எங்கள் அலுவலகத்தில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!
பணிபுரிகிற நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பலபேரும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் அலுவலகக் கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.
ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!
சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத கலையக அறைகளிலே அலுவலக அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.
ஹோல்மங், பூதயா (சிங்களத்தில் பேய் குறித்து சொல்லப்படும் வார்த்தைகள்) எங்கள் அலுவலகத்தில் கொஞ்ச நாளாக ரொம்ப சாதாரணம்.
பகலிலும் தனியாக இருக்கவோ,தனி அறைகள்,கலையக அறைகளுக்கு செல்லவோ பயப்படுகிறார்கள் என்றால்,இரவில் கேட்கவா வேண்டும்?
இதற்காகவே இரவு நேர நிகழ்ச்சி செய்பவர்கள் அடிக்கடி யாருக்காவது தொலைபேசி தனிமையை நீக்க முயல்கிறார்கள்..
சில வேளைகளில் எனக்கே எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.(இதற்காக யாரயாவது என்னால் துணையாக அனுப்ப முடியுமா? நல்ல கதை)
நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கையில்லாதவனாக இருந்தாலும் மற்றவர்கள் மிகவும் பயந்து,உணர்வுகள் உந்தப்பட்டு, சத்தியம் பண்ணிச் சொல்லும்போது 'இப்படியும் நடக்குமா' என ஆச்சரியப்படும் ஒருவன்!
எனினும் கண்ணால் கண்டோ உண்மையாக உணர்ந்தோ அப்படியொன்று இருப்பதை சாட்சியபூர்வமாக நானே அறியும் வரை நம்பவேமாட்டேன்.
எனினும் நம்ம செய்திப்பிரிவின் அருண் (இவர் ஒரு பதிவரும் கூட aprasadh.blogspot.com) ஒருதடவை அதிகாலை இரு ஆவிகளையோ அரூப உருவங்களையோ கண்டதாக பதைபதைத்துப் பயந்தபோதும் (அதன் விளைவு - இலங்கைப் பேய்களுக்கென்று தனியாக ஒரு வலைத்தளமே தொடங்கிவிட்டார் - www.tamilghost.tk) பின்னர் எமது இரவு நேர நிகழ்ச்சி அறிவிப்பாளர் ரஜீவனும் இரவுநேரம் உருவம் ஒன்று சரேலென்று வந்து மறைந்ததாகவும் சொன்ன பிறகு நாங்கள் சில துப்பறியும் வேலைகளில் இறங்கினோம்.
கிடைத்த சில விஷயங்கள் -
எங்கள் அலுவலகக் கட்டடம் முன்பு எங்கள் நிறுவன உரிமையாளரின் வீடாக இருந்தபோது தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ஒரு இளம்பெண்ணின் தற்கொலை.
அருகேயுள்ள வீடொன்றில் இளம் காதல் ஜோடி ஒன்றின் தற்கொலை.
அலுவலகக் கட்டடத்தில் ஏற்கெனவே உலவுவதாக சொல்லப்பட்ட 3 ஆவிகள் பேய்கள் அதில் ஒன்றை பௌத்த மதகுரு ஒருவர் விசேட பூஜை மூலமாக விரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆவிகள் பேய்களைக் கண்டதாகச் சொன்னவர்கள் கண்டநேரம் இரவு 10மணியிலிருந்து அதிகாலை 5மணிக்குள்.
(24மணிநேர ஒலிபரப்பு நிலையமொன்றாலும் இரவு நேரங்களில் மொத்தமாக அலுவலகத்தில் இருப்பவர்களே ஐந்தோ ஆறுபேர் தான்)
நான் அலுவலகம் செல்வது காலை 5.30 மணி அளவில்.
நானும் கண்டால் நல்லா இருக்குமே என்று யோசித்ததுண்டு கண்டாலும் பயப்படமாட்டேன் என்ற உறுதிதான.;
நேற்று முன்தினம் காலை அப்படியொரு வாய்ப்பு!
காலை செய்தியறிக்கையின் பின்னர் எனது கணினியைத் தட்டித் துருவிக் கொண்டிருந்தபோது சிங்கள வானொலி 'சியத' முகாமையாளர் ஜெயநித்தி என்னைக் கூப்பிட்டு ஆண்கள் கழிவறைப் பக்கம் காட்டிய காட்சி!
ஒரேயொரு கணம் திகைத்தாலும் என் கையிலிருந்த செல்பேசி கமெராவினால் உடனே படமெடுத்துவிட்டேன்.
.jpg)
இந்தப்படத்திலே கண்ணாடிக் கதவின் மேல் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் முன்பிருந்தே ஒட்டப்பட்டுள்ளது.. எனினும் உள்ளே கலங்கலாகத் தெரியும் உருவம் தான் மர்மமாக உள்ளது.
உடனே கழிவறைக் கதவைத் தள்ளித் திறந்த பின் எதுவுமே இல்லை!
MMS மூலமாக எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி, பின் நமது நிறுவன உயரதிகாரிகள் உட்பட அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்தி நேற்று முன்தினம் முழுக்க ஒரே பரபரப்பு.
பேய் பிசாசு மீது நம்பிக்கையற்றவனான என் மூலமாகவே இந்தப்படம் வெளி வந்தது மேலதிகப் பரபரப்பு! ஏதோ கடவுளே நாத்திகன் ஒருவனுக்கு சாட்சி தந்தது போல..
கொஞ்சநேரத்தில் நம்ம அலுவலகத்தில் அன்றைய தினம் பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கைக் கிரிக்கெட் அணியின் மீதான தாக்குதலே பின் தள்ளப்பட்டது.
சொல்லப் போனால் நானும் என் மொபைலும் தான் அன்றைய நாளின் நிஜப் பிரபலங்கள்..
.jpg)
படத்தில் கறுப்பாயும் வெள்ளையாயும் ஏதோ தெரிவது/தெரிந்தது என்ன?
யாருக்குமே புரியவில்லை!
என் வலைப்பூ விருந்தாளிகளே உங்கள் கருத்து என்ன?
யாராவது பேய்,ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கும் இந்தப்படத்தை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன்.
67 comments:
பயமா இருக்குய்யா!அட ஏங்க இப்படி பயம்புறுத்துறீங்க...
நானே இரவுல தான் படிப்பேன்... இப்படி ஒரு செய்திபோட்டு, அதையும் கெடுத்துட்டீங்களே! :(
என்னை பற்றி ஆராய நினைத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஆமா...
தமிழ் பேய் from aruns blog
தமிழ்பேய் இணையத்தளத்தில் நமக்கு இடம் கிடைக்குமா.. ? ப்ளீஸ்..
உங்கள் வலைப்பக்கத்திற்கு தினமும் வருவதால், ஏதாவது முற்காப்பு செய்ய வேண்டுமா?
பேய் முன்னணிகளின் கொள்கை பரப்பு செயலாளர் என்ற வகையில் நமது ஒற்றுமையான பேய் சமூகத்தினிடையே இனவாதத்தை தூண்டும் விதத்தின் கருத்துக்களை இட்ட மேலே உள்ள பேய்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது குறித்து தலைவர் மற்றும் உயர்மட்ட குழு கூடி விரைவில் தீர்மானிக்கும்.
namakkalshibi@gmail.com
தமிழ் பேய்களே பெரும்பான்மையினம் என்ற துயர உண்மையை தயவு செய்து ஏற்று கொள்ளுங்கள். இங்கேயாவது தனித்துவமாய் வாழ விடுங்கள்.
பேய் பிசாசு உண்மையாகவே உள்ளது.
பொரல்லை சந்தியில் இரவு நேரங்களில் அவர்கள் தாராளமாக உலாவி வருவது பற்றி பலர் பேச கேட்டுள்ளேன். அவசரம் ஆவல் என்றால் அவ்விடம் போய் தகவல் அறிந்து வரவும். நாங்களும் ஆவலாக உள்ளோம்...
உயிர்கள் இறக்கும் போது அவைக்குரிய முறையான கிரியைகள் செய்ய தவறுமிடத்து (ஒவ்வொரு சமயமும் தன்னகத்தே அதற்குரிய கிரியைகளை கொண்டுள்ளன.) அவை இவ்வுலகிலேயே உலாவி வரும்.
குறிப்பாக அவை முன்னைய பிறப்பில் நண்பர்களாக இருந்தவர்கள், உறவினர்கள், காதலித்தவர்கள் போன்றோர்களின் அயல்களிலும் , வேலை செய்த இடம் என்று எல்லா இடமும் சென்று வரும்.
இது புத்தகங்களில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இருப்பது உண்மை.
அதன் ஒரு விளைவே உங்க காரியாலயத்திலும் நடக்குது.
கவனம் கவனம் ....!!!!
விளக்கு மாறு , ஒரு வாளி தண்ணீர் என்பன வையுங்கோ, பேய்க்கு இவை எல்லாம் பயமாம். ஹா ஹா , கிட்ட வராது ...
இரவில் நிகழ்ச்சி செய்யுறவர்களை காலையில் கவனமாய் செய்ய சொல்லுங்க.
கேட்டீங்களா இதை? பேய் பாத்ரூமில தேமேன்னு நின்னுச்சாம்,
அதை இவங்க ஓட்டைக்கால படமெடுத்து நெட்டில போடுறீங்களாம்?
அடடா ! என்ன கொடுமை அண்ணோய் இது?
திரிசா, நயன்தாராவத்தான் விடுறீங்களில்லன்னு பாத்தா கடைசியா பேயக்கூடி நிம்மதியா உச்சா போக விடுறீங்களில்லயெ!
நான் நெனக்கிறேன் உவர் பெப்பர்த்தம்பியை நேர கண்டதில பேய்க்கி வயத்தக்கலக்கியிருக்கும்..
அதுதான் அவசரமாக ஒதுங்கியிருக்கும்...
விடுங்க பாஸ் பாவம்...
ஆமா! இரவில நிகழ்ச்சி செய்யுறது யாரு? மனுசங்களா இல்லாட்டி பேயிங்களா? சொல்லுங்க.. ஓடிப்போயி தாயத்து எதுனாச்சும் கட்டிக்கணும்! யம்மாடி!
ஓவரா பயந்திங்கன்னா டொக்டர் கோவூர் உடைய மனக்கோலங்கள் புத்தகத்தை எடுத்து வாசிங்க.. :) )
அட.. நம்ம கவனம் இப்ப கரண்ட் கட் ஆள் இல்லையே... ஒரு நாடகம் போட :)
எச்சூச்மி... இந்த பதிவை லோசன் தானா எழுதியது.. ? அல்லது அலுவலகத்திலிருந்து அதுவா.. ? :):)
//சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல ..யாரோ தொட்டு வருடிப் போவது போலவும் //
உங்க கூட பேய் லவ் பண்ணுதோ தெரியாது.. கவனம்..தழுவுது.. நழுவுது..ஹோய்... :D
//விளக்கு மாறு , ஒரு வாளி தண்ணீர் என்பன வையுங்கோ, பேய்க்கு இவை எல்லாம் பயமாம். ...//
உங்க அறிவிப்பாளர்களை கண்டால் பேய் வராதுப்பா.. அப்படியும் பயம் என்றால் உங்கள் புகைப்படத்தை enlarge செய்து சுவரில் மாட்டிவைக்கவும்..
அதுபோல் இரவுநேர கடமையாளர்கள் தங்களது பேர்சில் உங்கள் புகைப்படத்தை laminate செய்து வைக்குமாறும் கூறவும்..
//கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்//
அதுதான் நீங்க இருக்கும் பொது கழிவறை பக்கமா பதுங்குது..
//ஆண்கள் கழிவறைப் பக்கம் காட்டிய காட்சி!//
பெண்கள் கழிவறை பக்கம் என் அது போக மாட்டேங்கு்து? Note this point..
இல்லாட்டி பெண்கள் கழிவறை பக்கம் என்று போட்டு கடைசில உங்க wife அத பார்த்து காளி ஆகி உங்கள சம்காரம் செஞ்சிடுவா என்று பயந்து adjust பண்ணி எழுதினீங்களோ..
சில பேய்கள் hit தேடுதோ தெரியாது..
பாவம் அந்த பேய்கள்...விட்டிடுங்கோப்பா அதுகளை...:-)
அய்யயோ பேய்கள் இதை பாத்தா நம்ம கதி!!!! பிசாசுகளே நான் ஒன்னுமே சொல்லல நல்லா பாத்துக்குங்கோ. ஆமா சொல்லிபுட்டேன்!!!
இன்று முதல் நீவிர் பேயைப் பார்த்த பெருமான் என அழைக்கப் படுவீராக..
மன்னிக்கவும். எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். படத்தைப் பார்த்தவுடன் (ஆண்கள்)கழிவறையின் பிம்பம் போலதான் தோன்றுகிறது:)
//எனினும் கண்ணால் கண்டோ உண்மையாக உணர்ந்தோ அப்படியொன்று இருப்பதை சாட்சியபூர்வமாக நானே அறியும் வரை நம்பவேமாட்டேன்.//
பேய்களே நல்லா வாசித்துப்பாருங்கோ இது லோஷன் அண்ணா எழுதியிருக்காரு நீங்களா பாத்து அவருக்கு காட்சி கொடுங்கோ ஓகேவா?
ஏய்யா சின்ன பிரச்சனய ஊதி ஊதி பெருசாக்குரீங்க. ஆனாலு ரொம்பத்தா தைரியம்.
ஒரு idea கண்ணாடிக் கதவை மாத்திப்புட்டு பலகையால செஞ்ச கதவ போட்டுட்டா problem solve
லோஷன் இதே அனுபவம் எமது அலுவலகத்திலும் நடந்தது. கிட்டத்தட்ட 5வ்ருடங்களுக்கு முன்னர் பிரபல கணணி நிறுவனம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணி புரிந்தேன். அந்த அலுவலகம் எங்கள் நிர்வாகியின் தகப்பனின் மிகவும் பழைய ஆனால் பிரமாண்டமான வீடு, பல அறைகள் விறாந்தைகள் என அந்தக்காலக் கட்டிடம். முன் அறைகளில் விரிவுரைகள் மற்றும் கணணி ஆய்வுகூடம் பின் அறை ஒன்றில் விரிவுரையாளர்கள் தங்குவது. அதற்க்கு அடுத்த அறை பூட்டியபடி கிட்டத்தட்ட சந்திரமுகி அறைபோல இருக்கும்.
இரவில் இரவு நேரப் பாதுகாப்பாளர் மட்டும்தான் இருப்பார். அவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வீட்டைப் பற்றி அதிகம் தெரியும், அந்த சந்திரமுகி அறையில் இரவில் பேச்சுச் சத்தம் கேட்பதாகவும் இடையிடையே சிணுங்கல் மற்றும் அழுகைச் சத்தம் கேட்பதாகவும் கூறுவார் நாம் நம்புவதில்லை. அதே நேரம் அந்த வீட்டில் வேலைக்காரப் பெண்மணி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறினார்கள், உண்மையும் தான்.
பகலில் எந்த அட்டகாசமும் இல்லை இதனால் எமக்கு பேயைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் விரிவுரையாளர்கள் அறையில் நாம் தனியாக இருப்பதில்லை. எல்லாம் பயமயம் தான்.
யாழ்ப்பாணத்தில் நிறையப் பேய்க்கதைகள் கூறுவார்கள். ஏதோ ஒரு திதியும் நட்சத்திரமும் சேர்ந்து பிறந்தவருக்கு பேய்களைக் கண்ணுக்குத் தெரியும் என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பேய்க்கதை கொத்தியின் காதல் தான்.
//மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பலபேரும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும்//
பாத்துங்க மகளிர் உரிமைக்கு குரல் கொடுக்கிறவங்க யாராவது இதைப் பார்த்தா பிரச்சினை ஆகிடப் போகுது...
இப்படியா .பீதிய கிளப்புறது...(ஆமாம் உண்மையிலே பேய் எல்லாம் இருக்கா? )
ada paavingala neengalum kelambittingalapaa...sir photo edutha neram peyoda email address sa vaangirukkalaame...apa unmayana vibaram therinjirukum...
ஒரு மனிதனின் இறப்பு என்பது மூளையின் இறப்பு. மூளையில் பதிந்த ஞாபகங்களின் இழப்பு, அல்லாமல் உடலிலிருந்து ஆவி போல் ஏதோ பிரிந்து வெளியேறி சாந்தி அடையாமல் தவிப்பதெல்லாம் கிடையாது. உயிர் பிரிந்து விட்டது என்பார்கள். உயிர் பிரிவது என்பதை பொதுவாக மூளை உடம்பின் மீதான தன் கட்டுப்பாட்டை இழப்பதைத் தான் குறிக்கிறது என்றாலும் ஒருவரது உயிர் அப்போது ஒரேயடியாகப் போய் விடுவதில்லை. உயிர் அவனது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. ரத்த ஓட்டம் தடைப் படுவதால் ஒவ்வொரு செல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும்.
அப்படியே ஒரு பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கி டீ குடிக்கப் போகும் டிரைவர் போல உடலை விட்டு ஆவி தனியாகப் போவதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். வெறும் பஸ் டிரைவர் நம் மீது மோதி ஒரு ஆக்ஸிடென்ட் ஏற்படாது. ஒரு பேய் செயல் பட வேண்டுமானால் அதற்கு ஒரு மனம் இருக்க வேண்டும் அப்படியானால் அதற்கு ஒரு மூளை தேவை. மூளைக்கு சக்தி கொடுக்க இதயம், நுரை ஈரல் எல்லாம் தேவை. மூளையின் கட்டளைகளை செயல் படுத்த கை கால்களின் திசுக்கள், நரம்புகள் எலும்புகள் எல்லாம் தேவை இவை எதுவும் இன்றி தனித்து எப்படி ஆவி செயல் பட முடியும். ஒரு "software " கம்ப்யூட்டரின் மெரியிலிருந்து எடுக்கப்பட்டு ப்ரொசசரால் கையாளப்பட்டால் தான் அது செயல் படும். அந்த software ஐ ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் செயல் படுமா?
அப்படி ஓர் ஆவி அல்லது பேய் இருக்குமானால் அது மிக பரிதாபத்திற்குரியது தான் அன்றி பயங்கரமானதாக இருக்க முடியாது. ஏனென்றால் அதனால் பார்க்க முடியாது,கண்ணில்லை. நாம் அதை திட்டினாலும் கேட்க முடியாது,காதில்லை. நம்மைத் தாக்க முடியாது,ஏனென்றால் எலும்பும் சதையும் கொண்ட ஸ்ட்ராங்கான கை ,காலில்லை, சிறகில்லை ஒரு அடி நகர முடியாது.
இறந்த பின் அதீத சக்தி கிடைக்குமா? எல்லா அவயங்களும் உடன் இருக்கும் போதே கையாலாகாது இருப்பவன் அவற்றை எல்லாம் இழந்து இறந்த பின் எங்கிருந்து சக்தி கிடைக்கும். ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.
ஒய்ஜா போர்டு ஆவிகளுடன் பேசுவது என்று சொல்வதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை. பின் லேடன் எங்கிருக்கிறான் என்று எதாவது ஆவி குறிப்பிட்டு காட்டுமா? இறந்தவர்கள் பேயாக உலவ முடியும் என்றால் புஷ்ஷின் கழுத்தில் எத்தனையோ பேய்கள் கை வைத்திருக்கும்.
சுடு காட்டில் பிணத்தை எரிக்கும் போது சில வேளை பிணம் எழுந்து உட்கார்வதுண்டு. இது தீயினால உண்டாகும் எஃபெக்ட். அடுப்பில் ஒரு ப்ளாஸ்டிக் துண்டைப் போட்டாலும் இப்படி நெளியும்.
முன்பெல்லாம் திருடர்களும் சமூக விரோதிகளும் தங்கள் பிழைப்புக்காகவும், குற்றங்களை மறைக்கவும் ஊரில் பேய் கதைகளை உலவ விடுவதுண்டு. வேண்டாதவர்களை அடித்துக் கொன்றும் பேய் மீது பழி போட்டார்கள். இரவில் தனியே மாட்டிக்கொண்டு பயத்தில் ஸ்ட்ரோக், அட்டாக் போன்றவை வந்து ரத்தம் கக்கி செத்தவர்களின் பழி்யையும் பேய்கள் ஏற்றுக்கொண்டது. கள்ளக் காதல் மாட்டிக்காமல் தொடரவும் பேய் துணை நின்றது.
பேய் வந்து ஆடுபவர்கள் நூற்றுக்கு நூறு மன நோய் அல்லது பாசாங்கு வகையில் சேரும். இதனை பற்றி உளவியல் துறை விரிவாக விளக்கம் தரும். பலரும் குறிப்பாக பெண்கள் தங்களது வெளியே சொல்ல முடியாத உளப் போராட்டங்களின் பாதிப்பு, சமூகதால் பிற மனிதர்களால் உண்டான பாதிப்புகள் , அங்கீகாரமின்மை, அடக்கி ஒடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் காரணம், உளச்சிதைவு, பிளவு பட்ட ஆளுமை போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
தினமும் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்யும் கணவனை தண்டிக்க கூட பெண்களுக்கு பேய் பிடிக்கும். காதல் தோல்வி உண்டாக்கும் டிப்ரெஸன் கூட பேய் பிடித்ததாக உணரப்படும். நல்ல மன நல மருத்துவரின் உதவி தேவை.
உருவெளித் தோற்றங்கள் காணுதல், யாரோ காதில் பேசுவது போல் கேட்டல், எப்போதும் மவுனமாய் இருத்தல். ஆவேசமாக அட்டகாசம் புரிதல். அசுர பலத்துடன் செயல்படுதல். எப்போதோ இறந்து போன ஒருவரின் பெயர் சொல்லி அது நான் தான் என்று கூறுதல். தன்னை இன்னொருவராக,கடவுள் அவதாரமாக, கடவுள் சக்தி உள்ளவனாக காட்டிக்கொள்ளுதல் என இந்த லிஸ்ட் நீளும். மனித மனம் மிக விசித்திரமானது. பல மன நோயாளிகள் தான் நோயுற்றைப்பதை அறியவோ நம்பவோ மாட்டார்கள். தனக்கும் மற்றவர்க்கும் பாதிப்பு உண்டாக்கும் எல்லா நடத்தைக்கும் மன நோய் தான் காரணம். பலர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும், குற்றம் செய்யவும் பேய் நாடகமாடலாம். சில பேயோட்டும் இடங்களில் காசுக்காக மற்றவர்களது பேயை தன் மீது ஏற்றுக்கொண்டு ஆடுவது போல் நடிப்பவர்களும் உண்டு. இத்தகைய மன நோயளிகளை பேய் என்று கருதி பேயோட்டும் இடங்களில் கட்டி வைத்து சித்திரவதை செய்வது பாவம். அதுபோல அவர்களை குறி கேட்டாலும் சாமியார்கள் ஆக்கினாலும் நீங்கள் பாவம்.
இன்னும் நம்பத் தகுந்த பலர் தான் பேயை கண்டதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். கண்ணால் காணும் காட்சியை பல சந்தர்ப்பங்களில் மூளை எளிதில் தவறாக பதிவு செய்து விடும். பனை மரத்தடியில் பால் குடித்தாலும் கள் குடித்ததாகவே காணுவர். சுவாரசியமான கதை சொல்வதில் மனிதனுக்குள்ள ஆர்வமும் இதற்கு காராணம்.காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது போல் சில தற்செயலான நிகழ்வுகளுக்கெல்லாம் பேயை கூப்பிடப்படாது.ஆமாம். இருட்டான இடங்களை பார்க்கும் போது மனித மனம் எளிதில் பல கற்பனைகளை காட்சியோடு சேர்த்துக்கொள்கிறது. வெளிச்சம் சூழ்நிலை பற்றி அதிக நம்பகமான தகவல்களை பார்வை வழி தருவதால்.குழப்பும் கற்பனைகள் நீங்கி விடுகிறது.
எல்லா தரப்பு மக்களிடையேயும் பேய் கதைகள் இருந்தாலும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களுக்கும் பேய் கதைகளுக்கும் அதிக தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இதற்கு நான் நினைக்கும் காரணம் அவர்களது மத ரீதியான ஆவி நம்பிக்கயும், இறந்து போனவர்களுக்கு அழியாத கல்லறை கட்டி அவர்கள் நினைவுகளை பாதுகாத்து வருவது தான்.
சில புகைப்படங்களில் பேய் போன்ற உருவம் தோன்றலாம். டபுள் எக்ஸ்போஸர், படம் பதியும் நேரம் காமிரா அல்லது பொருள் அசைவது, டிஜிடல் காமிராக்களில் பதியும் இன்ஃப்ரா ரெட் ஒளிகள், சில நிழல்களின் பதிவு,சில கோனங்கள் என பல காரணங்களால் இப்படி ஏற்படும் அதற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேய் பற்றிய பல வீடியோக்களும் இது போன்ற தந்திரக் காட்சிகளே
copy from knowsath. sathik-ali.blogspot.com
மாடர்ன் டிரஸ் (கருப்பு பிராக் ) அதுவும் ஸ்லீவ்லெஸ் போட்ட பிகரு ...சாரி பேயி ...
கையில என்னமோ பேப்பர் வட்சிருக்கு ...பொம்பள ஆம்பள டோயிலேத்ள என்ன பண்ணுது ,ஏதோ விவகாரமான விஷயம் நடந்ததோ ..லீக் அவுட்டு ஆகம இருக்க ஒரு ஸ்டண்ட் போடுறீங்க ...ம்ம்ம் நடத்துங்க :-)
என்ன அன்ன இது உண்மை தானா? பேய்களில் நம்பிக்கை இருக்கிறது ஆனால் இர்துவரை பார்த்தது இல்லை...
யாரு மேல உங்களுக்கு இப்படி கோபம் அண்ணா? இப்படியெல்லாம் பயம் காட்ட கூடாது ஆமா சொல்லிட்டேன்!!!
நாட்டில் எத்தனையோ பேய்கள் உலவுகின்றன.... @least இந்த பேய்கள் பற்றியாவது லோஷன் அண்ணவால சொல்ல முடிஞ்சுதே!!!!
அட பாவிங்களா... எதுக்கு இந்த வில்லங்கம்.... பேய் பிசாசில் நம்பிக்கை இல்லாட்டியும் எதுக்கு வீண் வம்பு என்டு லைட் இல்லாமல் படுப்பதில்லை என்டு நாளு வயசில் இருந்தே ஒரு சபதம்... கரண்ட் இல்லாத ஊரிலேயே எனக்காக சோலார் லைட் போட்டர் அப்பா...
Even now, என்ட அறையில் 24 * 7 லைட் எரியும்... அட்டாச் பாத்ரூம் என்டதால் அந்த lamps, corridor lamps எல்லா லைட்டையும் hostelலில் எரிய விடாமல் தூங்குவதே இல்லை...
நல்ல காலம் மின்சாரத்துக்கு ஹொஸ்டலில் கட்டத் தேவை இல்லை.. பார்ப்பதில்லை..
எதுக்கு தேவை இல்லாம பேய் பிசாசு பற்றி யோசிக்கவேணும் என்டு cartoon மட்டுமே பார்ப்பன்...
இப்படி எல்லாம் இருந்த என்னை இந்தப் பதிவை வாசிக்க வைத்த லோசனுக்கு தலயில இடி விழ என்டு சொல்லுவது சரியில்லை என்ட தால் என்ன சொல்லுவது என்டு தெரியேல... :-(
நான் நித்திரை கொல்வதே விடியவில தான்... அப்ப தான light ஐ நிப்பாட்டலாம்.. பாவி பாவி என்ட precautions எல்லாம் இப்ப வீணாப்போட்டுது...
Can you believe my stupid phone was in silent mode and it vibrated for a call when i was typing this msg... for a sec my heart stopped beating..
anyways the comments made me laugh... vayiru valikkuthu...
அது ஆச்சர்யமும் அமானுஷமும் நிகழ்ச்சி கேட்க வந்த பேய் ஆக இருந்திருக்கும்.
உங்க பக்கம் வரவே பயமாயிருக்கு :(
அருண் பதிவு எல்லாம் வாசித்த உடன் பயம் அதிகச்சுட்டு அண்ணா உண்மையில் இது உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள்
நெருப்பு இல்லாமல் புகை வராது தானே
இனி இரவில வெற்றி கண்டிப்பா கேக்கணும். "பேய்களுக்கு நன்றி, பேய்கள் அனைத்துக்கும் அன்பு வணக்கங்கள்" என்று யராவது நிகழ்ச்சி தொடங்கினாலும் தொடங்கலாம்
இனி என்ன அந்தரம் அவசரம் எண்டால் jeans ஓடேயே போக வேண்டியதுதான். எதுக்கும் நைட் டியுட்டி காரங்கள இரண்டு மூண்ட ரவுசர் வைச்சுக்க சொல்லுங்க. அட bathroom லயும் மனிதனுக்கு சுதந்திரம் இல்லையா?
என்ன கொடுமை சார்.
ayioooo unmaikuma paiya... nan ungada 1 year Birthday(14/02/2009) andru ungaludaya prog kattan subash anna um sonnaru,,, but nambamudiyavillaya..... athasamayam payamaum iruku,, ayiooo
//இந்த ஆவிகள் பேய்களைக் கண்டதாகச் சொன்னவர்கள் கண்டநேரம் இரவு 10மணியிலிருந்து அதிகாலை 5மணிக்குள்.//
ஆவிகள் வேலை செய்யும் நேரம்(Working time) போல :)
/நெருப்பு இல்லாமல் புகை வராது தானே//
பனிப்புகைக்கு எந்த நெருப்பு ஆதாரம்?
- கேள்வி உபயம்
நவலடியான்,
என் பத்தாம் வகுப்புத் தோழன்!
//விகள் வேலை செய்யும் நேரம்(Working time) போல :)//
7 மணி நேரம்தான் வேலையா!
கொடுத்து வெச்ச ஆவிகள்!
அட ச்சீ...சும்மா பேச்சுக்கு 'பேய்' ன்னு சொன்னாலே மூச்சா போயிருவேன்...இதுல படத்த வேற போடனுமா?? சரி.. கண்ண மூடிட்டு, scroll பண்ணி கொஞ்சம் கீழ போய் திறந்து பாக்கலாம்னா ரெண்டாவது படம்...ஐயோ..இன்னிக்கு தூங்கின மாரி தான்..
ஏன்?? ஏன்???? ஏன்???!!
ஏய்யா ஏன், நல்லா தானே போய்க்கிட்டிருக்கு, அதுக்கிடையில பேயினு பயமுறுத்துறீங்க! மாப்ளே....மாப்பு ... வச்சிட்டான்யா ஆப்பு
அங்கே எங்களுக்கு எதுனா ஓபனிங் இருக்குமா?
இங்கே லே ஆஃப் பண்ணிடுவாங்கன்னு பயமா இருக்கு!
:(
எங்களை மாதிரி ஆக்கள் அங்கே வேலை பார்க்குறதா எழுதி இருக்கீங்க!
அவங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தி வையுங்கோவேன்!
அண்ணோய்!!! ஆரம்பிச்சுட்டீங்களா? அதுசரி, அந்தநேரம் விமல் எங்கே இருந்தார்?
இலங்கையரச புழுகுப் பீரங்கி ரம்புக்வெலவை காவலுக்கு அமர்த்தினால் பேய் பிசாசுகள் போகுமென சாத்திரிகள் சொல்கிறார்கள்.
கேட்டுப்பாருங்கோ லோஷன்.
அண்ணா நீங்க ஆரம்பத்தில் இருந்த வானொலியில் செய்த ஒரு நிகழ்சி ஜாபகம் வருகிறது அமாவாசை இரவு ........... எம்மில் ராஜா அண்ணாவும் ஜாபகத்துக்கு வர வைத்திட்டிங்க .......... . பேய் பற்றிய ஆராட்சி என்னும் போகலையோ
ஆமா அருண் அண்ணாவால் எப்படி இப்படி இருக்க முடிகிறது....? பாவம் அதிகாலையில் ( 3.30) தனிய இருக்கிறாரே... கொஞ்சம் பாத்துக்குங்க...
தம்பிமார் உங்கை என்ன நடக்க்குது??
நான் உந்தக் கட்டத்துக்கு நித்திரை ராசாமார்??
அதிலை ஒன்று மறைக்கப்படுற உண்மையளை வெளிய உங்கடை றேடியோவிலை எண்டாலும் சொல்லுங்கோவன் என்று அலையுற லசந்தவிண்டை ஆவி என்றும் கேள்வி...
உண்மையோ ராசா???
அப்பு உந்தப் பதிவு நீரே எழுதினது?
நீர் லோசனோ இல்லை ஆ...வியோ?????????
தம்பியவை இப்பவே கண்ணைக் கட்டுதே???
நான் கொஞ்சம் பிசி..திடீரென்று உங்கடை பக்கம் வந்தால் இப்பிடி எல்லாம் பயமுறுத்துறீங்களே??
இதெல்லாம் நாட்டிலை சகஜமப்பா..
நாங்களும் தான் தினமும் சாகிற படத்தை இன்ரநெற்றிலை பார்த்துக் கொண்டு இருக்கேல்லையோ??
அதுக்கென்ன ஆவி தானே?
அது கேட்கிறதைக் குடுத்தாப் போச்சு போயிடும்?
அவசரகாலச் சட்டத்திலை ஆவிகளைப் பிடிக்க ஏதும் வழி இருக்கோ?
ஆராவது சொல்லுங்கோவன்?
எதுக்கும் உங்கட அலுவலகத்தை வடியா அலசி ஆரயுங்கோ ...பேய் பேய் எண்டு கதைவிட்டு சைக்கில் காப்பில அவன் அவன் இருக்கிறதெல்லாம் சுருட்டிகொண்டோ ஓடபொகிறாந்க்கள்... ...எதுக்கும் சி ஐ டி அண்ணை மாறிட்ட கேட்டு பாருங்கோ..அவயாலும் பேய் மாதிர்த்தான் றெக்கி எடுப்பினம்..பிறகு பேய் வெள்ளை சாறியோட வாறமாதிரி அவையளும் வேறை வெள்ளையளோட வந்திடுவினம்..கவனம்
அம்மாடியோவ்! அதே ஆண்கள் கழிவறைபக்கம் நானும் ஒருதரம் போன ஞாபகம் நல்ல பூசாரியார் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கோ போய் முதலில தாயத்து ஏதாவது கட்டவேண்டும். அப்பா இனி வெள்ளி இரவு கோவிந்தா கோவிந்தாதான்!!!
உந்தப் பேய்களைப் பிடிக்கிறதுக்கு அவசரகாலச் சட்டத்திலை இடம் ஏதும் இருக்கோ????
ஆருட்டையும் கேட்டுப் பாருங்கோவன்??
அண்ணா இரவில் நானும் தான் வேலை செய்கின்றேன். பாத்து கவனியுங்க. இங்கு மற்றவர்கள் போடும் பின்னூட்டல்களைப் பார்த்தால் பயமாகிடக்கு. வேண்டாம் நான் இன்று நானாட நீயாட செய்யணும். விட்டிடுங்க.
"வேண்டாம் நான் இன்று நானாட நீயாட செய்யணும். விட்டிடுங்க"
சதீஷன் உங்க கூட யாருப்பா சேர்ந்து அடப்போறா, அருண் சொன்ன மாதிரி அந்த இரண்டு பெரும் தன் வந்து ஆடுவார்கள் போலதேரியுது எனக்கு
எதோ நடத்துங்கள்
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது உங்கள் பதிவுகள் பார்த்து இன்று பார்க்கலாம் என்று வந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைக்கவில்லை ...எனது (கனடா) நேரம் 1 இரவு மணி அளவில் இந்த பதிவை வாசித்தேன் அப்புறம் எப்படி நித்திரை ஒழுங்கா வரும் அதுவும் நான் தனியாக இருப்பவள் ..இதை பாத்தபின் சிவராத்திரி தான்..
மெய்யோடு பொய்யாக ஊர் தூங்கும் நேரம்
இருளோடு ஒளியிங்கு போர் செய்யும் காலம்
கோட்டானும் சாத்தானும் இரை தேடும் ஜாமம்
இருந்தாலும் இறந்தாலும் பொல்லாதது ஏமம்..
அண்ணா இதுக்கு பயந்தா எப்பிடி?? நான் வேளை செய்யிற அலுவலகத்தில இதவிட மோசம்.இரவில மனிசன் நிம்மதியா வேலையே செய்யமுடியாமல் இருந்தது.பிறகு பழக பழக பேய் சரியாகிட்டுது.யாராவது புதிதாக இரவு தங்கினால் கதை சரி்.. இவை அனைத்தும் உண்மை தான்.(இருட்டிய பின் இறைச்சி வகைகளை உங்கள் அலுவலகத்தில் சப்பிடாமல் தவிர்ப்பது நல்லது)
என்னை பொறுத்தவரை பேயை விட மனிதனுக்கு சிறந்த நண்பன் இல்லை என நினைக்கிறேன்.ஆராய முற்பட வேண்டம் எல்லாம் சரியாகும்.. விரும்பினால் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். நேரில் கண்டால் மிகுதிகதையை சொல்கின்றேன்.பி-கு :- என்னை இரவில் அங்கு தங்க எதாவது வழி பண்ண முடியுமா??
என்ன அண்ணா? இது உண்மையா? என்ன கொடும சார் இது?!
Muttu சென்ன விடயங்கள் எற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும். மருத்துவம் படித்த ஒருவரின் நேரடியான அனுபவம் கேட்ட பின் எனது விதன்டா வாதத்தை தொடர முடியவில்லை.அவர் எத்தனையோ சம்பவங்களை நேரில் கண்டவர்.எனது அலுவலக பேய்ப் பிரச்சினை தொடர்பாக நான் அவரை சந்தித்து கதைத்த நேரத்தில் அவர் முன்வைத்த கேள்விகளுக்கான பதில் என்னிடம் இல்லை.
அவர் கேட்ட கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்...
* சில வேளைகளில் படுத்திருக்கும் போது ஏதோ ஒரு கறுப்பு உருவம் அமத்தியதாகவும் தாம் அதிலிருந்து விடுபட போராடி கத்திய போது அது விட்டு சென்றதாகவும் கூறுவார்கள்..
இதற்கன மருத்துவ ரீதியான விளக்கம்
நாம் படுத்திருக்கின்ற போது நரம்புகள் நசிவதால் முளையின் சிந்தனைப் பகுதிக்கு செல்கின்ன இரத்தம் குறைவதால் அந்த கணம் கறுப்பாக்கப் பட்டு உடல் அசைவிற்கான உத்தரவு தமதப்படுத்தப்படுகின்றது, என்று கூறிய அவர் அப்படியென்றால் இது தினமும் படுக்கும் போது நடக்க வேண்டுமே..! ஏன் அப்படி நடக்கவில்லை??? என்றார்.
*பேய் பிடித்தவர்களை மனநோயாளிகள் என்பார்கள்..
இவ்விதம் தான் சந்தித்த ஒருவரை தெடர்ந்து 2நாட்கள் ஆழந்த உறக்கத்தில் வைத்து குணமாக்கியதாக கூறிய அவர் ஒரு சிறு பிள்ளை விடயத்தில் பயந்து விட்டதாக கூறுகின்றார்.
அவரது நண்பரான பாதிரியார் ஒரு சிறுமியை அழைத்து வந்து இவளுடன் கதைத்துக் கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.15 நிமிடங்கள் சாதரனமாக உரையாடிய சிறுமியின் பேச்சிலும் குரலிலும் வித்தியாசம் திடீரென வருவதை உணர்ந்த அவர் பாதிரியாரை கூப்பிட முற்பட்ட போது ஆவேசமகா நிலத்தில் அடித்த அடியை கண்டு தான் பயந்துவிட்டதாகவும்.நிலமையை விளங்கிய பாதிரியார் உள்ளே வந்து வித்தியாசமான அந்தச்சிறுமியுடன் கதைத்து ஒரு விதமாக மேரி எனப்படும் அந்த பேய் சிறுமியை விட்டு செல்வதற்கு ஒப்புக்கொண்டதாகவும் அது வெளியேறிய போது சிறுமியின் கை கால் என்பனவற்றின் அசாத்திய அசைவுகள் தன்னையும் தனது உதவியாளையும் நிலைகுலைய வைத்ததாக கூறிய அவர் ஒரு சாதாரன சிறுமி மன நோயாளியாக இருந்தால் அவரால் குரலை மாற்றி கதைக்க முடியுமா??தனது உடலின் அசைவின் எதிர் மறை அசைவை மேற்கொண்டிருக்க முடியுமா??எனக்கேட்டார்..
நான் எனது தனிப்பட்ட முறையில் இரண்டு சம்பவங்களை சந்தித்திருக்கிறேன். நண்பர்களுடன் சுற்றுலாசென்ற போது எனது நண்பன் ஒருவன் பாதிக்கப்பட்டு இன்றும் அப்படியே உள்ளான்..
எங்களுக்கு மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை நான் நம்ப வேண்டி உள்ளது.காலமும் நேரமும் அதை உங்களுக்கு காட்டும் வரை காத்திருங்கள் நண்பர்களே.
இப்படி பீதிய கெளப்பறீங்க? :)
//படத்தில் கறுப்பாயும் வெள்ளையாயும் ஏதோ தெரிவது/தெரிந்தது என்ன?
யாருக்குமே புரியவில்லை!//
என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரிலயே? பாகம் குறிச்சு படம் காட்டினாதான புரியும்.
comeing soon
aavigal rasigar manram.
(www.aavigalfans.com)
i am very much intrested in aavigal research...mail that photos 2 me
webdonbala@gmail.com
//
சில வேளைகளில் படுத்திருக்கும் போது ஏதோ ஒரு கறுப்பு உருவம் அமத்தியதாகவும் தாம் அதிலிருந்து விடுபட போராடி கத்திய போது அது விட்டு சென்றதாகவும் கூறுவார்கள்..
//
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இதனை "அமுக்குவான்" என்று ஒரு கதையில் குறிப்பிட்டதாக நியாபகம்..
Hello there,
Interesting topic,
* As you mentioned here I am also looking for Dr.A.Kovoor's book
1.கோர இரவுகள் (வீரகேசரி வெளியீடு, கொழும்பு)
2.மனக்கோலங்கள் (வீரகேசரி வெளியீடு, கொழும்பு)
3.இருளும் ஒளியும் (திராவிடன் புத்தக நிலையம்
Can you let me know how can I buy this book now?
Send you reply to te_jaff@hotmail.com
Thanks
its just a camera trick
i saw many things lik it
do u want me to believe it?
ஆ ஹ அச்ஜ்டக் ந்ப்ச்ட்க சப்பக் த[அச்ம்ட்ஜ்புர்த்ர்பிட்ச்ட்ச்ப்-வ காஸ் ஓயபித்ன்க்
கர்...புர்...உர்ர்... உர்ர்ர்...என்ன போட்டோ உர்ர்ர் எடுத்துடீங்க இல்ல புர் புர் புர்.....ஹா....ஆஆஆஅ....இது ஒரு நரகம்..நரகம் உர்ர்ர். ஸ்ட்பொ ஒட்ப் ப்ட்ஜ்பொக்ப்ப்ஜ்ஸ்ப்வ் ந்னன்பிக் அசந்து ஜேஜே ட்ப் அஸ்ந்ட்ப் இ வி
:D
hi loshan anna...
the fact is existence ghosts (paranormal)is well proven fact and even in spirituality....but they dont have any intention of their own .they are just attract or distract by the tendencies.
simply because that dont have intelligence....according to the modern science and spiritual science , without the physical medium the intelligence CAN NOT exsist.
sooooo...(ithanal naan solla virumbuvathu) even if u saw a ghost dont get scared, because ur far beyond well equiped with your physical body and your intelligence....besides,they dont have any intentions at all...they are helpless..but still a part of a nature .
-suman-
**sorrry if theres any spelling mistakes or french mixings**
Post a Comment