
ஆச்சரியம் ஆனால் உண்மை. நம்மவர்களில் பலர் திருந்திவிட்டார்கள்.
வடக்கிலோ, கிழக்கிலோ, வன்னியிலோ என்ன அவலம் நடந்தாலும் - வெடி, வேட்டு, பட்டாசு, பலகாரம் என்று படோடபமாக, பளபளப்பாக பொங்கல், புதுவருஷம், தீபாவளி என்று கொண்டாடி வந்த கொழும்பிலுள்ள தமிழர் நேற்று ரொம்பவுமே அமைதி!
பட்டாசுச் சத்தம் கேட்கவில்லை எனலாம்.
புத்தாடை விற்பனைகளோ, பலகாரத்துக்கான பலசரக்கு விற்பனைகளோ வழமைபோல் பரபரப்பாக இருக்கவில்லை என்று ஏற்கனவே கடை உரிமையாளர்களான சில நண்பர்கள் சொல்லியிருந்தனர்.
கோவில் போவதென்றாலே கொஞ்சம் அலர்ஜியான நான் கோவில் போவதைத் தவிர்ப்பதற்காகவே பண்டிகை நாளில் கொஞ்சம் கூடுதல் நேரம் வேலை செய்வதுண்டு. எனினும் அம்மா, மனைவி சென்டிமென்டுக்காக கூட்டம் அதிகமில்லாத கோவிலொன்றுக்கு (பம்பலபிட்டி – வஜிர பிள்ளையார் – பழைய கதிரேசன் ), அதிக கூட்டம் இல்லாத நேரத்தில் கூட்டிப்போவதுண்டு.
நேற்றும் அப்படித்தான், எனினும் வழமையை விடக் கூட்டம் மிகமிகக் குறைவு. அதிலும் புத்தாடை அணிந்தோர் இன்னும் குறைவு. முகத்திலும் மகிழ்ச்சியோ. எதிர்பார்ப்போ இல்லை.
தற்செயலா இரண்டு பெரியவர்கள் (நடுத்தரவயதுகாரர்) பேசிய உரையாடல்:
"எப்படி புதுவருஷமெல்லாம்..."
"என்ன புதுவருஷம்.. ஒரு மண்ணுமில்லை.. இனியென்ன கொண்டாட இருக்கு"
"ஏன் காணும்... இனித்தான் A9 திறந்திடுவாங்களே.. பிசினஸ் களை கட்டும்"
"ஓமோம் நம்பிக்கொண்டிரும்...வவுனியாவிலை எங்கடை சனம் படுற பாட்டில இதையும் நம்பவேணுமே. நம்பிக்கொண்டிரும்.. வடக்கில வசந்தம் வரும்"
"அது சரி இன்னும் 2 நாளில் எல்லாம் சரியாமே.."
"உஷ்.. சத்தமாக கதைக்காதையும்... எத்தனை நாளைக்குத்தான் நாள் கணக்கு சொல்லப்போறாங்கள்"
.................................................................................
அது சரி கலைஞர் தான் தமிழகத்தில் தமிழுக்குத் தை முதல் திகதி நாள் பொங்கலும் புதுவருஷமும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் ( உண்மையிலேயே நடைமுறையிலிருக்கா) சித்திரைத் திங்கள் தொலைக்காட்சிகளில் களைகட்டுதே. மார்க்கெட்டிங் வியாபார நோக்கம் மட்டும் தானா? அல்லது இலங்கையில் போல தமிழகத்திலும் இன்னும் சித்திரையிலும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுகிறார்களா?
இல்லை நம்ம நண்பர் கஞ்சிபாய் சொல்வது போல "தமிழர் எமக்கு 3 புதுவருஷம்... ஜனவரி1, ஜனவரி14, ஏப்ரல்14" தான் சரியா?
இலங்கைப் பதிவர்கள் தான் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நேற்று தங்கள் பதிவுகளில் சொல்லி இருந்தார்கள் என்று பார்த்தால் தமிழகப் பதிவர்களும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பதிவுகள் போட்டிருக்கிறார்கள்..
என்னாச்சு? (கருணாநிதியும் அவர் தம் அபிமானிகளும் தமிழினத் துரோகிகள் என்று இவர்களை சொல்லிடுவாங்கலாம் என்று இன்னும் சில நண்பர்கள் ஜோக்கடிக்கிறாங்க.. என்ன தான் நடக்குது உண்மையில?
நண்பர்களே தெளிவு படுத்துங்க..
----------------
விருந்தினர் தொல்லையோ, வேலைத்தொல்லையோ இல்லாத காரணத்தினால் நேற்று முழுநாளும் வீட்டிலே தொலைக்காட்சியிலேயே பொழுதைத் தொலைக்கவேண்டிய புண்ணியம் கிடைத்தது.
பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று இதுவரை தவறிக்கொண்டு சென்ற 'அஞ்சாதே' பார்க்கக் கிடைத்தது.
ஆரம்பம் முதல் இறுதி வரை இதுதான் திரைக்கதை என்ற நேர்ப்போக்கிலிருந்து விலகாத தெளிவான ஓட்டம், விறுவிறுப்பான, வேகமான படம். கொஞசம் நீளமெனினும் தொய்வில்லாத திரைப்படம்.
விளம்பரங்களின் தொடர்ச்சியான தொல்லைகளோடு முழுசாப் பார்த்து முடிச்சதும் ஏதோ ஒரு திருப்தி!
ஆனால் பாருங்கள் திறமையான கதை சொல்லும் உத்தி தெரிந்து பிரபல நட்சத்திரங்கள் இல்லாமலே களமிறங்கிய மிஷ்கினுக்கும் இரண்டு குத்துப்பாடல்களும், கத்தாழைக் கண்ணழகி ஸ்நிகிதாவும் தேவைப்பட்டுள்ளார்கள்.
.............................................................
கிடைத்த நேரங்களில் Channel மாற்றியபோது ராமன் தேடிய சீதையும், மலைக்கோட்டையும் மற்ற channelகளில் போன வேறுசில நிகழ்ச்சிகளும் பார்த்தேன்.
சிலம்பாட்டம் போட்ட நம்ம நேத்ரா TV பக்கமே தலை வைக்கலை! ஒரு தடவைக்கு மேல தாங்காது.
என்னதான் மசாலா என்றாலும்...புதிய திறமைகளை முன்னிறுத்தி, தங்கள் Reality shows மூலமே பண்டிகை நாட்களை அலங்கரித்துவிடும் விஜய் TVக்கு ஒரு சபாஷ்.

நேற்று தற்செயலாக channel மாற்றிய போது பாடகர்கள் நடனமாடியும், நடனக்கலைஞர்கள் பாடியும் கொண்டிருந்த 'மாத்தியோசி' (நல்லா யோசிச்சிருக்காங்கப்பா ) விஜய் TVயில் பார்த்தேன்.
பிரேம் கோபால் என்றொருவர் (இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில் ஆடுபவர்) பாடிக்கொண்டிருந்தார்.
வரிகளைக் கூர்ந்து கவனித்தால் 'இளம்புயல்' என்ற வந்த சுவடே தெரியாத ஒரு படத்தின் பாடல்! இலங்கையர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டுப்படம். அந்தப்பாடலின் பல வரிகளில் ஈழம், தமிழ் ஈழம், அப்படி இப்படி பல சொற்கள் வருவதால் இலங்கையில் சுயதணிக்கை செய்யப்பட்ட பாடல்.
இவ்வளவு காலமும் இந்தியாவின் வேறு மாநிலத்தைச் சேர்ந்த தமிழரல்லாத ஒருவர் என எம்மிற் பலர் நினைத்திருந்த பிரேம் கோபால் இலங்கைத் தமிழ் இளைஞன்.
அந்தப்பாடல் மூலமாக ஈழத்தமிழர் படும் வேதனையை உலகுக்கு வெளிப்படுத்தவே முயன்றதாகச் சொன்ன பிரேம் கோபால் - 'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை உச்சரித்தபோது வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு!
31 comments:
//வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு
!!!!
'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை உச்சரித்தபோது வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு!
Engalukkum thaan....!!!!
எமக்கு 3 புதுவருஷம்... ஜனவரி1, ஜனவரி14, ஏப்ரல்14" தான் சரியா?
April 1st-ah vittuteengale Anna...:-)
Sanjay
ஆம். நானும் நேற்று எல்லோர் முகத்திலும் கவனித்தேன். எதையோ பறிகொடுத்தவர்கள் போல இருந்த்தார்கள். ஒருவர் முகத்தில் கூட அதிகளவு சந்தோஷத்தை காண முடியவில்லை.
பட்டாசுச் சத்தம் இல்லை சரி..
ஆனால் கடைகளும்(குறிப்பாக வெள்ளவத்தை NOLIMIT) கோயில்களும் மக்களால் நிரம்பி வழிந்ததே..
வழமையை விட கொஞ்சம் குறைவு தானே தவிர பெரிசா இல்லை..
அதுவும் வெளிநாட்டுப் பணவரவு கொஞ்சம் குறைந்ததாலாக இருக்கலாம்..
இணையப் பாவனையுள்ள மக்கள், அங்கே உறவுகள் இருக்கிற மக்கள் தவிர மற்றவர்கள் இப்படியெல்லாம் நடக்குது என்றளவில் ஓரளவு அறிந்திருக்கிறார்களே தவிர உணரக்கூடியளவில் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்..
வெற்றிச் செய்திகளை சொல்வதற்கு மட்டும் தானே எங்கள்(?) ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன..
புலம்பெயர்ந்தவர்கள் வீதிகளில் இறங்கவாவது செய்கிறார்கள்.. குழந்தைகளும் என்ன, ஏது என்று அறிந்து கொள்கிறார்கள்.. நாங்கள் எங்கள் வேலைகளைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. எங்கள் நிலை அப்பிடி...
லோஷன் வஜிராப் பிள்ளையாரில் பெரிதாக சனம் இருப்பதில்லை காரணம் பெரும்பாலான மக்கள் கோவிலின் விஸ்தீரணத்தையும் பகட்டையும் பார்த்துத்தான் செல்வார்கள் இன்னொரு சிறந்த உதாரணம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசனுக்குச் செல்பவர்கள் அடுத்த வேலியில் இருக்கும் மாணிக்கப் பிள்ளையாரைத் தரிசிப்பதில்லை. வஜிராப் பிள்ளையாரும் கும்பாவிஷேகம் நடைபெற்று பெரியகோவிலானதன் பின்னர் பலர் வருவார்கள். புதிய கதிரேசனுடன் ஒப்பிடும்போது வஜிராவில் அமைதி அதிகம்.
நேற்று பெரும்பாலான கோவில்களில் மக்கள் குறைவுதான்.
கேள்வியும் கேட்டுப் பதிலும் சொல்லிட்டீங்க பாஸ்.
அஞ்சாதேன்னு டைட்டில் வைச்சுட்டார். ஆனால் மார்க்கெட்டிங் தந்திரத்துக்காக ஸ்னிகிதா, குத்துப்பாட்டு.
இவை இல்லாவிட்டாலும் நான் படம் பார்த்திருப்பேன்.(அது வேற விசயம்)
முதல் கேள்வி : மார்க்கெட்டிங் வியாபார நோக்கம் மட்டும் தானா?
உங்கள் பதிவிலேயே பதில் :
//விளம்பரங்களின் தொடர்ச்சியான தொல்லைகளோடு முழுசாப் பார்த்து முடிச்சதும் ஏதோ ஒரு திருப்தி!
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. மன்னிக்கவும் நேற்று முழுவதும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எங்கள் இண்டர்நெட் சேவை விடுமுறை ர்டுத்துக்கொண்டனர்.
ஏன் சிம்பு எப்பவும் "பிரிச்சு மேஞ்சிடுவேன் , பிரிச்சு மேஞ்சிடுவேன்" என்று சொல்லி கொண்டே இருந்தார் ஆனாலும் கடைசி வரை பிரிச்சு மேயவயில்லையே? அஞ்சாதே படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் அதாவது நீளத்தை குறைத்து இருந்தால் ஒரு தரமான திரைப்படமாக இருந்து இருக்கும்.
அண்ணா முடிந்தால் "John Q" என்று ஒரு படம் இருக்கு அதை பார்த்து விட்டு "நெஞ்சிருக்கும் வரை" படம் பார்க்கவும். சில தமிழ் இயக்குனர்களின் தராதரம் புரியும். அதை போலவே "Man Of Fire" படம் பார்த்து விட்டு " ஆணை" படம் பார்க்கவும்.
என்ன கொடுமை அண்ணா இது!!!
//சாயினி- அதுவும் வெளிநாட்டுப் பணவரவு கொஞ்சம் குறைந்ததாலாக இருக்கலாம்.. //
வெளிநாடுகளில் மிக மோசமான பொருளாதார பிரச்சனை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் புலி ஆதரவாளர்களே.இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி.
//"தமிழர் எமக்கு 3 புதுவருஷம்... ஜனவரி1, ஜனவரி14, ஏப்ரல்14" தான் சரியா?//
நம்ம ஆளுங்களுக்குத்தான் எவ்வளவு தமிழ் உணர்வு இருக்குன்னு பாருங்க, இப்ப தெரியுதா ஏன் தமிழன் இன்னும் இலங்கையில சாகுறான்னு?
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் , யுத்தம் முடிந்தால் எப்படி எடுக்கிற என்ற கவலையில இருக்கினம்.. இங்க இருக்கிறவங்க எப்படி தன்ட வெளிநாடுகனவுகள் (வெளிநாட்டு கணவன் கனவுகள்) சாத்தியப்படும் எண்ட கவலையில இருக்கிறாங்க..
//எத்தனை நாளைக்குத்தான் நாள் கணக்கு சொல்லப்போறாங்கள்//
அவ்வளவு நாள் எடுக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்தும் சிலரின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..
வருந்த வேண்டிய விஷயம் இன்னும் ஒருவருக்கும் திராணியில்லை , எதனால் இந்த கதி என்று.. எனென்றால் உண்மை சுடும்.. அப்பாவியின் சாபம் நின்று கொல்லும்..
இனி என்ன செய்வது என்றாவது யோசிக்கலாம்.. சாகும் புலி பற்றி கவலைப்படுவதை விடுத்து.. புலி வென்றிருந்தாலும் இப்படி பட்ட ஒரு கட்டத்துக்கு தான் வந்திருப்பீர்கள்
நேற்று கலைஞர் சித்திரை திங்கள் முதல் நாளை வெகு விமரிசையாக
கொண்டாடினவர் , இனிமேலும் (விளம்பரங்கள் வரும் பட்சத்தில் ) ஒவ்வொரு மாத முதல் நாளையும் கொண்டாட திட்டமாம். கலைஞர் சந்தர்ப்பவாதி என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் உண்டா?
வவுனியாவில் ஒரு கோவிலுக்குச் சென்றேன்...
தமிழர் பெருமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தார்கள்.
நான் இப்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில் தான் காமினி மகா வித்தியாலயம் இருக்கிறது. கோவிலும் அருகில் தான்... எப்படி இவர்களால் முடிகிறது?
மோட்டார் வண்டியில் சவாரி செய்யும் இளைஞர் கூட்டம் வேறு...
கொழும்பில் வசிக்கும் எனக்கு இருந்த பாதிப்பு கூட இவர்களுக்கு இல்லையே?
//வழமையை விட கொஞ்சம் குறைவு தானே தவிர பெரிசா இல்லை..
அதுவும் வெளிநாட்டுப் பணவரவு கொஞ்சம் குறைந்ததாலாக இருக்கலாம்..//
Thats what my friend also said. Argh... I was arguing with him as he always think in weird angles.. So is tat true :-( He claimed that its only coz of money..
//வெளிநாடுகளில் மிக மோசமான பொருளாதார பிரச்சனை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் புலி ஆதரவாளர்களே.இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி.
//
Ada thu... Dont have guts to write you name... but came to talk here...
How the hell you know about them you moron. Why? do you look after them... Here after stop bullshitting as you know everything.
If they have money they would have funded to get their places long time back...
Go to blazes you moron...
//ஆச்சரியம் ஆனால் உண்மை. நம்மவர்களில் பலர் திருந்திவிட்டார்கள்.
பட்டாசுச் சத்தம் கேட்கவில்லை எனலாம்.
நிச்சயமாக!!! காரணம் அக்கறையா அல்லது பண நெருக்கடியா... உங்களைப் போன்று எனக்கும் புரியவில்லை.
//அது சரி கலைஞர் தான் தமிழகத்தில் தமிழுக்குத் தை முதல் திகதி நாள் பொங்கலும் புதுவருஷமும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் ( உண்மையிலேயே நடைமுறையிலிருக்கா) சித்திரைத் திங்கள் தொலைக்காட்சிகளில் களைகட்டுதே. மார்க்கெட்டிங் வியாபார நோக்கம் மட்டும் தானா? அல்லது இலங்கையில் போல தமிழகத்திலும் இன்னும் சித்திரையிலும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுகிறார்களா?
கலைஞர் தானே... எங்காவது தனது குடும்பத்துக்கு சொத்துச் சேர்க்கலாமென்றால் ஒவ்வொரு மாதமும் புது வருடம் கொண்டாடி சிறப்பு நிகழ்ச்சியும் தருவார்... :(
அந்தப்பாடல் மூலமாக ஈழத்தமிழர் படும் வேதனையை உலகுக்கு வெளிப்படுத்தவே முயன்றதாகச் சொன்ன பிரேம் கோபால் - 'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை உச்சரித்தபோது வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு!--//
லோஷன் அந்த காட்சியை நானும் ரசித்தேன்
//கலைஞர் தானே... எங்காவது தனது குடும்பத்துக்கு சொத்துச் சேர்க்கலாமென்றால் ஒவ்வொரு மாதமும் புது வருடம் கொண்டாடி சிறப்பு நிகழ்ச்சியும் தருவார்.
உங்களுக்கு கலைஞரை குறை காணா விட்டால், நித்திரை வராதே... அம்மா தங்கத் தட்டில் வைத்துத் தருவா. காத்திருங்கள்.
உங்களின்ர நாட்டில நடக்கிறது கண்ணுக்குத் தெரியல... இஞ்ச வருகினம் குறை பிடிக்க...
தமிழன் said :
//உங்களுக்கு கலைஞரை குறை காணா விட்டால், நித்திரை வராதே...
எங்களுக்காக கவிதை எழுதாவிட்டால் அவருக்கு தூக்கம் வராதே... நாங்கள் சாகும் போது நிம்மதியாக சாகவாவது விடுங்களேன். அரசியல் நாடகங்களை எங்களின் சுடுகாட்டில் வந்து அரங்கேற்றுகின்றார்களே. கலைஞரை குறை காண வேண்டுமென்ற ஒரேயொரு காரணத்துக்காக நான் இதைக் கூறவில்லை. என் கருத்தை copy & paste செய்யும் போது நீங்கள் தவறுதலாகவோ அல்லது வேணுமென்றோ விட்டுவிட்ட கடைசிப்பகுதி என் உள்ளக்கிடக்கையிலிருந்து வந்தது.
//அம்மா தங்கத் தட்டில் வைத்துத் தருவா. காத்திருங்கள்.
http://loshan-loshan.blogspot.com/2009/04/blog-post_13.html
இதையும் ஒருமுறை பார்வையிடுங்கள்.
//உங்களின்ர நாட்டில நடக்கிறது கண்ணுக்குத் தெரியல...
இந்தியா இன்னமும் ஜனநாயக நாடென நான் நம்பியது தப்பா...?
// இஞ்ச வருகினம் குறை பிடிக்க...
எங்க..? நிச்சயமாக நீங்கள் தமிழகத்திலிருந்து தமிழனாக வந்திருக்க மாட்டீர்கள். அதை ஏற்கும் மனம் என்னிடமில்லை.
hi
visit www.cinethuli.com to see this programe
3 புத்தாண்டுகள் இருந்தென்ன..
மனதில் நிம்மதி இல்லையே
நிரூஜா said...
//வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு
!!!!//
:( :)
====================
Anonymous said...
'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை உச்சரித்தபோது வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு!
Engalukkum thaan....!!!!//
எல்லாருக்கும் தானே..
//எமக்கு 3 புதுவருஷம்... ஜனவரி1, ஜனவரி14, ஏப்ரல்14" தான் சரியா?
April 1st-ah vittuteengale Anna...:-)
Sanjay//
என்ன செய்ய சஞ்சய் எல்லா நாளும் தானே எங்களுக்கு April 1st
கார்த்திக் said...
ஆம். நானும் நேற்று எல்லோர் முகத்திலும் கவனித்தேன். எதையோ பறிகொடுத்தவர்கள் போல இருந்த்தார்கள். ஒருவர் முகத்தில் கூட அதிகளவு சந்தோஷத்தை காண முடியவில்லை.//
எதையோ அல்ல சகோதரா எல்லாத்தையும்..
=====================
சாயினி said...
பட்டாசுச் சத்தம் இல்லை சரி..
ஆனால் கடைகளும்(குறிப்பாக வெள்ளவத்தை NOLIMIT) கோயில்களும் மக்களால் நிரம்பி வழிந்ததே.. //
வழமையான கூட்டம் இருக்கவில்லையே..
//வழமையை விட கொஞ்சம் குறைவு தானே தவிர பெரிசா இல்லை..
அதுவும் வெளிநாட்டுப் பணவரவு கொஞ்சம் குறைந்ததாலாக இருக்கலாம்.. //
ம்ம்ம்ம்
இணையப் பாவனையுள்ள மக்கள், அங்கே உறவுகள் இருக்கிற மக்கள் தவிர மற்றவர்கள் இப்படியெல்லாம் நடக்குது என்றளவில் ஓரளவு அறிந்திருக்கிறார்களே தவிர உணரக்கூடியளவில் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்..//
உணர்ந்தும் பயனில்லையே.. கவலைப்படுவதைத் தவிர..
//வெற்றிச் செய்திகளை சொல்வதற்கு மட்டும் தானே எங்கள்(?) ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன..//
நல்ல காலம் நீங்கள் 'வெற்றி செய்திகள்' என்று சொல்லவில்லை.. செய்திகள் எல்லாமே இப்போ ஒரு பக்க பிரசாரம் மாதிரி ஆகிவிட்டது
வந்தியத்தேவன் said...
லோஷன் வஜிராப் பிள்ளையாரில் பெரிதாக சனம் இருப்பதில்லை காரணம் பெரும்பாலான மக்கள் கோவிலின் விஸ்தீரணத்தையும் பகட்டையும் பார்த்துத்தான் செல்வார்கள் இன்னொரு சிறந்த உதாரணம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசனுக்குச் செல்பவர்கள் அடுத்த வேலியில் இருக்கும் மாணிக்கப் பிள்ளையாரைத் தரிசிப்பதில்லை. வஜிராப் பிள்ளையாரும் கும்பாவிஷேகம் நடைபெற்று பெரியகோவிலானதன் பின்னர் பலர் வருவார்கள். புதிய கதிரேசனுடன் ஒப்பிடும்போது வஜிராவில் அமைதி அதிகம். //
உண்மை தான் வந்தி.. கோவில் போவதில் எனக்கு பெரிதா ஆர்வம் இல்லா விட்டாலும் வஜிர பிள்ளையார் கோவில் போக மறுப்பு சொல்வதில்லை.. அந்த அமைதியும், மரங்கள் சூழ்ந்த இயற்கை சூழலும் மிகவும் பிடிக்கும்.. எனினும் புதிய பெரிய கோபுரம் அமைத்த பிறகு இந்தக் கோயிலும் பரபரப்பாகி எனக்கு பிடிக்காமல் போய் விடுமோ தெரியாது.
==================
தமிழ்நெஞ்சம் said...
கேள்வியும் கேட்டுப் பதிலும் சொல்லிட்டீங்க பாஸ்.
அஞ்சாதேன்னு டைட்டில் வைச்சுட்டார். ஆனால் மார்க்கெட்டிங் தந்திரத்துக்காக ஸ்னிகிதா, குத்துப்பாட்டு.
இவை இல்லாவிட்டாலும் நான் படம் பார்த்திருப்பேன்.(அது வேற விசயம்)//
நானும் தான்.. ஆனால் அவையும் நல்லா தான் இருந்தன.. ;)
முதல் கேள்வி : மார்க்கெட்டிங் வியாபார நோக்கம் மட்டும் தானா?
உங்கள் பதிவிலேயே பதில் :
//விளம்பரங்களின் தொடர்ச்சியான தொல்லைகளோடு முழுசாப் பார்த்து முடிச்சதும் ஏதோ ஒரு திருப்தி!//
:)
அக்னி பார்வை said...
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. மன்னிக்கவும் நேற்று முழுவதும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எங்கள் இண்டர்நெட் சேவை விடுமுறை ர்டுத்துக்கொண்டனர்.//
நன்றி நண்பரே.. பரவாயில்லை இருக்கும் மனநிலையில் வாழ்த்து சொல்லாவிட்டாலும் குறை விளங்க மாட்டேன்.
====================
B.Karthik said...
ஏன் சிம்பு எப்பவும் "பிரிச்சு மேஞ்சிடுவேன் , பிரிச்சு மேஞ்சிடுவேன்" என்று சொல்லி கொண்டே இருந்தார் ஆனாலும் கடைசி வரை பிரிச்சு மேயவயில்லையே? //
அதையெல்லாம் படத்துல காட்ட முடியுமா? ;)
//அஞ்சாதே படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் அதாவது நீளத்தை குறைத்து இருந்தால் ஒரு தரமான திரைப்படமாக இருந்து இருக்கும்.//
இல்லை தம்பி.. அதில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமே இல்லையே.. எங்கே வெட்டுவது?
//அண்ணா முடிந்தால் "John Q" என்று ஒரு படம் இருக்கு அதை பார்த்து விட்டு "நெஞ்சிருக்கும் வரை" படம் பார்க்கவும். சில தமிழ் இயக்குனர்களின் தராதரம் புரியும். அதை போலவே "Man Of Fire" படம் பார்த்து விட்டு " ஆணை" படம் பார்க்கவும். //
எல்லாமே பார்த்தேன்.. ஆங்கிலப் படம் பார்க்காதொருக்கு தமிழில் கொடுத்திருக்கிறார்கள்.. நன்றி சொல்லுவோம்.
Anonymous said...
//சாயினி- அதுவும் வெளிநாட்டுப் பணவரவு கொஞ்சம் குறைந்ததாலாக இருக்கலாம்.. //
வெளிநாடுகளில் மிக மோசமான பொருளாதார பிரச்சனை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் புலி ஆதரவாளர்களே.இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி.//
உங்க கண்டுபிடிப்பா? ஆராய்ச்சி செய்த அறிவாளி நீங்கள் யார் என்று சொல்லி இருக்கலாமே..
===========
சூடு பட்ட பூனை said...
//"தமிழர் எமக்கு 3 புதுவருஷம்... ஜனவரி1, ஜனவரி14, ஏப்ரல்14" தான் சரியா?//
நம்ம ஆளுங்களுக்குத்தான் எவ்வளவு தமிழ் உணர்வு இருக்குன்னு பாருங்க, இப்ப தெரியுதா ஏன் தமிழன் இன்னும் இலங்கையில சாகுறான்னு?//
அது சரி தான்.. ஆளாளுக்கு மாத்தி சாந்தி சிரிக்க வைக்குரானுங்க,.. சேர,சோழ,பாண்டியர் காலத்துல இருந்து இப்பிடி தானே.. திருத்த முடியாது
பி.கு- உங்க பேர் நல்லா இருக்கு
================
Nellaitamil.com said...
உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...
தளமுகவரி...
nellaitamil//
நன்றி நண்பரே.. வருகிறேன்.. தளம் பார்த்தேன்.. நல்ல முன்னேற்றம்.. அழகான ஒழுங்கமைப்பு.
Anonymous said...
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் , யுத்தம் முடிந்தால் எப்படி எடுக்கிற என்ற கவலையில இருக்கினம்.. இங்க இருக்கிறவங்க எப்படி தன்ட வெளிநாடுகனவுகள் (வெளிநாட்டு கணவன் கனவுகள்) சாத்தியப்படும் எண்ட கவலையில இருக்கிறாங்க.. //
அவரவருக்கு அவர் பற்றிய கவலை இருக்கும் தானே.. வந்தாலும் இந்த ஆட்சியில் தானே வாழப் போகிறோம் என்று கவலைப் படுவதில் நியாயம் இல்லையா?
//எத்தனை நாளைக்குத்தான் நாள் கணக்கு சொல்லப்போறாங்கள்//
அவ்வளவு நாள் எடுக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்தும் சிலரின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.. //
:(
===================
Sutha said...
நேற்று கலைஞர் சித்திரை திங்கள் முதல் நாளை வெகு விமரிசையாக
கொண்டாடினவர் , இனிமேலும் (விளம்பரங்கள் வரும் பட்சத்தில் ) ஒவ்வொரு மாத முதல் நாளையும் கொண்டாட திட்டமாம். கலைஞர் சந்தர்ப்பவாதி என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் உண்டா?//
அதுவும் சரி தான்..
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா. said...
வவுனியாவில் ஒரு கோவிலுக்குச் சென்றேன்...
தமிழர் பெருமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தார்கள்.
நான் இப்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில் தான் காமினி மகா வித்தியாலயம் இருக்கிறது. கோவிலும் அருகில் தான்... எப்படி இவர்களால் முடிகிறது?
மோட்டார் வண்டியில் சவாரி செய்யும் இளைஞர் கூட்டம் வேறு...
கொழும்பில் வசிக்கும் எனக்கு இருந்த பாதிப்பு கூட இவர்களுக்கு இல்லையே?//
மரணங்கள் மலிந்த பூமியில் மனித மரங்களும் மரத்து விட்டன.. வேறென்ன சொல்வது?
=====================
Triumph said...
//வழமையை விட கொஞ்சம் குறைவு தானே தவிர பெரிசா இல்லை..
அதுவும் வெளிநாட்டுப் பணவரவு கொஞ்சம் குறைந்ததாலாக இருக்கலாம்..//
Thats what my friend also said. Argh... I was arguing with him as he always think in weird angles.. So is tat true :-( He claimed that its only coz of money..
//
may be or may not be..
//வெளிநாடுகளில் மிக மோசமான பொருளாதார பிரச்சனை. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் புலி ஆதரவாளர்களே.இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி.
//
Ada thu... Dont have guts to write you name... but came to talk here...
How the hell you know about them you moron. Why? do you look after them... Here after stop bullshitting as you know everything.
If they have money they would have funded to get their places long time back...
Go to blazes you moron...//
cool down.. n well said.You cant change some weird ppl's mind frames. Lets say 'Get a life'
ஆதிரை said...
//ஆச்சரியம் ஆனால் உண்மை. நம்மவர்களில் பலர் திருந்திவிட்டார்கள்.
பட்டாசுச் சத்தம் கேட்கவில்லை எனலாம்.
நிச்சயமாக!!! காரணம் அக்கறையா அல்லது பண நெருக்கடியா... உங்களைப் போன்று எனக்கும் புரியவில்லை.//
ஆராய்ந்தால் மனம் நோகும் என்று தான் காரணம் பற்றி நன் எதுவுமே சொல்லவில்லை.
//அது சரி கலைஞர் தான் தமிழகத்தில் தமிழுக்குத் தை முதல் திகதி நாள் பொங்கலும் புதுவருஷமும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் ( உண்மையிலேயே நடைமுறையிலிருக்கா) சித்திரைத் திங்கள் தொலைக்காட்சிகளில் களைகட்டுதே. மார்க்கெட்டிங் வியாபார நோக்கம் மட்டும் தானா? அல்லது இலங்கையில் போல தமிழகத்திலும் இன்னும் சித்திரையிலும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுகிறார்களா?
கலைஞர் தானே... எங்காவது தனது குடும்பத்துக்கு சொத்துச் சேர்க்கலாமென்றால் ஒவ்வொரு மாதமும் புது வருடம் கொண்டாடி சிறப்பு நிகழ்ச்சியும் தருவார்... :(//
;)
=============================
jackiesekar said...
அந்தப்பாடல் மூலமாக ஈழத்தமிழர் படும் வேதனையை உலகுக்கு வெளிப்படுத்தவே முயன்றதாகச் சொன்ன பிரேம் கோபால் - 'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை உச்சரித்தபோது வேதனையும், பெருமையும், இயலாமையும் கலந்த ஒரு கலவை உணர்வு!--//
லோஷன் அந்த காட்சியை நானும் ரசித்தேன்//
நன்றி.. வருகைக்கும்
தமிழன் said...
//கலைஞர் தானே... எங்காவது தனது குடும்பத்துக்கு சொத்துச் சேர்க்கலாமென்றால் ஒவ்வொரு மாதமும் புது வருடம் கொண்டாடி சிறப்பு நிகழ்ச்சியும் தருவார்.
உங்களுக்கு கலைஞரை குறை காணா விட்டால், நித்திரை வராதே... அம்மா தங்கத் தட்டில் வைத்துத் தருவா. காத்திருங்கள்.
உங்களின்ர நாட்டில நடக்கிறது கண்ணுக்குத் தெரியல... இஞ்ச வருகினம் குறை பிடிக்க...//
உங்களுக்கு ஏன் சுடுது சகோதரா? நம்ம நாடு என்று நினைக்காத காரணத்தால் தானே இந்தியாவையே அதிகம் பார்க்கிறோம்.
ஜெயலலிதாவின் வால்கள் நாமல்ல.. எனது முன்னைய பதிவை வாசியுங்கள்.. அந்தளவு முட்டாள்கள் நாமல்ல.
=======================
ஆதிரை said...
தமிழன் said :
//உங்களுக்கு கலைஞரை குறை காணா விட்டால், நித்திரை வராதே...
எங்களுக்காக கவிதை எழுதாவிட்டால் அவருக்கு தூக்கம் வராதே... நாங்கள் சாகும் போது நிம்மதியாக சாகவாவது விடுங்களேன். அரசியல் நாடகங்களை எங்களின் சுடுகாட்டில் வந்து அரங்கேற்றுகின்றார்களே. கலைஞரை குறை காண வேண்டுமென்ற ஒரேயொரு காரணத்துக்காக நான் இதைக் கூறவில்லை. என் கருத்தை copy & paste செய்யும் போது நீங்கள் தவறுதலாகவோ அல்லது வேணுமென்றோ விட்டுவிட்ட கடைசிப்பகுதி என் உள்ளக்கிடக்கையிலிருந்து வந்தது.
//அம்மா தங்கத் தட்டில் வைத்துத் தருவா. காத்திருங்கள்.
http://loshan-loshan.blogspot.com/2009/04/blog-post_13.html
இதையும் ஒருமுறை பார்வையிடுங்கள்.//
well said.
//உங்களின்ர நாட்டில நடக்கிறது கண்ணுக்குத் தெரியல...
இந்தியா இன்னமும் ஜனநாயக நாடென நான் நம்பியது தப்பா...?//
அதானே?
// இஞ்ச வருகினம் குறை பிடிக்க...
எங்க..? நிச்சயமாக நீங்கள் தமிழகத்திலிருந்து தமிழனாக வந்திருக்க மாட்டீர்கள். அதை ஏற்கும் மனம் என்னிடமில்லை.//
அவர் ஒரு முகமூடி அணிந்த தமிழன்.. பாவம் ஏதோ ஒரு வலிக்கு இங்கு மருந்து தேடியுள்ளார்.
Anonymous said...
hi
visit www.cinethuli.com to see this programe//
tks..
====================
வாசகி said...
3 புத்தாண்டுகள் இருந்தென்ன..
மனதில் நிம்மதி இல்லையே
:( எங்கள் தலைவிதி
me too watch the prem gopal performance, hates off to him anna
Post a Comment