இது என்னுடைய 250வது பதிவு..
கடந்து வந்த பதிவுலகப் பாதை பற்றி ஏற்கெனவே மைல் கற்கள் கடக்கும்போது சொல்லி இருப்பதாலும் இன்று நேரம் இல்லாததாலும் நேரடியாக மனதில் பதிவிட எண்ணி இருக்கும் விஷயத்துக்கே சென்று விடுகிறேன்...
எனினும் என்னோடு இணைபிரியாமல் இணைந்துள்ள நண்பர்கள்,பின்னூட்டமிடும் பெருந்தகைகள், வாசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. தொடர்ந்து இணைந்திருங்கள்...
அத்தனை திரட்டிகளுக்கும் மறக்காத மனமார்ந்த நன்றிகள்...
இன்று விடுமுறை நாளில் அவசர அவசரமாக நிகழ்ச்சி முடிந்து விளையாடப் போகிற (இன்று நம்ம வெற்றி FM அணிக்கு ஒரு சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி இருக்கிறது) என்னுடைய பரபரப்பிலும் இரு பதிவுகள் போட இலகுவாக துரிதமாக தட்டச்சு பண்ணி தந்த சகோதரி வனிதாவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்...
ஃபெடரர் எனும் பெரு வீரன்

நேற்று இரவு ரொஜர் ஃபெடரர் என்ற மாபெரும் டென்னிஸ் வீரரின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் பதிக்கப்பட்ட நாள்.
இன்னுமொரு இறுதிப்போட்டி - இன்னுமொரு ஃபெடரர் வெற்றி என்று இலேசாக சொல்லிவிட்டு போக முடியாதளவு விறுவிறுப்பான நீண்ட நேரம் நீடித்து சென்ற ஒரு பிரமாண்டமான இறுதிப்போட்டி.
வழமையான டென்னிஸ் போட்டிகள் ஒன்றரை அல்லது இரண்டு மணியத்தியாலங்களில் முடிவுறும் போட்டிகளில் நேற்று எனது பொறுமையையும் ஒரு கணம் சோதித்துவிட்டது இந்த இறுதிப்போட்டி.
பின்னே... ஆளுக்கொரு gameஆக வென்று கொண்டே இழுத்தடித்துக்கொண்டே போனால்...

நீண்ட யுத்தம்.. முடிவில் அரவணைப்பு..ஆறுதல்.. வாழ்த்துக்கள்
தத்தம் பரிமாறுதலில்(serve) வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே முப்பது GAMEகளை இறுதி செட்டில் ஏற்படுத்தி விட்டார்கள்..
இறுதியில் ஸ்கோர்..
5-7,7-6,7-6,3-6,16-14...
ஃபெடரர் ரசிகனான எனக்கு இப்படி ஃபெடரருக்கு தொல்லை கொடுத்தவர்களில் ரஃபேல் நடால், பீட் சாம்ப்ரசுக்குப் பிறகு ஏன் அவர்களை விட அன்டி ரொடிக் அவரது வாழ்க்கையில் விளையாடிய மிகச்சிறந்த போட்டியாக நேற்றைய போட்டியை நான் கருதுகிறேன்.
நேற்று இறுதிவரை உயிரைக்கொடுத்துப் போராடிய அன்டி ரொடிக் ஒரு கட்டத்தில் வென்றால் கூடப் பரவாயில்லை என்றே தோன்றியது.

விம்பிள்டன் வெற்றிக் கிண்ணத்துடன் ஃபெடரர்
ஒருவாறாக 4மணி நேரம் 15 நிமிடங்களின் பின்னர் ஃபெடரர் தனது ஆறாவது விம்பிள்டன் பட்டத்தை அடைந்தபோது அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதைவிட எனக்கு ஒருபடி மேல் திருப்தி!
காரணம் ஃபெடரர் சிறிதுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் தரப்படுத்தலில் முதலாமிடத்துக்கு வந்துள்ளார்.
2008ம் ஆண்டு ராசியில்லாத வருடமாக அமைந்தபோதும் இந்த வருடத்தின் முதல் இரு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலுமே மகுடம் சூடியிருக்கிறார் ஃபெடரர்.
இப்போது அதிகம் விம்பிள்டன் பட்டம் வென்றவர்களில் அமெரிக்கரான பீட்சாம்ப்ராசை விட ஃபெடரர் ஒன்று மட்டுமே குறைவு.
அத்துடன் நேற்றைய வெற்றியுடன் சாம்ப்ராசின் 14 கிராண்ட் ஸ்லாம்கள் வென்ற சாதனையை ஃபெடரர் முந்தியிருக்கிறார்.
நேற்று இறுதிப்போட்டியைப் பார்க்க சாம்ப்ராஸ் நேரில் வருகை தந்திருந்தும், அமைதியாக, அழகாகப் போட்டியை ரசித்ததும், தனது முன்னாள் எதிர் தன் நாட்டு வீரரைத் தோற்கடித்து தன்னுடைய சாதனையை நெருங்கி வரும் வேளையிலும் புன்முறுவல் மாறாது ரசித்த அழகே அழகு.

முன்னாள் டென்னிஸ் சாம்பியன் பீட் சாம்ப்ராஸ்
உண்மையிலே என்னைப்பொறுத்த வரை கிரிக்கெட்டை விட டென்னிஸ் தான் கனவான்களின் ஆட்டம்.
நான்கு மணித்தியாலங்களுக்கு அதிகமாகப் போராடியும் இறுதிவரை வேகம் குறையாமல் மோதிக்கொண்டோரில் வெற்றி பெற்ற ஃபெடரருக்கு வெற்றிக்கான தங்கக்கிண்ணம்.
ஈடுகொடுத்து சளைக்காமல் போராடித் தோற்ற போதும் பல ரசிகர்களிடமும், முன்னாள் வீரர்களிடமும் பரிதாபங்களையும், பாராட்டுக்களையும் அன்டி ரொடிக் பெற்றுக்கொண்டார்.

அன்டி ரொடிக்
தளுதளுத்து கண் கலங்கி நின்ற ரொடிக்கைப் பார்த்தபோது தோல்வியின் வேதனையும், உயிரைக்கொடுத்து போராடும் போது அது நான்கு நிமிடமோ, நான்கு மணிநேரமோ, நாற்பது வருடமோ தோற்றுப்போனது தோற்றுப்போனது தான் என்ற வாழ்க்கையின் வேதனையின் பாடம் ஏனோ நினைவில் வந்து மனதை சங்கடப்படுத்தியது.
நேற்றைய இறுதிப் போட்டியைப் பார்த்த பொது இருவருமே தோற்கக் கூடாது என்ற எண்ணமும் வந்தது.. அவ்வளவு தூரம் இருவருமே சளைக்காமல் மோதினார்கள்.. ஆனால் என்ன செய்வது வெற்றி என்பது யாரோ ஒருவருக்கு தானே..

ஃபெடரரைப் பற்றி எழுதவேண்டும் என்று பலதடவை நினைத்ததுண்டு. நேற்றைய விம்பிள்டன் இறுதிப்போட்டி இந்த வாய்ப்பளித்துள்ளது.
அமைதியான, சலனமற்ற முகம்.
வெற்றி பெற்றாலும் கர்வம் காட்டாத, தோல்வியுற்றால் துவண்டு போய் அல்லது கோபமடைந்து, கொதித்து உணர்ச்சி வயப்பட்டு போய் கோழையாகி விடாத நேர்த்தியான விளையாட்டு வீரன் - Real sportive player
விளம்பரங்களில் வந்தாலும் ஓவரான அசகாயத்தன, சாகசம் காட்டாத உண்மையான சாம்பியன்.
புகழ்ச்சிகளாலும், வெற்றிகளாலும் மயங்காத, எதிர் வீரர்களை ஏளனப்படுத்தாத, வம்புக்கிழுக்காத நல்ல மனிதர்.
தேவையற்ற பரபரப்பு, கிசுகிசுக்களில் சிக்காதவர்.
இதைவிட ஒரு மனிதருக்கு வெற்றி மேல் வெற்றிகிட்ட வேறென்ன குணங்கள் வேண்டும்?
பி.கு :- இந்த நீண்ட நெடும் போட்டியைப் பார்த்துவிட்டு இந்திய – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேசப்போட்டி எப்படி என்று பார்க்க அலைவரிசையை மாற்றினால் - வீரர்களுக்குப் பதிலாக மழை விளையாடியிருந்தது. மழையின் கைங்கர்யம் இந்தியாவுக்கு தொடர் சொந்தமாகியுள்ளது.
முக்கியமான வீரர்கள் சிலர் இல்லாமல் பெற்ற வெற்றி என்பதாலும் தோனி சிறப்பாக விளையாடியிருப்பதாலும், தோனியும் இந்திய அணியும் கார்ட்டூன்கள், விமர்சனங்கள், பதிவுகளிலிருந்து கொஞ்சம் தப்பித்துக்கொள்ளலாம்.
27 comments:
முதலில் உங்களது 250 வது பதிவுக்கு வாழ்த்துகள்....
என்ன அண்ணா விளையாட்டு செய்திகளை நீங்க விட்டாலும் விளையாட்டு உங்கள விடமாட்டாது போல....
அன்று நீங்கள் ஒளிபரபுத்துறைக்குள் உள் வாங்கியவர்கள் சிலர் தாங்களேதான் எலாம் என்று தம்பட்டம் அடித்தக்கொண்டு இருக்கிறார்களே அண்ணா.
அவர்கள் கதைகளைக்கேட்டா கோபமும் வருகிறது, சிரிப்பு சிறிப்பாயும் வருகிறது
உங்கள் பணி தொடரட்டும் அண்ணா ....
வாழ்த்துக்கள்....
முதலில் வாழ்த்துக்கள் 250 வது பதிவுக்கு. தொடரட்டும் பதிவுலக பயணம்.
பெடரர் அருமையான வீரர். அவருடைய திறமைக்கு கிடைத்த பெரிய பரிசுதான் இது. இருந்தாலும் அவரால் களிமண் தரையில் பிரெஞ்சு கிண்ணத்துக்கான போட்டித்தொடரில் அவரால் இலகுவாக நடாலை வெல்ல முடியவில்லை. கவலையாக இருந்தது. இம்முறை வென்றுவிட்டார்தான். ஆனால் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னர் நீண்ட நேரம் அரையிறுதிப்போட்டியில் விளையாடி களைப்புற்றமையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இருந்தாலும் பெடரர் ஒப்பற்ற வீரன் என்பதில் சந்தேகம் இல்லை..!
வெற்றி அணி வெற்றின் பெற வாழ்த்துக்கள் அண்ணா......
நேற்று மேற்கிந்திய தொடரில் இந்தியா தொடரைக் கைப்பற்றிவிட்டது. தோனி தொடர்ந்தும் 4வது தடவையாக நேற்றும் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றார். இது ஒன்று போதும் தோனி அதிர்ஷ்டக்கார வீரன் என்பதற்கு. அட ஏற்க மறுக்கிறார்களே? அவரிடம் திறமை இருக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவருக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கு. தயவு செய்து ஏற்றுக்கொள்ளங்கப்பா..!
உண்மை தான்... பெடரர் நிச்சயம் ஒரு அற்புத மனிதன். அதே நேரம் சாதனை மனிதரும் கூட. நடால் இல்லாததும் அவருக்கு வாய்ப்பாக போய் விட்டது.
ஆண்டி ரோடிக்கை பற்றி சொல்லவே தேவை இல்லை. ரோடிக்கின் செர்வீஸ் தான் அவருக்கு பலம். இறுதி செட்டின் இறுதி கேம் வரை ஒரு முறை கூட ரோடிக்கின் செர்வீசை அவர் முறியடிக்கவில்லை.
5-1 என இரண்டாவது செட்டின் டை பிரேக்கரில் முன்னணியில் இருந்த அவர் அந்த செட்டை பறிகொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனை.
500 அடிக்க வாழ்த்துக்கள் பாஸூ!!
Ya, i watched da full match. superb....
"2008ம் ஆண்டு ராசியில்லாத வருடமாக அமைந்தபோதும் இந்த வருடத்தின் முதல் இரு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலுமே மகுடம் சூடியிருக்கிறார் ஃபெடரர்"
இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் (அவுஷ்திரேலிய ஓவின்)நடாலிடம் ஃபெடரர் தோற்றிருந்தார், அதன்பின் நடந்த பிரெஞ் மற்றும் விம்பிள்டன் போட்டிகள் வெற்றி பெற்றுள்ளார்.
அருமையான பதிவு, உங்களது நிகழ்ச்சிகள் போலவே...
வாழ்த்துக்கள்
லோஷன் எனும் பெரு வீரன்.. :))
வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் 250 இடுகைக்கு!
அருமையான பதிவு!
250 பதிவுகளைத் தாண்டிய உங்கள் பதிவுலகு மேலும் சிறக்க எனது பாராட்டுக்கள்.
அருமையான ஆட்டம் எனக்கு பெடரர் தோற்கப்போகின்றாரோ என நெஞ்சு திக்திக் என்றது ஆனாலும் இறுதியில் வென்றுவிட்டார். 250ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
250.... என்னால் ஒரே ஒரு ப்ளாக் எழுத முடியலே.. எப்படித்தான் 250 கிராஸ் பண்ணிங்களோ. வாழ்த்துக்கள் !!!!!!!!!
உண்மையிலே federer ஒரு மிகப்பெரிய சாதனையாளர்.
Congrats for 250th Post. Every post is different in your angle. great
250 வது பதிவு மேலும் மேலும் வளர வாழ்த்துகள் நண்பா
250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார். ரோடிக் வெற்றி பெறவில்லையே என்று கவலையா இருக்கு சார். ஏன்னா.. நான் எப்போதுமே தோற்பவர்கள் கட்சி தான்.
நஜி
www.hinaji.blogspot.com
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவுலகில் வலம் வருகிறேன்.............
விடாமல் பதிவுகளை தொடுக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் சார்.
தொடரட்டும் பணி
250 பதிவுகள் படைத்த சாதனைக்கும் Ice cream உண்டா?
250 ஆவது பதிவாக சானியாவை பற்றி எழுதியிருந்தால் நிச்சயம் பெரிய hit ஆகியிருக்கும். பெடரர் என்றால் சமஷ்டி மாதிரி ஒரு தீர்வு திட்டமா?
250 என்ற மைல் கல்லை அடைவது ரொம்ப பெரிய காரியம் தான். அது எழுதி பார்த்தால் தான் தெரியும்.
உங்களது 500 ஆவது பதிவாக ஒரு குஜிலியை பற்றி எழுதினால் நான் ice cream வாங்கி தருவேன்.
ice creama?solave ellanna.anyway best of luck anna unga 250vathu pathivukku.again best wishes for ur Carrier life anna.
வாழ்த்துக்கள் எனதன்பின் லோஷனுக்கு!
வாழ்த்துக்கள் அண்ணா தொடரட்டும் உங்கள் பணி, கூடவே நாங்களும் தொடருவோம் உங்களின் தளத்தை
இன்னும் பல 250 கள் வரும் எங்களுக்கு தெரியும், தம்பியின் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும் (பேப்பர் தம்பியில்ல, எங்கள சொன்னோமில்ல... )
௧௪ கிராண்ட்ஸ்லாம் சாதனை படைத்தவர் சொல்லிட்டாரு நம்ம பெடெரர் தான் உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீரர் என்று பிறகென்ன!.
Congrats for your 250.
Federer is a realsportsman.
but u didt tell about roddick
உயிரைக்கொடுத்து போராடும் போது அது நான்கு நிமிடமோ, நான்கு மணிநேரமோ, நாற்பது வருடமோ தோற்றுப்போனது தோற்றுப்போனது தான் என்ற வாழ்க்கையின் வேதனையின் பாடம் ஏனோ நினைவில் வந்து மனதை சங்கடப்படுத்தியது.
that is true
உங்களது 250 வது பதிவுக்கு வாழ்த்துகள்....
வாழ்த்துக்கள் அண்ணா... நாங்கள் இருக்கிறோம் நல்ல ரசிகர்கள் தங்கள் பதிவு கண்டு பயன்கொள்ள.. தொடர்ந்து எழுதுங்கள், வலையுலகில் நிமிர்ந்து நில்லுங்கள்..! நேற்றைய போட்டிதான் நானும் முழுதாக கண்டுகளித்த டென்னிஸ் போட்டி... விறுவிறுப்பாக இருந்தது டென்னிஸ் மீது ஆர்வமும் தொற்றிக்கொண்டது... பதிவு கலக்கல் என்றும் போல.. வாழ்த்துக்கள் என்றென்றும்...!:))
Post a Comment