June 12, 2009

யாகூவை (Yahoo) முந்திய பிங் (Bing)

அண்மையில் மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட தேடுபொறியான பிங்கின் (www.bing.com) அசுரவளர்ச்சியால் ஏனைய தளங்கள் எல்லாம் அடிபட்டுப் போகின்றன.
பிங் பற்றி நம்ம வலைப்பதிவர்கள் பல பேரும் பலவிதமாக எழுதி இருப்பதால் அதுபற்றி நான் எதுவும் விபரிக்கத் தேவையில்லை தானே...

இப்போது பிங்- Bing யாகூவையும் முந்தி இருக்கிறது.. அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும்
உலகளாவிய ரீதியில் தேடுதல் பொறிகளின் பாவனையில் இன்னமும் கூகிளை யாரும் நெருங்க முடியாவிட்டாலும், போகிறபோக்கில் பிங் கூகிளுக்கும் சவால் கொடுக்கும் போலவே தெரிகிறது.

Statcounter நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தேடுபவர்களின் சதவீத அடிப்படையில் (அமெரிக்காவில்)
யாகூ தேடல் பொறி 10.22%
பிங் 16.28%
கூகிள் 71.47%

ஜூன் நான்காம் திகதியளவில் உலகளவிலும் பிங் யாகூவை முந்தியுள்ளது.
யாகூ 5.13 %
பிங் 5.62 %
கூகிள் 87.62 %



எனினும் பிங் பக்கம் சாய்ந்த இந்த எண்ணிக்கை அனைத்தும் கூகிளில் இருந்தே சென்றவர்களே என்று கருதப்படுகிறது.. (எப்பிடியெல்லாம் தாவிறாங்கப்பா.. அரசியல்லயும்,இணையத்திலையும் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார் நம்ம கஞ்சிபாய்.. எனக்கும் பிங் பயன்படுத்த இலகுவாகவும்,அழகாகவும் இருந்தாலும் இன்னமும் கூகிள் கட்சி தான்)


இதேவேளை அலேக்சாவில் (www.alexa.com) நான் தேடிப்பார்த்தவேளை,

கூகிள் இன்னமும் முதலாம் ஸ்தானத்திலும், பிங் 189ஆவது ஸ்தானத்திலும், யாகூ இரண்டாமிடத்திலும் இருக்கின்றன..


ஆனால் கூகிள்,யாகூ இரண்டினதும் பாவனையாளர்களை பிங் கொஞ்சம் கொஞ்சமாவது தன வசப்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்...

அது சரி என்னுடைய வலைத்தளம் (உங்கள் அபிமான வலைத்தளம் என்று சொன்னால் கொஞ்சம் ஓவராயிருக்கும்) அலேக்சாவில் எத்தனையாவது இடம் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள்...
நாமெல்லாம் கூகிளுக்கு சவால் விடக்கூகூடிய அளவுக்கு இன்னும் வளரலேங்கோ... 218982

ஆனால் இலங்கையில் என் தளம் பிரபலமான தளங்களில் 4175ஆவதாக இருக்கிறது.

அப்பாடா ஒரு மாதிரியாக தொழிநுட்பப் பதிவு (மாதிரி) ஒன்று போட்டிட்டேன்..

நானும் இப்போ ஒரு தொழிநுட்பப் பதிவர் தான்.. (வடிவேலு பாணியில்)

தமிழ்நெஞ்சம்,சுபாங்கன், ஹனிதமிழ், கார்த்திக், க்ரிகொன்ஸ் இன்னும் பெயர் குறிப்பிடாதோர் எல்லாம் பார்த்துக்கோங்க..


15 comments:

மயாதி said...

//ஆனால் இலங்கையில் என் தளம் பிரபலமான தளங்களில் 4175ஆவதாக இருக்கிறது.//

ஆச்சரியமாக இருக்கிறது நம் நாட்டில் (எந்த நாடு என்று வம்பில மாட்டி விடாதீங்க)இவ்வளவு தளங்கள் உள்ளதா?
இலங்கையில் முன்னணியில் உள்ள தளங்களின் பெயரை கொஞ்சம் தர முடியுமா அண்ணா?

Tech Shankar said...

s u p e r Dude

Anonymous said...

என்ன லோஷன் உண்மையா இது??
http://eksaar.blogspot.com/2009/06/shopping.html

Suresh said...

ரொம்ப அருமையான தகவல் ;)

Subankan said...

//நானும் இப்போ ஒரு தொழிநுட்பப் பதிவர் தான்.. //

ஒத்துக்கிறேன் ( அதே வடிவேலு பாணியில்.. )

:-)

துஷா said...

"ஆனால் இலங்கையில் என் தளம் பிரபலமான தளங்களில் 4175ஆவதாக இருக்கிறது"

நிச்சயமாகவே ஆச்சரியமாக இருக்கு அண்ணா

"என்னுடைய வலைத்தளம் (உங்கள் அபிமான வலைத்தளம் "

உண்மை அண்ணா

மாணவன் said...

வாழ்த்துக்கள் அண்ணா

கடைக்குட்டி said...

ஜூப்பரப்பு :-)

Karthik said...

//நானும் இப்போ ஒரு தொழிநுட்பப் பதிவர் தான்.. //

நானும் ஒத்துக்கிறேன் ( அதே வடிவேலு பாணியில்.. )

Theepachelvan said...
This comment has been removed by the author.
TamilhackX said...

முதல் முதலாய் தொழில்நுட்ப பதிவு எழுதியிருக்கிறீங்கள்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்...

Sinthu said...

"ஆனால் இலங்கையில் என் தளம் பிரபலமான தளங்களில் 4175ஆவதாக இருக்கிறது.


அப்பாடா ஒரு மாதிரியாக தொழிநுட்பப் பதிவு (மாதிரி) ஒன்று போட்டிட்டேன்..


நானும் இப்போ ஒரு தொழிநுட்பப் பதிவர் தான்.. (வடிவேலு பாணியில்)"
ஒத்துக்கிறோம் அண்ணா,,,,
இவ்வளவு சொல்றீங்க, நம்பமாட்டமா?

Anonymous said...

//முதல் முதலாய் தொழில்நுட்ப பதிவு எழுதியிருக்கிறீங்கள்.
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்...//

அதே அதே.

Cloud computing எனக்கு புரியவே மாட்டேங்குது. கொஞ்ஞம் விளக்கினால் தெரிந்துகொள்வேன்.

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Anonymous said...

Terrific work! This is the type of information that should be shared around the web. Shame on the search engines for not positioning this post higher!

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner