
ஒரே விருது இரண்டு தடவை இரு அன்புக்குரியவர்களால் கிடைத்துள்ளது.
சுபானு முதலில் எனக்கு வழங்கிய சுவாரஸ்ய விருதைத் தொடர்ந்து இப்போது ஆதிரை (கடலேறி)யும் வழங்கி இருக்கிறார்.
மகிழ்ச்சி.. நன்றி..
நீங்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பு என்னை நெகிழவைக்கிறது.
அண்மையில் விஜய் டிவி விருதுகள் விழாவில் நடிகர் பார்த்திபன் சொன்னது போல விருதுகளும்,பட்டங்களும் முத்தங்கள் போல.. கொடுத்தாலும் சுவைக்கும்;பெற்றாலும் இனிக்கும்..
(யாருக்கு கொடுத்தல், யாரிடமிருந்து பெறுதல் என்பதில் முத்தங்களிலிருந்து விருத்துகள் வேறுபட்டு நிற்கிறது)
ஆனால் ஏற்கெனவே நான் அறுவரைத் தேர்ந்தெடுத்து சுவாரஸ்ய விருது கொடுத்திருப்பதால் மீண்டும் இன்னும் அறுவரைத் தேர்ந்தேடுக்கப்போவதில்லை..
அண்மைக்கால பதிவுலக சண்டை,சச்சரவுகளை நேற்றும் இன்றும் தான் முழுவதுமாக தேடி,வாசித்து அறிந்தவேளை நல்லகாலம் நான் எதிலுமே சம்பந்தப்படவில்லை என்பது ஆறுதலே..
இந்த விருதுகள் வழங்குதல்,பெறுதலும் கூட இதற்கான காரணம் என்பதும் இங்கே நோக்கத் தக்கது.
எனினும் அன்பின் விளைவாக விருதுகளை எடுத்துக்கொள்ளுங்கள் எந்த பிரச்சினையும் இல்லை..
உணர்வுகளை வெளிப்படையாக நாம் கொட்டும் இடம் என்பதாலும், அனைவரது உணர்வுகளின் கலந்துகட்டி கலவையாக சந்திப்பதாலும் அடிக்கடி இந்த முறுகல்களும், பின் தெளிதலும் சகஜமானதே.
மீண்டும் நன்றிகள்..
விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
பி.கு- இன்னும் என்னென்ன விருதுகள் கொடுத்து சங்கிலிகளை ஆரம்பிக்கப் போறாங்களோ? கண்ணைக் கட்டுதே,,
8 comments:
மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா.....
அனைத்து விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா!!!!
வாழ்த்துக்கள் அண்ணா....
NIce post anna, but I don't know wt is the implication of the post..?
நிறுவனப்படுத்தப்பட்ட பத்திரிகை இதழ் சூழல்களிலிருந்த அதிகார ஆதிக்க நிலவரங்களை உடைத்தெறிந்து யாரும்.. தாம் விரும்பியதை எழுதலாம்.. கருத்தை சொல்லலாம் என்ற வழமையை கொண்டுவந்ததே வலைப்பதிவுதான்..
அதில திரும்பவும்.. இவர்தான் விருதுகொடுக்கணும்.. இவருக்குத்தான் அதிகாரம் இருக்கென்ற கதைகள் சுத்த பேத்தல்கள்.
அப்படியெதுவும் இல்லை... கொடுக்க உங்களுக்கு விருப்பமா.. வாங்கிற ஆட்களுக்கும் விருப்பமா.. அவ்வளவும்தான்..
கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்கலாம். இந்தக் கதைகளுக்கு காதும் கொடுக்கத்தேவையில்லை..
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா.
Hearty wishes. Vaazhthukkal. :D
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த தமிழ்வலைப்பதிவராக சர்வதேச தமிழ் வலைப்பதிவு விருதுகள் பெரும்பாலும் உங்களுக்குத்தான் கிடைக்குமென நினைக்கிறேன்.
http://tamilblogawardsinternational.blogspot.com/
Post a Comment