
நாளை காலி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முரளிதரன் விளையாடமாட்டார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக அவரை விளையாடாமல் ஓய்வெடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வெளியிட்டுள்ளது.
முரளி - மென்டிஸ் இணை அசத்தலில் பாகிஸ்தானை பயமுறுத்தலாம் என்று எண்ணி இருந்த இலங்கை அணியின் கணக்குகள் இப்போது குழம்பி இருக்கின்றன.
முரளிக்கு பதிலாக அவசர அவசரமாக இன்னொரு சுழல் பந்துவீச்சாளரை இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டியுள்ளது.
ரங்கன ஹேரத் அல்லது சுராஜ் மொகமடுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியின் முதல் பந்து வீசப்படு முன்னரே வெற்றிக்கான வழியொன்று கிடைத்திருக்கிறது.
ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்தவர் என்ற காரணத்தால் புதுமுகமான சுராஜை முந்திக் கொள்வார் என்று கருதலாம்...

ரங்கன ஹேரத்
இலங்கை அணிக்கு துரதிர்ஷ்டம் வீரர்களுக்கு காயம் வடிவத்தில் துரத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முதலில் விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்த்தன.. இப்போது முரளி...
அணித்தேர்வில் புதுமுக விக்கெட் காப்பாளர் கௌஷால் சில்வாவுக்கு வாய்ப்பளிப்பதா இல்லை சங்ககார தானே விக்கெட் தரப்பில் ஈடுபடுவதா (டில்ஷானும் விக்கெட் காப்பு செய்யக் கூடியவர்) என்ற குழப்பத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு தலையிடி..
அதுவும் இப்போது இலங்கை அணியின் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் முக்கியமான துரும்புச் சீட்டை (Greatest match winner)இழந்துவிட்டு நிற்கிறது.
மென்டிஸ் தான் நாளை அத்தனை பெரும் பொறுப்பையும் தாங்க வேண்டியுள்ளது.
இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால்கள்...
சங்ககார தலைமையில் முதலாவது டெஸ்ட்..ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி அனுபவம் குறைவு..ஆரம்ப வேகப் பந்து வீச்சு ஜோடியின் அனுபவமும் போதாது..நிரந்தர விக்கெட் காப்பாளர் இல்லை..
இப்போது முரளி, வாஸ் என்ற இரண்டு அனுபவம் பெற்ற பந்து வீச்சாளர்களுமே இல்லை..
உலகக் கிண்ணத் தோல்விக்கு பதிலடி கொடுப்பாங்கன்னு பார்த்தா இப்படி பல்லு போய் நிக்கிறாங்களே..
இன்றாவது கிரிக்கெட் பதிவொன்னு போடாம இருக்கலாம்னு பார்த்த முரளி விட்டாரா.. ;)
6 comments:
##இன்றாவது கிரிக்கெட் பதிவொன்னு போடாம இருக்கலாம்னு பார்த்த முரளி விட்டாரா##
ம்ம்! ம்ம்! உண்மைதாங்க நீங்க விட்டாலும் கிரிக்கெட் விடாது
சூப்பர் சூப்பர் ...
சமிந்த வாஸுக்கு ஏன் இன்னும் பறக்கணிப்பு??????
//இன்றாவது கிரிக்கெட் பதிவொன்னு போடாம இருக்கலாம்னு பார்த்த முரளி விட்டாரா.. ;) //
எல்லோருக்கும் தெரியும்தானே நீங்க கிரிக்கெட் பதிவு போடுறதில...... எப்படி என்று........
அப்படியே தொடருங்க அண்ணா...
//கார்த்தி said :
சமிந்த வாஸுக்கு ஏன் இன்னும் பறக்கணிப்பு??//
வாஸ் சிங்கள கத்தோலிக்கர். நீண்டகாலமாக விளையாடுகிறவர் அப்படிப்பட்டவருக்கு ஏதாவது பதவிகொடுக்கவேண்டுமே அதனால் தான் புறக்கணிக்கிறார்கள். ஒரு முறை உபதலைவர் பதவிகொடுத்துவிட்டு இரண்டு நாட்களில் பறித்துவிட்டார்கள். முரளிக்கு இதுவரை உப உப உப தலைவர் பதவிகூட இல்லை. அஜந்தா மெண்டிசுக்கும் இந்த நிலைமை ஏற்படும் காரணம் அவரும் சிங்கள கத்தோலிக்கர்
இல்லை வந்தி..
நீங்கள் சொன்ன காரணங்கள் தவறென நினைக்கிறேன்..
வாசின் உப தலைமை பறிக்கப்பட்ட காரணம் அவருக்கு அணிக்குள் ஆதரவின்மையே..
காரணம் இலங்கையின் முன்னாள் தலைவராக நீண்ட காலம் இருந்த துலிப் மென்டிஸ், பின்னர் இருந்த ரோய் டயஸ் ஆகியோரும் சிங்கள கத்தோலிக்கரே..
முரளிதரன் தான் தற்போதும் உப தலைவர் என்பதை நினைவில் கொள்க..
T 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் முன்னதாக இந்த நியமனம் வழங்கப்பட்டது.
தலைமைப் பதவிக்கு தான் பொருத்தமானவன் அல்ல என்று முரளியே தன வாயால் கெடுத்துக் கொண்டதால் தான் அவருக்கு இதுவரை தலைமைப் பதவி வழங்கப்படவில்லை என்பது இலங்கை கிரிக்கெட்டை தொடர்ந்து நோக்கி வந்த அனைவருக்குமே தெரியும்.
லோஷன் பதில் எழுதும்போது ரோய் டயசும் துலிப் மெண்டிசும் மனசிற்க்குள் வந்தார்கள் ஆனால் அவர்கள் அந்தக்கால ஆட்கள் என்றபடியால் விட்டுவிட்டேன் ஆனாலும் இப்போதைய நிலையில் பெரும்பாலும் இவர்கள் எஸ் எஸ் சியில் விளையாடும் வீரர்களுக்கே தலைமைப்பதவி கொடுக்கிறார்கள். கவனிக்க பெரும்பாலும் என்ற வார்த்தை சேர்த்திருக்கின்றேன் சங்கா, சனத், டில்ஷான் போன்ற சில விதிவிலக்குகள் இருக்கின்றன.
முரளி உப தலைவரா? எந்த பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வரவேயில்லை.
முரளி தலைமைப்பதவியை வேண்டாம் என்றதற்கு சில அரசியல்காரணங்களும் உண்டென நினைக்கிறேன்.
Post a Comment