
கந்தசாமி - மூன்று வருட எதிர்பார்ப்பு, காத்திருப்பு, பிரமாண்ட பில்டப்புக்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள திரைப்படம்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் நீண்டகாலத்துக்கு முதலே வெளிவந்து பிரபலமாகி கொஞ்சம் ஓய்ந்து, தேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதோ புலி வருது புலிவருது, இன்று நாளை என்று ஒரு மாதிரியாக வந்தே விட்டார் கந்தசாமி.
(என் கந்தசாமி பதிவும் இதோ,இதோ என்று இழுத்தடித்து தான் இன்று வருகிறது.. என்ன பொருத்தமோ?)
பாத்திரத்தேர்வு, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றினால் விக்ரமில் இருக்கும் ஈர்ப்பு, சுசி கணேசனின் முன்னைய படங்கள் (விரும்புகிறேன், திருட்டுப்பயலே) ஏற்படுத்திய வித்தியாசமான எதிர்பார்ப்புக்கள் + கந்தசாமி பாடல்கள் (அநேனமானவை விக்ரம் பாடியதும் - குத்துப்பாடல் + melody இல்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத் பாணியிலேயே பாடல்கள்) என்பன என்னையும் கந்தசாமியை எதிர்பார்க்க வைத்தன.
எனினும் இவை மட்டுமல்லாமல் கந்தசாமியை நான் எதிர்பார்க்க இன்னுமொரு முக்கியமான காரணங்கள்.
எமது வெற்றி FM வானொலிதான் 'கந்தசாமி' திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி. அதற்காக நான் காகம் வெள்ளை என்று சொல்பவனல்ல – குசேலனுக்கும் நாம்தான் அனுசரணை வழங்கினோம். அதற்காக குசேலனை வெற்றிப்படம் என்று சொல்லிவிடமுடியுமா?
இன்னுமொன்று –
கந்தசாமி ஒரு Super Hero படம் என்று விளம்பரப்படுத்தியதும் மனதுக்குள்ளே ஒரு ஆசை எழுந்தது. தமிழில் மிக அரிதாகப் போயுள்ள அதீத சாகச, அபூர்வ சக்தி படைத்த (Super hero subjects)கற்பனை படமாக கந்தசாமி வராதா என்பது தான் அது!
ஆங்கிலத்தில் Super Man, Spider Man, Transformers, Terminator, Harry Potter போன்ற படங்கள் வந்தால் கொடி பிடித்து, மாலை போட்டு வரவேற்பு கொடுத்து, பின் தமிழிலும் மொழிமாற்றி சிலந்தி மனிதன் என்றும் மாயஜால மந்திர வலை என்றும் இஷ்டப்படி பெயரிட்டு வெற்றிவாகை சூடிப் பார்க்கும் எம்மவர் தமிழில் மட்டும் இப்படிப் படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு துண்டையும் போட்டு, இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் காதிலும் மூக்கிலும் புகை வரவும் பண்ணிவிடுகிறார்கள்..
இதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.
ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிடும்போது தமிழ்ப் பக்கம் தொழிநுட்ப வளர்ச்சியும், தயாரிப்பு செலவும் மிகப் பின் தங்கியிருப்பது பிரதான உறுத்தும் காரணம்..
தாணு தாரளமனம் படைத்தவர் என்பதாலும், சுசி கணேசன்,விக்ரமின் பரீட்சார்த்த முயற்சிகள் பற்றிய எனது நம்பிக்கையாலும், ஏற்கெனவே வெளியான பல புகைப்படங்களாலும் கந்தசாமி ஒரு Super hero subject தமிழ்ப் படமாக இருக்கும் என்று நம்பினேன்.
TV விளம்பரங்களில் பார்த்தது போலவும், பட ஆரம்பத்தில் சில காட்சிகளும் தமிழின் முதலாவது சூப்பர் ஹீரோ படமாக இந்தப் படம்தான் அமையுமா? என நம்பியிருந்தால் மன்சூரலிகானை முதல் காட்சியில் துவைத்துப்போட்ட அதே சேவல் - கொக்கரகோ மனிதன்தான் - IPS கந்தசாமி என்று காட்டும்போது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே.
எனினும் அந்நியன் போல இருவேறு மனிதர்களல்ல - இருவரும் ஒருவரே. ஏன் சாமி ('சாமி' படமல்ல)அவதாரம் எடுக்கிறார். எப்படி கடவுள் அவதாரமெடுத்து ஊழல் ஆசாமிகள், மோசடிப்பேர்வழிகளை தண்டிக்கிறார் என்பதையெல்லாம் சஸ்பென்ஸ் இல்லாமலே காட்டுவதில் இயக்குனர் தனித்துத் தெரிகிறார்.
சஸ்பென்ஸ் வைத்துப்படமெடுப்பதை விட சஸ்பென்ஸ் எதுவும் இல்லாமல் இப்படிப்பட்ட நேர்க் கதைகளை வித்தியாசமாக எடுப்பது தான் சவால்.. எல்லாத் தோசைகளும் மாவால் தான்.. ஆனால் சில தோசைகள் மட்டும் தனிச் சுவையில்லை? அது போல..
கந்தசாமி அனைவரும் அறிந்த ரோபின்கூட் பாணியிலான ஒரு கதை.. காலாகாலமாக மலைக்கள்ளன் முதல் அண்மைய சிவாஜி வரை பல பேர் கையாண்ட கதை..தெரிந்த கதை தானே என்று யாராவது சிலர் யோசித்திருந்தால் குரு,ஜென்டில்மன்,ரமணா,அந்நியன்,சிவாஜி என்று இவை அனைத்துமே தோற்றிருக்கவேண்டுமே ..
எனவே சினிமாவைப் பொறுத்தவரை கதை என்பதற்கும் அப்பால் திரைக்கதையும் படமாக்கப்படும் விதமுமே மிக முக்கியமானவை.
சுசி கணேசனின் திரைக்கதை அவரது வழமையான படங்கள் போலவே விறுவிறுப்பாகவும், திட்டமிடப்பட்டும்,திசை விலகாமலும் இருப்பது கந்தசாமியின் பலம்.
படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் போல் தோன்றுவதும், மூன்று வருடம் படம் வருவதற்கு இழுத்ததும் படத்தின் சுவாரஸ்யத்தையும் விறுவிறுப்பையும் குறைத்தது உண்மை..
இவ்வாறான தனி மனித சாகசப் படங்களுக்கு வலு சேர்ப்பதே /கதாநாயகப் பாத்திரத்துக்கு பலம் சேர்ப்பதே பலமான ஒரு வில்லன் பாத்திரப் படைப்பு..
(ஆங்கிலத் திரைப்படங்கள் பாருங்கள்) அந்நியன்,சிவாஜியிலும் அந்தப் பலவீனங்கள் இருந்தாலும் ஷங்கரின் நுட்பம் அவற்றை மறைத்து விட்டன.
கந்தசாமியில் மூன்று வில்லன்கள்..
ஆசிஷ் வித்யார்த்தி கபடம்..பார்க்கையில் விக்ரமிடம் தோற்றுப் போகிறார்-இலகுவாக..
முகேஷ் ஏற்றுள்ள பாத்திரம் பிற்பாதியில் முக்கியம் பெறுகிற ஒரு மஜா வில்லன்.
மனிதர் அனுபவித்து செய்திருக்கிறார்.. (இதை எந்த அர்த்தத்திலும் படம் பார்த்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்)
போக்கிரியில் பொறுக்கி இன்ஸ்பெக்டராக வரும்போதேஇன்னும் கொஞ்சம் பொறுப்பான(!) வில்லன் பாத்திரத்தை இவருக்குக் கொடுக்கலாமே என்று யோசித்தேன்..
மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை)
ஆனால் இவரது வில்லன் பாத்திரத்தை(யாவது) இன்னும் கொஞ்சம் கனதியாக்கி இருக்கலாம்.. இதன் மூலம் கந்தசாமியின் பாத்திரத்தின் வீரியம் கூடியிருக்கும்.
அலெக்ஸ் மெக்சிகோவில் உள்ள பினாமியாக வருவது அவ்வளவு பொருந்தவில்லை..
படத்தில் ஹீரோ வில்லன்களின் சவால்களை கொஞ்சம் எளிதாகவே முறியடிப்பதால் சில காட்சிகள் உப்பு சப்பற்று போய்விடுகின்றன.கதாநாயகனின் பாத்திரப் படைப்பை மேலும் வலிமையாக ஒரு சாகச வீரனாகக் காட்ட இயக்குனர் முயன்ற காரணத்தாலேயே வில்லன்களை பல இடங்களில் டப்பாவாக்கி இருக்கிறார் என நினைக்கிறேன்.
மெக்சிகோவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வேண்டுமென்றே வேறு வர்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளமை சிலபேருக்கு பிடிக்கவில்லை அல்லது புரியவில்லை.. (இதிலே சில பிரபல பதிவுலக விமர்சகர்களே கண்ணு நோவுது,தலை சுத்துது என்று சொல்வது அவர்களுக்கு வயது போய்விட்டதைக் காட்டுகிறதா தலைமுறை இடைவெளியா என்று புரியவில்லை)
இப்போதெல்லாம் பல தமிழ் படங்களில் இந்த வித்தியாசமான colour tonesஐப் பாவிப்பதன் மூலம் காட்சிகளின் களங்களில் வேறுபாடு ஏற்படுத்துவது தானே trend..
சுசி ஏற்கெனவே தனது 'திருட்டுப்பயலே' படத்திலும் இதே நுட்பத்தை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி இருந்தார்.
ஆனால் மெக்சிகோ காட்சிகளை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது..
ஊழல்,கறுப்புப் பணம், ரமணா பாணியிலான ஒரே பள்ளி மாணவர்கள்,புள்ளிவிபரங்கள் என்று பட்டியலிட்டே பார்த்தாலும் ஊழல் ஒழிப்பு CBIஇலிருந்து ஆரம்பிப்பதும்,போலீஸ் குழுவே நல்லது செய்பவனை/பவரை துரத்துவதும் புதுமை என்றால், CBIஇன் தலைவராக வரும் தெலுங்கின் முன்னாள் உச்ச நட்சத்திரம் கிருஷ்ணாவே (கன்னடப் பைங்கிளி சரோஜாதேவியின் காதல் புகழ்) இதற்கு உதவியளித்து ஊக்கப்படுத்துகிறார் என்பது தெரியவரும்போது கொஞ்சம் அதிர்ச்சி தான்..
வடிவேலுவை திணித்திருந்தாலும் கதையின் சம்பவங்களோடு அவரைப் பின்னி (பிரபுவும் மன்சூர் அலிகானும் அவரைப் பின்னுவது வேறு கதை) கொண்டு சென்றுள்ளார் சுசி கணேசன்.
வழமை போல அப்பாவியாக வடிவேலு அடிவாங்கினாலும் தண்ணீர் பீய்ச்ச பீய்ச்ச ஆடும் ஆட்டமும் அசைவும் ரகளை..
பிரபு இருக்கிறார் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.. இன்னும் கொஞ்சம் அவருக்கு வேலை கொடுத்திருக்கலாம்..(இந்தப் பாரிய உடலுக்கு இது கூடக் குடுக்கலேன்னா எப்படி?)
ஆசிஷ் வித்யார்த்தியின் அடிவருடி வழக்கறிஞராக வரும் Y.G.மகேந்திராவின் முகத்தில் தான் எத்தனை பாவங்கள்.. மனிதர் சின்னப் பாத்திரமே ஆனாலும் கலக்கி இருக்கிறார்..
ஸ்ரேயா ஒரு ஆங்கிலப்படங்களில் வரும் வில்லிகள் போன்றதொரு கவர்ச்சி நாயகி.. நிறையப் பேருக்கு ஸ்ரேயாவின் கவர்ச்சி பிடித்திருந்தாலும் அவரது நவீன நாகரிக நடை,உடையலங்காரம்,சிகை அலங்காரம் பிடிக்கவில்லை..

எனினும் சுப்புலக்ஷ்மி என்று அவர் ஏற்றுள்ள வில்லத்தனமான நவநாகரிக நங்கை ப் பாத்திரத்துக்கு அவரது கவர்ச்சியும் சிகை அலங்காரமும் ஆடை வடிவமைப்புக்களும் பெருமளவு பொருத்தத்தையும் படத்தின் செழுமைத் தன்மையையும் ஏற்படுத்தி இருந்தன.
நான் எப்போதுமே ஸ்ரேயாவின் ரசிகன் அல்ல..எவ்வளவு தான் அவர் கவர்ச்சியை வீசியெறிந்து அள்ளித் தூக்கி எங்கள் மீது வாரி இறைத்தாலும் நான் ஸ்ரேயாவை எப்போதும் ரசிப்பவன் அல்ல.. ஒரு சின்ன சில்க்கு, சோனா ரேஞ்சிலேயே அவரை நான் எப்போதும் கணிப்பதுண்டு..
ஆனால் கந்தசாமியின் சுப்புலக்ஷ்மியில் ஸ்ரேயாவை ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் ஒரு ஸ்டைலிஷ் வில்லியாகப் பார்கிறேன்.. ஒரு கெத்தும் திமிருமாக அவரது நடையும் சுசித்ராவின் ஆம்பிளைத்தனமான குரலும் சேர்ந்து அந்தப் பாத்திரம் உயிர்பெற்று நிற்கிறது.
விக்ரம் - உடல் மொழியாக இருக்கட்டும், நிமிர்ந்த நடையுடன் திமிர்த்துத் தெரியும் அந்த வீரமாக இருக்கட்டும், அளவான உதட்டசைவோடு தெளிவாகப் பேசும் வார்த்தைகளாகட்டும், சண்டைக்காட்சிகளில் கிளர்ந்து தெரியும் கட்டுடலாகட்டும் இந்தப் பாத்திரத்தில் இது போன்ற பாத்திரங்களில் அச்சாக வார்ப்பதற்கு இவர் மட்டுமே என்று நினைவில் நிற்கிறார்.
IPS கந்தசாமியாக வரும்போது இவரது ஆடைகளும் சேர்த்து மிக நேர்த்தியான பாத்திரமாக வடிவமைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள்.
சேவல் மனிதனுக்கும்,IPS கந்தசாமிக்கும் இவர் காட்டும் சின்ன சின்ன வேறுபாடுகளும் ரசனை. காசி,அந்நியன் போன்ற கனதிகளைத் தாங்கிய விக்ரமுக்கு இந்தப் படத்தின் பாத்திரங்கள் ஊதிவிட்டுப் போகக்கூடியவை தான்.
எனினும் சேவல் மனிதனாக வந்து வதம் செய்யும்போது காட்டும் உடல் அசைவுகள்,முகபாவ மாற்றங்கள் அற்புதம்..
விக்ரம் பெண் வேடத்தில் வந்து போடும் கூத்துக்களும் சண்டையும் ரசிக்க வைத்தாலும் பெண் வேடம் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.. மயில்சாமி குழுவினர் ஆண்தன்மை கொண்ட அந்தப் 'பெண்'ணைப் பார்த்து மயங்குவது கொடுமை.. ;)
காதல் காட்சிகள் வாய்க்கவில்லை.. ஸ்ரேயா ஒரு வில்லி போலவே தென்படுவதால் உண்மையாக அவர் காதல்வயப்ப்படும்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவது இயக்குனர் விட்ட ஒரு பலவீனம்.
விக்ரமின் நண்பர்கள் அறிமுகப்படுத்தப்படும் இடம்,விக்ரமின் அலுவலகத்துக்கு ஸ்ரேயா வரும்போது விக்ரம் மிக லாவகமாக கேள்விகளாலேயே பதிலளிப்பதும், மெக்சிகோ தடாகத்தில் லவ்வ்வுவது போல Laptopஇன் password அறிந்துகொள்வதும் இயக்குனரின் ஐடியாக்கள் பளிச்சிடும் இடங்கள்.

எனினும் திருட்டுப்பயலே திரைப்படத்தில் ஒளிப்பதிவில் அசத்திய wide angle ரவிச்சந்திரன்(பெயர் சரி என நினைக்கிறேன்) போல ஒருவர் கிடைத்திருந்தால் கந்தசாமி இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.
ஏகாம்பரம் சில இடங்களில் தாணு செலவழித்த பிரம்மாண்டத்தைக் கொண்டுவரவில்லை என்றே நான் கருதுகிறேன்.
குறிப்பாக அலெக்ரா பாடலில் ஸ்ரேயாவின் குலுக்கல் தவிர வேறு எதுவும் ரசிக்கும் படியாக இல்லை.
ஆனால் ஒரே சிறிய துண்டோடு ஸ்ரேயா ஆடும் மியாவ் பாடலில் சும்மா கிறங்கடிக்கிறார்..எங்கே துண்டு கழன்று விடுமோ என்று நான் பதறிக் கொண்டிருக்க, என்னுடன் பக்கத்தில் இருந்து பார்த்த நண்பர் அந்தத் துண்டை ஊசி கொண்டு குத்தி இருப்பாரா இல்லை கயிற்றால் கட்டி இருப்பார்களா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே சிலுக்கு கதாநாயகியாக நடித்த படங்களை விட ஒரு கதாநாயகி படம் முழுவதும் கவர்ச்சியாக நடித்த ஒரே படம் கந்தசாமியாகத் தான் இருக்கவேண்டும்.
அநேகமான பாடல் காட்சிகள்,முகேஷின் நகரும் சொகுசு படுக்கை அறை பஸ் என்று எக்கச்சக்க பணத்தின் தாராளம் தெரிகிறது..
படமோ அதீத பணக்காரர், அவதிப்படும் ஏழைகள் பற்றி போதிக்கிறது.. செலவளித்து சொன்னால் தான் செலவழிக்காதே என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் போலும்..
சொல்லப்பட்ட புள்ளிவிபரங்கள் கொஞ்சம் போரடித்தாலும் மறுபக்க நிதர்சனம் நெஞ்சை உறுத்தியது.. தங்கள் பங்குக்கு இரு கிராமங்களை கந்தசாமி குழு தத்தெடுத்திருப்பது மகிழ்ச்சி தான்.. எனினும் இன்னும் என்ன செய்யலாம் என்று அவர்கள் இந்தியா சார்பாக நோக்கட்டும்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது அவரின் இசை ராஜாங்கம்..
ஆரம்ப இசையே அதிரடியுடன் கனதியானது.. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார்..தசாவதாரம்,வில்லுக்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பின்னணி இசையில் ஹட் ட்ரிக் அடிக்கும் வாய்ப்பு.
சின்ன சின்ன விஷயங்களிலும் சிரத்தையாக மினக்கெட்டுள்ளார். பாடல்கள் எல்லாம் எப்போதோ பிரபலமானதால் அதுபற்றி நானும் மீள சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.
நான் கவனித்த இன்னொரு விஷயம் விக்ரமின் தந்தையாரும் இந்தப்படத்திலே நடித்திருக்கிறார். முகேஷின் உதவியாளராக..
படத்தின் மிகப்பெரும் பலவீனமாக நான் கருதுவது சண்டைக் காட்சிகள்.. வேகமும் ஆக்ரோஷமும் போதாது.. நாடகத் தன்மையாக பல இடங்களில் தெரிந்தது.
என்னைப் பொறுத்தவரை இந்தத் திரைப்படத்தை நான் ரசித்தேன்.. அண்மைக்காலத்தில் நான் பார்த்த பல படங்களோடு பார்க்கையில் கந்தசாமி எனக்கு போரடிக்கவும் இல்லை,மோசமாகத் தெரியவும் இல்லை..
ஒட்டுமொத்தமாகப் பல பதிவரும் சேர்ந்து கந்தசாமியை மோசமாகவும் வில்லை விட மோசம் என்று முத்திரை குத்தியதும் பெரும் ஆச்சரியம்..(வில்லு பெட்டர் என்று சொன்னதெல்லாம் ரொம்பவே ஓவர்.. )
இவ்வளவுக்கும் நான் இலங்கையில் கந்தசாமி ஓடுகின்ற பன்னிரண்டு திரையரங்குகளிலும் கேட்டபோது வசூல் நிறைவாக இருப்பதாகவே சொல்கிறார்கள்..
இந்தியாவில் படம் தோற்றுவிட்டதாக சொல்லிக் கொண்ட பலபேருக்காக இன்று நான் பார்த்த ஒரு பதிவு..
சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.
தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை [^] நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா [^] வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ் [^]ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.
இப்போ என்ன சொல்லுறீங்க?
என்னைப் பொறுத்தவரை, இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால்,பாடல்கள் வந்த சூட்டுடனேயே இஅர்க்கியிருந்தால் மிகப்பெரும் வெற்றிப்படைப்பாக வந்திருக்கவேண்டிய கந்தசாமி, ஒரு சராசரி வெற்றிப் படமாக அமைந்துவிட்டது..
சுசி கணேசன் & விக்ரம் உங்களிடம் இருந்து மேலும் நிறையவே எதிர்பார்க்கிறோம்..
பி.கு - எழுத ஆரம்பித்து ஒருவாரத்துக்கு மேல் எடுத்துப் போடும் பதிவு இது.. இன்னும் விட்டால் இந்தப் பதிவு வேண்டும் என்று கந்தசாமிக் கடவுளுக்கு யாராவது துண்டு எழுதிப் போட்டிடுவாங்களோ என்று இன்று பதிவிட்டு விட்டேன்.
இது வக்காலத்தோ, உத்தியோகபூர்வ வானொலி என்பதற்காகவோ நான் வழங்கும் பதிவு அல்ல..
என் ரசனை இவ்வளவு தான் என்று நீங்கள் சொல்லலாம்.. இல்லையேல் மற்றவர்களின் ரசனை அவ்வளவு தான் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.. :)
கொஞ்சம் நீளமாக அதேவேளை மனதில் பட்டதை சொல்லும் பதிவு இது.. நிறையப் பேர் சொல்கின்றார்களே என்று ஆமாம் சாமி போடுவதில்லை நான்..
ரசனைகள் வித்தியாசப்படலாம்..
என்னுடைய 'கந்தசாமி'யை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கந்தசாமி பாருங்கள்.. புதிதாக தெரியும்..
71 comments:
வாழ்க லோஷன்..
it was amazing movie. even i watched 3 times all ready...
படத்தை விட உங்கள் பதிவு நீநீநீநீநீளமாக இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசணை எனக்கும் என்றைக்கு கந்தசாமி கந்தல்சாமி தான்
ஹலோ லோஷன்....இதே தான் நானும் நெனச்சேன்....ஆனா இந்த படத்த ஏன் இப்படி கிழிச்சு தொங்க விட்டாங்கன்னு எனக்கு புரியவே இல்ல...வில்லு படத்த விட இந்த படம் மொக்கன்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரு...
ஷ்ரியா வ எனக்கும் இந்த படத்துல பிடிச்சிருந்தது.....தமிழ் சினிமாவுல இப்படி Bond Girl மாதிரி யாரும் வந்தது இல்ல...ஆனா சுசித்ரா குரல் தான் கொஞ்சம் கடுப்படிசுது...
தாரளமா ஒரு தடவ பாக்கலாம் இந்த படத்த...
அப்பாடா சதீஸுக்கு அப்புறமா கந்தசாமிக்கு ஒரு நல்ல விமர்சனம். எனககும் படம் ரொம்ப பிடித்தது. விக்ரமின் உழைப்பு ரொம்ப பிடித்தது. ஆனால் ஏனோ தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பிடிக்கல. ஆமா கேபிள் சங்கர் அவரது விமர்சனத்தில் திருட்டுபயலே எடுத்தது சசிகனேசன் இது சுசிகனேசன் என்று கூறி இருக்காரே! அப்ப ரெண்டு பேரும் ஒன்னா இல்லையா?
^%$^&^$&!நறநற! ஒரு பெனாத்தல் படத்துக்கு படக்கதையை விட பெரிதாக ஒரு விமர்சனம்..
உங்களுக்கு விக்ரம் கொக்பக் பொக்கக் எண்டு குழறிக்கொண்டு கழுத்து முறிந்தவன் ஆட்டியது போல வருவது அருமையான முகபாவனையா?
என்ன அநியாயாம்?
காட்சிகளை கட்செய்து கோணங்களை மாற்றும்போது கறுப்பு இடையீட்டுகளை கொண்டுவந்தது கண்ணை நோகச்செய்தது உண்மை..
ஸ்ரேயாவின் உதட்டசைவும் ஆடல்அசைவுளும் சுத்தமாக லிறிக்ஸ் ரிதத்துடன் சிங்க் ஆ ஆகவி்லலை..
வில்லன் ஜம்பருடன் போட்ட குத்தாட்டத்தை பார்த்து சிரித்து குடல் வெளிய வந்ததுதான் மிச்சம்.. அது உங்களுக்கு நல்லாருந்துதா?
கிருஷ்ணாவே இதற்கு உதவியளித்து ஊக்கப்படுத்துகிறார் என்பது தெரியவரும்போது கொஞ்சம் அதிர்ச்சி தான்.. //
இப்பிடி நீங்கள் சொன்னதுதான் அதிர்ச்சி.. இதை ப 50 வயசு மனுசன் எண்டு வெள்ளைக்காரன் சொன்னபோதே நான் சொல்லிவிட்டேன்.. எத்தனை தமிழ் படங்களில் வந்துவிட்டது..
வடிவேலு எனக்கு சிரிப் பை வரவழைத்தது துணியை சோபபிட்டு கும்மும் பொதுதான்.. பின்பக்கத்தை காட்டி நெளித்து தண்ணீரில் ஆடவது அசிங்கம்..
ஒரு கெத்தும் திமிருமாக அவரது நடையும் சுசித்ராவின் ஆம்பிளைத்தனமான குரலும் சேர்ந்து அந்தப் பாத்திரம் உயிர்பெற்று நிற்கிறது
//
ஸ்ரேயாவின் நடை? என்ன கொடுமையய்யா இது? இதை கேட்க யாருமேயில்லயா? ரெண்டு கால்களுக்குமிடைுயே ஏதோ பலகை வைத்து பூட்டியது ுபோல் ஒரு நடை.. அது பாத்திரத்துக்கு உயிர்பூட்டியதா?
படத்தில் கண்ட ப்ளஸ் பொயிண்ட்கள்.. விக்ரம்மின் அழகும் தோற்றமும் .. உரித்து விட்ட ஸ்ரேயா.. சில இடத்தில் வடிவேலு..இசை
வெளிநாட்டு காட்சிகள் கூட கண்ணைக்குத்தியதால ரசிக்க முடியவில்லை.. மெக்சிகோவில் காட்டப்பட்ட மாயர்களின் பலிபீடம் கூட ப்ளாஸ் வெளிச்சத்தால் போய்விட்டது..
15/100தான் நான் தருவேன்..
படம் நான் முதல் நாளே பார்த்துவிட்டேன். சூப்பர்...
கிளைமேக்ஸ் சப்பென முடிந்துவிட்டதாக நினைக்கிறேன்..
அப்பாடியோ... சேமித்து வைக்கின்றேன் பின்னர் வாசிக்க.. ரொம்ப நீளமாய்ப்போட்டுதே....
எனது பார்வையில் கந்தசாமி எப்படி இருந்ததோ அதை 75% உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. படத்தொகுப்பை பற்றி பெரிதும் கதைக்காதது தான் இடிக்கிறது. உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் நாயகனை மட்டும் பாராட்டும் கூட்டங்கள் மாதிரி இல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களையும் பாராட்டுவீர்கள் என்றுதானே நாங்கள் எல்லாம் எதிர்பார்க்கிறோம். நீங்களே இப்படி மறந்தா எங்கள மாரிதியானங்க (நாங்களும் தொழில்னுட்ப துறைதா) ஆக்கள் எப்படி தலைவா வெளியுலகத்திற்கு தெரிவாங்க...
கந்தசாமியை விட உங்க பதிவு ஒருபடி மேல....
Robin Hood, Max Payne, Zoro... போன்ற படங்களின் பாதிப்பு கந்த(ல்)சாமியில் நன்றாக தெரியுது...
//மனிதர் அனுபவித்து செய்திருக்கிறார்.. (இதை எந்த அர்த்தத்திலும் படம் பார்த்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்)//
//மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை) //
இதையெல்லாம் நான் படம் பார்க்கும் போது கூட கவனிக்கவில்லை.
ரொம்ப ரசிச்சி பார்த்தீங்களோ.,?..,
கார்க்கி said...
வாழ்க லோஷன்..//
நன்றி கார்க்கி.. உங்க வாழ்க கனதி புரிந்தது.. ஹி ஹி ஹி
===============
Nimalesh said...
it was amazing movie. even i watched 3 times all ready...//
மூன்று தரம் என்பது கொஞ்சம் கூடத் தான்.. ஆனால் நானும் ரசித்தேன்.. சில காட்சிகள் மட்டும் பல தடவைகள் பார்க்கலாம்
வந்தியத்தேவன் said...
படத்தை விட உங்கள் பதிவு நீநீநீநீநீளமாக இருக்கின்றது. //
அது தானே இத்தனை நாள் எடுத்தேன்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசணை எனக்கும் என்றைக்கு கந்தசாமி கந்தல்சாமி தான்//
வயசு போனா இந்தப் பிரச்சினை இருக்குத் தான்.. முந்திய தலைமுறைப் பதிவர்கள் பலருக்கு இந்தப் படம் பிடிக்கவில்லையாம் வந்தி..
==================
Kamal said...
ஹலோ லோஷன்....இதே தான் நானும் நெனச்சேன்....ஆனா இந்த படத்த ஏன் இப்படி கிழிச்சு தொங்க விட்டாங்கன்னு எனக்கு புரியவே இல்ல...வில்லு படத்த விட இந்த படம் மொக்கன்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரு...//
அதே தான்.. விக்ரமில் ஏதாவது தனிப்பட்ட கோபங்கள் இருக்கோ?
ஷ்ரியா வ எனக்கும் இந்த படத்துல பிடிச்சிருந்தது.....தமிழ் சினிமாவுல இப்படி Bond Girl மாதிரி யாரும் வந்தது இல்ல...ஆனா சுசித்ரா குரல் தான் கொஞ்சம் கடுப்படிசுது...//
அதையே தான் ட்விட்டர்ல எங்கள் நண்பர்கள்கிட்டே சொன்னேன்.. ஒரு புதுவகை கதாநாயகி.. எப்போதும் குரல் குயில் போல அல்லது சுஷீலா போல இருக்கவேண்டும் என்று இல்லையே..
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்த்ரிக்காவின் குரல் கேட்டதில்லையா?
யோ வாய்ஸ் said...
அப்பாடா சதீஸுக்கு அப்புறமா கந்தசாமிக்கு ஒரு நல்ல விமர்சனம். எனககும் படம் ரொம்ப பிடித்தது. விக்ரமின் உழைப்பு ரொம்ப பிடித்தது. ஆனால் ஏனோ தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பிடிக்கல. //
பாடல்களா பின்னணி இசையா? நல்லாத் தானே இருக்கு..
ஆமா கேபிள் சங்கர் அவரது விமர்சனத்தில் திருட்டுபயலே எடுத்தது சசிகனேசன் இது சுசிகனேசன் என்று கூறி இருக்காரே! அப்ப ரெண்டு பேரும் ஒன்னா இல்லையா?//
கேபிளாரே பிழை விட்டது தான் ஆச்சரியம்..
விரும்புகிறேன், ஸ்டார்,திருட்டுப்பயலே இவை மூன்றும் இயக்கிய சுசி கணேசன் தான் கந்தசாமி இயக்கியவர்.. குழப்பம் வேண்டாம்
//வில்லன் ஜம்பருடன் போட்ட குத்தாட்டத்தை பார்த்து சிரித்து குடல் வெளிய வந்ததுதான் மிச்சம்.. அது உங்களுக்கு நல்லாருந்துதா? //
ஆணை ரசிக்கும் ஆண்..
/// எமது வெற்றி FM வானொலிதான் 'கந்தசாமி' திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி. ////
ஆகா திருப்பவும் ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க....
சூரியனும் (நவா) தாம் தான் திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி என்று கூறுகிறார்களே ?
யார் தான் உண்மை..
//இப்போதெல்லாம் பல தமிழ் படங்களில் இந்த வித்தியாசமான colour tonesஐப் பாவிப்பதன் மூலம் காட்சிகளின் களங்களில் வேறுபாடு ஏற்படுத்துவது தானே trend..
//
ஆனால் அதை அவர்கள் சரியாக பாவிக்கவில்லை...மணிரத்னம் படங்களில் இதனை அழகாக பாவிப்பார். குறிப்பாக ஆய்த எழுத்தில் 3 பிளாஷ்பக் கதைகளுக்கும் வெவ்வேறு பிண்ணனி வர்ணம்.
ஆனால் நொந்தசாமியில்.....எங்க ஊர் வீடியோகடைக்காரர் கூட இத விட நல்லா எடுப்பார்....அவ்வளவு மோசமாக இருக்கும்..
என்னதான் இருந்தாலும் இந்தப்படத்துக்கு இவ்வளவு நீளமான விமர்சனம் எழுதி இதுக்கு படமே மேல் என்று சொல்ல வைச்சிட்டீங்க...:-))))))
//தையே தான் ட்விட்டர்ல எங்கள் நண்பர்கள்கிட்டே சொன்னேன்.. ஒரு புதுவகை கதாநாயகி.. எப்போதும் குரல் குயில் போல அல்லது சுஷீலா போல இருக்கவேண்டும் என்று இல்லையே..
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்த்ரிக்காவின் குரல் கேட்டதில்லையா? //
ஏங்க இப்படி எல்லாம் பயம் காட்டுறீங்க....அவங்க குரல் கேட்டுருக்கேன் ஆனா ஞாபகம் இல்லை...அவ்ளோ பயங்கரமாவா இருக்கும்????
//கேபிளாரே பிழை விட்டது தான் ஆச்சரியம்..
விரும்புகிறேன், ஸ்டார்,திருட்டுப்பயலே இவை மூன்றும் இயக்கிய சுசி கணேசன் தான் கந்தசாமி இயக்கியவர்.. குழப்பம் வேண்டாம் //
கேபிள் பதிவிலுருந்து...
////சுசி கணேசன் இப்படி சொதப்பியிருக்காரா???
திருட்டுப்பயலே, டிஷ்யூம் படத்தை பார்த்த பிறகு ஒரு நல்ல திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களில் வரிசையில் அவரும் இருக்காருனுல்ல நினைச்சேன்//
சுசிகணேசனின் களம் இது கிடையாது.. அதே போல் டிஸ்யூம் சுசி இயக்கவில்லை. அது சசி//
அதேபோல்,நீங்களும் ஸ்டார் என்று எழுதியுளீர்கள்...:)))))))))))))))))
சுசி கணேசன் இயங்கியது 5 ஸ்டார்...பிரவீன் காந்த் பிரஷாந்த்தை வைத்து இயக்கிய மொக்கை படம் தான் ஸ்டார்....
ஸ்ஸ்ஸ் அப்பாடா....
இப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்களின் வருகையால் ஒரு புதிய போக்கு உருவாகக்கூடிய சாத்தியங்கள் தெரிகின்றன. இவ்வாறான நிலையில் தனிமனித சாகசங்களை மிகைப்படுத்திக் காட்டி இதனூடு மீண்டும் நட்சத்திரங்களை துதி பாடும் வழமையான நிலை தோன்றாதிருக்க வேண்டுமென்பதே இந்த பதிவர்களின் நோக்காக இருக்கலாம் அல்லவா. ஏன் தாணு போன்றவர்களே சிறிய முதலீட்டில் பல யதார்த்தபூர்வமான படங்களை தர முன் வரலாமே.
மனதை தொட்டு சொல்லுங்கள் லோஷன் அண்ணா உண்மையில் திரைக்கதை உங்களுக்கு அயர்ச்சியை தரவில்லையா
//கந்தசாமி அனைவரும் அறிந்த ரோபின்கூட் பாணியிலான ஒரு கதை.. காலாகாலமாக மலைக்கள்ளன் முதல் அண்மைய சிவாஜி வரை பல பேர் கையாண்ட கதை..தெரிந்த கதை தானே என்று யாராவது சிலர் யோசித்திருந்தால் குரு,ஜென்டில்மன்,ரமணா,அந்நியன்,சிவாஜி என்று இவை அனைத்துமே தோற்றிருக்கவேண்டுமே ..//
இருந்தாலும் இந்த படங்களில் கொஞ்சம் சமயோசிதமான புதிய அதுவரை பார்த்திராத காட்சியமைப்புகள் இருந்ததே இதில் அப்படியேதும்
ம்ம் தொடர்ந்து விஜய்,அஜித் படங்கள் மண்ணை கவ்வ இனி இம்மாதிரி படங்கள் குறையும் என நினைத்தேன். ம்ஹ்ம் இவர் ஆரம்பித்து விட்டார் .
Commercial படங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை கொஞ்சம் Fresh ஆக கொடுக்கலாமே அயன் போல
புல்லட் said...
^%$^&^$&!நறநற! ஒரு பெனாத்தல் படத்துக்கு படக்கதையை விட பெரிதாக ஒரு விமர்சனம்.. //
முந்தைய தலைமுறையில் பிந்திப் பிறந்த சிலருக்கு இது நீங்கள் சொல்வது போல ஒரு பெனாத்தல் படம் தான்.. வந்தியோடு நீங்கள் ஒட்டி உறவாடும் போதே யோசித்தேன்,., இப்போ விளைவு தெளிவாகத் தெரியுது,.
உங்களுக்காகப் பொக்கிஷம் எடுத்திருக்கிறார் சேரன்.. கண்டு களியுங்கள்.. ;)
உங்களுக்கு விக்ரம் கொக்பக் பொக்கக் எண்டு குழறிக்கொண்டு கழுத்து முறிந்தவன் ஆட்டியது போல வருவது அருமையான முகபாவனையா?
என்ன அநியாயாம்?//
நாய் வேஷம் போட்டால் குரைப்பதும் சேவல் வேஷம் போட்டால் அப்படி நடப்பதும் சகஜம் தானே அப்பனே.. ;)
ஸ்ரேயாவின் உதட்டசைவும் ஆடல்அசைவுளும் சுத்தமாக லிறிக்ஸ் ரிதத்துடன் சிங்க் ஆ ஆகவி்லலை..//
அஆமாம்.. அது பற்றி குறை சொல்லவேண்டும் என்று நினைத்து மறந்து போனேன்.. நன்றி புல்லட்
வில்லன் ஜம்பருடன் போட்ட குத்தாட்டத்தை பார்த்து சிரித்து குடல் வெளிய வந்ததுதான் மிச்சம்.. அது உங்களுக்கு நல்லாருந்துதா?//
பின்ன இல்லாமலா? அதே ஆட்டத்தை நம்ம வந்தி அல்லது நான் அல்லது நீங்கள் ஆடியிருந்தால் யோசித்துப் பாருங்கள்.. கற்பனையே பயங்கரமாக இல்லை? ;)
ஒரு கெத்தும் திமிருமாக அவரது நடையும் சுசித்ராவின் ஆம்பிளைத்தனமான குரலும் சேர்ந்து அந்தப் பாத்திரம் உயிர்பெற்று நிற்கிறது
//
ஸ்ரேயாவின் நடை? என்ன கொடுமையய்யா இது? இதை கேட்க யாருமேயில்லயா? ரெண்டு கால்களுக்குமிடைுயே ஏதோ பலகை வைத்து பூட்டியது ுபோல் ஒரு நடை.. அது பாத்திரத்துக்கு உயிர்பூட்டியதா?//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. புதிய ஸ்டைலிஷ் ற்றேண்ட்களை தெரியாதவங்களின் தொல்லை பெருந்தொல்லையப்பா..
பேசாம பிரியா இருக்கிற நேரம் கொஞ்சம் மஜெஸ்டிக் சிட்டி பக்கம் ஒரு எட்டு எட்டிப் பார்த்திட்டு வாங்க..
படத்தில் கண்ட ப்ளஸ் பொயிண்ட்கள்.. விக்ரம்மின் அழகும் தோற்றமும் .. உரித்து விட்ட ஸ்ரேயா.. சில இடத்தில் வடிவேலு..இசை//
அப்பாடா ஒத்துக் கொண்டீர்களே பிலஸ்கலும் இருந்தன என்று.. ;) நன்றி புல்லட்.
வெளிநாட்டு காட்சிகள் கூட கண்ணைக்குத்தியதால ரசிக்க முடியவில்லை.. மெக்சிகோவில் காட்டப்பட்ட மாயர்களின் பலிபீடம் கூட ப்ளாஸ் வெளிச்சத்தால் போய்விட்டது..//
ஒ அதை வேறு பார்த்துள்ளீர்கள்.. பரவாயில்லையே.. ஏகாம்பரம் படுமோசம் என்று பலர் சொன்னார்கள்.. மாயர் பலிபீடம் என்றாவது தெரிந்திருக்கே.. ;)
15/100தான் நான் தருவேன்..//
மிச்ச எல்லாத்தையும் எங்கே வைக்கப் போறீங்க? ;)
கமல் சொன்ன திருத்தம்.. தெரிந்தே கவனக் குறைவால் நான் விட்ட தவறு அது..
அது ஸ்டார் தான்.. ஐ மறந்து விட்டேன்.. நன்றி கமல் சுட்டிக் காட்டியதற்கு
டிஷ்யூம் இயக்கியவர் சசி. (ரோஜாக்கூட்டம்,பூ புகழ்)
நொண்டிசாமி said...
படம் நான் முதல் நாளே பார்த்துவிட்டேன். சூப்பர்...
கிளைமேக்ஸ் சப்பென முடிந்துவிட்டதாக நினைக்கிறேன்..//
ஏற்றுக் கொள்கிறேன்.. எதிர்பார்ப்பில்லாமல் போய் விட்டது..
===============
சுபானு said...
அப்பாடியோ... சேமித்து வைக்கின்றேன் பின்னர் வாசிக்க.. ரொம்ப நீளமாய்ப்போட்டுதே....//
ஆமாம்.. ஆறுதலா வாசியுங்கள்..
இரா பிரஜீவ் said...
எனது பார்வையில் கந்தசாமி எப்படி இருந்ததோ அதை 75% உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. படத்தொகுப்பை பற்றி பெரிதும் கதைக்காதது தான் இடிக்கிறது. உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் நாயகனை மட்டும் பாராட்டும் கூட்டங்கள் மாதிரி இல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களையும் பாராட்டுவீர்கள் என்றுதானே நாங்கள் எல்லாம் எதிர்பார்க்கிறோம். நீங்களே இப்படி மறந்தா எங்கள மாரிதியானங்க (நாங்களும் தொழில்னுட்ப துறைதா) ஆக்கள் எப்படி தலைவா வெளியுலகத்திற்கு தெரிவாங்க...//
ஒளிப்பதிவு பற்றியெல்லாம் சொல்லி இருக்கேனே.. மன்னிக்கவும் படத் தொகுப்பு,சேர்க்கை,கிராபிக்ஸ் பற்றி எதுவும் சொல்லவில்லைத்தான்..
கந்தசாமியை விட உங்க பதிவு ஒருபடி மேல....//
இது என்னைப் பாராட்டவா? படம் சராசரி என்று சொல்லவா? ;)
Sanga said...
Robin Hood, Max Payne, Zoro... போன்ற படங்களின் பாதிப்பு கந்த(ல்)சாமியில் நன்றாக தெரியுது...//
இப்போ வருகிற எந்தப் படங்களில் தான் ஆங்கிலப் படப் பாதிப்புக்கள் இல்லை? இந்தப் படங்கள் சிவாஜிக்கு முதலும் வந்தவை தானே?
இப்போ வருகிற எந்தப் படங்களில் தான் ஆங்கிலப் படப் பாதிப்புக்கள் இல்லை? இந்தப் படங்கள் சிவாஜிக்கு முதலும் வந்தவை தானே?
============
நொண்டிசாமி said...
//மனிதர் அனுபவித்து செய்திருக்கிறார்.. (இதை எந்த அர்த்தத்திலும் படம் பார்த்தவர்கள் எடுத்துக் கொள்ளலாம்)//
//மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை) //
இதையெல்லாம் நான் படம் பார்க்கும் போது கூட கவனிக்கவில்லை.
ரொம்ப ரசிச்சி பார்த்தீங்களோ.,?..,//
நாங்கள் பார்க்கும்போது ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஆழமாக அலசிப் பார்ப்பொமுல்ல.. ;)
மறுபடி ஆற அமர பாருங்கள்..
முமைத் கான் said...
//வில்லன் ஜம்பருடன் போட்ட குத்தாட்டத்தை பார்த்து சிரித்து குடல் வெளிய வந்ததுதான் மிச்சம்.. அது உங்களுக்கு நல்லாருந்துதா? //
ஆணை ரசிக்கும் ஆண்..//
வாங்க முமைத் கான். உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.. ;)
ரசிப்பது தப்பா? ;)
ஒரு பெண் ஆணை ரசிக்கலாம்.. நான் ரசிக்கக் கூடாதா? ;)
//.. கேபிளாரே பிழை விட்டது தான் ஆச்சரியம்.. விரும்புகிறேன், ஸ்டார்,திருட்டுப்பயலே இவை மூன்றும் இயக்கிய சுசி கணேசன் தான் கந்தசாமி இயக்கியவர்.. குழப்பம் வேண்டாம் //
சார்.. கேபிளார் பிழை விடவில்லை, யோ வாய்ஸ் தான் பிழை விட்டுள்ளார்.. கேபிளார் சொன்னது டிஷ்யூம் படத்தைப்பற்றி,அது சசி இயக்கியது (not சசிகுமார் )...
btw நீங்க ஒரு பிழை விட்டுட்டீங்க ஸ்டார் படம் இயக்கியது பிரவீன் காந்த்.... 5star தான் சுசி.....
come to the point.. என்னதான் சொன்னாலும் கந்தசாமி நொந்தசாமிதான்....புல்லட் வாழ்க ...
ஒரு கந்தசாமி பார்கறதுக்கு நூறு வில்லு, இருநூறு அழகிய தமிழ் மகன், முன்னூறு குருவி பார்க்கலாம்...
ஆஹா அதே விசயத்த கமலும் சுட்டி காட்டிட்டார .... ok ok இப்பதான் அவரின் comment ஐ வாசித்தேன்...சாரி for ரிபீட்டு......
கந்தசாமி பற்றி சுருக்கமாக சொன்னால் பார்க்கக்கூடிய படம்.. எதிர் பார்த்திருந்த படம் இல்லை..
// ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிடும்போது தமிழ்ப் பக்கம் தொழிநுட்ப வளர்ச்சியும், தயாரிப்பு செலவும் மிகப் பின் தங்கியிருப்பது பிரதான உறுத்தும் காரணம்..// 1960ளில் திருவிளையாடல் போன்ற படங்கள் வெளிவந்த காலங்களில் புகுத்திய தொழில்நுட்பங்களோடு இக்காலத்தில் புகுத்தும் தொழில்நுட்பங்களை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன ! காரணம் என்னவாக இருக்கும்? ? ?
// என்னுடைய 'கந்தசாமி'யை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கந்தசாமி பாருங்கள்.. புதிதாக தெரியும்.. //
ஒரு முறை பார்த்ததே..............
Tata Safari Kanthaswamy Contest
participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com
Story ok endaalum paravaayillai.. screenplay nallam nu sonneengale ithellaam romba overu.. screenplay better aa irunthirunthaa it wud hav attracted the repeat audience who are the deciders of a hit film and a superhit film. The collection u quoted is the collection only by the first audience na..
மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை)//
ரொம்ப Disturb பண்ணி போட்டார்.
ஆனால் ஒரே சிறிய துண்டோடு ஸ்ரேயா ஆடும் மியாவ் பாடலில் சும்மா கிறங்கடிக்கிறார்..///
ஆமா, எனக்கு theater A/C குளிரிலும் பார்க்க , காட்சியை பார்த்த குளிரால் குளிர்ந்து போனேன்!!!நல்ல வேலை ஏதும் சளி வைக்கல !!!
சரியான விமர்சனம்
Hisham Mohamed - هشام said...
ஒரு முறை பார்த்ததே..............
well said
1st different openion from vettri crew..
super.......
லோஷன்!
படம் அட்வான்ஸ்ட் புக்கிங்கில் சாதனை படைத்தது உண்மைதான்!
நீங்கள் காட்டியிருக்கும் வசூல் விவரங்கள், படத்தைப் பற்றிய உண்மைச்செய்தி வெளிவருவதற்குள்ளாகவே அட்வான்ஸ் புக்கிங் செய்த அப்பாவிகளின் பணம். படுதோல்வியடைந்த ஆளவந்தான் கூட முதல் இரண்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடியது.
ஒருவாரம் கழிந்த நிலையில், தியேட்டர்களில் ஈயாடுகிறது என்பதே இன்றைய நிலைமை. அபிராமி ராமநாதன் சென்னை மாநகர உரிமையை எடுத்திருக்கிறார். அவர் போட்ட காசில் பாதி கூட தேறாது.
தாணு வழக்கம்போல காசு பார்த்து விட்டிருப்பார். வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமே நஷ்டம் மிஞ்சும். ஆனாலும் இன்னும் மூன்று மாசம் கழித்து சுசிகணேசனையும், விக்ரமையும் திட்டி குமுதத்தில் தாணு பேட்டியளிக்க கூடும்.
லோஷன்.....
தங்களின் ‘கந்தசாமி’ குறித்த பார்வை குறித்து நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. அது தனிமனித ரசனை சம்பந்தப்பட்டது. ஆனால், கந்தசாமி என்கிற படத்தினை பொதுவிலே வைத்து ஆராயும் பொழுது அதில் ஏகப்பட்ட நல்லவற்றையும், அதே அளவு குற்றங்களையும் காணமுடியும்.
195 நிமிடங்கள் நீள்கின்ற திரைக்கதையை இயக்குனர் சுசிகணேசன் 150 நிமிடங்களுக்குள் சுருக்கியிருந்தால் படத்தில் வேகம் இருந்திருக்கும். கந்தசாமி திரைக்கதையில் தேவையற்ற காட்சிகள் அதிகமென்று படம்பார்க்கிற சராசரி இரசிகனுக்கும் புரியும். என்னைப் பொறுத்தளவில் ‘கந்தசாமி’ கலக்கல் சாமியாக வந்திருக்க வேண்டிய படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், அவ்வாறு வரவில்லை என்பது வெளிப்படையே.
தங்களின் ‘நிற அலைகள்’ குறித்த விடயத்துக்கு வருகிறேன். மெக்ஸிக்கோ சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிவப்பு தன்மை அதிகமாகிவிட்டது. அதனை என்னகாரணத்துக்காக சுசிகணேசன் அனுமதித்தார் என்று தெரியவில்லை. ‘நிற அலை’களை அண்மையில் மிகச்சரியாகப் பயன்படுத்திய படமாக ‘வாரணம் ஆயிரத்தை’ சொல்ல முடியும். அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு அதை அளகாகவும் மிகைப்படாமலும் செய்திருந்தார்.
‘இருக்கிறம்’ சஞ்சிகைக்காக நான் எழுதிய கந்தசாமி விமர்சனம் இங்கே....
http://maruthamuraan.blogspot.com/2009/08/blog-post_30.html
Ananth said...
/// எமது வெற்றி FM வானொலிதான் 'கந்தசாமி' திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி. ////
ஆகா திருப்பவும் ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க....
சூரியனும் (நவா) தாம் தான் திரைப்படத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வானொலி என்று கூறுகிறார்களே ?
யார் தான் உண்மை..//
ஆனந்த், அது தான் தெளிவாக அன்று நான் வானொலியில் சொன்னேனே.. கந்தசாமியை இறக்குமதி செய்த நிறுவனம் எம்முடன் ஒப்பந்தம் செய்து எமக்கு திரைப்படத்தின் உத்தியோகபூர்வ வானொலி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளனர்.
சூரியன் வானொலி நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஒன்றை செய்து இன் திரையரங்குகளான சவோய் மற்றும் கோன்கொர்டில் மட்டும் விளம்பரம் செய்கிறார்கள்..
இப்ப விளங்கியதா?
டொன்’ லீ said...
//இப்போதெல்லாம் பல தமிழ் படங்களில் இந்த வித்தியாசமான colour tonesஐப் பாவிப்பதன் மூலம் காட்சிகளின் களங்களில் வேறுபாடு ஏற்படுத்துவது தானே trend..
//
ஆனால் அதை அவர்கள் சரியாக பாவிக்கவில்லை...மணிரத்னம் படங்களில் இதனை அழகாக பாவிப்பார். குறிப்பாக ஆய்த எழுத்தில் 3 பிளாஷ்பக் கதைகளுக்கும் வெவ்வேறு பிண்ணனி வர்ணம். //
அதுகூட எதோ ஒரு மெக்சிகோ படமோ ஸ்பானியப் படமோ கொடுத்த அப்பட்டமான ஐடியா தானாம்..;)
ஆனால் நொந்தசாமியில்.....எங்க ஊர் வீடியோகடைக்காரர் கூட இத விட நல்லா எடுப்பார்....அவ்வளவு மோசமாக இருக்கும்..//
;)
என்னதான் இருந்தாலும் இந்தப்படத்துக்கு இவ்வளவு நீளமான விமர்சனம் எழுதி இதுக்கு படமே மேல் என்று சொல்ல வைச்சிட்டீங்க...:-))))))//
சுசி கணேசன் அப்ப எனக்கு நன்றி சொல்லுவாரா? ;) இப்பிடி ஒரு பதிவு போட்டால் படம் நல்லது என்று சொல்லுவார்கள் என்றால் வேட்டைக்காரனுக்கு இப்போதே பலர் விமர்சனம் எழுத ஆரம்பித்திருப்பார்களே.. ;)
Kamal said...
//தையே தான் ட்விட்டர்ல எங்கள் நண்பர்கள்கிட்டே சொன்னேன்.. ஒரு புதுவகை கதாநாயகி.. எப்போதும் குரல் குயில் போல அல்லது சுஷீலா போல இருக்கவேண்டும் என்று இல்லையே..
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்த்ரிக்காவின் குரல் கேட்டதில்லையா? //
ஏங்க இப்படி எல்லாம் பயம் காட்டுறீங்க....அவங்க குரல் கேட்டுருக்கேன் ஆனா ஞாபகம் இல்லை...அவ்ளோ பயங்கரமாவா இருக்கும்????//
பயங்கரம் என்று சொன்னேனா? ஏன்யா? ;)
//கேபிளாரே பிழை விட்டது தான் ஆச்சரியம்..
விரும்புகிறேன், ஸ்டார்,திருட்டுப்பயலே இவை மூன்றும் இயக்கிய சுசி கணேசன் தான் கந்தசாமி இயக்கியவர்.. குழப்பம் வேண்டாம் //
கேபிள் பதிவிலுருந்து...
////சுசி கணேசன் இப்படி சொதப்பியிருக்காரா???
திருட்டுப்பயலே, டிஷ்யூம் படத்தை பார்த்த பிறகு ஒரு நல்ல திரைக்கதை அமைக்கும் இயக்குனர்களில் வரிசையில் அவரும் இருக்காருனுல்ல நினைச்சேன்//
சுசிகணேசனின் களம் இது கிடையாது.. அதே போல் டிஸ்யூம் சுசி இயக்கவில்லை. அது சசி//
அதேபோல்,நீங்களும் ஸ்டார் என்று எழுதியுளீர்கள்...:)))))))))))))))))
சுசி கணேசன் இயங்கியது 5 ஸ்டார்...பிரவீன் காந்த் பிரஷாந்த்தை வைத்து இயக்கிய மொக்கை படம் தான் ஸ்டார்....
ஸ்ஸ்ஸ் அப்பாடா....//
திருத்திவிட்டேன்.. நன்றி
தர்ஷன் said...
இப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்களின் வருகையால் ஒரு புதிய போக்கு உருவாகக்கூடிய சாத்தியங்கள் தெரிகின்றன. இவ்வாறான நிலையில் தனிமனித சாகசங்களை மிகைப்படுத்திக் காட்டி இதனூடு மீண்டும் நட்சத்திரங்களை துதி பாடும் வழமையான நிலை தோன்றாதிருக்க வேண்டுமென்பதே இந்த பதிவர்களின் நோக்காக இருக்கலாம் அல்லவா. ஏன் தாணு போன்றவர்களே சிறிய முதலீட்டில் பல யதார்த்தபூர்வமான படங்களை தர முன் வரலாமே.//
நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான்.. பல பதிவர்கள் அவ்வாறு ஆரோக்கியமான புதிய யதார்த்த சிந்தனையுடன் இயங்குவது கண்டுள்ளேன்..
ஆனால் இங்கே சுப்ரமணியபுரம்,பூ,நாடோடிகள் போன்றவற்றையும் நொட்டை சொன்னவர்கள் இருக்கிறார்கள்.. ;)
=======================
தர்ஷன் said...
மனதை தொட்டு சொல்லுங்கள் லோஷன் அண்ணா உண்மையில் திரைக்கதை உங்களுக்கு அயர்ச்சியை தரவில்லையா //
இல்லை தர்ஷன்.. தெரிந்த கதை, தெரிந்த முடிவாக இருந்தாலும் கொண்டுபோன விதம் எனக்கு கொஞ்சமும் சலிக்கவில்லை..
கொழும்பிலே இன்னும் எல்லா திரையரங்கிலும் housefull. இது என்ன காட்டுகிறது??
//கந்தசாமி அனைவரும் அறிந்த ரோபின்கூட் பாணியிலான ஒரு கதை.. காலாகாலமாக மலைக்கள்ளன் முதல் அண்மைய சிவாஜி வரை பல பேர் கையாண்ட கதை..தெரிந்த கதை தானே என்று யாராவது சிலர் யோசித்திருந்தால் குரு,ஜென்டில்மன்,ரமணா,அந்நியன்,சிவாஜி என்று இவை அனைத்துமே தோற்றிருக்கவேண்டுமே ..//
இருந்தாலும் இந்த படங்களில் கொஞ்சம் சமயோசிதமான புதிய அதுவரை பார்த்திராத காட்சியமைப்புகள் இருந்ததே இதில் அப்படியேதும்
ம்ம் தொடர்ந்து விஜய்,அஜித் படங்கள் மண்ணை கவ்வ இனி இம்மாதிரி படங்கள் குறையும் என நினைத்தேன். ம்ஹ்ம் இவர் ஆரம்பித்து விட்டார் . //
விக்ரம் பீமா நடித்து கையை சுட்டவர் தானே.. இன்னொரு பக்கம் விக்ரமின் ஜெமினி தான் இந்த மசாலா வகையறாக்களை புதிய விதமாக ஆரம்பித்து விட்டது..
//Commercial படங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை கொஞ்சம் Fresh ஆக கொடுக்கலாமே அயன் போல//
:)
Statistics said...
//.. கேபிளாரே பிழை விட்டது தான் ஆச்சரியம்.. விரும்புகிறேன், ஸ்டார்,திருட்டுப்பயலே இவை மூன்றும் இயக்கிய சுசி கணேசன் தான் கந்தசாமி இயக்கியவர்.. குழப்பம் வேண்டாம் //
சார்.. கேபிளார் பிழை விடவில்லை, யோ வாய்ஸ் தான் பிழை விட்டுள்ளார்.. கேபிளார் சொன்னது டிஷ்யூம் படத்தைப்பற்றி,அது சசி இயக்கியது (not சசிகுமார் )...
btw நீங்க ஒரு பிழை விட்டுட்டீங்க ஸ்டார் படம் இயக்கியது பிரவீன் காந்த்.... 5star தான் சுசி.....//
மேலே பாருங்கள்.. முதலிலேயே திருத்தி விட்டேன்.. :)
come to the point.. என்னதான் சொன்னாலும் கந்தசாமி நொந்தசாமிதான்....புல்லட் வாழ்க ...
ஒரு கந்தசாமி பார்கறதுக்கு நூறு வில்லு, இருநூறு அழகிய தமிழ் மகன், முன்னூறு குருவி பார்க்கலாம்...//
திருத்த முடியாது.. மகிழ்ச்சி.. தற்கொலை தான் முடிவென்று நீங்கள் முடிவெடுத்தால் நான் என்ன செய்ய முடியும்..;)
ஒரு தடவை பார்த்தே உயிர் போயிடுமே.. எப்பிடி இத்தனை தடவை பார்ப்பீங்க???
புல்லட்டின் வில்லு பார்க்கப் போய் பல்லுப் போன கதை தெரியாதா?
என்ன கொடும சார் said...
கந்தசாமி பற்றி சுருக்கமாக சொன்னால் பார்க்கக்கூடிய படம்.. எதிர் பார்த்திருந்த படம் இல்லை..//
அதே அதே.. அதையே தான் நானும் சொல்லி இருக்கிறேன்..
==================
மாயா said...
// ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிடும்போது தமிழ்ப் பக்கம் தொழிநுட்ப வளர்ச்சியும், தயாரிப்பு செலவும் மிகப் பின் தங்கியிருப்பது பிரதான உறுத்தும் காரணம்..// 1960ளில் திருவிளையாடல் போன்ற படங்கள் வெளிவந்த காலங்களில் புகுத்திய தொழில்நுட்பங்களோடு இக்காலத்தில் புகுத்தும் தொழில்நுட்பங்களை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன ! காரணம் என்னவாக இருக்கும்? ?//
தேடல்,ஆர்வம்,முயற்சி குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது.. வேறு என்னவாக இருக்கலாம்?? சுடுவது இலகு என்று தெரிந்ததால் பெரிய முயற்சி எடுப்பதில்லையோ?
Hisham Mohamed - هشام said...
// என்னுடைய 'கந்தசாமி'யை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கந்தசாமி பாருங்கள்.. புதிதாக தெரியும்.. //
ஒரு முறை பார்த்ததே..............//
ஆகா இப்படி பல்டி அடிச்சிட்டீங்களே ஹிஷாம்..நீங்கள் 1st show பார்த்து முடிய எனக்கு அனுப்பிய sms அப்படியே என்னிடம் இருக்கே..
பிரமாதம் பிரம்மாண்டம்.. சிவாஜியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது என்று சொல்லிட்டு இப்போ என்னாச்சு?
பெரும்பான்மையான கருத்துக்கள் பக்கம் சாய்ந்தாச்சோ? ;)
Mulli said...
Story ok endaalum paravaayillai.. screenplay nallam nu sonneengale ithellaam romba overu.. screenplay better aa irunthirunthaa it wud hav attracted the repeat audience who are the deciders of a hit film and a superhit film. The collection u quoted is the collection only by the first audience na..//
So what does the report says now? ;) Still u say its not a hit or super hit film after seeing the reports from Abirami?
=============
ப்ரியானந்த சுவாமிகள் said...
மீனாகுமாரி பாடலில் குத்தாட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார்.. (முமைத் கானையே பார்க்கவிடாமல் இவர் ஆடும் குத்தாட்டம் ரசனை)//
ரொம்ப Disturb பண்ணி போட்டார்.
ஆனால் ஒரே சிறிய துண்டோடு ஸ்ரேயா ஆடும் மியாவ் பாடலில் சும்மா கிறங்கடிக்கிறார்..///
ஆமா, எனக்கு theater A/C குளிரிலும் பார்க்க , காட்சியை பார்த்த குளிரால் குளிர்ந்து போனேன்!!!நல்ல வேலை ஏதும் சளி வைக்கல !!!//
சுவாமிகள் செம பஜனையில் இருக்கிறார் போல இருக்கு.. ;)
ஆ.ஞானசேகரன் said...
சரியான விமர்சனம்//
நன்றி.. பார்த்தீங்களா?
====================
என்ன கொடும சார said...
Hisham Mohamed - هشام said...
ஒரு முறை பார்த்ததே..............
well said
1st different openion from vettri crew..//
எ.கோ.சா .. ர் விட்டுட்டீங்க.. ;) (சார..)
வரலாமே.. ரசனை & ஜனநாயக உரிமை.. ஆனால் ஹிஷாம் கட்சி பாய்ந்திட்டார்..
Tharsana said...
super.......//
tx :)
===================
யுவகிருஷ்ணா said...
லோஷன்!
படம் அட்வான்ஸ்ட் புக்கிங்கில் சாதனை படைத்தது உண்மைதான்!
நீங்கள் காட்டியிருக்கும் வசூல் விவரங்கள், படத்தைப் பற்றிய உண்மைச்செய்தி வெளிவருவதற்குள்ளாகவே அட்வான்ஸ் புக்கிங் செய்த அப்பாவிகளின் பணம். படுதோல்வியடைந்த ஆளவந்தான் கூட முதல் இரண்டு வாரங்கள் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடியது.
ஒருவாரம் கழிந்த நிலையில், தியேட்டர்களில் ஈயாடுகிறது என்பதே இன்றைய நிலைமை. அபிராமி ராமநாதன் சென்னை மாநகர உரிமையை எடுத்திருக்கிறார். அவர் போட்ட காசில் பாதி கூட தேறாது.
தாணு வழக்கம்போல காசு பார்த்து விட்டிருப்பார். வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமே நஷ்டம் மிஞ்சும். ஆனாலும் இன்னும் மூன்று மாசம் கழித்து சுசிகணேசனையும், விக்ரமையும் திட்டி குமுதத்தில் தாணு பேட்டியளிக்க கூடும்.//
நன்றி யுவக்ரிஷ்னா.. இருக்கலாம்.. ஆனால் தாணு இப்போது அந்த குறித்த பத்திரிகையாளரை சபித்துக் கொண்டிருக்கிறாரே..
இன்னொன்று நேற்று சென்னையிலிருந்து திரும்பிய என் நண்பனொருவன் சத்யம் complexஇலே எல்லாம் housefullஎன்றானே..
ஆகா நானே 50வது பின்னூட்டம் போடுகிறேன்.. ;)
மருதமூரான். said...
லோஷன்.....
தங்களின் ‘கந்தசாமி’ குறித்த பார்வை குறித்து நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. அது தனிமனித ரசனை சம்பந்தப்பட்டது. ஆனால், கந்தசாமி என்கிற படத்தினை பொதுவிலே வைத்து ஆராயும் பொழுது அதில் ஏகப்பட்ட நல்லவற்றையும், அதே அளவு குற்றங்களையும் காணமுடியும். //
ஏற்கிறேன்.. எனது விமர்சனமும் குறைகளையும் பார்த்துள்ளது என்றே நினைக்கிறேன்..
195 நிமிடங்கள் நீள்கின்ற திரைக்கதையை இயக்குனர் சுசிகணேசன் 150 நிமிடங்களுக்குள் சுருக்கியிருந்தால் படத்தில் வேகம் இருந்திருக்கும். கந்தசாமி திரைக்கதையில் தேவையற்ற காட்சிகள் அதிகமென்று படம்பார்க்கிற சராசரி இரசிகனுக்கும் புரியும். என்னைப் பொறுத்தளவில் ‘கந்தசாமி’ கலக்கல் சாமியாக வந்திருக்க வேண்டிய படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், அவ்வாறு வரவில்லை என்பது வெளிப்படையே.
தங்களின் ‘நிற அலைகள்’ குறித்த விடயத்துக்கு வருகிறேன். மெக்ஸிக்கோ சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிவப்பு தன்மை அதிகமாகிவிட்டது. அதனை என்னகாரணத்துக்காக சுசிகணேசன் அனுமதித்தார் என்று தெரியவில்லை. ‘நிற அலை’களை அண்மையில் மிகச்சரியாகப் பயன்படுத்திய படமாக ‘வாரணம் ஆயிரத்தை’ சொல்ல முடியும். அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு அதை அளகாகவும் மிகைப்படாமலும் செய்திருந்தார்.
‘இருக்கிறம்’ சஞ்சிகைக்காக நான் எழுதிய கந்தசாமி விமர்சனம் இங்கே....
http://maruthamuraan.blogspot.com/2009/08/blog-post_30.html//
உங்கள் விமர்சனமும் முழுமையாக வாசித்தேன்.. கருத்துக்கள் சொல்லி உள்ளேன்..
//கந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி.. //
ஓ! இதைத்ததான் தனித்துவமாக இருக்கிறது எண்டவாங்களா?
உங்கள் விமர்சனங்களோடு நான் உடன் படுகிறேன் அண்ணா. இரசனை ஒவ்வொருவருக்கும் வேறு படலாம். (நேற்றுத்தான் கந்தசாமி பார்த்தேன்.)
அண்ணா அந்த பிகர பார்த்து ரசிக்காம இருக்கலாமா???...... அண்ணா ஊக்கோ கயிரோ கட்டத்தேவை இல்ல அது நிற்கும்..............
vimarsanam super anna
வலைப்பதிவுக்கு வந்த கதை விளையாட்டுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.
வலைப்பதிவுக்கு வந்த கதை விளையாட்டுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.
அநேகமாக நான் பார்த்த பதிவுகளில் கந்தசாமியை கிழிக்காமல் விட்ட முதல் பதிவு என்றுதான் சொல்ல வேண்டும்..
என்னுடைய கருத்துப்படி இந்தப்படத்தை ஆங்கிலக்தில் எடுத்திருந்தால் எம்மவர்கள் வெகுவாக பாராட்டியிருப்பார்கள்
என்னுடைய கருத்துப்படி இந்தப்படத்தை ஆங்கிலக்தில் எடுத்திருந்தால் எம்மவர்கள் வெகுவாக பாராட்டியிருப்பார்கள்
i agree with sabesan's comment
"ரசனைகள் வித்தியாசப்படலாம்.. "
இது தன இங்க ஹை லைட் அண்ணா
(இப்ப ஆவது என் கமெண்ட் அலொவ் பன்னுவீங்கள)
அதுதான் ட்ரை பண்ணி தமிழ் இல கமெண்ட் பண்ணி இருக்கன்.
always root
Anna, your post is also long like the film...
கனககோபி said...
//கந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி.. //
ஓ! இதைத்ததான் தனித்துவமாக இருக்கிறது எண்டவாங்களா?//
பதிவை சொன்னீங்களா? படத்தை சொன்னீங்களா?
==================
சந்ரு said...
உங்கள் விமர்சனங்களோடு நான் உடன் படுகிறேன் அண்ணா. இரசனை ஒவ்வொருவருக்கும் வேறு படலாம். (நேற்றுத்தான் கந்தசாமி பார்த்தேன்.)//
நன்றி சந்த்ரு.. :) உங்கள் வலைத்தளப் பிரச்சினை எல்லாம் சரியா?
அஜுவத் said...
அண்ணா அந்த பிகர பார்த்து ரசிக்காம இருக்கலாமா???...... அண்ணா ஊக்கோ கயிரோ கட்டத்தேவை இல்ல அது நிற்கும்..............//
நீங்க சொன்னா சரி தான் சகோ.. ;)
==========
kajeswaran said...
vimarsanam super anna
நன்றி சகோ
பனையூரான் said...
வலைப்பதிவுக்கு வந்த கதை விளையாட்டுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.//
ஆகா கூப்பிட்டுட்டீங்களா? மாட்டிட்டேனா? இந்த வெளாட்டு தானே எனக்கு சிக்கல்..
உங்கள் அன்புக்கு நன்றி பனையூரான்.. நிச்சயம் வருகிறேன்.. :)
==============
Sabesan Mahalingam said...
அநேகமாக நான் பார்த்த பதிவுகளில் கந்தசாமியை கிழிக்காமல் விட்ட முதல் பதிவு என்றுதான் சொல்ல வேண்டும்..//
மிச்ச எல்லாரும் மன நோயாளிகள் என்று தாணு சொல்லிட்டாரே.. ;)
என்னுடைய கருத்துப்படி இந்தப்படத்தை ஆங்கிலக்தில் எடுத்திருந்தால் எம்மவர்கள் வெகுவாக பாராட்டியிருப்பார்கள்//
அதே.. எம்மவரைத் திருத்த முடியாது.. வெள்ளைக்காரன் எதை எடுத்தாலும் ஆகா ஓகோ.. எம்மவர் கந்தசாமி எடுத்தாலும் கந்தல்,நொந்தல் என்று நோட்டை நொடிசு சொல்வார்கள்
kajeswaran said...
என்னுடைய கருத்துப்படி இந்தப்படத்தை ஆங்கிலக்தில் எடுத்திருந்தால் எம்மவர்கள் வெகுவாக பாராட்டியிருப்பார்கள்
i agree with sabesan's comment//
:)
===================
Jathukulan said...
"ரசனைகள் வித்தியாசப்படலாம்.. "
இது தன இங்க ஹை லைட் அண்ணா
(இப்ப ஆவது என் கமெண்ட் அலொவ் பன்னுவீங்கள)
அதுதான் ட்ரை பண்ணி தமிழ் இல கமெண்ட் பண்ணி இருக்கன்.
always root//
பரவாயில்லை.. நீங்கள் ஆங்கிலத்திலும் தரலாம்..
Sinthu said...
Anna, your post is also long like the film...//
:) grand and entertaining like the film too na? ;)
சந்தேகமே இல்லை கந்தசாமி உண்மையிலையே கலக்கல் சாமிதான்.............................
சந்தேகமே இல்லை கந்தசாமி உண்மையிலையே கலக்கல் சாமிதான்.............................
தரம்,நவீனத்துவம்,பரிணாமம் என்று நுணுக்கமாக முட்டையில் முடி பிடுங்குபவர் மத்தியில் தைரியமாக பிடித்ததைப் பிடித்தது என்று சொல்லி இருக்கும் உங்கள் நேர்மையான விமர்சனம் பிடிச்சிருக்கு லோஷன்.
எனக்கும் கந்தசாமியில் பிடித்த பிடிக்காத பல விஷயங்கள் இருந்தாலும் பெரும்பாலான உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.
ஷங்கர் கடவுள் மாதிரியே ஏற்றிப் பிழைக்கும் இவர்கள் தாணு சொன்னது போல மன நோயாளிகள் தான்.
தொடர்ந்தும் நிலை மாறாமல் மனதில் பட்டதை சொல்லுங்கள்.
For ur information Dasawathaaram music director himesh
அன்பின் கேரளாக்காரன் (ஆனாலும் அதிரி புதிரி தமிழன்) -
பாடல்களுக்குத் தான் இசை ஹிமேஷ் ரேஷமைய்யா..
பின்னணி இசை தேவி ஸ்ரீ பிரசாத் :)
sorry Mr:LOSHAN thanks for ur information
Post a Comment