February 13, 2009

காமுகர்கள் கவனம் - Facebook & Myspace

உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான இளசுகளின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அங்கம். ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரமாவது Facebookஇல் செலவழிக்காவிட்டால் ஒருவனது/ஒருத்தியினது இளமையினையே தொலைத்துவிட்ட அளவுக்கு Facebook செலுத்துகின்ற ஆதிக்கம் மிக அதிகம். இளையோர் மட்டுமன்றி ஏனைய பராயத்தினரும் இதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது Facebookஇன் அண்மைக்காலப் பிரபல்யத்தினால் மேலும் புலப்படுகிறது. 

உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Facebook 8ம் இடத்தில். அண்மையில் தான் Facebookஇன் 5வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள facebookகிகளால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

Facebook போலவே நட்புறவுகளை இணைக்கின்ற சமூகக் குழுக்கள்,ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய இதேபோன்ற தளங்கள் தான்MySpace,Orkut,Wayn,Hi 5 போன்றன. ஆங்கிலத்தில் இவை Social networking sitesஎன்று பொதுப்படையாக அழைக்கபடுகின்றன.

Facebookஇன் நேரடிப்போட்டியாளர் என்று கருதப்படும் அளவுக்கு Myspaceக்கும் க்கும் இடையில் கடுமையான போட்டி.உலகளாவிய ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிற இணையத்தளங்களில் Myspaceஇருப்பது 6ஆம் இடத்தில்.

எனினும் ஏனைய எல்லா சமூக நட்பு இணையதளங்களையும் விட Facebook பாதுகாப்பானதும் சமூகப் பொறுப்பு வாய்நததும் என்று கருதப்படுகிறது. காரணம் Facebook இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் சொந்தப் பெயர் (சுயபெயர்) பாவனைக் கொள்கை தான்! 

இதன்மூலம் பாலியல் குற்றங்கள் சட்டவிரோத செயல்கள் போன்ற தகாத நடவடிக்கைகள் அதிகளவில் தவிர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதேபோன்று நிர்வாணப்படங்கள் தகாத பிரச்சாரங்கள் பொன்றனவும் Facebookஇல் கூடுமானவரை தவிர்க்கப்படுகின்றன.

MySpaceஇலும் இதே போன்ற நடவடிக்கைகள் இருப்பதாக இதுவரை பெருமை பேசப்பட்டு வந்தாலும் இணையத்தில் பாலியல் பிரச்சினையை ஏற்படுத்தவோர் (sex offenders) பற்றி விசாரணைகளை அமெரிக்காவின் சிறப்பு விசாரணைக்குழு ஒன்று ஆராய்ந்த வேளையில் MySpaceஇல் 90000 பாலியல் குற்றவாளிகள் பாலியல் நோக்கங்களுக்காகவே பதிவுசெய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் பலதடவை பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்காவில் தண்டனை பெற்றவர்கள். இவர்களது நடவடிக்கைகள் தொடக்கம் அங்க அடையாளங்கள்,டட்டூக்கள்(Tattoos),வடுக்கள் வரை அத்தனையும் பாலியல் குற்றங்களை அமெரிக்காவில் கண்காணிக்கும் அமைப்பிடம் உள்ளதாம்!

இந்த 90000 பேரும் இனிமேலும் MySpaceஇல் நுழையாமலிருக்கும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.

மறுபக்கம் Facebookஇல் எவ்வளவுதான் விதிகள் இறுக்கமாக இருந்தாலும் பலவிதமான பாலியல் நடவடிக்கைகள் நடந்தவண்ணமே உள்ளன. (சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)

யுத்தம்,இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கெதிராக மற்றும் பல விழிப்புணர்வு விடயங்கள்,அறிவூட்டல் சமாச்சாரங்கள் இன்னும் எவ்வளவோ விடயங்களுக்காக பிரயோசனமான பல groups இருந்தாலும் கூட வேலை மினக்கெட்டு பாலியல் விளையாட்டுக்களுக்கென்றும் ஒரு கூட்டம் அலைகிறது.

இதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.வளர்ச்சியடைந்த அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இவை போன்ற தளங்களின் காமுகர்களினால் வாழ்க்கை தொலைந்து,அழிந்து போன பல இலம்பராயத்தினர்,ஏன் இளைஞர்கள்,குடும்பப் பெண்கள் என்று பட்டியல் நீளுகிறது..  

Myspaceஇலிருந்து விரட்டப்பட்ட இந்த 90000 பேரும் ஏதோ ஒருவிதத்தில் Facebookஇல் நுழைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவாம்!

நீங்களோ உங்கள் சகோதரர்கள் பிள்ளைகளோ இவ்வாறான Facebook,Myspace,Hi5,Orkut போன்றவற்றின் பாவனையில் ஈடுபடும்போது ஆழ்ந்துபோகாமலும் அடிமையாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.

(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..)22 comments:

கலை - இராகலை said...

இவ்வளவு நடக்குதா?? இவ்வளவு நடக்குதா?? சொல்லிவிட்டிங்க தானே ரொம்ப நன்றி

காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா

பதி said...

பயனுள்ள பதிவு லோசன்... நீங்கள் இங்கு குறிப்பிட்ட பெரும்பாலான விசயங்கள் orkut'க்கும் பொருந்தும்...

//நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..//

நான் இன்னும் orkut'ல் குடியிருப்பவன் !!!!! :)

’டொன்’ லீ said...

ம்..இதென்ன Friday the 13th பதிவா..?

Son of கொழுவி said...

(சும்மா keywords போட்டு தேடிப் பார்த்தீங்கன்னா தெரியும்)//

விளக்கமாகச் சொல்லித் தரவும்

Sinthu said...

Oh really anna..........
I used to be there for along time during last vacation and previous days but I can't b any more because of my studies.
I know that many times i disturb many people, especially, Vettri family including u...........

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

வதீஸ்வருணன் said...

நல்ல பதிவு. அவர்கள் இப்போ வாலைப் பதிவுகளையும் குறிவைக்கிறார்களாம். "உங்களுடைய இந்த வலையம் நன்றாக இருக்கிறது." போன்ற வார்த்தைகளை பின்னூட்டமாக இணைக்கின்றார்களாம். நண்பர்களே கொஞ்சம் பார்த்து... உசாராக இருங்கள்.

வதீஸ்வருணன் said...

நல்ல பதிவு. அவர்கள் இப்போ வலைப் பதிவுகளையும் குறிவைக்கிறார்களாம். "உங்களுடைய இந்த வலையம் நன்றாக இருக்கிறது." போன்ற வார்த்தைகளை பின்னூட்டமாக இணைக்கின்றார்களாம். நண்பர்களே கொஞ்சம் பார்த்து... உசாராக இருங்கள்.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Asfar said...

Dear brother Loshan, have a nice day, Actually i too joined wiht net some years ago but just i could be known about the Facebook, anyhow very good good article...
while my larning period, mostly i will listen your voice back Shakti fm for IQ knowlege..
with regards..
asfar

Anonymous said...

உண்மையாலுமா????

Eelaththamilan said...

Insightful post.... here is another finding of this social networking site...http://www.snugd.com/2008/07/12/identity-crisis-faced-by-the-facebook-generation/

ponnaiha said...

ஹாய் அண்ணா
(நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..)

இப்பொழுதுதான் நிம்மதி, அப்படி என்றால் எனிப்பயம் வேண்டாம் .பதிவுக்கு நன்றி அண்ணா தொடந்து விகடன் புகழ் தானே அண்ணா.

tamil cinema said...

இதிலே பயமுறுத்தும்,அருவருக்கத் தக்க விடயம் இந்தக் காமுகர்கள் குறிவைப்பது விடலைப் பருவ ஆண்களையும்,அறியாப் பருவச் சின்னப் பெண்களையும் தானாம்.....

நல்லவேளை எனக்கு நீங்கள் சொன்ன Facebook எல்லாம் தெரியாது லோசன்.

வேத்தியன் said...

மிக நல்ல எச்சரிக்கைப் பதிவு...

Subankan said...

//நானும் ஒருகாலம் Facebookமோகம் பிடித்து நாள்தோறும் Facebookஇலேயே குடியிருந்தவன் தான் வலைப்பூவின் புண்ணியத்தால் இடம்பெயர்ந்து விட்டேன்..இப்போதும் Facebook பக்கம் போய் வந்தாலும், நீண்ட நேரம் உலா வருவதில்லை..//
நானும்தான் அண்ணா

Anonymous said...

Anna only one question...

neenga "Nai kadikkum kavanam" mathiri "kamuharhal kavanam" endu solreengala...

allathu..

"pathai valukkum kavanam" enda mathiri kamuharhale kavnamaha irungal endy solreenglaa???

he he..Sanjay:-)

vipulananda said...

Excellent blog. Please keep up your good work.

Thusha said...

ஆமம் அண்ணா ரொம்பவே பயமுறுத்திரிங்க

attack pandiyan said...

எனக்கு தெரிந்து எல்லா இணைய வழங்குனர்களையும் ஒருங்கினைத்து அவர்களை நாட்டின் அரசின் கீழ் இயங்கும் பொதுதுறை நிறுவனத்தின் மூலம் செயல்பட வைக்க வேண்டும்... ஒரே ஒரு சர்வரின் மேக் அடிக்கின் கீழ் அனைத்து கணிணிகளும் இயங்க வேண்டும்... அந்த சர்வரில் நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராத அனைத்து இணையங்களையும் தடைசெய்யவேண்டும்...

http://siruthai.wordpress.com/

SASee said...

Social networking sites என்று அழைக்கபடும் குறிப்பிட்ட தளங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. இதைக் குறிப்பிடும் நானும் அன்மையில் Face Book இல் இணைந்து கொண்டேன். இதற்கு முன்னர் எனது நண்பர்கள் பலர் இது போன்ற வெவ்வேறு தளங்களை வெகு காலமாக பாவித்த வருகின்றனர். அந்த தளங்களில் அவர்களும் ஒரு சில மணித்தியாளங்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சில நேரம் அதற்கு மேலும் செலவிடுகின்றனர். ஏன் நாம் E-mail Account பாவிக்கிறோம் அதுபோல, E-mail இலும் கூட spam or junk mail போன்ற வடிவத்தில் இது போன்ற பாலியல்,வைரஸ் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்வது...? இன்று எங்களைப் போன்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ மின்னஞ்சல் வழியாகதான் எல்லாமே.... இப்படியும் ஒரு பிரச்சினை.
அது ஒரு பக்கம் இருக்க Face Book போன்ற Social networking sites இனால் என்னைச்சூழ உள்ளவர்களுக்கு கிடைத்த நன்மை பல வருடங்களுக்கு முன் பிரிந்து போன சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கணினித் திரையினூடக் கைகுளுக்கி கொள்கின்றனர், சந்தோசப்படுகின்றனர், விட்டுப்போன உறவு தொடரிக்கின்றது......... ஏன் என் உயரதிகாரி முதல் அனைவரும்.

ஆக இது போன்ற தளங்களின் பக்கம் செல்வதுதென்பது என்னைப் பொறுத்தவரை பிழையில்லை..! இருப்பினும் தெரிவு செய்த தளங்களை நன்றாக பரீட்ச்சித்துப் பார்த்து அல்லது தளங்களில் பிரவேசிப்பவர்களிடம் அந்த தளம் பற்றிக் கேட்டு பிரவேசிப்பது மனிதர்கள் என்ற வகையில் எமது கடமை. இணையத்தளங்களில் பாலியல் தொடர்பான தளங்கள் பல இலட்ச கணக்கானவை இருக்கத்தான் செய்கின்றது. ஆக தொடர்ந்தொருவர் இது போன்ற தளங்களை பாவிப்பாறென்றால் அவர் ஒரு வகையில் மனநோயாளி.
எப்படியும் நேரம் காலம் இவற்றை கவனித்து வேளை செய்ய மனிதன் பழகிக்கொள்ள வேண்டும்.


நன்றி.

என்ன கொடும சார் said...

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்..

சாத்தான் வேதம் ஒதுவதுபோல்..

:)
:)

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified