
நேற்று மீண்டும் ஒரு இலங்கை - இந்திய இறுதிப்போட்டி
மீண்டும் இலங்கை வெற்றி!
இறுதிப்போட்டிகளில் இந்தியாவின் தடுமாற்றம்! எத்தனையாவது தடவை இது?
அண்மைக்காலத் தோல்விகளுக்கு சரியான பதிலடி& பழிவாங்கல்.
இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 15வது இறுதிப்போட்டி இது! இலங்கையின் ஏழாவது வெற்றி நேற்றையது. இந்தியா ஆறுதடவைகளே வென்றுள்ளது.
எனினும் அண்மைக்காலத்தில் இவ்விரு அணிகளும் எமக்கு அலுத்துப்போகும் அளவுக்கு தமக்கிடையே அதிக போட்டிகளில் விளையாடியுள்ளன. அண்மைய 19 மாதங்களில் 22 போட்டிகள். இதில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தினாலும் பொருத்தமான நேரத்தில் ஆப்படித்துள்ளது இலங்கை.
நேற்றைய டாக்கா இறுதிப்போட்டியுடன் மேலுமொரு சாதனை. இதுவரை தமக்கிடையே அதிக ஒருநாள் போட்டிகளை விளையாடிய சாதனையைக் கொண்டிருந்த (120) அவுஸ்திரேலியா – மேற்கிந்தியத்தீவுகளை, இந்தியா vs இலங்கை பின் தள்ளியது. மூன்றாமிடத்தில் இலங்கை vs பாகிஸ்தான் போட்டிகள் இருக்கின்றன.
இலங்கை அணியின் இளமையும், அனுபவம் கலந்த வெற்றிக்கலவையும், எவ்வளவு அனுபவம் இருந்தும் - இளமையான துடிப்பான வீரர்கள் இருந்தும் முக்கிய தருணங்களில் தடுமாறும் இந்திய வியாதியும் நேற்று வெளிப்பட்டன.
நாணயச்சுழற்சியின் வெற்றியே இலங்கையின் முதலாவது வெற்றி! எனினும் இறுதியில் இந்தப் பனிப்பொழிவோ காலநிலையோ நேற்றைய போட்டியில் செல்வாக்கு செலுத்தியதாகத் தெரியவில்லை.
ஆடுகளம் தட்டையென்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிக சாதகமானது என்றும் சொன்ன சுனில் கவாஸ்கருக்கு ஆரம்பத்திலிருந்தே கரிபூசியிருந்தனர் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர்கள்.ஆனால் கவாஸ்கர் சொன்னதில் தவறேதும் இல்லை. தமக்கு இருந்த சொற்ப சாதகத் தன்மையை வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ள, தவறான, மோசமான ஆட்டப் பிரயோகங்களுக்கு சென்று ஆட்டமிழந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் மீதே முழுத் தவறும்.
ஸ்விங், பௌன்ஸ் என்பவற்றை சாதூரியமாகப் பயன்படுத்திய வெலகெதரவும், குலசேகரவும் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை வறுத்தெடுத்தார்கள். நேற்று முன்தினம் பந்துவீச்சுப் பயிற்சியில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் பௌன்ஸர் பந்துகளை அதிகளவில் வீசிப்பழகியதாக இணையத்தளமொன்று நேற்றுக்காலையில் சொல்லியிருந்தது கவனிக்கத்தக்கது. எனவே திட்டமிட்டு இந்திய அணியின் பலவீனப்புள்ளியில் தாக்கியுள்ளது சங்கக்காரவின் இந்த அணி.
27 பந்துகளில் 42 ஓட்டங்கள் பெற்ற அதிரடி சேவாகும் பொறுமையின்றி ஆட்டமிழந்தார். அவர் இந்த ஓட்டங்களில் தனது 7000 ஒரு நாள் சர்வதேச ஓட்டங்களைக் கடந்தார்.
இன்னும் இரு எல்லைக் கற்கள்..
யுவராஜ் சிங்கின் 250 வது ஒருநாள் சர்வதேசப் போட்டி.(இந்த சாதனை தொட்ட ஆறாவது இந்திய வீரர்)
அசாருதீனின் சாதனையை மிஞ்சி தோனி,இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்கள் குவித்த அணித் தலைவரானார்.
அச்சுறுத்தும் 5 இந்தியத் துடுப்பாட்ட வீரர்களும் 60 ஓட்டங்களுக்குள் சுருக்கப்பட்டபோது, ஆகா! இலங்கை அணிக்கு இப்படியொரு இலகுவான வெற்றி கிடைக்கப்போகிறதே என்று பார்த்தால் தடுப்பு சுவராக வந்தவர் சுரேஷ் ரெய்னா.
சச்சினுக்குப் பதிலாக அணிக்குள் வந்த விராட் கோளியும் சிறப்பாக ஓட்டங்கள் குவித்துவருவதால். மீண்டும் சச்சின் இந்திய அணிக்கு வருமிடத்து அணியிலிருந்து தூக்கப்படக் கூடியவர் எனப் பலரால் கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா எவ்வித அழுத்தத்துக்கும் உட்படாதவராக மிக நிதானமாகவும், அதே வேளை தேவையான வேகத்தோடும் பொறுப்புணர்வோடு ஆடி அபாரமான சதமொன்றைப் பெற்றார். ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்வின் மிக அற்புதமான சதம் இதுவாக இருக்கும்.நேற்று இந்தியா வென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
குலசேகர, வெலகெடற ஆகியோரின் பந்துகள் இலங்கை அணியின் தெரிவுகளின் சீர்மையைக் காட்டின.
அண்மைக் காலத்தில் தனது அணி இருப்பைக் காக்க முடியாமல் சிரமப்பட்ட குலசேகர நேற்று போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றமை மகிழ்ச்சி.
வெலகேடரவுக்கு இந்தத் தொடர் சிறப்பான ஒரு அறிமுக அடையாளம். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவரும் அவரே.
சமிந்த வாசுக்குப் பிறகு இலங்கையில் மேலும் வளமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள் என்பதைக் காட்டியுள்ளார்.
இந்த டாக்கா தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவந்த விராட் கோளி நேற்று சறுக்கினார். நேற்று மட்டும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருந்தால் இலங்கை அணித்தலைவர் சங்கா வசமான அந்த அழகான விலையுயர்ந்த மோட்டார் வண்டி கோளி வசமாகி இருக்கும்.
ஆனாலும் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் கோளி தான்.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் அண்மையில் இலங்கை அணியில் ஏற்பட்டுள்ள உளவியல் மாற்றத்தைக் காட்டியது.
ஓட்டம் எதுவும் இல்லாத நிலையில் தரங்கவை இழந்தும் (நேற்று தான் தனது அண்மைக்கால சிறப்பான பெறுபேறுகளுக்கு டில்ஷான் தான் காரணம் என தரங்க பேட்டி அளித்திருந்தார் - இதில் இரட்டை அர்த்தம் எதுவுமில்லை)
சங்கக்கார, டில்ஷான் அருமையான இணைப்பாட்டம் ஒன்றை அதிரடியாக வழங்கி இருந்தார்கள்.
துடுப்பாட்ட வீரராகவும் தலைவராகவும், விக்கெட் காப்பாளராகவும் தொடர் முழுவதுமே சிறப்பாகப் பிரகாசித்த சங்கக்காரவுக்கு தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதும் ஜீப்பும் வழங்கப்பட்டமை பொருத்தமானதே..

இந்தியத் தொடரிலிருந்து தொடர்கிற சங்காவின் போர்ம் தொடரட்டும்.
இடைநடுவே இலங்கையின் விக்கெட்டுக்கள் குறுகிய இடைவெளிகளில் சரியாய், இலங்கை வழக்கமான பாணியில் கிட்டவந்து கவிழ்ந்துவிடப் போகிறதோ என்று எண்ணவிடாமல் கப்பல் கவிழாமல் கரைசேர்த்தவர் மஹேல ஜெயவர்த்தன. அருமையான ஆட்டம். இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொறுப்போடு,அற்புதமாக ஆடியிருந்தார்.

மஹெலவை ஒதுக்குகிறார்கள்;அவர் கதை அவ்வளவு தான் என்றோருக்கேல்லாம் நேற்று மஹேலவின் ஆட்டமிழக்காத 71 ஓட்டங்களும், சங்கா பின்னர் மகேலவைப் புகழ்ந்ததும் வாய்மூட வைத்திருக்கும்.
முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியிருந்த ஆசிஷ் நெஹ்ரா தசைப்பிடிப்போடு இரண்டாவது ஓவரிலேயே வெளியேறியது இந்தியாவுக்குப் பேரிழப்பாக அமைந்தது.
ஆனால் ஸ்ரீசாந்துக்கு ஏன் இன்னும் வாய்ப்பு? கடந்தபோட்டியில் இவரைவிட சிறப்பாகப் பந்துவீசியிருந்த சுதீப் தியாகிக்கு நேற்று வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.
ஸ்ரீசாந்துக்கு நேற்றும் செம சாத்து. 9.3 ஓவர்களில் 72 ஓட்டங்கள்.
இன்னொரு உறுத்திய விடயம்.. ஸ்ரீசாந்த் என்ற திருந்தா ஜென்மம் மீண்டும் தனது திருகுதாளங்களை இந்தத் தொடரில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளது.
நேற்றும் அடிக்கடி இலங்கை துடுப்பாட்ட வீரர்களை சீண்டிக் கொண்டும் தன பந்துகளுக்கு அடி விழும் போதெல்லாம் நான்கெழுத்துக் கெட்ட வார்த்தைகளை அர்ச்சித்தபடியும் இருந்த ஸ்ரீசாந்தை இந்திய கிரிக்கெட் சபை மீண்டும் இறுதி எச்சரிக்கை மட்டும் கொடுத்து திருத்தப் போகிறதா?
சில போட்டிகளில் சறுக்கியிருந்த இலங்கையின் களத்தடுப்பும் நேற்று மீண்டும் சுறுசுறுப்புப் பெற்றிருந்தது.
முரளி, ஜெயசூரிய, மத்தியூஸ்,மாலிங்க, மென்டிஸ் இல்லாமல் பெற்ற வெற்றி எனும்போது இந்த வெற்றி இலங்கைக்கு மெச்சக் கூடியதே..
இந்தியத் தொடரில் கண்ட தோல்வி அனுபவங்கள் பாடம் தந்துள்ளன என்பது தெரிகிறது.
பரிசளிப்பு நிகழ்வில் சங்கக்கார சொன்ன விஷயங்கள் தெளிவாகப் பல விஷயங்களை எமக்கு அறிவிக்கின்றன.
சனத் ஜெயசூரியவின் நீக்கம் பற்றி தேர்வாளர்களுக்கு இருந்த/இருக்கும் அழுத்தம்;இளம் வீரர்களைத் தெரிவு செய்த தேர்வாளரின் நம்பிக்கை & துணிச்சல்;எதிர்காலத்துக்கான திட்டமிடல் என்று பல்வேறு விஷயங்களையும் சங்கா குறிப்பிட்டிருந்தார்.
புதிய வருடத்தில் இலங்கை அணியிடம் தோன்றியுள்ள இந்தப் புதிய தெம்பு நிலைக்கட்டும்;மேலும் அதிகரிக்கட்டும்.
தேர்வாளர்களிடம் அரசியல் கலப்பு இல்லாதிருக்கட்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எனினும் பங்களாதேஷுக்கேதிராக டெஸ்ட் தொடருக்காக காத்துள்ள இந்தியா இன்னும் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது.
பிற்சேர்க்கை -
1.பொன்டிங் கடந்த தசாப்தத்தின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். விபரங்கள் நாளை தருகிறேன்.
2.நியூ சீலாந்தில் நாளை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.
2008இல் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பிரகாசித்த பல இளைஞரும் இப்போது சர்வதேச நட்சத்திரங்களாக மாறியுள்ள நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரையும் உற்றுக் கவனிப்போம்.. நாளைய நட்சத்திரங்களுக்காக .
18 comments:
நீண்ட நாட்களின் பின்னர் இந்த ஆட்டத்தை கண்டு களித்தேன். மஹேல கடைசிவரை அணியைத் தாங்கிச் சென்றமை அருமை.
இந்தியாவிற்க்கு மீண்டும் இறுதிப்போட்டிகளில் தோற்கும் ராசி தொடங்கிவிட்டதோ!!!.
ஆனாலும் ஒரு போட்டியின் முடிவை நாணயச் சுழற்சி தீர்மானிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. நாங்கள் ஊரிலை பனைமட்டையிலையும் தென்னை மட்டையிலும் கிரிக்கெட் விளையாடிய காலத்திலை ரொஸ் வென்ற பின்னர் துடுப்பாட்டமா? களத்தடுப்பா என தீர்மானிப்பது நேரம் தான். எப்படித் தெரியுமா? ஆட்டம் கொஞ்சம் பொழுது படும் போது தொடங்கினால் பேட்டிங் காரணம் பீல்ட் செய்யாமல் அம்மா பேசுவார் எனச் சொல்லிவிட்டு வீட்டை ஓடிவிடலாம். ஆனால் அடுத்த நாள் இரண்டு நாளுக்குமாக அலையவேண்டும்(அலைதல் களத்தடுப்பு)
நேற்றே எதிர்ப்பார்த்தேன் ஆனால் 24 மணிநேரம் பிந்திப் பதிவு வந்திருக்கின்றது.
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..... சங்காக்கு கிடைச்ச வண்டி நம்ம நாட்டுக்கு வருமா? அப்பிடி வந்தா அதுக்கு வரிவிலக்கு கிடைக்குமா??
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..... சங்காக்கு கிடைச்ச வண்டி நம்ம நாட்டுக்கு வருமா? அப்பிடி வந்தா அதுக்கு வரிவிலக்கு கிடைக்குமா??
ஆனால் நேற்றைய போட்டியில் நாணயச்சுழற்சி எங்களுக்கு ஆப்பாகத் தானே அமைந்தது?
பனி கினி எண்டு எதிர்பார்த்தா மிர்பூர் மைதானம் கொழும்பு பிரேமதாச மாதிரிக் கிடக்குது... spin and bounce...
நான் நிறையப் பயந்து போனேன்....
மஹேல நேற்று அருமை...
கலக்கி எடுத்துவிட்டார்...
நானும் மஹேலவை எதிர்த்தவன் தான், ஆனால் என் முகத்தில நேற்றுக் கரி தான்...
இதே மாதிரி ஒழுங்காக ஆடினால் மகிழ்ச்சி தான்...
//ஸ்ரீசாந்த் என்ற திருந்தா ஜென்மம் மீண்டும் தனது திருகுதாளங்களை இந்தத் தொடரில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளது//
நேற்று எனக்கு எரிச்சல் வந்தது....
அதற்கு முதல் போட்டியிலேயே கொஞ்சம் தொடங்கினாலும் (நடுவர் ஆட்டமிழப்பு வழங்க மறுக்க 'புறுபுறு'த்துக் கொண்டு போனார்.... {இது தானா அந்த 4 வார்த்தை? :P } ) நேற்று உச்சக்கட்டம்....
ஷகீர்கானும் புதுப்பெடியன் திஸ்ஸர பெரெராவுடன் கொஞ்சம் கதைச்சார்...
எல்லாவற்றையும் விட வெலகெதரவை நோக்கி செவாக் துடுபு்பைபைக் காட்டி வசை பொழிந்ததை எப்படித் தவற விட்டீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.
கலக்கிவிட்டார்கள் நம்மவர்கள்....
அண்ணர் விஜயகாந் கேட்ட சந்தேகத்தை வழிமொழிகிறேன்....
//இதில் இரட்டை அர்த்தம் எதுவுமில்லை//
aah... appadiya?
//சிறப்பான பெறுபேறுகளுக்கு டில்ஷான் தான் காரணம் என தரங்க பேட்டி அளித்திருந்தார் - இதில் இரட்டை அர்த்தம் எதுவுமில்லை//
இரட்டை அர்த்தம் இருந்தா சொல்லுங்க..
இலங்கை அணி வென்றது மகிழ்வான விடயம் ஆனாலும் என் மனதில் சில உறுத்தல்கள்.
01. டாஸ் போட்டியை தீர்மானித்த இன்னொரு தொடர்.
இப்படி தொடர்ந்தால் டாஸில் வென்றவுடன் போட்டி முடிவு தெரிந்து விடும் நிலை ஏற்படும், ஆனாலும் வழமையாக இப்படியான போட்டிகளில் டாசில் வெல்லும் தோனி இம்முறை டாஸ் வெல்லவில்லை. போட்டியையும் வெல்லவில்லை.
2. இலங்கையின் இளம் வீரர்கள் மிக அருமையாக விளையாடுகிறார்கள், ஆனால் அவர்கள் திறமை காரணமாக தெரிவு செய்யப்படவில்லை. காயம் காரணமாக மூத்த வீரர்கள் ஒதுங்கியதால் மாற்று வீரர்களாக அணிக்கு அனுப்பப்பட்வர்களே இவர்கள்.
இவர்கள் மூல அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாகவிருக்கும்..
//01. டாஸ் போட்டியை தீர்மானித்த இன்னொரு தொடர். //
இல்லை யோ....
மொத்தமாக அப்படிச் சொல்ல முடியாது...
இறுதிப்போட்டியில் உண்மையில் நாணச்சுழற்சி முக்கியமாகத்தானிருந்தது.... ஆனால் மற்றைய போட்டிகளை விட தலைகீழாக....
இறுதிப்போட்டியில் பனி வந்து இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடுவதை இலகுவாக்கும் என்று சங்கா நினைத்தார், ஆனால் நடந்ததோ தலைகீழாக.... மின்னொளியில் பந்து அதிகமாக திரும்பி, பவுன்ஸ் ஆனது, றிவேர்ஸ் ஸ்விங் வந்தது....
டோனி நாணச்சுழற்சியை வென்றிருந்தாலும் இவர் துடுப்பெடுத்தாடித்தான் இருப்பார், ஆகவே உண்மையாக என்ன செய்வது என்று தெரியாததால் இறுதிப்போட்டியில் நாணச்சுழற்சி ஆதிக்கம் செலுத்தவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்....
எனினும் பொதுவாக நீங்கள் சொன்னது சரிதான்....
ஆமாம் அண்ணா இலங்கை ஆநற்றுக்கலக்கிவிட்டார்கள், அதுவும் விக்கெடுகள் இழந்தபோது பயந்துதான் போனேன் ஆனால் மஹேல என்னை இதுக்குத்தான் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று காட்டி விட்டார்.
//முரளி, ஜெயசூரிய, மத்தியூஸ்,மாலிங்க, மென்டிஸ் இல்லாமல் பெற்ற வெற்றி எனும்போது இந்த வெற்றி இலங்கைக்கு மெச்சக் கூடியதே..//
ஆமாம் மெத்தியூசை அணி MISS பண்ணுவது தெரிகிறது...
//பந்துகளுக்கு அடி விழும் போதெல்லாம் நான்கெழுத்துக் கெட்ட வார்த்தைகளை அர்ச்சித்தபடியும் இருந்த ஸ்ரீசாந்தை இந்திய கிரிக்கெட் சபை மீண்டும் இறுதி எச்சரிக்கை மட்டும் கொடுத்து திருத்தப் போகிறதா?//
அதுவும் நேற்று களத்தடுப்பில் அவரின் பந்துகளை மிஸ் பீல்டு செய்தவர் ஹர்பஜன்.. என..ஹீஹீ
வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறுகிறது, இன்னுமொருக்கா அடிவாங்கினா திருந்துவாரோ?..
கோபி சொன்னதைப் போல் சேவாக்கின் வில்லத்தனத்தை சுட்டிக்காட்டத் தவறிவிட்டீர்கள்.
உண்மையாக இப்படியான முண்ணணி வீரர்களின் நோய்கள் தான் பின்னர் வரும் இளம் வீரர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.
சிறீ லங்கா ஜெயவேவா
Mayooresan said...
நீண்ட நாட்களின் பின்னர் இந்த ஆட்டத்தை கண்டு களித்தேன். மஹேல கடைசிவரை அணியைத் தாங்கிச் சென்றமை அருமை.//
உண்மை.. மகேலவின் கதை சரி என்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. He is a master class player ..
வந்தியத்தேவன் said...
இந்தியாவிற்க்கு மீண்டும் இறுதிப்போட்டிகளில் தோற்கும் ராசி தொடங்கிவிட்டதோ!!!.//
இருக்கலாம்.. ;)
ஆனாலும் ஒரு போட்டியின் முடிவை நாணயச் சுழற்சி தீர்மானிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. நாங்கள் ஊரிலை பனைமட்டையிலையும் தென்னை மட்டையிலும் கிரிக்கெட் விளையாடிய காலத்திலை ரொஸ் வென்ற பின்னர் துடுப்பாட்டமா? களத்தடுப்பா என தீர்மானிப்பது நேரம் தான். எப்படித் தெரியுமா? ஆட்டம் கொஞ்சம் பொழுது படும் போது தொடங்கினால் பேட்டிங் காரணம் பீல்ட் செய்யாமல் அம்மா பேசுவார் எனச் சொல்லிவிட்டு வீட்டை ஓடிவிடலாம். ஆனால் அடுத்த நாள் இரண்டு நாளுக்குமாக அலையவேண்டும்(அலைதல் களத்தடுப்பு)//
அதெல்லாம் சரி.. நீங்க விளையாடினீங்க என்று சொல்ல இப்படியொரு பில்ட் அப் தேவையா?
ஆனால் இறுதிப் போட்டியில் பனியோ பன்னியோ ஒன்னும் முடிவைத் தீர்மானிக்கவில்லை..
நேற்றே எதிர்ப்பார்த்தேன் ஆனால் 24 மணிநேரம் பிந்திப் பதிவு வந்திருக்கின்றது.//
ரொம்ப களைச்சுப் போயிருந்ததால போட்டி முடிஞ்சதும் தூங்கிட்டேன்.. சாரி சார்.. சாரி மாமா..
Vijayakanth said...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்..... சங்காக்கு கிடைச்ச வண்டி நம்ம நாட்டுக்கு வருமா? அப்பிடி வந்தா அதுக்கு வரிவிலக்கு கிடைக்குமா??
//
வண்டியை வித்து காசாக்கிட்டு தான் வந்திருப்பார் என நினைக்கிறேன்,.. எதுக்கும் கேட்டு சொல்றேன்.. நோ வரிவிலக்கு இன் ஸ்ரீ லங்கா..
எல்லோருக்கும் ஒரே நீதியாம்.. ;)
அன்பின் கோபி..
ஆகா என்ன ஒரு பின்னூட்டம்.. ;)
மஹேல ஒரு big match player.. தேவையான நேரங்களில் கலக்குவார்..அழுத்தங்கள் உள்ள நேரங்களில் அசத்தக் கூடிய ஒருவர்..
சேவாக் நடத்திய திருவிளையாடலை நான் பார்க்கவில்லையே.. பல பேர் சொல்லி இருந்தீர்கள்.. அது கண்டிக்கப் பட வேண்டியதே..
அழுத்தம் தான் அப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. சேவாகிற்கு இது ஒரு கறுப்புப் புள்ளியே..
[url=http://profiles.friendster.com/122857285]kamagra lovegra uk paypal[/url]
[url=http://trig.com/chartohige1974/biography]lowest prices for zithromax online[/url]
[url=http://trig.com/tesderpfigcui1975/biography]viagra and levitra comparisons[/url]
[url=http://profiles.friendster.com/122864883]propecia results gallery[/url]
This is very interesting, You are a very skilled blogger. I've joined your feed and look forward to seeking more of your wonderful post. Also, I've shared your website in my social networks!
There's certainly a lot to learn about this subject. I like all of the points you have made.
Post a Comment