அண்மைக்காலமாக எனக்கு 'இலங்கையின் உண்மைத்தமிழன்' என்று பட்டமே கொடுத்துவிட்டார்கள் இங்கேயுள்ள பதிவுலகத் தங்கங்கள்.
ஏதாவது அரசியலா எல்லாம் யோசிக்காதீங்கோ..
உ.த அண்ணாச்சி மாதிரி ரொம்ப நீள,நீளமாக பதிவுகளை நீட்டுகிறேன் என்பது தான் காரணமாம்.
என்ன செய்வது, ஏதாவது எழுதவென்று அமர்ந்தால் நினைத்த அத்தனை விஷயங்களையும் அறிந்த, சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களையும் கொட்டாவிட்டால் மனம் ஆறுதில்லையே...
பதிவுகள் நீண்டதால் எனது ஓடைகளிலும்(feeds) பெரும் பிரச்சினை ஏற்பட்டும் தமிழ்மணம் திரட்டியில் பதிவுகள் சேர்க்க முடியாமல், என்னுடைய பல நண்பர்கள்,வாசகர்கள் வாசிக்க முடியாமல் நிறைய சிக்கல் எல்லாம் ஏற்பட்டு, நண்பர்கள் பலரின் ஆலோசனையால் எல்லா சிக்கல்களையும் மூன்று நாட்கள் போராடி இன்று தான் தீர்த்தேன்.
முக்கியமாக நன்றிகள் கங்கோன் கனக கோபிக்கு.
இந்த சிக்கலால் தான் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் எனக்கு தெரியவந்தது.. ஓடைகள் மூலமாக என் பதிவுகளை 510 பேர் வாசிக்கிறார்களாம். அட.. :)
பதிவுகள் நீளமாவதால் வாசிப்போர் குறைந்ததாக இதுவரை தெரியவில்லை. அப்படியா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா..மாற முயல்கிறேன்.. ;)
நான் உண்மைத்தமிழன் இல்லை என நிரூபிக்க இன்றைய 'சிறிய' பதிவு..

நாளை ஜனாதிபதி தேர்தல்.. மாறுமா மாறாதா என்பதே கேள்வி..
மாறாதைய்யா மாறாது என்கிறது அண்மைய நிலவரம்.
மாற்ற நினைத்தால் மாற்றலாம் எனும் நம்பிக்கை எல்லோருக்கும் இருக்குமோ தெரியாது..
வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது..
நாளை வாக்களிப்பின்போது இன்னும் மோசமாகும் என நினைக்கிறேன்.
பாவம் அப்பாவி மக்கள் & வாக்காளர்கள்.
ஏற்கெனவே லட்சக் கணக்கானோருக்கு வாக்காளர் அட்டைகளும், அடையாள அட்டைகளும் கிடைக்கவில்லையாம்.
மோசடி வாக்குகள்,வாக்குப் பெட்டிகள் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன.
புதன் கிழமை பொது,வங்கி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.. வர்த்தக விடுமுறை இல்லையாம்..
தேர்தல் ஒலிபரப்பு என்றாலே எனக்கு இருக்கும் உற்சாகமும் இம்முறை தேர்தல் ஆணையகத்தால் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளால் கொஞ்சம் வடிந்துபோயுள்ளது.
மிச்சச் சொச்சங்களை சொல்றதுக்குத் தான் செய்தி தளங்களும், வானொலிகள்,பத்திரிகைகளும் இருக்கே..
அன்பான இலங்கை மக்களே.. வாக்கு உள்ளோர்.. ஏதோ பார்த்து பொறுப்பா, மனசாட்சிப்படி, எதிர்காலத்தையும் சிந்தித்து வாக்களியுங்கோ..
பின்மண்டையில் சேதம் வராமல் பக்குவமா நடந்து கொள்ளுங்கோ..
என்னுடைய 'சிறிய' பதிவை முடிக்கு முன்..
அண்மையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் செம நக்கல் திரைப்படமான (இனித் தான் வெளிவர இருக்கும்) 'தமிழ்ப்படம்' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்..
நம் நாட்டு தேர்தல் சூழ்நிலையில் யாரோ ஒருவருக்கு பிரசாரப்பாடல் போலவும் இருக்கு..
கொஞ்சம் அவதானமாக வரிகளைக் கேட்டு ரசியுங்களேன்..
இந்தப்பாடல் இயற்றியவரும், பாடியவரும் சம்பந்தப்பட்டவர்களுமே இதுக்கெல்லாம் பொறுப்பு..
மீண்டும் அடித்து சொல்கிறேன்..
நான் உண்மைத்தமிழன் அல்ல..
26 comments:
v badly need change hope it will
தலைப்பே சும்மா ரெறரா இருக்கே...
ஹி ஹி....
//எதிர்காலத்தையும் சிந்தித்து வாக்களியுங்கோ..//
அப்ப நீங்கள் வளமான எதிர்காலமோ? #பின்னூட்டத்தில் வந்து ஆப்படிப்போர் சங்கம்
நீங்கள் உண்மைத் தமிழன் எண்டு ஏற்றுக் கொள்றன்....
(அதாவது சின்னப் பதிவும் போடுறீங்க எண்டுறன்.... ;) )
நானும் மாறாதது மாற்றம் என்ற சொல் மட்டுமில்ல நீல வர்ணமும் என்கிறேன்....
பார்ப்போம்...
தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் இம்முறை எப்படி இருக்கும் அண்ணா?
(பொறுத்திருந்து பாருங்கள் எண்டுவீங்களோ? )
நன்றிக்கு நன்றிகள்...
எல்லாம் கூகிளாண்டவர் செயல்... ;)
பாடல் அருமை...
உள்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து எல்லாம் கிடக்குது.... :)
//மீண்டும் அடித்து சொல்கிறேன்..
நான் உண்மைத்தமிழன் அல்ல..//
அதை நீங்க சொல்லப்படாது. நாங்கதான் சொல்லணும்.
anna, ungal pathivugal sirappaha iruppathaal neelamaaha iruppathe nallathu. don't short............ -shan-akurana-
அப்போ இந்த தடவை வெற்றில தேர்தல் ஒலிபரப்பு இல்லையா?? வெற்றி டிவில கூட புதுப்படம் போட மாட்டீங்களா? ஒன்னும் புரியல.. தேர்தல் அறிவிப்பு எல்லாம் மொத்தமா கடைசியா தான் வருமா இல்லாட்டி தொகுதி வாரியா அறிவிச்சு இறுதி முடிவ மட்டும் அரச தொலைக்காட்சில சொல்லுவாங்களா?? கொஞ்சம் தெளிவு தேவை.....
லோஷன் அண்ணாக்கு தேர்தல் வேலை இல்லாம போனதும் நல்லதுக்கு தான்.. வசந்தம் டிவி ல தசாவதாரம் போடுறாங்க.. உங்களுக்கு ரிலாக்ஸ் ஆ அந்த படத்த பார்க்கலாம்....
நானும் உண்மைத்தமிழன் இல்லை .....எனக்கு யார் ஜனாதிபதியா வந்தாலும் தேர்தல் இரவுல என்ன படம் போடுறாங்கன்னு பார்க்க தான் ஆவல்...
அப்போ இந்த தடவை வெற்றில தேர்தல் ஒலிபரப்பு இல்லையா?? வெற்றி டிவில கூட புதுப்படம் போட மாட்டீங்களா? ஒன்னும் புரியல.. தேர்தல் அறிவிப்பு எல்லாம் மொத்தமா கடைசியா தான் வருமா இல்லாட்டி தொகுதி வாரியா அறிவிச்சு இறுதி முடிவ மட்டும் அரச தொலைக்காட்சில சொல்லுவாங்களா?? கொஞ்சம் தெளிவு தேவை.....
லோஷன் அண்ணாக்கு தேர்தல் வேலை இல்லாம போனதும் நல்லதுக்கு தான்.. வசந்தம் டிவி ல தசாவதாரம் போடுறாங்க.. உங்களுக்கு ரிலாக்ஸ் ஆ அந்த படத்த பார்க்கலாம்....
நானும் உண்மைத்தமிழன் இல்லை .....எனக்கு யார் ஜனாதிபதியா வந்தாலும் தேர்தல் இரவுல என்ன படம் போடுறாங்கன்னு பார்க்க தான் ஆவல்...
நீங்க வேற.. யாரோ உண்மைத்தமிழனுக்கு லோசன் எண்டு பட்டம் குடுத்திட்டாங்களாம்..
நான் சொன்னது போல நம்பிக்கையான மாற்றமோ இல்லை தும்பிக்கையானை ஏமாற்றுமொ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வருவதை எதிர் கொள்ளுவம். தமிழர் தரப்பு ஓட்டுக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி குறைவாகவே உள்ளது.. பாபபம்.. எதுநடந்தாலும் .னி அனுபவிக்கப்போவது தமிழர் மட்டுமல்ல சகோதர இனத்தவரும்தானே?
நாளைண்டைக்கு வெடிக்க ரெண்டு மூண்டு பட்ாசை வாங்கி வையுங்க..
நீங்க அவரில்லை என்று நன்றாகவே தெரியும்!
நீங்கள் நினைத்தாலுமே அவராக முடியாது என்பது தெரியுமோ?
நான் அவரில்லை! இப்படி ஒரு ரவுசா:-))
அண்ணா உண்மையாக உங்கள் பதிவு நீண்டுவிட்டதால் வாசிப்போர் எண்ணக்கை குறையாவிட்டாலும் என் போன்றோருக்கு அதாவது நமது இடத்தில் அதிவேக இணைய வசதியில்லாமையால் கொஞ்சம் லோடாகும்.
அப்ப கைப்பேசியில் முகவர்கள் சொல்லுறமாதிரி எண் 1 ஐ அழுத்துங்கள், எண் 2ஐ அழுத்துங்கள் என கடுப்பு ஏத்துற மாதிரி இருக்கும்.
இருந்தாலும் உங்கள் பதிவை வாசிக்கத் தவறுவதில்லை நாங்கள்....
இனி கொஞ்சம் சிறிய பதிவாக வரும் என எதிர்பாக்கலாம்.
உங்க ஊரில் ஒபாமா ஸ்டைலில் 'சேஞ்ச்' கோசம் வரலையா ?
:)
இந்தப்பாட்டை ஒளிபரப்பிவிட்டு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சொல்லலாம் போல இருக்கே..
அட.. கடைசியா சிவா.. சிவா.. என்றுவேற வருது :)
ம்..ம்... மறந்துட்டீங்களோ .. எல்லாம் வேட்டைக்காரன் பதிவு கொடுத்த வில்லங்கம் அண்ணா அதுதான் ரொம்ப..பெரிசு ...
உண்மைத் தமிழன் அவர்களே!
//பின்மண்டையில் சேதம் வராமல் பக்குவமா நடந்து கொள்ளுங்கோ..//
ஹா...ஹா.... புரிந்தது...புரிந்தது!!!
முடிந்தவரை எல்லோருக்கும் போய் வாக்களிக்கச்சொல்லுங்கள். 26ம் திகதி இந்தியக் குடியரசு தினம் வேறு இந்திய அலைவரிசைகளிலெல்லாம் விசேட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் - அவற்றை மீறி எம்மவர்கள் சென்று வாக்களிக்கவேண்டும்! வாக்களித்தால் வெற்றி! மாற்றம் - சாத்தியம்!
ஏதோ... கொஞ்சம் பயம் அடிமனதை உரசினாலும்... நம்பிக்கையில் இருக்கிறேன் - உங்கள் நிலையும் இதேதான் என்று புரிகிறது!
சின்னப் பதிவுகளாக எழுதினால் வசதி என்பது உண்மைதான்... ஹ்ம்...
சரி - வருங்காலங்களில் “உண்மைத் தமிழன்” என் அதிகாரபூர்வமாகவே விருது இலங்கை பதிவர் சார்பில் கனககோபியைக் கொடுக்கச்சொல்லிவிடுவோம் - அடுத்த பதிவர் சந்திப்புடன் விருது வழங்கலாகவும் அமையட்டும்! ;-)
//மாறுமா மாறாதா என்பதே கேள்வி.//
இது வடிவேல் பாணியோ? கடைசில தேர்தலும் கரப்பான் பூச்சி மாதிரி கவிண்ட கார் போல ஆகுமோ?
//புல்லட் said...
நீங்க வேற.. யாரோ உண்மைத்தமிழனுக்கு லோசன் எண்டு பட்டம் குடுத்திட்டாங்களாம்..//
சும்மா போப்பா! உம்மட பதிவுகளை வாசிச்சு தான் வயிறு வலிக்குதெண்டா.. இங்கயுமா? காமடி பண்ணுறதுக்கு ஒரு அளவு வேணாம்…!ஹீ…
////புதன் கிழமை பொது,வங்கி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.. வர்த்தக விடுமுறை இல்லையாம்..////
எங்களுக்கும் அதே...
எப்படியோ உங்களுக்கு வழங்கப்பட்ட உண்மைத்தமிழன் பட்டத்தை வாங்க யாருமே தயாரில்லை லோஷன்
நான் பொதுவாகவே நீண்ட பதிவுகளை வாசிப்பது குறைவு... (நான் மட்டும் தான் இப்படியோ...?)
முக்கியமாக அலுவலக இண்டர்நெட்டில் நீண்ட தமிழ் பதிவுகளை படிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்... ;-)
//இலங்கை பதிவர் சார்பில் கனககோபியைக் கொடுக்கச்சொல்லிவிடுவோம் //
அட.... இன்னுமா இந்த உலகம் என்னை பதிவரா நம்பிக் கொண்டிருக்கு?
நன்றி நன்றி நன்றி.... ;)
ha ha...
அன்பான இலங்கை மக்களே.. வாக்கு உள்ளோர்.. ஏதோ பார்த்து பொறுப்பா, மனசாட்சிப்படி, எதிர்காலத்தையும் சிந்தித்து வாக்களியுங்கோ..
பின்மண்டையில் சேதம் வராமல் பக்குவமா நடந்து கொள்ளுங்கோ.
ரொம்ப நீளமான பதிவு போடுறதால தான் இப்போ மொபைல் mofuse site உங்க பதிவுகள் வர்றது இல்லையோ..
வாக்கழிப்பதைத்தவிர்த்து வாக்களிப்போம்......!
தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
நிமலேஷ், நடக்கலையே எதுவும்.. ;)
கோபி, எல்லாக் குத்தும் சேர்த்து முதுகில் எல்லோ குத்தினாங்கள்.. ;)
வதீஸ், நீங்கள் சொல்லாதபடியால் தானே நானே சொன்னேன்.. ;)
நன்றி ஷன்..
விஜயகாந்த்.. இப்ப என்ன சொல்றீங்க?
புல்லட்.. கடைசியில் நல்லா அனுபவிக்கிறோம்..
ஆகா கிருஷ்ணமூர்த்தி.. நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புபவன்,., அதனால் நான் தான் சொன்னேன் நான் அவர் இல்லை.. ;)
நன்றி இலங்கன்,.. இப்போ எப்படி?
கோவியார், என்ன வந்து என்னங்க.. எதுவுமே இல்லையே..
சயந்தன், சிவ சிவா
பாலவாசகன்.. வேட்டைக்கரனை எல்லாம் வென்ற பெரிய பதிவெல்லாம் இருக்கு.. என் பழைய பதிவுகளைத் தேடித் பாருங்கோ..
அசோக்.. ஒரு பொல்லாப்புமில்லை..
உந்த விருது விஷயம் தெரிந்த பிறகு அடுத்த இலங்கைப் பதிவர் சந்திப்பு இன்னும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் எனக் கதை உலவுகிறதே. ;)
வரோ.. இப்ப நீரும் ஒரு வடிவேலு தான் என சொல்கிறார்களே.. மற்றவர்களை சிரிக்க வைப்பதால்.. ;)
யோகா.. ஆகா..
நிமல்.. உண்மை தான்.. குறைத்துக் கொள்ள முயன்றாலும் எல்லாம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்து குந்தி விடுதே.. ;)
கங்கோன்.. உலகமே இப்பிடித் தான் ;) நம்பிற மாதிரி நடந்தால் நம்பும்
சாய்சயன் நன்றி
விஜயகாந்த் - ஆமாங்கோ.. இப்பவும் அப்பிடியாங்கோ?
//வாக்கழிப்பதைத்தவிர்த்து வாக்களிப்போம்....//
பொதுத் தேர்தலிலும் அப்பிடியோ?
சிவா- எதிர்பார்த்த முடிவு வந்துதா?
Post a Comment