நாளை இலங்கைப் பதிவர் சந்திப்பு..
எல்லாம் சரியாக ஒழுங்கு செய்துள்ளதால் நாளை காலை எட்டு மணிக்கு மண்டபத்துக்கு செல்வதை விட வேறு வேலை இல்லை..

நேற்று பார்த்த 'கந்தசாமி'யைப் பற்றி விமர்சனப் பதிவு இடலாம் என்று பார்த்தால் வீட்டில் கொஞ்சம் வேலை (சமையல் எல்லாம் இல்லப்பா.. நான் சமைச்சு யார் சாப்பிடுறது?) அதுக்குப் பிறகு இன்று 'அவதாரம்' நிகழ்ச்சியும் நான் தனியே.. (தனியே தவிக்க விட்டு கேரளாவுக்கு ஓய்வெடுக்கவும் ஓசி ட்ரிப் அடிக்கவும் சென்ற விமல் ஒழிக..)
மற்ற எல்லாருடைய கந்தசாமி பதிவுகளையும் பார்த்தேன்.. கூட்டமா சேர்ந்து கொலைவெறியுடன் கும்முகிறார்கள்..
எனக்கென்றால் எல்லாரும் ஒரே இடத்தில் எடுத்து பண்ணுகிறார்களோ என்று ஒரு டவுட்.. ;) (இதுக்காக கொலை வெறியோடு என்னத் துரத்தாதீங்கப்பா)
இருக்கும் நல்ல விஷயங்கள் பற்றி,.. ம்ஹூம் ஒரு வார்த்தை இல்லை.. இப்போதெல்லாம் இது ஒரு fashion/trend.
ஒரு பதிவர் ஒரு படம் மோசம் என்று தொடங்கினால் போதும்.. படங்களில் வடிவேலு அடியாட்களிடம் மாட்டிக் கொண்ட மாதிரி.. சிக்கிட்டான்யா வா சாத்தலாம் என்று போட்டு கும்மி எடுப்பது..

பொதுவாகவே சோம்பலாக இருக்கும் போது விமர்சனம், விளையாட்டு போன்ற பதிவுகளை நான் போடுவது கிடையாது.. அதுவும் இன்று வேலைகளும் சேர்ந்ததால் என்னுடைய கந்தசாமி திங்கள் வருவார்..
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவார் என்றெல்லாம் நான் பன்ச் டயலாக் சொல்ல மாட்டேன்.. ஆனா கிரேட்டச்ட்டா வருவார் என்று நீங்கள் நினைத்தால் நான் மறுக்க மாட்டேன்.. (ஒரு தன்னடக்கம் தான்)
விக்ரமின் கந்தசாமிக்கே இப்படி என்றால் இனி வேட்டைக்காரனுக்கு?
நினைக்காவே தலை சுத்துதே..
விஜய், பேசாம இப்பவே அரசியலுக்கு ஓடி விடுங்கள்.. ;)
Ashesல் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு அடிக்கும் அளவுக்கு இங்கிலாந்து ஓட்டங்களை குவி குவி என்று குவிக்கிறது..
இந்தப் போட்டிக்கு சுழல் பந்துவீச்சாளர் ஒருவரை எடுக்காமல் விட்ட தவறை இப்போது பொன்டிங் யோசிப்பார்..
இந்தப் பெரிய இலக்கை இரண்டு நாள் முழுவதும் முயற்சி செய்தாலும் ஆஸ்திரேலியாவினால் அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை..
ஆஷஸ் கிண்ணம் ஆஸ்திரேலியாவிடம் இருந்து செல்லாமல் இருக்க இன்னும் இரண்டே இரண்டு வழிகளே உள்ளன..
1.மழை..
2.ஆஸ்திரேலிய வீரர்கள் மிகப் பொறுமையுடன் ஆடி சமநிலை முடிவைப பெறுவது..
நான் அவதானித்த இன்னொரு சுவாரஸ்ய விடயம்..
2005இல் ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் வைத்து ஆஷசைப் பறிகொடுத்த போது முதல் டெஸ்ட் போட்டியிலேயே பொன்டிங் இரத்தக் காயம் பட்டார்..(ஹார்மிசனின் பௌன்சரினால்)

இன்றும் பொன்டிங்கிற்கு காயம்.. களத்தடுப்பில் ஈடுபடும் போது உதட்டில் காயம்..
காயம் கட்டியம் சொல்லுதோ?
அறிமுக வீரர் ஜோனதன் ற்றொட் கன்னி சதத்தினை எடுத்து அசத்தியுள்ளார்.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல,புது வரவு..
Jonathan Trott

மறுபக்கம் இலங்கை எதிர்பார்த்ததைப் போலவே நியூ சீலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் உருட்டி விட்டது..
பந்துவீச்சாளர்கள் ஜொலிப்பார்கள் என்று பார்த்தால் புதிய அவதாரம் எடுத்த டில்ஷான்?
என்ன மனிதரய்யா?

இந்த வருடம் இவர் மேல் அதிர்ஷ்ட தேவதையும், வெற்றி தேவதையும் நின்று தாண்டவம் ஆடுகிறார்கள்..
ஒரு நாள் போட்டிகளில் ஓட்டக் குவிப்பு.. T 20 உலகக் கிண்ணப்போட்டிகளில் தொடரின் சிறந்த வீரர்..
பின்னர் பாகிஸ்தான் அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விக்கெட் காப்பாளர்..
இப்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக 92 & 123 Not out..
போட்டியின் சிறப்பாட்டக் காரர்.. இது டில்ஷான் காலம்..
வேறு என்ன .. இது ஒரு மசாலாப் பதிவு..
கிடைத்த நேரத்தில் நினைத்ததை பதிந்துள்ளேன்..
திங்கள் கந்தசாமியைக் கூடி வருகிறேன்..
இலங்கையிலுள்ள பதிவர்களே,நண்பர்களே நாளை சந்திப்போம்.. சந்தொஷிப்போம்..
இப்ப வர்ட்டா?
17 comments:
இருக்கும் நல்ல விஷயங்கள் பற்றி,.. ம்ஹூம் ஒரு வார்த்தை இல்லை..
நீங்கள் சொல்வது முமைத் கானைப்பற்றித்தானே..
தங்கள் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள்! :-)
பதிவு அருமை. சந்திப்பு வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள்.
First congrats for Ur sucessful blogger meet.ok "தனியே தவிக்க விட்டு கேரளாவுக்கு ஓய்வெடுக்கவும் ஓசி ட்ரிப் அடிக்கவும் சென்ற விமல் ஒழிக"anna osiya Swine flu vangapogiddaru pola.paththu eni program saijunka.
மாட்டி விட்டிட்டன் ஹா ஹா..
http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.html
Kola veri irukkalam...
Ana, kola pannurathilayee veriya irukkathenga anna...
Any way all the best..
சந்திப்பு இனிதாக இருக்க வாழ்த்துகள் நண்பா
தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.
என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...
அண்ணா சந்திப்பு எப்படி? ஆக்கபூர்வமாக சந்தோசமாக சந்திப்பு இடம்பெர்றிருக்குமென நம்புகிறோம். சுடச்சுட ஒரு பதிவு போட்டுவிடுங்களேன் நிகழ்வுகள் பற்றி அறிய ஆவலாக உள்ளோம்.
பில்ட் அப் கொடுத்த லெவெலுக்கு படம் நல்ல இருக்கா ??
நானும் இணையத்தில் சில review கலை வாசிச்சேன். அவ்வளவு நல்லா ஒன்னும் எழுதி இல்லையே!!
வடையும், ரீயும் நன்றாக இருந்தது.
அது என்ன, “ட”வுக்கு பதிலாக “ற” உபயோகிக்கிறீர்கள்?
கந்தசாமியைப் பொறுத்தவரை, எந்த சீனிலும் புதுமையும் வித்தியாசமும் இல்லை! இதில் எப்படி பாராட்டுவது? 70% பாசிட்டிவ் இருந்து 30% நெகட்டிவ் இருந்தால்
பாராட்டுவதற்கு சான்ஸ் இருக்கிறது! ஆனால், 90% நெகட்டிவும் 10% பாசிட்டிவும் இருந்தால் எப்படி பாராட்டுவதாம்!
உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் கந்தசாமி பிடித்திருந்தது. ஸ்பைடர்மேன், இத்தாலியன் ஜொப் மாதிரி படங்களை ரசித்த எனக்கு அது மாதிரி தமிழில் படங்கள் வர இது முதலாவதாக இருக்கட்டும்.
இங்கிலாந்து ஆஸஷை வென்றுவிட்டது. இனி பொண்டிங்க்கு ஆப்போ? முரளியின் பந்துவீச்சை மார்க் ரிச்சட்ஸன் குறை கூறியுள்ளார் பார்த்தீர்களா?
Regarding Dilshan......... Ithu Dilshan kallam illai.... Yellam IPL 2 seitha kallam..........
hi, new to the site, thanks.
Its not my first time to go to see this web page, i am browsing this website dailly and obtain good data from here everyday.
Post a Comment