January 22, 2009

முட்டாள் அமைச்சரே


அமைச்சர் : மன்னா, கல்விச்சாலைகளுக்கு போதிய வசதிகள் இல்லையென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்! வெகுவிரைவில் வேலை நிறுத்தத்திலும் இறங்கலாமாம்! 

மன்னர் : சமாளித்து விடும் அமைச்சரே! இப்போதிருக்கும் நிதி நெருக்கடியில் ஒன்றுமே செய்ய இயலாது!  

அமைச்சர் : மன்னா, போக்குவரத்தப் பாதைகள் நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லையென்று மக்கள் குறைப்படுகிறார்கள. எல்லாப் பாதையுமே குன்றும் குழியுமாம் என்று பரவலான அதிருப்திப் பேச்சுக்கள்!  

மன்னர் : முடியாது அமைச்சரே - வீதி அபிவிருத்திக்கென்று வாங்கிய வரிகளையும் கடன்களையும் தானே பல்வேறு விதமாக அமுக்கிவிட்டோமே! புரட்சி செய்வோரை நசுக்கிவிடலாம்! 

தளபதி : மன்னரே சிறைச்சாலைகளில் இடவசதிஇ ஏனைய வசதிகள் போதவில்லையென்று ஆர்ப்பாட்டம் நடத்தகிறார்கள். 

மன்னர் : அப்படியா?  
அமைச்சரே , உடன் நடவடிக்கை எடும்! அவர்கள் கேட்கும் எல்லா வசதியும் உடனே செய்து கொடுக்கப்படவேண்டும்!  
எல்லா சிறை அறையிலும் ஏ சி பூட்டி விடும்!  
விரும்பினால் கைதிகளுக்கு வாரத்தில ஒருநாள் விடுமுறையும் கொடுக்க உத்தரவிடுவோம்!  

அமைச்சர் : (ஆச்சரியத்துடன்) என்ன மன்னரே இது..அத்தியாவசிய தேவைகளான கல்வி வீதிகளை விட்டுவிட்டுப் போயும் போயும் சிறைகளுக்கா..  

மன்னர் : முட்டாள் அமைச்சரே – புரியாமல் பேசுகிறீர்...நாளையே தமது பதவி பறிபோனால், பதவிக்காலம் முடிந்த பிறகு பள்ளிக்கூடம் போகப் போகிறோமா ? இல்லையென்றால் வீதியில் பயணிக்கப் போகிறோமா... 
சொன்னதைச் செய்யும்.. 

பி.கு - இது அண்மையில் நான் வானொலியில் சொன்ன நகைச்சுவை.. சும்மா ஒரு பதிவாகப் போடலாம்னு போட்டேன்.. வேறு எந்த உள் குத்து,உடன் குத்தும் இல்லை..

21 comments:

ஆதிரை said...

ஆமாம்... சத்தியமாக எந்த உள் குத்தோ அல்லது உடன் குத்தோ கிடையாது.

எப்படிங்கண்ணா உங்களால இப்படியெல்லாம்....?
முடியல... முடியல... :)))

ஜெகதீசன் said...

:)))

இர்ஷாத் said...

கொன்னுடீங்க போங்க

பின் விளைவுகள் ஏற்பட்டால் நீங்களே பொறுப்பு

Pratheep's Page said...

சபாஷ் சரியான பதில்

வாமுகோமு said...

மிகசிறந்த நகைசுவை பின்வரும் தளத்தில் :

http://aruvaibaskar.blogspot.com/2009/01/blog-post_21.html

நன்றி .

kajan's said...

நல்லாதான் இருக்கு தொடர்ந்து போட்டு த்துங்க.
கஜன்.france

நிமல்-NiMaL said...

உள்குத்து வெளிக்குத்து இல்லாமல் நடுக்குத்தாக ஒரு பதிவு...!! அருமை...!!

Sinthu said...

"வேறு எந்த உள் குத்து,உடன் குத்தும் இல்லை.."

எதுவும் இல்லை என்றால் தான் எதோ இருக்கு என்று பல சொல்லவார்கள். அண்ணா இதை எப்படி எடுக்க...

Thusha said...

ஹி ஹி ஹி உங்களுக்கு தன் என்ன ஒரு நகைச்சுவை உணர்வு

tamil cinema said...

நகைத்தேன். கொஞ்சம் பெரிசா எழுதியிருந்தால் இன்னமு் சிரித்திருப்போம். நன்றி லோசன்.

’டொன்’ லீ said...

:-)

கலை - இராகலை said...

க.க.போ.
கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டு போகின்றீர்கள்
ம்ம்ம்ம்

வேத்தியன் said...

அருமை அருமை...
நல்ல பதிவு...
:-)

Anonymous said...

நகைசுவையும்,நக்கலுமாய்,நாட்டு நடப்பை உங்கள் கைகளால் குத்தியதும் ,மின் வலையில் தெறிக்க...உள்குத்தும்,உடன்குத்தும் குத்தட்டும் சிலருக்கு.......

பீஷான் கலா

Anonymous said...

hi loshan anna ..u join in Tamilmantram..? some body ther wit ur nam its u?

RAMASUBRAMANIA SHARMA said...

Nalla Comedy...Aanalum konjam over...!!!

Subankan said...

//வேறு எந்த உள் குத்து,உடன் குத்தும் இல்லை..//
நல்லாப் புரியுது!

தியாகி said...

ஆமா சாமி...உள்குத்தும் இல்லை, வெளிக்குத்தும் இல்லை..இது நெத்தில குத்தா??

LOSHAN said...

ஆதிரை, ஹீ ஹீ,, எதோ இப்ப பழகீட்டுது.. எவ்வளவு பண்றோம்.. இதைப் பண்ண மாட்டோமா?

நன்றி ஜெகதீசன்

LOSHAN said...

இர்ஷாத், //கொன்னுடீங்க போங்க //
யாரை எங்கே? ஐயா சாமி நான் நிரபராதிங்க..

//பின் விளைவுகள் ஏற்பட்டால் நீங்களே பொறுப்பு//
நல்ல கதை முன்விளைவே எனக்குத் தெரியாது.. இதுக்குள்ள பின்னாம் விளைவாம்..

:) Pratheep's Page

வாமுகோமு- பார்த்தேன்,ரசித்தே,சிரித்தேன்

நன்றி கஜன், //தொடர்ந்து போட்டு த்துங்க.//
யாரை நாங்க தாக்க? கொஞ்சம் அப்பிடி,இப்படின்னா எல்லோரும் எங்களைத் தான் தாக்குறாங்களே.. ;;)

நிமல்,
//உள்குத்து வெளிக்குத்து இல்லாமல் நடுக்குத்தாக ஒரு பதிவு...!!//
என்னாது நடுக் குத்தா? நல்லா இருக்கே.. அடுத்த முறை பயன்படுத்தலாம்..

சிந்து,
//எதுவும் இல்லை என்றால் தான் எதோ இருக்கு என்று பல சொல்லவார்கள். அண்ணா இதை எப்படி எடுக்க...//
எப்படி வேணா எடுத்துக்கலாம்.. ;)

துஷா,
//ஹி ஹி ஹி உங்களுக்கு தன் என்ன ஒரு நகைச்சுவை உணர்வு//
அது இன்று தான் தெரிந்ததா?

டொன் லீ :)

கலை - //க.க.போ.
கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டு போகின்றீர்கள்
ம்ம்ம்ம்//
நன்றி புலவரே.. (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ?)

நன்றி வேத்தியன்

பீஷான் கலா, கலக்கிடீங்க.. கவிதை போல இருக்கு உங்கள் பின்னூட்டம்..

அனானி, அது நானே தான்.. நான் அவனில்லை என்று சொல்ல மாட்டேன்.. :)

ராமசுப்ரமனிய ஷர்மா - //Nalla Comedy...Aanalum konjam over...!!!//
நன்றி. நக்கல் என்று வரும்போது, கொஞ்சம், கூட ஓவர்லாம் பார்ப்பதில்லை நான்.. :)

சுபாங்கன், //நல்லாப் புரியுது!//
புரிஞ்சுது இல்ல.. ;)

தியாகி, //இது நெத்தில குத்தா??//
நல்ல காலம்,நீங்கள் இன்னும் 'பத்மஸ்ரீ'விவேக் ரேஞ்சிற்குப் போகல.. ;)

ifham aslam said...

Old is Gold! intha pathivai repost pannunga anna... kaalathukku thahuntha oru post!

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified