
IPL இன் பாதிக்கட்டம் தாண்டியாகிவிட்டது. இன்னமும் பதினான்கு முதல் சுற்றுப் போட்டிகளே எஞ்சி இருக்கின்றன..
எனினும் இம்முறை கடந்தமுறை போலன்றி அரையிறுதிக்கான அணிகளை இலகுவில் ஊகிக்க முடியாமலுள்ளது.
கடைசி இடத்திலுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தவிர ஏனைய ஏழு அணிகளுமே அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
புள்ளிகளின் பட்டியலில் எந்தவொரு அணியுமே முதலாமிடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாததன் மூலம் எல்லா அணிகளுக்கிடையில் இருக்கும் நெருக்கமான போட்டியைப் பார்த்தே புரிந்துகொள்ள முடியும்.இப்போதைக்கு கையில் இன்னமும் ஐந்து போட்டிகளை வைத்துள்ள டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலாம் இடத்தை வசதியாக்கி வைத்துள்ளது தெரிகிறது.
எனினும் எனது IPL பற்றிய முன்னைய பதிவுகளில் சொன்னது போல டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் பலமானவையாகவே தென்படுகின்றன.
இவற்றோடு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் போராடக்கூடிய, அரையிறுதி செல்லக்கூடிய அணிகளாக தென்பட்டாலும் வோர்னின் மந்திரத்தால் ராஜஸ்தானும், மும்பாய், பெங்களுர் போன்றவையும் கடைசி நேரப் போராட்டங்களின் மூலம் அரையிறுதியினுள் நுழைந்தாலும் ஆச்சரியமில்லை.
...............................................................................................
கடந்த வருட IPL போலவே இம்முறையும் பல புதிய, இளம் வீரர்களை IPL வெளிக்கொண்டுவந்துள்ளது.
டெக்கானின் சுமன், சென்னையின் ஜகாதி, ராஜஸ்தானின் கம்ரான்கான் மற்றும் அமித்சிங் (இருவருமே சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியில் சிக்கியிருக்கிறார்கள்.) மற்றும் நாமன் ஓஜா, மும்பாயின் அபிஷேக் நாயர் என்று எதிர்கால இந்திய நட்சத்திரங்களையும், வெளியுலகுக்குத் தெரியாமலிருந்த அவுஸ்திரேலியாவின் நன்னஸ், தென்னாபிரிக்காவின் யூசுப் அப்துல்லா, டூ பிரீஸ், மோர்ன் வான்விக், வான்டேர் மேர்வ் போன்றோரை ஹீரோக்களாகவும் ஆக்கியிருக்கிறது.
அதே போல பல முன்னைய ஹீரோக்களை டப்பாவாக்கி ஒதுக்கியும் தள்ளி இருக்கிறது..
லட்சக் கணக்கான விலை கொடுத்து வாங்கப்பட்ட கெவின் பீட்டர்சன்,அன்றூ பிளின்டோப் தொடக்கம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மக்கலம் (ஏண்டா கொல்கத்தாவின் தலைமைப் பதவியை ஏற்றோம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருப்பார் மனுஷர்),ஜெசி ரைடர் (இவர் இப்போது மது போதை கலாட்டா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்), இந்தியாவின் லக்ஸ்மன் என்று சோபிக்காமல் போன நட்சத்திரங்களும் பலர்..
ஒரு சில போட்டிகளில் மட்டும் சிறப்பாக செய்த பலரை நான் இதில் சேர்க்கவில்லை..
கடைசியாக இடம்பெற்ற போட்டியில் சமிந்த வாசை அணியில் டெக்கான் அணி சேர்க்கும் வரை வாஸ், இன்று வரை க்லென் மக்க்ரா, கொல்கத்தா அணிக்காக பெரும் விலையில் வாங்கப்பட்ட பங்களாதேசின் மொர்தாசா, இலங்கையின் சகலதுறை வீரர் மஹ்ரோப், சென்னை அணிக்காக வாங்கப்பட்ட மகாயா ந்டினி போன்றோர் இன்னமும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் வெட்டியாக இருக்கிறார்கள்..
ஒரு அணியில் நான்கு வெளிநாட்டவர் விளையாடலாம் என்ற விதியே இவர்களுக்கு விதியாக விளையாடி இருக்கிறது..
எனினும் வாஸ், மக்க்ரா போன்றோரை எல்லாம் விட்டு விட்டு பெயர் அறியாத வீரர்களை போட்டு விளையாடுவது எல்லாம் ரொம்பவே ஓவராக இல்லை?
நேற்று முன்தினம் டெக்கானுக்காக வாசின் சகலதுறைத் திறமை நிச்சயமாக டெக்கான் அணியைத் தெரிவு செய்தவர்களுக்கு முகத்தில் விட்ட அறையாக இருக்கும்.
இந்த முறை பலபெரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய இருவர் என்று நான் எண்ணுவது சென்னையின் மத்தியு ஹெய்டனும், மும்பையின் லசித் மாலிங்கவும் தான்..
ஓய்வு பெற்ற சிங்கமும், காயத்திலிருந்து மீண்ட இலங்கையின் இளம் சிங்கமும் எதிரணிகளை அச்சுறுத்திய அளவு வேறு யாரும் பயமுறுத்தவில்லை..
அடுத்தபடியாக சுரேஷ் ரைனா, R.P.சிங், கடந்த முறையப் போலவே இம்முறையும் யூசுப் பதான், துடுப்பாட்டத்தில் அசத்துவார் என்று பார்த்தால் பந்து வீச்சில் கலக்கி வரும் ரோஹித் ஷர்மா என்று நட்சத்திரங்களின் வரிசை நீளம் தான்.
இருஅப்து ஓவர்கள் போட்டி என்ற காரணத்தால் ஒரு இரண்டு ஓவர்களிலேயே போட்டியின் முடிவைத் தலை கீழாக்கக் கூடிய சுவாரஸ்யம் இந்த Twenty-20 போட்டிகளுக்கு உண்டு.
இதனால் தான் sudden death சுவாரஸ்யம் இந்த Twenty 20 போட்டிகளுக்கு இருக்கிறது.. ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு பந்திலும் கூர்ந்த கவனத்தை அணித் தலைவரும், வீரரும் செலுத்தாவிட்டால் வெற்றிகள் கை நழுவி விடும். இறுதிவரை கவனம் சிதறாமல் இருப்பதே T 20 வெற்றிக்கான தாரக மந்திரம்.
-------------------------------------------
கொல்கத்தாவின் நேற்றைய தோல்வி அவர்களது அரையிறுதி ஆசைகளுக்குப் பூரண சமாதி கட்டிவிட்டது.
அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டமும், தீர்மானமற்ற திட்டங்களும், அணித்தெரிவில் விட்ட கோட்டைகள், இந்திய வீரர்களை உதாசீனப்படுத்தியது என்று பல்வேறு அதிகப்பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் மூலம் நைட் ரைடர்ஸ் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டது.

டிராவிட் கடந்த வருடம் பெற்றுத் தராத பெறுபேறுகளை 1.5 மில்லியன் டொலர் மனிதர் கெவின் பீட்டர்சன் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து, இந்தியாவின் எளிமையின் சின்னம் கும்ப்ளேயின் மூலம் ஒன்றுபட்டு, உத்வேக நடை போடுகிறது பெங்களுர் ரோயல் சலென்ஜர்ஸ்.

ஆனால் நேற்று ரோஸ்டெய்லர் போல, முன்பொருநாள் கலிஸ் போல கும்ப்ளேக்கு இன்னொருவர் துணைவராமல் பெங்களுர் அரையிறுதி நுழைவது சிரமமே.

நேற்றைய இரவு தோல்வியையடுத்து பஞ்சாப் அரசர்களுக்கு இனிவரும் மூன்று போட்டிகளையுமே வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். நட்சத்திரங்கள் பல குவிந்திருந்தும், வெற்றி பெறும்போதெல்லாம் ப்ரீத்தி சிந்தாவின் கட்டிப்பிடி வைத்தியமிருந்தும் வெற்றிகள் கை கூடி வராமல் போய்விடுகிறது.
Twenty – 20 போட்களுக்கு முக்கியமான வேகமும், தொடர்ச்சியான வெற்றிகளும் யுவராஜின் பஞ்சாபுக்கு கூடிவரவில்லை. மகேல, யுவராஜ், யூசுப் அப்துல்லாவின் தனிப்பட்ட ஒரு சில பளீர்கள் மட்டும் போதாது.

இனிக் காத்திருக்கும் மூன்று போட்டிகளுமே கடினமானவை. டெக்கான், டெல்லி, சென்னை இம் மூன்றுமே பஞ்சாபுக்கு தண்ணி காட்டக்கூடியவையே.
மும்பாய் - ஒரு புரியாத புதிர். சச்சின், சனத், ஹர்பஜன், சாகிர்கான், டுமினி, பிராவோ, மாலிங்க என்று வரிசைக்கட்டி பிரபலங்கள் பல இருந்தும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறியே கிடைக்கின்றன. முழுமையான ஆளுமையை செலுத்த முடியாமலிருக்கும் ஒரு அணி.Finishing touches தான் இவர்களிடம் உள்ள பெரிய பிரச்சினை.
.jpg)
சச்சின் எவ்வளவுக்கெவ்வளவு தலை சிறந்த துடுப்பாட்ட வீரரோ அவ்வளவுக்கவ்வளவு மோசமான ஒரு அணித்தலைவர். அவரது தலைமைத்துவ பலவீனங்களும் முடிவெடுக்கும் தயக்கங்களும் வெளிப்படுத்தப்படும் களமாக இம்முறை IPL அமைந்துள்ளது.
வெற்றி பெற்ற போட்டிகளில் சச்சின் செய்த நகர்வுகளின் திறமைக்கும், தோல்வியுற்ற போட்டிகளில் சச்சினின் சறுக்கிய முடிவுகளுக்குமிடையில் தான் எவ்வளவு பாரிய வித்தியாசம்?
எனினும் நட்சத்திரங்கள் பலரும் (விட்டு விட்டாவது) பிரகாசிப்பதால் மும்பாயின் முன்னேற்றம் அரையிறுதி வரையாவது இருக்கும் என நம்பலாம்.
ஷேன் வோர்னின் மந்திரம் மட்டுமே இம்முறையும் மாங்காய் பறிக்க உதவிடாது போலுள்ளது ராஜஸ்தானுக்கு. யூசுப் பதான் மட்டுமே நின்று பெற்றுக் கொடுத்த வெற்றிகளை விட முக்கியமான போட்டிகளில் சறுக்கிவிட்டு – வோர்னின் மந்திரம் இனி ஏதாவது புதிதாக செய்யுமா என்று பார்த்திருக்கிறது ராஜஸ்தான் அணி.

வோர்னின் புதிய கண்டுபிடிப்புக்கள் அமித்சிங், கம்ரான் கான் இருவரது பந்துவீச்சுப் பாணிகளும் சர்ச்சைக்குள்ளான பிறகு – வெளிநாட்டு நட்சத்திரங்களின் பிரகாசிப்பும் இன்றி அரையிறுதிக் களவுகள் அந்தரத்திலேயே இருக்கின்றன.

அதுவும் தலைவர் வோர்னின் தசைப்பிடிப்பினால் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலுமே வோர்ன் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுவது ராஜஸ்தானுக்கு மரண அடி!
----------------------
பதிவு மிகவும் நீண்டு கொண்டே போவதால் இந்த அலசலின் இரண்டாம் பகுதியை இன்று மாலை தவறாமல் என் தளத்துக்கு வந்து வாசிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்...
பி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்.. ஹீ ஹீ
படங்கள் - நன்றி cricinfo & பல தளங்கள்.. (தேடல் தான்)
18 comments:
லோஷன் அருமையான கலக்கல் பதிவு. பெரும்பாலான போட்டிகள் ஒரு ஓவரில் தடம் மாறுகின்றது. மும்பை இந்தியன் டெல்லியுடன் ஆடிய இறுதிப்போட்டியில் சச்சினின் தவ்றான முடிவான தானே பந்துவீச்சை கையாண்டதில் 18 ஓட்டங்களை கொடுத்து டெல்லியை இலகுவாக வெற்றிபெறச் செய்துவிட்டார். அதே போல் நேற்றைய போட்டியிலும் கொல்கத்தாவின் வெற்றியை ரோஸ் டைலர் அகர்காரின் ஒரு ஓவரில் பறித்தார்.
இப்படி ஒரு ஓவரில் தடம் மாறிய போட்டிகள் ஏராளம் ஆனாலும் சென்ற முறைபோல் இம்முறை யார் யார் செமிக்கு வரப்போகின்றார்கள் என்பதை ஊகிப்பது கஷ்டமே.
பல இலங்கையர்களால் மட்டுமே போற்றிப்புகழப்பட்ட அஜந்தா மெண்டிசின் சுழல் தென்னாபிரிக்காவில் சுழலவேயில்லை. காரணம் இதுவரை அவர் தென்னாபிரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற ஏனைய அணிகளுடன் விளையாடவேயில்லை. அதேபோல் முத்தையா முரளியும் பெருமளவு சோபிக்கவில்லை ஆனால் முரளியின் களத்தடுப்பும் பிடி எடுப்புகளும் சென்னைக்கு மிகவும் பலம்.
என் கணிப்பில் இம்முறை செமிக்கு தெரிவாகும் அணிகள் சென்னை, டெல்லி, டெக்கான், நாலாவதாக மும்மை அல்லது ராஜஸ்தான். இம்முறை பஞ்சாப்புக்கு ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. ஆனாலும் பஞ்சாப் பெயார் பிளே லிஸ்டில் முதலாவதாக நிற்பது அதிசயம். (இதனைப் பற்றியும் கொஞ்சம் அலசுங்கள்)
பின்னூட்டமே ஒரு பதிவளவிற்க்கு வந்தபடியால் இப்போதைக்கு ஜூட்
கம்ரன் கான், அமித் சிங் பந்துவீசு பாணியில் குறை கண்டுபிடித்த வல்லுனர்கள் கண்களுக்கு ஏன் மலிங்க வின் வீச்சில் எதுவும் குறை தென்படவில்லையோ??????????
எங்க ஊர் சின்ன பையன் கூட சொல்றான், என்ன மாமா இந்த ஆளு இப்படி மாங்க அடிக்கிறான், இவனை எப்படி பந்து வீச அனுமதிதென்று. இவர் உங்களுக்கு சிங்கமோ?
நன்றி வந்தி..
உங்களின் அநேக கருத்துக்கள் என்னுடன் உடன் படுகின்றன..
எனினும் அஜந்தா மென்டிஸ் விக்கெட்டுக்களை எடுக்கவில்லையே தவிர மோசமாக பந்து வீசவில்லையே.. அடுத்தது அவர் விளையாடிய போட்டிகளும் குறைவு.. நீங்கள் சொன்னது போல இன்னமும் அவர் ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிராக விளையாடாதது அனுபவக் குறைபாட்டை ஏற்படுத்தி இருந்தாலும், நேற்றைய பந்து வீச்சைப் பார்த்தால் இனி சிறப்பாக செய்வார் என்றே தோன்றுகிறது.
முரளியின் ஆட்டம் இனித் தான் ஆரம்பிக்கிறது என்று நம்புவோம்.
//என் கணிப்பில் இம்முறை செமிக்கு தெரிவாகும் அணிகள் சென்னை, டெல்லி, டெக்கான், நாலாவதாக மும்மை அல்லது ராஜஸ்தான்.//
ம்ம்ம்ம் உங்கள் ஊகமே என் ஊகமும்.. மும்பை அனேகமாக அந்த நான்காவது அணியாகலாம்.
//இம்முறை பஞ்சாப்புக்கு ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியம் அவ்வளவாக வேலை செய்யவில்லை. ஆனாலும் பஞ்சாப் பெயார் பிளே லிஸ்டில் முதலாவதாக நிற்பது அதிசயம். (இதனைப் பற்றியும் கொஞ்சம் அலசுங்கள்)//
அதன் புள்ளியிடப்படும் விபரம் எனக்குப் புரியவில்லை நண்பா.
//பின்னூட்டமே ஒரு பதிவளவிற்க்கு வந்தபடியால் இப்போதைக்கு ஜூட்//
:) மறுபடி மாலை வாங்க..
shafi said...
கம்ரன் கான், அமித் சிங் பந்துவீசு பாணியில் குறை கண்டுபிடித்த வல்லுனர்கள் கண்களுக்கு ஏன் மலிங்க வின் வீச்சில் எதுவும் குறை தென்படவில்லையோ??????????
எங்க ஊர் சின்ன பையன் கூட சொல்றான், என்ன மாமா இந்த ஆளு இப்படி மாங்க அடிக்கிறான், இவனை எப்படி பந்து வீச அனுமதிதென்று. இவர் உங்களுக்கு சிங்கமோ?//
நண்பரே, மாலிங்கவின் பந்து வீச்சுப் பாணியை ஸ்லிங் (SLING) என்று சொல்வார்கள்.. இந்தப் பந்து வீச்சு முறைக்கு கையைத் தோள் பட்டைக்கு மேலே சுழற்றத் தேவையில்லை. முன்னர் அவுஸ்திரேலியாவின் ஜெப் thomsan, தற்போது மிட்சல் ஜோன்சன், சோன் டைட், மேற்கிந்தியத் தீவுகளின் பிடல் எட்வட்ஸ் போன்ற பலரும் இந்தப் பாணியிலேயே பந்து வீசுகிறார்கள்.
சின்னப் பையனுக்கு சொல்லுங்கள்..
மாங்காய் அடிப்பது வேறு.. சர்வதேச கிரிக்கட் வேறு.. வல்லுனர்கள் குருடர்கள் அல்ல..
முரளி,போதா,அஜ்மல் போன்றோர் எல்லாம் மாட்டிக் கொள்ள மாலிங்க மட்டும் தப்பியதிலிருந்தே தெரியவில்லையா?
IPL உம் மண்ணாங்கட்டியும்..
பொதுவாக sportsல் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற sports பரப்பும், sports ஐத் திணிக்கிற, என் கிரிக்கட்டே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற blogpost களைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(blogpost மட்டுமல்ல radio வந்தாலும் கூடத்தான்)...
இங்க சனம் சாகுது.. நீர் IPL பார்க்கிறீர்..
வரவைப் பதிந்து கொண்டு விடை பெறுகின்றேன்.
ஆதிரை said...
வரவைப் பதிந்து கொண்டு விடை பெறுகின்றேன்.//
வருகையைக் குறித்தேன்.. :) நன்றி
LOSHAN said...
Anonymous said...
IPL உம் மண்ணாங்கட்டியும்..
பொதுவாக sportsல் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற sports பரப்பும், sports ஐத் திணிக்கிற, என் கிரிக்கட்டே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற blogpost களைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(blogpost மட்டுமல்ல radio வந்தாலும் கூடத்தான்)...//
பாவம் நீங்கள்..
எனக்கு சிரிப்பு மட்டுமே வருது.. எதையோ நினைத்து எங்கேயோ தேய்க்கிரீர் ..
//பொதுவாக sportsல் பெரிதாக ஈடுபாடில்லாத எனக்கு, இது போன்ற sports பரப்பும், sports ஐத் திணிக்கிற, என் கிரிக்கட்டே பெரிது, 7 பேருக்கு அனுப்பு என்று வருகிற blogpost களைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வரும்.(blogpost மட்டுமல்ல radio வந்தாலும் கூடத்தான்)...//
-யாரய்யா எதை,எங்கே உங்களுக்கு திணிச்சா?
சின்னப் புள்ளத் தனமா இல்ல?
Thank you for the post......
Its always nice to read it in tamil.
One player youmissed to mention was Duminy who has been the pillar in Mumbai's batting.
Thanks again...
B.Karthik said...
Thank you for the post......
Its always nice to read it in tamil.
One player youmissed to mention was Duminy who has been the pillar in Mumbai's batting.//
ஆமாம் கார்த்திக்.. மறந்தே பொய் விட்டேன்.. நன்றி நினைவு படுத்தியமைக்கு.
wat abt Badrinath ??
அருமையான கலக்கலான் அலசல்..
//பி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்//
என்ன பன்றது?? காத்திருக்க வேண்டியதுதான்..
ஹையோ ஹையோ !
நன்றாக அலசி இருக்கிறீர்கள் தல..
ஐ.பி.எல் மற்றும் கிரிக்கட் பற்றி நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்
அண்ணா, இந்த இடுகை இளமை விகடனில் உள்ளது. வாழ்த்துக்கள்!!!
உருப்புடாதது_அணிமா said...
wat abt Badrinath ??//
பத்ரி எனதும் விருப்புக்குரிய ஒருவர்.. அவர் பற்றி பகுதி 2இலே சொல்லி இருக்கிறேன்.
==================
உருப்புடாதது_அணிமா said...
அருமையான கலக்கலான் அலசல்..//
நன்றி
======================
உருப்புடாதது_அணிமா said...
//பி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்//
என்ன பன்றது?? காத்திருக்க வேண்டியதுதான்..//
காத்திருந்ததுக்கு பலன் கிடைச்சுதா? ;)
SUREஷ் said...
நன்றாக அலசி இருக்கிறீர்கள் தல..
ஐ.பி.எல் மற்றும் கிரிக்கட் பற்றி நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்//
நன்றி தோழா
பார்த்தேன்.. படித்தேன்.. ரசித்தேன்..
பின்னூட்டம் தான் போடல.. வருகிறேன்.. உங்களை தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்.. :)
=======================
Subankan said...
அண்ணா, இந்த இடுகை இளமை விகடனில் உள்ளது. வாழ்த்துக்கள்!!!//
நன்றி சுபாங்கன்.. உங்கள் பதிவும் அங்கே இருந்ததே.. வாழ்த்துக்கள்
Post a Comment