
காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி..
ஐம்பது ஓட்டங்களால் பாகிஸ்தானிய அணியை தோற்கடித்தது..
இலங்கை அணி சற்று முன்னர் காலி மைதானத்தில் ஐம்பது ஓட்டங்களால் பெற்ற டெஸ்ட் வெற்றி இலங்கை அணி வீரர்களே நேற்று வரை.. ஏன் இன்று காலை வரை எதிர்பார்த்திராத ஒன்றாகவே இருந்திருக்கும்.
168 என்ற ஒரு சிறிய மிகக் சிறிய இலக்கை நோக்கி பாக்சிதான் நேற்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போதே நான் நினைத்தேன் ஐந்து நாள் டெஸ்ட் போட்டி நான்காவது நாளான இன்று மதிய போசன இடைவேளைக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று.
அதுவும் இன்று காலை பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போது கையில் எட்டு விக்கெட்டுக்கள் இருக்க, 97 ஓட்டங்கள் மட்டுமே தேவை.
அதுவும் ஆடுகளத்தில் சல்மான் பட்டும், முதல் இன்னிங்ஸ் சதம் அடித்த ஹீரோ மொகமட் யூசுப்பும்...
யார் தான் நினைத்தார்கள் பாகிஸ்தான் அணி 168ஐ பெற முடியாமல் உருண்டு புரண்டு சுருண்டு போகும் என்று..
முரளியும் இல்லாத இலங்கை அணியின் பலவீனமான பந்துவீச்சு என்ன செய்து லிழித்துவிடும் என்று ஏளனமாக நினைத்தவர்களில் நானும் ஒருவன். மழை வந்தால் நன்றாக இருக்குமே என்று வில்லத்தனமாகவும் நினைத்தேன்..
இலங்கையின் பந்துவீச்சாளர்களின் திறமையை விட, உண்மையில் பொறுப்பற்ற பாகிஸ்தானின் துடுப்பாட்டம் தான் இன்றைய வெற்றியை இலங்கை அணிக்கு வழங்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் வழமையான சொதப்பும் வியாதி, தற்கொலை செய்து தோற்கும் மனோநிலை தொடங்கி விட்டதோ? (இதே வியாதி இந்திய அணிக்கும் பலவேளைகளிலும், இலங்கை அணிக்கு சிலவேளைகளிலும் இருப்பதும் உண்மை..)
நின்று நிலைத்து ஆடவும் விரும்பாமல், வெற்றியைப் பெற்றுக் கொள்ளும் உத்வேகமும் இல்லாமல் மளமளவென்று பாகிஸ்தானிய விக்கெட்டுக்கள் சரிந்ததை என்னவென்று சொல்வது?
சங்ககாரவின் ஆக்ரோஷமான களத்தடுப்பு ஏற்பாடுகளும், பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாண்டதும் குறிப்பிட்டே ஆகவேண்டிய விடயங்கள்.
எனினும் பாகிஸ்தானின் உண்மையான வில்லன், அஜந்தா மென்டிசின் வருகையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, முரளியின் இறுதி நேர காயம் காரணமான விலகல் காரணமாக கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டுவரப்பட்ட ரங்கன ஹேரத் தான்.
15 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஹேரத் பாகிஸ்தானின் நான்கு துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்.
பெரிதாக பில்ட் அப் கொடுத்து எதிர்பார்க்கப்பட்ட அஜந்த மென்டிஸ் பெரிதாக சோபிக்கவில்லை. இரண்டாம் இன்னிங்க்சில் அவர் பெற்ற இரண்டு விக்கெட்டுக்களை விட.
இந்த பெறுபேறுகள் மூலமாக போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை மட்டுமல்லாமல் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான இடத்தையும் ஹேரத் பெற்றுள்ளதாக நான் நினைக்கிறேன்.
இலங்கை அணியில் நிரந்தர இடம் கிட்டாததை அடுத்து இங்கிலாந்தில் கழக மட்டத்தில் கிரிக்கெட் ஆடிவந்த ஹேரத் அவசர அவசரமாக வந்தே இங்கே இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.
பாகிஸ்தானிய அணியைப் பலமுறை இலங்கை அணி பாகிஸ்தானிய மண்ணில் வெற்றி கொண்டிருந்தாலும், இலங்கையில் வைத்து பாகிஸ்தானிய அணியை டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி கொள்வது இதுவே இரண்டாவது தடவை.
அதுவும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி கிட்டியுள்ளது.
இதுவரை இலங்கை பாகிஸ்தானை இலங்கையில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் வெற்றி கொண்டதே இல்லை.. இம்முறை அதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக ஏற்பட்டுள்ளது.
இன்னுமொரு விசேடம் முரளிதரன் டெஸ்ட் அறிமுகம் மேற்கொண்டதன் பின்னர் முரளி இல்லாமல் இலங்கை அணி வென்ற நான்காவது டெஸ்ட் போட்டி தான் இது.
இன்னுமொரு வேடிக்கை முதலாம் இன்னிங்க்சில் பாகிஸ்தான் இலங்கை அணியை விட ஐம்பது ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றது.அதேயளவு ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி இருக்கிறது.
டெஸ்ட் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தானுக்கும் ,தொட்டதெல்லாம் துலங்கிய அதன் தலைவர் யூனிஸ் கானுக்கும் கடைசி வெற்றி கானல் நீராகப் போய் விட்டது.
இறுதி வரை போராடக் கூடிய அணிகளில் ஒன்று என்ற பெயரை இலங்கை மீண்டும் நிரூபித்துள்ளது.
காலி மைதானம் நான்காம் இந்நிங்க்சுக்கு பயங்கர மைதானம் என்பதை மீண்டும் அழுத்தமாகக் காட்டியுள்ளது.
இங்கே நான்காம் இன்னிங்க்சில் ஒரு அணி வெற்றி ஈட்டிய மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெறும் ஆறு ஓட்டங்கள்.
பாகிஸ்தான் இன்று தமக்கு வழங்கப்பட்ட வெற்றி இலக்கான 168ஐ பெற்றிருந்தால் இந்த மைதானத்தில் இறுதி இன்னிங்க்சில் பெறப்பட்ட மூன்றாவது பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அது அமைந்திருக்கும்.
இந்த அதிர்ச்சி தோல்வியிலிருந்து பாக்சிதான் மீண்டு நம்பிக்கையோடு அடுத்த டெஸ்ட் போட்டிக்குள் பிரவேசிப்பது மிக சிரமமாக இருக்கும்.
அதுவும் இந்த வெற்றி தந்துள்ள அசாத்திய மனத் துணிச்சலோடு முரளிதரனும், பிரசன்ன ஜயவர்தனவும் அணிக்குள் மீண்டும் வரும்போது இலங்கை அணி அசுரபலத்தோடு வரும் என்பது உறுதி. (துடுப்பாட்டம் கொஞ்சம் தடுமாறுகிறது.. கொஞ்சம் டிங்கரிங் செய்ய வேண்டும்)
.jpg)
சங்ககார தலைமை தாங்கிய முதல் போட்டியே வெற்றியைத் தந்திருக்கிறது.
மங்களமான ஆரம்பம்..
தொடரட்டும் வெற்றி நடை..
26 comments:
என்ன அண்ணா இவ்வளவு வேகமா இருக்கிங்க. உங்க வேலைப்பளு தெரியும் அப்படி இருந்தும் எப்படி இப்படி உங்களால முடியிது
உங்களுக்கும் (வெற்றிதானே) அண்ணா முந்திக்கொண்டு பதிவிட்டதுல...
அப்படியே தொடருங்க அண்ணா வாழ்த்துக்கள்...
பாகிஸ்தான்...ஐயோ என்றுதான் கத்த வேண்டும். கடவுள் கூட நினைத்திருக்க மாட்டார் இன்று பாகிஸ்தான் தோற்கடிக்கப்படும் என்று. "கிரிக்கட்" கடைசிப்பந்து வரை எதுவும் சொல்ல முடியாது என்பதற்கு இதுவும் உதாரணமாக அமைந்த போட்டி.
//அதுவும் இந்த வெற்றி தந்துள்ள அசாத்திய மனத் துணிச்சலோடு முரளிதரனும், பிரசன்ன ஜயவர்தனவும் அணிக்குள் மீண்டும் வரும்போது இலங்கை அணி அசுரபலத்தோடு வரும் என்பது உறுதி. (துடுப்பாட்டம் கொஞ்சம் தடுமாறுகிறது.. கொஞ்சம் டிங்கரிங் செய்ய வேண்டும்)//
கொழும்பு பிட்சுகள் துடுப்பாட்டத்திற்க்கு ஏற்றவை ஆகவே துடுப்பாட்டத்தை கொஞ்சம் நிதானமாக ஆடினால் தொடரை வெல்லமுடியும். முரளியும் பிரசன்ன ஜயவர்த்தனாவும் உள்ளே வந்தால் யாரின் இடம் போகப்போகின்றதோ? முரளிக்காகத் தான் ரங்கன ஹேரத் ஆடினவர். ஆனால் இந்த மேட்சில் தன் திறமையைக் காட்டி இடத்தைப்பிடித்துவிட்டார். சிலவேளைகளில் மெண்டிஸ் அல்லது மத்தியூ நிறுத்தப்படலாம்.
இங்கே நான்காம் இன்னிங்க்சில் ஒரு அணி வெற்றி ஈட்டிய மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெறும் ஆறு ஓட்டங்கள்.
பாகிஸ்தான் இன்று தமக்கு வழங்கப்பட்ட வெற்றி இலக்கான 168ஐ பெற்றிருந்தால் இந்த மைதானத்தில் இறுதி இன்னிங்க்சில் பெறப்பட்ட மூன்றாவது பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அது அமைந்திருக்கும்.
intha 2 statemets um idikkuthe
சொன்னமில்ல பாத்தீங்களா?........ தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்.
எனக்கு என்ன சந்தோசம் என்றால், லோசன் அண்ணா , அதிகாலை வெற்றியில் சொன்னது பிழைத்துவிட்டது,,,,
லோசன் அண்ணா இப்போ நீங்கள் சொல்வது நடக்க மறுக்கிறது,
பார்த்து பார்த்து
//சங்ககாரவின் ஆக்ரோஷமான களத்தடுப்பு ஏற்பாடுகளும், பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாண்டதும் குறிப்பிட்டே ஆகவேண்டிய விடயங்கள்.//
I'm not really agreeing with the first one. Sangakkara kept a defensive field even to tail-enders. But it is understandable, because the task for Pakistan was only 168.
But I'm totally accept the second one. It was a brave move to use Rangana Herath before mystery (?) Mendis. Also Thusara bowled really well. I don't think Vaas will enter Sri Lankan team anymore.
Anna roba freeja erukkeringa endu therithu.congrats S.L team.I feel Snga lucky captin.Annaevalvu speeda pathivu podurenga.varamddinga.vathal kalakkal than.
முரளி அளவுக்கு அஜந்த மெண்டிஸால் டெஸ்ட் கிரிக்கட்டில் சோபிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. காரணம் அஜந்தவின் பந்து வீச்சு இலகுவில் பிடிபடக்கூடியது ஆக ஆற அமர நின்று ஆடும் வீரர்களுக்கு அது சவாலே இல்லை.
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இது இரண்டாவது தரம் உங்கள் ஊகம் பிழைத்தது.
சிறி லங்கா சிங்கங்கள் இந்தியா போல் வருண பகவான் கடாட்சத்துக்காக ஏங்குபவர்கள் இல்லை. :D
நீங்கள் சொன்னது பிழைத்ததில் எனக்கு சந்தோசம்
நம்ப முடியவில்லை,இதான் கிரிக்கெட்டோ?
அன்புடன் லோகநாதன்
dear anonymous,
/////இங்கே நான்காம் இன்னிங்க்சில் ஒரு அணி வெற்றி ஈட்டிய மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெறும் ஆறு ஓட்டங்கள்.
பாகிஸ்தான் இன்று தமக்கு வழங்கப்பட்ட வெற்றி இலக்கான 168ஐ பெற்றிருந்தால் இந்த மைதானத்தில் இறுதி இன்னிங்க்சில் பெறப்பட்ட மூன்றாவது பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அது அமைந்திருக்கும்.
intha 2 statemets um idikkuthe/////
கொஞ்சம் தெளிவா தான் குழப்பிட்டாங்க விளக்கி சொல்லுறன். நான்காவது இன்னிங்க்ஸ்ல வெற்றி பெற்ற அணி துரத்திய அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை ஆறு மட்டும் தான். ஆனால் நான்காவது இன்னிங்க்ஸ்ல வெற்றி பெறாமல் துடுப்பெடுத்தாடிய அணிகளில் இங்கிலாந்து 2003 இல் 210 ஓட்டங்களை பெற்றுள்ளது. மேலும் தென்னாபிரிக்கா 2004 இல் 203 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் ( 168 ஓட்டங்கள் ) நான்காவது இன்னிங்க்ஸ் இல் பெறும் மூன்றாவது அதி கூடிய ஓட்ட எண்ணிகையாகவும், நான்கவது இன்னிங்க்ஸ் இல் வெற்றி பெறும் அணி பெறும் மிகப்பெரிய ஓட்ட என்னிகையாகவும் இருந்திருக்கும். இது அனைத்தும் காலி மைதானத்தின் statistics. இப்ப புரிஞ்சுதா? என லோஷன் மாஸ்டர் கரெக்ட் ஆ?
I hate lankan team more than pakistan.My heart tells its a cricket.My feeling tells they are racist.Sorry losh..i am sad about pakistan loss.Though I am a Indian i am a tamilan.I am not happy with your article.
dear anonymous 2,
yes lot of ppl r cricticising abt cricket and politics. y ppl r supporting sl team while they do not support the political views of the country? well, thts a kind of a twist. we hav to get the best of it. sl team was in shatters a little time bak but they r rebouncing likwise tamils wil also rise.. yes from the ashes they wil rise. i m happy that u say that u r a tamilan although an indian. but a harsh truth is lot of tamilans from india think they r INDIANS before tamilans wen they voted in the elections.isnt it? sry loshan bro for answering on behalf of u.
ஸ்ரீலங்கா அணியின் ஏமாற்றுத்தனம் அவர்களுக்கு வெற்றி தந்துள்ளது என்பது தான் உண்மை. நான்காம் நாள் ஆட்டத்திற்கு அவர்கள் ஆடுகளத்தில் செய்த மாற்றமே அவர்களுக்கு அந்த வெற்றியை தந்தது. இல்லாவிட்டால் சங்ககரா தைரியமாக இப்படி ஒரு பேட்டியை தந்திருக்கமாட்டான்.
"முதல் ஆறு ஓவர்களுக்கு மூன்று விக்கட்டுகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம், ஆனால் எங்கள் வீரர்கள் அதற்கு அதிகமாகவே சாதித்துவிட்டார்கள்"
இதெல்லாம் ஒரு பிழைப்பா?
சந்ரு said...
என்ன அண்ணா இவ்வளவு வேகமா இருக்கிங்க. உங்க வேலைப்பளு தெரியும் அப்படி இருந்தும் எப்படி இப்படி உங்களால முடியிது//
இதுல முந்தாவிட்டால் (freeயா இருக்கிறநேரம்) வேலையில்லையே தம்பி.
//உங்களுக்கும் (வெற்றிதானே) அண்ணா முந்திக்கொண்டு பதிவிட்டதுல...
அப்படியே தொடருங்க அண்ணா வாழ்த்துக்கள்...//
நன்றி
===============================
கதியால் said...
பாகிஸ்தான்...ஐயோ என்றுதான் கத்த வேண்டும். கடவுள் கூட நினைத்திருக்க மாட்டார் இன்று பாகிஸ்தான் தோற்கடிக்கப்படும் என்று. "கிரிக்கட்" கடைசிப்பந்து வரை எதுவும் சொல்ல முடியாது என்பதற்கு இதுவும் உதாரணமாக அமைந்த போட்டி.//
உண்மை தான் நண்பரே!
இது போன்ற போட்டிகள் டெஸ்ட் போட்டிகளின் இருப்புக்கும், வளாச்சிக்கும் அவசியம்.
வந்தியத்தேவன் said...
//அதுவும் இந்த வெற்றி தந்துள்ள அசாத்திய மனத் துணிச்சலோடு முரளிதரனும், பிரசன்ன ஜயவர்தனவும் அணிக்குள் மீண்டும் வரும்போது இலங்கை அணி அசுரபலத்தோடு வரும் என்பது உறுதி. (துடுப்பாட்டம் கொஞ்சம் தடுமாறுகிறது.. கொஞ்சம் டிங்கரிங் செய்ய வேண்டும்)//
கொழும்பு பிட்சுகள் துடுப்பாட்டத்திற்க்கு ஏற்றவை ஆகவே துடுப்பாட்டத்தை கொஞ்சம் நிதானமாக ஆடினால் தொடரை வெல்லமுடியும். முரளியும் பிரசன்ன ஜயவர்த்தனாவும் உள்ளே வந்தால் யாரின் இடம் போகப்போகின்றதோ? முரளிக்காகத் தான் ரங்கன ஹேரத் ஆடினவர். ஆனால் இந்த மேட்சில் தன் திறமையைக் காட்டி இடத்தைப்பிடித்துவிட்டார். சிலவேளைகளில் மெண்டிஸ் அல்லது மத்தியூ நிறுத்தப்படலாம்.//
அப்படி சொல்ல முடியாது. இப்போது போட்டி விளையாடப்படும் P.சரவணமுத்து அரங்கு அனைத்து அம்சங்களும் இணைந்த ஒரு சகலதுறை மைதானம். மித வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சுழல்பந்து வீச்சாளர்களுக்கும் கூட ஏற்றது.
கடந்த காலத் தரவுகளும், பாகிஸ்தானின் முதல் இனிங்சுமே கூட சான்று. பிரசன்ன ரணதுங்க உடல்ரீதியாகத் தயாராக இருந்தும் அணியின் சமச்சீர்த் தன்மையைப் பேணுவதற்காக தொடர்ந்தும் மத்தியூசை விளையாட விட்டுள்ளார்கள்.
Anonymous said...
இங்கே நான்காம் இன்னிங்க்சில் ஒரு அணி வெற்றி ஈட்டிய மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெறும் ஆறு ஓட்டங்கள்.
பாகிஸ்தான் இன்று தமக்கு வழங்கப்பட்ட வெற்றி இலக்கான 168ஐ பெற்றிருந்தால் இந்த மைதானத்தில் இறுதி இன்னிங்க்சில் பெறப்பட்ட மூன்றாவது பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அது அமைந்திருக்கும்.
intha 2 statemets um idikkuthe//
நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
The highest score to win in the 4th innings. 3rd highest total in the 4th innings.
அனானி தெளிவாக விளக்கியுள்ளார்
பிரபா said...
சொன்னமில்ல பாத்தீங்களா?........ தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்.//
ஆமாமா... முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
====================
Anonymous said...
எனக்கு என்ன சந்தோசம் என்றால், லோசன் அண்ணா , அதிகாலை வெற்றியில் சொன்னது பிழைத்துவிட்டது,,,,
லோசன் அண்ணா இப்போ நீங்கள் சொல்வது நடக்க மறுக்கிறது,
பார்த்து பார்த்து//
அதுசரிதான்... ஆனால் எனக்கு சந்தோஷமே!
பார்க்கலாம்... பார்க்கலாம்...
கனககோபி said...
//சங்ககாரவின் ஆக்ரோஷமான களத்தடுப்பு ஏற்பாடுகளும், பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாண்டதும் குறிப்பிட்டே ஆகவேண்டிய விடயங்கள்.//
I'm not really agreeing with the first one. Sangakkara kept a defensive field even to tail-enders. But it is understandable, because the task for Pakistan was only 168.
But I'm totally accept the second one. It was a brave move to use Rangana Herath before mystery (?) Mendis. Also Thusara bowled really well. I don't think Vaas will enter Sri Lankan team anymore.
You have given reply to your disagreement. That’s where Sanga stands as a branny skipper. Totally agreed. He was a clean performer but his time is over.
=====================
Hamshi said...
Anna roba freeja erukkeringa endu therithu.congrats S.L team.I feel Snga lucky captin.Annaevalvu speeda pathivu podurenga.varamddinga.vathal kalakkal than.//
நன்றி ஹம்சி.
என்.கே.அஷோக்பரன் said...
முரளி அளவுக்கு அஜந்த மெண்டிஸால் டெஸ்ட் கிரிக்கட்டில் சோபிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. காரணம் அஜந்தவின் பந்து வீச்சு இலகுவில் பிடிபடக்கூடியது ஆக ஆற அமர நின்று ஆடும் வீரர்களுக்கு அது சவாலே இல்லை.//
இப்போது தானே ஒரு வருடம் ஆகிறது. இன்னும் அனுபவம் வரவர புதிய வகையறாக்கள் (variations) வரும். சுழல்பந்து வீச்சாளார்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் சிகரம் தொடுவது 30வயதுக்குப் பின்னர் தான்.
என்ன கொடும சார் said...
டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இது இரண்டாவது தரம் உங்கள் ஊகம் பிழைத்தது. //
இதெல்லாம் சகஜமப்பா! எத்தனை விஷயங்களில் ஊகங்கள் பிழைத்துவிட்டன!
சிறி லங்கா சிங்கங்கள் இந்தியா போல் வருண பகவான் கடாட்சத்துக்காக ஏங்குபவர்கள் இல்லை. :D//
ஆமாமா...தோத்திருந்தா பிளேட்டை மாத்தியிருப்பீங்க இல்ல?
==========================
நந்தரூபன் said...
நீங்கள் சொன்னது பிழைத்ததில் எனக்கு சந்தோசம்//
எனக்கும் தான்! ஹீஹீஹீ
K.Loganathan said...
நம்ப முடியவில்லை,இதான் கிரிக்கெட்டோ?
அன்புடன் லோகநாதன்//
இதேதான் - இதுவும்தான்!
========================
அனானி said...
dear anonymous,
/////இங்கே நான்காம் இன்னிங்க்சில் ஒரு அணி வெற்றி ஈட்டிய மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை வெறும் ஆறு ஓட்டங்கள்.
பாகிஸ்தான் இன்று தமக்கு வழங்கப்பட்ட வெற்றி இலக்கான 168ஐ பெற்றிருந்தால் இந்த மைதானத்தில் இறுதி இன்னிங்க்சில் பெறப்பட்ட மூன்றாவது பெரிய ஓட்ட எண்ணிக்கையாக அது அமைந்திருக்கும்.
intha 2 statemets um idikkuthe/////
கொஞ்சம் தெளிவா தான் குழப்பிட்டாங்க விளக்கி சொல்லுறன். நான்காவது இன்னிங்க்ஸ்ல வெற்றி பெற்ற அணி துரத்திய அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை ஆறு மட்டும் தான். ஆனால் நான்காவது இன்னிங்க்ஸ்ல வெற்றி பெறாமல் துடுப்பெடுத்தாடிய அணிகளில் இங்கிலாந்து 2003 இல் 210 ஓட்டங்களை பெற்றுள்ளது. மேலும் தென்னாபிரிக்கா 2004 இல் 203 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் ( 168 ஓட்டங்கள் ) நான்காவது இன்னிங்க்ஸ் இல் பெறும் மூன்றாவது அதி கூடிய ஓட்ட எண்ணிகையாகவும், நான்கவது இன்னிங்க்ஸ் இல் வெற்றி பெறும் அணி பெறும் மிகப்பெரிய ஓட்ட என்னிகையாகவும் இருந்திருக்கும். இது அனைத்தும் காலி மைதானத்தின் statistics. இப்ப புரிஞ்சுதா? என லோஷன் மாஸ்டர் கரெக்ட் ஆ?//
super !!!! மிக அருமையான விளக்கம்!
இதுதான் விளக்கமோ விளக்கம்!
இதுக்கும் விளங்காவிட்டால் விளங்கின மாதிரிதான்!
Anonymous said...
I hate lankan team more than pakistan.My heart tells its a cricket.My feeling tells they are racist.Sorry losh..i am sad about pakistan loss.Though I am a Indian i am a tamilan.I am not happy with your article.//
That is your personal opinion. Opinion differs.
===================
அனானி said...
dear anonymous 2,
yes lot of ppl r cricticising abt cricket and politics. y ppl r supporting sl team while they do not support the political views of the country? well, thts a kind of a twist. we hav to get the best of it. sl team was in shatters a little time bak but they r rebouncing likwise tamils wil also rise.. yes from the ashes they wil rise. i m happy that u say that u r a tamilan although an indian. but a harsh truth is lot of tamilans from india think they r INDIANS before tamilans wen they voted in the elections.isnt it? sry loshan bro for answering on behalf of u.//
I’d given the same reply. Tx அனானி
Anonymous said...
ஸ்ரீலங்கா அணியின் ஏமாற்றுத்தனம் அவர்களுக்கு வெற்றி தந்துள்ளது என்பது தான் உண்மை. நான்காம் நாள் ஆட்டத்திற்கு அவர்கள் ஆடுகளத்தில் செய்த மாற்றமே அவர்களுக்கு அந்த வெற்றியை தந்தது. இல்லாவிட்டால் சங்ககரா தைரியமாக இப்படி ஒரு பேட்டியை தந்திருக்கமாட்டான்.
"முதல் ஆறு ஓவர்களுக்கு மூன்று விக்கட்டுகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம், ஆனால் எங்கள் வீரர்கள் அதற்கு அதிகமாகவே சாதித்துவிட்டார்கள்"
இதெல்லாம் ஒரு பிழைப்பா?//
உங்களை நினைத்து எங்கே போய்த் தலையை மோதுவது என்று புரியவில்லை. சுத்த கோமாளித்தனமாயிருக்கிறது எங்கள் கருத்து. இலங்கை இத்தனை வேலைகளைக் கள்ளத்தனமாக செய்யும் வரை ஐஊஊயின் போட்டி மத்தியஸ்தரும் நடுவர்களும், மத்தியஸ்தரும் என்ன செய்துகொண்டிருந்தார்களாம்.
இலங்கை அணியையும், இலங்கை வெற்றிபெறுவதையும் பிடிக்காவிட்டால் சும்மா இருங்கள். வயிறெரியாதீர்கள்.
பெயரில்லாமல் வந்து பிதற்றும் உங்களிடம் அதே கேள்வி... அதெல்லாம் ஒரு பிழைப்பா?
Post a Comment