August 17, 2009

வலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.



வலைப்பதிவுகள் என்றவுடன் ஞாபகம் வரும் இன்னொரு விடயம் பின்னூட்டம். மூக்கும் சளியும் போல, ஷில்பா ஷெட்டியும் முத்த சர்ச்சையும் போல பிரிக்க முடியத பந்தம் இது.

பின்னூட்டங்களில் பலவகை பற்றி அண்மையில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்து நண்பரொருவர் பதிவுபோட்டிருந்தார்.

பின்னூட்டங்களில் மிகப்பிரபலமான வகைதான் கும்மி.

வலைப்பதிவுக்கு வந்த புதிதில் இதென்னடா சீட்டாட்ட ரம்மி மாதிரி ஒரு கும்மின்னு புரியாமல் நின்றுபின் பிரபல, மிகப்பிரபல பதிவர்களின் சூடான மற்றும் மொக்கைப்பதிவுகளில் போய் கும்மி என்னவென்று அறிந்து, பின் பழகி, கற்று கும்மிகளில் இணைந்துகொண்டேன்.

எனினும் நம்மையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கும்மியிலேயே ஊறி PhD செய்து டாக்டர் பட்டம் வாங்குமளவுக்கு கும்மியில் கரைகண்ட கும்மி மகா சிகாமணிகளும் வலைப்பதிவுகளில் இருக்கிறார்கள். (அதுசரி டாக்டர்.இளையதளபதி, டாக்டர்.சங்கர் மாதிரி 'பட்டம்' வாங்கிய பதிவர்கள் உள்ளனரா? தொழில் ரீதியான டாக்டர்.முருகானந்தம் மற்றும் டாக்டர்.ஜீவராஜ் ஆகியோரைத் தெரியும்.)


பதிவிலுள்ள ஒரு கருத்தை வைத்து அல்லது பின்னூட்டம் ஒன்றிலிருந்து ஆரம்பித்து சர்ச்சை, மொக்கை, விவாதம், கேலி, கிண்டல், தாக்குதல் என்று கும்மிகள் பல்வேறுவிதமான அரட்டைக்கச்சேரிதான்.

பதிவுலகக் கும்மிகள் பிரபலமானாலும் - பல பதிவர்கள் பலகாலமாக பதிவுலகில் மட்டுமில்லாமல் பலவிதமாகவும் கும்மி வந்துள்ளார்கள்.

Chatting, Messenger,மின்னஞ்சல் என்று பலவிதம்... டிவிட்டரிலும் பல பதிவர்கள் பலகாலம் இருந்தபோதும் நானும் முன்பே Twitterரில் இருந்தாலும் இப்போ அண்மையில் ஒரு சில வாரங்களாகத்தான் Twitter சுவை பிடிபட்டது.

உலகப் பிரபலங்கள் பலரும் Twitterஇல் இருந்தாலும் எனக்கென்னவோ அந்த Status msg(நாம் என்ன செய்கிறோம் - எமது நடப்பு நிலைமை) மட்டும் பதிந்த


அவ்வளவு சுவாரஸ்யம் இருப்பதாகத் தோன்றவில்லை.

அசின் குளித்தாரா? மல்லிகா ஷெராவத் மச்சானுடன் ஷொப்பிங் போனாரா? ஒபாமா எத்தனை மணிக்குத் தூங்கப்போகிறார் என்றெல்லாம் அறிந்துகொள்ளப் பல்லாயிரம் பேர் காத்திருப்பார்கள்...

அப்படியான உலகப் பிரபலங்களைப் பின் தொடர எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்கள்...

நமக்கெல்லாம் எத்தனை பேர்...

Facebook இலும் இந்த Status message விஷயம் இருந்தபோதும் அதில் இன்னும் பல விஷயங்கள் இருப்பதனால் போரடிப்பதில்லை. எனினும் அண்மைக்காலத்தில் - கடந்த சில வாரங்களாகத் தான் இந்த Twitter எங்கள் தமிழ்ப்பதிவர்கள் மத்தியில் மிகப் பிரபலமாயிற்று.

அண்மையில் குசும்பன் எழுதிய ட்விட்டர் பதிவு ட்விட்டர் பற்றித் தெரியாதோருக்கும் தெளிவாக ட்விட்டர் பற்றி விளக்கியிருக்கும்.


இப்போதெல்லாம் Twitter பக்கம் போவதும், கும்மியடிப்பதும் எங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று.

ட்விட்டர் இப்போது எங்கள் அன்றாடத் திண்ணையாகித் தமிழ் மணக்கிறது. என்ன செய்கிறோம் என்பது மட்டுமல்ல என்ன நினைக்கிறோம் என்பதெல்லாம் கலந்து கட்டி ட்விட்டர் அரட்டை அமோகம் & அமர்க்களம்.

ஊர்வம்பு, உலக அதிசயம், பதிவுலகப் பரபரப்பு என்று எதையும் விட்டுவைப்பதில்லை.

இதிலொரு வசதி ட்விட்டரில் ரிபீட் அடிக்கவும், ரிவிட் அடிக்கவும் முடியும்.

மாதிரி வேறு பல நடவடிக்கைகள் கவனக் கலைப்பாங்களாக இல்லாதது ட்விட்டரின் பெரும்பலம்.. வந்தியா வேறு வேலை செய்யாமல் என்ன செய்கிறாய், என்ன நினைக்கிறாய்.. லிங்க் ஏதாவது கொடுக்கப் போகிறாயா .. அவ்வளவு தான் நீ ட்விட்டலாம்..

இதுல மேலதிகமாக உருவேற்றி உபயோகப் படுத்துவது உங்கள் கையில்..

வெளிநாடுகளில் ட்விட்டரில் இருக்கிறோம் என்று சொல்வது ஒரு அந்தஸ்து போல.. அது தான் இவ்வளவு பிரபலங்கள் ட்விட்டுகிறார்கள்..


அண்மையில் இன்னொரு நல்ல உள்ளம் (சுபானு) தனது ஊஞ்சலில் ட்விட்டும் பதிவர்களைஎல்லாம் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டார்.. (இது தேவையா???? அதுவும் என் பெயரை முதலில் போட்டு.. ஏன்? ஏன்?ஏன்?)


எனினும் அண்மையில் நாம் திண்ணையில் இருந்தபோது ஒரு சகோதரி(பாவை) ஒரு லிங்க் கொடுத்தார்..

அதில் சொல்லப்பட்ட விஷயம் உலகில் பெரும்பாலான ட்விட்டர்கள் வெட்டியாக அரட்டை அடிக்கத் தான் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள் என்று... இப்போ யார் அதை இல்லை என்றது???

எனவே,
உங்கள் அலுவலகங்களிலும் ஆணி பிடுங்கும் வேலை இல்லாவிட்டால் வாங்க திண்ணையில் குந்தலாம்.. உலகத்தையே ட்விட்டருக்கு கொண்டுவந்து கும்மலாம்..

13 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

டிவிட்டர் வகுப்பு தொடங்குற ஐடியா வோ?

சுபானு said...

அலுவலகத்தில் ஆணி புடுங்கிறதைக் கூட ட்வீட் பண்ணுவோமே...
”ட்விட்டர்” - திண்ணை என்னும் பதம் மிகப் பொருத்தம் அண்ணா..

சுபானு said...

அண்ணா.. அண்மையில் எங்கோ படித்தேன்.. அதாவது பதிவுலகத்தில் பதிவதற்கும் ( Blogging ) சாதாரண எழுத்தாளராக எழுத்துக்கும் ( writer's writing ) இடையிலான வித்தியாசம், பதிவுலகத்தில் காணப்படும் கருத்துப்பரிமாற்ற conversation பாணியிலான தொழில்நுட்ப அனுகூலமே. எனவே நாம் இந்தத் தொழில்நுட்ப அனுகூலத்தை அகற்றி விட்டு வெறுமனே எழுதுவோமேயானால் அதனில் சுவாரஸ்யம் என்ற சுவை அகற்றப்பட்டு விடும். எனவே பதிவுலகில் இருந்து இந்த ”கும்மி” என்னும் பதத்தை அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது..


கும்மி ஒன்றை ஆரம்பிச்சாச்சுதல்ல...

ஆதிரை said...

வந்தியா வேறு வேலை செய்யாமல் என்ன செய்கிறாய், என்ன நினைக்கிறாய்.. லிங்க் ஏதாவது கொடுக்கப் போகிறாயா .. அவ்வளவு தான் நீ ட்விட்டலாம்...//

இதில உள்குத்து ஒன்றும் இல்லைத்தானே....

வேந்தன் said...

//அசின் குளித்தாரா? //
கிகிகி.... ஆனா அவா இப்படி புகார் கொடுத்திருக்கா.
ட்விட்டரில் என் பெயரில் மோசடி...அசின் புகார்!
மேலதிக தகவலுக்கு இந்த முகவரியை பாருங்கோ

http://www.viduppu.com/view.php?2aHVnLe0d9hY40ecJJ554b4OaH14d3j5i3cc2Bn13d434OT3a02ZLt2e

ஷா \ Shah said...

//அதுசரி டாக்டர்.இளையதளபதி, டாக்டர்.சங்கர் மாதிரி 'பட்டம்' வாங்கிய பதிவர்கள் உள்ளனரா? தொழில் ரீதியான டாக்டர்.முருகானந்தம் மற்றும் டாக்டர்.ஜீவராஜ் ஆகியோரைத் தெரியும்.//
டாக்டர்.புரூனோ என்டு ஒருத்தர் இந்தியாவில இருக்கிறர்.இவர் நியமாலுமெ டாக்டர்தானாம்.(காந்தி தாத்தா சிலை பின்னாடி ,ஒன்னா போண்டா சாப்பிட்டவங்க சொல்றாங்க.)

ஷா \ Shah said...

டாக்டர் மு.கருணாநிதி என்டு ஒருத்தர் இருக்கிறர்.இவர் சிலவேளை பதிவரா இருக்கலாம்.அடிக்கடி “என் உடன்பிறப்பே”,”ரத்தத்தின் ரத்தமே” எண்டு எல்லாம் சொல்லுவார்....

அது சரி,நீங்க இந்த கும்மியெண்டா என்னவெண்டு வடிவா சொல்லவே இல்லை...

புல்லட் said...

அடடா! ட்விட்டர் என்ற ஒன்றுஇருப்பதாயும் , அதில் பல , பிரபல, புஜபல ”கும்”மர்கள் இருப்பதாகவும் எனக்கு அறியத் தந்த கும்முக சிகாமணி குலோத்துங்க லோசனுக்கு கோடானுகோடி நன்றிகள்.. எனக்கு சிறுவயதில வீட்டு சலவைக்கல்லில்ஆடைகளை கும்மிய அனுபவம் மட்டுமே உண்டு.. அதை கொண்டு உப்படியான இடங்களில் சமாளிக்க முடியுமா எனபதையும் அறியத்தருமாறு வேண்டிக்கொள்கிறேன்..

இப்படிக்கு கும்மத்தெரியாத குழந்தை
அப்பாவி புல்லட்

ஆ.ஞானசேகரன் said...

நமக்கு அந்த அளவிற்கு புரிதல் இல்லை

என்ன கொடும சார் said...

//வலைப்பதிவுகள் என்றவுடன் ஞாபகம் வரும் இன்னொரு விடயம் பின்னூட்டம். மூக்கும் சளியும் போல, ஷில்பா ஷெட்டியும் முத்த சர்ச்சையும் போல பிரிக்க முடியத பந்தம் இது.//

சுருக்கமா லோஷனும் இளம் பெண்களும் மாதிரி என்று சொல்லுங்கோ....

வந்தியத்தேவன் said...

ட்விட்டரில் ஆரோ ஒருவரது கோமணம் உருவப்பட்டதாக பேஸ்புக்கில் செய்தி அறிந்தேன். அத்துடன் யானை, கார் என ஒருவர் அலைவதாகவும் செய்தி.

Anonymous said...

//ட்விட்டரில் ஆரோ ஒருவரது கோமணம் உருவப்பட்டதாக பேஸ்புக்கில் செய்தி அறிந்தேன். //

விசயம் தெரியாமல் பேசலாமோ, இப்போ யாரும் கோமணம் அடிப்பதில்லை. அது முப்பாட்டன் காலமாக்கும். நாங்கள் அணிவது APPLE யட்டிகளாக்கும்.

என்ன வந்தி அங்கிள்

ஒரு வேளை....
அந்த முப்பாட்டன் பழக்கத்தை நீங்கள் இன்னமும் கைவிடேல்லை என நினைக்கிறன்.

பொது இடங்களில் சொல்லக்கூடாது தான் இருந்தாலும் சொல்லுறன் அங்கிள் அந்த பழக்கத்தை மாத்திடுங்கோ.

Unknown said...

எல்லரும் கேட்டுங்க...

நான் ஓட்டு மட்டும்தான் போடவந்தேன்.

இங்கு நான் கும்மி அடிக்கவில்லை :P

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner