February 20, 2009

நான் கடவுள் - நான் பக்தனல்ல !!!

பல காலம் எதிர்பார்க்கப்பட்டு நீண்டகாலத்தின் பின் (மூன்று வருடங்கள் என நினைக்கிறேன்) வெளிவந்து சர்ச்சைகள் பாராட்டுக்கள் என்று பலதரப்பட்ட கலவைக் கருத்துக்களோடு இந்தியா, இலங்கை என்று உலகம் முழுவதும் காட்சி தருபவர் தான் 'நான் கடவுள்'.

சில படங்களைப் பார்க்க முதலே நான் விமர்சனங்களைக் கூடியவகையில் வாசிப்பதைத் தவிர்ப்பதுண்டு. காரணம் விமர்சனம் என்ற பெயரில் முழுக்குறைகளையும் சொல்லி முடிவையும் எழுதிப் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தையே இல்லாமல் செய்துவிடுவர் சிலர்.

ஆனால் நான் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்ட சில தரம் கூடிய படங்களின் விமர்சனங்களை மட்டும் வாசித்துவிட்டு 'அப்பாடா தப்பிட்டோம்' என்று சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு.

பதிவர்களின் தலையாய கடமை என்பதற்கேற்ப 'நான் கடவுள்' வந்தவுடனேயே பரபரவென்று விமர்சனங்கள் பதிவுலகம் எங்கும் பிரசுரமாயின.

படத்தைப் பார்த்து பிறகு நண்பர்கள் எல்லோரது (அநேகமாக) விமர்சனங்களையும் வாசித்தேன் பின்னூட்டங்கள் இட்டால் என்னுடைய கருத்துக்கள் அங்கேயே வந்துவிடும் என்ற காரணத்தால் யாருக்குமே பின்னூட்டம் போடவில்லை.

'பாலா தான் கடவுள்'
'படம் என்றால் பாலா போல எடுக்கணும்'
'இதுதான் THE BEST' 
என்று ஒரு சில..

மறுபக்கம்
'படமா இது?'
'அகம் பிரம்மாஸ்மி- ஆளை விடுடா சாமி' 
'வன்முறை ரொம்ப ஒவர்'
'இதுக்கா மூன்று வருஷம்'
என்று ஒரு சில..

நான் கடவுள் பார்க்கிற நேரமே ஏதாவது எழுதவேண்டும் என்று இருந்த எண்ணங்களை இந்த விதவிதமான வேறுபட்டு இருந்த விமர்சனங்களுக்குப் பிறகு தள்ளிப்போட்டேன். அவை எவற்றின் தாக்கமும் இருக்கக் கூடாதென்று.

நான் விமர்சனம் எழுவதில் expertம் அல்ல. திரைப்படங்கள் பற்றி எழுதப் பெரியளவில் ஆர்வமும் இல்லை!

வாசிப்பதிலும் வானொலியில் அதுபற்றி சினிமா நிகழ்ச்சியில் அலசுவதிலும் இருக்கும் ஆர்வம் ஏனோ எழுதுவதில் இருப்பதில்லை. (அதிக வேலைப்பளு ஏற்படுத்தும் இயற்கையான சோம்பல் இதற்கான காரணமாக இருக்கலாம்)

எனினும் சில திரைப்படங்களைப் பார்க்கும் நேரம் ஏதாவது எழுதத் தூண்டும். அதை எல்லாம் விமர்சனம் என்று எண்ணாமல் என் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ளவும்.
(ஏற்கெனவே ஜெயம்கொண்டான்,சிலம்பாட்டம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்) பலபேர் கும்மியடித்து குதறிவிட்ட திரைப்படங்களைத் தொட மனமே வராது.  (உ.ம் - வில்லு,ஏகன்,படிக்காதவன்)

இனி நான் கடவுளும் நானும்! ..

உங்களில் அநேகர் 'நான் கடவுள்' பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது சில கருத்துக்கள்.

ஆமோதிப்போ ஆட்சேபமோ பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.


தமிழ்த்திரைப்படங்களில் நாயகர்களின் படங்கள் என்ற நிலையைக் கொஞ்சமாவது மாற்றி இயக்குநர்களின் படங்களைத் தந்தோர் ரொம்பவும் அரிது.
ஸ்ரீதர்,கே.பாலச்சந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,மணிரத்னம் ....

இவர்களின் வரிசையில் அண்மைக்கால வரவுகளான ஷங்கர்,பாலா,சேரன்,தங்கபச்சான்,அமீர் என்போரையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எனினும் பாலாவின் முன்னைய 3 திரைப்படங்களோடு பாலாவை அதீத உயரத்துக்கு ஊடகங்களும் விமர்சனங்களும் கொண்டுபோயுள்ளதாக நான் கருதுகிறேன்!

'சேது' வில் தென்பட்ட யதார்த்த நிலை 'நந்தா'விலும் 'பிதாமக'னிலும் தொலைந்து போய்,விளிம்பு நிலை மனித வாழ்க்கை,அசாதாரண நடத்தைகள்,அதீத வன்முறை வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையிலும்,கதாநாயகப் படைப்பிலும்,அவனது சில அம்சங்களிலும் இயக்குனர் பாலா பிடிவாதமாக சில ஒரே விதமான அம்சங்களை 
(stereo type) பிடிவாதமாக வைத்திருக்கிறார் போலத் தெரிகிறது.
(முரட்டுத் தன்மை,தாய்ப்பாசம் கிடைக்காதவன்/வெறுப்பவன்,ஆவேசமானவன்,மற்ற எல்லோரையும் விட அசாதாரணமான பலம் உடையவன்.. இப்படி அடுக்கிக் கொண்டே போகுமளவுக்கு பாலாவின் ஹீரோக்களுக்கிடையில் ஏராளமான ஒத்த அம்சங்கள்) 

சேதுவில் வந்தது போல வாழ்க்கையில் என்னை,உங்களை போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிற,இயல்பான மனிதர்கள் பாலாவின் கதாநாயகர்கள் ஆவது எப்போது? (பிதாமகன் சூர்யா விதிவிலக்கு)

எங்களுக்கு வடிவேலுவும்,விவேக்கும் வந்து அடிக்கிற அபத்த ஜோக்குகளோ,மரத்தை சுத்தியோ,சுவிட்சர்லாந்து,நியூ சீலாந்து,தாய்லாந்து போயோ ஆடிப் பாடுகிற டூயட்டுக்களோ,வாகனங்கள் அங்கும் இங்கும் பறந்து,வாள்,கத்திகள்,அரிவாள்கள் சீவி சுழன்று இரத்தம் கக்கும் கிளைமக்ஸ்களோவேண்டாம்.

ஆனால் பாலாவின் இவை போன்ற படங்கள் தான் யதார்த்தம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

யாருமே பேசாத மனிதர்கள் பற்றி பாலா தனது திரைப்படங்களில் பேசுகிறார். அதற்காக மிகுந்த பிரயத்தனப்படுகிறார்.சரி ஆனால் திரைமுழுதும் இத்தனை கோரம் அகோரம் இரத்தம் வேண்டுமா?

நேரிலே வாழ்க்கையில் நாம் காணும் இன்ன பிற அழிவுகள் போதாமல் திரையிலும் வேறு வேண்டுமா?

நிஜ வாழ்க்கையில் நடப்பதையே திரையில் காட்டுகிறார் பாலா என்ற வாதத்தை வைத்தாலும் கூட ஒரு சதவீதத்துக்கும் குறைவாக சமூகத்தில் நடக்கும் விடயங்களை பூதக்கண்ணாடி மூலம் பிரசாரப்படுத்துகிறார் பாலா!

பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் எவ்வாறு அதீதமான விலங்குப் பாவனைகளோடு காட்டப்பட்டதோ (விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தாலும் அந்த பாத்திரத்தின் நாடகத்தன்மையான நடிப்புக்கும் -தங்கமலை ரகசியத்தில் சிவாஜி கணேஷனின் அதீத நடிப்புக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.)அதே போலத் தான் இதிலும் ஆர்யாவின் பாத்திரத்தில் ஒருவித இறுக்கம்,மிருகத்தனம் கலந்து செயற்கை பூசப்பட்டுள்ளது. கண்களில் மட்டும் ஒரு தனி வெறியும்,ஆழ்ந்த தன்மையும்.


நாயகர்களை உருவாக்கும் பிரம்மா பாலா என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்! 

பாலாவின் திரைநாயகர்கள் மூவருமே பாலாவினால் செதுக்கப்பட்டவர்கள்.(விக்ரம்,சூர்யா, இப்போது ஆர்யா) சவடால் வசனங்களைப் பேசும் நாயகர்கள் மத்தியில் - பாத்திரமாக அவர்களை ஒன்றித்து விடும் கலை பாலாவுக்கே உரியது தான்!

தனது திரைப்படங்களில் ஏனைய பாத்திரங்களிலும் அந்தந்த பாத்திரப் படைப்புகளுடன் ஒன்றிக்க வைத்து புதிய வாழ்க்கைகளை உருவாக்கி உலவ விடுவதில் நான் கடவுளிலும் பாலா ஜெயித்திருக்கிறார். 

சேதுவில் - அபிதாவின் அண்ணன் 
நந்தாவில் - ராஜ்கிரண்
பிதாமகனில் - மகாதேவன்

போல நான் கடவுளிலும் பாதிரங்களாகவே வாழ்ந்தவர்கள் பலபேர்.

பிரதான பாத்திரங்களில் ஆர்யாவும் பூஜாவும் குறைசொல்ல முடியாமல் தங்கள் வாழ்நாளின் மிகச் சிறப்பான,வாழ்நாள் முழுவதும் பேசப்படக்கூடிய பாத்திரங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

பாலாவின் இயக்கத்தில் மரம்,மட்டையே நடிக்கும்போது அவர்களால் முடியாதா?

விழிப்புலற்றவராக இதுவரை ஒரு நாயகி இவ்வளவு இயல்பாக (தமிழில்) நடித்து நான் பார்த்த ஞாபகம் இல்லை. எனினும் பூஜா வரும் பாடும் காட்சிகளில் அவரையே பாடவிட்டிருக்கலாம் என்றே தோன்றியது. செயற்கையாக இருந்தவற்றுள் அதுவும் ஒன்று. குறிப்பாக ' அம்மாவும் நீயே' பாடல் நகைச்சுவையாகப் பயன்படுத்தப்பட்ட காட்சியிலும் பூஜா பாடுவது போல வாயசைப்பது மிகப் பெரிய நகைச்சுவை.

புதிய வில்லன் ராஜேந்திரன்(தாண்டவன்) ஒரு பிரமாதமான அறிமுகம். லாவகமாக மிரட்டுகிறார். குரல் தொனியும் முகமும் கொடூர விழிகளும் - எங்கே இருந்தார் இவ்வளவு நாளும்?? எனினும் வேறு யாராவது இயக்குநர் இவரைப் பார்த்திருந்தால் நிச்சயம் இன்னொரு வடிவேலுவாகவோ முத்துக்காளையாகவோ தான் மாற்றியிருப்பார்.

காசியின் பிரதான சாமியார்,கை கால்களற்ற மலைச்சாமியார்,ஆர்யாவின் தங்கை,கவிஞர் விக்ரமாதித்தியன்,முருகனாக நடிப்பவர்(என்ன அருமையாக நடித்திருக்கிறார்.. தேவையான இடங்களில் வன்மம்,குரூரம்,பின்னர் நகைச்சுவை,பரிதாபம்,அனுதாபம் என்று கலவையாக மனிதர் கலக்குகிறார்) பொலீஸ் அதிகாரி என்று அனைவருமே பாத்திரப் படைப்புணர்ந்து பலம் சேர்ந்துள்ளார்கள்.

பாலாவுக்கே இந்தப்பாராட்டுகளும்!

வழமையான பாலா படங்கள் போலவே,இதிலும் நகைச்சுவைக்கென்று தனியாக யாரும் இல்லாமல் பொதுப்படையான பாத்திரங்களே இங்கும் சிரிக்கவைக்கின்றார்கள்.. ரசிக்கக் கூஇயதாகவே இருந்தாலும்,நகைச்சுவை வழியாகவும் ஜெயமோகன் தெரிகிறார்.

பாலாவின் மூன்று ஆண்டு மினக்கேடு பிச்சைக்காரக் கூட்டத்தினரைப் பார்க்கும்போதே தெரிகிறது..அவர்களைத் தேடிப்பிடிப்பதற்கும்,நடிக்கப் பழக்குவதற்கும் ,அதிலும் இயல்பாக நடிக்க சொல்லிக் கொடுப்பதற்கும் நிச்சயம் பாலாவுக்கு காலம் பிடித்திருக்கும்.

அனைவரது உடல் மொழிகள்,அங்க அசைவுகள்,முக பாவனைகள் அருமை..மனதை உருக வைக்கிறார்கள்..
எனினும் அந்த அப்பாவிகளின் அங்கவீனங்களையும்,அவர்களின் பிறப்பின் அகோரங்கள்,அலங்கோலங்கள்,இயலாமைகளை காட்சிப்படுத்தி பரிதாபம் தேடுவது (பிச்சைப் பாத்திரம் பாடல் முழுவதுமே இது தான்) மனதுக்கு கஷ்டமாக/உறுத்தலாக மற்றவர்களுக்கு - குறிப்பாக பாலாவுக்குப்படவில்லையா?

மிருகங்களை வதை செய்து காட்சிப்படுத்துவதைத் தடுக்க Blue cross இருப்பதுபோல இந்த விதமான பரிதாபக் காட்சிபடுதலுக்கு எதிராக எந்த அமைப்பும் இல்லையா என்ற கேள்வி எனக்குள்..

எனினும் இருவேறு கதைக்களங்களைச் செய்ய வந்த பாலா இரண்டில் எதற்குப் பிரதானம் கொடுக்கவேண்டும் என்பதில் அகோரி பக்கம் சாய்கிறார்.

இரண்டு தளங்களையும் ஒன்றாக இணைக்கும் இடமும் தளம்புகிறது. ஏனைய இவரது மூன்று திரைப்படங்களிலும் இல்லாத இந்த வித்தியாசம் பாலாவின் திரைப்பட ஒட்டத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

இதனால்தான் திரைப்படத்தின் நீளம் கூடியது என்று நான் நினைக்கிறேன். இளையராஜாவின் இசையில் இரு நல்ல பாடல்கள் மட்டுமே படத்தில் வந்து ஏனையவை வராமல் போவதற்கும் இதுவே தான் காரணம் போல!அச்சாணி திரைப்படத்தின் மீள் உருவாக்கப் பாடலான 'அம்மா உன் கோவிலில்' பாடலைத் திரையில் காணச் சென்ற எனக்கும்,இன்னும் பலருக்கும் ஏமாற்றமே.

பின்னணி இசையின் பிதாமகன் தான் தான் என்பதை இளையராஜா மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். அவரின் இசை கலங்க வைக்கிறது,கதறியழ வைக்கிறது,தட தடக்க வைக்கிறது,தவிக்க வைக்கிறது,கண்கலங்க வைக்கிறது... பல இடங்களிலும் ஆர்தர் வில்சனின் கமெராக் கண்ணுக்கு துணை வந்து வழிநெடுக படத்தைக் கொண்டு செல்கிறது.

எனினும் பாலாவின் முன்னைய படங்கள் போலன்றி நான் கடவுளில் கமெரா படத்தின் பிற்பகுதியில் கைகொடுக்கவில்லை.ஆரம்பக் காசி காட்சிகளில் கமெரா கொடுத்த அழுத்தமான,பிரமிப்பான பதிவுகளை ஏனோ பின்னர் வந்த காட்சிகள் தரவில்லை.

பாலாவின் முன்னைய படங்களின் பல பாதிப்புக்கள் பல இடங்களில் சலிப்பைத் தருகிறது.

பழையபாடல்களின் தொகுப்புக்கு ஆடுவது,சண்டைக் காட்சிகளில் தொனிக்கும் அகோர வன்மமும்,வன்முறையும்,நாயகன் எந்த ஒரு பாச உணர்வுக்கும் கட்டுப் படாதது,நீதிமன்ற,போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. இப்படியே அடுக்கலாம்.

  பாச உறவுகளைத் துண்டித்து வா என்று காசி சாமியார் சொன்ன உத்தரவை வாங்கி தமிழகம் வரும் ஆர்யா, தாயின் உறவைத் துண்டித்தபின் உடனே காசி திரும்பாமல் இருப்பது தாண்டவன் குழுவினரை வதம் செய்வதற்காக என்றால் கிளைமாக்ஸ் காட்சி வரை என் தாமதம்? அகோரிக்கு பார்த்தவுடன் தீயவரைத் தெரியும் எனும்போது பார்த்த மாத்திரத்திலேயே சிலரை அவர் போட்டுத் தள்ளும் போது (encounterஇன் ஆன்மீக வடிவம்??) இதில் மட்டும் தாமதம் ஏன்?

இன்னொரு பக்கம் நான் அவதானித்து,அதிருப்தியடைந்த இன்னொரு விஷயம் கண்மூடித் தனமாக இந்து சமயத்தை பாலாவும்,தனது எழுத்துக்களின் நுண்ணிய திறன் மூலமாக ஜெயமோகனும் பிரசாரப்படுத்துவது.

நான் இதற்குமுன் 'ஏழாவது உலகம்' படித்திருக்கிறேன்.ஜெயமோகனின் மேலும் சில படைப்புக்களைப் படித்துள்ளேன்.அவரது நுண்ணிய,வலிமையான எழுத்துக்கள் பற்றி வியந்தும் இருக்கிறேன்.எனினும் இந்தப்படத்தில் அவர் பல இடங்களில் தனது பிரசார நெடியை வீசுகிறார்.

ஆரம்பக் காட்சிகளில் பல மூட நம்பிக்கைகள்,முட்டாள் தனமான சம்பிரதாயங்களை சாட்டையடிக்கும் வசனங்கள்,போலி சாமியார்களைத் தோலுரிக்கும் போது மேலும் வன்மை பெற்றுப் பாராட்டுக்களைப் பெறுகின்றன.

எனினும் சிவாஜி,ரஜினி,நயன்தாரா போன்றோரை மிமிக்ரி செய்யும் அந்தக் காட்சி தேவை தானா? அதுவும் பாலா போன்ற ஒருவருக்கு? மக்களுக்கு செய்தி சொல்கிறோம் என்ற பெயரில் தாங்கள் இருக்கும் துறையில் உள்ளோரையும் வாங்கு,வாங்கென்று தாக்குவது எவ்வளவு சரியென்று எனக்குத் தோன்றவில்லை..

ரஜினியை சாடை மாடையாக தாக்கியும் அந்த மனிதர் இந்தப்படம் பற்றிப் பாராட்டியது அவரது பெருந்தன்மையா? 'இன்னா செய்தாரை' குறள் ஞாபகம் வந்தது..

நயன் மீது பாலாவுக்கு என்ன தனிப்பட்ட கோபமோ? ஒருவேளை முதலில் பூஜாவை ஒப்பந்தம் செய்யமுதல் நயன்தாராவிடம் கேட்டிருப்பாரோ?

  இறுதிக் காட்சியில் பூஜாவின் பிரசங்கத்தில் (!) இந்து சமயம் மட்டுமே முத்தி தருவதாக மறைமுகமாகக் காட்டப்படுவது உறுத்தவில்லையா? எல்லாப் புகழும் உனக்கே (இஸ்லாம்),ரட்சித்தல்,ரட்சகர்,இயேசு (கிறிஸ்தவம்) என்று ஏனைய சமயங்களைத் தாக்கி கேவலப்படுத்தி இந்து சமயமே வரமும்,தண்டனையும் முறையாகத் தருகிறது என்று நிறுவுவது தமிழின் தரமான இயக்குனர்களில் ஒருவர் என்று கருதப்படும் பாலாவுக்கு எத்துணை அழகு என்று எனக்குத் தெரியவில்லை.

இன்னும் இரு காட்சிகளிலும் இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்கள் மீது அவதூறு சாயம் பூசப்படுகிறது..பாலாவின் மீதும்,ஜெயமோகன் மீதும் வைத்திருந்த மதிப்பின் மீது சற்றே எனக்கு சரிவு ஏற்படுத்திய விஷயங்கள் இவை.

அவதிப்படுவோருக்கு எல்லாம் மரணங்கள் தான் முடிவென்று பாலா சொல்லவருகிறாரா? அங்கள் இழந்தோர்,அவயவக் குறைபாடு உடையோருக்கு தற்கொலை அல்லது அகோரி வழங்கும் மரணங்கள் தான் முடிவு என்கிறாரா? சுபமான முடிவுகள் தான் திரைப்படங்களுக்கு வேண்டும் என்றில்லை ஆனால் ஆரோக்கியமான சமுதாயத்துக்கு இது போன்ற கருத்துக்கள் மூலமாக சொல்லவரும் கருத்து அபத்தமாக இல்லையா?

இந்து சமயத்தை இவ்வவளவு தூக்கிப் பிடித்தும் காட்டுமிராண்டிக் கொலைகள் மூலமாக தான் வரங்கள் கிடைக்கின்றன என எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்.. மொத்தமாக என்னால் 'நான் கடவுளை' அபத்தம் என்று சொல்லி ஒதுக்க முடியாவிட்டாலும்,பாலாவின் அறிவுஜீவித்தனமான ஒரு சில இயக்கு நுட்பங்களையும்,பாலாவின் கைவண்ணம் தெரியும் நடிகர்களின் திறமை வெளிப்பாடுகளையும்,இளையராஜா என்ற மேதையின் கைவண்ணத்தையும் விட்டுப்பார்த்தால் 'நான் கடவுள்' ஒரு வன்முறை சாயம் தெளிக்கப்பட்ட கோரமான சோகக் கோலம் என்றே எனக்குத் தெரிகிறது..  

  


    

32 comments:

ஆதிரை said...

//நான் கடவுளை' அபத்தம் என்று சொல்லி ஒதுக்க முடியாவிட்டாலும்,பாலாவின் அறிவுஜீவித்தனமான ஒரு சில இயக்கு நுட்பங்களையும்,பாலாவின் கைவண்ணம் தெரியும் நடிகர்களின் திறமை வெளிப்பாடுகளையும்,இளையராஜா என்ற மேதையின் கைவண்ணத்தையும் விட்டுப்பார்த்தால் 'நான் கடவுள்' ஒரு வன்முறை சாயம் தெளிக்கப்பட்ட கோரமான சோகக் கோலம் என்றே எனக்குத் தெரிகிறது//

என் கருத்தும் இதுவே...
அதுவும் தற்கால சூழ்நிலையில் இப்படம் சொன்ன செய்தியை ஏற்க மனது சங்கடம் கொள்கின்றது.

Gajen said...

அண்ணா..நான் இன்னும் படம் பாக்கேல்ல..Original copy ஒண்டு download பண்ணும் வரெக்கும் பாத்துக்கொண்டு இருக்குறன்..அதுனால முதல் பந்தியோடையே நிப்பாட்டி போட்டன்..சாரி..

Paheerathan said...

//இந்து சமயத்தை இவ்வவளவு தூக்கிப் பிடித்தும் காட்டுமிராண்டிக் கொலைகள் மூலமாக தான் வரங்கள் கிடைக்கின்றன என எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்..//

//இன்னும் இரு காட்சிகளிலும் இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்கள் மீது அவதூறு சாயம் பூசப்படுகிறது..பாலாவின் மீதும்,ஜெயமோகன் மீதும் வைத்திருந்த மதிப்பின் மீது சற்றே எனக்கு சரிவு ஏற்படுத்திய விஷயங்கள் இவை.//

இவற்றால்தான் இது எழுத வேண்டி வந்தது

http://bakeera.blogspot.com/2009/02/blog-post_08.html

HS said...

Submit your blog to the Tamil Top Blogs directory http://kelvi.net/topblogs/

Anonymous said...

Ayya saami vimarsanama ithu padatta porumaya parkka iyalum aanal intha vimarsanattai porumaya read panna mudiyuma theriyala. Itha yeluthuvathrkuttan three days onnume yeluthama iruntheengala

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

சி தயாளன் said...

பலதரப்பட்ட விமர்சங்கள் இருந்தாலும் நீங்கள் இந்தப் படத்தை அணுகிய விதம் நன்றாக இருந்தது :-)

Anonymous said...

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்...
குயில் ஏன் எப்பவும் ஒரே மாதிரி கூவுது... காக்கா மாதிரி ஒருதடவை கத்ததா ன்னு கேட்ட...
my ans, அதுக்குதான் காக்கா இருக்கே, பிறகு ஏன் குயில் காக்கா மாதிரி கத்தனும்...


சேதுவில் - அபிதாவின் அண்ணன் --> அப்படி ஒரு கேரக்டர் இல்லவே இல்ல..

புதிய வில்லன் ராஜேந்திரன் --> இவர் ஏற்கனவே பிதாமகன் ல ஒரு சண்டை காட்சில வருவார் (ஜெயில்ல வருமே ஒரு சண்டை)

Anonymous said...

வணக்கம் அண்ணா ...! பாத்திரங்களாய் வாழ்ந்திருபவர்களின் நடிப்பும் இளையராஜாவின் இசையையும் தவிர அதீத அகோரத்தனமும் , சமய பிரச்சாரமும் , தேவையில்லாத மற்ற காட்சித்திணிப்புக்களும் படத்தை முழுமையாய் ரசிப்பதில் எனக்குத்தடையாய் இருந்ததென்னவோ உண்மை தான். மாற்றுதிறன் உடையோரை பற்றியதான உங்கள் கருத்தில் முழுமையாய் உடன்பட என்னால் முடியவில்லை. தவிர திரைப்படத்தின் முடிவை/சொல்லப்பட்ட செய்தியை நிச்சயமாய் நான் ஏற்றுக்கொள்ளவில்லை (உங்களை போன்றே ) . நீங்கள் சொன்ன மற்றைய கருத்துக்கள் எல்லாமே அப்பட்டமான உண்மைகள் ...!

Suganthan P said...

அண்ணா, இன்னும் படத்தினை நான் பார்க்கவில்லை...
ஆனால் நிச்சயமாக பார்க்க வேண்டுமென்று நினைத்த படங்களிலொன்று, காரணம்...
பாலா, பாலா, பாலாவேதான்...
அந்தளவிற்கு பாலாவின் துணிச்சல் எனக்குப் பிடிக்கும்...

இந்தப் படத்தினைப் பொறுத்த வகையில் நீங்கள் கூறுபது உண்மைதான், எளியோர்களின் பரிதாபக் காட்சிகளில் அவர்களது மன உணர்வுகளை பாலா மதித்தாரா என்பது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால், இவை உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதானே இருக்கிறது. சந்திராயனை விண்ணுக்கு அனுப்பும் தேசத்தில் இவையும் நடக்கிறதென கூறும் ஒரு படமாக நாம் ஏன் இதனை எடுக்கக் கூடாது..??. அத்துடன் கடுமையான தணிக்கைகளுக்கு உட்பட்ட இந்தப் படத்தினை வைத்துக் கொண்டு, பாலா இதனைத்தான் கூற நினைத்தார், என்றும் நாம் ஒரு முடிவுக்கு வர முடியாதல்லவா. அவர் உண்மையில் கூற நினைத்தவை வேறாக இருந்திருக்கும் சாத்தியமும் இல்லாமல் இல்லையே....

மீதி விடயங்களை அலச முன்னர், நான் நான் கடவுளை ஒரு தடவை பார்த்தேயாகணும்...!! :)

____________________________________________________________________________________________________


பெயரினை எழுதும் துணிச்சலில்லாத Anonymous மூகமூடியணியும் கோழைப் பேர்வழிகளுக்கு, நினைத்ததை எழுதும் துணிச்சல் மட்டும் எப்படியோ வந்து விடுகிறது.....!! :)

Anonymous said...

I agree with u! இவர்களின் வரிசையில் அண்மைக்கால வரவுகளான ஷங்கர்,பாலா,சேரன்,தங்கபச்சான்,அமீர் என்போரையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. But, I don't think that director Shankar can be in this list. Forget abt it!
I have a got feeling in Bala's fims that it is nt pleasant watching Balas's film other than Sethu. He is having a great dierection skills. I dnt knw y is he nt using that skills in a gud way! Hope he won't do da same again in the future!

NAZRULISLAM said...

இறுதிக் காட்சியில் பூஜாவின் பிரசங்கத்தில் (!) இந்து சமயம் மட்டுமே முத்தி தருவதாக மறைமுகமாகக் காட்டப்படுவது உறுத்தவில்லையா? எல்லாப் புகழும் உனக்கே (இஸ்லாம்),ரட்சித்தல்,ரட்சகர்,இயேசு (கிறிஸ்தவம்) என்று ஏனைய சமயங்களைத் தாக்கி கேவலப்படுத்தி இந்து சமயமே வரமும்,தண்டனையும் முறையாகத் தருகிறது என்று நிறுவுவது தமிழின் தரமான இயக்குனர்களில் ஒருவர் என்று கருதப்படும் பாலாவுக்கு எத்துணை அழகு என்று எனக்குத் தெரியவில்லை.

கார்த்தி said...

வன்முறைகாட்சிகளும் கோரகாட்சிகளும் மிகவும் கூடிய படம்தான்..
வழமையான திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதமான ஒரு படமாக இருந்தாலும் (காதல் எனற விடயமே எள்ளளவிலும் இல்லை) படத்தில் பாலா கூற வரும் சில விடயங்கள் உறுத்தல்தான்.

எப்போதும் நாங்கள் நினைப்பது நடப்பதில்லை. கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும் என பாலா இதில் கூற முன் வந்திருக்கலாம். அது கடவுளின் தூதுவர் வடிவிலோ யார் வடிவலோ அமையலாம் என்பதுதான் படம் சொல்லும் முடிவு!!!

Gajen said...

உங்கட முதல் பந்திய வாசிச்ச பிறகு முதல் பின்னூட்டல போட்டுட்டு உடன போய் படத்த ஆன்லைன் பாத்தனான்..Copy அவ்வளவா பிடிக்கேல்ல..

வழக்கம்போல பாலாவின் அதே stereotype நாயகன்.

பாலாவின் standards ஓடு பார்க்கும்போது சில அப்பட்டமான குறைகள்.

இடையிடையே சறுக்கும் திரைக்கதை.

சமூகத்தின் ஒரு பகுதியை பூதக்கண்ணாடி வைத்து படம் எடுத்திருக்கிறார்.உண்மை.

நான் திரைப்பட விமர்சகனோ, அந்த விஷயத்தில் expert ஒ இல்லை.ஆனால் பாலா இந்த படம் எடுத்தனால தானே இன்டேக்கு நாங்கள் பிச்சைக்காரன், பைத்தியக்காரன், disabled, deformed என்டு இருந்தவங்களுக்கு அழகா 'விளிம்பு நிலை மனிதர்கள்' என்டு பெயர் குடுத்து இவ்வளவு கதச்சு கொண்டிருக்குறம் ?

இது பாலா style.அவரே ஒரு genre உருவாக்கி (தமிழ் சினிமாவில்), அந்த genre இனுடைய ரசிகர்களுக்கு cater பண்ற மாரி படம் எடுக்குறார் என்பது என் தாழ்மையான கருத்து.இந்த மாரி படம் எடுக்கேக்க சமயம், கலாச்சாரம், நவீன உலகம், உலக நடத்தை என்டு நிரம்ப விஷயங்கள் overlap பண்ணும்.தவிர்க்க முடியாது.அவர் படம் எடுத்த context ல நாங்க படத்த பாத்தா சரி.அதுக்காக இப்படியான படங்கள் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்டு சொல்லேல்ல.நாங்கள் கவனம் செலுத்தாத/ எங்கட sub conscious ல இருக்குற விஷயத்த மனசுல படுற மாரி மனுஷன் படம் எடுத்திருக்கு/எடுக்குது என்டு தான் சொல்ல வாறன்.

Anonymous said...

//இரு காட்சிகளிலும் இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்கள் மீது அவதூறு சாயம் பூசப்படுகிறது..பாலாவின் மீதும்,ஜெயமோகன் மீதும் வைத்திருந்த மதிப்பின் மீது சற்றே எனக்கு சரிவு ஏற்படுத்திய விஷயங்கள் இவை.//

இந்த வரி உங்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரிக்கிறது..

நன்றி.. காசு செலவழித்து இந்த படம் பார்ப்பதை உங்கள் விமரிசனத்தோடு / கருத்தோடு விட்டுவிட்டேன்.. தப்பிச்சுது டிக்கட் காசு

உங்களுக்கு இந்த படம் ஏற்படுத்திய மன பாதிப்பு இன்னும் நீங்க வில்லை போல.. இவ்வளவு நாளும் நான் கண்ட தெளிந்த இலகு மொழி நடை missing!

பதிவுலகில் சிலர் இந்த படத்தை தூக்கி பிடித்து சில நவ சொற்கள் (விளிம்பு நிலை மக்கள் அது இது என்று..) கலந்து எழுதியதும் அது ஒரு சாதார மனிதனின் பார்வையில் இருந்து காத தூரம் வேறுபட்டதும் பதிவுலகின் மீதான நம்பிக்கையை சீர் குலைத்து விட்டது..

SUNDAR PARAMASIVAN said...

Good.
Read my opinion @
http://naankadavul-sundar.blogspot.com

Unknown said...

i dint watch the film yet.after that il give my comments..

Unknown said...

Look at My view @
http://naankadavul-kanaga.blogspot.com

Anonymous said...

Naan Kadavul is a strange project. I appreciate Director Bala for doing his wonderful work.

மணிஜி said...

மிகச் சரியான விமர்சனம்..நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன்..இரண்டாம் நாளூம் பார்த்தேன்..நண்பர்களிடம் நான் சொன்னதை மீண்டும் படிப்பது போல் உங்கள் விமர்சனம் இருந்தது..
www. vilambarakkaaran.blogspot.com

Anonymous said...

:)
படம் பார்க்கவில்லை.
உங்கள் விமர்சனம் மூலம் படம் பற்றி பல விடயங்களை அறிய முடிந்தது.
நன்றி

நிராதன் said...

உங்களுக்கெல்லாம் ஹீரோ இருபது பேரை போட்டு அடிக்கிற மாதிரி கதை எடுத்தா தான் பிடிக்கும். அதோட நயந்தாரா two piece ஓட வந்து எல்லாத்தையும் காட்டினா தான் சந்தோசம். உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரைக்கும் நல்ல படைப்புக்கு வரவேற்பிருக்காது. இந்த படத்தில பாலா ஒவ்வொருத்தரையும் செதுக்கியிருக்கிறார். முதல்ல அதை பாராட்டுங்கப்பா. அது சரி வில்லு படத்துக்கு முதல் நாள் அடிபட்டு ticket வாங்கின கூட்டம் தானே நீங்கள் எல்லாம்.

Think Why Not said...

Answers...

http://jeyamohan.in/?p=1869

http://jeyamohan.in/?p=1873

Anonymous said...

Nerathan was rite and excellent comment about other movies. bala is differ from others i appc what he is doing.

katha

Anonymous said...

Dear Friend,
Tastes differ. You are not coming from a film back ground. You are only a film goer. By writing something do not try to be an expert on film or film industry. How many good film you (Sri Lankans) have made so far? At least produce one short film for 5 mts. then criticize the Indian movies.

ARV Loshan said...

// ஆதிரை said...
என் கருத்தும் இதுவே...
அதுவும் தற்கால சூழ்நிலையில் இப்படம் சொன்ன செய்தியை ஏற்க மனது சங்கடம் கொள்கின்றது.//
அதையே தான் ஆதிரை நானும் சொல்கிறேன்.. எனது பார்வை தான் சரியானது என்று நான் அடித்து சொல்லவேயில்லை.. :)

// தியாகி said...
அண்ணா..நான் இன்னும் படம் பாக்கேல்ல..Original copy ஒண்டு download பண்ணும் வரெக்கும் பாத்துக்கொண்டு இருக்குறன்..அதுனால முதல் பந்தியோடையே நிப்பாட்டி போட்டன்..சாரி..//
சரி.. பார்த்திட்டு கீழே பின்னூட்டம் ஒன்று போட்டீங்க தானே..

// Paheerathan said...
//இந்து சமயத்தை இவ்வவளவு தூக்கிப் பிடித்தும் காட்டுமிராண்டிக் கொலைகள் மூலமாக தான் வரங்கள் கிடைக்கின்றன என எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்..//

//இன்னும் இரு காட்சிகளிலும் இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்கள் மீது அவதூறு சாயம் பூசப்படுகிறது..பாலாவின் மீதும்,ஜெயமோகன் மீதும் வைத்திருந்த மதிப்பின் மீது சற்றே எனக்கு சரிவு ஏற்படுத்திய விஷயங்கள் இவை.//

இவற்றால்தான் இது எழுத வேண்டி வந்தது

http://bakeera.blogspot.com/2009/02/blog-post_08.html//
பார்த்தேன் பகீ.. வாசித்தேன்.. பின்னூட்டம் போடுகிறேன்.. :)


//
Anonymous said...
Ayya saami vimarsanama ithu padatta porumaya parkka iyalum aanal intha vimarsanattai porumaya read panna mudiyuma theriyala. Itha yeluthuvathrkuttan three days onnume yeluthama iruntheengala//
என்ன செய்ய அனானி, நீளம் கூடிப் போச்சுது தான்.. நான் நினைத்த அத்தனை விடயங்களும் சொல்ல வேண்டுமே.. வேறு வழியில்லை..:)

// ’டொன்’ லீ said...
பலதரப்பட்ட விமர்சங்கள் இருந்தாலும் நீங்கள் இந்தப் படத்தை அணுகிய விதம் நன்றாக இருந்தது :-)//
நன்றி டொன் லீ.. நம்ம வழி (வலி) தனி.. ;)

// Anonymous said...
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்...
குயில் ஏன் எப்பவும் ஒரே மாதிரி கூவுது... காக்கா மாதிரி ஒருதடவை கத்ததா ன்னு கேட்ட...
my ans, அதுக்குதான் காக்கா இருக்கே, பிறகு ஏன் குயில் காக்கா மாதிரி கத்தனும்...//
அது சரி, அது பறவைகள் நண்பரே.. பாலாவும் அப்படியா?
நீங்க அப்படி சொன்னால் நான் கேட்கும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்..

காகம் எப்போதும் கரையத் தானே வேண்டும்?
குயில் எப்போதும் கூவத் தானே வேண்டும்..
அப்போ பாலா? ஒரே மாதிரித் தான் எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? ;)

//சேதுவில் - அபிதாவின் அண்ணன் --> அப்படி ஒரு கேரக்டர் இல்லவே இல்ல.. //
மன்னிக்கவும் அது அபிதாவின் முறை மாப்பிள்ளை பாத்திரம். நான் தவறாகப் பதிந்து விட்டேன்..

//புதிய வில்லன் ராஜேந்திரன் --> இவர் ஏற்கனவே பிதாமகன் ல ஒரு சண்டை காட்சில வருவார் (ஜெயில்ல வருமே ஒரு சண்டை)//
அப்படியா? இது எனக்கு ஒரு புது தகவல்.

ARV Loshan said...

//Jegatheepan said...
வணக்கம் அண்ணா ...! பாத்திரங்களாய் வாழ்ந்திருபவர்களின் நடிப்பும் இளையராஜாவின் இசையையும் தவிர அதீத அகோரத்தனமும் , சமய பிரச்சாரமும் , தேவையில்லாத மற்ற காட்சித்திணிப்புக்களும் படத்தை முழுமையாய் ரசிப்பதில் எனக்குத்தடையாய் இருந்ததென்னவோ உண்மை தான். மாற்றுதிறன் உடையோரை பற்றியதான உங்கள் கருத்தில் முழுமையாய் உடன்பட என்னால் முடியவில்லை. தவிர திரைப்படத்தின் முடிவை/சொல்லப்பட்ட செய்தியை நிச்சயமாய் நான் ஏற்றுக்கொள்ளவில்லை (உங்களை போன்றே ) . நீங்கள் சொன்ன மற்றைய கருத்துக்கள் எல்லாமே அப்பட்டமான உண்மைகள் ...!//
நன்றி சகோதரா, நான் பார்த்த வரை அநேகர் (பதிவர்கள் உட்பட) நான் சொல்லி இருக்கும் பெரும்பாலான கருத்துக்களில் ஒத்துப் போயிருக்கிறார்கள்..

// sugan said...
அண்ணா, இன்னும் படத்தினை நான் பார்க்கவில்லை...
ஆனால் நிச்சயமாக பார்க்க வேண்டுமென்று நினைத்த படங்களிலொன்று, காரணம்...
பாலா, பாலா, பாலாவேதான்...
அந்தளவிற்கு பாலாவின் துணிச்சல் எனக்குப் பிடிக்கும்...

இந்தப் படத்தினைப் பொறுத்த வகையில் நீங்கள் கூறுபது உண்மைதான், எளியோர்களின் பரிதாபக் காட்சிகளில் அவர்களது மன உணர்வுகளை பாலா மதித்தாரா என்பது சிந்திக்க வேண்டிய கேள்விதான். ஆனால், இவை உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதானே இருக்கிறது. சந்திராயனை விண்ணுக்கு அனுப்பும் தேசத்தில் இவையும் நடக்கிறதென கூறும் ஒரு படமாக நாம் ஏன் இதனை எடுக்கக் கூடாது..??.

மீதி விடயங்களை அலச முன்னர், நான் நான் கடவுளை ஒரு தடவை பார்த்தேயாகணும்...!! :)//
பாருங்கள் சுகன், சிலவேளை பார்த்த பிறகு உங்கள் கருத்தும் மாறக் கூடும்.. அங்கவீனர்கள்/மாற்றுத் திறனுடையோரைப் பற்றிய கருத்துக்கள் ஒவ்வொருவர் மனநிலையில் எழுவது தானே.. மாறுபடக்கூடும்.

//அத்துடன் கடுமையான தணிக்கைகளுக்கு உட்பட்ட இந்தப் படத்தினை வைத்துக் கொண்டு, பாலா இதனைத்தான் கூற நினைத்தார், என்றும் நாம் ஒரு முடிவுக்கு வர முடியாதல்லவா. அவர் உண்மையில் கூற நினைத்தவை வேறாக இருந்திருக்கும் சாத்தியமும் இல்லாமல் இல்லையே....//
இருக்கலாம்.. ஆனால் மூன்று படங்களிலேயே தலை சிறந்த ஈயக்குனர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் தணிக்கைக்குப் பிறகும் தனது படத்தின் கருத்து மாறுபடக் கூடாது என்பது குறித்த தெளிவான நோக்குடையவராக இருந்திருக்க வேண்டுமே..

// Zarook said...
I agree with u! இவர்களின் வரிசையில் அண்மைக்கால வரவுகளான ஷங்கர்,பாலா,சேரன்,தங்கபச்சான்,அமீர் என்போரையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. But, I don't think that director Shankar can be in this list. Forget abt it! //
ஷங்கரை நான் நல்ல படம் தருபவர் என்று சொல்லவில்லை;நான் அவரின் ரசிகரும் அல்ல. ஆனால் கதாநாயகனை விட இயக்குனரின் திரைப்படம் என்று தன் படங்களைப் பேசவைத்தவர் என்ற வகையில் தான் அவரை இந்த வரிசையில் சேர்த்தேன்.

//I have a got feeling in Bala's fims that it is nt pleasant watching Balas's film other than Sethu. He is having a great dierection skills. I dnt knw y is he nt using that skills in a gud way! Hope he won't do da same again in the future!//
அதையே நான் வேறொரு விதமாக மேலே சொன்னேன்.:)

NAZRUL- :)

// கார்த்தி said...
வன்முறைகாட்சிகளும் கோரகாட்சிகளும் மிகவும் கூடிய படம்தான்..
வழமையான திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதமான ஒரு படமாக இருந்தாலும் (காதல் எனற விடயமே எள்ளளவிலும் இல்லை) //
காதல் இல்லாத படங்கள் தான் சிறந்தவை என்ற கருத்து வேடிக்கையானதே..

//எப்போதும் நாங்கள் நினைப்பது நடப்பதில்லை. கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும் என பாலா இதில் கூற முன் வந்திருக்கலாம். அது கடவுளின் தூதுவர் வடிவிலோ யார் வடிவலோ அமையலாம் என்பதுதான் படம் சொல்லும் முடிவு!!!//
இருக்கலாம்.. அதை தெளிவாக சொல்லவில்லை.. ஜெயமோகனின் நாவலில் இது ரொம்ப தெளிவாக,மறைபொருள் நக்கலாக சொல்லப் பட்டிருக்கும்.

// தியாகி said...
உங்கட முதல் பந்திய வாசிச்ச பிறகு முதல் பின்னூட்டல போட்டுட்டு உடன போய் படத்த ஆன்லைன் பாத்தனான்..Copy அவ்வளவா பிடிக்கேல்ல..

வழக்கம்போல பாலாவின் அதே stereotype நாயகன்.

பாலாவின் standards ஓடு பார்க்கும்போது சில அப்பட்டமான குறைகள்.

இடையிடையே சறுக்கும் திரைக்கதை.

சமூகத்தின் ஒரு பகுதியை பூதக்கண்ணாடி வைத்து படம் எடுத்திருக்கிறார்.உண்மை.//
நன்றி தியாகி.. உங்கள் பார்வை எனது கருத்துக்களின் சமாந்தரமாக இருக்கிறது.

//இது பாலா style.அவரே ஒரு genre உருவாக்கி (தமிழ் சினிமாவில்), அந்த genre இனுடைய ரசிகர்களுக்கு cater பண்ற மாரி படம் எடுக்குறார் என்பது என் தாழ்மையான கருத்து.இந்த மாரி படம் எடுக்கேக்க சமயம், கலாச்சாரம், நவீன உலகம், உலக நடத்தை என்டு நிரம்ப விஷயங்கள் overlap பண்ணும்.தவிர்க்க முடியாது.அவர் படம் எடுத்த context ல நாங்க படத்த பாத்தா சரி.அதுக்காக இப்படியான படங்கள் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்டு சொல்லேல்ல.நாங்கள் கவனம் செலுத்தாத/ எங்கட sub conscious ல இருக்குற விஷயத்த மனசுல படுற மாரி மனுஷன் படம் எடுத்திருக்கு/எடுக்குது என்டு தான் சொல்ல வாறன்.//
கமல் ஸ்டைலில் குழப்பி,குழம்பாமல் சொல்லி இருக்கிறீர்கள்.. ;)

ARV Loshan said...

// இர்ஷாத் said...
நன்றி.. காசு செலவழித்து இந்த படம் பார்ப்பதை உங்கள் விமரிசனத்தோடு / கருத்தோடு விட்டுவிட்டேன்.. தப்பிச்சுது டிக்கட் காசு //
அகா.. இப்படியெல்லாம் நுண்ணரசியல் செய்து எதோ பாலாவுக்கெதிராக நான் பிரசாரம் செய்வதாக பரப்பி விடாதீர்கள்.. ;)

//உங்களுக்கு இந்த படம் ஏற்படுத்திய மன பாதிப்பு இன்னும் நீங்க வில்லை போல.. இவ்வளவு நாளும் நான் கண்ட தெளிந்த இலகு மொழி நடை missing!//
இருக்கலாம்.. சில விஷயங்களை எழுதும்போது மனது சொல்கிற விஷயங்கள் இலேசான தமிழில் வருவதை விட இறுக்கமான தமிழில் வந்து விழுகின்றன..
ஆனால் அப்படியொன்றும் என் மொழி நடை பெரிதாக மாறவில்லை என நினைக்கிறேன்..

//பதிவுலகில் சிலர் இந்த படத்தை தூக்கி பிடித்து சில நவ சொற்கள் (விளிம்பு நிலை மக்கள் அது இது என்று..) கலந்து எழுதியதும் அது ஒரு சாதார மனிதனின் பார்வையில் இருந்து காத தூரம் வேறுபட்டதும் பதிவுலகின் மீதான நம்பிக்கையை சீர் குலைத்து விட்டது..//
ரசனைகள் மாறலாம்.. அத்தோடு எங்கள் போன்ற ரசனை மட்டம் குறைந்தவர்களுக்கு (தன்னடக்கம் !!) இந்த 'நான் கடவுள்' பிடிக்காமல் இருக்கலாம்.. ;)

//
sundar said...
Good.
Read my opinion @
http://naankadavul-sundar.blogspot.com//
சுந்தர், பார்த்தேன்.. உங்கள் விரிவான பார்வை,நான் கடவுளை நீங்க அர்த்தப்படுத்தி பார்த்த விதம் அருமை.. நீங்கள் பாலாவின் மொழி பெயர்ப்பாலரா? (சும்மா)

//
taniya said...
i dint watch the film yet.after that il give my comments..//
நன்றி வருகைக்கு.. பார்த்திட்டு வாங்க..

//
ARUMUGAM KANAGA SHUNMUGAM said...
Look at My view @
http://naankadavul-kanaga.blogspot.com//
நன்றி.. பார்த்தேன்.

//
kavya said...
Naan Kadavul is a strange project. I appreciate Director Bala for doing his wonderful work.//
kavya, what do u mean by strange? ;)

// தண்டோரா said...
மிகச் சரியான விமர்சனம்..நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன்..இரண்டாம் நாளூம் பார்த்தேன்..நண்பர்களிடம் நான் சொன்னதை மீண்டும் படிப்பது போல் உங்கள் விமர்சனம் இருந்தது..//
தண்டோரா, எங்கள் அலைவரிசை ஒன்று பட்டுள்ளது.. :)

//Thooya said...
:)
படம் பார்க்கவில்லை.
உங்கள் விமர்சனம் மூலம் படம் பற்றி பல விடயங்களை அறிய முடிந்தது.
நன்றி//
நன்றி

ARV Loshan said...

// நிராதன் said...
உங்களுக்கெல்லாம் ஹீரோ இருபது பேரை போட்டு அடிக்கிற மாதிரி கதை எடுத்தா தான் பிடிக்கும். அதோட நயந்தாரா two piece ஓட வந்து எல்லாத்தையும் காட்டினா தான் சந்தோசம். //
நிராதன், இந்தக் கருத்துக்களை சொல்ல முதல் உங்கள் profileஇல் பாருங்கள்.. பிடித்த படம் என்று சொல்லி இருப்பது 'ஜெயம்கொண்டான்' நீங்கள் சொன்ன கருத்துக்கள் வேடிக்கையாக இல்லை?
நயன்தாராவை ரசிப்பது வேறு. நல்ல படங்களை ரசிப்பது வேறு..

// உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரைக்கும் நல்ல படைப்புக்கு வரவேற்பிருக்காது. இந்த படத்தில பாலா ஒவ்வொருத்தரையும் செதுக்கியிருக்கிறார். முதல்ல அதை பாராட்டுங்கப்பா.//
எனது கருத்துக்களில் 'நான் கடவுள்'இன் நல்ல விஷயங்களையும், பாலா செதுக்கிய இடங்களையும் பாராட்டியும் இருக்கிறேனே..

//அது சரி வில்லு படத்துக்கு முதல் நாள் அடிபட்டு ticket வாங்கின கூட்டம் தானே நீங்கள் எல்லாம்.//
வில்லுக்கு அடிபட்டு டிக்கெட் வாங்கியது யாராக இருக்குமென்று உங்கள் படம் பார்த்த பிறகு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.. ;)

//
Thinks Why Not - Wonders How said...
Answers...//
நேற்றும்,இன்றும் வாசித்தேன்.. பாலா மீதே முக்கியமான பொறுப்புக்களை ஜெ.மோ போட்டிட்டார் போல.. ;)
சில விளக்கங்கள் அருமை;சில மழுப்பல்கள்..

// Anonymous said...
Nerathan was rite and excellent comment about other movies. bala is differ from others i appc what he is doing.

katha//
நன்றி கதா, ரசனைகள் வேறுபடலாம்..:)

//Anonymous said...
Dear Friend,
Tastes differ. You are not coming from a film back ground. You are only a film goer. By writing something do not try to be an expert on film or film industry. How many good film you (Sri Lankans) have made so far? At least produce one short film for 5 mts. then criticize the Indian movies.//

You dont need to be from the same field to criticize.I have clearly mentioned in my article i m not an expert in writing criticism of movies. ;) these writings are just my opinion.
For your info, recently one of our Sri lankan youth (Suthan) has won an international award for the best short film.
விமர்சிப்பவர்கள் அந்தத் துறையில் இருந்து தான் வரவேண்டுமென்ற தேவை இல்லை.. அது விதியும் இல்லை..

இந்தியப் படங்களை விமர்சிக்க திரைப்படம் எதுவும் எடுக்காத இலங்கையர்களுக்கு தகுதி இல்லை என நீங்கள் அதுவும் பெயரில்லாமல் சொல்வது மிகக் குறுகிய எண்ணப் பாங்கை நீங்கள் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

அப்படி சொன்னால் பாதிப் பதிவர்கள் இழுத்து மூட வேண்டியது தான்..

கண்மூடித் தனமாக யாரையும் ஆதரிக்காதீர்கள்.. தமிழனின் தலைவிதி இது.. ;)

Ketha said...

லோஷன் அண்ணா, உங்களின் பதிவுடன் நான் முழுமையாய் உடன்படுகிறேன். அத்தோடு என் கருத்துகள் சிலவற்றையும் சொல்லலாம் என்றொரு எண்ணம்.

வித்தியாசமான படங்கள் என்ற பெயரில் வக்கிரமாக படமெடுப்பதை நியாயப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. திரைப்படங்களில் ஆபாசம் எவ்வளவு தூரம் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவு வன்முறையும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இந்த படத்தில் பாலா தனது திறமைகளை நிரூபித்திருப்பதில், எனக்கு மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் பாத்திரப்படைப்பில் ஊற்றியிருக்கும் வெறியும் குரூரமும் மிக மிக அதிகம்.

அண்மையில் ஆஸ்கார் விருதுகளை அள்ளிய படம் கூட பிச்சைஎடுக்கும் தெருச்சிறுவர்களை பற்றிய படம்தான். அது சொல்லப்பட்ட விதத்தில் வன்முறை மிக மிக குறைவு.

அதைவிட உலகில் வாழ வழியற்றவர்களுக்கு மரணத்தை வரமாக கொடுப்பதென்பது உச்சக்கட்ட வெறித்தனம். மானுடத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத சித்தாந்தம். அகோரி தீயவர்களை வதம் செய்வதற்கும் சாதாரண தமிழ் பட நாயகர்கள் கொலை செய்வதற்கும் பெருமளவில் வேறுபாடு காண முடியவில்லை. திருப்பாச்சியில் விஜய் வதம் என்றுதான் சொல்லுவார்!! சட்டத்தை கையிலெடுக்கும் தமிழ் சினிமா நாயகர்களின் ஒரு புது பரிணாமம் அகோரி ஆர்யா!

FunScribbler said...

யப்பா... இதை பாலா பார்த்தாரு! ஹாஹா...பிரிச்சு துவச்சு.. ஒரு வழி பண்ணிட்டீங்க...

நம்மாள சிலர் திருந்தினா போதும்...அட நான் ரசிகர்களை சொன்னேன்ப்பா!

ers said...

நண்பருக்கு வணக்கம். இந்தச்செய்தி நெல்லைத்தமிழின் பேனல் செய்தியாக வெளியாகியுள்ளது.

வலைமுகவரி
nellaitamil

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner