February 03, 2009

தோனி வாழ்க..நடுவர்கள் ஒழிக..

இலங்கை அணிக்கெதிராக இந்தியா அடுத்தடுத்து இரண்டு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம்,தனது அண்மைக்கால வளர்ச்சி தொடர்ந்து வருவதை உறுதிப் படுத்தியுள்ளது..தோனியின் நுட்பமான,அதிரடியான,அதே வேளை திட்டமிட்ட தலைமைத்துவம் புதிய பரிமாணத்துக்கும்,தொடர்ந்து வெற்றிகளைப் பெறும் பலமான நிலைக்கும் கொண்டு சென்று கொண்டிருக்கிறது..


அதேவேளையில் அஜந்த மென்டிஸ் என்ற மாயவலை கொஞ்சம்,கொஞ்சமாக சிதறடிக்கப் படுகிறதோ என்ற எண்ணமும் இந்திய அணியால் உருவாக்கப்பட்ட்டு வருகிறது. இதே இந்திய அணிதான் மென்டிசிடம் அகப்பட்டு சுருண்டு அவரைப் பெரியதொரு மந்திரவாதியாக மாற்றியது..இன்று அதே இந்திய அணி மென்டிசைத் தொடர்ந்து சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.முரளிதரனும் உலகசாதனைக்கான விக்கெட்டுக்களை எடுக்கமுடியாமல் இந்தியவீரர்கள் அவரையும் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்கள்.'மு' வும் 'மெ' வும் இனி என்ன செய்வார்கள்?


முரளியும்,மென்டிசும் சேர்ந்து இந்த முதலிரு போட்டிகளில் வீசிய தமது நாற்பது ஓவர்களில் கைப்பற்றிய விக்கெட்டுக்கள் மூன்று மட்டுமே..


இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் மோசமாகத் தோற்கவில்லை என்பதும்,மகெல ஜெயவர்தன மீண்டும் ஓட்டங்கள் குவிக்க ஆரம்பிதிருப்பதுமே இப்போது இலங்கை ரசிகர்களுக்கும்,அணிக்கும் திருப்தி அளிக்கக்கூடிய விஷயங்கள்.. கண்டம்பியும்,ஜயசூரியவும் சிறப்பாக ஆடியதும் குறிப்பிடத் தக்கது.


எனினும் இந்த அசகாயசூர,யாரையும் வீழ்த்தும் வல்லமை கொண்ட இந்திய அணியை வீழ்த்த இவை மட்டுமே போதாது..ஏழு போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்தியாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்த மூன்று Mகளும் (Mahela,Murali,Mendis) தங்கள் உச்சபட்ச திறனை மீண்டும் வெளிப்படுத்த ஆரம்பிக்கவேண்டும்.


இந்திய அணியின் எல்லோருமே பிரகாசித்தாலும் சொல்லிவைத்தாற்போல, சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு போட்டிகளிலுமே நடுவர்கள் பிழையான தீர்ப்புக்கள் வழங்கியது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல்,இலங்கை ரசிகர்களுக்குமே எரிச்சலை அளித்துள்ளது..
முதலாவது போட்டியில் நடுவராகத் தனது அறிமுகத்தை மேற்கொண்ட முன்னாள் இலங்கை வீரர் குமார தர்மசேனவும்(ஒரு வேளை முன்பு சச்சின் இவரைப் போட்டுத் துவைத்தெடுத்த கோபமோ???) பின்னர் சர்வதேச நடுவரான பிரையன் ஜெர்லிங்கும் LBWமுறையில் விக்கெட்டுக்கு செல்லாத பந்தொன்றுக்கு சச்சினை ஆட்டமிழந்ததாக அறிவித்தார்கள்.குலசேகர (நடுவரின் உதவியுடன்) சச்சினை ஆட்டமிழக்க செய்கிறார்

இரண்டாவது போட்டியில் யுவராஜுக்கு இதைவிட மிகமோசமாக துடுப்பில் பட்டு,கால் காப்பில் பட்ட பந்தொன்றுக்கு LBWமுறைமூலம் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய கொடுமை.சாதாரண ஒருவருக்கே அது ஆட்டமிழப்பு இல்லை என்று தெரியும் நேரம் நடுவர் காமினி சில்வாவுக்கு மட்டும் யுவராஜை ஆட்டமிழந்தார் என்று அறிவிக்க எங்கிருந்து தான் ஐடியா வந்ததோ?? நடுவரின் தீர்ப்புக்கு யுவராஜ் அதிருப்தியை தெரிவித்தும் அவர் தண்டனைக்கோ,தண்டப் பண விதிப்புக்கோ உட்படாதது அவர் மீதுள்ள நியாயத்தைக் காட்டியுள்ளது..


இந்த மூன்று நடுவர்களுமே உண்மையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே..
ஜேர்லிங்,தர்மசேன,காமினி சில்வா ஒழிக..


மறுபக்கம்,மக்ரூபின் பந்துவீச்சில் சங்கக்காரவிடம் பிடிகொடுத்தபோது நடுவர் ஜெர்லிங்கினால் அது பிடியல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் கூட,இந்திய அணியின் சிக்கலான நிலையையும் பொருட்படுத்தாமல் உண்மையான,நேர்மையான வீரராக ஆடுகளம் விட்டு வெளியேறிய இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி எல்லா கிரிக்கெட் ரசிகர் மனதிலும் ஓங்கி, உயர்ந்து நிற்கிறார்.இரு நல்ல மனிதர்கள் - சங்கா,தோனி


பல இலங்கை ஊடகங்களும் மனம் திறந்து தோனியின் நன்னடத்தையைப் பாராட்டி இருக்கின்றன..


நல்லவர் ஒரு சிலர் இன்னமும் கிரிக்கட்டில் இருக்கின்றார்கள்..


முன்பு அடம் கில்க்ரிஸ்ட்,இலங்கையின் ரொஷான் மகாநாம,அரவிந்த டீசில்வா,ராகுல் திராவிட்,மைக்கல் ஹசி ஆகியோருக்குப் பின் தோனியும் இந்த கனவான்களின் வரிசையில் ஒரு walkerஆக சேர்ந்திருப்பது மகிழ்ச்சி..


முன் எப்போதையும் விட இப்போது தோனி எனது கண்களுக்கு ஒரு ஆரோக்கியமான கிரிக்கெட்டை எதிர்காலத்துக்கு வழங்கக்கூடிய ஒருவராகத் தெரிகிறார்..அவர் மீது அவரது அணி வீரர்கள் வைத்திருந்த மரியாதையோடு,எதிரணி வீரர்களும் இனி அவர் மேல் மரியாதை வைக்கப் போகிறார்கள்.இவை எல்லாவற்றிலும் இலங்கை ரசிகர்கள் அனைவரையும் கேவலப்படுத்திய சம்பவம்,இஷாந்த் ஷர்மா மீது யாரோ ஒரு ரசிகர் பொருளொன்றை வீசிய சம்பவம்.


ஆஸ்திரேலியாவில் கூட இப்படியான சம்பவங்கள் நடந்திருந்த போதிலும் இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வந்ததே இல்லை.. பாருங்கப்பா தொடர்ச்சியான தோல்விகள் இலங்கை ரசிகர்களை எப்படி மாற்றிவிடுகின்றன.இந்தியாவுக்கு அண்மைக்காலமாக நம் சகோதர இனத்தவர்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்(காரணம் உங்களுக்கே தெரியுமே..) முன்பெல்லாம் இந்திய அணிக்குத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தபோதெல்லாம் புலி,புலி என்று பொங்கியவர்களே இவர்கள் தான்..


வாங்குவதெல்லாம் இந்தியாவிடம்..ஆனால் கிரிக்கெட்டில் வாங்கிக்கட்டும் போது மட்டும் அப்செட் ஆயிட்டாங்களோ?
எப்போது மீண்டும் வெற்றி கிடைக்கும்? இலங்கை அணி பயிற்சியில்..


இன்று இன்னும் இரு மணித்தியாலங்களுக்குள் மூன்றாவது போட்டி ஆரம்பிக்கவுள்ளது..
இலங்கை அணிக்கு இது வாழ்வா,சாவா போட்டி..தொடரை வெல்ல இன்றும்,இனித் தொடர்ந்துவரும் இரு போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டும். முடியுமா?


முயன்றால் முடியும்.. முயல்வார்களா இலங்கை அணியினர்?
முரளியும் உலக சாதனைக்கான தனது இரு விக்கெட்டுக்களை இன்று கைப்பற்றுவார் என்று என் மனசு சொல்கிறது..


இன்று இலங்கை வென்றால் தான் தொடர்ந்து வருகின்ற இரு போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும்..


27 comments:

bea said...

wow..me d first????

bea said...

U r alwayz right loshan!

ஆதிரை said...

//முதலாவது போட்டியில் நடுவராகத் தனது அறிமுகத்தை மேற்கொண்ட முன்னாள் இலங்கை வீரர் குமார தர்மசேனவும் (ஒரு வேளை முன்பு சச்சின் இவரைப் போட்டுத் துவைத்தெடுத்த கோபமோ???) பின்னர் சர்வதேச நடுவரான பிரையன் ஜெர்லிங்கும் LBWமுறையில் விக்கெட்டுக்கு செல்லாத பந்தொன்றுக்கு சச்சினை ஆட்டமிழந்ததாக அறிவித்தார்கள்.

நீண்ட நாள் சந்தேகம் ஒன்று. விளையாடும் அணிகளைச் சேர்ந்த நாட்டு நடுவர்கள் போட்டிக்கு மத்தியஸ்தம் வகிப்பது நடுநிலைமையை கேள்விக்குள்ளாக்காதா?

வாங்குவதெல்லாம் இந்தியாவிடம்..ஆனால் கிரிக்கெட்டில் வாங்கிக்கட்டும் போது மட்டும் அப்செட் ஆயிட்டாங்களோ?
யார் சொன்னது? அவர்கள் தரும்போது வாங்குவதில் என்ன தப்பு? இல்லாவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் போவமல்லோ... (பாகிஸ்தானுக்கு போய்விட்டுத்தான் வந்தோம். முடியவும் அங்கே தான் போகப்போறோம் டெஸ்ட்டுக்காக...)

thisanthan said...

லோசன் அண்ணா இவர்கள் வாங்கி கட்டும் காலம் நெருஙி விட்டது இது தோனியின் திற்மை முரளியின் பந்துகள் எல்லாம் எல்லை கோட்டை தான்டவேண்டும் அவனின் பெயரை மாத்த வேண்டும்
திசாந்தன்
கட்டார்

இர்ஷாத் said...

அடம் கில்க்ரிஸ்ட் எப்படி கனவான் லிஸ்ட் இல் இடம்பிடித்தார்.. அவரது தில்லு முல்லு ஆட்டம்தான் உலக கிண்ணத்தை இலங்கையிடம் இருந்து பறித்தது..

இரண்டு M களும் நிச்சயம் சாதிப்பார்கள்.. இருந்து பாருங்கள்..

தோணி form போனதும் மீண்டும் இந்தியா படுக்கும்

Anonymous said...

தர்மசேன ஒரு நல்ல மனிதர்.. அதை மறுதலிக்க யாரும் இல்லை.. ஒரு சில போட்டிகளில் ஆனது சிறப்பாக வெங்கட்ராகவன் மாதிரி தீர்ப்பு அளிப்பார்.. யார் விடவில்லை பிழை..

திவாகரன் said...

முதலில் இலங்கை அணி நானயசுழர்ச்சியில் வெற்றிபெறட்டும்..
அதற்குப் பிறகு போட்டியில் வெல்வது பற்றி யோசிக்கலாம். ஏனெனில் பிரேமதாஸ மைதானத்தில் போட்டியில் வெல்லப்போகும் அணியை நானயசுழர்ச்சியே திர்மானிக்கிறது.

திவாகரன் said...

இந்திய அணி அடிவாங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

LOSHAN said...

அந்தோ பரிதாபம்.. மறுபடியுமா? சச்சின் மீண்டும் LBW.. HAT TRICK!!!மறுபடி நடுவர் காமினி சில்வா..
இது கொடுமை.. இலங்கை ரசிகர்களே வெட்கப்படவேண்டிய விடயம்.
ஒரு தடவை,இரு தடவை என்றால் பரவாயில்லை..
தொடர்ச்சியாக மூன்றாவது தடவை.. மூன்றும் LBW.

ஜெகதீசன் said...

//
இலங்கை அணிக்கெதிராக இந்தியா அடுத்தடுத்து இரண்டு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம்,தனது அண்மைக்கால வளர்ச்சி தொடர்ந்து வருவதை உறுதிப் படுத்தியுள்ளது.
//
இந்த வெற்றிகளை உண்மையான இந்தியர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது....
இலங்கை எமது நட்பு நாடு. எனவே இலங்கையின் தோல்வி எமக்கும் தோல்வியே...
:P

thisanth said...

சச்சின் போனால் என்ன அன்னா ஷேவாக் இருக்கிறார்தானே
லோசன் அன்னா உங்கள் mobile numberதரமுடியுமா?my email-tpusparaja@yahoo.com

Subankan said...

அண்ணா you are back!!! மீண்டும் கிரிக்கெட் !!!

Anonymous said...

சகோதர இனத்தவர்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்(காரணம் உங்களுக்கே தெரியுமே..)

அதுதான் உங்களின் இந்தியா மீதான ஆதரவுக்கு காரணமோ? என்னதான் உங்கள இந்தியா கணக்கெடுக்காட்டியும் அதின்ற காலில்தான் விழுறீங்கள்

babuji said...

நம்ம அணி வெல்ல வேணும் எண்டா, நம்ம காமினி சில்வா இன்னும் 2 wickets எடுத்தேயாகனும்.....

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post linkhere

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

ஷாஜி said...

இன்றைய போட்டியிலும் நடுவர்கள் சச்சினை காவு வாங்கி கொண்டார்கள்.

இனிமேல் LBW முடிவை TV-அம்பையரிடம் கொடுப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன்.

saravanan said...

195 க்கு 9 விக்கெட்....தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்....Tendulkar ஐ சொல்லவில்லை அவர் என்ன பாவம் பத்தோடு பதினொன்னாக விளையாடுறாரு........however superb knock by Sanga

Nirushan said...

இவ்வளவு சிறப்பாக மூன்று அட்டங்களிலும் 12 பேர் (நடுவர்கள் உட்பட) விளையாடியும் இந்தியாவை வெல்ல முடியவில்லையே. அதுதான் இந்தியா. அடுத்த உலக சம்பியன்கள் அவர்கள்தான் குறித்து வைதுக்கொள்ளுங்கள்......

thisanthan said...

INDIA IS WIN UMPIRE IS OUT SRILANKAN TEAM9politics)

தமிழன் said...

இலங்கை சிங்கள அணி நாசமாய் போக...

மதுவதனன் மௌ. said...

லோஷன் அண்ணா,

மூன்று தரமும் சச்சினுக்கு LBW குடுத்தத பாத்து சச்சினைப் பாக்கவும் பாவமாக் கிடந்தது, அம்யரைப் பாக்கவும் பாவமாக் கிடந்து. ம்ஹீம்..

மதுவதனன் மௌ.

இலங்கைப் பேயன் said...

சச்சின் அண்ணை, கப்பலை இங்கை அனுப்பிற வரைக்கும் உங்களை இப்பிடித் தான் பாடாய்ப் படுத்துவாங்களாம்.
மன்மோகன் ஐயாவிட்ட சொல்லிக் கப்பலை மகிந்த மாமாட்டை அனுப்ப சொல்லுங்கோ.

அடுத்து நல்லதொரு சுதந்திர தினப்பரிசு குடுத்தீங்கள். ரொம்ப சந்தோசம்.

tamil cinema said...

இந்த மூன்று நடுவர்களுமே உண்மையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே..
ஜேர்லிங்,தர்மசேன,காமினி சில்வா ஒழிக..

எல்லா சிங்களவர்களுமே ஒழிக... தமிழிழம் வாழ்க...

பிரபா said...

எப்பிடி இவங்களால மட்டும் இவ்வளவு தெளிவான முடிவுகளை எடுக்க முடியுது????? (பிழையாக )

நிராதன் said...

லோசன் அண்ணே இவங்கள் எவ்வளவு தான் கஷ்டபட்டு அம்பியரோட சேர்ந்து பெரிய தலய out ஆக்கினாலும் புது முகங்கள் எல்லாம் முரளி, மெண்டிஸின் பந்துகளை துவம்சம் செய்கிறார்கள்.
தோனியின் தலமைத்துவம் அபாரம்.

nishu said...

anna Fleminga marandhuttingale......

Anonymous said...

முன்பு அடம் கில்க்ரிஸ்ட்,இலங்கையின் ரொஷான் மகாநாம,அரவிந்த டீசில்வா,ராகுல் திராவிட்,மைக்கல் ஹசி ஆகியோருக்குப் பின் தோனியும் இந்த கனவான்களின் வரிசையில் ஒரு walkerஆக சேர்ந்திருப்பது மகிழ்ச்சி..

குமார் சங்காரவும் (இரு தடவை என்று நினைக்கின்றேன்) அவ்வாறு walker ஆக வெளியேறி யுள்ளார்...

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified