September 05, 2009

இலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்??

சனிக்கிழமை இரவு என்றதும் Saturday Night Party/Discotheque தானே எங்களுக்கு ஞாபகம் வரும்?

இது கொஞ்சம் வேறு மாதிரி..

இன்று குரல் பரீட்சைக்காக இளைஞன் ஒருவர் வந்திருந்தார். வழமை போல பழைய செய்திகள் அடங்கிய தாள்களையும், விளம்பர பிரதி ஒன்றையும் கொடுத்து ஆயத்தப்படுத்துமாறு கொடுத்திருந்தோம்..(ஒழுங்காக இதைத் தாண்டினால் அடுத்த பரீட்சை என்பதே எங்கள் வழமையான நடைமுறை)

வந்தார். வாசிக்க ஆரம்பித்தார்..

செய்திகல் என்று செய்தியில் கல்லைப் போடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இவர் தேற மாட்டார் என்று..

எனினும் பெரிதா வேலையில்லாததால் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்று விமல் ஒலிப்பதிவு செய்கிற நேரம் கூடவே இருந்தேன்.

தலைப்பு செய்திகல்..

இலங்கை ஜனாதிபதி இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துக் கலந்தாடல்..

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.. விமல் சிரித்தே விட்டார்..

சரி விரிவான செய்திகளிலாவது திருத்திக் கொள்வார் என்று பார்த்தால்

ம்கூம்..

கலந்தாடினர்.. இந்தக் கலந்தாடலில்.. என்றே தொடர்ந்தது..

எல்லாவற்றிலும் கொடுமை..

நாளை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துக் கலந்தாட இருக்கிறார்..

தாங்க முடியவில்லை.. ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன்..

செய்திப் பிரதியில் தான் பிழையோ என்று பின்னர் பார்த்தால் அதில் கலந்துரையாடல் என்று சரியாகவே இருந்தது..

குசும்பான ஒரு கேள்வியும் கற்பனையும் மனதில் விரிந்தது..

அப்படி ஆடி இருந்தால் என்ன டான்ஸ் ஆடி இருப்பார்கள்? ;)


பி.கு - ஐயா சாமிகளா இது வேறு வேடிக்கை சம்பவம் ஒன்று.. வந்து அரசியல் டின் கட்டி என் டப்பா டான்ஸ் ஆட வச்சிடாதீங்க..

25 comments:

mayurathan said...

wht about yesterday's match

சுபானு said...

//அப்படி ஆடி இருந்தால் என்ன டான்ஸ் ஆடி இருப்பார்கள்? ;)

இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை..

Kiruthikan Kumarasamy said...

///கலந்தாடல்///.... பெரிய குறும்பனா இருப்பானோ வாசிச்ச பொடியன்...

///நாளை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துக் கலந்தாட இருக்கிறார்..///
ஏன் இந்தக் கலந்தாடல் மட்டும் சிவப்பில இருக்கு லோசன் அண்ணா???

Anonymous said...

லோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு..
அவர் இதை வாசித்தால் மனம் எவ்வளவு வேதனைப்படும்
உங்களை போன்றவர்களுக்கு இது எல்லாம் சர்வசாதாரனம் தானே
வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

:)

குணா said...

இப்பொழுது அப்படி வாசித்தால் தான் நாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு தமிழ் மொழி போய்விட்டதோ...? கவலைதான்...
உதாரணத்துக்கு "உங்களுக்கு என்பதை "ஒங்கலுக்கு" என்று வாசிக்கிறார்கள்...பாட்டு கேட்கலாம் வாங்க என்று சில தமிழ் தொலைக்காட்சிகளும் இதை ஊக்குவிக்கின்றன...!!! (வாப்பாவுக்கு வெளிச்சம்)

புல்லட் said...

உதுகு்குதான் D.J வேணும் D.J வேணும் எண்டு அட் குடுக்காதீங்க என்டிறது. அவனும் ஏதோ கிளப்பில டிஸ்க் ஜொக்கியா சேருவம் எண்ட ஆசையோட வந்திருப்பான்.. டிஸ்க் ஜொக்கிக்கு ஏனப்ப்பா கலந்துரையாடல் ? கலந்தாடலும் கலந்து அடித்தலும் தானே..

யோ வாய்ஸ் (யோகா) said...

நீங்கள் அவ்வாறு வாசிக்காவிடினும், உங்களோடு இன்னும் சில பேர் அப்படி இல்லாவிடினும், இலங்கையின் ஊடகங்களில் தமிழ் இந்த நிலைமையில் தான் இருக்கிறது.

இது சிரிக்க வேண்டிய நிலை அல்ல. நிச்சயமாக கவலைபட வேண்டிய விடயம்.

லோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு.. //

இதற்கு நான் உடன் பாடு இல்லை. எவரும் தனது தொழிலுக்கு என போகும் போது அதில் திறமையை காட்ட வேண்டும். அதை புண்படுத்துதல் என ஏற்க முடியாது அனானியாரே! நீங்கள் வீட்டில் ஒழுங்காக தமிழில் உரையாடவில்லையா, பரவாயில்லை. அதற்காக பல பேர் கேட்கும் வானொலியில் அவ்வாறு பிழையாக கதைப்பதை ஏற்று கொள்ள முடியாது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு வானொலியில் ராஜ சேகர ரெட்டியை காணவில்லை என்பதை எவ்வாறு செய்தியில் வாசித்தார்கள் என நான் வந்தியிடம் டிவிட்டரில் கூறியது நினைவுக்கு வருகிறது.

பனையூரான் said...

தமிழை பிழையாக உச்சரிப்பது ஆதங்கப் படவேண்டிய ஒன்றுதான், நீங்கள் சொன்னவர் ஒரு புதுமுகம். அனுபவமானவர்கள் கூட இந்தத் தவறை ஊடகங்களில் செய்கிறார்களே? மேலும் இப்பதிவின் மூலம் ஒருத்தரின் மனம் புண்பட்டிருக்கிறது. எதோ என் மனதில் பட்டத்தை சொன்னேன் அண்ணா கோவிச்சுப் போடாதேங்கோ

R.V.Raj said...

இலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்?? இலங்கையில் இப்ப இப்படிஎல்லாம் தலைப்பிட்டு செயத்திபோடமுடிமா என சந்தேகத்தில்தான் வாசிக்கத்தொடங்கினேன். இன்னும் கொஞ்சம் காலம் தேவை இப்படியான செய்திகளை தைரியமாக வெளியிடுவதற்கு என நம்புவோம். குரல் பரீட்சைக்கு வந்தவர் பலகாலம் வெளிநாட்டில் வசித்திருப்பார்போல பாவமப்பா அவர்."வாலைப்பலத்தொல் வலுக்கி வாளிபர் உயிர் ஊஸல்" இப்படித்தான் வாசித்திருப்பாரோ?

Lionsl said...

adakadavuleeee......... enna kodumayya ithu..

சுகன் said...

தமிழை தமிலாக சொல்லும் இவர்களுக்கு உறைப்பது போல சொல்லி இருக்கிறீர்கள்.
தமிழைக் கொல்லும் இவர்களுக்கு வலித்தாலும் பரவாயில்லை.

பேசாமல் வேறு வானொலி தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி இருக்கலாமே.. உடனே செய்து வாசிப்பாளராகவோ,நிகழ்ச்சி வழங்குபவராகவோ பதவி கிடைத்திருக்குமே

கனககோபி said...

//செய்திகல் என்று செய்தியில் கல்லைப் போடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இவர் தேற மாட்டார் என்று.. //
எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்...
சக்தியில் அவரை அன்பாக அழைத்து செய்தி வாசிக்கக் கொடுப்பார்கள்.

//எனினும் பெரிதா வேலையில்லாததால் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்று//
ஓ! வெற்றியிலயும் இதே தானா... ஹி ஹி ஹி...

attackpandiyan said...

லோசன் அண்ணா! தற்போதைய நிலையை உணர்ந்து அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்! நீங்கள்தான் அவரை சரியாக புரிந்து கொள்ள வில்லை..50000 தமிழர்கள் உயிர்பலி ஆன அன்று திருடா திருடி உலக தொல்லைகாட்சிகளில் முதன்முறையாக என அறிவிப்பு செய்தவர்களை விட அவர் தேவலாம்..

LOSHAN said...

mayurathan said...
wht about yesterday's match//

no comments please.. ;)

==============
சுபானு said...
//அப்படி ஆடி இருந்தால் என்ன டான்ஸ் ஆடி இருப்பார்கள்? ;)

இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை..//

ஆனா அவங்க தான் உங்களை ஆடக் கூப்பிட மாட்டாங்களே.. ;)

பிறகு நாளை தலைப்பு செய்தி - இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் இலங்கையின் இளைய,பிரபல பதிவர் கலந்தாடல்.. ;)

LOSHAN said...

Kiruthikan Kumarasamy said...
///கலந்தாடல்///.... பெரிய குறும்பனா இருப்பானோ வாசிச்ச பொடியன்...

///நாளை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துக் கலந்தாட இருக்கிறார்..///
ஏன் இந்தக் கலந்தாடல் மட்டும் சிவப்பில இருக்கு லோசன் அண்ணா???//

அடப்பாவி எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கிறீர்கள்? இன்னும் ரெண்டு மூன்று சிவப்பில் இருக்கு.. ஒரு முக்கியமான என்ற எண்ணத்தில் சிவப்பு போட்டால் எனக்கே சிவப்புக் கொடி காட்டிடுவிங்க போலிருக்கே,.. ;)

================
Anonymous said...
லோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு..
அவர் இதை வாசித்தால் மனம் எவ்வளவு வேதனைப்படும்
உங்களை போன்றவர்களுக்கு இது எல்லாம் சர்வசாதாரனம் தானே
வாழ்த்துக்கள்//

இதை உங்கள் பெயரிலேயே வந்து சொல்லி இருக்கலாமே.. ;)

யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.. அப்படியென்றால் அவர் பெயருடனேயே போட்டிருப்பேனே..
நகைச்சுவைக்காகவும், தமிழை சரியாக உச்சரிக்குமாறுமே இந்தப் பதிவு.

தமிழில் தவறுவிடும் நேரம் சுட்டிக் காட்டுவது எமக்கு சாதாரணமானதே..
அடுத்தமுறை பெயருடனேயே வாருங்கள்.. :)

LOSHAN said...

ஊர்சுற்றி said...
:)

வருகைக்கு நன்றி ஊர்சுற்றி

==============
குணா said...
இப்பொழுது அப்படி வாசித்தால் தான் நாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு தமிழ் மொழி போய்விட்டதோ...? கவலைதான்...
உதாரணத்துக்கு "உங்களுக்கு என்பதை "ஒங்கலுக்கு" என்று வாசிக்கிறார்கள்...பாட்டு கேட்கலாம் வாங்க என்று சில தமிழ் தொலைக்காட்சிகளும் இதை ஊக்குவிக்கின்றன...!!! (வாப்பாவுக்கு வெளிச்சம்)//

ம்ம்ம் உண்மை தான்.. தமிழுக்கு வந்த சோதனை..

LOSHAN said...

புல்லட் said...
உதுகு்குதான் D.J வேணும் D.J வேணும் எண்டு அட் குடுக்காதீங்க என்டிறது. அவனும் ஏதோ கிளப்பில டிஸ்க் ஜொக்கியா சேருவம் எண்ட ஆசையோட வந்திருப்பான்.. டிஸ்க் ஜொக்கிக்கு ஏனப்ப்பா கலந்துரையாடல் ? கலந்தாடலும் கலந்து அடித்தலும் தானே..//

விளம்பரம் போட்டு வந்தாலும்பரவாயில்லையே தம்பி..

ஆனாலும் வெற்றியைக் க்ளப் லெவெலுக்கு ஆக்கிய புல்லட்டைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்..

இன்னும் DJ என்ற பதத்தை யாராவது பாவியுங்கோ.. தெரியும் சேதி,. நாங்கள் RJ(radio jockey) or Radio presenters

LOSHAN said...

யோ வாய்ஸ் (யோகா) said...
நீங்கள் அவ்வாறு வாசிக்காவிடினும், உங்களோடு இன்னும் சில பேர் அப்படி இல்லாவிடினும், இலங்கையின் ஊடகங்களில் தமிழ் இந்த நிலைமையில் தான் இருக்கிறது.

இது சிரிக்க வேண்டிய நிலை அல்ல. நிச்சயமாக கவலைபட வேண்டிய விடயம்.

லோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு.. //

இதற்கு நான் உடன் பாடு இல்லை. எவரும் தனது தொழிலுக்கு என போகும் போது அதில் திறமையை காட்ட வேண்டும். அதை புண்படுத்துதல் என ஏற்க முடியாது அனானியாரே! நீங்கள் வீட்டில் ஒழுங்காக தமிழில் உரையாடவில்லையா, பரவாயில்லை. அதற்காக பல பேர் கேட்கும் வானொலியில் அவ்வாறு பிழையாக கதைப்பதை ஏற்று கொள்ள முடியாது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு வானொலியில் ராஜ சேகர ரெட்டியை காணவில்லை என்பதை எவ்வாறு செய்தியில் வாசித்தார்கள் என நான் வந்தியிடம் டிவிட்டரில் கூறியது நினைவுக்கு வருகிறது.//

நன்றி யோகா.. உங்கள் ஆதங்கம் புரிகிறது.. அந்த ட்விட்டர் தகவலை நானும் பார்த்தேன். நாங்களும் தவறு விடுகிறோம். ஆனால் திருத்திக் கொள்ள முனைகிறோம்..

இந்த சுட்டிக் காட்டல்கள் திருத்திக் கொள்ளவே..

LOSHAN said...

பனையூரான் said...
தமிழை பிழையாக உச்சரிப்பது ஆதங்கப் படவேண்டிய ஒன்றுதான், நீங்கள் சொன்னவர் ஒரு புதுமுகம். அனுபவமானவர்கள் கூட இந்தத் தவறை ஊடகங்களில் செய்கிறார்களே? மேலும் இப்பதிவின் மூலம் ஒருத்தரின் மனம் புண்பட்டிருக்கிறது. எதோ என் மனதில் பட்டத்தை சொன்னேன் அண்ணா கோவிச்சுப் போடாதேங்கோ//

பனையூரான் , நாங்களும் தவறு விடுகிறோம். ஆனால் திருத்திக் கொள்ள முனைகிறோம்.. புதிதாக உள்ளே வர முயற்சிப்போர் செம்மையாக இல்லையா வரவேண்டும்?

இந்த சுட்டிக் காட்டல்கள் திருத்திக் கொள்ளவே.. தமிழே நோகும் பொது ஒருவர் மனம் நொந்தால் தவறில்லை..

இல்லை கோபிக்க மாட்டேன். (உங்கள் அழைப்புக்கு பதில் தான் எனது அடுத்த பதிவு)

LOSHAN said...

R.V.Raj said...
இலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்?? இலங்கையில் இப்ப இப்படிஎல்லாம் தலைப்பிட்டு செயத்திபோடமுடிமா என சந்தேகத்தில்தான் வாசிக்கத்தொடங்கினேன். இன்னும் கொஞ்சம் காலம் தேவை இப்படியான செய்திகளை தைரியமாக வெளியிடுவதற்கு என நம்புவோம். குரல் பரீட்சைக்கு வந்தவர் பலகாலம் வெளிநாட்டில் வசித்திருப்பார்போல பாவமப்பா அவர்."வாலைப்பலத்தொல் வலுக்கி வாளிபர் உயிர் ஊஸல்" இப்படித்தான் வாசித்திருப்பாரோ?//

எமக்கும் அந்த விவேக் நகைச்சுவை ஞாபகம் வந்தது.. வெளிநாட்டில் இருப்போர் எம்மை விட செம்மையாகத் தமிழ் பேச முயற்சிக்கின்றனர். எமக்கு தான் இந்த அரைகுறை மோகம்.

===========
Lionsl said...
adakadavuleeee......... enna kodumayya ithu..//

தமிழ்க் கொலை..

LOSHAN said...

சுகன் said...
தமிழை தமிலாக சொல்லும் இவர்களுக்கு உறைப்பது போல சொல்லி இருக்கிறீர்கள்.
தமிழைக் கொல்லும் இவர்களுக்கு வலித்தாலும் பரவாயில்லை.//

:)

பேசாமல் வேறு வானொலி தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி இருக்கலாமே.. உடனே செய்து வாசிப்பாளராகவோ,நிகழ்ச்சி வழங்குபவராகவோ பதவி கிடைத்திருக்குமே//

எல்லாம் நல்லத தானே போகுது? அப்புறம் ஏன் இந்த சிண்டு முடியும் வேலை சகோ?

=================
கனககோபி said...
//செய்திகல் என்று செய்தியில் கல்லைப் போடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இவர் தேற மாட்டார் என்று.. //
எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்...
சக்தியில் அவரை அன்பாக அழைத்து செய்தி வாசிக்கக் கொடுப்பார்கள்.//

உங்கள் சொத்தி பதிவு ஞாபகம் வந்தது..

//எனினும் பெரிதா வேலையில்லாததால் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்று//
ஓ! வெற்றியிலயும் இதே தானா... ஹி ஹி ஹி...//

சனிக்கிழமை அன்று என்றபடியால்.. எப்பிடியெல்லாம் கவுக்கப் பாக்கிறாங்க..

LOSHAN said...

attackpandiyan said...
லோசன் அண்ணா! தற்போதைய நிலையை உணர்ந்து அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்! நீங்கள்தான் அவரை சரியாக புரிந்து கொள்ள வில்லை..50000 தமிழர்கள் உயிர்பலி ஆன அன்று திருடா திருடி உலக தொல்லைகாட்சிகளில் முதன்முறையாக என அறிவிப்பு செய்தவர்களை விட அவர் தேவலாம்..//

வாங்க அட்டாக்.. ரொம்ப நாளைக்குப் பிறகு.. வரும்போதே கார சாரமாகத் தான் வாறீங்க..

Busooly said...

நீங்க புத்திசாலி கண்டு பிடிச்சுடிங்க ஆனா சில ஊடகங்கள்ள முடியல கொல்றாங்க....... உதாரணத்துக்கு பிரதமர் பெரதமர்னு சொல்றாங்க.....ஹெளிகொப்டற எளிகொப்டர்னு கூடவாசிக்குராங்கயா

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified