.jpg)
தேர்தல் ஆணையாளரால் வெற்றியாளருக்கு வாழ்த்து..
நல்லா சிரிக்கிறாங்கப்பா..
ஜனாதிபதித் தேர்தல் முடிந்தது.
மீண்டும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார்.
வடக்குத் தமிழர்கள் புறக்கணித்த 2005 தேர்தலில் மிக சொற்ப வாக்குகளால் வென்றவர். இம்முறை (வடக்குத் தமிழர்கள் பலபேர் பலவிதமாக வாக்களிக்க மறுக்கப்பட்ட நிலையிலும்) 19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரு வெற்றியீட்டியுள்ளார்.
அரசுக்கு எதிரான – பொன்சேகா ஆதரவு அலை மிக வலுவாக வீசுகிறது என்று பரவலாக நம்பப்பட்டு, அரச தரப்பு அமைச்சர்களே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையிலும் தப்பித்தவறி மகிந்த மீண்டும் வென்றாலும் அது மிக சொற்ப சதவீதத்தாலோ அல்லது மீள் எண்ணுகையாலோ மட்டுமே சாத்தியம் எனக்கருதப்பட்ட நிலையில் இந்தப் பாரிய வெற்றி அனைவருக்குமே ஆச்சரியம் தந்துள்ளது.

புல்லட்டின் பதிவிலிருந்து சுட்டபடம்..
புல்லட்டின் நச் கமென்ட்
பச்சை பொன்சேகா வென்ற இடங்கள் .. நீலம் மஹிந்த வென்ற இடங்கள்..
பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது... :P
எந்தவித மோசடிகளுமில்லாத வாக்களிப்பு எனச்சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையாளரும் நீதியும் சுதந்திரமுமான தேர்தல் என்றுள்ளார். ஜனாதிபதியையும் அரசையும் கடுமையாக விமர்சித்து வந்த பல ஊடகங்களும் மிகச்சொற்ப முனுமுனுப்புக்களோடு அமைதியாகிவிட்டன.
மகிந்த அரசின் மீது எப்போதுமே எதிர்ப்பு, திருப்தியின்மை காட்டி வரும் தமிழ் பேசும் பிரதேசங்களில் படுதோல்வி கண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ (வடகிழக்கு மட்டுமல்ல, நுவர எலிய, கொழும்பில் தமிழ் பேசும் பிரதேசங்களிலும் தான்) மற்றைய இடங்களிலெல்லாம் அதற்கெல்லாம் பலமடங்கு வாக்குகளை குவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளும், தோற்றுப்போன ஜெனரல் சரத் பொன்சேகாவும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்றும் கூக்குரல் எழுப்புவதைத் தோற்றுப்போனவர்களில் ஏமாற்றப் புலம்பல் என்று இலகுவாகத் தட்டிக்கழித்துவிட்டாலும்
சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
இப்போது ஒவ்வொரு பக்கத்தால் கிளம்பும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இன்னும் பல சந்தேகங்களை எழுப்பலாம்
1.தேர்தலுக்கு முந்திய வாரம் வரை வந்த சகல கருத்துக்கணிப்புக்களும் தலைகீழாகப் பொய்த்துப் போனது எவ்வாறு?
2. ரணில் விக்ரமசிங்க 2005இல் பெற்றதைவிட, அவரைவிட அதிகளவு ஆதரவும், வரவேற்பும் பெற்றவராகக் கருதப்பட்ட, சரத் பொன்சேகா இம்முறை குறைவாக வாக்குகள் பெற்றது எப்படி?
3. தேர்தலுக்கு முதல்நாள் கூட அரச ஆதரவு ஊடகங்கள், அரசாங்கம், அரச ஆதரவுக் கட்சிகள் முறைகேடாக நடப்பதாகவும், நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முடியாது தடையாக இருப்பதாகவும், தான் பொறுமையை இழந்துவிட்டதாகவும் கடுமையாகக் கவலை தெரிவித்து, இந்தக்காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு - இது நீதியாகவும் சுதந்திரமாகவும் நடந்த தேர்தல் என அமைதியாகவும் கூறியது ஏன்?

4.அப்படியிருந்தும் அவர் இன்னும் பதவி விலகும் முடிவை மாற்றாததும், அதற்காக அவர் குறிப்பிட்ட காரணங்களை இன்னும் மாற்றாமைக்கும் என்ன காரணம்?
5.தேர்தல் ஆணையாளர் பற்றி இடை நடுவே எழுந்த பல்வேறு பரபரப்புக்கள்,அவரது கையெழுத்துக் குழப்பம் பற்றி இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லையே?
6.இம்முறை தேர்தல் முடிவுகளை வெளியிட்ட முறை மாற்றப்பட்டது ஏன்?
7.அதிகாலையிலேயே வெளியிட்டிருக்கப்படக்கூடிய பல முடிவுகள் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்பட்டமைக்கான காரணம் எது?
வழமையாக ஆளும் தரப்புக்கு சாதகமான முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் ஆளும் தரப்பு தோல்வியுற்ற முடிவுகள் வெளியிடப்படுவது வழமை தானெனினும் இம்முறை பல குழப்பங்களை இது ஏற்படுத்தியது.

தேர்தல்கள் செயலகத்தால் அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு ஒன்று
8.தமிழர்கள் ஒருவரேனும் இருப்பது சந்தேகமான பிபிலை, மொனராகலை, மஹியங்கனை, தென் மாகாணத்தின்,சபரகமுவா மாகாணத்தின் பல இடங்களில் சிவாஜிலிங்கத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது எப்படி? சிங்களவர் இனபேதம் மறந்து சிவாஜியாரைத் தெரிவு செய்தனரா?
9.வன்னி மாவட்டம், யாழ்ப்பாண மாவட்டம் போன்ற சிங்களவர் அரிதான மிக அரிதான இடங்களில் கூட சீலரத்ன தேரருக்கும், மகிமன் ரஞ்சித், அச்சல சுரவீர போன்றோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்தது எப்படி?
10.அத்துடன் தபால் வாக்குகள் தவிர ஏனைய எல்லா வாக்குப் பதிவுகளிலும் ஒரு வேட்பாளருக்கும் ஒரு வாக்கேனும் கிடைக்காமல் போகவில்லையே? அது எப்படி?
11.இம்முறை சரத் போன்செக்காவுக்கு தேர்தலில் கிடைத்த வாக்குகள்
மகிந்த அரசுக்கு எதிரான வாக்குகளா?
பொன்சேகாவுக்கு ஆதரவான வாக்குகளா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,முஸ்லிம் காங்கிரசும் கேட்டதற்காக மக்கள் அவர்களைத் தம் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொடுத்த வாக்குகளா?
12.கணினிமயப்படுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுற்றம் சுமத்துவது போல செய்ய இயலுமா? அவ்வாறு செய்யப்பட்ட மோசடி நிரூபிக்கப்பட்டால் (எப்படி நிரூபிக்கலாம் என்பது இன்னொரு சந்தேகம்) மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா அல்லது உண்மையான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியில் மாற்றம் வருமா?
13.மறுபக்கம் தமிழ்பேசும் மக்களின் வாக்குகள் பெரியளவில் இல்லாமலேயே மீண்டும் அசுர பலத்தோடு பதவியேற்கும் ஜனாதிபதி தமிழ் பேசுவோரைக் கவர நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தமிழில் பேசுவதை இனிக் குறைத்து தமக்கு வாக்களித்தோரை மட்டும் கவனிக்கப் போகிறாரா?
14.நேற்று இந்தியாவின் NDTV தொலைக்க்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி ஒரு விஷயம் சொன்னார் " தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வு என்னிட்ம் இருக்கிறது. எனினும் அதை பெரும்பான்மையானவர்களான சிங்களவரின் சம்மதத்துடனேயே வழங்கவேண்டும். எனவே பெரும்பான்மையினரின் சார்பாக சிந்தித்தே அது பற்றி நடவடிக்கை உள்ளேன்" .. அப்படியானால் 13வது திருத்த சட்டத்துக்கு மேலாக எதுவுமே நடக்காதோ?
15.தன்னுடன் சேர்ந்திருக்கும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள்,கட்சிகள் பெற்றுத் தராத சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதற்காக அதிக மக்கள் ஆதரவு பெற்ற ஏனைய சிறுபான்மைக் கட்சிகளை ஜனாதிபதி நாடுவாரா?
இதெல்லாம் அரசியலில் அப்பாவியான எனக்கு வந்த சந்தேகங்கள்..
உங்களையெல்லாம் விட்டால் யார் உள்ளார்கள்? தெரிந்தவர்கள்,தெளிந்தவர்கள் (தீர்த்துக்கட்டாமல்) தீர்த்துவைக்கலாம்..
31 comments:
yoosikka vendiya visayam thaan
அந்தப்படம்...
அகராதியில் இல்லாத "சிறுபான்மை" வாக்களித்தபின் இலங்கைப் படத்தில்...
துணைக்குப் புல்லட் வருவான்... எனக்கு உங்களை யாரென்று தெரியாது. :P
உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையாலும், மரியாதையாலும் கடந்த பதிவைக் கண்டு மிகவும் நொந்து போயிருந்தோம்.. உங்களுக்கும் தேர்தல் ஆணையாளரைப் போல ஏதாவது அழுத்தங்கள் இருந்திருக்குமோ என்று சிந்திக்கத் தள்ளப்பட்டோம்... எனினும் இந்தப் பதிவில் நீங்கள் சந்தேகங்களாக விட்டுச் சென்றவையின் அடிப்படையில் அவ்வாறான ஒரு நிலையில் நீங்கள் இல்லை என்று உணர முடிகின்றது...
என்னிடம் தனிப்பட்ட ரீதியிழ்க் கேட்டால் நான் இதில் தமிழ் சமூகம் வடக்கு கிழக்கு பகுதியிலும் நுவரெலியாவிலும் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எமது நலன் குறித்தே சிந்திப்பேன்...
மேலும் எனது ஜனாதிபதித் தேர்தல்!!!! முடிவுகள் சொல்லும் செய்திகள்... என்ற பதிவில் தீர்வுத்திட்டம் பற்றி எனக்குத் தெரிந்த அரசியல் மொழியில் பேசியுள்ளேன்... உங்கள் சந்தேகங்களுடன் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தேர்தல் தொடர்பான கருத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது ஏதோ ஒன்று நமக்குத் தெரியாமல் நடைபெற்றுள்ளது என்றே தோன்றுகிறது..
அய்யா எத்தினை பல்டிதான் அடிப்பீங்க? இபப்டி அஞ்சாறு நிமிச்த்துக்கொருக்கா மாறி மாறி தவ்விக்கிட்டிருந்தா நாம என்ன பண்ணுறது? :P
கேள்விகள் நியாயமானதுதான்..
நான் சில காரணங்கள் வைத்துள்ளேன்.. முதலாவது சந்திரிகாவின் ஆதரவு சில வேளை எதிர்ப்புகளை தோற்றுவித்திருக்கலாம்.. ஏனெனில் ஹரி ஜெயவர்த்தனாவுக்கு குறைந்த காசில் சிறிலங்கா இன்சுரன்சை விற்றமை மற்றும் துறைமுகத்தில் ஒரு இடத்தை மலிவாக விற்றமை என்று ஊழல்கள் அவர் மீது நிருபிக்கப்பட்டபோது பல முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அசூயைப்பட்டதை அவதானித்திருக்கிறேன்.. இரண்டாவது அந்த முசம்மில் விவகாரம்.. ஆயுத ஊழல் பொன்சேகா செய்திருப்பாரோ என்று பலர் ஐயப்பட்டதை பார்த்தேன்.. கடைசி அந்த வாக்குரிமை இல்லாத குழப்பம்.. அரச ஊடகங்கள் செய்த திருக்கூத்தில் மதியம் 3-4 ஓட்டு எதுவும் சரத்துக்கு விழுந்திருக்காது.. சீலரத்னா மகிமத் கதைகளெல்லாம் நம்ம அறிவுக்கொழுந்துகள் கடமைக்கு குத்தும் போது ஏற்பட்டிருக்க கூடியவை என்று கருதினாலும் எண்ணிக்கை அதிகமாக காட்டப்படுவது கொஞ்சம் சிந்திப்பதற்குரியது..
2005 ஆம் ஆண்டு உயர்தர பரிட்சை கெமிஸ்ரி பேப்பர் மீள கையால் திருத்தப்பட்டது.. காரணம் கண்ணி திருத்தலில் ஏற்பட்ட குறைகளை கண்டுபிடித்தமை.. ஆனால் அதை உத்தரவிட்டதே ஜனாதிபதி மஹிந்ததான்.. இங்கு அப்படி உத்தரவிட சரத்துக்கு அதிகாரம் இல்லை.. என்னத்தை செய்ய..
என்ன இரந்தாலும் எதிர்காலத்தில் பச்சை நீலமாகுதோ சிவப்பாகுதோ என்னவானாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படுறமாதிரி நாடாளுமன்ற வாக்குகளை அளியுங்கள் மக்களே..
லோசன் அண்ணா..வணக்கம் அண்ணே... என்ன..??? இலங்கையில தேர்தல் நடந்தததா என்ன சொல்றீங்க...???
என்னைப்பொறுத்தவரை சூதாட்டத்தால் முடிவு நிர்ணயிக்கப்பட்ட கிரிக்கட் போட்டி போல தேர்தல் மாறிவிட்டது......
வாக்களித்த நாம் கோமாளிகலாக்கப்பட்டமை தான் வருத்தம்......
இதை நீங்கள் பிரசுரிப்பீர்களோ தெரியாது.....பிரசுரிக்க உங்களுக்கேதும் பின்மண்டையை பாதுகாக்கும் பிரச்சனை இருக்கலாம்....!
சிறிய கடைகளில் கூட பாதுகாப்பு காமிராக்கள் நோட்டம் விடும் இந்தக்காலத்தில் வாக்கெண்ணும் நிலையங்களில் அவ்வாறான பாதுகாப்பு இன்னும் அமுல்படுத்தப்படாமைக்கு காரணம் என்னவோ?
எது எப்படியோ...இனி அரங்கேறப்போகும் பொதுத்தேர்தல் நாடகத்தில் நான் கோமாளியாகப்போவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்......
எனது மிகப்பெரிய கவலை நம் நாட்டு ஊடகவியலாளர்களை பற்றித்தான்....பாவம் அந்த சுவிஸ் நாட்டு பொண்ணு...அதுக்கு நம்ம நாட்டோட நிலை சரியா தெரியலை போல...!
நீங்களும் ஜாக்கிரதை அண்ணா.....!
ஏனெனில் மஹிந்த மேன்மை பொரிந்தியவர்...
வேலணை சிதைச்ச சிங்கம்....
சிதைக்க முன்னம் ஒரு இரண்டு நிமிஷம் கதைச்சிருப்பாரோ.... அந்தளிண்ட மூளை எல்லாம் அப்படியே நிக்குது...
வேல்லோனும் எண்டுறது தான் போலீசி... எப்பிடி எண்டெல்லாம் இல்ல.............
நீங்கள் இருக்கிற இடம் கொஞ்சம் ஆபத்தான இடமில்லையோ?கேள்வியெல்லம் நல்ல கேள்வி தான்,ஆனா ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டினம்!ஏனெண்டால்,உங்கட கேள்விக்குள்ளயே பதிலும் இருக்கு!!புல்லட் சொன்ன மாதிரி எங்கையோ பாத்த இடம் மாதிரி இருக்கெண்டது சரியில்லை!இப்பவும் அந்த இடம் அப்பிடியே தானிருக்கு!என்ன,முந்திய மாதிரி சுதந்திரமா போகேலாது!!!
நீங்கள் இருக்கிற இடம் கொஞ்சம் ஆபத்தான இடமில்லையோ?கேள்வியெல்லம் நல்ல கேள்வி தான்,ஆனா ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டினம்!ஏனெண்டால்,உங்கட கேள்விக்குள்ளயே பதிலும் இருக்கு!!புல்லட் சொன்ன மாதிரி எங்கையோ பாத்த இடம் மாதிரி இருக்கெண்டது சரியில்லை!இப்பவும் அந்த இடம் அப்பிடியே தானிருக்கு!என்ன,முந்திய மாதிரி சுதந்திரமா போகேலாது!!!
விடை தெரியாதது............ ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல
இதற்கு முதல் அண்மையில் அவர் பெற்ற வெற்றிக்கு பின்னாலுள்ள சந்தேகங்களிற்கும் தான்...
நச்சென்ற கேள்விகள் நல்லாயிருக்கு. இதுபற்றி எனது தளத்தில் 'தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளி வாய்க்கால் தொடர்ச்சியா? ' என்ற தலைப்பில் சில முக்கிய விடயங்களை எழுதியிருக்கிறேன். அதையும் கொஞ்சம் பாருங்கள்.
நல்லவேளை நான் ஒட்டு போட்டு முட்டாள் ஆகாவில்லை, மல்லாக்க படுத்து இருந்து ஜோசித்தால் சிலவேளை விடை கிடைக்கலாம்
" வடக்குத் தமிழர்கள் புறக்கணித்த 2005 தேர்தலில்......"
" இம்முறை (வடக்குத் தமிழர்கள் பலபேர் பலவிதமாக வாக்களிக்க மறுக்கப்பட்ட நிலையிலும்..........".
உங்களுடைய முதலாவது கூற்றில் 2005 ம் ஆண்டு தமிழர்கள் ஏதோ தாமாக விரும்பி வாக்களிக்காமல் விட்டது போலவும் இப்போதைய தேர்தலில் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டது போலவும் எழுதப்பட்டுள்ளது. அதாவது முதலாவது வாக்கியத்தை செய்வினையிலும் இரண்டாவது வாக்கியத்தை செயற்பாட்டு வினையிலும் எழுதியுள்ளீர்கள்! இவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்கள் எமக்கு விளங்காதா என்ன? அதிலும்
"அரசியலில் அப்பாவியான எனக்கு....."
என்று விபரிப்பு வேறு! 2005 லும் நாம் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டோம்.இது உலகறிந்த உண்மை ! உங்ளுக்கு மட்டும் எப்படி விளங்காமல் போனது? 2002.04.10 இன்னும் பசுமரத்தாணிபோல நெஞ்சில இருக்குது போல!
//இதெல்லாம் அரசியலில் அப்பாவியான எனக்கு வந்த சந்தேகங்கள்//
எனக்கும்தான். தீர்த்துவைக்கப்போவோரின் பதிலுக்காக இந்தப்பின்னூட்டம்
Super post
Mayooran
//தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,முஸ்லிம் காங்கிரசும் கேட்டதற்காக மக்கள் அவர்களைத் தம் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொடுத்த வாக்குகளா?//
முஸ்லிம் காங்கிரசும் - Yes
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் - am nt sure
ஆமா யாரு நீங்க?
..
Anonymous said..
// என்று விபரிப்பு வேறு! 2005 லும் நாம் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டோம்.இது உலகறிந்த உண்மை ! உங்ளுக்கு மட்டும் எப்படி விளங்காமல் போனது? 2002.04.10 இன்னும் பசுமரத்தாணிபோல நெஞ்சில இருக்குது போல!//
2005 இல் வன்னியில் இருந்த நான் சொல்லுகிறேன் .நாம் தேர்தலை புறக்கணித்தோம்.இது உலகறிந்த உண்மை ! உங்ளுக்கு மட்டும் எப்படி விளங்காமல் போனது?
2005ல் தமிழ் மக்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டார்கள் யாரால் என்பதும் உலகறிந்த உண்மைகள்.
நீங்கள் இருந்த அதேவன்னிக்குள்தான் நானும் இருந்தேன்.அதுவும் கிளிநொச்சியில். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேணும்.சரி நீங்களாகவே தீர்மானித்து வாக்களிக்காமல் விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.வன்னியில் ஒரு சனமும் வாக்களிக்கவில்லையே!அது எப்படி?ஏன் வன்னிச் சனம் அவ்வளவு ஒற்றுமையா?எல்லோரும் ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களா?கிராமம் கிராமமாக "அவர்களின்" பொறுப்பாளர்மார் கூட்டம் வைத்து சொல்லவில்லையா..." ரணில் ஒரு குள்ளநரி.சண்டையையும் தொடக்கமாட்டார்.தீர்வும் தரமாட்டார்.மகிந்த வந்தால் கட்டாயம் சண்டைதொடங்கும்.தமிழீழம் மலரும்.எனவே யாரும் வாக்களிக்காதீர்கள்" என்று!அவர்கள் சொல்லித்தான் (மிரட்டித்தான்) சனம் வாக்களிக்காமல் விட்டது என்பதே மாபெரும் உண்மையாகும்.விட்டால் வன்னியில் "கட்டாய ஆட்சேர்ப்பு நடைபெறவே இல்லை.துரத்தி துரத்தி குஞ்சு குருமன்களை அவர்கள் பிடிக்கவேயில்லை. எல்லோரும் விரும்பித்தான் இயக்கத்துக்குப் போனார்கள்" என்றெல்லாம் சொல்வீர்கள்போல! யாருக்கு காது குத்துகிறீர்கள்? வெளிநாட்டுச் சனங்களின்ர வருத்தம் உங்களுக்கும் தொத்தீற்றுது போல!
இதற்குமேலும் நான் சொல்வது பொய் என அர்ச்சனா சொல்வாராக இருந்தால் வாசகர்கள் கீழ்வரும் லிங்கை கிளிக் பண்ணிப் பார்க்கவும்.புலித்தேவன் என்ன சொல்கிறார் என்று!
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16341
பின்னூட்டங்கள் சுவாரசியமாக உள்ளன...
சந்தேகங்கள் எல்லாம் எனக்கும் வந்தது தான், ஆனா பாருங்கோ பின்மண்டைக்கு ஆப்பு வரக்கூடாது...
ஒருத்தரும் விடை சொல்லுற மாதிரி தெரியேல.
யாராவது சொல்லுங்கப்பா...
//யோ வொய்ஸ் (யோகா)
ஆமா யாரு நீங்க? //
lol.... ROFL...
லோசன் அவர்கள் எழுப்பிய அத்தனை சந்தேகங்களுக்கும் நான் விடை தருகிறேன்.கொஞ்சம் வேலையிருப்பதால் சில மணித்தியாலங்களின் பின் எனது பின்னூட்டம் வரும்!
kindal pannathinga anna sri lanka vula yenga anna president election nadanthathe...?????
இது OK...
Anonymous said...//...//
வாக்களிக்காமல் தடுக்கப்பட்டோமா இல்லையா இதுதானே விடயம் அதற்கேன் வன்னிச் சனத்தின் ஒற்றுமையையும் கட்டாய ஆட்சேர்ப்பையும் இதற்குள் கொண்டு வருகிறீர்கள் கூட்டம் போட்டு தங்கள் கருத்தை முன்வைப்பது அவரவர் உரிமை.அதனை தீர்மானிப்பது நாங்கள்.ஐக்கிய தேசிய கட்சி மகிந்தவிற்கு போடாதே சரத்திற்கு போடு என்று கூட்டம் போட்டு தங்கள் கருத்தை சொல்லவில்லையா? விட்டால் நீங்கள் எல்லோருக்கும் காது குத்துவிங்க போலுள்ளது. எனக்கு,எனது குடும்பத்திற்கு ,எனது அலுவலக நண்பர்களுக்கு வாக்களிக்க பிடிக்கவில்லை. அதனால் வாக்களிக்கவில்லை. எங்களை யாரும் மிரட்டவில்லை.இதுதான் என் கருத்து. உங்கள் கருத்தை எங்கள் எல்லோர் சார்பாகவும் நீங்கள் சொல்வது பிழை. (நீங்கள் எங்கள் ஏக பிரதிநிதி அல்ல.ஆனால் நீங்கள் குறிப்பிட்டவர் ஒரு காலத்தில் எங்களின் ஏக பிரதிநிதியாக இருந்திருக்கலாம்.)
வணக்கம் லோசன்.தொடர்ந்து அனோனிமசாக பலர் உலாவருவதால் " சத்தியவான் " என்ற புனைபெயரில் ( மேலே அர்ச்சனாவின் கேள்விக்கு பதிலளித்தவன்) தொடர்ந்து எழுதுகிறேன்.
இடம் ஒதுக்கி பின்னூட்டங்களை பதிவேற்றி வருவதால் உங்களுக்கு முதலில் நன்றிகள்.
சரி இனி விடயத்துக்கு வருவம்.....
தேர்தலில் சனாதிபதி மீண்டும் வென்றமை பற்றி நீங்கள் பலகேள்விகளை எழுப்பியுள்ளீர்கள்! சிலகேள்விகளுக்கு விடை சொல்வது கடினம்தான்.இவற்றுக்கான விடைகளைக் கண்டறிந்து இப்ப என்னதான் செய்யப் போகிறீர்கள்? நீங்கள் வசிப்பதும் தேர்தல் நடந்ததும் ஆசிய நாடொன்றில் என்பதை மறக்கவேண்டாம். நீங்கள் யூரோப்பில் இருந்தால் பறவாயில்லை.இப்படியான அறிவுபூர்வமான கேள்விகளெல்லாம்கேட்டு அதற்கான விடையையும் பெறலாம்.ஆசிய நாடுகளுக்கே உரித்தான சில பண்புகளில் இருந்து இலங்கை மட்டும் விலக வேண்டும் என எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவராத் தெரியல? " இடைத்தேர்தலில் 200 இடங்களில் முன்னிலையில் வருவோம்" என்று தமிழகத்தில் மு.க.அழகிரி அறிக்கை விடுவதில்லையா?அதெப்பிடி தேர்தலுக்கு முன்பே இப்படிச் சொல்கிறீர்கள்? என்று யாராவது கேட்கிறார்களா? இல்லைத்தானே! அது மாதிரித்தான் இதுவும்.அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா!
பக்கத்துவீட்டுக்காரர் "சண்டையில வெல்லுறதுக்கு மட்டும்தான் உதவிசெய்வோம்" என்று சொன்னார்களா? இல்லைத்தானே!தேர்தலில் வெல்லவும் ஏதாவது ஐடியாக் குடுத்திருப்பார்கள்.ஏனென்றால் அங்குதான் " ஐடியா மணிகள் " இருக்கிறார்களே!
தவிரவும் " ஒன்றே குலம் ஒருவனே தேவன் " என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல், ஆளுக்கொரு மதத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நாங்கள், உலகத்தில் எங்குமே இல்லாத "ஏகப்பிரதிநித்துவக் கோட்பாட்டை" ஆதரித்தது எப்படி? "அவர்" மட்டும்தான் "தலைவர்" மற்றவர்கள் எல்லோரும் "துரோகிகள்" என்று ஒட்டுமொத்த தமிழினமே தீர்மானித்ததாமே ? அதெப்பிடி? 2006 காலப்பகுதியில் வன்னியிலுள்ள அத்தனை கிராமம மக்களுமே
" தலைவா பொறுத்தது போதும்.பொங்கி எழு!. தலைவா இனியும் பொறுக்க முடியாது ஆணையிடு. போரைத் தொடக்கு" என்றெல்லாம் கடிதத்துக்கு மேல் கடிதம் போட்டார்களாமே? இணையத்தளங்களில் படிக்கவில்லையா? ஒரே நாளில் பத்தாயிரம் பேர் திரண்டு வந்து எங்களுக்கு ஆயுதப் பயிற்சி தாங்கோ தாங்கோ என்று புதுக்குடியிருப்பு மாலதி கிரவுண்டில் அடம்பிடித்ததாக செய்திகள் வரும்போது அதெல்லாம் உண்மையா என்று ஆராயாமல் ஏற்றுக் கொள்ள இடம் கொடுக்கும் எம் மனது, 19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வென்றதை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுத்து, கேள்விக் கணைகள் தொடுப்பது ஏன்? அரசியல்ல இதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாதப்பா!
யாருமே பதிலளிக்க விரும்பாததால் சரி நானாவது என்னால் முடிந்தளவுக்கு யோசிப்போம் என்று நம்புகிறேன்....
1. கருத்துக்கணிப்பு -
மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் எத்தனை கருத்துக்கணிப்புகள் கிராமங்களில் உட்சென்று எடுக்கப்பட்டன என்பது சந்தேகத்திற்கு உரியது.
பொதுவாக கருத்துக்கணிப்புகள் மக்களின் உண்மையான கருத்துக்களைப் பிரதிபலிப்பதில்லை என்பது என் கருத்து.
2. பொதுவாக ஒரு கட்சிக்கு இருக்கும் நிரந்தர வாக்குகளைத்தவிர கடைசிநேர முடிவெடுக்கும் வாக்குகளும் உண்டு.
அந்த நேரத்தில் சமாதானத்தை நம்பிய சிங்கள மக்கள் ரணிலுக்கு வாக்களித்திருக்கலாம்.
இப்போது போர்வெற்றியின் பின்னர் அவர்கள் மஹிந்தர் பக்கம் சாய்ந்திருக்கலாம்.
2005 இல் மஹிந்தருக்கு இருந்த ஆதரவை விட இப்போது பலமடங்கு ஆதரவு உண்டு என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
3. தேர்தலன்று அமைதியாக வாக்களிப்பு நடந்தது என்று சொல்லியிருப்பாரோ?
ரணில் கூட 'அமைதியான தேர்தல்' என்று சொல்லியிருந்த ஞாபகம்?
அதேன்?
என்றாலும் இந்த சந்தேகம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. :)
4. சந்தேகம் வலிதானது. ஏற்றுக் கொள்ளப்படுகிறது. :)
தயானந்த திசாநாயக்கா எங்கிருந்தாலும் உடனடியாக இங்கு வரவும்.
5. 4 ஆவதற்குரிய விடை திரும்ப அளிக்கப்படுகிறது.
6. 4 ஆவதற்கான விடை.
7. அது சாதாரண அரசியலாக இருக்கலாம்.
நன்றாகப் பிந்தி வெளியிட்ட முடிவுகளில் சரத் இற்கு ஆதரவானவை பெரிதாக வாக்களிப்பு நடக்காத இடங்கள் அதிகமாக இடங்களாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
என்றாலும் சந்தேகம் ஓரளவுக்கு வலிதானது. :)
8. மொனாராகலை மாவட்டத்தில் 3.3 வீதமானவர்கள் தமிழர்கள்.
அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
கொஞ்சப் பேராவது பிபிலை, மொனாராகலை தேர்தல் தொகுதிகளில் இருக்க மாட்டார்களா?
உதாரணமாக,
மஹியங்கனையில் சிவாஜயியருக்கு 35 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் 2005 இல் தமிழர்களுக்கு தமிழீழம் கொடுப்பேன் என்ற மாதிரியாக பிரச்சாரம் செய்த விக்டர் ஹெட்டிக்கொட 79 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
பிபிலையில்,
சிவாஜி - 23
விக்ரர் - 56..
இப்படி அங்கும் வாக்குகள் கிடைக்கின்றன.
ஆகவே அங்கும் தமிழர்களுக்கு ஆதரவான வாக்குகள் இருக்கின்றன அண்ணா.
9. உதைக்கிறது தான்... அதுவும் 3000, 3000 என்று பெற்றிருக்கிறார்கள்.
வலிதான சந்தேகம். :)
10. அது ச்சும்மா காசுக்கு யாரும் போட்டிருப்பாங்க அண்ணா...
11. என்னைக் கேட்டால் அரசுக்கெதிரான வாக்குகள் 'மாற்றம்' என்ற சொல் கொடுத்த உந்துதல் காரணமாக சரத் இற்குச் சென்றன என்பேன்.
த.தே.கூ இற்கு இப்போது பழைய அளவு ஆதரவு இருக்கும் என்று நம்பவில்லை.
12. எதுவும் முடியுமென்பேன்.
ஆனால் மஹிந்த அரசு விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்த ஆதாரம் உண்டென்று நிறைய நாட்களாக புலம்பிய ஐ.தே.க இன்னும் அவற்றை மக்களிடம் சமர்ப்பிக்காமை அவர்கள் இம்முறை இதையும் செய்வார்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.
அப்படி பணம் கொடுத்த ஆதாரம் இருந்திருந்தால் முன்பிருந்த எத்தனையோ தேர்தல்களில் பயன்படுத்தியிருப்பார்களே?
அதைப் போல் தான் இதுவோ?
13. நிச்சயம் புறக்கணிப்புகள் இருக்கும்.
சாதாரண மனிதர்கள் யாரும் இந்த உணர்வுக்கு கட்டுப்பட்டவர்கள்.
இப்போது ஏ-9 பாதையில் சோதனை இருக்கிறதாம். நான் போய் வரும்போது இருக்கவில்லை. தேர்தலின் பின்னர் தொடங்கிய நடவடிக்கையோ தெரியவில்லை.
14. இனி அவர் கொடுப்பதைத்தான் நாம் ஏற்க வேண்டி கட்டாயம்.
என்ன செய்கிறார் பார்ப்போம்.
என்றாலும் 13ம் திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்ல தான் தயாராக இருப்பதாக இதே NDTV இற்கு சில காலங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தார்.
15. நாடினாலும் த.தே.கூ சேராது.
மற்றையது த.தே.கூ இற்கு ஆதரவு இருக்கிறதா என்பது சந்தேகம்.
மலையகக் கட்சிகளை நாடலாம்.
முஸ்லிம் கொங்ரஸ் இணைய வாய்ப்புக்கள் இல்லை.
இவை அனைத்தையும் சொன்னாலும் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டின என்பது என் தாழ்மையான கருத்து.
ம்... தொடங்கட்டும்....
விவாதங்கள் தொடர்ந்து வரட்டும்.
வணக்கம் நண்பர்களே! மீண்டும் "சத்தியவான்".
அர்ச்சனா அவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வி!கண்டிப்பா பதில் சொல்லுங்கம்மா!
2005 தேர்தலில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் அலுவலக வாக்களிக்கப் பிடிக்காததனால் வாக்களிக்கவில்லை.ஓ.கே. இதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.ஒருவேளை யாருக்காவது வாக்களிக்க நீங்கள் விரும்பியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? முகமாலையிலும் ஓமந்தையிலும் அமைக்கப்பட்டிருந்த கொத்தணி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உங்களால் வாக்களிக்க முடிந்திருக்குமா?
லோசன்! அரசியலில் மேலும் ஆழமான தேடல் உங்களுக்கு வேணும் என்றால் http://www.plote.org/othersites.php?sscate_id=2018 எனும் முகவரியில் திரு.நிலாந்தன் அவர்களுடைய கட்டுரை ஒன்று உள்ளது.அவசியம் படிக்கவும்.நிலாந்தன் அவர்களை உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன்.சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற Hiru ஒன்றுகூடலுக்கு வந்தவர்.
Sathyavan said... // நான் வாக்களிக்க நினைத்திருந்தால் அரச அலுவலர் என்ற ரீதியில் தபால் மூலமே வாக்களித்திருக்கலாம். ஆனால் நான் விரும்பவில்லை. எப்பவும் மாற்றத்தினை எதிர்பார்ப்பது மனித இயல்பு. இதனை விட வன்னியில் தாங்கள் கூறிய ஏக பிரதிநிதித்துவ கோட்பாடு 2006 ம் ஆண்டு ஐப்பசி மாதத்திற்கு முன்னர் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. நிலாந்தனின் ஆக்கத்தை ஏற்கனவே நானும் வாசித்து விட்டேன் . அதிலிருந்து தங்களுக்கு தற்போதைய நிலைமை தெரியவில்லையா? அவர் 2009 இற்கு முன் எவ்வாறான ஆக்கங்கள் எழுதியவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.(அரசியலில் ஆழ்ந்த தேடலிற்காக அதனை படிக்க தேவையில்லை. அதில் தற்போதைய நிலைமை மற்றும் இறுதிநேரத்தில் நாம் பட்ட கஷ்டங்களை அனுபவித்து உண்மையாகவே எழுதியுள்ளார்.) தாங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அந்த எழுத்தில் வந்ததை விட அதிகமான வலியை யுத்தத்தின் மூலம் நானும் உணர்ந்து கொண்டிருக்கிறேன். தங்களிடம் பணிவான வேண்டுகோள் ஒன்று... கோழிக்கு எத்தனை கால் என்று கேட்டால் மாட்டிற்கு நாலுகால் என்ற ரீதியில் உதாரணம் சொல்வதை தவிர்க்கலாம். சந்தர்ப்பவாதயிசம் என்பதை பிழை என்று நான் சொல்லவில்லை..
harae loshan baiya,
hamara kya bole?
this is Sri Lanka and 'Mahinda's Sri Lanka' - It is all common here!
Post a Comment