.jpg)
இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மீண்டும் நாங்கள் சொல்கின்ற விடயம், பதிவர்கள் மட்டுமன்றி, பதிவுலக வாசகர்கள், பதிவிட ஆர்வமுள்ள எதிர்கால பதிவர்கள்,பின்னூட்ட ஆர்வலர்கள் என்று அனைவரையும் அழைக்கிறோம்..
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.
குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)
நிகழ்ச்சி நிரல்
அறிமுகவுரை
பதிவர்கள் அறிமுகம்
வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
திரட்டிகள்
சிறப்பு அதிதி உரை
இடைவேளை
வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
வலைப்பதிவும் சட்டமும்
பதிவுலக அனுபவங்கள்
எதிர்காலத் திட்டங்கள்
கலந்துரையாடல்
நன்றியுரை
இந்நிகழ்ச்சி நிரல் இதுவரை தாமாக முன்வந்த பதிவுலகப் பெருந்தகைகளை வைத்து நாம் தயாரித்த முன்னோடி நிகழ்ச்சி நிரல்.. யாராவது மேலும் முன்வந்து மேலும் பயனுள்ள விடயங்கள் பதிவுலகத்துக்கு/பதிவர்களுக்கு பயனுள்ள விடயங்கள் தொடர்பாக உரையாற்றவோ வித்தியாசமான நிகழ்ச்சி படைக்கவோ விரும்பின் தயங்காமல் தொடர்பு கொள்ளவும்.
Blogger இன் பத்தாவது பிறந்த நாளும் எமது முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்புடன் இணைந்தே வருவதால் ஒரு சிறப்பு ஏற்பாடும் செய்யலாம் என நினைத்துள்ளோம்.
ஆரம்பத்தில் நான்கு பேராக பெயரளவில் ஆரம்பித்த இந்த ஏற்பாட்டுக் குழு இப்போது பலத்துடன் அதிகரித்துள்ளது.. சந்திக்க முடிந்தவர்கள் எமக்குள் சந்திப்புக்களை இந்த வாரத்துள் மீண்டும் நடத்தி இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்..
இதுவரை எம்முடன் தொடர்புகொண்டு வருகையை உறுதி செய்யாதவர்கள் தயவு செய்து எதிர்வரும் புதன்கிழமைக்கு(19.08.2009) முன்னர் தொடர்புகொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com
பல்வேறு ஊடகங்களையும் சேர்ந்த நண்பர்கள் தாமாக முன்வந்து இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள்.. நன்றிகள்..
இதுபற்றிய தகவல்களை வெளியிட்டு பங்குபற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆதரவை அளித்த அணித்துப் பதிவர்கள் மற்றும் பல்வேறு திரட்டிகளுக்கும் நன்றிகள்..
ஒற்றுமையே பலம்..
அனைவரும் வாரீர்.. (வர முதல் வருகையை உறுதிப்படுத்துவீர்..)
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

20 comments:
விடியலுக்கு வராமல் பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்..
வாழ்த்துகள் நண்பா
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
வாழ்த்துக்கள் லோஷன்
சும்மா கலக்குங்க
என்ன கொடும சார் ......yen pa avarum manithar thane leave yadukka kudathaa??????
btw all the best to the Blog meeting....advance wishes..
குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)//
குறித்த நேரத்தில் ஆரம்பிக்கும் என்பது சரி... ஆனால் அதற்காக 9.30 பின்பு வரவிரும்பியவர்கள் வரக்கூடாதென்றில்லை.. மிக சுவாரசியமான ஆரம்பிப்பை நீங்கள் மிஸ் பண்ணிவிடுவீர்கள்.. நம்மாளு 9 மணிக்கு மீட்டிங் என்றால் 9.30 க்குதான் எலார்ம் வைப்பான் நித்திரயால எழும்ப..உதையெல்லாம் , நண்டுக்காலை நிமித்தினாலும் நிமித்தலாம் நம்மாளு பழக்கத்தை நிறுத்த முடியாது.. ;)ஆகவே பிந்தி வருபவர்களும் வாஙகோ..தொடங்கும்போது எலலாரும் இருக்குவேண்டும் என்று ஒருபேராசை ... இல்லாவிட்டால் என்ன உங்கள் சிற்றுண்டிகளையும் பானங்களையும் நான் தின்றுவிடுவேன் அவ்வளவுதான்.. ஹிஹி
//என்ன கொடும சார் said...
விடியலுக்கு வராமல் பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.///
ரிப்பீட்டே
சந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா....
//சப்ராஸ் அபூ பக்கர் said...
சந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா....//
அப்படியா....
சந்திப்பு சூரியன் கரமாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா....
இப்படிக்கு,
சூரியன்FM விசிரி. (கிகிகி...:))
இந்த வாழ்த்துச்செய்தியை சக்தி, தென்றல் விசிரிகள் பின் தொடரலாம்.
---------------------
சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா.
இது எப்படி?
சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விடயங்கள் முன்னெடுக்க வாழ்த்துக்கள்!
சந்தோஷம். சந்திப்பு வெற்றிகரமாக அமையவும்,ஆக்கபூர்வமான விடயங்கள் முன்னெடுக்கப்படவும் வாழ்த்துக்கள்!
வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்!
நல்லபடியாய் நடைபெற வாழ்த்துக்கள்
நல்லபடியாய் நடைபெற வாழ்த்துக்கள்
வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் !
சக வலைப்பதிவர் சிங்கை நாதன் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இவ் வைத்தியச் செலவுகளுக்கான உதவிகளை சக பதிவர்கள் உலகெங்குமிருந்து உதவி வருகின்றனர்.
23ம் திகதி இலங்கை பதிவர் ஒன்றுகூடல் நடைபெற இருக்கும் அந்நாளில் இலங்கைப்பதிவர்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு தொகையை அன்றே திரட்டி சிங்கை நாதன் அவர்களுக்கு அனுப்பினால் நல்லது. இதை ஏற்பாட்டுக்குழுவிலுள்ள யாரேனும் செய்யலாம். இன்றுவரை அவருக்கு தேவையான பணத்தேவையில் அரைப்பங்கு தான் சேர்ந்துள்ளது. எனவெ நண்பர்களே வரும் 23ம் திகதி இது தொடர்பாகவும் கலந்துரையாடுங்கள் நிதியைச் சேருங்கள். நண்பர் விரைவாக நலம்பெறப் பிரார்த்தியுங்கள்.
அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள்.
சிறுதுளி பெருவெள்ளமென உணர்த்துவோம்
இலங்கை வலைப்பதிவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
மாயா
niraiya miss pannittean pola...illaiya loshan
வலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் !//
நல்லது மாயா. உங்களின் தங்கமான மனதுக்கு ரொம்ப நன்றி.
அன்றைய சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடுவது என ஏற்கனவே தீர்மானித்துள்ளோம் என்பதை அறியத் தருகின்றோம்.
எனினும், இலங்கை வலைப்பதிவர்களுக்கு சுட்டிக்காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி.
good job Loshan & team.
my wishes for the 1st ever Tamil bloggers meeting in Sri lanka.
Jonathan Vethanayagam - Canberra
பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக் நடக்க என் வாழ்த்துக்கள். நிலாமதி
Post a Comment