
சர்வதேச கிரிக்கெட்டுக்குள் சச்சின் நுழைந்து 20 வருடங்கள் பூர்த்தியானது ஒரு கிரிக்கெட் திருவிழாவாகவே உலகம் முழுவதும் கொண்டாடியுள்ளது.
சச்சின் என்ற நான்கெழுத்துத் தமிழ்ப்பெயரையோ, Sachin என்ற ஆறெழுத்துப் பெயரையோ இந்த சில வாரங்களிலாவது எழுதாத, சொல்லாத ரசிகர்களோ, வீரர்களோ இல்லை எனலாம்.
அப்படியொரு சச்சின் நினைவுப் பகிரல் பேட்டியில் இந்திய அதிரடித் துடுப்பாட்ட வீரர் சேவாக் அளித்துள்ள சுவாரஸ்ய வாக்கு மூலம் தான் இது.
2004ம் ஆண்டு முல்டான் டெஸ்ட் போட்டி – சேவாக் வெளுத்து விலாசிக்கொண்டிருக்கிறார்; மறுமுனையில் சச்சின்.
முதல் நூறு ஓட்டங்களுக்குள்ளே பல சிக்ஸர்களை வெளுத்து அதிரடியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் சேவாக்கிடம் வருகிறார் சச்சின்.
2003ல் மெல்பேர்னில் வைத்து சேவாக் 195 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா நல்ல நிலையிலிருந்து படுமோசமாகத் தோற்றதை ஞாபகப்படுத்தி – அப்போது ஆட்டமிழந்ததை ஞாபகப்படுத்தி, அப்போது ஆட்டமிழந்ததைப் போல பொறுப்பற்ற விதத்தில் ஆட்டமிழக்க வேண்டாம் என அறிவுரை சொல்கிறார் சச்சின்.
அத்துடன் சேவாக்கிடம் கொஞ்சம் அதட்டலாகவே 'நீ சிக்ஸர் இனி அடிச்சா அறைவேன்' என்றிருக்கிறார். குழம்பிப்போன சேவாக் ஏன் என்று கேட்க. 'நீ சிக்ஸர் அடிக்கப்போய் ஆட்டமிழந்தால் ஆட்டத்தில் இந்தியா வைத்துள்ள பிடிமானம் இல்லாமல் போய்விடும்' என்று பதில் வருகிறது.
தான் இறுதிவரை துடுப்பெடுத்தாட வேண்டும் என்று புரிந்துகொண்ட சேவாக் சச்சின் சொன்னது போலவே தான் 295 ஓட்டங்கள் எடுக்கும் வரை ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை. 295 ஓட்டங்களைப் பெற்ற பின்னர், இந்தியா 500ஐக் கடந்திருந்த நிலையில் சச்சினிடம் தான் இனி சிக்ஸர் அடிக்கப்போவதாக சிரித்துக்கொண்டே சொன்னாராம் சேவாக்.
சச்சினின் இந்த அறிவுரைதான் தன்னை மிகப்பெரிய ஓட்டப்பெறுமதிகளைக் குவிக்க வைத்தது என்கிறார் சேவாக்.
சச்சினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...
ஆனால் கொடுமை – சச்சின் இதுவரை ஒருமுறை தானும் முச்சதம் அடித்ததில்லை. (முதல்தரப் போட்டிகளிலும் கூட)
14 comments:
250 கூட அடிக்கவில்லை என்று நினைக்கிறேன்....
இது தான் கிறிக்கெற்...
செவாக் 2 முறை 300 ஓட்டங்களை கடந்திருக்கிறார்... ஆனால் சச்சின் ஒருமுறை கூட அடிக்கவில்லை......
பகிர்வுக்கு நன்றி அண்ணா....
ஐ... நானா முதலாவது....
வாழ்க வாழ்க.....
சச்சின் என்றவுடன் நினைவுக்கு வருவது ...இந்தியாவின் தோல்விகள்..
மன்னிக்கவும் ... நோ.. கொமெனட்ஸ்..
ஹி..ஹி...
ஒரு முறை போதும்..
நன்றி ..நன்றி...
சச்சினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...///////////
aamaanga rite...:)
ம்.. சுவாரசியமான தகவல், பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஆஹா இப்டிலாம் மிரட்டினா நான் அலுதுடுவன்னு shewag சொல்லலையோ
//சச்சினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...//
ஹா..ஹா.. ஆனால் சச்சின் சொல்லிட்டு அடிக்க இருந்தார், ஆனா ஹர்பஜன் சொல்லாம் அடிச்சுட்டாரே...
சுவாரசியமான பதிவு..:))
நல்ல பதிவு.
சுவாரசியமா இருந்துது.
இப்படி எல்லாம் மிரட்டுவாங்களா? ஹய்யோ ஹய்யோ நான் கூட விளையாட்டுக்கோ என நினைச்சேன்..
நல்ல பதிவு..., நன்றி..,
Don't know why you say there is a Harbajan in Sachin. Can't you see the difference?. Harbajan slapped Sreesanth in frustration, Sachin used the WORD to caution Sehwag, to make him play more responsibly.
Also what is wrong if Sachin didn't score triple hundreds?. Why he has to perform all feats?. He is still a great player, some people may not accept, but he is a class apart.
சச்சின் நன்றாக ஆடினால் இந்தியா தோற்றுவிடும் என்பது ஒரு மித் அல்லது மூடநம்பிக்கை.
சச்சின் என்கிற ஒரே ஒரு தனி மனிதன் நன்றாக ஆடி அவர் மட்டுமே ஜெயித்துத் தரவேண்டுமாம். மற்றவர்கள் எதற்கு இருக்கின்றனர்.
சச்சின் சொற்ப ரன்களில் அவுட் ஆனால் இந்தியா செயிக்குமாம். எ.கொ. சா. இது.
பல மேட்சுகளில் சச்சின் நன்றாக ஆடியும் இந்தியா ஏன் தோற்றது. அவர் மட்டும் நன்றாக விளையாடுவார். அவர் 100+ க்கு பிறகு அவுட் ஆனவுடன், மற்ற சோப்ளாங்கிகள் (சொம்பைகள்) அவரே போய்ட்டார்! இனி நான் ஏன் ஆடனும்னு உடனே டமால் டமால்னு அவுட் ஆவானுங்க. 15 ரன் உன்னால அடிக்க முடியாதுன்னா நீ எல்லாம் ஏண்டா பேட்ஸ்மேன். ஒரு பவுலர் பேட்டைக் கையில் கொடுத்தா ஒன்னுக்குப் போயிடுவான். நீயெல்லாம் எதுக்கு கிரிக்கெட்டுக்கு வந்தாய். தலைக்கு 10 ரன் எடுத்தால் இந்தியா பல மேட்சுகளில் செயித்து இருக்கும். இந்த டொப்புரி பவுலர்களோ, டொப்புரி பேட்ஸ் மேன்களோ பொறுப்பின்றி பல மேட்சுகளில் சச்சின் போனவுடன் டக்கவுட் ஆகி மேட்சைத் தோல்விக்கு தள்ளி இருக்கின்றனர். சச்சின் சீக்கிரத்தில் போனால்தான் ஆடுவேன் என அடம்பிடித்த தோனியை பார்த்திருக்கிறீர்கள் தானே!
Post a Comment