மற்றது காலம் சென்ற சிறிதர் பிச்சையப்பா அவர்களின் இழப்பு... "அப்புறமென்ன" எனும் ஒரு புத்தகத்தில் அட்டைப்படமாக இவர் வரைந்திருந்த படத்தை இன்று தான் வவுனியா புத்தகக்கண்காட்சியில் பாரத்தேன்... சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் ..//
உண்மை.. ஒரு நல்ல சகலதுறையாளர்..
இளங்கோ said...
அதெல்லாம் சரி!மேடையில் வீராவேசமாக பேசிவிட்டு அப்புறம் ஏன் தனியா கலைஞரை சந்திக்கிறார்? //
வேறு வழி? கலைஞன் (கலைஞர் அல்ல) என்றால் எப்போதும் உணர்ச்சிவசப்படுபவன்.. ஆனால் தனி மனிதனாக வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது பயப்படுகிறான்..
தமிழன்.. தமிழன்..என்று சொல்பவர்கள் கடைசியில் ஏன் ஜாதி சங்கங்களில் நுழைந்து கொள்கிறார்கள்?//
தங்களை அடையாளப்படுத்தவும் ஆபத்திலிருந்து தப்பவும்..
கன்கொன் || Kangon said...
//இப்படி இளைஞர் எல்லாம் விலகிப் போனால் எப்படி ஒரு அரசியல் மாற்றத்தை எங்கள் நாட்டில் ஏற்படுத்துவது?//
அண்ணா!
உங்களுக்கு 25 வயசு தானே? இளைஞர் தானே? நீங்கள் ஏன் மாற்றத்த ஏற்படுத்தக்கூடாது? :P
நீங்கள் இறங்குங்கோ...
நீங்களும் இளைஞர் தான்.... :த//
சிந்து கபெக்கோ, எம்.சீக்கோ கொப்பிட்டால் வருவேன் தானே.. இதுக்காக இப்படியா?
நேற்றுக் குடிச்ச ஐஸ்க்ரீமுக்கே லைட்டா தடிமன் வந்து வாட்டுது.. ;)
ajtith suparman
ஸ்ரீதர் பிச்சையப்பா ஆத்மா சாந்தியடைவதாக....
அஜித் பாவம் உண்மை பேசியதற்கு இப்படி தண்டனை இதுதான் கலைஞர் ஆட்சி..
///அண்ணா!
உங்களுக்கு 25 வயசு தானே? இளைஞர் தானே? நீங்கள் ஏன் மாற்றத்த ஏற்படுத்தக்கூடாது?////
நியாயமான கேள்விதானே அண்ணா???
உங்களைப்போல் சமூக அக்கறை உள்ளவர்களால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்,,,
உங்களை பின்தொடர எத்தனையோ இளையர்கள் தயாராக உள்ளனர்,,,
அண்ணா,,
தல யை எனக்கு பிடிக்க முக்கிய காரணமே தல ஒரு நல்ல மனிதர் என்பதுதான்,,
இப்போ சதீசன் போன்ற விஜய்யின் தீவிர ரசிகர்கள் கூட தல க்கு மரியாதை கொடுப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது,,,
Post a Comment