எனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய பதிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்..
சிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 9
இருவாரகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சி.சி.சி... (சிங்கப்பூரில் சிங்கிளாய் சிங்கம்)
கண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.
கண்காட்சியின் முதல் நாளிரவே எங்களுக்கு ஒரு வித்தியாசமான இரவு விருந்து காத்திருந்தது. எங்கள் நிறுவனத் தலைவரால் வழங்கப்பட்ட அந்த இரவு விருந்து சிங்கப்பூரின் சொகுசுஃசெல்வந்த பகுதியான ஒர்ச்சார்ட் பகுதியில் உள்ள ஒரு திறந்த உணவுத்தொகுதியில் (open food complex) நடந்தது.
நான் கண்டு வியப்படைந்த சில வினோதங்கள் & சுவாரஸ்யங்கள்
உணவு & குடிவகை பரிமாறிய உடனேயே பணம் கொடுத்துவிட வேண்டும். உணவகத்தில் உணவுகள் பரிமாறுவதற்கும், பானவகைகள் (அது குடிநீர் என்றாலும் கூட) பரிமாறுவதற்கும் வேறு வேறு நிறுவனங்கள்.
ஒரு சதம் கூட டிப்ஸ் கொடுக்கத் தேவையில்லை.
மீதிச் சில்லறை ஒரு சதம் கூடக்குறையாமல் கொண்டுவந்து தருகிறார்கள்.
கோழி, மீன், இறால், நண்டு முதல் வாத்து, தவளை, பாம்பு என்று நான் கண்ட உணவுகள் பலப்பல...
நம் பெரியவர் முழு வாத்து வறுவல் ஒன்றை எடுத்து பழக்கப்பட்டவர் என்பதால் அடித்தாட ஆரம்பித்தார்.
எனினும் சிங்கப்பூரில் புதிதாய் உணவுண்ணும் எங்களுக்கு முதலிலேயே எச்சரிக்கை கொடுத்திருந்தார்.. பழக்கமில்லாத உணவுகளால் வயிற்று உபாதைகளைத் தேடிக் கொள்ளவேண்டாமென்று.
நானும் வந்த இடத்தில் வயிற்றோடு வம்பு ஏன் என்று sea food மற்றும் சிக்கனோடு திருப்தி கொண்டேன்.
அந்தத் திறந்தவெளி உணகத்தில் என்னை அசத்திய இன்னுமொரு விஷயம் - அங்கே பொருத்தப்பட்டிருந்த நீராவியை வேகமாகப் பீய்ச்சியடித்து அந்த இடத்தையே குளுமைப்படுத்திக் கொண்டிருந்த ஒரு மினி இயற்கை AC.
இன்னுமொரு அசத்தல் விஷயம் தொட்டிகளில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களில் எதுவேண்டும் என்று நாம் காட்டுகிறோமோ அதை எடுத்து சமைத்து தருகிறார்கள். நல்ல காலம் தவளை,பாம்புகள் அங்கே காணப்படவில்லை..
அந்த விருந்தின் பின்னர் சிஙகப்பூரின் செல்வச் செழிப்பான நகர்ப்புற இரவு வீதிகளை வலம் வந்ததே ஒரு புதிய சுகானுபவம்.
எங்கு பார்த்தாலும் கட்டையாக, கவர்ச்சியாக உடையணிந்த கட்டழகிகள்... கையைப் பிடித்து உரிமையோடு அழைக்கிறார்கள். கொஞ்சம் மனசு சலனப்பட்டாலும் இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.
தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா, ஏன் இலங்கை, இந்தியப் பெண்கள் கூடக்கிடைப்பார்களாம்.
முதல் நாளன்று கண்காட்சி சாலைக்குள்ளேயே நாம் அங்கும் இங்குமாக நடந்த தூரம் மட்டும் ஒரு 15கிலோமீட்டராவது இருக்கும் என நிஷாந்த ஒரு கணக்கு சொல்லியிருந்தார்.
கால்களும், கண்களும் களைக்க நடந்து வேடிக்கை பார்த்துவிட்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிய போது நேரம் ஒருமணி தாண்டியிருக்கும்.
எனக்கு இது நாங்கள் தங்கியிருந்த இடம் தானா என்று அதிர்ச்சி!
அந்த வீதியில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சி உடைகளோடு அழகான இளம்பெண்கள்... எல்லோரும் அரைகுறை ஆடைகளுடன்; முகத்தில் ரெடிமேட் புன்iகைகள்; கண்களில் அழைப்பு!
அதிர்ச்சி, வியப்புடன் நிஷாந்த, டினால் என்போரைப் பார்க்க, அவர்கள் இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்பது போல கண்களால் காட்டினார்கள்.
டினால் கிட்டேவந்து "கடந்த வருடங்களில் இதைவிட மோசம்; இப்போது பொலிஸ் கெடுபிடி கொஞ்சம் அதிகமென்பதால் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்றார்.
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.
ஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணுக்குள்ளே நிற்கிறது.
அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.
பல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின் குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) "தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'"
அடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்!
என்னைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஒரு இரவு உலகம்தான்!

பகல் விடிவதே ரொம்பத் தாமதமாகவும் - பகல் முழுவதும் ஒரு சோம்பல் தனத்துடன் இயங்கும் சிங்கப்பூர் இரவுகளில் உல்லாசமாகவும், வேகமாகவும் இருப்பதைக் கண்டு வியந்துள்ளேன்.
இதுபற்றிப் பின்னர் டொன்லீ, விசாகன் ஆகிய சிங்கப்பூர் வாசிகளுடன் பேசியபோது நான் இருந்த இடம் சிலவேளை அவ்வாறான தோற்றத்தைத் தந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.
ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.
நாங்கள் தேநீர் அருந்தும் நேரங்களிலும் கைகளில் பியர் கோப்பைகளுடன். இரவுகளிலோ ஒரு இந்திர உலகம் தான்.. கை பிடித்து கட்டிலுக்கு கூப்பிடும் கன்னியரும், தண்ணீரும் காசுமாய் அலையும் ஆண்களும் சிங்கப்பூர் ஒரு உல்லாசபுரி..
அடுத்த நாள் எங்கள் தலைவர் எம்மை சிங்கப்பூரின் உச்ச ஆடம்பர ஐந்து நட்ச்சத்திர விடுதியில் விருந்தளித்து மகிழ்வித்தார்.. எங்கள் வயிறுகளின் முன்னாள் பாவம் அவர் தனது கிரெடிட் கார்டை முற்றாக முடித்தாரோ என்னவோ?
சாப்பிட்ட பின்னர் சொன்னார் சிங்கப்பூர் வந்தால் இங்கே கட்டாயம் போயே ஆகவேண்டும் என்று.. அவர் அழைத்துப் போன இடம் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான ஒரு இரவு விடுதி..
அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே..
38 comments:
//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //
பொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானே!பயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே?
//அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//
டெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.
//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//
நம்பிட்டோம் ஐயா
//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //
ரொம்பவும் எதிர்பார்க்கிறோம்.
அடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்!//
மன்னிக்கவும்.. கண்டோம் என்பதை காண்டம் என வாசித்துத் தொலைத்துவிட்டேன்..
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
அண்ணா வாய்ப்பை தவற விட்டிட்டீங்களே(கைய பிடித்து இழுத்தும்)...... கவனம் HIV......
//ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.//
லோஷன் இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டது, மலேசியாவில் நண்பரைக் கேட்டபோது சொன்னார் சமைப்பதிலும் விட உணவகங்களில் சாப்பிடுவது மலிவு என்று, ஆனால் சிங்கப்பூர் உணவகங்கள் பயங்கர விலை. அத்துடன் வீடுகளில் கூட நாம் சென்றால் டீ, கோப்பிக்கு பதில் பியரே தருகின்றார்கள். சிலவேளை டீ, கோப்பி தயாரிக்க நேரம் போகும் என்பதால் இந்த ஏற்பாடோ தெரியாது.
//பல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின்//
அங்கே நீங்கள் ஓரினச்சேர்கையாளர்களைக் கூட தனித்துக்காணலாம், உதாரணமாக இரண்டு பெண்கள் என்றால் அதில் ஒருவர் ஆண்கள் போல் தலைமுடி வெட்டியிருப்பார், உடுத்தியிருப்பார், இன்னொருவர் பெண்போல் இருப்பார். ஆண்களில் பெரும்பாலும் வித்தியாசம் காணமுடியவில்லை, தோளில் கைபோட்டுக்கொண்டுபோனால் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றான் நண்பன்.
இன்னொரு விடயம் ஸ்ருடண்ட் விசாவில் சென்றால் கிழமைக்கு 20 மணித்தியாலம் தான் வேலை செய்யலாம், ஆனால் அதே கட்டிலுக்கு இழுக்கு தொழில் என்றால் எத்தனை மணித்தியாலமும் வேலை செய்யலாம். சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.
imm அடுத்த முறை தாயகம் வரும் போது தாய்லாந்து சரி சென்று தான் வாறது
அதுசரி சிங்கம் ஒருக்கா நெதெர்லாந்து வந்து போனால் என்ன. ரொம்ப கேட்கினம் தங்களை !!!
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.///
இங்கே ஐம்பது Euro 15 நிமிடம் !!!
(Amsterdam il)
கழட்டி போட்டு நிக்கவே 10 நிமிடம் போயிடுமாமே !!!
"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'"//
இங்கே ஆண்களும் பெண்களும் இழுக்கிறார்கள், உரசுகிறார்கள். கொஞ்சம் சொல்ல போனால் கஞ்சா, குடு, சிகப்பு விளக்கு, ஓரினச்சேர்க்கை , களியாட்டம் என்று எல்லாமே பிரபல்யமான பிரதேசத்தில் சுவாமிகள் மனம் கூட சோர்வு இல்லாமல் தனது இறுதிவருட பல்கலை வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறார்
//கண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.//
புரிந்து வைத்து இருக்கிறிங்களே அண்ணா...
//அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//
கையைப்பிடித்து இழுத்தவள் விசாரித்து இருந்தால் சில வேளை தூக்கிக்கொண்டு போயிருப்பாள் தப்பிவிட்டிங்க அண்ணா. (தூக்க முடியாதே)
//சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.//
உண்மைதான் நானும் அறிந்தேன். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பெண்கள் அதிகம் இந்த தொழிலில் இருப்பதாக
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.
ஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணுக்குள்ளே நிற்கிறது.//
அவ்வவ்வவ்வ!
Sinhalese in Singapore
http://www.youtube.com/watch?v=acCCPcszXSU
முதலில மதுவின் காலியான இருக்கை.. பிறகு வந்தியின் சட்டடே நைட்.. இப்ப உங்களின் கெலாங்கில் கைபிடித்திழுத்த கதை..
என்ன எல்லாரும் தங்கட தங்கட பங்குக்கு தங்கட கற்பை உறுதி செய்யுறீனமா?
இந்த பதிவை அண்ணி வாசிக்குமு்போது அவர்முகத்தில் ஒரு நமுட்டுச்சிரிப்பு இழையோடியதை கவனித்தீர்களா ?
;)
//எனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய பதிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்...
முன்னைய பதிவுகளை வாசித்து மறந்திருந்த என்னைப் போன்றோருக்கும்...
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள்.
உங்கள் கையைப் பிடித்து இழுப்பவள் எல்லோரும் அழகாக இருக்கிறாளே... அதெப்படி..?
//குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) "தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'"
உங்களுக்கே இவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் 65 வயதை விட்டு வைப்பார்களா??
வணக்கம் அண்ணா.
நான் உங்கள் blog க்கு புதியவன். but உங்கள் ரசிகரில் பழையவன்.
உங்களது பயண அனுபவங்கள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததோ இல்லையோ, எனக்கு அது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
உங்களது பதிவை வாசித்தது, சிங்கப்பூரையே நேரில் பார்த்த அனுபவத்தை என்னுள் ஏற்படுத்தியது.
but உங்கள் சஸ்பென்ஸ் அனும லொள்ளுதான் தாங்க முடியவில்லை. உங்களது அடுத்த சி.சி.சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

///அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது///
நம்பீட்டம்...
/Sinhalese in Singapore
http://www.youtube.com/watch?v=acCCPcszXSU//
ஹாஹா!! அதிர்ச்சியாக இருக்கிறது சிங்களத்திகள் சிங்கப்பூரில் இதைத்தான் செய்கின்றார்களா??
ம்ம்ம் நடத்துங்க....
பதிவுகள் அருமை... ஆனால் தலைப்பு தான் பொருத்தமிலலை போன்று தெரியுது. சிஙகிளாய் ஒரு இடமும் போகலயே பிறகு தலைப்பில் மட்டும் ஏன் சிங்கிள்.... அது சரி சிங்கப்பூருக்கு சிங்கிளாய் லோஷன் அணணா போயிருந்தால்... வரும் போது கரணட் அடிச்ச வடிவேலு மாதிரி தான் வந்திருப்பார் (எல்லாம் அந்த கன்னியரின் அன்புத்தாக்குதல் தான்) சிங்கப்பூருக்கு சிஙகிளாய் மட்டும் போவதிலலை என்று முடிவெடுத்திருக்கிறேன்..... எல்லாம் ஒரு எக்ஸ்ரா அலர்ட் தான்....
யோ வாய்ஸ் (யோகா) said...
//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //
பொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானே!பயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே?
//அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//
டெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.
//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//
நம்பிட்டோம் ஐயா
//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //
ரொம்பவும் எதிர்பார்க்கிறோம்.//
வாங்க யோகா.. போட்டு தாக்குறதுன்னு வந்து இருக்கீங்க,.. நீங்க எல்லாம் கேட்டுப் போய் விடக் கூடாது என்று தான் நம்பர் வாங்கவில்லை.. ;)
நீங்க எதை எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியுது.. அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
Anonymous said...
அடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்!//
மன்னிக்கவும்.. கண்டோம் என்பதை காண்டம் என வாசித்துத் தொலைத்துவிட்டேன்..//
பார்த்து பார்த்து..
====================
அஜுவத் said...
அண்ணா வாய்ப்பை தவற விட்டிட்டீங்களே(கைய பிடித்து இழுத்தும்)...... கவனம் HIV......//
அதனால் தானே விட்டேன்.. ;) ஆரியக் கூத்தாடினாலும்.. ;)
வந்தியத்தேவன் said...
//ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.//
லோஷன் இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டது, மலேசியாவில் நண்பரைக் கேட்டபோது சொன்னார் சமைப்பதிலும் விட உணவகங்களில் சாப்பிடுவது மலிவு என்று, ஆனால் சிங்கப்பூர் உணவகங்கள் பயங்கர விலை. அத்துடன் வீடுகளில் கூட நாம் சென்றால் டீ, கோப்பிக்கு பதில் பியரே தருகின்றார்கள். சிலவேளை டீ, கோப்பி தயாரிக்க நேரம் போகும் என்பதால் இந்த ஏற்பாடோ தெரியாது.
//பல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின்//
அங்கே நீங்கள் ஓரினச்சேர்கையாளர்களைக் கூட தனித்துக்காணலாம், உதாரணமாக இரண்டு பெண்கள் என்றால் அதில் ஒருவர் ஆண்கள் போல் தலைமுடி வெட்டியிருப்பார், உடுத்தியிருப்பார், இன்னொருவர் பெண்போல் இருப்பார். ஆண்களில் பெரும்பாலும் வித்தியாசம் காணமுடியவில்லை, தோளில் கைபோட்டுக்கொண்டுபோனால் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றான் நண்பன்.
இன்னொரு விடயம் ஸ்ருடண்ட் விசாவில் சென்றால் கிழமைக்கு 20 மணித்தியாலம் தான் வேலை செய்யலாம், ஆனால் அதே கட்டிலுக்கு இழுக்கு தொழில் என்றால் எத்தனை மணித்தியாலமும் வேலை செய்யலாம். சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.//
நன்றி வந்தி.. நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை தான்.. அனுபவம் பேசுது போல.. ;)
நீங்கள் சொன்ன அந்தத் தொழில் விஷயமும் அமோகமாக நடக்கிறதாம்..
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
என்ன அண்ணா, இன்னுமா தொடர்கதை முடியேலை..? :-))
ம்..சிங்கையில் பாம்புக்கறி எல்லாம் கிடையாது. தவளை உண்டு. :-))
எங்களுக்கு சந்திப்பில் சொல்ல மறந்த கதை எல்லாம் பதிவில் வெளியே வருது..:-))))
neenga solvathai naanga nampiddom athu sari annathe ithaipatti mrs loshan enna solluranga eathum ragalai illaye
அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.
வலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........
அத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.
மற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன......
www.daarbaar.blogspot.com
”வண்ணாரஸ் பட்டுக்கட்டி
அல்லிப்பூ கொண்டை வச்சு.....”
அப்பிடியாரயும் பார்க்கலயா அண்ணா???
very Interesting but.//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //
பொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானே!பயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே?
//அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//
டெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.
//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//
நம்பிட்டோம் ஐயா
//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //
ரொம்பவும் எதிர்பார்க்கிறோம்.
this is very very interesting anna.
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... muthala coment than vasippathu athukku piragu than unga pathiva vasikkirathu
ப்ரியானந்த சுவாமிகள் said...
imm அடுத்த முறை தாயகம் வரும் போது தாய்லாந்து சரி சென்று தான் வாறது
அதுசரி சிங்கம் ஒருக்கா நெதெர்லாந்து வந்து போனால் என்ன. ரொம்ப கேட்கினம் தங்களை !!!//
sponsor பண்ணினால் வரமாட்டேன்னு சொல்லப் போறேனா? அதுவும் உங்கள் ஆசிரம வாழ்க்கை பற்றி இவ்வளவு அறிந்த பிறகு.. ;)
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.///
இங்கே ஐம்பது Euro 15 நிமிடம் !!!
(Amsterdam il)
கழட்டி போட்டு நிக்கவே 10 நிமிடம் போயிடுமாமே !!!//
பரவாயில்லையே விபரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. நடக்கட்டும் நடக்கட்டும்.. ;)
"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'"//
இங்கே ஆண்களும் பெண்களும் இழுக்கிறார்கள், உரசுகிறார்கள். கொஞ்சம் சொல்ல போனால் கஞ்சா, குடு, சிகப்பு விளக்கு, ஓரினச்சேர்க்கை , களியாட்டம் என்று எல்லாமே பிரபல்யமான பிரதேசத்தில் சுவாமிகள் மனம் கூட சோர்வு இல்லாமல் தனது இறுதிவருட பல்கலை வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறார்//
அப்ப வாழ்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.. ;) உங்கள் ஆசீர்வாதம் தொடர்ந்து எனக்கு கிடைக்கட்டும்
சந்ரு said...
//கண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.//
புரிந்து வைத்து இருக்கிறிங்களே அண்ணா...
//அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//
கையைப்பிடித்து இழுத்தவள் விசாரித்து இருந்தால் சில வேளை தூக்கிக்கொண்டு போயிருப்பாள் தப்பிவிட்டிங்க அண்ணா. (தூக்க முடியாதே)
//சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.//
உண்மைதான் நானும் அறிந்தேன். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பெண்கள் அதிகம் இந்த தொழிலில் இருப்பதாக//
இது கூடப் புரியலேன்னா எப்பிடி?
என்ன செய்ய சகோ நிதி நிலைமை எல்லார் பக்கமும் மோசம் தானே.. ;)
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.
ஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணுக்குள்ளே நிற்கிறது.//
அவ்வவ்வவ்வ!//
ஜோதிபாரதி.. இந்த அவ்வ்விலே எனக்கு பல அர்த்தம் தெரியுது.. ;)
=====================
புல்லட் said...
முதலில மதுவின் காலியான இருக்கை.. பிறகு வந்தியின் சட்டடே நைட்.. இப்ப உங்களின் கெலாங்கில் கைபிடித்திழுத்த கதை..
என்ன எல்லாரும் தங்கட தங்கட பங்குக்கு தங்கட கற்பை உறுதி செய்யுறீனமா? //
நடுவில புல்லட் என்ற புண்ணியாத்மாவின் பாமன்கடை காமன் கதை விட்டுட்டீங்களே.. ;)
இந்த பதிவை அண்ணி வாசிக்குமு்போது அவர்முகத்தில் ஒரு நமுட்டுச்சிரிப்பு இழையோடியதை கவனித்தீர்களா ?
;)//
நமுட்டு என்பதை விட நக்கல் சிரிப்பு தான் அதிகம் ஓடியது.. ;) ரொம்ப அப்பாவியா இருக்கானே என்று.. ;)
ஆதிரை said...
//எனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய பதிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்...
முன்னைய பதிவுகளை வாசித்து மறந்திருந்த என்னைப் போன்றோருக்கும்...//
மறுபடி முழுக்க வாசிச்சு மனனப் படுத்தினீங்களா?
ஆதிரை said...
இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள்.
உங்கள் கையைப் பிடித்து இழுப்பவள் எல்லோரும் அழகாக இருக்கிறாளே... அதெப்படி..?//
என்ன செய்ய ஆதிரை, அழகாகப் பிறந்து கம்பீரமாக வளர்ந்தது என் தப்பா? ;)
ஆதிரை said...
//குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) "தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'"
உங்களுக்கே இவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் 65 வயதை விட்டு வைப்பார்களா??//
நற நற
janakan.selva said...
வணக்கம் அண்ணா.
நான் உங்கள் blog க்கு புதியவன். but உங்கள் ரசிகரில் பழையவன்.
உங்களது பயண அனுபவங்கள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததோ இல்லையோ, எனக்கு அது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
உங்களது பதிவை வாசித்தது, சிங்கப்பூரையே நேரில் பார்த்த அனுபவத்தை என்னுள் ஏற்படுத்தியது.
but உங்கள் சஸ்பென்ஸ் அனும லொள்ளுதான் தாங்க முடியவில்லை. உங்களது அடுத்த சி.சி.சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.//
நன்றி சகோ.. தொடர்ந்து வாருங்கள்.. வாசியுங்கள்.. கருத்துக்களைப் பகிருங்கள்.. பழையபதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்.. :)
=============
Kiruthikan Kumarasamy said...
///அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது///
நம்பீட்டம்...//
நம்புற மாதிரியில்ல நாங்க எழுதி இருக்கம்.. சாரி நடந்திருக்கம்..
Anonymous said...
/Sinhalese in Singapore
http://www.youtube.com/watch?v=acCCPcszXSU//
ஹாஹா!! அதிர்ச்சியாக இருக்கிறது சிங்களத்திகள் சிங்கப்பூரில் இதைத்தான் செய்கின்றார்களா??//
தனியே ஒரு இனத்தைக் கேலி பண்ணுவது துவேஷம்.. நம்ம பெண்களும் இருக்கிறார்களோ என்னவோ?
============
ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நடத்துங்க....//
வாங்க அண்ணா.. சிங்கை நலமா? தப்பா ஏதாவது சொன்னால் திருத்துங்க..
Jegatheepan said...
பதிவுகள் அருமை... ஆனால் தலைப்பு தான் பொருத்தமிலலை போன்று தெரியுது. சிஙகிளாய் ஒரு இடமும் போகலயே பிறகு தலைப்பில் மட்டும் ஏன் சிங்கிள்.... அது சரி சிங்கப்பூருக்கு சிங்கிளாய் லோஷன் அணணா போயிருந்தால்... வரும் போது கரணட் அடிச்ச வடிவேலு மாதிரி தான் வந்திருப்பார் (எல்லாம் அந்த கன்னியரின் அன்புத்தாக்குதல் தான்) சிங்கப்பூருக்கு சிஙகிளாய் மட்டும் போவதிலலை என்று முடிவெடுத்திருக்கிறேன்..... எல்லாம் ஒரு எக்ஸ்ரா அலர்ட் தான்....//
கூட்டமாப் போனாலும் சிங்கிள் சிங்கம் தானே.. ;) அதான் அப்பிடி.. புலி என்று வச்சால் புல்லடி போட்டு புண்ணாக்கிடுவான்களே.... ;)
ஆமாமா.. எதுக்கும் தனியாப் போகாம தக்க ஏற்பாடுகளோடு போங்க.. ;)
’டொன்’ லீ said...
என்ன அண்ணா, இன்னுமா தொடர்கதை முடியேலை..? :-))//
என்ன செய்ய.. எல்லாம் சொல்லவேணுமே..
ம்..சிங்கையில் பாம்புக்கறி எல்லாம் கிடையாது. தவளை உண்டு. :-))//
என்ன கருமமோ.. ரெண்டையும் நான் தொடவில்லை.. பாம்பு பார்த்த ஞாபகம்
எங்களுக்கு சந்திப்பில் சொல்ல மறந்த கதை எல்லாம் பதிவில் வெளியே வருது..:-))))//
அங்கே இதெல்லாம் சொல்ல முடியுமா? ;)
==================
vnkajan said...
neenga solvathai naanga nampiddom athu sari annathe ithaipatti mrs loshan enna solluranga eathum ragalai illaye//
அண்ணியும் அப்பிடித் தான்.. பயப்படாதீங்க நான் சுகமாகவே இருக்கிறேன்..
அசால்ட் ஆறுமுகம் said...
அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.
வலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........
அத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.
மற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன......
www.daarbaar.blogspot.com//
வாழ்த்துக்கள் நண்பரே.. கலக்குங்கள்.. வருகிறேன்.. வாசிக்கிறேன்.. பின்னூட்டுகிறேன்
====================
சந்தோஷ் said...
”வண்ணாரஸ் பட்டுக்கட்டி
அல்லிப்பூ கொண்டை வச்சு.....”
அப்பிடியாரயும் பார்க்கலயா அண்ணா???//
பாத்தா தான் சொல்லி இருப்பனே..
Hamshi said...
very Interesting but.//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //
பொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானே!பயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே?
//அவள் எந்த நாட்டவளோ? ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//
டெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.
//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//
நம்பிட்டோம் ஐயா
//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //
ரொம்பவும் எதிர்பார்க்கிறோம்.
this is very very interesting anna.
சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... muthala coment than vasippathu athukku piragu than unga pathiva vasikkirathu//
இதுவேற நடக்குதா? எப்படியாவது வாசித்தால் சரி.. :)
Post a Comment