
ஒரு குறுகிய கால குடும்ப பயணம் (இந்தியாவுக்கு) போய்வந்த பிறகு கொஞ்ச நாளாக பதிவுலகம் வந்து பதிவிடவே சோம்பலாகவும், எதைப் பற்றி எழுத என்று போராகவும் இருக்கிறது..
பதிவிட நிறைய விஷயம் இருப்பது போலவும் இருக்கு. ஒன்றுமே இல்லாதது மாதிரியும் இருக்கு.. இதுக்கு ஏதாவது ப்லோகொபோபியா என்று பெயராக இருக்குமோ..
நண்பர்களின் பதிவுகள் மற்றும் நல்ல பதிவுகள்(சுவாரஸ்யம் அல்லது தரம்) பக்கம் போய் வாசித்து பின்னூட்டம் போடுவதோடு சரி.. என் பதிவுகளுக்கு முன்னர் நண்பர்கள் போட்ட பின்னூட்டங்களுக்கு பதில் போட தோனுதில்லையே.. அது ஏன்?
இதுக்கும் ஏதாவது பின்நூட்டபோபியா என்று நோய்க் கிருமிகள் காரணமாக இருக்கலாமோ??
கிரிக்கெட் பற்றி எழுதலாம்னா சாம்பியன்ஸ் லீக் கொஞ்சம் போரடிக்குது..
சினிமா பற்றி எழுதினாலே நாற்றமெடுக்குது..
அரசியல் சோக காமெடியாகப் போய்க் கிடக்கு.. யார் வந்து போயென்ன.
வாய்ச் சொல்லில் வீரரடி?
எது பற்றி எழுத?? உதவி ப்ளீஸ்..
இந்த யோசனையின் பொது தான் சுவாமி பதிவானந்தா என் கணினித் திரையில் காட்சி தந்து
"தம்பி லோஷா, நிறையப் பதிவுகள் பெண்டிங்கில் இருக்கே மறந்துவிட்டாயா? அவையெல்லாம் எழுதப்பா.. "என்று ஞாபகப் படுத்தினார்.
ஓகோ..
சிங்கைப் பயணம் அரை வழியில் நிற்குது இல்லையா? (நான் மறந்தாலும் விட மாட்டாங்க போலிருக்கே..)
கமல் பற்றி ஒரு பதிவும், ஒலிபரப்பு பற்றி ஒரு பதிவும்.. இரு தொடர் பதிவுகளும் எழுதவேண்டும் என்று நினைத்து சிறு குறிப்புக்களோடு இருக்கின்றன..
இன்று மாலை ஆதவன் முதல் காட்சி பார்க்கப் போகிறேன்.. பார்த்திட்டு வந்து அது பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்..
ஆனால் இத்தனை நாளாக எந்தவொரு பதிவும் இடாவிட்டாலும் 13 நாட்களாக சராசரியாக 200பேருக்கு மேல் என் தளத்துக்கு வந்திருக்காங்களே.. ரொம்ப நல்லவங்களான அவங்களுக்கு என் நன்றிகள்..
இப்ப ஸ்டார்ட் பண்ணிட்டமில்ல.. இனி அடிக்கடி வரும்.. ;)
நான் தனிப்பட்ட முறையில் பண்டிகைகள் கொண்டாடி பல வருடங்களாச்சு.. எனினும் கொண்டாடுவோருக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
எனினும் கொண்டாடும்போது ஒருவேளை உணவும் , முகத்தில் எந்தவொரு மலர்ச்சியும், மனதில் அமைதியும் இல்லாத எம் சகோதர,சகோதரிகள் பல லட்சம் பேர் இருப்பதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்..
பிற்சேர்க்கை - வட இந்திய ஸ்டைலில் இப்போது நம்மவர்களும் Happy Diwali என்று வாழ்த்து மடல்களும் மின் மடல்களும் அனுப்புகிறார்களே.. வெகுவிரைவில் தமிழிலும் டிவாளி என்றாகிவிடுமோ?? தமிழ் விரும்பிகள் குரல் கொடுக்க மாட்டார்களா?
என்ன தான் இருந்தாலும் எங்களுக்கென்னவோ இன்னமும் தீ(நெருப்பு) வாழி தானே..
இப்போது சின்னதாக ஒரு குரல் கொடுக்கும் சின்ன சந்தேகம்..
தெரிந்தோர் விடை தாருங்கள் -
நேற்று விஜய் டிவியில் தமிழில் ஸ்லம் டோக் மில்லியனயர் பார்த்தேன்.. இளைஞன் ஜமாலுக்கு(பட நாயகன்) தமிழில் குரல் கொடுத்திருப்பது யார்?
அலுவலக நண்பர் பிரதீப் சிம்புவாக இருக்கலாம் என்று சொன்னார்.. உண்மையா?
அனில் கபூருக்கு எஸ்.பீ.பீயின் குரலும்,இர்பான் கானுக்கு ராதாரவியின் குரலும் அப்படிப் பொருந்தியிருந்தன.
13 comments:
அது சிம்புதான். விகடனில் கூட இது பற்றி எழுதியிருந்தார்கள்.
உங்களுக்கு வந்திருக்கும் நோய்க்கு நயனோஃபோவியா எனப் பெயர் இதில் இருந்து மீள்வதற்க்கு தினமும் ஒரு விஜய் படங்கள் பாருங்கள். அதன்பிறகு தினமும் நாலு பதிவு எழுதுமளவு விடயங்கள் கிடைக்கும்.
Mostly in south india also they are calling "Diwali"...
//வந்தியத்தேவன்
அது சிம்புதான். விகடனில் கூட இது பற்றி எழுதியிருந்தார்கள்.
உங்களுக்கு வந்திருக்கும் நோய்க்கு நயனோஃபோவியா எனப் பெயர் இதில் இருந்து மீள்வதற்க்கு தினமும் ஒரு விஜய் படங்கள் பாருங்கள். அதன்பிறகு தினமும் நாலு பதிவு எழுதுமளவு விடயங்கள் கிடைக்கும்.
//
லோஷன் அண்ணா, உங்களுக்கு எதிரி வேற யாருமில்லை, கூடவே படிச்சவர்தான். பாத்து, கவனம்.
welcome back to Bloggers World....அசத்துங்க தல... அசத்துங்க...இந்தியாவிலிருந்து பல விடயங்கள் பதிவுகளிற்கு கொண்டுவந்திருபீங்க...go ahead
அது சிம்புதான்/////// Athu saringooo
good post asusual. (இந்தியாவுக்கு வந்துட்டு குளோபனை பார்க்காம போயிட்டீங்களே!)
இது சோம்பேறிபோமியா... உடன ஒரு ஜிம்முக்குப் போங்கோ... உங்கள 100+ கிலோ என்டு யாரோ நக்கல்டிச்சவங்கள். ஆக்சுவலி, உங்கள் தங்கையாக நான் பொங்கி எழுந்து இருக்கவேணும் அந்த கொமன்ட்டுக்கு... எனக்கு கொஞ்சம் நீச்சல் பயிற்சி அதிகமாகியதால், பொங்கி எழ திறானியில்லை :(
-Triumph
//எனினும் கொண்டாடும்போது ஒருவேளை உணவும் , முகத்தில் எந்தவொரு மலர்ச்சியும், மனதில் அமைதியும் இல்லாத எம் சகோதர,சகோதரிகள் பல லட்சம் பேர் இருப்பதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்..//
ம்ம்ம் ஒன்றும் சொலவதிற்கில்லை.... இந்தியா வரும்பொழுது சொல்லியிருக்கலாமே....
//எது பற்றி எழுத?? உதவி ப்ளீஸ்..//
ஒரு பத்திரிகையாளர்; சினிமா நடிக நடிகைகளுடன் நெருங்கிய உறவினைப் பேணுகின்ற ஒருத்தர் என்ற ரீதியில் புவனேஸ்வரி விடயத்தில் மௌனம் காக்கலாமோ?
"எங்களுக்கென்னவோ இன்னமும் தீ(நெருப்பு) வாழி தானே.. "
சரியாகச் சொன்னீர்கள்.
ம்ம்... நானும் கவனித்தேன்... திவாலி என்பது வட இந்தியாவில் தீபாவளியைக் குறிக்கும் பெயர். ஆனால் எம்மவர்களும் சுயம் இழந்து அதைப் பயன்படுத்துவது வருந்தத்தக்கது - எங்களுக்கு அது திவாலி அல்ல தீபாவளி - தீபம் என்றால் ஒளி, ஆவளி என்றால் வரிசை அப்படியாகவே தீபாவளி என்பது பிறந்தது என்று படித்தோமல்லவா?!
தமிழ்ப் பதிவர்கள் தமிழின் நிலைப்புக்கு உதவும் முகமாக சிறு சிறு நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும் - அதற்கான நேரம், காலம் இதுதான்.
ஆரம்பிப்போம்!
//எது பற்றி எழுத?? உதவி ப்ளீஸ்..//
சமூக அக்கறை இல்லாத எழுத்து என்னை பொறுத்தவரை குப்பை.
எழுத நிறைய இருக்கு ....
"அப்பன் , மாமனுக்கும் அரசாங்க வேல கிடைச்துங்குற ஒரே காரணத்துக்காக 'கழகத்த" சப்போர்ட் பண்ணும் கண்மணிகள் பற்றி "
"அடுத்த சாதிகார தலைவனுக்கும் , தொண்டனுக்கும் மட்டும் சாதி சாயம் பூசும் பதிவுலக நடுநிலையாளர்கள் பற்றி "
இப்படி சொல்லி கொண்டே போகலாம் ...
காரசாரமா தலைப்பி வேணும்னா .. இப்படி வைங்க ...
"அம்பது ரூவா பிரியாணி "
தமிழ்நாட்டுல கண்ணா பின்னான்னு சப்போர்ட் கிடைக்கும்.
Wel come back
எந்த போபியா என்றாலும் வந்தியரை நாடுங்கள், தகுந்த மருந்துகள் அவரிமுண்டு.
Post a Comment