.jpg)
எக்ஸ்போ என்ற சிங்கப்பூரின் கண்காட்சி நிலையத்தில் தான் ஆசியாவின் மிகப்பெரிய தொழிநுட்ப, ஊடக நுட்ப கண்காட்சி நடைபெற்று வந்தது. Communic Asia 2009/ Broadcast Asia 2009
இங்கே விசாரித்துப் பார்த்த போது நம்ம நாடு போல இல்லாமல் வருடத்தின் நாட்களுமே ஏதாவது கண்காட்சி, நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்குமாம்.. மிகப் பிரம்மாண்டமான ஒரு இடத்திலே மூன்று கட்டடத் தொகுதிகளாக அமைந்திருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகின் மிகப்பெரும் தொழிநுட்ப உற்பத்தி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, ஊடகங்கள் சம்பந்தமான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை மிகப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி விளம்பரம் செய்வார்கள்.
எங்கள் நிறுவனத்தாரும் வருடாந்தம் ஒலிபரப்புக்குத் தேவையான கருவிகள் பலவும் இங்கே தான் வந்து வாங்குவது வழக்கம். இப்போது சியத எனும் பெயரில் தொலைக்காட்சியும் பரீட்சார்த்தமாக இயங்குவதால் அதற்கான ஒளிபரப்பு சாதனங்களும் வாங்குவதாக இம்முறை திட்டமிருந்தது. (வெகு விரைவில் வெற்றியின் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கும் என்பது பலரும் ஊகிக்கக்கூடிய விஷயமே)
கண்காட்சி நடக்கும் இடத்துக்கு நாம் சென்றது தொடரூந்தில். MRT என்று அழைக்கப்படும் இந்த தொடரூந்து சேவை சிங்கையில் என்னைக் கவர்ந்த இன்ன்னொரு அம்சம்.
விரைவு, நேரம் தவறாமை, இலகுவானது என்பவற்றால் பலரையும் ஈர்த்துள்ள விஷயம் இது.
ஏற்கெனவே 2002இல் நான் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு சென்றிருந்ததனால், இது போன்ற மெட்ரோ ரெயில்களில் நான் பயணித்திருந்தாலும் சிங்கை போன்ற ஆசிய நாடொன்றில் கண்டது மகிழ்ச்சியே.
இலகுவாகப் பிரவேசச் சீட்டு எடுக்க முடிவது, செல்லும் இடம், தொடரூந்து வரும் நேரம், இறங்கும் இடங்களை இலகுவாக அறிதல் போன்ற விஷயங்கள் இலகுவாக இருந்ததனால் ஏற்கெனவே சிங்கப்பூர் அனுபவம் பெற்றிருந்த டினால்,நிஷாந்த போனோர் எமக்கு முன்னரே இலங்கை திரும்பிய பின்னரும், கடைசி இரு நாட்கள் நானும், குருவிட்டவும் பல இடங்கள் சுற்றித் திரிய இலகுவாக இருந்தது.

கண்காட்சி நிலையத்தில் வழமையான பதிவு சடங்குகள் முடித்து அத்தை உறுதிப்படுத்தி அவர்கள் வழங்கிய அட்டைப் பட்டியைக் கழுத்தில் தொங்கவிட்டபடி கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட ஆரம்பித்தோம்.
ஒன்றா இரண்டா? சிலவற்றை நான் மேம்போக்காகப் பார்த்து தவிர்த்து விட்டேன்.. என் அறிவுக்கு எட்டாத நுணுக்கமான பெரிய விஷயங்களை எல்லாம் மூளைக்குள் போட்டுக் குழப்பிக் கொள்ள விரும்பாமல், நமக்குத் தெரிந்த நம் துறையோடு சம்பந்தப் பட்ட விஷயங்களாகத் தேடி பார்த்து புது விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தேன்.
ஒவ்வொரு காட்சி சாலைகளுக்கும் செல்லும் முன் அங்கே இங்கே திரிந்து கொண்டிருந்த உதவியாளர்களான பெண்கள்(பல பேரும் மொடல்கள் மற்றும் மாணவிகள்) எங்கள் கைகளில் பெரிய வண்ண வண்ண பைகளை கொடுத்தார்கள்..
விளம்பர் யுக்தி என்று யோசித்தேன்.. அதிலே இன்னொரு விஷயமும் அடங்கியிருந்தது..
ஒவ்வொரு காட்சி சாலைகளிலும் கொடுக்கப்பட்ட ஏராளமான நினைவுச் சின்னங்கள், பரிசுப் பொருட்களை போடுவதற்காகவே இதை முன்கூட்டியே கொடுத்திருந்தார்கள் எனப் பிறகு புரிந்தது.
ஏற்கெனவே இந்தக் கண்காட்சிகளுக்குப் பலமுறை விஜயம் செய்திருந்த டினால்,நிஷாந்த மற்றும் எங்கள் நிறுவனத் தலைவர் ஆகியோர் சொன்னார்கள் , ஒவ்வொரு நிறுவனமும் தருகிற பொருட்களை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள்.. அவை பிரயோச்னப்ப்படுமாக இருந்தால்..
நாங்கல்லாம் ஓசியில கொடுத்தால் ஓயிலையே குடிப்பவர்கள்.. சும்மா தந்தால் சுண்ணாம்பே சாப்பிடுபவர்கள்.. இதையெல்லாம் விடுவோமா?
பேனாக்கள், பாக்கெட் calculatorகள், digital diaries, momentos, pen drives, சின்ன சின்ன சுவாரசயமான பொருட்கள், bags என்று ஏராளம் ஏராளம்..
குருவிட்ட சிரித்துக் கொண்டே சொன்னார்.. " பெரிதா இங்கே ஷொப்பிங் செய்யத் தேவையில்லை.. bags எல்லாம் நிரப்பிட்டாங்க"
நாகரிகப்படி எங்கள் visiting cardகளையும் பரிமாறிக் கொண்டோம்.. பல முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்த இது நல்ல வழி.
பார்த்தவரை ஒன்றிரண்டு இந்திய நிறுவனங்களும், ஒரே ஒரு இலங்கை நிறுவனமும் மாத்திரமே கடை விரித்திருந்தன.
காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய நுட்பங்கள், கருவிகளைப் பார்த்த போது தான் எங்கள் நாட்டில் நாம் பயன்படுத்தும் சில உபகரணங்கள் இன்னும் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன எனப் புரிந்தது.
எனினும் இலங்கையில் இறுதியாக ஆரம்பித்த வானொலி என்பதால் எங்கள் வானொலியில் நாம் பயன்படுத்துகின்ற இயக்குவிசைப்பலகை( Console board), ஒலிவாங்கிகள், ஒலிபரப்பு மென்பொருள் போன்ற பல விஷயங்கள் ஒப்பீட்டளவில் புதியனவாகவும், கண்காட்சி சாலைகளில் கேள்வி (Demand) உள்ளனவாகவும் இருந்ததைக் கண்டு பெருமையாகவும் இருந்தது.
விலைகளை விசாரித்த போது தலைசுற்றியது.
ஒரு வானொலி நிலையத்தை முதலிட்டு ஆரம்பிப்பதென்பது எவ்வளவு செலவான, ரிஸ்க்கான விஷயமென்று புரிந்தது.
இந்த வேளையில் எனது தனிப்பட்ட துறைசார் வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த சூரியன்FM வானொலியின் 11வது பிறந்ததினம் இன்று.6 வருடங்கள் எனது வாழ்வின் அங்கமாக விளங்கிய சூரியனுக்கு மனமார வாழ்த்துகிறேன்!
சிங்கப்பூர் கண்காட்சிகளின் போதுதான் எனக்கு இலங்கையின் வானொலி, தொலைக்காட்சிகளைப் பற்றிய இன்னுமொரு விஷயமும் புரிந்தது.
அது என்ன?
அது அடுத்த அங்கத்தில்.....
(நேரம் கிடைக்கும் போது பகுதி 7 தொடரும்...)
பி.கு - தலைப்பைக் கொஞ்சம் மாத்திப் போட்டேன்.. கொஞ்சம் கிக்காய் இருக்கட்டுமே என்று.. ;) நண்பர்கள் கேட்டபடியால் மறுபடி சஸ்பென்சில் விட்டுப் போறேன்.. எதிர்பார்ப்பு இருக்கட்டுமே..
16 comments:
//(வெகு விரைவில் வெற்றியின் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கும் என்பது பலரும் ஊகிக்கக்கூடிய விஷயமே)//
ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா.... விரைவில் வரட்டும்...
//நாங்கல்லாம் ஓசியில கொடுத்தால் ஓயிலையே குடிப்பவர்கள்.. சும்மா தந்தால் சுண்ணாம்பே சாப்பிடுபவர்கள்//
நல்லதொரு புது மொழி அண்ணா....
//பேனாக்கள், பாக்கெட் calculatorகள், digital diaries, momentos, pen drives, சின்ன சின்ன சுவாரசயமான பொருட்கள், bags என்று ஏராளம் ஏராளம்..//
ஆஹா... எங்களுக்கு இப்படி எல்லாம் கிடைக்குதில்லையே கொடுத்து வைத்தவர் நீங்கள்...
//இந்த வேளையில் எனது தனிப்பட்ட துறைசார் வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த சூரியன்FM வானொலியின் 11வது பிறந்ததினம் இன்று.
6 வருடங்கள் எனது வாழ்வின் அங்கமாக விளங்கிய சூரியனுக்கு மனமார வாழ்த்துகிறேன்!//
உங்களை பாராட்டாமல் விட முடியாது... நீங்கள் வளர்த்து விட்டவர்களே இன்று.....
கடந்து வந்த பாதையை மறக்காததுவே இன்று உங்கள் உயர்வுக்கு முக்கிய காரணம். வாழ்த்துக்கள் அண்ணா...
//வெகு விரைவில் வெற்றியின் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கும் என்பது பலரும் ஊகிக்கக்கூடிய விஷயமே//
ரொம்ப சந்தோசம். ஆரம்பிச்சா "கோடான கோடி " பாட்டு கட்டாயம் போடுங்க
//உதவியாளர்களான பெண்கள்//
என்னாச்சு? இளம் missing? திருந்திட்டீங்களா? இல்ல அண்ணிகிட்ட வாங்கி கட்டிகிட்டீங்களா?
//(வெகு விரைவில் வெற்றியின் தொலைக்காட்சியும் ஆரம்பிக்கும் என்பது பலரும் ஊகிக்கக்கூடிய விஷயமே)//
”வெற்றியின் தொலைக்காட்சி” அப்ப விரைவில் லோஷன் அண்ணா தொலைக்காட்சியிலும் கலக்கப்போறிங்கள்....
உங்களுக்கு சொல்லியா தரணும்....
சக்தி தொலைக்காட்சியில அஞ்சணன் அண்ணாவோட ஒருகாலத்தில சும்மா கலக்கினனீங்கள் தானே...
வாழ்த்துக்கள்....
//இந்த வேளையில் எனது தனிப்பட்ட துறைசார் வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த சூரியன்FM வானொலியின் 11வது பிறந்ததினம் இன்று.
6 வருடங்கள் எனது வாழ்வின் அங்கமாக விளங்கிய சூரியனுக்கு மனமார வாழ்த்துகிறேன்!//
இதுக்காகவா இண்டைக்கு “அவதாரதில” அந்த ”அரவிந்தன்” பட பாடல் போட்டனீங்கள்????
சந்ரு said...
உங்களை பாராட்டாமல் விட முடியாது... நீங்கள் வளர்த்து விட்டவர்களே இன்று.....
கடந்து வந்த பாதையை மறக்காததுவே இன்று உங்கள் உயர்வுக்கு முக்கிய காரணம். வாழ்த்துக்கள் அண்ணா..//
நிச்சயம் 100% உண்மை
வெற்றிTV க்கு வாழ்துக்கள். அண்ணா எப்ப ஆரம்பிக்கப்போகுது.....
LOL at the title. Hehehe :))) ROTFL.
Best wishes for Vetri television. It sounds like the trip turned out to be not only full of fun but also very useful to you :)
Aduththa pakuthiku wait panrom.
Sooriyanuku vazhthukkal :)
//நாங்கல்லாம் ஓசியில கொடுத்தால் ஓயிலையே குடிப்பவர்கள்.. சும்மா தந்தால் சுண்ணாம்பே சாப்பிடுபவர்கள்.. இதையெல்லாம் விடுவோமா?///
அப்படி போடுங்கோ!
எப்படி இதெல்லாம் நண்பரே
//இந்த வேளையில் எனது தனிப்பட்ட துறைசார் வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த சூரியன்FM வானொலியின் 11வது பிறந்ததினம் இன்று.
6 வருடங்கள் எனது வாழ்வின் அங்கமாக விளங்கிய சூரியனுக்கு மனமார வாழ்த்துகிறேன்!//
வாழ்த்துகள்
மிகப்பிரபலமான வலைத்தளத்திற்கான (2009 ஆகஸ்ட்) தாமரை விருதுகள் வாக்குப்பதிவில் இன்று வரை தாங்கள் முன்னணியில் இருக்கின்றீர்கள். வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி வரை நடாத்தப்படும். மேலதிக விவரங்களுக்கு www.tamilblogawardsinternational.blogspot.com என்ற இணைய முகவரியை நாடுங்கள்.
- தொடர்பாடல் பிரிவு
சர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்.
ஆஹா... அண்ணா ரொம்ப அழகாய் இருக்கிறீங்க.. பொறாமையாய் இருக்கு...
சியத தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்...
வெற்றி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கின்றீர்கள்...
ஊடகத்துறையில் மிக விரைவில் என்று சொன்னாலும் அது சில சந்தர்ப்பங்களில் தாமதமாகிவிடுவதுண்டு...(நமது சொந்த அனுபவங்களும் கூட...)
ஆனாலும் வெற்றித்தொலைக்காட்சி எவ்வளவு விரைவாக ஆரம்பிக்கப்பட முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்... வாழ்த்துக்களும்...
அண்ணா உங்களில் பிடித்த இன்னுமொரு விடயம், ////நன்றி மறவாமை////... கடந்த சூரியனின் பிறந்த நாளிற்கு வெற்றியில் வாழ்த்து சொன்னீர்கள். இம்முறை சனிக்கிழைமை என்பதால் மாலையில் சொன்னீர்களோ தெரியாது... ஆனாலும் இந்தப்பதிவின் இடையே பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கின்றீர்கள்..
/////சிங்கப்பூர் கண்காட்சிகளின் போதுதான் எனக்கு இலங்கையின் வானொலி, தொலைக்காட்சிகளைப் பற்றிய இன்னுமொரு விஷயமும் புரிந்தது.//////
அது என்ன விஷயம் அறிந்துகொள்ள அதீத ஆர்வமாக உள்ளோம்... மேலும் எங்கள் விருப்பப்படி ஒரு எதிர்பார்ப்புடன் இந்தப்பதிவை முடித்துள்ளமைக்கு இதயத்தால் இனிய நன்றிகள்..
அண்ணா உங்கள் வழியில் நானும் ஒரு வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்... இத்துடன் அந்த வலைத்தள முகவரியை தருகிறேன் முடிந்தால் பார்க்கவும்...
www.senthuva.blogspot.com
மேலும் அண்ணா உங்கள் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்... பதிவுகள் மிகுந்த சுவாரசியமாக உள்ளன...
நன்றி.
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன். தாளம் வானொலி.
சிங்கப்பூர் போகும் உறவுகளே ஒரு சிறு கொசுறு தகவல். நீங்கள் சிங்கப்பூர் சுற்றி பார்க்க போவதாக இருந்தால்.. இலங்கையிலேயே மலேசியா தூதரகம் சென்று மலேசியாவுக்கான விசாவினையும் பெற்று செல்லுங்கள்.. எனவே சிங்கபுரிலிருந்தே தரைவழியாக மலேசியாவுக்கு சென்று (மலேசியாவுக்குள் நுழைய பேருந்து கட்டணம் வெறும் S$ 1.70 தான் ) கோலாலம் பூர் சென்று( பேருந்து கட்டணம் வெறும் RM.31.20 தான்) அங்கும் இரு நாட்களை கழித்துவிட்டு வரலாம். ஒரு விமான பயணத்தில் இரு நாடுகளை பார்த்த திருப்தி கிடைக்கும். மலேசியாவில் சிங்கபுரைவிட செலவு ஒருமடங்கு குறைவு.
"சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்".... இப்ப ஏன் "சிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்" மாக மாறி விட்டது, எப்படியோ கதை நன்றாக தான் போகிறது..
சூரியனுக்கு வாழ்த்து சொன்னதுக்கு Hat's off யாருமே செய்ய நெனைக்காத விஷயம், எவ்வளவு தான் வளர்த்து விட்ட இடமாக இருந்தாலும், போட்டி மீடியாவுக்கு வாழ்த்து தெரிவிக்க நினைத்துக்கு ரொம்ப சூப்பர் மேட்டர்
Post a Comment