
நேற்று ஞாயிற்றுக்கிழமை, முழுநாள் வீட்டில் இருப்பதாக முடிவுசெய்த உடனேயே போட்ட திட்டங்களில் ஒன்று சன் டிவியில் காட்டுவதாக இருந்த ஆயிரத்தில் ஒருவன் இசை வெளியீட்டு விழா பார்ப்பது.
இந்தத் திரைப்படம் பலபேராலும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு பிரமாண்டப்படைப்பு. இதற்குப் பல காரணங்கள்... முக்கியமாக இயக்குனர் செல்வராகவன் தனது முன்னாள் தோஸ்த் யுவனுடன் பிரிந்த பிறகு வர இருக்கும் திரைப்படம்... அது போல மிகப் பெரிய வெற்றி பெற்ற பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்திக்கின் முதல் படம்...
MGR திரைப்படத் தலைப்பு வேறு ஒரு பக்கம் பிரம்மாண்டம் இன்னொரு பக்கம் பரபரப்பு.. (வழமையாக MGR படப் பெயர்களை இளைய தளபதி தானுங்கணா எடுப்பாரு.. இதை செல்வா கார்த்திக்கு எடுத்ததால கடுப்பாயிருப்பாரே)
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கமே இந்தப் படத்தைப் பற்றிய ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
பல பதிவர்களும், விமர்சகர்களும் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் பற்றி பாராட்டி, புகழ்ந்து எழுதியதையெல்லாம் வாசித்திருப்பீர்கள்...
G.V.பிரகாஷின் master piece என்றும் வைரமுத்துவின் ஆழமான வரிகள், காத்திரமான வரிகள் என்றும் அனைவருமே புகழ்ந்துதள்ளி சிலாகித்துள்ள பாடல்களில் பெம்மானேயும், தாய் நின்ற மண்ணேயும் எப்போது கேட்டாலும் என் மனம் பாடல் வரிகளோடு சேர்ந்து அழும்.
இதில் வருகின்ற ஜல்சா, ஜாலி பாடல்களை எழுதி இருப்பவர் செல்வராகவனே தான்.. மூன்று முக்கியமான முத்தான பாடல்கள் தான் வைரமுத்து எழுதியவை
இது பற்றி சில பதிவுலக நண்பர்கள் எழுதிய பதிவுகள் என்னைவிட அதிகமாக, அழகாக சொல்லியிருக்கும்.
இந்த வரிகளுக்காகவே செல்வா – யுவனைக் கழற்றிவிட்டதும் G.V.பிரகாஷோடு சேர்ந்ததும் நல்லது என்று நினைக்கின்ற ஆயிரத்தில் நானும் ஒருவன்.
எனினும் பாடல்களுக்கு ஆணிவேராக அமைந்த வைரமுத்து நேற்று சன் டிவியில் காட்டப்பட்ட இசை வெளியீட்டில் காணப்படவேயில்லை. அவர் தந்த ஒரு சிறு கருத்து மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. ஏதாவது உள்வீட்டு சிக்கலா?

வைரமுத்து சொல்லிய ஒரு விஷயம் "இந்தப் படமும் களமும் சோழர் காலம் செல்வதால் பழைய கல்வெட்டுக்கள்,பண்டைத் தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஒரு மாணவனாக மாறிப்போனேன். இதுபற்றி செல்வாவுக்கு சொல்லவில்லை.. வெற்றி விழாவின்போது சொல்லுவேன்".
நம்பிக்கை பாருங்கள்.. முத்துக்குமார் செல்வா-யுவனுடன் அமைத்த வெற்றிக் கூட்டணியை வைரமுத்து-செல்வா-G.V முந்தவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
G.V.பிரகாஷீக்கோ தலை விறைத்துப் போகுமளவுக்குப் பாராட்டு! வெயிலுக்குப் பிறகு பாராட்டப்பட வேண்டியளவு முதல் தடவையாக செய்திருக்கிறார் G.V.

உருக வைக்கும் தாய் நின்ற மண்ணே, பெம்மானே...ஆடவைக்கும் ஓ! ஈசா, உன் மேல ஆசைதான்...ஆண்களை மயக்கும் மாலைவேளையில்இரண்டு பின்னணி இசைகள்..
என்று கலவையாகக் கலக்கியிருக்கிறார் இசைப்புயலின் இளம்புயல். எனினும் ஈசனையும், கோவிந்தனையும் Oh yeah baby... என்று clubbing அழைத்திருப்பது கொடுமையென்றே தோன்றுகிறது.
படத்தின் ஒரு சில காட்சிகள் / நிழற்படங்கள் காட்டப்பட்டன.

கார்த்திக், ரீமா சென், ஆன்ட்ரியா ஆகியோர் தோன்றும் அந்தக் காட்சிகள் பல ஆங்கிலப் படங்கள் சிலவற்றை எனக்கு ஞாபகப்படுத்தின.
Pirates of the Carribean , Indiana Jones, மற்றும் Mummy Returns போன்ற இன்னும் பல புதையல் தேடும் ஆங்கிலத்திரைப்படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் தான் அதிகம்.
நம்ம செல்வராகவன் ஏற்கனவே கமலின் குணாவை சுட்டு காதல் கொண்டேனையும், பல ஆங்கிலத்திரைப்படங்களின் கலவையாக 7G Rainbow Colony ஐயும் கொடுத்திருந்தவர் என்பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.
புதுப்பேட்டை கூட பல மெக்சிக்கன் திரைப்படங்களின் தழுவலே! ஆங்கிலப்பட/ சர்வதேசப்பட அறிவு அதிகம் உள்ளவர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அது என்ன படம் என்று.

இதனாலேயே நான் எப்போதும் செல்வராகவனை நல்ல படைப்பாளி(Creator) என்று நினைத்ததில்லை, அவர் நல்லதொரு இயக்குனர் மட்டுமே.
அதிலும் - பார்த்தீபன் தான் பேசும் போது அடிக்கடி இது English படம் தான் என்று அடித்துச் சொன்னதும் எங்கேயோ எதுவோ இடிக்கிறது.
இந்தப் படம் 2009இல் ஆரம்பித்து 7ம் நூற்றாண்டு வரை செல்லும் கதை என்று சொல்கிறார்கள்... சோழநாட்டு – பாண்டிய சரித்திரங்களைப் பற்றியும் வைரமுத்து பாடல்களில் பேசுவதால் ( இவற்றில் பல வரிகள் எம் நாட்டு மக்கள் நிலை பற்றியும் உருகியிருந்தன... அல்லது உருகியது போலிருந்தது ) நிறையவே எதிர்பார்த்துள்ளேன்...
பார்த்தீபன் என்ற புதுமைப்பித்தரும் ஒரு வித்தியாசமான பாத்திரம் ஏற்றுள்ளதனால் (இவர் தான் சங்ககால / சோழர்கால பிரதான பாத்திரமோ ) உண்மையிலேயே வித்தியாசமான படம் தானோ என்று ஆர்வத்துடன் இருக்கிறேன்.
பேசியவர்களில் பார்த்தீபன் வந்தவுடனே மேடை கலகலத்தது. திறந்துவிட்ட சட்டையுடன் ( Button opened shirt ) வந்தவர் 'வழமையாக டப்பிங் முடித்த பிறகு சட்டையே செய்யமாட்டேன்.. இப்போது பட்டனே செய்யமாட்டேன்' என்று கடித்தவர் பின் ஆயிரத்தில் ஒருவனின் தமிழ் டப்பிங் உரிமையைத் தான் செல்வராகவனிடம் கேட்டதாக படத்தின் பீட்டர் தனத்தை நக்கலாக வாரினார்.
இப்போதெல்லாம் கதாநாயகிகள் தமிழில் பேசுவதே பெரும்பாடாய் இருக்கும்போது, அழகான ஆண்ட்ரியா அழகாக இருப்பதோடு, அழகாகப் பாடவும் செய்கிறார்.

கவர்ச்சியாக இல்லாமல், கண்ணை உறுத்தாமல் அவர் பாடும் அழகே தனி.
இன்னும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.. நடிகையாகவோ, கதாநாயகி ஆகவோ.. பச்சைக்கிளி முத்துச்சரம் படம் பார்த்ததுமே யோசித்தேன்.. ஏன் இவருக்கு இன்னமும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லையோ தெரியவில்லை..
ரீமா சென் பாட மாட்டாங்களா? அவங்க பாடலேன்னா என்ன நேற்றுக் காட்டிய சாம்பிள் போதும் படத்துல அவங்க ஏன் இருக்காங்க என்று சொல்ல.. ;)
தனுஷும் அவர் மனைவியும் வந்து ஆடிப் பாடி.. (பாடி என்பதை விட, கத்தி என்பது கொஞ்சம் கூடப் பொருத்தம் என்று நினைக்கிறேன்) கலகலப்பூட்டினார்கள்.
கார்த்திக், நித்யஸ்ரீ, விஜய் யேசுதாஸ் எல்லோரும் பாடியபோதும், இசை நேரடியாக வழங்கப்படவில்லை என்பதும் cdக்கு மேல் பாடகர்கள் பல நேரம் வாயசைத்தும்
சில நேரம் பாடியும் இருந்தார்கள் என்பது உறுத்திய ஒரு விஷயம்.
தனுஷ் குழுவினரும், அண்ட்ரியாவும் தவிர என்னைப் பொறுத்தவரை வேறு எந்தப் பாடலுமே cdஇல் கேட்ட தாக்கத்தை கொஞ்சமாவது மனதில் ஏற்படுத்தவில்லை.
இதிலும் தாய் தின்ற மண்ணே பாடலுக்கு * பூர்ணாவின் .. (திருத்தியதுக்கு நன்றி அனானி) பரத நாட்டியம் வேறு.
கொலை செய்யும் அளவு வெறி வந்தது..
பின்னே.. ஐட்டம் பாடலுக்கு ஆடும் ஆடை போன்ற ஒன்றோடு வந்து இந்த அற்புத பாடலுக்கு ஆடினால்?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ! மன்னன் ஆளுவதோ!
இந்த வரிகளுக்கு சிரித்துக் கொண்டே ஸ்ரேயா காட்டிய பாவங்களைப் பார்த்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுடைக்கும் வெறி வந்தது.(என்னுடைய சொந்த டிவி என்பதால் தப்பித்தது)
இதையே தான் திரைப்படத்திலும் செல்வா செய்யப் போகிறாரா?
செல்வா, மற்றப் பாடல்களை உங்கள் வழமையான மஜா பாடல்களாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தயவு செய்து ஈழத்து உணர்வுகளும் கலந்துள்ள இந்தப் பாடலில் சிருங்கார ரசம் வேண்டாம்.
இப்படியான பொருட்செலவுள்ள திரைப்படங்களுக்கு யாராவது ஒரு தாராள மனம் படைத்த தயாரிப்பாளர் வைக்கவேண்டுமே, இதற்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்.
பிறகேன்ன செல்வா கொட்டி முழக்கப் போகிறார்.
செல்வராகவன் படம் என்பது மேலோங்கி பாடல்கள் தரும் உணர்வுகள் எழுந்து நிற்கிற படமாக இப்போதைக்கு ஆயிரத்தில் ஒருவன் தென்படுகிறது..
பாடல்கள் உச்சக் கட்டத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் படமும் வெளியிடப்பட்டால் வரவேற்பு எக்கச்சக்கம் நிச்சயம்.
இப்படியான நல்ல முயற்சிகள் நான் ரொம்பக் காலமாய் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன்(கல்கி), மருதநாயகம் போன்றவற்றுக்கு உயிர்ப்பு கொடுக்காதா என்றொரு நப்பாசை தான்..
பி.கு - படத் தலைப்புக்கு பொருத்தமாக தான் அந்த 1000 போட்டுக் கொண்டேன். எனக்கு இருப்பது இத்தனை எதிர்பார்ப்புக்கள் தானுங்கோவ்..
26 comments:
சன் டிவியில் சிறிது நேரம் பார்ததும் போரடித்து விட்டது.
பகிர்விற்கு நன்றி.
படம் வரட்டும் பார்க்கலாம்.
இதிலும் தாய் தின்ற மண்ணே பாடலுக்கு ஸ்ரேயாவின் பரத நாட்டியம் வேறு. //
அட.. இங்கை கவுந்திட்டீங்களே...
அது பூர்ணா..
நல்லதொரு விமர்சனம் அண்ணா.. எதிர் பார்ப்புக்களை வீணாக்காமல் நல்ல படமாக இருந்தால் சரிதான்.
கார்த்திக்கும் பாடல்களும் எனக்கும் பல ஏதிர்ப்பார்ப்பை எற்படுத்தி உள்ளது. பார்ப்பம்....
//மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ! மன்னன் ஆளுவதோ!//
இப்படித்தான் வில்லு படத்தில் அகதியான மக்களுக்கு வரிக்கும் உணர்ச்சி வசப்பட்ட நீங்கள்.. அப்புறம் நடந்தது எல்லாருக்கும் தெரியுமே.. அவங்க உசுப்பெத்துறதும் சிலர் நின்று ஆடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..
hoping 4 a gud movie......
கார்த்திக் கலக்குவார்
சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே!!!1
லோஷன் வைரமுத்துவை எதற்காக இப்படிப் புகழ்கிறீர்கள். அவர் தமிழ் பெட்னா நிகழ்வில் கேவலமாக நடந்து கொண்டவற்றை அறியவில்லை. முத்தர் நல்ல கவிஞராக இருக்கலாம் ஆனால் நல்ல மனிதரல்ல.
படம் வரும் முன்பே விமர்சனமா? இப்படியெல்லாம் சொல்லி எதிர்பார்க்க வைக்கிறீங்க போல. பார்ப்போம் படம் எப்படினு?
//நம்ம செல்வராகவன் ஏற்கனவே கமலின் குணாவை சுட்டு காதல் கொண்டேனையும், பல ஆங்கிலத்திரைப்படங்களின் கலவையாக 7G Rainbow Colony ஐயும் கொடுத்திருந்தவர் என்பதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.
புதுப்பேட்டை கூட பல மெக்சிக்கன் திரைப்படங்களின் தழுவலே! ஆங்கிலப்பட/ சர்வதேசப்பட அறிவு அதிகம் உள்ளவர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அது என்ன படம் என்று.
//
குணாவுக்கும், காதல் கொண்டேனுக்கும் சம்பந்தப் படுத்துவது என்னவோ மலைக்கும், மடுவுக்கும் முடிச்சு போடுவது. நாம் ஒரு சில படங்களை ஒரு பொதுப் புத்தியோடு அணுகப் பழகி விட்டோம். எப்படியாவது ஒரு ஆங்கிலப் படத்தைச் சுட்டு எடுத்திருப்பார், அதை கண்டுபிடித்ததைப் பெருமையாகப் பேசித் தெரிவோம். என்ன படத்தை சுட்டு எடுத்தார் என்றே தெரியாமல், எவ்வாறு உலகப் படங்களை சுட்டு எடுத்தார் என்று கூறுகிறீர்கள்? ஆதார பூர்வமாக நீருப்பீத்தீர்களனால் ஒத்துக் கொள்கிறேன். ‘புதுப்பேட்டை’ பிரேசிலியப் படமான ‘சிட்டி ஆப் காட்’ படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியை கையாண்டு இருப்பார்கள். என்ன காட்சி என்றால் ‘இது கொக்கி குமார் ஏரியா’ என்று விரிவடையும் காட்சி. அது கூட ஓளிப்பதிவாளரின் சுடுதல் என்று சொல்வேன். எதையும் ஆதாரபூர்வமாக இல்லாமல் பொதுவாக தயவு செய்து சொல்லாதீர்கள்.
//ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கமே இந்தப் படத்தைப் பற்றிய ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
நிச்சயமாக அண்ணா. அப்பாட்டுக்கள் எங்களைப் பற்றி - நாங்கள் தோளில் சுமக்கின்ற சிலுவைகளின் வலிகளைப் பற்றி பேசுகின்றதாய் உணர்கின்றேன்.
//இந்த வரிகளுக்கு சிரித்துக் கொண்டே ஸ்ரேயா காட்டிய பாவங்களைப் பார்த்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுடைக்கும் வெறி வந்தது.
கிருஸ்ணா அண்ணாவும் இக்கருத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். உணர்வுகளைச் சுமந்து வரும் பாடல்வரிகளின் காட்சி அமைப்புக்கள் கோமாளித்தனங்களாக இருப்பது அப்படங்கள் மேலான எதிர்பார்ப்பை மழுங்கடித்து விடுகின்றன. இப்படம் இலங்கையில் திரையிடப்படுமா அல்லாதுவிடின் எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென இன்று வரை இருந்த ஆவல் ஏதோ குறைந்து விட்டதாக உணர்வு.
//தயவு செய்து ஈழத்து உணர்வுகளும் கலந்துள்ள இந்தப் பாடலில் சிருங்கார ரசம் வேண்டாம்.
விட்டு விடுங்கள். யார் யாரோ எல்லாம் எங்களின் முதுகு மேல் சவாரி போடும் போது, எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு அத்தகுதி இல்லையா?
படம் வரட்டும் பார்க்கலாம்
பிரசன்னா இராசன் கூறியது 100 வீதம் உண்மை ... பல உலக சினிமாவை dvd யில் மட்டுமே கரைத்து குடித்துவிட்டு இப்படிதான் பல சினிமா பண்டிதர்கள் பீலா விடுவார்கள் ,,
ஆங்கில திரைபடங்கள் ஆனாலும் சரி வேறு மொழிப்படங்கள் ஆனாலும் சரி அதில் உள்ள வித்தியாசமான முயற்சிகளை நாங்களும் எங்கள் தேவைகளுக்கு ஏற்ற வடிவில் கையாலுவது தப்பில்லை (அதன் கருப்பொருளை, தொழில்நுட்பத்தை)
அதை அப்படியே அப்பட்டமாக பயன்படுத்துவதுதான் தவறு என்பது என் வாதம் . சமிபத்தில் வெளிவந்த "அயன்" படத்தில் வரும் வயிற்றுக்குல் வைத்து போதைப்பொருள் கடத்தும் காட்சி அப்பட்டமாக "mariya full of grace" படத்தில வரும் காட்சி அமைப்பின் அப்பட்டமான தளுவல். அதில் பெண் இதில் ஆண் அவ்வளவே இயக்குனருக்கு தெரிந்த மாற்று கற்பனை .
நாங்கள் எல்லாம் சன் டிவி பார்ப்பது இல்லை, எல்லாம் மாசிலாமணி என்கிற மாபெரும் வெற்றி காவியம் செய்த வேலை தான், இப்பவே இப்படி சன் டிவி கூவுதே, எந்திரன் படம் வந்தால் என்னவெல்லாம் செய்ய போகுதோ... யப்பா இப்பவே கண்ணா கட்டுதே
//புதையல் தேடும் ஆங்கிலத்திரைப்படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் தான் அதிகம்//
எனக்கும் இதே உணர்வுகள்தான்...
செல்வராகவனைப் பற்றி இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.
சரக்கு தீரும் வரையே இவர் ஆட்டமும். சதையை வைத்து கதை பண்ணத் தெரிந்த வியாபாரி தானே இவர்.
முதல் படத்தில் ஷெரின், பிறகு இப்போ மனைவியா இருக்குற சோனியா(பாவம் அந்தப் பொண்ணு), புதுப்பேட்டையில சினேகா என்ற பலானது, இதுல ரீமாவை என்ன பாடு படுத்தப் போறானோ..
காப்பி அடிச்சா ஒத்துக்கங்கப்பா.. எல்லாரும் அடிக்கிறாங்க நாங்க மட்டுமா செய்றோம்னு சொல்வது நல்ல படைப்பாளிக்கு அழகில்லை.
இவ்வளவோ எதிர்பார்ப்பை வச்சிருக்கிற உங்கள எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு.
ellaam sari...vettri FM ill intha songs podurathaa theriyellaiyee y??
மாலை நேரம் பாடலை கேட்கும் போது, காக்க காக்க படத்தில் வரும் ஒன்றா இரண்டா பாடல் நினைவுக்கு வருகிறது.
நீங்க சொன்னா சரிதான்...
என்னைத் தெரியுமா????????
கொஞ்சம் வந்து பாருங்களேன்...
அதோட மட்டும் நின்று விடாமல்
இந்த செய்திகள எத்தி வையுங்கோ..
நானும் பார்த்தேன்.விழா சகிக்க முடியவில்லை.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் ஆகாது என நம்புவோம்.
எங்கே சிங்கப்பூரைக் காணேல்லை?
//Anonymous said...
எங்கே சிங்கப்பூரைக் காணேல்லை?//
வர வேண்டிய நேரத்தில் வரும் என்று நம்பலாம்..
Vist and submit your Blog Anna -
http://starblogwriter.blogspot.com/
இன்று ஒரு இடுகையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். அது இலங்கை கிரிக்கட் தொடர்பாக இருக்கலாம்.
Post a Comment