.jpg)
நாளைய தினம் இலங்கையில் முக்கியமான மாகாணசபைத் தேர்தல். தலைநகரும் உள்ளடங்கிய மேல்மாகாணசபைத் தேர்தலுக்கான அத்தனை பிரசாரங்களும் (இலத்திரன் ஊடகம் தவிர்ந்த) நிறைவடைந்திருக்கின்றன.
யுத்த களத்தின் வெற்றிகள், பலவீனமான எதிர்க்கட்சி, சிங்களவர் மத்தியில் ஒரு சக்ரவர்த்தி போல் விஸ்வரூபம் எடுத்துள்ள ஜனாதிபதியின் புகழ் என்று ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக் கூட்டமைப்புக்கு (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) வெற்றிலையில் வைத்து வெற்றி கொடுக்கப்படும் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.
(வெற்றிலை தான் ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம்)
இந்த நிலையில் தான் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையின் முன்னணி செல்வந்தர், தொழிலதிபர்களில் ஒருவரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவருமான திலங்க சுமதிபால.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு பெருமளவில் காரணமான சுமதிபால (பல்வேறு ஊழல்களிலும் இவர் பெயர் அடிபட்டபோதிலும்) தம்புள்ளவில் புதிய சர்வதேச மைதானம் அமைப்பதிலும், சர்வதேச அரங்கில் இலங்கை கிரிக்கெட் புகழ்பெறவும் காரணமாக இருந்தவர்.
முன்னைய ஆட்சியில் (சந்திரிகா) ஒதுக்கப்பட்டிருந்த சுமதிபாலவை, அவரது பரமவைரியான முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரும், பிரதி அமைச்சரும், அண்மையில் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு – அதிருப்தியடைந்திருப்பவருமான அர்ஜீன ரணதுங்கவைப் பின் தள்ள இந்த மாகாணசபைத் தேர்தல் மூலமாக அரசியலரங்குக்குக் கொண்டுவரப்பட்டார்.
பணத்தை அள்ளி வீசிப் பிரம்மாண்டபிரசாரத்தில் இறங்கியுள்ளார் சுமதிபால.
.jpg)
கொழும்பின் பிரதான வீதியில் (Galle road) சுமதி பத்திரிகை குழுமம் என்ற சுமதிபாலவுக்கு சொந்தமான நிறுவனத்தின் 4மாடிக் கட்டடம் ஒன்றில் தொங்க விடப்பட்டுள்ள பிரம்மாண்ட flex பதாதை/சுவரொட்டியே இது!
திலங்கவின் சாதனைகளில் முக்கியமானதெனக் காட்டப்படும் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானமே இந்த விளம்பரத்திலும் முன்னிறுத்த / பின்னிறுத்தப்பட்டுள்ளது.
.jpg)
விளம்பரத்தில் காணப்படும் சிங்கள வாசகங்கள் -
- வேலை செய்கிற திலங்க
- கொழும்பு மாவட்டத்திலிருந்து மேல் மாகாண சபைக்கு
- மேல்மாகாணத்தை புதிதாக்குவோம்..
படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..
விளம்பரங்களும், வீசப்படும் பணமும் திலங்கவின் வெற்றியை உறுதி செய்துவிடும்!
பணம் இருந்தால் நான்கு மாடிக்கென்ன 40 மாடிக்கும் விளம்பரப் பதாதை தொங்கவிடலாம்!
12 comments:
//படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..
உதவிக்கு ஒருத்தர்????? :D
லோஷன் சுமதி கோர்ட் பில்டிங் சுமதி குறூப்புக்கு சொந்தமானது அல்ல இன்னொரு இஸ்லாமியரின் கட்டடம் அது. அத்துடன் மக்கள் தோழன் துமிந்த சில்வா போல் சுமதிபாலா சில நாட்கள் முன்னர் தான் ஆளும்கட்சிக்கு எதிர்க்கட்சியிலிருந்து பல்டி அடித்தவர் என்ற உணமையையும் சொல்லியிருக்கலாம்.
மேல்மாகண சபையை வைத்துக்கொண்டு அவ்வளவு சம்பாதிக்கமுடியாதே இவரும் துமிந்த சில்வாவும் எப்படி போட்ட பணத்தை எடுப்பார்கள்.
மைதான படத்துடன் எவ்வளவு கோடி ஊழல் செய்தார் என போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.
டிஸ்கி பொலிஸ்காரரின் கண்களில் படாமல் இந்தப்படத்தை எடுத்த விமலுக்கு வாழ்த்துக்கள்
பதாதை மட்டுமா? அவரது பிரசாரத்திற்காக ஒன்பது பஸ்கள், பல வான்கள், கார்கள், வாத்தியங்கள் வாசித்தபடி சில கன்டர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற அரிய காட்சியும் எனக்குக் காணக் கிடைத்தது. அதுமட்டுமா? அவரது புகழ் கூறும் பத்திரிகை/சஞ்சிகை வடிவிலும் ஒன்று உலாவுகிறது.
மேல் மாகாணத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயம்.. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் கிடைக்குமா? திருகோணமலையில் கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க
கிரிக்கட் மைதானம் திலங்கவின் சொந்த பணத்தில் செய்தது மாதிரி தான் விளம்பரம் இருக்கிறது..
துமிந்தவின் விளம்பர அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை..
அண்ணா நல்ல விளம்பரம் கொடுத்திங்க போங்க!!!!
'பதாதை' அன்று.
'பதாகை' என்பதே சரியான சொல்.
திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ithanai pilaikaludan neengal news vasipathu poola than irukkuahtu ugnalin pathivum. ha ha. hutch advet in bambalapitiy is the biggest. neengal radiovil vasippathu poola ingayum thuppa vendam.
ஆதிரை said...
//படங்களை எடுத்தவர் நண்பர் விமல்..
உதவிக்கு ஒருத்தர்????? :D//
இப்படி விஷயங்களுக்கெல்லாம் உதவியிருப்பது உதை விழாமலிருக்க உதவும்
====================
வந்தியத்தேவன் said...
லோஷன் சுமதி கோர்ட் பில்டிங் சுமதி குறூப்புக்கு சொந்தமானது அல்ல இன்னொரு இஸ்லாமியரின் கட்டடம் அது. அத்துடன் மக்கள் தோழன் துமிந்த சில்வா போல் சுமதிபாலா சில நாட்கள் முன்னர் தான் ஆளும்கட்சிக்கு எதிர்க்கட்சியிலிருந்து பல்டி அடித்தவர் என்ற உணமையையும் சொல்லியிருக்கலாம். //
இல்லை வந்தி... அவர் UNPயுடன் வியாபார விஷயமாக நெருக்கமாக இருந்தாலும், சுமதிபாலவின் குடும்பமே பரம்பரையாக சுதந்திரக்கட்சியுடன் பழக்கமானது. நம்ம முன்னைய BOSSஇன் தம்பியின் கதையே வேறு.
//மேல்மாகண சபையை வைத்துக்கொண்டு அவ்வளவு சம்பாதிக்கமுடியாதே இவரும் துமிந்த சில்வாவும் எப்படி போட்ட பணத்தை எடுப்பார்கள். //
அதுக்கெல்லாம் வழியிருக்காம். Tender,Quota இன்னும் பலப்பல.. வாகன இறக்குமதிப் பத்திரத்திலேயே போட்டதுல பாதி எடுத்துடலாம். நாடாளுமன்றத்துக்கெல்லாம் மாகாண சபைதான் ஆரம்பம்.
//மைதான படத்துடன் எவ்வளவு கோடி ஊழல் செய்தார் என போட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.//
உண்மைதான்! ஆனாலும் ஊழல் செய்து உழைத்தாலும் கொஞ்சமாவது செய்தவர் இவர். பலபேர் எதுவும் செய்யாமல் ஊழல் மட்டுமே செய்த கதைகளும் இருக்கே!
//டிஸ்கி பொலிஸ்காரரின் கண்களில் படாமல் இந்தப்படத்தை எடுத்த விமலுக்கு வாழ்த்துக்கள்//
அது தான் நம்ம விமலோட தனித்திறமை.
Subankan said...
பதாதை மட்டுமா? அவரது பிரசாரத்திற்காக ஒன்பது பஸ்கள், பல வான்கள், கார்கள், வாத்தியங்கள் வாசித்தபடி சில கன்டர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற அரிய காட்சியும் எனக்குக் காணக் கிடைத்தது. அதுமட்டுமா? அவரது புகழ் கூறும் பத்திரிகை/சஞ்சிகை வடிவிலும் ஒன்று உலாவுகிறது.
ஆமா... அது ஒரு சுயவிபரக்கோவை & சுயசரிதை.
==================
என்ன கொடும சார் said...
மேல் மாகாணத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயம்.. ஆனால் கொழும்பு மாவட்டத்தில் கிடைக்குமா? திருகோணமலையில் கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க //
2004இல் கிடைத்ததே – இம்முறை அதைவிட அதிகமே! எதிர்க்கட்சி & தலைவர் உறுதி போதாது.
//கிரிக்கட் மைதானம் திலங்கவின் சொந்த பணத்தில் செய்தது மாதிரி தான் விளம்பரம் இருக்கிறது.. //
SLC காசு என்றால் அப்போதெல்லாம் திலங்கவின் காசு போலத்தானே!
//துமிந்தவின் விளம்பர அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை..//
முன்பு செய்ததையெல்லாம் இப்படித்தானே மறைக்க வேண்டும்!
அதெல்லாம் செய்து, எதையெல்லாமோ செய்து இன்று வெளியான விருப்பு வாக்குகளில் கொழும்பில் முதலாவதா வந்திட்ட்டாரே. திலங்க இரண்டாம் இடமாம்.
கலை - இராகலை said...
அண்ணா நல்ல விளம்பரம் கொடுத்திங்க போங்க!!!!//
தமிழில் நான் எவ்வளவு விளம்பரம் கொடுத்தும் இந்த வாக்குகள் திலங்கவுக்குப் போகதே!
சிக்கிமுக்கி said...
'பதாதை' அன்று.
'பதாகை' என்பதே சரியான சொல்.
திருத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.//
பதாகை, பதாதை இரண்டையுமே பல இடங்களில் வாசித்துள்ளேன். எது சரி என்பதில் இன்னமும் மயக்கம் உண்டு! சரி பார்த்து தவறெனில் திருத்துகிறேன். நன்றி சிக்கி முக்கி.
Post a Comment