
இன்று காலையிலேயே வந்தியின் எஸ்.எம்.எஸ் தான் எனது இரண்டாவது தூக்கத்தை நீக்கியது.(விடிகாலையிலேயே எழுந்து டயலொக் செய்திகளை ஒலிப்பதிவு செய்துவிட்டு மறுபடி தூங்கி இருந்தேன்)
தமிழ்மணம் பதிவுப் போட்டிகளில் எனது பதிவு விளையாட்டுப் பிரிவிலே இரண்டாம் இடம் பெற்றிருப்பதாகவும் வாழ்த்துக்களையும் சொல்லி இருந்தார்.
அப்படியொரு மகிழ்ச்சி எனக்கு..
எனது சச்சின் டெண்டுல்கர் 20 என்ற இந்தப் பதிவு உண்மையில் மிகத் தேடி எடுத்த தகவல்கள், படங்களோடு நான் இட்ட இடுகை. முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே இதை எடுத்துக் கொள்கிறேன்.
வாக்களித்து தெரிவு செய்த நண்பர்கள்,நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.
விருது வழங்கி ஊக்கப்படுத்தும் தமிழ்மணத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றிக்குக் காரணமான நாயகன் சச்சினுக்கும் நன்றிகளைக் கட்டாயம் சொல்லவே வேண்டும்.. :)
வெற்றிபெற்ற எல்லாப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
யாரெல்லாம் வெற்றி பெற்றார்கள், எனது பதிவை முந்தி முதலிடம் பெற்ற பதிவு எது என்றெல்லாம் வாசித்துப் பார்க்கலாம் என்று தமிழ்மணத்தைத் திறக்க முயற்சி செய்தால், தமிழ்மணம் சுட்டி இயங்குவதாகவில்லை..
என்ன கொடுமை இது தமிழ்மணமே..
எமக்கு விருது வழங்கிய நேரம் உனக்கே இப்படியா?
பிற்சேர்க்கை
18/01/2010 காலை 11.45
அப்பாடா இப்போது தமிழ்மணம் இயங்குகிறது.
தமிழ்மணம் விருதுபெற்றோரின் முழுமையான விபரங்கள்..
19 comments:
விருதுக்கு வாழ்த்துக்கள் லோஷன், அந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவர்தான், தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதுங்கள்...
வாழ்த்துக்கள் அண்ணா....
அடிக்கடி ஆஞ்கிலத்தில் சொல்வது போல 'u deserve it'...
முதலிடம் கிடைக்காத வருத்தம் இருந்தாலும் இரண்டாமிடம் பெறுவதே பெரிய விடயம் என்பதால் ஓரளவுக்கு திருப்தி தான்....
மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா...
அப்படியே விருது பெற்ற ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள், குறிப்பாக வந்தியண்ணாக்கு...
வாழ்த்துக்கள் அண்ணா ... என்னதான் பொன்டிங்க் சங்கா புகழ் நீங்கள் பாடினாலும் ச்சசின் தான் உங்களுக்கு விருது வேண்டி கொடுத்திருக்கார்... பாருங்கள் ... ஹிஹி..
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா ...
எந்தனை நாட்கள், எங்கு வரவேண்டும் விலாவாரியாகக் கூறினால் வருகிறோம் ரீட்டுக்கு...ஹீஹீ
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா....
வாழ்த்துக்கள் அண்ணா...
விருது(களு)க்கு விருந்து எப்போது..?
Congratz..!!
'u deserve it'...
வாழ்த்துக்கள் அண்ணா...
வாழ்த்துக்கள் அண்ணா...தொடர்ந்து கலக்குங்கள் ....
அன்புடன்
லோகநாதன்.K
வாழ்த்துக்கள்.
அண்ணா மனமார்ந்த வதழத்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா...
சைனீஸ் ரெஸ்ரொரன்டில் வந்தியுடன் சந்திக்கலாமா?
வாழ்த்துக்கள் நண்பா,
உங்களுக்கு சச்சினும் எனக்கு புவனேஸ்வரியும் வெற்றி தேடித்தந்திருக்கின்றார்கள்.
வாழ்த்துகள் லோசன் !
விருதுகள் பெற்ற ஏனைய ஈழத்து உறவுகளுக்கும் பாராட்டுகள் !
"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
ரொம்பத் தாமதமாக உங்கள் வாழ்த்துக்களுக்குப் பதிலளிக்கிறேன்..
வாழ்த்திய அனைத்து அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்..
யோகா, கங்கோன், பாலவாசகன், தர்ஷன், பவன், தர்ஷாயணீ, ஆதிரை, சயன், என்ன கொடும சார், வரோ, லோகநாதன், ரீசா, இளைஞன்,சுபாங்கன், வந்தி, கோவி அண்ணர், ரமணன் நன்றிகள்..
விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்
http://chinathambi.blogspot.com
Post a Comment