February 02, 2010

பெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியும்ஞாயிறு இரு முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தன..

ரோஜர் பெடரரின் ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் வெற்றி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தானுக்கேதிரான 5-௦௦௦௦௦0 என்ற அபார வெற்றி

பெடரர் தனது 16 ஆவது கிராண்ட் ஸ்லாமை வென்றெடுத்த விதம் அருமை & இலகுவான எளிமை.
பிரித்தானிய வீரர் அண்டி மறேயை நேரடி செட்களில் வீழ்த்தியது ஏதோ தன் சட்டையில் பட்ட தூசியை லாவகமாக,பெரிய முயற்சிகள் எதுவுமின்றி செயற்பட்டது போலிருந்தது.

பாவம் மறே.. தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு வந்தும் மீண்டும் தோல்வி..
76 ஆண்டுகளாக பிரித்தானிய மக்கள் தங்கள் நாட்டின் ஆண்மகன் ஒருவர் பெற்றுத் தரப்போகின்ற கிராண்ட் ஸ்லாமுக்காக காத்துள்ளார்கள்.

நடால்,ஜோகோவிக், ஹெவிட் போன்ற பெரிய தலைகள் எல்லாம் வீழ்ந்தபிறகு பெடரருக்கு ஆஸ்திரேலிய பகிரங்கப் பட்டம் இலகுவாக வந்துவிடும் என்று ஓரளவுக்கு தெரிந்தே இருந்தாலும், இறுதிப் போட்டி இத்தனை இலகுவாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.


கடந்த வருட ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கிய பெடரர் இந்தப் புதுவருடத்தின் முதல் ஸ்லாமில் வழமைக்குத் திரும்பி இருப்பதும், எந்த திக்கல்,திணறல் இல்லாமல் வென்றதும் மகிழ்ச்சியாக உள்ளது.

பெண்கள் பிரிவில் வழமையாகப் பட்டம் வெல்பவர்களில் ஒருவரான செரெனா வில்லியம்ஸ் இம்முறை பட்டத்தை வென்றாலும் (இது இவரது ஐந்தாவது ஆஸ்திரேலியப் பட்டம்) இறுதிப் போட்டியில் மிக விறுவிறுப்பு.இவரை இறுதியில் சந்தித்த ஜஸ்டின் ஹெனினும் இவரும் கிராண்ட் ஸ்லாம் போட்டியொன்றின் இறுதிப் போட்டியில் மோதிய முதல் சந்தர்ப்பம் இது தானாம்.

இவை எல்லாவற்றையும் விட சுவாரஸ்யம், இரு சீன வீராங்கனைகள் - நா லி, ஜி செங் ஆகியோர் அரையிறுதி வரை வந்தது. ஆசியாவின் இருவீராங்கனைகள் ஒரே கிராண்ட் ஸ்லாமின் காலிறுதிவரை வந்ததே இது தான் முதல் தடவை.

சிங்கார சீன வீராங்கனைகள்
மேலே ஜி செங்
கீழே நா லி

துடிப்பான,வேகமான அந்த இரு சீனிகளுக்கும்(சீனருக்குப் பெண் பால்??? ;p ) மனமார்ந்த வாழ்த்துக்கள்.இருவரில் ஒருவராவது இறுதிக்கு வருவார்கள் என்று கொஞ்சம் அதிகப்படியாகவே எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.

============ ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ===============

பெர்த்தில் இடம்பெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது white wash வெற்றியைப் பெற்றுள்ளது.
எனினும் ஆஸ்திரேலியாவின் அரிய பெரும் சாதனையை விட அப்ரிடி பந்து கடித்த சர்ச்சையே பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டுள்ளது.

வழமையாக ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் செய்கின்ற அணி வீரர்களின் சுழற்சியை (team rotation) இம்முறை கொஞ்சம் குறைத்துக் கொண்டமையே இந்த 5-௦ 0 வெற்றிக்கான முதல் காரணமாக நான் காண்கிறேன்.

குறிப்பாக இம்முறை அணியின் துடுப்பாட்ட வரிசை தேவையில்லாமல் மாற்றி முக்கிய வீரர்களுக்கு ஓய்வுகொடுக்கவில்லை.

இதனால் பொன்டிங்,ஹசி,மார்ஷ்,கிளார்க் போன்றவர்கள் தங்கள் formஐ நீடித்துக் கொள்ளவும்,பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.
அதிலும் கமெரோன் வைட் தனித்து மிளிர்ந்தார்.

இந்த தொடர்ச்சியான பெறுபேறுகள் வைட்டுக்கு நான் முன்பொரு பதிவில் சொன்னதுபோல எதிர்வரும் ட்வென்டி ட்வென்டி போட்டிக்கான ஆஸ்திரேலிய உப தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளன. கிளார்க் கொஞ்சம் சறுக்கினாலும், பிராந்தியப் போட்டிகளில் விக்டோரியா அணியின் வெற்றிகள் மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ள வைட் தலைவராவார்.

லீ,பிராக்கன் போன்றோர் காயமுற்று ஒதுங்கியிருக்கின்ற இக்கட்டான நேரத்தில், பின்னர் அண்மைக்கால முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான போலின்ஜர்,ஜோன்சன் ஆகியோர் சிறு உபாதைகளால் ஓய்வெடுக்கும் நேரத்திலும், எங்கிருந்தோ வந்து அதிரடியாக தம்மை வெளிப்படுத்துகிறார்கள் எம காதகர்கள்..

ரயன் ஹரிஸ், கிளின்ட் மக்கெய் இப்படி அடுக்கடுக்காக உள்ளே வருபவர்களும் எதிரணிகளை உருட்டுவதைப் பார்க்கையில் ஆஸ்திரேலிய உள்ளகக் கிரிக்கெட் கட்டமைப்பின் உறுதி விளங்குகிறது.

ஹரிஸ் அடுத்தடுத்த இரு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்கள், இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுக்கள்.. இவை போதாதா தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்க?
ஐந்தாவது போட்டியில் மக்கெய் நான்கு விக்கெட்டுக்கள்..

இது போதாதற்கு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இவரும் சுழல் பந்துவீச்சாளர எனக் கேலிசெய்த பாகிஸ்தானியரை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் உருட்டி எடுத்து அவரவர் முகங்களில் கரிபூசிய ஹோரிட்ஸ், ஒருநாள் தொடரிலும் சிறப்பாகவே பந்துவீசியதோடு,நான்காவது போட்டியில் அதிரடி அரைச் சதம் (நான்கு சிக்ஸர்களோடு.. என்ன அடி அது) ஒன்றையும் பெற்று போட்டியோன்றையே மாற்றி இருந்தார்.

இப்போது ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் அடுத்த ட்வென்டி 20 உலகக் கிண்ணத்தைக் குறிவைத்து தமது ட்வென்டி 20 அணியைத் தேர்வு செய்துள்ளார்கள்.புது,இள ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதோடு,ட்வென்டி 20 ஸ்பெஷலிஸ்ட்களான டேவிட் ஹசி,டேர்க் நனேஸ்,டேவிட் வோர்னர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

மறுபக்கம் எதிர்முகாம் பாகிஸ்தானுக்கு எதுவுமே சரியா இல்லை.
தலைவரை மாற்றிப் பார்த்தார்கள். தலைவிதி மாறவில்லை.
விக்கெட் காப்பாளரை மாற்றிப் பார்த்தார்கள். அக்மலுக்கு பந்துகள் கையில் பிடிபடவில்லை.புதியவர் சப்ராசுக்கு துடுப்பால் ஓட்டங்கள் பெறமுடியாமல் உள்ளது.

அப்ரிடி தலைவராக வந்தார்.. வந்த வேகத்தில் தடை வாங்கிக் கொண்டு போயுள்ளார்.

பழைய பானையே நல்லா சமைக்கும் என்பதுபோல மீண்டும் ஷொயிப் மாலிக்.. திருந்த மாட்டார்கள்.

இதுக்குள்ளே காயங்கள் காரணமாக சிறப்பாக விளையாடிவந்த ஆமீரையும் இழந்துவிட்டார்கள்.
விளையாடவந்து கொஞ்ச நாளிலேயே நிரந்தர இடம் பிடித்துக் கொண்ட உமர் அக்மல் மீது இப்போதே சந்தேகங்கள்.உமர் தனக்காகவும், தன அண்ணனுக்காகவுமே விளையாடுகிறார் என்று..
உண்மையா தெரியவில்லை.

இப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் போனால், தரப்படுத்தலில் கடைசியாக இணைந்துகொண்ட ஆப்கானிஸ்தானும் வெகுவிரைவில் பாகிஸ்தானை முந்திவிடும்.


இந்த ஐந்தாவது போட்டியில் இன்னுமொரு சம்பவமும் இடம்பெற்றது.. ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வந்து பாகிஸ்தானிய வீரர் காலித் லதீப் மீது பாய்ந்த சம்பவம்.நல்லவேளை லத்தீபுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.

அந்த காட்டுமிராண்டி ரசிகருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆயுட்காலத்துக்கு அவர் ஆஸ்திரேலியாவின் எந்தவொரு மைதானத்திலும் நுழைய முடியாது.

ஆனால் இன்னும் மைதானப் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படவேண்டும்.
தண்டனைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.


பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ரக்பி
காட்டுமிராண்டியும் காலீத் லதீபும்


====================^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^=================

இலங்கையில் மூன்று வெளிநாடுகள் இப்போது மோதி வருகின்றன...
உடனடியாக உங்கள் அரசியல் தூரப் பார்வையில் அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளை நீங்கள் யோசித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை.

ஆப்கானிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவும், தமக்கிடையிலான (இலங்கை A அணியும் விளையாடுகிற)ட்வென்டி 20 கிண்ணப் போட்டி ஒன்றில் விளையாடவும் இலங்கை வந்திருப்பதையுமே சொன்னேன்.
இலங்கையில் உள்ளவர்கள் இலவசமாக இந்தப் போட்டிகளைப் போய்ப் பார்க்கலாம்.

சில போட்டிகள் பிரபலமான அணிகள் விளையாடுவதைவிட விறுவிறுப்பாக இருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் வீரர்களின் கடும் முயற்சிகளும்,துரித வளர்ச்சியும் பார்க்க ஆசையாகவும், அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது.


ஸ்பெஷல் அப்ரிடி கார்ட்டூன்..

CARTOON FROM CRICINFO

இந்தப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம் - ஆயிரத்தில் ஒருவன் நேற்று பார்த்தேன். அது பற்றி அடுத்து எழுதவுள்ளேன்.


8 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

என்னுடைய பேவரிட் நடால் முன்னரே போட்டியிலிருந்து வெளியேறியது கவலையான விடயம்..

அவுஸ்திரேலியாவின் கிரிக்கட் உள்ளக கட்டமைப்பின் உறுதி அவர்களது 19வயதிற்கு உட்பட்ட வீரர்களின் போராட்ட குணத்தின் மூலம் தெரிய வந்தது.

balavasakan said...

என்ன தான் இருநாதலும் நடால் கொஞ்ச காலமாக காயத்தால் அவதிப்படுகிறார் மீண்டுவந்தால்தான் பெரடர்க்கு நல்ல போட்டி கொடுப்பார்...

நம்ம செரபோவா அக்கா என்ன பண்ணுறார் ரென்னிஸ்ஸயே மறந்திட்டாரோ...ஓ.ஓ.ஓ.ஓ.ஓ..

புல்லட் said...

ஆயிரத்தில் ஒருவன் பார்த்தது பற்றி வாசிக்க ஆவலாயுள்ளேன்..:-)

கன்கொன் || Kangon said...

பெடரர் - தலைவர் வாழ்க...
தலைவர் மீண்டும் form இற்கு....

அவுஸ்ரேலியா வாழ்க...
அண்ணா ஒரு விடயம்,
துடுப்பாட்ட வரிசை தான் மாற்றப்படவில்லை...
4 வெவ்வேறு விதமான ஆரம்பப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்தார்கள், அவை ஒவ்வொன்றும் அவர்களுக்கு வெற்றியையே தந்திருந்தன...

அப்ரிடி திடீரென்று நகைச்சுவையாளன் ஆகிவிட்டார்...

முத்தரப்பு...
விளையாடட்டும்...

ஆயிரத்தில் ஒருவன்! எழுதுங்கள்...
அனுதாபங்களும்... ;)
(எந்த வளம் எழுதினாலும் மறுதரப்பினர் வந்து கும்மப் போவத உறுதி... ஹி ஹி....)


அதுசரி,
இந்த நூடில்ஸ், சூப் அப்படி ஏதும் பெயர் வைக்க முடியாதா?
'சூப்' அசத்தல், 'நூடில்ஸ்' கலக்கல் என்று இலகுவாகச் சொல்லலாம் என்று சொல்ல வந்தேன்... :P

யோ வொய்ஸ் (யோகா) said...

நூடில்ஸ் என என்னை வம்புக்கு இழுத்த கன்கொன்னை வன்மையாக கண்டிக்கிறேன்...

Prapa said...

எல்லாம் சரி லோஸ் ,,,
இன்னுமொரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறான்... வெளியில சொல்ல வேணாம்...
ரோஜர் பெடரருக்கு நான்தான் டென்னிஸ் விளையாட சொல்லிகொடுத்தன் ... ( நான் கேட்டு கொண்டதற்கு இணங்கத்தான் அதனை அவர் வெளியில சொல்றதில்ல ...)... நீங்க வெளியில சொல்லி போடாதீங்க...

Nimalesh said...

Love to watch the OZ cricket... they r the best......

Vijayakanth said...

waiting for 1/1000
SINGHATHUKKU VAYASU PONAALUM VETTAIYAADI THAAN SAAPPIDUM!

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified