September 18, 2009

ஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்


ஒரு பதிவுலக வாசகராக,பின்னர் பதிவராக, அண்மைக் காலத்தில் நண்பராக, தம்பி போல பழக்கமான ஆதிரைக்கு அண்மைக் காலத்தில் ஒரு பெரும் பிரச்சினை என்று அறிந்து மனம் மிக நொந்துபோனேன்..

எலியால் கிலி கொண்ட ஆதிரை..

வழமையாக எங்கள் இரவுநேர Gmail அரட்டையில் பல விஷயங்கள் அலசப்படுவது உங்களில் பெரும்பாலோனோர் அறிந்தவிஷயமே.. பிரபல,மூத்த பதிவரின் திருமணம் முதல் புல்லட்டின் காதல்கள்,வலையுலக மோதல்கள், கமலின் வழக்கு, நமீதா எடைக் குறைப்பு, நயனின் ஆடைக்கிழிசல் தொடக்கம் விளையாட்டு, அரசியல், பொருளாதாரம் என்று பல பயனுள்ள விஷயங்களும் இங்கே சாறு பிழியப்படுவதுண்டு..

ஒவ்வொருநாளும் சரியான நேரத்துக்கு வரும் ஆதிரை இரண்டு மூன்று நாள் மிஸ்ஸிங்.. என்னவென்று தேடிப் பார்த்தால் ஆளின் வீட்டில் எலிகளின் திருவிளையாடலால் மின்சாரம் துண்டிப்பாம்..

அடப்பாவமே என்று பார்த்தால், தொலைபேசியில் எடுத்து ஒரு அரைமணி நேரம் தங்கள் வீட்டு எலித் தொல்லைப் புராணமே பாடி அழுதுவிட்டார் ஆதிரை.. எனக்கும் வீட்டில் முன்பு எலித் தொல்லை இருந்ததால் அந்த துன்பம் நல்லாவே தெரிந்திருந்தது.

பார்க்க என் முன்னைய எலிப் பதிவு..

எலிகள் ஜோடியாக வீட்டிலே ரெக்கோர்ட் டான்ஸ் போடுமளவுக்கு நிலைமை மிக மோசம் என்று ஆதிரை சொன்னபோது, எனக்கு வீட்டில் இருந்ததை விட நிலைமை கட்டுக்கு மீறிப் போயிருப்பதை உணர்ந்துகொண்டேன்.

எலிக் குஞ்சுகளை பெற்றோரிடம் இருந்து தூர வீசியும், விட்டோம்மா பார் என்று மறுபடி வாரிசுகளை உருவாக்கி ஆதிரைக்கு சவால் விட்டுக் காட்டும் இனப்பெருக்கம் வேறு நடந்துகொண்டிருந்தது.

இதை விடக் கொடுமை இரண்டு நாள் ஆதிரை அலுவலகத்துக்கு லீவு.. ஆதிரை அணியும் டிறௌசர், சேர்ட் தொடக்கம் 'அத்தனை'யையும் கடித்து துவம்சம் செய்திருந்தன ஆதிரை வீட்டு எலிகள்..
(உடுத்திருந்த காரணத்தால் ஆதிரையின் சாரம் தப்பிக் கொண்டது என்று ஆறுதல் பட்டுக் கொண்டார் அவரின் உற்ற நண்பர் புல்லட்)

ஒவ்வொரு நாளும் லேட்டஸ்ட் ரஹ்மான்,யுவனின் பாடல்களுக்கு எலிகள் ஆடும் ரெக்கோர்ட் டான்சினால் நம்ம ஆதிரை தூக்கம் தொலைத்து நொந்து நூலாகி விட்டிருந்தார். உசிலை மணி கணக்கில் இருந்தவர் இரண்டே நாளில் லூஸ் மோகன் கணக்காக (சைசில்) மாறிவிட்டிருந்தார்..

இனியும் பார்த்திருந்தால் நட்புக்கே அர்த்தமில்லை என்று நினைத்தவனாக உதவட்டுமா என்று கேட்டால், வந்து காலிலே விழுந்துவிடுவார் போல.. "ப்ளீஸ் ஏதாவது செய்து என்னை எலியிடமிருந்து காப்பாற்றுங்கள்.. விசாப் பிள்ளையாரை விட்டிட்டு உங்களையே ஒவ்வொரு நாளும் கும்புடுறேன்" என்று தழு தழுக்க ஆரம்பித்தார்..

(என் உடல் அளவை வைத்து பிள்ளையாருடன் உள்குத்தாக ஒப்பிட்டாரோ தெரியல)

அடுத்த நாளே எனது அனைத்தும் அறிந்த அண்ணாமலை நண்பரான கஞ்சிபாயையும் அழைத்துக் கொண்டு ஆதிரை வீட்டுக்குப் போனேன்.

எல்லா தடயங்கள், சேத விபரங்களைப் பார்த்தவர், எலிக் குடும்பம் ஒன்று அல்ல, எலி சமுதாயமே அங்கே குடி பெயர்ந்திருப்பதை அறிந்துகொண்டார்..

"வாடகை எல்லாம் வாங்கிறீங்களோ?" கஞ்சிபாய் கேட்ட இந்தக் கேள்வி சீரியஸா கடியா என்று புரியவில்லை..

எலிப் பாஷாணம், மோர்டீன், தடியடிப் பிரயோகம்(எங்கள் வீட்டில் நாம் நடத்திய என் கவுண்டர் வழிமுறை இது தான்) என்று எதுவுமே பயனளிக்கவில்லை என்று அதிரை அழுததைக் கேட்ட கஞ்சிபாய், நீண்ட நேர சீரியஸ் சிந்தனைக்குப் பிறகு குரலை செருமிக் கொண்டு

"ஆதிரை, உங்கள் வீட்டில் நடக்கும் எலி அக்கிரமத்தை பார்த்தால் பாரம்பரிய எலி அழிப்பு முறை தான் சரிவரும் போல தெரியுது" என்றார்.

பாரம்பரிய முறையா? நானும் ஆதிரையும் கேள்வியோடும் கஞ்சிபாயைப் பார்த்தோம்..

"பூனை ஒன்றை வளர்த்தால் எல்லாம் ஈசி.. " கஞ்சிபாய் பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

"பூனை எண்டால் பால்,சாப்பாடு எண்டு செலவாகுமே.." ஆதிரை இழுத்தார்..

"உங்களை யார் பூனைக்கு சாப்பாடு போட சொன்னது? எலிக்கு கொஞ்ச சாப்பாடு வையுங்க.. இதனால எலிகள் உங்கள் வீட்டு பொருட்களை கடிக்காது.. பூனைக்கு பசிச்சா எலியைப் பிடிச்சு சாப்பிடட்டும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்பூடி??"
கஞ்சி பாய் கேட்டு முடிக்கவும் ஆதிரை கொலைவெறியோடு என்னை நோக்கி கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளோடு துரத்த ஆரம்பித்திருந்தார்..பி.கு - இந்தக் கதை கொஞ்சமும் கற்பனையில்லை..

இப்போது ஆதிரை எலியால் கடிபட்ட ஓட்டை விழுந்த ஒரு டிரௌசரோடு, இரவுகளில் எலி ரெக்கோர்ட் டான்சால் காணாமல் போன தூக்கக் கலக்கக் கண்களோடு வேகமான,துடிப்பான,மலிவான பூனை தேடிக் கொண்டிருப்பதாக வெள்ளவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதிவு பற்றியும் தலைப்பு பற்றியும் ஆதிரை மற்றும் அவர்,நான் சார்ந்த நண்பர்களோடும் கலந்துபேசி சம்மதம் பெறப்பட்டுள்ளது.. ஏற்கெனவே எனது விடியல் நிகழ்ச்சியிலும் சுருக்கமாக நகைச்சுவையாக 'கடி'க்கப்பட்டது..

32 comments:

வந்தியத்தேவன் said...

ஐயோ ஐயோ இந்த எலிக்கொடுமை எல்லாவீட்டிலும் இருக்கிறது. நாளையில் இருந்து நானும் பூனை வளர்க்கபோகின்றேன்.

புல்லட் said...

ஹாஹாஹ! பிள்ளையாருக்கு எலியே பரவாயில்லை என்று ஆதிரை எலிகடித்த இடத்தில் எண்ணெய் தடவிக்கொண்டு அழுவதாக கேள்வி..

எலியால் கிலி கொண்ட ஆதிரை க்கு செலக்ட் பண்ணின போட்டோவைப் நான் சிரித்த சிரிப்பில் ஆதிரைக்கு 3 தரமாவது பிரக்கடித்திருக்கும்.. ஹாஹாஹா..

வந்தி .. எலியென்று நினைத்து பூனை வேறு எதையாவது கடித்து வதை்து விடப்போகிறது.. கலியாணமாகாத பொடியன். கவனமா இருந்து கொள்ளுங்க.. ;)

யோ வாய்ஸ் (யோகா) said...

ஆஹா ஆதிரை இந்த கதையை சொல்லவே இல்லையே! அது தான் சென்ற மாதம் மலையகம் வாரதாக கூறி வராமல் விட்ட காரணமா?

ஆதிரை சொல்லியிருந்தால் எலி பிடிக்க நல்ல ஐடியாக்கள் கொடுத்திருப்பேனே? (கைவசம் ஐடியா வங்கியே இருக்கிறது)

வேந்தன் said...

//வந்தி .. எலியென்று நினைத்து பூனை வேறு எதையாவது கடித்து வதை்து விடப்போகிறது..//
புல்லட், இப்படி எல்லாம் பயப்படுத்தக் கூடாது....
வந்தி அண்ணே பாவம்!

சுபானு said...

//இப்போது ஆதிரை எலியால் கடிபட்ட ஓட்டை விழுந்த ஒரு டிரௌசரோடு, இரவுகளில் எலி ரெக்கோர்ட் டான்சால் காணாமல் போன தூக்கக் கலக்கக் கண்களோடு வேகமான,துடிப்பான,மலிவான பூனை தேடிக் கொண்டிருப்பதாக வெள்ளவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுதானா.. நேற்று வெள்ளவத்தையில் காணும்போது அந்தாள் ஒவ்வொரு குப்பை மேடாப் போய் ஏதேதோவிற்குப் பின்னால எல்லாம் ஓடிக் கொண்டிருந்தவர்.. ?? காரணம் இப்பத்தான் விளங்குது... !!!

சுபானு said...

//வந்தி .. எலியென்று நினைத்து பூனை வேறு எதையாவது கடித்து வதை்து விடப்போகிறது.. கலியாணமாகாத பொடியன். கவனமா இருந்து கொள்ளுங்க.. ;)//


:D LOL

சுபானு said...

//உங்களை யார் பூனைக்கு சாப்பாடு போட சொன்னது? எலிக்கு கொஞ்ச சாப்பாடு வையுங்க.. இதனால எலிகள் உங்கள் வீட்டு பொருட்களை கடிக்காது.. பூனைக்கு பசிச்சா எலியைப் பிடிச்சு சாப்பிடட்டும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எப்பூடி??"

மூட்டப்பூச்சியைப் பிடிக்கவும் பிடித்து கல்லில் வைத்து அடிக்கவும் என்கிற கணக்கா கிடக்கு கஞ்சியாயோட ஐடியா!!! வயிறு நோகுது.. சிரிச்சுச் சிரிச்சு.. :)

Subankan said...

எலியப்பத்தி எழுதுறதெண்டால் உங்களுக்குக் கொண்டாட்டம் போல. உந்த எலியை விரட்ட ஒரே வழி ஆதிரை அண்ணா ஒரு அண்ணியைத் தேடிக்கறதுதான். ( ஐடியா உபயம் - உங்கள் எலி வேட்டை பதிவு).

கார்த்தி said...

தலைப்பை பாத்து கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சிட்டன் ஆன இது அதில்லை...

இனி பூனையின்ர தொல்லைக்கு நாயா வேண்ட போறிங்க!!! பேசமா எலிகள் வந்து ஆடுற நேரம் சிறிகாந்தேவான்ர இப்பத்தய பாட்டையோ இல்லாட்டி பேரரசுவின்ர படத்தையோ போடுங்க!! அது விட்டாக்காணும் எண்டு ஓடியே போயிரும்....

யோ வாய்ஸ் (யோகா) said...

ஆதிரைக்கு ”எலித்தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி?????” என ஒரு ஸ்பெஷல் பதிவு அடுத்த வாரம் போட இருக்கிறேன்....

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) said...
ஆதிரைக்கு ”எலித்தொல்லையிலிருந்து தப்பிப்பது எப்படி?????” என ஒரு ஸ்பெஷல் பதிவு அடுத்த வாரம் போட இருக்கிறேன்....//


நான் எலிப்பிடிப்போர் சங்கம் ஒன்று ஆரம்பிக்க இருக்கின்றேன். அதற்கு யோகா உங்களைத்தான் தலைவராகப்போட இருக்கின்றேன். விரைவில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

சந்ரு said...

ஆதிரைக்கு ஏற்பட்ட எலித்தொல்லை காரணமாக ஆதிரையின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை கொண்ட பலர் சேர்ந்து எலிப்பிடிக்கும் சங்கத்தினை உடனடியாக அவசர அவசரமாக ஆரம்பித்துள்ளனர்.


தலைவர் ; யோகா


செயலாளர் ; வந்தி


பொருளாளர் : புல்லட்


உப தலைவர் : சதீஸ்


உப செயலாளர் : சுபானு


கணக்காய்வாளர் : கார்த்தி


ஆலோசகர்கள் : லோஷன், கஞ்சிபாய்


உறுப்பினர்கள் : நிறையபேர் என்பதால இணைக்கப்படவில்லை.


ஊடகப்பேச்சாளர் : புல்லட் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.


ஒருங்கிணைப்பாளர் : சந்ரு (யாரு நம்மதான்)

சந்ரு said...

நண்பர் ஆதிரை செய்வதறியாது அழுது கொண்டிருப்பதாக அறிந்தேன். அவருக்காக பல திட்டங்களை முன்னெடுப்போம். அதிகமாக பூனைகளை வீடுகளில் வைத்திருக்கும் நண்பர்கள் ஆதிரைக்கு கொடுத்துதவுவதொடு. முடிந்தால் பூனை வளர்ப்போர் சங்கம் ஒன்றினையும் ஆரம்பியுங்கள்.


எமது எளிப்பிடிப்போர் சங்கத்திலும் உடனடியாக இணைந்து கொள்ளுங்கள். இணைந்து கொண்டால் கஞ்சிபாய் அவர்களால் விரைவில் வெளியிடப்பட இருக்கின்ற எலியோடு நண்பர்களாவது எப்படி எனும் புத்தகமும், எலியோடு வாழ்ந்த ஆதிரை எனும் புத்தகமும் இலவசமாக வழங்கப்படும்.

பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.

யோ வாய்ஸ் (யோகா) said...

//சந்ரு has left a new comment on the post "ஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்":

ஆதிரைக்கு ஏற்பட்ட எலித்தொல்லை காரணமாக ஆதிரையின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை கொண்ட பலர் சேர்ந்து எலிப்பிடிக்கும் சங்கத்தினை உடனடியாக அவசர அவசரமாக ஆரம்பித்துள்ளனர்.


தலைவர் ; யோகா


செயலாளர் ; வந்தி


பொருளாளர் : புல்லட் //

சந்ரு எனக்கு பொருளாளர் பதவிதான் வேண்டும். எதற்கும் உதவாத இந்த தலைவர் பதவி வேண்டாம் சேவை செய்ய இயலுமான பொருளாளர் பதவிதான் வேண்டும். சும்மா பொருளாளர் பதவியை வைத்து கொண்டு என்ன சேவை செய்யலாம் என எல்லாம் கேட்கக்கூடாது. அது ரகசியம்

வந்தியத்தேவன் said...

என்ன பிடிக்கிறாய் ஆதிரை
எலி பிடிக்கிறேன் புல்லட்டு
பொத்திப் பொத்திப் பிடி ஆதிரை
பூறிக் கொண்டோடுது புல்லட்டு

இந்தப் பழைய பாடல் ஞாபகத்திற்ற்கு வருகிறது. ஆதிரை கடந்த இரண்டு நாட்களாக புல்லட்டின் ரூமில் எலிக்குப் பயந்து தஞ்சம் என்ற நிஜத்தை ஏனோ லோஷன் மறைத்துவிட்டார்.

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) said...

சந்ரு எனக்கு பொருளாளர் பதவிதான் வேண்டும். எதற்கும் உதவாத இந்த தலைவர் பதவி வேண்டாம் சேவை செய்ய இயலுமான பொருளாளர் பதவிதான் வேண்டும். சும்மா பொருளாளர் பதவியை வைத்து கொண்டு என்ன சேவை செய்யலாம் என எல்லாம் கேட்கக்கூடாது. அது ரகசியம்//அப்போ பூனை பிடிப்போர் சங்கத்தில் சேர்த்துவிடுகின்றேன்.

யோ வாய்ஸ் (யோகா) said...

// சந்ரு said...
//யோ வாய்ஸ் (யோகா) said...

சந்ரு எனக்கு பொருளாளர் பதவிதான் வேண்டும். எதற்கும் உதவாத இந்த தலைவர் பதவி வேண்டாம் சேவை செய்ய இயலுமான பொருளாளர் பதவிதான் வேண்டும். சும்மா பொருளாளர் பதவியை வைத்து கொண்டு என்ன சேவை செய்யலாம் என எல்லாம் கேட்கக்கூடாது. அது ரகசியம்//அப்போ பூனை பிடிப்போர் சங்கத்தில் //

எந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஆனால் ஒரே நிபந்தனை பொருளாளர் பதவி வேண்டும்..

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) said...

எந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஆனால் ஒரே நிபந்தனை பொருளாளர் பதவி வேண்டும்..//ரொம்பவே அடம் பிடிக்கிறிங்க யோகா...

அடம்பிடித்தால் மதம் பிடித்தோர் சங்கத்திலே நீங்கள் பொருளாளராக இருந்து நடத்திய நாடகங்களை எல்லாம் தொடர் பதிவாக எழுதவேண்டி வரும். எழுதட்டுமா?

யோ வாய்ஸ் (யோகா) said...

//சந்ரு to me
ரொம்பவே அடம் பிடிக்கிறிங்க யோகா...

அடம்பிடித்தால் மதம் பிடித்தோர் சங்கத்திலே நீங்கள் பொருளாளராக இருந்து நடத்திய நாடகங்களை எல்லாம் தொடர் பதிவாக எழுதவேண்டி வரும். எழுதட்டுமா? //

எனக்கு பொருளார் பதவி தருவதாக இருந்தால் என் சுய சரிதை எழுத அனுமதி தரப்படும்

கனககோபி said...

//எலிக் குஞ்சுகளை பெற்றோரிடம் இருந்து தூர வீசியும், விட்டோம்மா பார் என்று மறுபடி வாரிசுகளை உருவாக்கி ஆதிரைக்கு சவால் விட்டுக் காட்டும் இனப்பெருக்கம் வேறு நடந்துகொண்டிருந்தது. //

ஆசிய எலிகள் அப்பிடித் தான் இருக்கும்... ;)

எலிபிடிப்போர் சங்கத்தில் புல்லட்டிற்கு பொருளாளர் பதவியும், ஊடகப் பேச்சாளர் பதவியும் கொடுத்துவிட்டு எனக்கொரு பதவியும் தரைமைக்கு கண்டிக்கிறேன்...

கரவைக்குரல் said...

நேரடியாக அங்கிருந்து செயற்பட்டு நேரடி ரிப்போர்ட் ஒன்றை சுவாரஷ்யமாக தந்திருக்கின்றீர்கள் லோஷன், நன்று

அதைவிட தொடர்ந்தும் வெள்ளவத்தையில் பூனைதேடுவதாக சொல்லியிருக்கிறீங்க
அந்த பூனை தேடும் படலத்தையும் உங்கள் பாணியில் நகைச்சுவையாக கேட்க எங்களுக்கு ஆசை லோஷன்
தருவீர்களா?

பதிவு சிறப்பு,

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) said...
எனக்கு பொருளார் பதவி தருவதாக இருந்தால் என் சுய சரிதை எழுத அனுமதி தரப்படும்//


நான் உங்கள் உழல்களை வெளிக்கொண்டுவர விரும்பவில்லை இருந்தும். உங்களுக்கு பூனை வளர்ப்போர் சங்கத்துக்கு பொருளாளர் பதவி வழங்குகின்றேன்.

சந்ரு said...

//கனககோபி said...


எலிபிடிப்போர் சங்கத்தில் புல்லட்டிற்கு பொருளாளர் பதவியும், ஊடகப் பேச்சாளர் பதவியும் கொடுத்துவிட்டு எனக்கொரு பதவியும் தரைமைக்கு கண்டிக்கிறேன்...//


ஏன் கவலைப்படுகின்றீர்கள் இன்னும் பல பதவிகள் இருக்கின்றன. உங்களுக்கு கொள்கை (கொள்ளை) பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படுகிறது.

R.V.Raj said...

ஐயோ பாவம்! இந்த பூனை வாங்கிற சரி. வெளியில் செல்லும்போது குறுக்கால வந்திடுச்சின்னா? கண்சிபாய் ஏதோ சதி பண்ணுறார் கவனமப்பா.

Anonymous said...

அட பாவியளே.. உருப்படுவியளே... பாவம்... சகோதரன் ஆதிரை... அவருக்கு உதவமால், என்ன எக்காளிப்பு இங்க... ச்ச்ச்ச... உண்மையாக அவ்வளவு எலி தொல்லையா ஆதி அண்ணா..

சுபானு said...

@வந்தியத்தேவன்
//என்ன பிடிக்கிறாய் ஆதிரை
எலி பிடிக்கிறேன் புல்லட்டு
பொத்திப் பொத்திப் பிடி ஆதிரை
பூறிக் கொண்டோடுது புல்லட்டு..


கற்பனை நல்லாயிருக்கு... இன்றைக்கு வெற்றி செய்தியில எலிக்காச்சல் பரவுதாம் எனவும் சொன்னாங்க.. இப்பதான் புரியுது.. ஆதிரை கவனம்...

Mayooresan said...

என்ன கொடுமைசார் இது. அதுதான் ஆதிரை அண்டைக்கு வெள்ளவத்தை குப்பைத் தட்டிப் பக்கமா ஏதோ தேடிக் கொண்டிருந்தவர். நான் நினைச்சன் பொடி எதையோ தொலைச்சுப் போட்டுதாக்கும் எண்டு. இப்பத்தான் விளங்குது எல்லாம் பூனைக்குட்டி தேடியிருக்கார் எண்டு.

வேந்தன் said...

கார்ட்டூன் : ஆதிரை ஸ்பெஸல்

http://skylinelk.blogspot.com/2009/09/blog-post_18.html

Sinthu said...

அண்ணா தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், உங்கள் எண்ணக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..(உள்ளுக்குள்ள எசாதீஎங்க அண்ணா............. உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆசை அது தான்...)

இளந்தி said...

வணக்கம் லோசன் அண்ணா மற்றும் நண்பர்களே!!
நான் இந்த வலையுலகிற்கு புதியவன். உங்கள் பதிவை பார்த்ததன் விளைவு நானும் எழுத ஆரம்பித்துள்ளேன்.
லோசனே எழுதும் போது நான் எழுத கூடாதா என்று வந்தவன் என்று நினைக்காதீங்க அண்ணா...
elanthit@gmail.com

kanneer said...

தென்கச்சி கோ. சுவாமிநாதன் அய்யா அவர்கள் வானொலிஊடே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் இன்று எம்முடன் இல்லை. ஒரு வானொலி கலைஞனான நீங்கள் இவரை பற்றி உடன் ஒரு பதிவிடுங்கள்...

http://www.youtube.com/watch?v=hmsyVwZkz4E&feature=PlayList&p=BD2875EF0F32A4B0&index=2

Anonymous said...

kanchipaiya aathirayin veeddukku kooddiddu ponathe thappu, kooddiddu ponathum illaamal avaridam poi idea keddeergazhe muthalla ungazha uthaikkanum

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified