பஞ்சாப் சிங்கத்துக்கு சீட்டுக் கிழித்து விட்டார்கள் IPLஇல்.
பஞ்சாப் கிங்க்ஸ் XI அணியின் தலைவராக கடந்த இரு IPL பருவகாலங்களிலும் கடமையாற்றிய யுவராஜ் சிங் நீக்கப்படவுள்ளார் என அண்மையில் கதைகள் வந்தவண்ணம் இருந்தன.
நேற்று உத்தியோகபூர்வமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான குமார் சங்கக்கார அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக தொடர்ச்சியாக சிக்சர் மழை பொழியும் அதிரடி மன்னனாகவும் பல தடவை தனித்து போட்டிகளை வென்றேடுத்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிவந்த யுவராஜை ஏன் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்?
அதுவும் தோனிக்குப் பிறகு இந்தியாவின் தலைவர் என்று கருதப்படும் யுவியை நீக்கியது சரியா என வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ளன.
காரணங்களை தேடியபோது, பஞ்சாப் கிங்க்ஸ் நிர்வாகிகளோடு அடிக்கடி மோதியுள்ளாராம்.. பங்குதாரர் ப்ரீத்தி சிந்தாவோடு மோதியதை - அன்பாகத் தான், படங்களில் பார்த்தோம்.. ஆனால் கருத்துவேறுபாடுகள் அவரோடு இல்லை என ப்ரீத்தியின் நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன.
எனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)

சக வீரர்களோடும் யுவராஜ் முறுகல் பட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
ஆனால் சங்கக்காரவுக்கு தலைவர் பதவி?
அண்மைக்காலமாக தடுமாறி வரும் சங்கா போட்டிகளில் தலைவராகவும் ஜொலித்து ப்ரீத்தியின் பஞ்சாபைக் கரை சேர்ப்பாரா?
இவரை விட, யுவியையும் விட மகெல ஜெயவர்த்தன தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நம்புகிறேன்.
கடந்தமுறை கட்டிப்பிடிப்பு ருசியே இன்னும் மறக்காத நிலையில் இம்முறை தலைவராகவும் அசத்தினால் மீண்டும் மீண்டும் இனிக்கும் என சங்காவுக்கும் தெரியும்..
அனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.
அந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே..
எது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது..
யுவி சொல்லக்கூடும்.. ''வடை போச்சே.. ''
18 comments:
படங்களில் பார்த்தோம் yendru soninga atheyum potturunthaa nalla irunthirukum......he he eh
நானும் மஹேல பக்கம் தான்...
மனுசன் நல்ல அமைதியான குணம் கொண்டது,..
எண்டாலும் சங்காவின் கடைசி 2 இருபதுக்கு இருபது போட்டிகளும், கடைசி ஒருநாள்ப் போட்டியும் சங்கா இருபதுக்கு இருபதில் ஒருவலம் வருவார் என்று கட்டியம் கூறுகின்றன...
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...
(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்? :) )
//எது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது//
அவங்களுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சாமே? இனியும் கட்டிப்புடி நடக்குமா?
கமல் கண்டுபிடித்த கட்டிப்புடி வைத்தியம் எங்கெல்லாம் களைகட்டுது ? ம்ம்..
ஏதொ சங்கா நல்லா ஆடினா சரி..
அண்ணே ! பிரீத்தியை கட்டிபுடிக்கணும்னா கிரிக்கட்ட தவிர வேற வழியிருக்காண்ணெ? சும்மா சொந்த தேவைக்குதான்.. :-(
உங்களுக்கு ஏன் எரியுது? ஜயவர்தனவின் மனைவி ஜயவர்தனவோடு எல்லா போட்டிகளையும் பார்க்கச்செல்பவர்.அவருக்கு க்ட்டிபிடி எல்லாம் குளுகுளுப்பா இருக்காது. (பாத்துக்கிட்டிருப்பாளே.. இன்னும் அரை மணித்தியாலத்தில் நாலு சாத்து கிடைக்குமே என்று மனம் பதைபதைக்கும்)
சங்கா சங்காக வாழ்த்துக்கள்
//எனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)//
acca thaane....
அதான் சங்கா இப்பிடி அடிக்கிறாரோ ?
ஆமா கட்டிபுடி வைத்தியம் என்றால் என்ன?
பச்சிளம் பாலகன்...
##அனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.
அந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே.##
என்னண்ணா இது பிரித்தியை கட்டி பிடிக்கவேண்டும் எனபதறகாகத்தான் அப்படி மரண அடி அடித்தார் எனகிறீர்களா....
ஹி..ஹி...
யுவிக்கும் பிரீத்திக்கும் சென்றமுறை ஆபிரிக்காவில் பஞ்சாப் தோற்ற ஒரு மட்சில் கொஞ்சம் முறுகல் நிலை ஏற்பட்டதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் அதனால் தான் சங்காவைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
எனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.
எனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.
//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்? :)//
நல்ல கேள்வி.பதில் கிடைக்குமா?
லோஷன் அண்ணை நீங்கள் சொல்லும் வடை வடிவேல் போக்கிரியில் சொல்லும் வடையா? இல்லை வேறு ஏதும் கசமுசா வடையா?
யுவராஜுக்கு ஈகோ கொஞ்சம் கூட. அவரை ஒரு நல்ல தலைவராக என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தது. சங்காவை மாற்றியது நல்ல முடிவே.
பாவப்பட்ட பந்து வீச்சாளர்கள் பதிவும் நல்லா இருந்தது அண்ணா. இந்தியக் கிரிக்கெட் சபை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இப்படியான ஆடுகளங்களால் அவர்களது அணிக்கே ஆபத்து. ஏனென்றால் கடினமான ஆடுகளங்களில் ஆடத்தொடங்கிய மூத்தவர்கள் தவிர மற்றவகள் கிரிக்கெட் என்றால் batting மட்டுமே என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் ‘அருமையான' களத்தடுப்பும், பந்துவீச்சும் நல்ல சான்று
http://jegatheepan.blogspot.com/
//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்? :)//
see this annaaaaaaaaaaaaaa.....
http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_17.html
Post a Comment