
நேற்று இருந்த எல்லா வேலைகளையும் விரைவாக செய்து முடித்து அல்லது ஒத்திப் போட்டு விட்டு இலங்கை நியூ சீலாந்து Twenty 20 போட்டி பார்க்க முடிவு செய்து வீட்டிலே இருந்து பார்த்தேன். கடைசியாகக் கடுப்பாகி வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் எல்லாவற்றாலும் இலங்கை அணியை திட்டிக் கொண்டே தூங்கப் போனது தான் மிச்சம்.
அருமையாகப் பந்து வீசி நியூ சீலாந்து அணியை ஒரு சராசரி ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தி விட்டு நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கிய பொது, தொடர்ந்து இலங்கை மண்ணில் இரண்டு T 20 போட்டிகளைத் தோற்ற கறையை நியூ சீலாந்து அணிக்கெதிராக இலங்கை அணி கழுவிவிடும் என்று பார்த்தால், மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி..
டில்ஷான் அதிரடி ஆரம்ப ஆட்டம் ஆடியும் அத்தனையையும் விழலாக்கிவிட்ட இலங்கை அணியை என்னவென்று சொல்வது?
எப்படித் திட்டுவது?
(தொலைகாட்சி ஒரு கட்டத்தில் சேர்ட் அணியாத டில்ஷானைக் காட்டியது.. மனிதர் கிரிகெட்டில் உழைப்பதை எல்லாம் நகைகளாக செய்து கழுத்தில் போட்டிருப்பாரோ? அவ்வளவு தங்க செயின்கள்.. ஒரு நடமாடும் நகைக் கடை போல.. இவ்வளவும் போட்டுக் கொண்டு ஓடி,பாய்ந்து,விளையாடுகிறாரா?? )
ஷேன் பொண்டின் முதல் ஓவரிலே அருமையாக அடித்தாடி நான்கு பவுண்டரிகள்.. நினைத்துப் பார்க்கமுடியாத வேகத்தில் ஓட்டங்கள்.. இடையிடையே ஜெயசூரிய,ஜெயவர்த்தன ஆட்டமிழந்தாலும் டில்ஷான் இருக்கும்வரை ஏன் மத்தியூஸ் இருக்கும் வரை கூட நம்பிக்கை இருந்தது..
டில்ஷான் 23 பந்துகளில் அரைச் சதம்.. இலங்கை அணி 6 ஓவர்களில் அறுபது என்றிருந்தபோது யார் இலங்கை தோற்கும் என்று நினைத்தது..
ஒவ்வொரு துடுப்பாட்டவீரரும் ஆட்டமிழந்தது பொறுப்பற்ற கவனயீனமான துடுப்பாட்டப் பிரயோகத்தினால்.. இறுதியில் கூட விக்கெட்டுக்களை இழக்காமல் ஒவ்வ்வோன்றாக ஓட்டங்களை எடுங்கள் என்று மீண்டும் மீண்டும் சங்கா சொல்லி அனுப்ப அனுப்ப ஒவ்வொருவரும் பெரிய அடிகளுக்கு சென்று ஆட்டமிழந்ததை என்ன சொல்வது?
முரளியின் இறுதிநேர அதிரடியை நேற்று ரொம்பவும் இலங்கை மிஸ் பண்ணி விட்டது.
கடைசி இரண்டு பிடிகளும் நியூ சீலாந்துக்கு அதிர்ஷ்டப் பிடிகள்.. கொஞ்சம் விலகியிருந்தாலும் இரண்டு பவுண்டரிகள்.. இலங்கை வென்றிருக்கும்.. பண்டாரவும் குலசெகரவும் அடித்த வலு போதாது. (என்ன தான் சாப்பிடுறான்களோ??)
நியூ சீலாந்து அணி வீரர்கள் களத்தடுப்பில் வழமைக்கு மாறாக பல தவறுகள் விட்டும்கூட நியூ சீலாந்து வெல்கின்றதென்றால் இலங்கை அணியின் பொறுப்பற்ற ஆட்டம் தானே காரணம்?
அதும் அந்த உயரமாய் வளர்ந்து ஒண்ணுக்கும் உதவாது போல் வளம் வரும் ஓராம் hat trick எடுத்தது தான் ஆக ஓவர்.
எத்தனை தடவை இப்படி இதே பாணியில் தோற்றாயிற்று?

முன்பெல்லாம் அரவிந்த டீ சில்வா அடி அடியென்று அடித்துப் போனபிறகு ஒட்டுமொத்த அணியும் சரணடையும்;பின்னர் ஜெயசூரியவின் அதிரடியாட்டத்தின் பின்னர் இலங்கை அணி வெற்றி இலக்குக் கிட்ட வந்து சுருளும்.. இப்போது டில்ஷானின் ஆட்டங்களை அநியாயமாக்குகின்றார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் பெரும் வெற்றிகளை என் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கை அணியால் கொண்டுவர முடிகின்றதில்லை?
முன்பு ஒருநாள் போட்டிகளில் சூரர்களாக இருந்து டெஸ்ட் போட்டிகளில் சுருண்டார்கள்.. இப்போது நிலைமை தலைகீழ்.. சங்கக்காரவின் தலைமையில் இதில் மாற்றங்கள் வரவேண்டும்.

நேற்று பதினோரு பேரையும் மனதில் வைது விட்டு (பின்னே டில்ஷான் அவசரப்பட்டு ஆட்டமிழந்ததும் தவறு தானே) தூங்க செல்வதற்கு முன் இருந்த கடுப்பிலும் எரிச்சலிலும் சங்கக்காரவின் தனிப்பட்ட செல்பேசிக்கு ஒரு sms அனுப்பிவிட்டுத் தான் படுக்கப்போனேன்..
"Please ask your guys to play for victory or bat first.. so we can guess that u r going to lose"
நல்ல காலம் ஊடகவியலாளர் பாஸ் கிடைத்தும் நேற்று போட்டி பார்க்கப் போகாது.. வெறுப்பில் என்ன செய்திருப்பேனோ தெரியாது..
மவனுகளா நாளை போட்டி பார்க்க வாறன்.. மறுபடி ஏமாத்தினீங்க...
என்ன செய்யமுடியும்... ஏக்கத்தோடையும் கடுப்போடையும் இப்படி இன்னொரு பதிவு போடுவேன்..
25 comments:
mmm..............
(உங்களையும் வலைப் பதிவு எழுத வந்த கதை தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன்)
அட்டா இந்தக் கடுப்பிலா நேற்றிரவு ஒன்லைனில் இல்லை. என் மூஞ்சிப் புத்தக status message பார்த்ததா?
வெல்லவேண்டிய போட்டியை வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் தோற்றார்கள், மெண்டிசுக்குப் பதில் இருபதுக்கு20 போட்டிகளில் முரளியை எடுக்கவேண்டும்.
nice article loshan anna!enakum same feelings like u about yd match :)
செம டோஸ், ஆனா எனக்கு இப்ப 20-20 தோல்வி ரொம்ப பழகிடுச்சி.
டில்சான மாதிரி தங்கங்கள் அணிந்த ஆண்கள கண்டதேயில்லை என்று டோனி கிரேய்க் (ரொம்ப நாளைக்கி அப்புறம் இலங்கையில்) சொன்னார். எப்படியும் அடுத்த 20-20யும் தோப்போம் ஆனா பயப்பட வேண்டாம், முத்தரப்பு கோப்பை நமக்கு தான் (இந்தியாவை எப்படி சரி தோற்கடிச்சிடனும்)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
ம்ம் எனக்கும் கோபம்தான் வந்தது
நேற்றைய அணித்தேர்வு எனக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லை
அதையும் விட Dilashan தவிர அனைவரும் பொறுப்பற்று ஆடிய விதம்
ஓரளவேனும் ஆடக்கூடிய kulasekaraக்கு Malinga single செய்து கொடுத்திருக்கலாம் அதைவிடுத்து அவர் அடித்த விதம் சின்னப்புள்ளத் தனமா இருந்தது
anna ithellam srilanka teamkku sagajamthane ithatgaga boi neenka pulampuvathu ennakku viyappaga uzhzhathu vaanoliyil engazhukku aaruthal sollum antha loshana ithu nijamagave nambamudiyavillai
இப்போ எல்லாம் டில்ஷான் தன்னுடைய மனைவி சொல்கிற மாதிரிதான ஷொட் தெரிவு செய்து விளையாடுறாராம். என்ன இருந்தாலும் 20-20யில் 5 ஒவர்களில் 33 ஓட்டங்கள் பெறமுடியாதது கவனயீனம் தான். நானும் ரொம்ப கடுப்பாயிட்டன். எனக்கும் டில்ஷான் மேல கொஞ்சம் கோபம் இருந்தது. இருந்தாலும், மஹேல, கப்புகெதர போன்றவர்கள் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடியிருக்கலாம். பார்க்கலாம்.... நாளைக்காவது வெற்றி பெற்று ஹெட்ரிக் 20-20 தோல்வியிலிருந்து மீள்வார்களா என???????????????
anna ithellam srilanka teamkku sagajamthane ithatgaga boi neenka pulampuvathu ennakku viyappaga uzhzhathu vaanoliyil engazhukku aaruthal sollum antha loshana ithu nijamagave nambamudiyavillai
//வெற்றி பெற்று ஹெட்ரிக் 20-20 தோல்வியிலிருந்து மீள்வார்களா என??????????????//
இல்லையே நேற்றே ஹட்ரிக் தோல்விதானே முதலில் இந்தியாவுடன் அடுத்து பாகிஸ்தானூடன் கடைசியாக நேற்று நியூசிலாந்துடன்.
வந்தியத் தேவா.... ஹெட்ரிக் தோல்விதான் அதிலிருந்து மீள்வார்களா என்று கேட்டிருந்தேன்... விளக்கமாகச் சொல்வதென்றால்.... மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துவிட்டார்கள் அதிலிருந்து மீள்வார்களா?....என்ற அர்த்தத்திலே அந்த கேள்வி?
//தூங்க செல்வதற்கு முன் இருந்த கடுப்பிலும் எரிச்சலிலும் சங்கக்காரவின் தனிப்பட்ட செல்பேசிக்கு ஒரு sms அனுப்பிவிட்டுத் தான் படுக்கப்போனேன்..//
தூக்கத்திலும் எரிச்சலிலும் confuse ஆகி சங்கக்காரவுக்கு அனுப்பவேண்டிய sms ஐ என்னுடைய நம்பருக்கு அனுப்பியிருந்தீர்கள்.. இந்த பதிவை காணும் வரை ஏன் இந்த மனுஷன் எனக்கு இப்படி ஒரு sms அனுப்பிச்சுன்னு தெரியாம குழ்ம்பி போயிருந்தேன்..
ஷேன் பொான்ட் வீசிய 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 4 ஆவது மற்றம் 5 ஆவது பந்துகளில் எந்தவித ஓட்டங்களும் பெறப்படாமல் 6 ஆவது பந்து ஒரே ஒரு ஓட்டம் பெற்றது தான் போட்டியை மாற்றியது.
ஷேன் பொன்ட் இன் அந்தப் பந்து பரிமாற்றம் வரை போட்டி இருபாலாருக்கம் சமமாகவே இருந்தது.
சனத் ஜெயசூரிய பவுன்சர் பந்துகளுக்கு ஆட்டமிழப்பது இது எத்தனையாவது தடவை?
(பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் இதே பாணியிலேயே ஆட்டமிழந்ததாக நம்புகிறேன்.)
நல்ல பதிவு அண்ணா.
இலங்கையில் கெத்தாராம மைதானத்தை விட வேறொன்றும் இல்லை போல..
this pitch a dead rubber when an innigs starts and it'll be very slower and lower in the second innings. its virtually imposible to chase a target in that ground. lets hope Sanga will win a toss one day!!!
இலங்கையில் கெத்தாராம மைதானத்தை விட வேறொன்றும் இல்லை போல..
this pitch a dead rubber when an innigs starts and it'll be very slower and lower in the second innings. its virtually imposible to chase a target in that ground. lets hope Sanga will win a toss one day!!!
பனையூரான் said...
mmm..............
(உங்களையும் வலைப் பதிவு எழுத வந்த கதை தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன்)//
நன்றி சகோ அழைப்பிற்கு (நற நற.. மாட்டி விட்டுட்டீங்களே..) வருகிறேன்..
----------------
வந்தியத்தேவன் said...
அட்டா இந்தக் கடுப்பிலா நேற்றிரவு ஒன்லைனில் இல்லை. என் மூஞ்சிப் புத்தக status message பார்த்ததா?//
ஆமாம் வந்தி.. இன்றும் அதே கடுப்பு.. ஆனால் பழகியாச்சு .. இனி இலங்கையில் இலங்கை விளையாடுகிற டுவென்டி 20 பார்க்கமாட்டேன்.. ')
//வெல்லவேண்டிய போட்டியை வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் தோற்றார்கள், மெண்டிசுக்குப் பதில் இருபதுக்கு20 போட்டிகளில் முரளியை எடுக்கவேண்டும்.//
காயத்தால் தானே முரளி இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை..
வந்தியத்தேவன் said...
//வெற்றி பெற்று ஹெட்ரிக் 20-20 தோல்வியிலிருந்து மீள்வார்களா என??????????????//
இல்லையே நேற்றே ஹட்ரிக் தோல்விதானே முதலில் இந்தியாவுடன் அடுத்து பாகிஸ்தானூடன் கடைசியாக நேற்று நியூசிலாந்துடன்.//
ஆமாம் வந்தி.. இப்போ நான்காவதும் நியூ சீலாந்துடன்.. ;)
==================
என்ன கொடும சார் said...
//தூங்க செல்வதற்கு முன் இருந்த கடுப்பிலும் எரிச்சலிலும் சங்கக்காரவின் தனிப்பட்ட செல்பேசிக்கு ஒரு sms அனுப்பிவிட்டுத் தான் படுக்கப்போனேன்..//
தூக்கத்திலும் எரிச்சலிலும் confuse ஆகி சங்கக்காரவுக்கு அனுப்பவேண்டிய sms ஐ என்னுடைய நம்பருக்கு அனுப்பியிருந்தீர்கள்.. இந்த பதிவை காணும் வரை ஏன் இந்த மனுஷன் எனக்கு இப்படி ஒரு sms அனுப்பிச்சுன்னு தெரியாம குழ்ம்பி போயிருந்தேன்..//
ஐயா.. சங்காவுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியது சீரியசான விஷயம்..
எனது செல்பேசியிலிருந்து தப்பித் தவறியும் உங்களுக்கு வராது.. ;)
நல்லாப் பாருங்க பாருங்க ஏதாவது வைரசாகவோ யாராவது பெண்ணின் அண்ணனின் மிரட்டலாகவோ இருந்து தொலைக்கப் போகிறது..
கனககோபி said...
ஷேன் பொான்ட் வீசிய 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 4 ஆவது மற்றம் 5 ஆவது பந்துகளில் எந்தவித ஓட்டங்களும் பெறப்படாமல் 6 ஆவது பந்து ஒரே ஒரு ஓட்டம் பெற்றது தான் போட்டியை மாற்றியது.
ஷேன் பொன்ட் இன் அந்தப் பந்து பரிமாற்றம் வரை போட்டி இருபாலாருக்கம் சமமாகவே இருந்தது.//
ஆமாம் ஒத்துக் கொள்கிறேன்..
சனத் ஜெயசூரிய பவுன்சர் பந்துகளுக்கு ஆட்டமிழப்பது இது எத்தனையாவது தடவை?
(பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் இதே பாணியிலேயே ஆட்டமிழந்ததாக நம்புகிறேன்.)//
சில பேரைத் திருத்தவே முடியாதப்பா.. சனத் விளையாட ஆரம்பித்து இருபது வருடங்கள்..
Jude said...
இலங்கையில் கெத்தாராம மைதானத்தை விட வேறொன்றும் இல்லை போல..//
எல்லாத்துக்கும் வசதி இது தானே.. பகலிரவு ஆட்டம் வைப்பதென்றால் மற்றது தம்புள்ளை..
this pitch a dead rubber when an innigs starts and it'll be very slower and lower in the second innings. its virtually imposible to chase a target in that ground. lets hope Sanga will win a toss one day!!!//
true.. toss is a key factor in Day nighters .. and specially in R.Premadasa
prasath2605 said...
nice article loshan anna!enakum same feelings like u about yd match :)//
today we were defeated convincingly.. :) no complaints..
================
யோ வாய்ஸ் said...
செம டோஸ், ஆனா எனக்கு இப்ப 20-20 தோல்வி ரொம்ப பழகிடுச்சி. //
:(
டில்சான மாதிரி தங்கங்கள் அணிந்த ஆண்கள கண்டதேயில்லை என்று டோனி கிரேய்க் (ரொம்ப நாளைக்கி அப்புறம் இலங்கையில்) சொன்னார். எப்படியும் அடுத்த 20-20யும் தோப்போம் ஆனா பயப்பட வேண்டாம், முத்தரப்பு கோப்பை நமக்கு தான் (இந்தியாவை எப்படி சரி தோற்கடிச்சிடனும்)//
நம்ம சிங்கங்களை நம்பி இப்படி அறிக்கை விட முடியாம இருக்கே யோ..
தர்ஷன் said...
ம்ம் எனக்கும் கோபம்தான் வந்தது
நேற்றைய அணித்தேர்வு எனக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லை //
அணித்தேர்வில் தவறில்லை தர்ஷன்.. துப்பாட வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடவில்லை என்பது மட்டுமே சிக்கல்..முரளி பூரண சுகத்தோடு இருந்திருந்தால் ஏதாவது அற்புதம் நடந்திருக்கும்..
======================
kajeswaran said...
anna ithellam srilanka teamkku sagajamthane ithatgaga boi neenka pulampuvathu ennakku viyappaga uzhzhathu vaanoliyil engazhukku aaruthal sollum antha loshana ithu nijamagave nambamudiyavillai//
சகோ, வானொலியில் நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஊடகவியலாளன். அங்கே உணர்வுகள் நடுநிலைப்பட வேண்டும். இங்கே இது என் தனிப்பட்ட தளம்.. என் உணர்வுகளை நான் தாராளமாகக் கொட்டலாம்.. புரிந்ததா?
செ.பொ. கோபிநாத் said...
இப்போ எல்லாம் டில்ஷான் தன்னுடைய மனைவி சொல்கிற மாதிரிதான ஷொட் தெரிவு செய்து விளையாடுறாராம். //
கிரிக்கெட்டை சொல்றீங்களா? அல்லது.... ;)
என்ன இருந்தாலும் 20-20யில் 5 ஒவர்களில் 33 ஓட்டங்கள் பெறமுடியாதது கவனயீனம் தான். நானும் ரொம்ப கடுப்பாயிட்டன். எனக்கும் டில்ஷான் மேல கொஞ்சம் கோபம் இருந்தது. இருந்தாலும், மஹேல, கப்புகெதர போன்றவர்கள் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடியிருக்கலாம். பார்க்கலாம்.... நாளைக்காவது வெற்றி பெற்று ஹெட்ரிக் 20-20 தோல்வியிலிருந்து மீள்வார்களா என???????????????//
அதே தான் எனக்கும் கடுப்பு.. அதான் மூண்டு என்ன நாலாவதும் தோற்றாச்சே... எங்கள் தெகிவளை றோடீஸ் டீம் கொஞ்சம் பரவால்லைப் போல.. ;)
vnkajan said...
anna ithellam srilanka teamkku sagajamthane ithatgaga boi neenka pulampuvathu ennakku viyappaga uzhzhathu vaanoliyil engazhukku aaruthal sollum antha loshana ithu nijamagave nambamudiyavillai//
நீங்க தானே மேலே பின்னூட்டமிட்ட கஜெஸ்வரன்?
உங்களுக்கான விடையும் அதே..
Ponting retires from Twenty20 internationals..........................
will sanath do it fro sri lanka?????????
Nimalesh said...
Ponting retires from Twenty20 internationals..........................
will sanath do it fro sri lanka?????????//
Ponting has failed.. so he s retiring. But y shud Sanath? Look at his performances. :) let him blast bro..
Post a Comment