March 11, 2009

லோஷன் தேவையா இது உனக்கு?

இந்த உலகிலேயே அதிக கொடுமைகளை அனுபவிக்கும் ஜீவன்களில் ஒன்று என் மனைவி. இப்படி நான் சொன்னவுடன் ஏதோ அடிக்கிறேன்; கொல்கிறேன் என்று அர்த்தமல்ல.

வானொலியில் எனது நேயர்களை விட கூட வேலை செய்யும் நண்பர்கள் சக ஊழியர்களை விட எனது அறுவை,கடிகளை அதிகநேரம் தாங்கிக் கொள்பவர் என்பதனால் தான் அப்படிச் சொன்னேன்.

சிலநேரங்களில் நான் சீரியஸாக சொல்வது போல ஏதாவது புளுகு அவிழ்த்து விட்டால் கூட நம்பிவிடும் அப்பாவி! இதனாலேயே இப்போதெல்லாம் முன்பே இது 'உண்மையுடனான விஷயம்' என்ற முன்னெச்சரிக்கையோடே எந்த விஷயமானாலும் சொல்கிறேன்!

நேற்று இரவு இப்படித்தான் ஏதோ ஒரு பேச்சு சுவாரஸ்யத்தில் சின்ன வீடு, இரண்டாம் தாரம் என்று கதை போய்க் கொண்டிருந்து. கொஞ்சம் Over possessive ஆன என் மனைவியிடம் இப்படியான விஷயங்களை நான் ரொம்ப அவதானமாகவே பேசுவது உண்டு.

தனக்கொரு சக்களத்தி இருந்தால் எங்கள் குழப்படிக்கார மகனைப் பார்த்துக்கொள்ள உதவி,ஒத்தாசையாயிருக்கும் என்று உரையாடலின் இடையே எனது மனைவி சொன்னாள்.. 

"அதுக்கென்ன – எனக்கும் வசதிதான்! No Objection" என்றேன்.

"மாமிட்டை (என் அம்மா) சொல்லவா பாக்கச் சொல்லி" என்று கேட்டாள் மனைவி. 

"வேண்டாம் வேண்டாம்..என்ரை டேஸ்ட் உமக்குத் தெரியும் தானே...நீரே பாரும்"

"ஏன் அவதானே என்னை உங்களுக்குப் பார்த்தா" இது மனைவி

"அதுதானே இப்ப அனுபவிக்கிறேன்..அம்மா பார்த்தது failure. இந்த தடவையாவது நீர் பாரும்.இதாவது நல்லா அமையட்டும்" சைக்கிள் கப்பில (gap) பிளந்து கட்டிட்டேன் 

அவ்வளவு தான் பேச்சு cut .. காலை டீயில் சீனியில்லை – ironing நானே-காலைச் சாப்பாடும் கடையிலே..
இன்னும் என்னென்ன தொடரப் போகுதோ?

லோஷன் தேவையா இது உனக்கு?


39 comments:

வேந்தன் said...

:(((

த.அகிலன் said...

//காலை டீயில் சீனியில்லை //

சீனிக்கு பதிலா வி...ம் போட்டுத் தரலேயேன்னு சந்தோசப்படுவியளா...

த.அகிலன் said...

கேக்க மறந்து போனேன்.. இதைத்தான் புளொக் விடு தூதெண்டு சொல்றதா...

LOSHAN said...

த.அகிலன் said...
//சீனிக்கு பதிலா வி...ம் போட்டுத் தரலேயேன்னு சந்தோசப்படுவியளா...//
ம்ம்ம் அதுவும் சரி தான்.. என்ன போட்டிருக்கோ எண்டது இன்னும் கொஞ்ச நேரத்தில தான் 'பின் விளைவு' மூலமா தெரியுமோ??

//
த.அகிலன் said...
கேக்க மறந்து போனேன்.. இதைத்தான் புளொக் விடு தூதெண்டு சொல்றதா...//
யாருக்கு? மனைவிக்கு தானே? ;) நல்லது நடந்தா சரி தான்..

Abiman said...

Say sorry to her...

Anonymous said...

//இந்த உலகிலேயே அதிக கொடுமைகளை அனுபவிக்கும் ஜீவன்களில் ஒன்று என் மனைவி//

உண்மை
உண்மை
உண்மை

அண்ணி இந்த ப்ளொக்கை எல்லாம் மதித்து படிப்பதில்லை..வேறு வழியில் முயற்சி செய்யவும்.. :P

LOSHAN said...

//
Abiman said...
Say sorry to her....//
அந்த அணுகுமுறை எல்லாம் தோத்தாச்சு.. சமாளிப்போம்..

//
Thooya said...
//இந்த உலகிலேயே அதிக கொடுமைகளை அனுபவிக்கும் ஜீவன்களில் ஒன்று என் மனைவி//

உண்மை
உண்மை
உண்மை

அண்ணி இந்த ப்ளொக்கை எல்லாம் மதித்து படிப்பதில்லை..வேறு வழியில் முயற்சி செய்யவும்.. :P//

ஒரு செண்டிமெண்ட் தங்கையா உதவுவோம்னு இல்லாம இப்பிடி கவுக்கிறீங்களே.. இந்த ஆண் பாவம் சும்மா விடாது..

LOSHAN said...

இன்னொரு விஷயம் உங்க அண்ணி சமையல் சம்பந்தமான blogsஉம் படிப்பதில்லை.. கி கி கி ;)

புல்லட் பாண்டி said...

கவனம்! எலிக்கு நடந்தது ஞாபகம் இருக்குதானே? பேசாம சரண்டராயிடுங்க...!

போற போக்கப் பாத்தா விரைவில நீங்களும் ”கடுப்பைக் கிளப்பும் பெண்கள்” எண்டு பாட் பாட்டா பதிவிடுவீங்க பொல கிடக்குது பாப்பம்... :)

LOSHAN said...

//
புல்லட் பாண்டி said...
கவனம்! எலிக்கு நடந்தது ஞாபகம் இருக்குதானே? பேசாம சரண்டராயிடுங்க...!//
ஆங்.. (பாண்டு ஸ்டைலில் படிக்கவும்) ஏன்யா பயமுறுத்தறீங்க..

//போற போக்கப் பாத்தா விரைவில நீங்களும் ”கடுப்பைக் கிளப்பும் பெண்கள்” எண்டு பாட் பாட்டா பதிவிடுவீங்க பொல கிடக்குது பாப்பம்... :)//
ஹீ.. ஹீ.. இரண்டாவது பற்றிக் கதை ஆரம்பித்ததுக்கே இப்படின்னா 'புல்லெட்' போல பெண்கள் என்று பலர்பாலில் தொடங்கினா அவ்வளவு தான்.. ;)

Nimalesh said...

ithuku thaa kattu vangurathu yengurathooooo?????

Ramanan Satha said...

You started the struggle (even it was for fun), so just ask to apologize directly.
;D

என்ன கொடும சார் said...

பாவி மனுஷா இப்படியெல்லாம் அந்தரங்கங்களை எல்லாம் அவிழ்த்து விட்டு ஹிட் தேடுறியே இது உனக்கு நியாயமா..

தப்புக்கு மேல தப்பு செய்றியே.. ப்லோக் ல போட்டதுக்கும் சேர்த்து பத்து நாள் பட்டினி போட்டாதான் சரி வரும்.. நான் இந்த விசயத்துல அண்ணிக்கு சப்போர்ட். இந்த பணிஷ்மன்ட் எல்லாம் அவ ரொம்ப நாளைக்கு முதல் குடுத்திருக்கனும்..

அண்ணி, இவர் இப்படி blog post ஒண்டு போட்டால் try பண்ற girls கிட்ட இருந்து application / response வருதா எண்டு டெஸ்ட் பண்ணுறார்.

bathroomla ல நிண்ட sleeveless போட்ட பேய் யாரு எண்டு இப்ப கேளுங்க அண்ணி

இந்த comment பிரசுரிக்கப்படாவிட்டால் அண்ணியிடம் நேரடியாக விஷயங்களை எத்திவைக்க வரும் என்று அன்புடன் தெரிவிக்கிறேன்..

Thamizhmaangani said...

ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு!:)

Priyan said...

லோஷன் , நீங்க ப்லோக் ..என்னும் எழுதி முடிக்கல போல கிடக்கு..

அது சரி நல்லா தானே போயிட்டு இருந்திச்சு ... என்னாச்சு தலை ..

எனக்கு பார்த்த அளவில நீங்க Program செய்யக்கே ..ஒரு வித்தியாசமா எதுவும் இருக்கல இன்று!! ம்ம்ம் ..பாருங்கோ உங்கட உந்த எல்லாத்தையும் தாங்கி கொள்ளுற அந்த technique களை சொல்லி தாங்கோவன் ,, தேவைப்படும் ஹா ஹா


// அண்ணி Blog வாசிச்சா அண்ணா ஆபிசில இருக்கிற Rest ரூமில தான் குடும்பம் நடத்த வேண்டி வரும் .. !!!

பின்னேரம் போகேக்க யுத்த நிறுத்த அறிவிப்பை செய்து போட்டு போகவும் ..

அதோட கெதியா வீட்டில இருக்கிற பாத்திரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யவும்

Subankan said...

அண்ணா, பாத்து. உந்த சண்டைக்கெல்லாம் தான் officeசில ஒண்டு ரண்டு இருக்கே ( பேய் தான்
) பிறகு எதுக்கு வீட்டை எல்லாம் ???

யாழ்நிலவன் said...

லோசன் எனக்கு இண்டைக்குத் தான் தெரியுமப்பு உனக்கொரு வலைத்தளம் (வலைப்பூ) இருக்கெண்டு. நல்ல வேளை மனுசி என்ர மனுசி மாதிரி தேத்தண்ணி போட்டுத்தராம விடேல்லையே, அது போட்டுத் தந்திச்சுத் தானே, அது சரி ஏன் பாதியில நிப்பாட்டீற்றீங்கள்.

ஆதிரை said...

அண்ணா, நான் ஏதாவது தப்பு செய்து தம்பிக்கு தெரிந்தால், அவன் அம்மாவிடம் சொல்லப்போறதாக வெருட்டுவான். நான் என்ன செய்வன் என்றால், முதலே தங்கச்சியின் உதவியுடன் அம்மாவின் காதில் அந்த தப்பை போட்டிடுவன். ஏனென்றால், விழுகிற அடி கொஞ்சம் குறையும்.

உங்கள் அம்மாவுக்கு மனைவி சொல்வதை விட நீங்கள் சொன்னால் பாதிப்பு குறையும் என்ற நுண்ணரசியல்தானே இந்தப் பதிவு.
ஹீ... ஹீ... கண்டுபிடித்து காட்டிக்கொடுத்திட்டமில்லோ...:)

//பின்னேரம் போகேக்க யுத்த நிறுத்த அறிவிப்பை செய்து போட்டு போகவும்...
பலமிழந்த நிலையில் செய்யப்படும் யுத்த நிறுத்தங்கள் சரணடைதல் என்றுதான் அர்த்தப்படும்.

Siva said...

Thats Cute.... :)

Sinthu said...

அப்படி என்றால் இந்தப் பதிவை வாசித்த பின்னர் என்ன எல்லாம் நடக்குமோ? அன்ன முன் கூட்டிய வாழ்த்துக்கள்...( எதுக்கு என்று தெரியும் தானே)

தியாகி said...

//அவ்வளவு தான் பேச்சு cut .. காலை டீயில் சீனியில்லை – ironing நானே-காலைச் சாப்பாடும் கடையிலே..//

ஐயையோ...லோஷன் அண்ணா...இதுக்கு தான் நம்மல மாரி single சிங்கமா இருக்கணும் என்றது..Single ஆ இருக்கும்போது முகத்துல அப்பிடி ஒரு கலை தெரியுமா..அதெல்லாம் உங்களுக்கு புரியாது தல..டீயும் நாமே ஊத்தணும், உப்பு/தூள் இல்லாத சாப்பாடும் நாமே சமெக்கணும்..வாவ்...iron பண்ணாம washing machine ல இருந்து எடுத்து, ஈரம் சொட்ட சொட்ட lectures க்கு போறதே ஒரு தனி சுகம் பாஸ்....

ச்சீ..நீங்க குடுத்து வைக்கல..கிகிகி...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
என்ன கொடும சார் said...

//பலமிழந்த நிலையில் செய்யப்படும் யுத்த நிறுத்தங்கள் சரணடைதல் என்றுதான் அர்த்தப்படும்.//

சரணடைந்து விட்டீர்களா ? பகிரங்க அறிவிப்பு செய்யவும்.. உங்கள் தோல்வியில் எங்களுக்கு ஒரு சுகம்..

MANO said...

இதுக்குதான் அந்த கஞ்சிபாயோட சேர வேண்டாமின்னு சொன்னா கேட்கணும்

என்ன சரணடைந்து விட்டீர்களா ? பகிரங்க அறிவிப்பு செய்யவும்..

’டொன்’ லீ said...

பேசாமல் சரணடைந்து விடுங்கள்....அதுதான் நல்லது...:-((

Thusha said...

என்ன சரணடைந்து விட்டீர்களா ? பகிரங்க அறிவிப்பு செய்யவும்..


இண்டைக்கு காய்சி பாய் ரொம்ப சந்தசப்பட்டு இருப்பர் எத்தினை நாள் அவரை காலாய்த்து இருக்கீங்க

குடுகுடுப்பை said...

என்ன மச்சான் டீ தங்கச்சி போடுறாங்களா?
இது என்ன புது கதையா இருக்கு

இரா பிரஜீவ் said...

இப்பத்தான் எல்லாமே விளங்குது, உந்த பேயை பார்த்த பிறகு உங்கள் நடவடிக்கைகள் ஒரு மார்க்கமாகத்தான் இருக்குது!!!

இது சம்பந்தமாக என்னத்தை சொல்ல.... ஏற்கனவே நிறைய நண்பர்கள் நிறைய சொல்லிவிட்டார்கள்!

பேய் விஷயம் தான் கொஞ்சம் உதைக்குது!!!

sugan said...

/// அவ்வளவு தான் பேச்சு cut .. காலை டீயில் சீனியில்லை – ironing நானே-காலைச் சாப்பாடும் கடையிலே..
இன்னும் என்னென்ன தொடரப் போகுதோ?

லோஷன் தேவையா இது உனக்கு? ///


ஆஹா, ஓஹோ, ஹோஹோ...!!

வாசிக்கும் போது என்ன குசியாக இருக்குத் தெரியுமா...!! :) :)

Sugan said...

/// அவ்வளவு தான் பேச்சு cut .. காலை டீயில் சீனியில்லை – ironing நானே-காலைச் சாப்பாடும் கடையிலே..
இன்னும் என்னென்ன தொடரப் போகுதோ?

லோஷன் தேவையா இது உனக்கு? ///

ஆஹா, ஓஹோ, ஹோஹோ...!!

வாசிக்கும் போது என்ன குசியாக இருக்குத் தெரியுமா லோஷண்ணா...!! :) :)

கொழுவி said...

காலைச் சாப்பாடும் கடையிலே.. //

வீட்டுச் சாப்பாட்டை விட Hotel சாப்பாடுக்கு சுவை அதிகம் தான்...

புருனோ Bruno said...

////
த.அகிலன் said...
கேக்க மறந்து போனேன்.. இதைத்தான் புளொக் விடு தூதெண்டு சொல்றதா...//
யாருக்கு? மனைவிக்கு தானே? ;) நல்லது நடந்தா சரி தான்..//

யாருக்கா ?? சீனியில்லாத தேநீர் சாப்பிட்ட பின்னர் கூட நீங்கள் முழுவதும் திருந்த வில்லை என்று நினைக்கிறேன் ;)

ஜோ / Joe said...

//என்ன மச்சான் டீ தங்கச்சி போடுறாங்களா?
இது என்ன புது கதையா இருக்கு
//

:))))))))))))))))))))))

கமல் said...

உங்கை என்ன நடக்குது?? வெள்ளவத்தையில் பெண்ணிய முன்னேற்றக் கழகம் ஒன்றை அண்ணி தொடங்கி லோசன் அண்ணாவைக் கூண்டில் நிறுத்தி நீதி கேட்க வேண்டும்??

அத்தோடு பத்து நாள் பட்டினி போட வேண்டும்,

attackpandiyan said...

http://www.youtube.com/watch?v=1EEHSKYEgqs

ஆதிரை said...

பிந்திக்கிடைத்த செய்தி:
நேற்று நடந்த சம்பவங்களின் எதிரொலியாக பிரபல பதிவர் ஒருத்தருக்கு இன்று பதிவிடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தடை நீடிக்குமா என்பது இன்று மாலை நடைபெறும் பேச்சுக்களின் போதுதான் தீர்மானிக்கப்படும் என்றும் அறியக்கிடைக்கின்றது. ஆனாலும், கடுமையான எச்சரிக்கையுடன் அவர் பதிவிட அனுமதிக்கப்படலாம் எனவும், அதன் பின்னர் ஆசையாக வளர்த்துள்ள மீசையில் மண் படாத வண்ணம் அவர் பதிவிடலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

இது குளக்கட்டு வதந்தி அல்ல... உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை.
(யாவும் கற்பனை)

LOSHAN said...

அடப்பாவிங்களா, நல்ல பிள்ளையா ஒரு நாள் எந்த வம்பு தும்புக்கும் போகாமல், அமைதியா, அலுவலக வேலையும் நானும் என்றிருந்தா இப்படியா வதந்தி கிளப்புறது?

இத்தால் சகல பதிவுலகப் பிரஜைகளுக்கும் அறியத் தருவது யாதென்றால், சரணாகதி,சரண்டர் எல்லாம் அந்தப் பிரபல (அப்படியா????) பதிவருக்கு எப்போதோ பழகிய விஷயம் என்றும் (திருமணம் முடிச்சுத் தான் ரெண்டு வருஷம் ஆகுதே) எல்லாப் பிரச்சினையும் இப்போ தீர்ந்துள்ளதாகவும், நலமே உள்ளார் என்றும் புதிய,நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.(சேதாரங்கள் எதுவும் இல்லை)

நாளை அவர் பின்னூட்டங்களுக்கு பதில் தரும் போது மேலும் போதிய ஆதாரங்கள் கிடைக்குமாம்.

(அப்பாடா செய்தி வாசிப்பு அனுபவம் கை குடுக்குது)

Thusha said...

அப்படா ஒரு மாதிரி தன்னிலை விளக்கம் கொடுத்தாச்சு
இதில் ஒரு நுண்ணரசியலும் இல்லைதானே அண்ணா எத்தனை விடயங்கள் தணிக்கை செய்யப்பட்டனா அண்ணா

sayan said...

naan unkala nallavr ena ninachittan. ipaadi ellam nadakkutho...

ok just joke...

share with us like this experince .. and thanks for shared..

good luck

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified