August 10, 2009

கலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்

நான் எப்போதுமே பார்க்காத/ பார்க்க விரும்பாத / வேறுவழியே இல்லாமல் கூட பார்க்காத ஒரு நிகழ்ச்சி தான் கலைஞர் TVயின் மானாட மயிலாட (நமீதா இருந்தும் கூட) எனினும் எப்போதாவது மிக போரடிக்கும் நேரம் சும்மா அலைவரிசைகள் மாற்றும் போது ஏதாவது சுவாரஸ்யமான பாட்டுக்கு நல்ல நடனம் போனால் கொஞ்சம் நிறுத்திப் பார்ப்பது உண்டு.

இந்த இடத்தில் ஒரு உண்மை. முன்பு ரம்பா நடுவராக இருந்த நேரம் அவருக்காகவே – ரம்பாவின் குழந்தைத்தனம், அந்த சிரிப்புக்காக (மட்டும்) அடிக்கடி (தொடர்ந்தல்ல) பார்த்துவந்தேன்.

நேற்று படு பிஸியான நான். காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட நான் இரவு 8 மணியானது மறுபடி வீடு திரும்ப சரியான உடல்களைப்பும், அயர்வும்.

எனினும் வெளிநாட்டிலுள்ள எங்கள் உறவினர் சிலர் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்குப் போயிருந்ததாகவும், தங்களை இம்முறை நிகழ்ச்சியில் காட்டலாம் என்றும், பார்க்கும்படியும் சொல்லியிருந்ததால் சரி பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன்.

நான்கு பெரும் கொடுமைகள்.....

முதலாவது....
எப்போதுமே கண்ணில் காட்டாதளவு வெறுப்புத்தருகின்ற கலா, குஷ்பு குழுவினரின் முட்டாள்தனமான ரசனைகள், கைதட்டல்களும், மொக்கை நகைச்சுவைகளும், தாராளமாக அள்ளி வழங்கப்படும் புள்ளிகளும் மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டின.

இரண்டாவது.....

இதைத்தான் கயமை என்பேன்....

பருத்திவீரன் படக்கதையை உல்டா செய்து ஒரு ஜோடி ஆடியது. அதிலே படத்தில் வருகின்ற 'ஊரோரம் புளியமரம்' பாடலுக்கு அரவாணிகள் போலவே வேடமணிந்து சில ஆண்கள் (ஆண்கள்தான் என நம்புகிறேன்) ஆடியபோது (படத்திலும் அமீர் இவ்வாறு தான் காட்டியிருந்தார்*) ஏதோ பெரிய நகைச்சுவை பார்ப்பதுபோல கலா, குஷ்பு, அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் சிரித்து ரசித்தனர்.

இதுவா ரசனை?
மனித ஜென்மங்களா இவர்கள்?
எந்த காலகட்டத்தில் வாழ்கிறார்கள்?

இதே கலைஞர் TV தானே - விஜய் TV தொடங்கி வைத்த 'ரோஸ்' நிகழ்ச்சியை வாங்கி – ரோஸை வாங்கி சமுதாய சீர்மை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறது?

அதே தொலைக்காட்சியிலேயே அரவாணிகள் சமூகத்தை கேவலப்படுத்துவதா?

*அமீர் என்ற இயக்குநரும் சண்டியரையும் வன்முறையையும் வைத்து மசாலாத் தனமான 'காவியம்' படைக்கிறேன் - புதுமை தருகிறேன் என்று இரத்தமும், வன்முறையும் அரவாணிகளைக் கேவலப்படுத்தி குத்துப்பாட்டொன்றோடு திரைவியாபாரம் நடத்தியவர் தானே?

மூன்றாவது............
அதே பாடலில் அதே இருவர் – பெண் பெயர் பூஜா என்று நினைக்கிறேன். அவர் காட்டிய வன்முறையும் - ஆண் காட்டிய ஆண் ஆபாசமும்.

ஒரு மேடை – அதுவும் பல லட்சம் பேர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தொடை காட்டி ஆடும் ஆட்டமும், அசிங்கமான நடன அசைவுகளும் ஆண்களிடமிருந்தென்றால், பெண்ணோ தன்னைக் கற்பழிக்கத் துரத்தும் ஆண்களிடம் அப்படியொரு கொடுமையான வன்முறை காட்டுகிறார்.

இறுதியாக ஆணில் பெண்மை, பெண்ணுள் ஆண்மை, காந்தி மகானின் மேன்மை என்று பினாத்தினார்கள்.

ஐயா சாமிகளா போதும்!

அது சரி கலைஞர் பெருமானின் வீட்டில் மானாட மயிலாட ஒளிபரப்பாகும் நேரம் வேறு அலைவரிசை தான் பார்ப்பார்களோ?

நான்காவது பெரும் கொடுமை...

நேற்றைய நிகழ்ச்சியில் நான் பார்த்த நேரத்திலே அந்தக் குறிப்பிட்ட வெளிநாட்டு உறவினர்கள் வரவேயில்லை...

ஹீம்ம்... இனி அடுத்த வாரமும் இதே போல இன்னொரு கொடுமையா?

42 comments:

Nimalesh said...

appaa aduthaa kilamaum anubavingaa brother.........

’டொன்’ லீ said...

hahah...:-)

ஆதிரை said...

எங்களின்ர கயமைகள் தான் புரட்சி செய்கிறேன் பேர்வழிகளுக்கு புதுமைகளாகப்படுகின்றன.

தொடர்நாடகங்களின் அக்கிரமம் தாங்காமல் தொலைக்காட்சியை மறந்து கனகாலம் ஆகிவிட்டுது. :)

புல்லட் said...

பொறுங்க பாஸ்... அந்த நிகழ்சிசக்கு போயிருந்தா உங்க உறவினர்கள் கட்டாயம் இலங்கை PR க்கு அப்ளை பண்ணியிருப்பாங்க.. ஆகவே விரைவில நேர பாக்கலாம் ... மறுபடியும் மானாட்ட மயிலாட்ட அதை நீங்க ஏன் பாத்து மண்டை விறைக்கவேணும் .. சொல்லுங்க..

வந்தியத்தேவன் said...

சனிக்கிழமை ரிப்பீட் செய்வார்கள் திரும்ப பார்க்கவும்.

//அதே பாடலில் அதே இருவர் – பெண் பெயர் பூஜா என்று நினைக்கிறேன். அவ‌ர் காட்டிய வன்முறையும் - ஆண் காட்டிய ஆண் ஆபாசமும்.//

அந்த பூஜாவுக்கு நேற்றைய நிகழ்ச்சியின் சிறந்த பெண் நடனமாது விருதுகொடுத்தார்கள்.

லோஷன் சிலவேளை சென்றவாரம் இலங்கையில் நடந்த மானாட மயிலாட பாதிப்பிலிருந்து இவர்கள் விடபடவில்லையோ தெரியாது.

குஷ்புவை ரம்பாவின் பேச்சும் தத்துவம்(பல தடவை நல்ல தத்துவங்கள் சொன்னார்)சிறப்பானவை.

கலா கோகுல்நாத்தை அழகில்லை எனக் கவலைப்படதே என ஏன் சொன்னாரோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

இ.அரவிந்த் said...

அண்ணே, கட்டுரையில் அரவாணிகள் என்ற பதத்தைத் தவிர்த்து திருநங்கைகள் என்று குறிப்பிடுவது மிகச் சிறந்ததாக கருதுகிறேன்...

என்.கே.அஷோக்பரன் said...

அப்ப ஏன் கலைஞர் தொலைக்காட்சி பார்க்கிறீர்கள்?? விஜய் பார்க்கலாமே, இல்லை இந்தத் தொல்லைகளை விட்டு விட்டு ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 10 ஸ்போர்ட்ஸ் என விளையாட்டு நிகழ்வுகளைப் பார்க்கலாமே... நான் தமிழ் தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்து வெகு நாளாயிட்டு, இப்போது தமிழில் பார்ப்பதெல்லாம் விஸய் டி.வியின் நீயா நானா, தமிழ்ப் பேச்சு சுட்டிகள், மற்றும் சில சமயம் எயார்டெல் சுப்பர் சிங்கர் - கலைஞர் எல்லாம் “என்ன கொடுமை சரவணன்” ரகம் தான்....

யோ (Yoga) said...

கொடுமை கொடுமைனு ஒருத்தன் கோவிலுக்கு போனானாம் அங்க ஒரு கொடுமை கோபுரத்திலே ஏறி ஆடுதாம். அப்படி இருக்கு உங்க நிலைமை, நல்ல வேளை நான் ஒரு படம் பார்க்கிறதால அந்த கொடுமைல இருந்து தப்பிச்சிட்டேன். ஆமா சிங்கப்புர்ல சிங்கம் கதை எங்க பாதியிலே நிக்கிறதே?...

கார்த்தி said...

ஏன் கொஞ்ச நாளா கலைஞர் TV நிகழ்ச்சிகளை மட்டும் போட்டு தாக்குகிறீர்கள். அவர்களுடன் ஏதாவது பிரச்சனையா?

என்னதான் இருந்தாலும் இலங்கை தமிழர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறதோ?? எனக்கு கண்ணிலயும் காட்ட கூடாது. சுத்தபேத்தனமான ஒரு புறோகிறாம்.

ஆதிரை said...

//ஆமா சிங்கப்புர்ல சிங்கம் கதை எங்க பாதியிலே நிக்கிறதே?

சிக்கப்பூரில சிங்கம் கதை....? அப்படியென்றால் என்ன அண்ணா?
தொலைக்காட்சியில் ஏதாவது சீரியல் போடுறாங்களா...?

Asfer said...

மிக்க நன்றி அண்ணா... பத்துப்பேராலும்
இனி பாக்காம விடுவாங்க

ஆ.ஞானசேகரன் said...

//ஹீம்ம்... இனி அடுத்த வாரமும் இதே போல இன்னொரு கொடுமையா?//

நல்லவேலை நான் பார்க்கும் வாய்ப்பு வருவதேயில்லை.....

Barari said...

AYYA LOSHAN-UNGAL EZUTHTHILEYE MURAN PADUKIREERKAL. NAAN EPPOTHUME PAARKKATHA/PAARKKA VIRUMBAATHA///RAMBAA NADUVARAAKA IRUNTHA NERAM AVARUKKAKAVE// ITHIL ETHAI NAMBUVATHU NEENGAL THAAN VILAKKA VENDUM.MATTRAPADI INTHARECORD DANCE NIKAZCHIKKU NAANUM ETHIRIYE.

சப்ராஸ் அபூ பக்கர் said...

முக்கியமான விசயத்த விட்டுட்டீங்களே அண்ணா.....

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் போல இருப்பவர்கள் பற்றி சொல்லவே இல்லையே அண்ணா.... (எல்லாவற்றையும் விட சகிக்க முடியாத விடயம் தான் அந்த ஆண் தொகுப்பாளறது .................. அதை என்னவென்று சொல்லுவது?.... சகிக்க முடியல....)

இவர்கள் ஏன் சின்னத் திரையை விட்டு விட்டு இங்கே அடாவடித் தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்...

Airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொஞ்சம் பிடித்திருந்தாலும், ஒளிந்திருந்து மனதை உடைக்கிற விதத்தில் கருத்து சொல்லுவது (உன்னை பார்த்து மற்றவர்கள் திருந்திக் கொள்ளட்டும்) சுத்தமா பிடிக்கவில்லை. குறையை குறையாய்ச் சொல்ல வேண்டும். ஆனால் மனதை உடைக்கிற விதத்தில் குறையைச் சுட்டிக் காட்ட கூடாது இல்லையா?... (அவர் மாஸ்டர் வேற.... ம்ம்...... நடக்கட்டும்.... நடக்கட்டும்..... தங்கக் குரல் வேட்டை இல்லையா?.....)

அஜுவத் said...

அண்ணா அடுத்தது ஹெட்ரிக் பதிவுதானே????

சந்ரு said...

தொலைக்காட்சி என்பதனைவிட தொல்லைக்காட்சி என்று சொல்லலாம் அண்ணா.. தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சமுக சீர்கேட்டை செய்கிறார்கள். இன்று சில நிகழ்ச்சிகளை குடும்பமாக இருந்து பார்க்க முடிகிறதா. இந்த தொலைக்காட்சிகளை நடத்துபவர்கள் என்ன நினைத்து இருக்கிறார்கள்.

தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் என்ன சும்மாவா... எப்படி எல்லாம் நம்ம மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள்.

தங்கள் பிழைப்புக்காக கலைஞர்களை ஊக்கப்படுத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றிப்பிளைப்பது. இந்தியத் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பி மக்களை முட்டாள்களாக்க நினைப்பது.

இவர்கள் யார் எதனைச் சொன்னாலும் திருந்தமாட்டார்கள்

Anonymous said...

YES U R ABSOLUTELY RITE..

Indha karumandharatha pathi yarachum blog poda maatala nu nenaichitu irundhen...
ivlo oru kevalamana dance programme, kevalama programe panravanga, adhum andha male pesuvaru paarunga paakara namakku edhellamo serndhu eriyum..karmandhiram..
indhuku asingam pudicha nameetha, kushboo n kala judges... kandravi.. thoo...

வாய்ப்பாடி குமார் said...

இதக் கூட எதோனு உட்டறலாம். ஆனா இதுக்கெல்லாம் முன்னோடி ஒருத்தர் இருக்காரு. அவர்தான் விஜய் டிவீக்காரரு. அவிங்க‌ பண்ற அட்டகாசம் தாங்க முடியல சாமி.

நைட்டு 9 மணீன்னு நெனைக்கிறேன். பாத்தா ஆறு ,ஏழு புள்ளைங்களா ஏணில ஏற வைச்சு அங்கே பாம்பை படமெடுக்க வைக்கிறது. அதை தொட வெக்கிறது. அதுமில்லாம போனவாரம் கண்ணாடி பொட்டிக்குள்ள புள்ளைய படுக்க வெச்சு அங்க பாம்புகள போட்டு எத்தன நேரம் தாங்குறாங்க. எத்தன செகண்டு தாங்கறாங்க அப்படினு நோட் பண்றது.

இதெல்லாம் தேவையானு கேட்டா அணு அளவும் பயம் இல்லைனு புரோகிராம் தலைப்பு வேற.

ஆனா ஒண்ணு பாம்பு கொடுத்து வெச்சது. எங்கெங்கியோ ஊருது. ம்ம் பாம்புக்கு ஒரு நேரம். நம்ம கண்ணுலதான் பாத்துக்கோணும்.

பணம் வருதுன்னா பெனாயில கூட குடிப்பாங்க நம்ம சின்ன திரை ஆளுங்க.

யூர்கன் க்ருகியர் said...

குத்து ஆட்டக்காரர்களுக்கு சரியாதான் குத்து விட்டிருக்கிறீர்கள்.

மானாட மயிலாட பாத்த உங்களுக்கு என் சார்பில் ஒரு "சின்ன குத்து" ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இவைகளப் பார்த்து வியப்படைவதை விட, இது இப்படித்தான் இருக்கும் என்கிற முன் முடிவுவுடன் தொலைக்காட்சியைச் சாத்தி விடுவது நல்லது.

இருந்தாலும் நீங்கள் உங்க சொந்தக்காரங்க கேட்டா பார்த்தேன்னு சொல்லனும். தொடர்ந்து அவர்களைக் காணும் வரை பாருங்கள்! :P

S.Gnanasekar Somasundaram said...

இப்படித்தான் மானாட மயிலாடனு ரெம்ப நாள தமிழர் தொலைக்காட்சில் தமிழ் வழர்க்கிறார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்களை நினைக்கப் பரிதாபமாக உள்ளது.
இதைவிட வாழ்க்கையில் இனி ஒரு துன்பம் உங்களை
நெருங்காது. நெருங்கினும் சமாளித்துவிடுவீர்.

ஏன் ? சொந்தக்காரரை வெப்கமராவில் பார்க்கலாமே!
இந்தக் கண்ராவியிலா? பார்க்க வேண்டும்.

இதுதானே கலைஞருக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சியாம்.
ஒவ்வொரு பகுதியும் அவர் எடிட் செய்துதான்
வெளியாகுதாம்!

King... said...

அண்ணே நீங்க ஒரு பெரிய பதிவர்தான் ஒப்புக்கொள்கிறோம்...

கலைஞர் ரிவி பாக்குறதிலும் உங்கடை டான் ரிவி பாக்கலாம்.

Rama said...

எந்த மனது ஆதங்கத்தை அப்படியே கொட்டிட்டிங்க அண்ணா....

Dilshaad Devadasan said...

அது மானாட மயிலாட இல்லை. பாம்பாட கண்டிருந்த நாக்காலிப்புழுவாட.

Anonymous said...

கலா " அய்யயோ அவன் கிழ்ச்சிட்டான்" ன்னு சொல்லுவதற்கு , வெண்ணிற ஆடை மூர்த்தி பதில் என்னவாக இருக்கும் ?

LOSHAN said...

Nimalesh said...
appaa aduthaa kilamaum anubavingaa brother.........//

:( இதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமா?

==============

’டொன்’ லீ said...
hahah...:-)//

:(

LOSHAN said...

ஆதிரை said...
எங்களின்ர கயமைகள் தான் புரட்சி செய்கிறேன் பேர்வழிகளுக்கு புதுமைகளாகப்படுகின்றன.

தொடர்நாடகங்களின் அக்கிரமம் தாங்காமல் தொலைக்காட்சியை மறந்து கனகாலம் ஆகிவிட்டுது. :)//

சரியாக சொன்னீர்கள்.. நானும் தொடர் நாடகங்கள் பார்ப்பதில்லை.. ஆனால் இது.... :(

=================
புல்லட் said...
பொறுங்க பாஸ்... அந்த நிகழ்சிசக்கு போயிருந்தா உங்க உறவினர்கள் கட்டாயம் இலங்கை PR க்கு அப்ளை பண்ணியிருப்பாங்க.. ஆகவே விரைவில நேர பாக்கலாம் ... மறுபடியும் மானாட்ட மயிலாட்ட அதை நீங்க ஏன் பாத்து மண்டை விறைக்கவேணும் .. சொல்லுங்க..//

நீங்க சொல்லுவீங்க அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும்.. கொஞ்சமா உங்க துப்பாக்கியைக் கடனாய்க் கொடுத்தால் இந்தியா போய் போட்டுத் தள்ளிட்டு வாறன்..

LOSHAN said...

வந்தியத்தேவன் said...
சனிக்கிழமை ரிப்பீட் செய்வார்கள் திரும்ப பார்க்கவும். //

ஏன்? ஏன்? ஏன்? என்னோடு ஏதாவது தனிப்பட்ட கோபமா?

//அதே பாடலில் அதே இருவர் – பெண் பெயர் பூஜா என்று நினைக்கிறேன். அவ‌ர் காட்டிய வன்முறையும் - ஆண் காட்டிய ஆண் ஆபாசமும்.//

அந்த பூஜாவுக்கு நேற்றைய நிகழ்ச்சியின் சிறந்த பெண் நடனமாது விருதுகொடுத்தார்கள். //

கொடுமை..

லோஷன் சிலவேளை சென்றவாரம் இலங்கையில் நடந்த மானாட மயிலாட பாதிப்பிலிருந்து இவர்கள் விடபடவில்லையோ தெரியாது.//

:)

LOSHAN said...

இ.அரவிந்த் said...
அண்ணே, கட்டுரையில் அரவாணிகள் என்ற பதத்தைத் தவிர்த்து திருநங்கைகள் என்று குறிப்பிடுவது மிகச் சிறந்ததாக கருதுகிறேன்...//
ந்ன்றி சகோதரா.. அந்த வார்த்தை தவறானது என்று வேறு எந்த சுட்டிக்காட்டல்களும் வரவில்லை..

======================

என்.கே.அஷோக்பரன் said...
அப்ப ஏன் கலைஞர் தொலைக்காட்சி பார்க்கிறீர்கள்?? விஜய் பார்க்கலாமே, இல்லை இந்தத் தொல்லைகளை விட்டு விட்டு ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 10 ஸ்போர்ட்ஸ் என விளையாட்டு நிகழ்வுகளைப் பார்க்கலாமே... நான் தமிழ் தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்து வெகு நாளாயிட்டு, இப்போது தமிழில் பார்ப்பதெல்லாம் விஸய் டி.வியின் நீயா நானா, தமிழ்ப் பேச்சு சுட்டிகள், மற்றும் சில சமயம் எயார்டெல் சுப்பர் சிங்கர் - கலைஞர் எல்லாம் “என்ன கொடுமை சரவணன்” ரகம் தான்....//

அசோக், இது நானாக விரும்பி ஏற்றுக் கொண்ட தண்டனை இல்லையே.. மற்றும்படி நான் இந்தப் பக்கம் தலை வைப்பதே இல்லை..
உங்கள் கட்சி தான்.. தொலைகாட்சி அலைவரிசைகளில்

LOSHAN said...

யோ (Yoga) said...
கொடுமை கொடுமைனு ஒருத்தன் கோவிலுக்கு போனானாம் அங்க ஒரு கொடுமை கோபுரத்திலே ஏறி ஆடுதாம். அப்படி இருக்கு உங்க நிலைமை, நல்ல வேளை நான் ஒரு படம் பார்க்கிறதால அந்த கொடுமைல இருந்து தப்பிச்சிட்டேன். ஆமா சிங்கப்புர்ல சிங்கம் கதை எங்க பாதியிலே நிக்கிறதே?...//

தப்பிட்டீங்க.. சிங்கம் சிக்கி நிக்குது.. பல வேலைகளிலும் சில விஷயங்களிலும்.. நாளை வரலாம்.. (அட பரவாயில்லையே அதைக் கூட ஆர்வமாக் காத்திருந்து வாசிக்கிறாங்களா?)

==================

கார்த்தி said...
ஏன் கொஞ்ச நாளா கலைஞர் TV நிகழ்ச்சிகளை மட்டும் போட்டு தாக்குகிறீர்கள். அவர்களுடன் ஏதாவது பிரச்சனையா?//

ஆமா கார்த்தி.. எனக்கு ஒரு ஐந்து மில்லியன் ருபாய் தர இருக்கு.. அது தான் பிரச்சினையே.. அட நீங்க வேற..

என்னதான் இருந்தாலும் இலங்கை தமிழர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறதோ?? எனக்கு கண்ணிலயும் காட்ட கூடாது. சுத்தபேத்தனமான ஒரு புறோகிறாம்.//

நம்மவங்களுக்கு இப்படிப்பட்ட பேய்த்தனங்கள் தானே சொர்க்கம்.. எங்கள் ஊடகங்களும் இவ்வாறான வழி போக இந்த மட்ட ரசனை தானே காரணம்..

LOSHAN said...

ஆதிரை said...
//ஆமா சிங்கப்புர்ல சிங்கம் கதை எங்க பாதியிலே நிக்கிறதே?

சிக்கப்பூரில சிங்கம் கதை....? அப்படியென்றால் என்ன அண்ணா?
தொலைக்காட்சியில் ஏதாவது சீரியல் போடுறாங்களா...?//

யோவ்.. என்னா நக்கலா? சிங்கம் தூங்கிட்டிருக்கு.. பதிவர் சங்கத்துல பிசி.. வரும்.. (அப்பாடா பில்ட் அப்பில தப்பிட்டம்)

===========

Asfer said...
மிக்க நன்றி அண்ணா... பத்துப்பேராலும்
இனி பாக்காம விடுவாங்க//

சொல்ல முடியாது .. இதுவே விளம்பரமாப் போகுதோ தெரியல.. அப்பிடித்தானே பொதுவா நடக்குது...

LOSHAN said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
முக்கியமான விசயத்த விட்டுட்டீங்களே அண்ணா.....

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் போல இருப்பவர்கள் பற்றி சொல்லவே இல்லையே அண்ணா.... (எல்லாவற்றையும் விட சகிக்க முடியாத விடயம் தான் அந்த ஆண் தொகுப்பாளறது .................. அதை என்னவென்று சொல்லுவது?.... சகிக்க முடியல....)//

அவரது தமிழ் உச்சரிப்பு அருமை.. ஆனால் அதிக வேகம் தான் கொல்கிறது..

இவர்கள் ஏன் சின்னத் திரையை விட்டு விட்டு இங்கே அடாவடித் தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்... //
இதுவும் சின்னத் திரை தானே.. ஒருவேளை நீங்கள் பெரிய திரை தொலைக்காட்சியில் பார்க்கிறீர்களோ? ;)

===================

அஜுவத் said...
அண்ணா அடுத்தது ஹெட்ரிக் பதிவுதானே????//

இல்லையே.. என்ன கலைஞர் தொலைகாட்சி என் மீது வழக்கு தொடுக்க செய்யும் எண்ணமா? (வருங்காலத்துல ஏதாவது வாய்ப்புக் கிடைச்சாலும் கெடுத்துருவீங்க போல.. ;
))

LOSHAN said...

சந்ரு said...
தொலைக்காட்சி என்பதனைவிட தொல்லைக்காட்சி என்று சொல்லலாம் அண்ணா.. தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சமுக சீர்கேட்டை செய்கிறார்கள். இன்று சில நிகழ்ச்சிகளை குடும்பமாக இருந்து பார்க்க முடிகிறதா. இந்த தொலைக்காட்சிகளை நடத்துபவர்கள் என்ன நினைத்து இருக்கிறார்கள்.

தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் என்ன சும்மாவா... எப்படி எல்லாம் நம்ம மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள்.

தங்கள் பிழைப்புக்காக கலைஞர்களை ஊக்கப்படுத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றிப்பிளைப்பது. இந்தியத் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பி மக்களை முட்டாள்களாக்க நினைப்பது.

இவர்கள் யார் எதனைச் சொன்னாலும் திருந்தமாட்டார்கள்//

உங்கள் கோபமும் எரிச்சலும் புரிகிறது.. என்ன செய்வது இது தான் தமிழன் தலை விதி.. :(

==================

Anonymous said...
YES U R ABSOLUTELY RITE..

Indha karumandharatha pathi yarachum blog poda maatala nu nenaichitu irundhen...
ivlo oru kevalamana dance programme, kevalama programe panravanga, adhum andha male pesuvaru paarunga paakara namakku edhellamo serndhu eriyum..karmandhiram..
indhuku asingam pudicha nameetha, kushboo n kala judges... kandravi.. thoo...//

உங்கள் கோபமும் எரிச்சலும் புரிகிறது.. என்ன செய்வது இது தான் தமிழன் தலை விதி.. :(
இதே குஷ்புக்கு கோயில் கட்டியதும், நமீதாவுக்கு கோயில் கட்ட முற்பட்டதும் நாமன்றோ?

காண காணும் தெய்வங்களை (கண்ணுக்கு காட்டும்) திட்டலாமோ?

LOSHAN said...

வாய்ப்பாடி குமார் said...
இதக் கூட எதோனு உட்டறலாம். ஆனா இதுக்கெல்லாம் முன்னோடி ஒருத்தர் இருக்காரு. அவர்தான் விஜய் டிவீக்காரரு. அவிங்க‌ பண்ற அட்டகாசம் தாங்க முடியல சாமி.

நைட்டு 9 மணீன்னு நெனைக்கிறேன். பாத்தா ஆறு ,ஏழு புள்ளைங்களா ஏணில ஏற வைச்சு அங்கே பாம்பை படமெடுக்க வைக்கிறது. அதை தொட வெக்கிறது. அதுமில்லாம போனவாரம் கண்ணாடி பொட்டிக்குள்ள புள்ளைய படுக்க வெச்சு அங்க பாம்புகள போட்டு எத்தன நேரம் தாங்குறாங்க. எத்தன செகண்டு தாங்கறாங்க அப்படினு நோட் பண்றது.

இதெல்லாம் தேவையானு கேட்டா அணு அளவும் பயம் இல்லைனு புரோகிராம் தலைப்பு வேற.

ஆனா ஒண்ணு பாம்பு கொடுத்து வெச்சது. எங்கெங்கியோ ஊருது. ம்ம் பாம்புக்கு ஒரு நேரம். நம்ம கண்ணுலதான் பாத்துக்கோணும்.

பணம் வருதுன்னா பெனாயில கூட குடிப்பாங்க நம்ம சின்ன திரை ஆளுங்க.//

அன்புள்ள குமாரு.. நான் கூடப் பார்த்தேன் இந்தக் கூத்தை.. வெறுத்துப் போச்சு.. அருவருப்பும் அசிங்கமும்.. இதைப் பற்றி வந்தியத்தேவன் கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு.. போய் கும்முங்க..

அதிரடி ராணிகளாம் .. அலட்டல் கேசுங்க..

=============

யூர்கன் க்ருகியர் said...
குத்து ஆட்டக்காரர்களுக்கு சரியாதான் குத்து விட்டிருக்கிறீர்கள்.//

இதை விடப் பெரிசாக் கும்மாங் குத்து ஒண்ணு விட இருந்தது.. ஏதோ என்னால முடிஞ்சது..

மானாட மயிலாட பாத்த உங்களுக்கு என் சார்பில் ஒரு "சின்ன குத்து" ...//
அன்புக் குத்து தானே? :)

LOSHAN said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
இவைகளப் பார்த்து வியப்படைவதை விட, இது இப்படித்தான் இருக்கும் என்கிற முன் முடிவுவுடன் தொலைக்காட்சியைச் சாத்தி விடுவது நல்லது.//

வாங்க அத்திவெட்டியாரே.. நலமா?
நல்ல ஐடியா தான்..

இருந்தாலும் நீங்கள் உங்க சொந்தக்காரங்க கேட்டா பார்த்தேன்னு சொல்லனும். தொடர்ந்து அவர்களைக் காணும் வரை பாருங்கள்! :P//
எனக்கென்று வந்த சோதனை.. உங்களுக்கென்ன.. நல்லா இருங்க.

================

S.Gnanasekar Somasundaram said...
இப்படித்தான் மானாட மயிலாடனு ரெம்ப நாள தமிழர் தொலைக்காட்சில் தமிழ் வழர்க்கிறார்கள்.//

:(

LOSHAN said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
உங்களை நினைக்கப் பரிதாபமாக உள்ளது.
இதைவிட வாழ்க்கையில் இனி ஒரு துன்பம் உங்களை
நெருங்காது. நெருங்கினும் சமாளித்துவிடுவீர்.//
சத்தியமா.. யோகன் உங்கள் அரசியல் பதிவுகள் வாசிக்கிறேன்.. எனினும் பின்னூட்டம் போடுவதில்லை.. கருத்து சொன்னால் மனம் திறந்து சொல்ல வேண்டும் என்பதால்..

ஏன் ? சொந்தக்காரரை வெப்கமராவில் பார்க்கலாமே!
இந்தக் கண்ராவியிலா? பார்க்க வேண்டும்.//
அவங்க தங்களை டிவ்யில நாங்க பார்த்த ஒரு சந்தோசம் எண்டு நினைக்கேக்கை நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்..

இதுதானே கலைஞருக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சியாம்.
ஒவ்வொரு பகுதியும் அவர் எடிட் செய்துதான்
வெளியாகுதாம்!//
மெல்லமா சொல்லுங்கய்யா.. பிரபல பதிவர்கள் சிலர் பொங்கி எழுந்திரப் போறாங்க..

LOSHAN said...

King... said...
அண்ணே நீங்க ஒரு பெரிய பதிவர்தான் ஒப்புக்கொள்கிறோம்...//

நானா? நான் சொல்லவே இல்லையே சகோதரா..
இப்பிடியெல்லாம் சொல்லி வீண் வம்பில மாட்டி விட்டுறாதீங்க. ;)

கலைஞர் ரிவி பாக்குறதிலும் உங்கடை டான் ரிவி பாக்கலாம்.//
எங்கடை? ஓ அப்பிடியொரு டிவி இலங்கையில இருந்து ஒளிபரப்பாகுதோ? எங்களுக்கு பார்க்க முடியலையே..

==========
Rama said...
எந்த மனது ஆதங்கத்தை அப்படியே கொட்டிட்டிங்க அண்ணா....//
அப்படியா? நன்றி..

நிறையப் பேர் மனசிலேயே புழுங்கி இருக்கீங்க போல..

LOSHAN said...

Dilshaad Devadasan said...
அது மானாட மயிலாட இல்லை. பாம்பாட கண்டிருந்த நாக்காலிப்புழுவாட.//
யார் பாம்பு? யார் புழு? ;)

=============

Anonymous said...
கலா " அய்யயோ அவன் கிழ்ச்சிட்டான்" ன்னு சொல்லுவதற்கு , வெண்ணிற ஆடை மூர்த்தி பதில் என்னவாக இருக்கும் ?//
ச்சீ .. :)

No said...

அன்பான நண்பர் திரு லோஷன்,

ஒன்றை நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை!

"மக்கள் விரும்புகிறார்கள், அவர்கள் அதை போடுகிறார்கள்"! அவ்வளவுதான்!

நமக்கல்லாம் தரமான நிகழ்ச்சிகளை பார்க்க எங்க நேரம்? எங்களுக்கு உயிர் மூச்சு சினிமா! அதிலையும் அசிங்கமான சினிமா குத்துப்பாட்டு, ரெகார்ட் டான்சு, ஒட்டறை கொம்பு போன்ற இருந்துகொண்டு ஒன்பது பெயரை அடிக்கும் அட்டகாசம் போன்ற எல்லாம்தான் எங்க வாழ்க்கையே! இந்த அற்புதங்களை எல்லாம் பார்ப்போமா இல்ல வேற மண்ணாங்கட்டி நிகழ்ச்சிகளை பார்போமா?

அட போங்க சார், தனுஷ் அண்ணன், சிம்பு அண்ணன், வாயாலையே பத்துபெயர அடிக்குற அவங்க அப்பா, சுத்திசுத்தி அம்பது பெயர ஒரு கையில அடிக்கிற எங்க தளபதி, கும்மிருட்டுல கருப்பு கண்ணாடி போட்டு கொட்டம் அடிக்கிற எங்க தல, இவிங்க எல்லார்க்கூடையும் எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டு ஆடும் அழகிய நாயகிகள் போன்ற காவியங்களெல்லாம் எங்க முன்னால் இருக்கும்போது, நாங்க அத்த பாக்காத இருந்தால்தான் தப்பு! மானாட மயிலாட ஏறக்குறையா முழு ஆட முழுவதையும் கிழே போட, முக்கி முனகி மிச்சமுள்ள மானமும் மொத்தமாக மலையேற, இதப்பாத்து மக்கா நாங்க சொக்கிப்போயி சந்தோஷமா குடும்பத்தோட கூத்தாட........ ஏன் சார் எங்க இன்பத்த கெடுக்கிறீங்க? பிடிக்கவில்லையென்றால் பாக்காதிங்க!

நீங்க என்னதான் சொன்னாலும் எங்களுக்கு இதான் சார் வேணும்! என்ன செய்ய உங்களுக்கு இது புரியல! புரியவேண்டியவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது!
அதான் இபபடி மானாட நாலு மோகரகட்டைஆட, அதவும் முக்கா துணியோடு ஆட என்று போட்டுத்தாக்க்கறாங்க!

இதயெல்லாம் புரிஞ்ச நம்ம சேனல் ஆளுங்க மடையர்களா இல்ல ஒன்னும்புரியாத அப்பாவியான நீங்க மடையரா?

போங்க சார், போயி வேலையா பாருங்க ! வேலை இல்லையா, போயி சீரியல் பாருங்க!

நன்றி

மானாட மயிராட

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified