அழகிய பெண் - என்னை நோக்கி வருவதாக தொடரும் போட்டவுடனேயே... நிறைய எதிர்பார்ப்பு... பல கேள்விகள் பல விதமாக...
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப்பக்கமிருந்தும் சந்தேகப்பார்வை...
வீண்பிரச்சினை வேண்டாமென்று
இதோ பகுதி- 04
நாகரிக உடையணிந்து என்னை நோக்கி நடந்து வந்த அந்தப்பெண் புன்முறுவலோடு " மிஸ்டர் லோஷன்?" என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டார்.
' யெஸ்...' என்று தலையாட்டினேன்.
தான் எனது நீண்டகால வானொலி ரசிகை என்றும், பிரபல IT நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தான் அலுவலக விஷயமாக சிங்கப்பூர் வழியாக மலேசியா செல்வதாகவும், தன்னுடைய சக அலுவலக ஊழியர்கள் மூவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
விமானத்தில் தன்னுடைய இருக்கை இலக்கம் 36 C என்றும் என்னுடைய ஆசன எண் என்னவென்றும் கேட்டார்..
என்ன செய்ய அவருடைய துரதிர்ஷ்டமோ என்னுடையதோ.. எனது எண் 49 J..
"உங்களைப் பல மேடை நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்று தான் இப்படி நேராகப் பேசக் கிடைத்தது ..Nice meeting"என்று குயிலாகக் கூவி, ஒயிலாக விடை பெற்றார் அந்த விமான நிலைய விசிறி.. (பாருங்கடா எப்படி கவிதை நடை வருது)
நிறையப் பேர் நிறைய எதிர்பார்த்து இவ்வளவு தான் கதை என்று போனதுக்கு நான் ஒண்ணுமே செய்ய முடியாது.. காரணம் இந்தத் தொடர் பதிவில் நடந்த எல்லா விஷயங்களையும் அப்படியே எழுதுவதாக உத்தேசம்.. (ஒரு சிலவற்றை சிலரின் நன்மை, அந்தரங்கம் கருதி தவிர்ப்பதை விட)
ஒரு மாதிரியாக விமானம் ஏறும் நேரம் வந்தது..
49 ஆம் இலக்க ஆசனத்தில் எனக்கு அருகில் குருவிட்ட பண்டார.
முன்னால் இருந்த டினாலும், அந்த விசிறியும் (அவர் பெயர் வேண்டாமே) திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்கள்.
இந்த விமானம் சிங்கப்பூரில் நின்று பின் ஹோங் கொங் செல்வதால் விமானம் நிறைந்தே இருந்தது.
எஞ்சின்கள் இயக்கப்பட்டும் விமானம் புறப்படுவதாக இல்லை.. அரை மணி கடந்தும் அவ்வாறே..
அதற்குள் எந்த ஒரு சிக்கலுமில்லாமல் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்ததாக மனைவியின் sms வந்திருந்தது. அடையாள அட்டையைத் தேடுமாறும் விமானம் புறப்படப் போவதாகவும் பதில் அனுப்பி விட்டு எப்போது விமானம் மேலே ஏறும் என்றும் பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தோம்.
மேலும் நேரம் செல்ல விமானத்துக்குள்ளே முணுமுணுப்புக்கள்.. ஒரு சில பதட்டமான குரல்களும் கூட.
இதற்கிடையில் விமானியின் கம்பீரமான குரல் அனைவரையும் அமைதியாக இருக்குமாறும் சிறு தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தாமதம் என்றும் பாதுகாப்பாக அனைவரையும் தான் உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதாகவும் (your destination... அடப் பாவி இப்படியா சொல்றது) உறுதியளித்து பதினைந்து நிமிடங்களில் விமானம் ஊர்ந்து, விரைந்து, கிளம்பியது..
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் தாமதம்.
மேலே கிளம்பிய பிறகு வயிற்றைக் கிள்ளிய பசியோடு பரிமாறும் பெண்கள் (அவ்வளவு அழகிகள் இல்லை நண்பர்களே.. Cathay Pacificவிமான சேவையிடம் முறைப்பாடு செய்யவே வேண்டும்..)
வரும்வரை காத்துக் கொண்டே விமானத்தில் காட்டப்பட்ட படங்களில் (in flight movies)ஒன்றைத் தெரிவு செய்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
சில நல்ல, பார்க்கவேண்டும் என்று நான் திரைப்படங்கள் தெரிவுக்காக இருந்த போது நான் தெரிவு செய்து பார்க்க ஆரம்பித்தது The International.
Clive Owen, Naomi Watts நடித்த ஒரு விறு விறு திரைப்படம். ஐரோப்பிய நாடுகளிடையே நடக்கும் ஆயுத வணிகம், மறைமுகக் கடத்தல்கள் பற்றி ஆராயும் ஒரு படம்.
அங்கு Valkyrie என்ற ஹிட்லர் காலத்தைய நிலையைக் காட்டும் அற்புத படம் இருந்தாலும் (இது பற்றி கட்டாரில் இருக்கும் என் தம்பி அடிக்கடி புகழ்ந்து சொல்லிக் கொண்டே இருப்பான்) எனக்காக அதை தம்பி DVDஇல் கொண்டு வந்திருப்பதனால் அதைப் பிறகு வீட்டிலேயே பார்க்கலாம் என விட்டு விட்டேன்.
வந்த உணவை விழுங்கி விட்டு (பசி அப்படிக் கொடுமைங்கோ) படம் பார்த்துப் பார்த்து இருந்த அசதியில் தூங்கி விட்டேன்.. )
இடை நடுவே டினால் வந்து கொஞ்சம் சம்பாஷித்து விட்டு போனார்.. என்னைத் தெரிந்துகொண்ட இன்னொரு நண்பரும் வந்து வெற்றி வானொலி, கிரிக்கெட், நாட்டு நடப்பு பற்றி ஐந்து நிமிடம் பேசி விட்டுப் போனார்..
மீண்டும் தூங்கி விட்டு, சிங்கப்பூர் வான் எல்லைக்குள் பிரவேசிக்கும் நேரம் மொபைலை இயக்கி அதை காமெராவாகப் பயன் படுத்தி கண்ணாடிக்கு வெளியே தெரிந்த சில அழகான காட்சிகளை கிளிக்கிக் கொண்டேன்.

திரள் திரளாக முகில்கள்..
.jpg)
.jpg)
பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை (சொல்லும்போதே பயங்கரமாக இல்லை?) கண்டறி கருவி(Sensor) தாண்டி (கொஞ்சம் உடல் வெப்பநிலை ஏறி இறங்கினாலும் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் விடுவார்களாம்) வரிசையாக குடிவரவுப் பக்கம் வருகையில் பல இடங்களிலும் தூய, அழகு தமிழில் இருந்த அறிவித்தல் பல கண்டு உண்மையில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
உண்மையில் தெளிவான, அழகான தமிழ்.நம்ம நாட்டிலெல்லாம் சில இடங்களில் தமிழைக் கடித்து துப்பி இருப்பார்கள்.. இல்லை கொடுந்தமிழில் படுத்தி இருப்பார்கள்
எந்தத் தொல்லையும் இன்றி இற்கு வந்து எம் குழுவில் எல்லோரும் வந்திருக்கிறோமா என்ற பார்த்து எந்த ஹோட்டல், எப்படி போகப் போகிறோம், எத்தனை மணிக்கு கண்காட்சி நிலையத்துக்கு போகப் போகிறோம் என்று Chairmanஓடு கலந்துரையாடிக் கொண்டிருந்தோம்.
யாரோ இரண்டு இளம் வாலிபர்கள் தூரத்திலிருந்தே என்னையே உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று விளங்கியது. தமிழர்கள் என்றும் தெரிந்தது.
அப்படியே என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...
(நேரம் கிடைக்கும் போது பகுதி 5 தொடரும்...)
37 comments:
ஆஹா சிங்கப்பூர் சிங்கம் வந்துட்டுது வெயிட் பண்ணுங்கோ வாசித்துட்டு வாறன்..
"நம்ம நாட்டிலெல்லாம் சில இடங்களில் தமிழைக் கடித்து துப்பி இருப்பார்கள்.."
-------------------------------------
தல உங்களின் ரசிகன் என்று சொல்லி விடுவதை விட உங்களின் உடன் பிறவாத சகோதரன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்.
-------------------------------------
உங்கள் பதிவுகள் என்னை அடிமையாக்கி விட்டன.தவறாமல் வாசிக்கிறேன்!
உங்கள் தமிழ் பணி தொட(ரும்.)ர... வாழ்த்துக்கள்.
-----------------------------------
என்தளத்தின் முகவரியை கீழே இணைக்கிறேன்.(முடிந்தால் பாருங்கள்)
-----------------------------------
நன்றி வணக்கம்.
//எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப்பக்கமிருந்தும் சந்தேகப்பார்வை...//
அண்ணா தணிக்கை ஏதும் செய்யல்லையே...
"நம்ம நாட்டிலெல்லாம் சில இடங்களில் தமிழைக் கடித்து துப்பி இருப்பார்கள்.."
இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...
//இந்த விமானம் சிங்கப்பூரில் நின்று பின் ஹோங் கொங் செல்வதால் விமானம் நிறைந்தே இருந்தது.//
இந்த வரியிலிருந்து அறிந்துகொண்டேன் நீங்கள் கதே பசிபிக்கில் தான் பயணிக்கிறீர்கள் என்று பின்னர் அதையும் சொல்லிவிட்டீர்கள். நான் சென்ற நேரம் வயதான அழகிகளே இருந்தார்கள். காரணம் கேட்டால் கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் பலர் லீவென்றார்கள் இன்னும் அவர்கள் திரும்பவில்லை என்று நினைக்கின்றேன். ஒரு முறை நம்ம மல்லையாவின் கிங் பிஸ்சரில் பயணம் செய்யுங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள் ஹிஹிஹி,
அந்தப் பெண் வெற்றி கேட்பதால் நிச்சயம் தமிழ்ப் பெண்ணாகத் தான் இருக்கவேண்டும்.
//என்ன செய்ய அவருடைய துரதிர்ஷ்டமோ என்னுடையதோ.. எனது எண் 49 J..//
யாருடையா துரதிஸ்டமோ...கடவுள் காப்பாத்திட்டாரு... யார எண்டு கேட்காதிங்கோ
//சந்ரு said...
இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...//
சந்ரு சொல்றேன் என்டு கோவிக்கவேண்டாம் வெற்றியிலும் இந்தக் கொலை நடக்கின்றது. யார் யார் செய்கிறார்கள் என்று சொல்லவிரும்பவில்லை.ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கொலை குறைவுதான்.
அண்ணா நீங்க சீரியல் ஒன்றுக்கு கதை எழுதலாம் போல இருக்கு.... நல்ல கட்டத்துல தொடரும் போடுறிங்க....
//வந்தியத்தேவன் said...
//சந்ரு said...
இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...//
சந்ரு சொல்றேன் என்டு கோவிக்கவேண்டாம் வெற்றியிலும் இந்தக் கொலை நடக்கின்றது. யார் யார் செய்கிறார்கள் என்று சொல்லவிரும்பவில்லை.ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கொலை குறைவுதான்.//
தமிழை வளர்க்க வேண்டியவர்கள் தமிழை கொலை செய்கிறார்கள்... நாங்கள் ஒரு நிறுவனத்தை பற்றி எங்கு பேசக்கூடாது.. நான் லோஷன் அண்ணாவை தனிப்பட்ட ரீதியிலேதான் சொன்னேன்... அவரது வானொலியிலே சிலர் இருக்கலாம் அது வேற விடயம் அவர் தமிழை கொலை செய்யவில்லை... என்பது உண்மை...
எங்கே லோஷன் அண்ணாவின் பெரும் தன்மையினை பாராட்டுகிறேன். நீங்கள் வெற்றியிலும் சிலர் இருக்கிறார்கள் இன்று சொன்னதை அவர் கருத்துரையிலே எடுக்காமல் விட்டு இருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேல் நான் வேறு ஒரு ஊடகத்துறையை சேர்ந்தவன் ஆனால் அவரது ரசிகன்...
//சந்ரு said :July 16, 2009 3:44 PM
அண்ணா நீங்க சீரியல் ஒன்றுக்கு கதை எழுதலாம் போல இருக்கு.... நல்ல கட்டத்துல தொடரும் போடுறிங்க...//
அதுமட்டுமா, சிங்கப்பூர் போய் இறங்கறதுக்குள்ள நாலு பார்ட் ஆயிட்டுது.
//////(அவ்வளவு அழகிகள் இல்லை நண்பர்களே.. Cathay Pacificவிமான சேவையிடம் முறைப்பாடு செய்யவே வேண்டும்..)///////
அண்ணனா உங்களில பிடிச்ச விஷயத்தில இதுவுமொன்று.. உண்மையை சொல்லீடுவீங்க..
///////பல இடங்களிலும் தூய, அழகு தமிழில் இருந்த அறிவித்தல் பல கண்டு உண்மையில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.//////
நம்ம நாட்ட தவிர மற்றைய தமிழ்ர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழியின் தரம் உயர்வாக உள்ளதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்...
ஆனாலும் ஒரு விடயம் தமிழை வளர்க்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தேவையான அளவுக்கு நமது முன்னோர்கள் வளர்த்துவிட்டிருக்கிறார்கள். நாம் அதை பாதுகாக்கவேண்டும்.
பயணக்கட்டுரையை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்...
வாழ்த்துக்கள்..
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.
//Subankan said..//
//அதுமட்டுமா, சிங்கப்பூர் போய் இறங்கறதுக்குள்ள நாலு பார்ட் ஆயிட்டுது.//
ஆமாம் சுபாங்கன் சீரியல் என்று இறங்கினால் அண்ணா நிறையவே சம்ப்பாதிக்கலாம் என்று நினைக்கிறேன். சீரியலுக்கு என்றால் அண்ணா இந்த நான்கு தொடரையும் நாற்பது தொடரா மாத்துவீங்க போல இருக்கு...
//குயிலாகக் கூவி, ஒயிலாக விடை பெற்றார் அந்த விமான நிலைய விசிறி.. (பாருங்கடா எப்படி கவிதை நடை வருது)//
முடியல...
Appadiye nadanthu vanthu thaangalum fans enru introduce panninaarkal. Is it? kidding :)
Some nice clicks up there.
Anna is going to interesting and cool.I likeபந்து வடிவ முகில்கள் picture. neegathan eduthingala.oh!nala photographer also?ok anna.enna part5 madum pojidduthu.appo 50um thadumo singapoore trip pathivu.enavo sothappama condu ponga anna
சந்ரு நீங்கள் என்ன சொல்லவாறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் எந்த நிறுவனத்தையும் சொல்லவில்லை, நீங்கள் தான் "இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..." என பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்.
அதற்க்கு நான் வெற்றியிலும் சிலர் இருக்கிறார்கள் என்றேன், நான் லோஷனைச் சொல்லவில்லை. லோஷனை அறிவிப்பாளர் ஆகமுன்னரே எனக்குத் தெரியும். அத்துடன் அவர் இதுவரை இருந்த வானொலிகளில் எல்லாம் தமிழை அழகாகத் தான் பேசினார். இலங்கையிலுள்ள பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் அவை பத்திரிகைகளாக இருந்தாலும் சரி தற்போது ஆங்கிலமோகத்தில் தமிழ்நாடு போல் அகப்பட்டுகொண்டார்கள்.
லோஷன் நண்பர் என்பதால் அவரின் வானொலியிலும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்றேன் விமர்சனம் செய்வது தப்பு என்பதுபோல் உங்கள் கருத்து இருக்கின்றது.
நண்பர் வந்தியத்தேவன் அவர்களே நான் குறிப்பிட்டது என்னவென்றால். நான் லோசன் அண்ணாவை பாராட்டவேண்டும் என்று கூறியபோது நீங்கள் வெற்றியில் கூட தமிழ் கொலை செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று கூறினீர்கள் அதனால்தான் இங்கு நான் லோசன் அண்ணாவை பற்றி மட்டுமே பேசுகிறேன். வேறு ஒரு நிறுவனத்தை பற்றி பேசுவது பொருத்தமற்றது என்று சொல்லவந்தேன்.
லோசன் அண்ணாவின் நிறுவனமாக இருந்தாலும். நாம் அவரைப்பற்றி விவாதிக்கும்போது தனிப்பட்ட நிறுவனத்தை பற்றி விமர்சிப்பது பொருத்தமற்றது என்று நினைத்துத்தான் கூறினேன். வேறு எதுவும் இல்லை.
விமர்சனம் செய்தது தப்பு என்று சொல்லவரவில்லை. தனிப்பட்ட ஒருவரை விமர்சனம் செய்யும்போது அந்த இடத்தில் ஒரு நிறுவனத்தை விமர்சிக்க நான் விரும்பவில்லை. காரணம் நான் வேறொரு ஊடகத்தை சேர்ந்தவன் இன்னொரு ஊடகத்தை விமர்சிப்பது பொருத்தமற்றது என்று நினைக்கிறேன்.
Making of சிங்கப்பூரில் ஒரு பயணப் பதிவு...
http://eksaar.blogspot.com/2009/07/making-of.html
லோஷனின் அனுமதியுடன் (நம்பிக்கையில் ஒரு கருத்து) தமிழ் மொழியின் இன்றைய பெருமைகளை இத்துணை தூரம் அழைத்து சென்று உலகறிய பெருக்கிகொண்டிருப்பதில் ஊடகங்களுக்கும் குறிப்பாக வானொலிகளுக்கும் உள்ள பங்கு மகத்தானது. அதே நேரம் புதிய மாற்றங்களை எம்முள் புகுத்தி அந்த மாற்றங்களை மறுத்துவிடாமல் அவற்றை செவ்வனே எம்மொழியினுள் காலத்திற்கேற்றவாறு புகுத்தும் போது தான் அந்த நெளிவு சுளிவுகளிநூடாக எமது மொழி வெற்றி பெற்று மேலும் சிறப்படையும். இன்றைய காலகட்டத்தில் துடிப்புள்ள இளைஞர்களை கவர வேண்டுமானால் அவர்களுக்கே உரிய விதத்தில் நீங்கள் குறிப்பிடக்கூடிய ஆங்கிலம் கலந்த தமிழினை பயன்படுத்தினாலும் அது தமிழ் மொழியினை சீரழிக்கின்றது என்று அர்த்தமில்லை. சுத்த தமிழில் பேசி கொண்டிருந்தால் எமது வானொலி நேயர் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாது எமது மொழியினையும் நாம் கொண்டு செல்ல நினைக்கும் கருத்தினையும் கொண்டு செல்லவே முடியாது. செய்தி அறிக்கை மற்றும் தமிழ் மொழியினை அதன் சிறப்புக்களை தரும் நிகழ்ச்சிகளை தெளிவான தமிழில் வழங்குவதுடன் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நெகிழ்வுதன்மையுடன் ரசிகர்களுக்கேற்றவாறு வழங்குவதில் தப்பில்லை. தூய தமிழில் நாம் கருத்து தெரிவிக்கிறோம் என்று கூறுவது எமது இயலாமையையே குறிக்கிறது. அப்படி தான் தூயதாக பேசணும் என்றும் ஆங்கிலம் கலக்க கூடாது எண்டும் கூவிறவர்களுக்கு ஒண்ணு சொல்லட்டா. தமிழ் மொழியில் கலந்துள்ள வட, போர்த்துக்கேய, ஒல்லாந்த, மலையாள எழுது மற்றும் சொற்கள் இல்லாமல் முடிந்தால் ஒரு வானொலி நடத்தி காட்டுங்களேன். note:- cake = குதப்பி வெதுப்பி. ice cream = பனி குளையல். அலுமாரி, கோப்பி தமிழ் சொல்லல்ல. (நினைவில் உடன் வந்தவை) இன்னொரு சிறிய வேண்டுகோள் - பதிவிடும் தலைப்பையும் அதன் உள்ளடக்கங்களையும் பற்றி அந்த இடத்தில் விமர்சனம் எழுதுங்கள், விவாதியுங்கள். புது விவாதங்களுக்கு வேறு வலைத்தளம் ஆரம்பிப்போம். என ஓகே யா?
அன்பின் அண்ணா...
]
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_9398.html
பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
//நாகரிக உடையணிந்து என்னை நோக்கி நடந்து வந்த அந்தப்பெண் புன்முறுவலோடு " மிஸ்டர் லோஷன்?" என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டார்.//
அண்ணா உண்மையா இப்படி நடந்ததோ?? அல்லது இப்படி நடந்திருக்க வேணும் எண்டு ஒரு ஆசையோ???
தொடர் அழகாக சென்று கொண்டிருக்கிறது அண்ணா. உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது. பஞ்சு போன்ற முகில் கூட்டம் வாவ் மனதை கொள்ளை கொள்ளும் அழகு. வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!
சந்ரு said...
ஆஹா சிங்கப்பூர் சிங்கம் வந்துட்டுது வெயிட் பண்ணுங்கோ வாசித்துட்டு வாறன்..//
வாங்கோ..
=====================
தல from அசல். said...
"நம்ம நாட்டிலெல்லாம் சில இடங்களில் தமிழைக் கடித்து துப்பி இருப்பார்கள்.."
-------------------------------------
தல உங்களின் ரசிகன் என்று சொல்லி விடுவதை விட உங்களின் உடன் பிறவாத சகோதரன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்.//
நன்றி சகோதரா....
..................
-------------------------------------
உங்கள் பதிவுகள் என்னை அடிமையாக்கி விட்டன.தவறாமல் வாசிக்கிறேன்!
உங்கள் தமிழ் பணி தொட(ரும்.)ர... வாழ்த்துக்கள்.//
நன்றி... தொடர்ந்து வாருங்கள்.
..................
-----------------------------------
என்தளத்தின் முகவரியை கீழே இணைக்கிறேன்.(முடிந்தால் பாருங்கள்)//
பார்த்தேன்... ரசித்தேன்...
சந்ரு said...
//எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப்பக்கமிருந்தும் சந்தேகப்பார்வை...//
அண்ணா தணிக்கை ஏதும் செய்யல்லையே...//
அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேனே...
இது ஒரு திறந்த பதிவு... எனினும்...
============
சந்ரு said...
"நம்ம நாட்டிலெல்லாம் சில இடங்களில் தமிழைக் கடித்து துப்பி இருப்பார்கள்.."
இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...//
யாரும் வளர்க்கவோ, அழிக்கவோ முடியாது சகோதரா...
நாங்கள் தமிழராக எம் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்.
வந்தியத்தேவன் said...
//இந்த விமானம் சிங்கப்பூரில் நின்று பின் ஹோங் கொங் செல்வதால் விமானம் நிறைந்தே இருந்தது.//
இந்த வரியிலிருந்து அறிந்துகொண்டேன் நீங்கள் கதே பசிபிக்கில் தான் பயணிக்கிறீர்கள் என்று பின்னர் அதையும் சொல்லிவிட்டீர்கள். நான் சென்ற நேரம் வயதான அழகிகளே இருந்தார்கள். காரணம் கேட்டால் கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் பலர் லீவென்றார்கள் இன்னும் அவர்கள் திரும்பவில்லை என்று நினைக்கின்றேன். ஒரு முறை நம்ம மல்லையாவின் கிங் பிஸ்சரில் பயணம் செய்யுங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள் ஹிஹிஹி,//
ம்ம்... Kingfisher அனுபவம் (flight) பெறத்தான் வேண்டும். ஆனால் மல்லையாவுக்கு ஏகப்பட்ட நஷ்டமாமே...
அந்தப் பெண் வெற்றி கேட்பதால் நிச்சயம் தமிழ்ப் பெண்ணாகத் தான் இருக்கவேண்டும்.//
:)
சந்ரு said...
//என்ன செய்ய அவருடைய துரதிர்ஷ்டமோ என்னுடையதோ.. எனது எண் 49 J..//
யாருடையா துரதிஸ்டமோ...கடவுள் காப்பாத்திட்டாரு... யார எண்டு கேட்காதிங்கோ//
இதிலே நான் எதையும் சொல்லி அகப்பட விரும்பவில்லை.
========================
வந்தியத்தேவன் said...
//சந்ரு said...
இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...//
சந்ரு சொல்றேன் என்டு கோவிக்கவேண்டாம் வெற்றியிலும் இந்தக் கொலை நடக்கின்றது. யார் யார் செய்கிறார்கள் என்று சொல்லவிரும்பவில்லை.ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கொலை குறைவுதான்.//
எப்படி நடந்தாலும் கொலை கொலை தான்! எனினும் எப்போதுமே எம்மைத் திருத்திக்கொண்டே இருக்கிறோம்.
சந்ரு said...
அண்ணா நீங்க சீரியல் ஒன்றுக்கு கதை எழுதலாம் போல இருக்கு.... நல்ல கட்டத்துல தொடரும் போடுறிங்க....//
இல்லைன்னா போரடிச்சிடும். சீரியலா? அதன் பிறகு என்னை சீரியல் கில்லர் ஆக்கிடுவாங்க.
===================
சந்ரு said...
//வந்தியத்தேவன் said...
//சந்ரு said...
இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே கொலை செய்கிறார்களே அண்ணா...
உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்...//
சந்ரு சொல்றேன் என்டு கோவிக்கவேண்டாம் வெற்றியிலும் இந்தக் கொலை நடக்கின்றது. யார் யார் செய்கிறார்கள் என்று சொல்லவிரும்பவில்லை.ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கொலை குறைவுதான்.//
தமிழை வளர்க்க வேண்டியவர்கள் தமிழை கொலை செய்கிறார்கள்... நாங்கள் ஒரு நிறுவனத்தை பற்றி எங்கு பேசக்கூடாது.. நான் லோஷன் அண்ணாவை தனிப்பட்ட ரீதியிலேதான் சொன்னேன்... அவரது வானொலியிலே சிலர் இருக்கலாம் அது வேற விடயம் அவர் தமிழை கொலை செய்யவில்லை... என்பது உண்மை...//
இல்லை சந்ரு... விமர்சனம் செய்யும் உரிமை எல்லோருக்குமே உண்டு. நிறுவனத்தின் பொறுப்பாளர் என்ற அடிப்படையில் என் மீதும் பிழையுள்ளதே.
//எங்கே லோஷன் அண்ணாவின் பெரும் தன்மையினை பாராட்டுகிறேன். நீங்கள் வெற்றியிலும் சிலர் இருக்கிறார்கள் இன்று சொன்னதை அவர் கருத்துரையிலே எடுக்காமல் விட்டு இருக்கலாம். //
பெருந்தன்மை என்பதைவிட இதுதான் உண்மையில் இருக்கவேண்டிய ஊடகவியலாளருக்கான தன்மை என நினைக்கிறேன்.
//எல்லாவற்றுக்கும் மேல் நான் வேறு ஒரு ஊடகத்துறையை சேர்ந்தவன் ஆனால் அவரது ரசிகன்...//
நீங்கள், ரசிகராயிருப்பதற்கு நன்றிகள் சந்ரு... எனினும் விமர்சனங்களை ஏற்றுப் பழக வேண்டும்.
..................
Subankan said...
//சந்ரு said :July 16, 2009 3:44 PM
அண்ணா நீங்க சீரியல் ஒன்றுக்கு கதை எழுதலாம் போல இருக்கு.... நல்ல கட்டத்துல தொடரும் போடுறிங்க...//
அதுமட்டுமா, சிங்கப்பூர் போய் இறங்கறதுக்குள்ள நாலு பார்ட் ஆயிட்டுது.//
நாலு பார்ட் தானா? நானே பார்ட் - பார்ட் ஆக ஆகாமல் பத்திரமாக எழுதிட்டு இருக்கேன்.
======================
Anonymous said...
//////(அவ்வளவு அழகிகள் இல்லை நண்பர்களே.. Cathay Pacificவிமான சேவையிடம் முறைப்பாடு செய்யவே வேண்டும்..)///////
அண்ணனா உங்களில பிடிச்ச விஷயத்தில இதுவுமொன்று.. உண்மையை சொல்லீடுவீங்க..//
உண்மையை உண்மையா சொல்லணுமில்ல...
///////பல இடங்களிலும் தூய, அழகு தமிழில் இருந்த அறிவித்தல் பல கண்டு உண்மையில் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.//////
நம்ம நாட்ட தவிர மற்றைய தமிழ்ர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழியின் தரம் உயர்வாக உள்ளதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்...
ஆனாலும் ஒரு விடயம் தமிழை வளர்க்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தேவையான அளவுக்கு நமது முன்னோர்கள் வளர்த்துவிட்டிருக்கிறார்கள். நாம் அதை பாதுகாக்கவேண்டும்.
பயணக்கட்டுரையை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்...
வாழ்த்துக்கள்..
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.//
நல்ல கருத்து செந்தூரன். உண்மைதான். சீரழிக்காமல் இருப்பதே தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு.
சந்ரு said...
//Subankan said..//
//அதுமட்டுமா, சிங்கப்பூர் போய் இறங்கறதுக்குள்ள நாலு பார்ட் ஆயிட்டுது.//
ஆமாம் சுபாங்கன் சீரியல் என்று இறங்கினால் அண்ணா நிறையவே சம்ப்பாதிக்கலாம் என்று நினைக்கிறேன். சீரியலுக்கு என்றால் அண்ணா இந்த நான்கு தொடரையும் நாற்பது தொடரா மாத்துவீங்க போல இருக்கு...//
அதக்கெல்லாம் உரியவங்க இருக்காங்களே...
சீரியல் எழுத்தாளரா வரமுடியாமல் இருக்க ஒரு மைனஸ் இருக்கிறது.. நம்மால் அழவைக்க முடியாதே!
===================
Raja said...
//குயிலாகக் கூவி, ஒயிலாக விடை பெற்றார் அந்த விமான நிலைய விசிறி.. (பாருங்கடா எப்படி கவிதை நடை வருது)//
முடியல...//
பொருமாதீங்கய்யா... ஹீஹீ..
..................
Mathu said...
Appadiye nadanthu vanthu thaangalum fans enru introduce panninaarkal. Is it? kidding :)
Some nice clicks up there.//
எப்படி? எப்படி முடியுது உங்களால? ;)
==================
Hamshi said...
Anna is going to interesting and cool.I likeபந்து வடிவ முகில்கள் picture. neegathan eduthingala.oh!nala photographer also?ok anna.enna part5 madum pojidduthu.appo 50um thadumo singapoore trip pathivu.enavo sothappama condu ponga anna//
நன்றி ஹம்ஷி... கையில் ஒரு கமெரா இல்லாவிடில் கமெரா மொபைல் இருந்தால் எல்லோருமே Photographers தான்!
அவ்வளவெல்லாம் போகாது... சொதப்பாமல் இருக்கத்தான் சோராமல் இவ்வளவு அங்கம் போகிறேன்.
..................
வந்தியதேவன் & சந்ரு...
நீங்கள் இருவருமே என் அன்புக்குரியவர்கள்... இருவருமே என் மீது அன்பு கொண்டவர்கள்.
என் மீது கொண்ட அன்பினால் வீண் வாக்குவாதம் - சர்ச்சை தேவையில்லை என நினைக்கிறேன்.
ஒரு சின்ன தெளிவாக்கல்..
இந்த சந்ரு, வெற்றிFM ஒலிபரப்பாளர் சந்த்ரு அல்ல..
இன்னுமொன்று பதிவரோ, ஒலிபரப்பாளரோ படைப்பாளியாக வந்தால் அவர் மட்டுமல்ல அவர் சார்ந்த அமைப்பும் ( நிறுவனம் ) விமர்சனங்களுக்கு உட்படும்.
என்னைப் பற்றி பேசும் போது நான் சார்ந்த வெற்றி பற்றியும் பேசுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
என்ன கொடும சார் said...
Making of சிங்கப்பூரில் ஒரு பயணப் பதிவு...
http://eksaar.blogspot.com/2009/07/making-of.html//
மற்றவனின் பிழைப்பில் ஹிட்ஸ் தேடுவதே சிலருக்கு பிழைப்பாய் போச்சுப்பா...
பொதுவா சொன்னேன்.
;)
அனானி said...
லோஷனின் அனுமதியுடன் (நம்பிக்கையில் ஒரு கருத்து) தமிழ் மொழியின் இன்றைய பெருமைகளை இத்துணை தூரம் அழைத்து சென்று உலகறிய பெருக்கிகொண்டிருப்பதில் ஊடகங்களுக்கும் குறிப்பாக வானொலிகளுக்கும் உள்ள பங்கு மகத்தானது. அதே நேரம் புதிய மாற்றங்களை எம்முள் புகுத்தி அந்த மாற்றங்களை மறுத்துவிடாமல் அவற்றை செவ்வனே எம்மொழியினுள் காலத்திற்கேற்றவாறு புகுத்தும் போது தான் அந்த நெளிவு சுளிவுகளிநூடாக எமது மொழி வெற்றி பெற்று மேலும் சிறப்படையும். இன்றைய காலகட்டத்தில் துடிப்புள்ள இளைஞர்களை கவர வேண்டுமானால் அவர்களுக்கே உரிய விதத்தில் நீங்கள் குறிப்பிடக்கூடிய ஆங்கிலம் கலந்த தமிழினை பயன்படுத்தினாலும் அது தமிழ் மொழியினை சீரழிக்கின்றது என்று அர்த்தமில்லை. சுத்த தமிழில் பேசி கொண்டிருந்தால் எமது வானொலி நேயர் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாது எமது மொழியினையும் நாம் கொண்டு செல்ல நினைக்கும் கருத்தினையும் கொண்டு செல்லவே முடியாது. செய்தி அறிக்கை மற்றும் தமிழ் மொழியினை அதன் சிறப்புக்களை தரும் நிகழ்ச்சிகளை தெளிவான தமிழில் வழங்குவதுடன் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நெகிழ்வுதன்மையுடன் ரசிகர்களுக்கேற்றவாறு வழங்குவதில் தப்பில்லை. தூய தமிழில் நாம் கருத்து தெரிவிக்கிறோம் என்று கூறுவது எமது இயலாமையையே குறிக்கிறது. அப்படி தான் தூயதாக பேசணும் என்றும் ஆங்கிலம் கலக்க கூடாது எண்டும் கூவிறவர்களுக்கு ஒண்ணு சொல்லட்டா. தமிழ் மொழியில் கலந்துள்ள வட, போர்த்துக்கேய, ஒல்லாந்த, மலையாள எழுது மற்றும் சொற்கள் இல்லாமல் முடிந்தால் ஒரு வானொலி நடத்தி காட்டுங்களேன். note:- cake = குதப்பி வெதுப்பி. ice cream = பனி குளையல். அலுமாரி, கோப்பி தமிழ் சொல்லல்ல. (நினைவில் உடன் வந்தவை) இன்னொரு சிறிய வேண்டுகோள் - பதிவிடும் தலைப்பையும் அதன் உள்ளடக்கங்களையும் பற்றி அந்த இடத்தில் விமர்சனம் எழுதுங்கள், விவாதியுங்கள். புது விவாதங்களுக்கு வேறு வலைத்தளம் ஆரம்பிப்போம். என ஓகே யா?//
நன்றி அனானி... உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். நீங்கள் இவ்வளவும் சொல்ல – உங்கள் பெயரையும் சொல்லியிருந்தால் உங்கள் கருத்துக்கு மேலும் வலு சேர்ந்திருக்கும்.
சந்ரு said...
அன்பின் அண்ணா...
]
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_9398.html
சந்ரு said...
பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..//
நன்றி சகோதரா... விருதுகள் கூடிப்போச்சு.. எனினும் அன்புக்கு நன்றிகள்...
Rama said...
//நாகரிக உடையணிந்து என்னை நோக்கி நடந்து வந்த அந்தப்பெண் புன்முறுவலோடு " மிஸ்டர் லோஷன்?" என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டார்.//
அண்ணா உண்மையா இப்படி நடந்ததோ?? அல்லது இப்படி நடந்திருக்க வேணும் எண்டு ஒரு ஆசையோ???//
ஒன்றல்ல பலவேண்டும் என்று ஆசை. என்ன செய்ய ஒருவர் தானே வந்தார்.
உண்மையைச் சொன்னால் நம்புறாங்க இல்லை...
======================
யாழினி said...
தொடர் அழகாக சென்று கொண்டிருக்கிறது அண்ணா. உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது. பஞ்சு போன்ற முகில் கூட்டம் வாவ் மனதை கொள்ளை கொள்ளும் அழகு. வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா!//
நன்றி யாழினி... தொடர்ந்து வாசித்து கருத்துக்களைத் தாருங்கள்.
பேரு சுபாஷ்கர் :-)
இனி இப்பிடியே வர்ரன் அண்ணோய்
பேரு சுபாஷ்கர் :-)
இனி இப்பிடியே வர்ரன் அண்ணோய்
இது வரை தெரிவித்த கருத்துக்கள் அனானி பெயரில் இருந்ததாலும் அதே user identity இருந்தால் இலகுவாய் இருக்கும் என்றே தொடர்ந்தும் அப்பெயரில் எழுதி வந்தேன். தகுந்த களத்தை உருவாக்கி தந்தமைக்கு நன்றி.
Post a Comment