
எங்கள் சின்ன இலங்கைத் தீவுக்குள் இப்போதே 4 செல்பேசி நிறுவனங்களும் 3 நிலையான தொலைபேசி நிறுவனங்களும் இருக்கின்ற 20 மில்லியன் மக்களைப் (இதில் யுத்தப்பகுதிகளில் இருப்போர் தொலைபேசியைப் பாவிக்கும் வசதியற்றோரும் அடங்குவர்) பங்குபோடுகின்றனர்.
ஆரம்பத்தில் யானைவிலை,குதிரைவிலை என்றிருந்த செல்பேசி விலைகளும் இணைப்புக் கட்டணங்களும் பாவனைக் கட்டணங்களும் நிறுவனங்களின் போட்டா போட்டியில் ஏட்டிக்குப் போட்டியாகக் குறைந்து இப்போது அறவிலைக்கு எல்லாம் வந்துவிட்டன. இதைவிடக் குறைப்பதென்றால் இலவசமாகவே எல்லாம் கொடுக்கவேண்டும் என்ற நிலை.
யார் வேண்டுமானாலும் ஒரு தொலைபேசி இணைப்பை,குறிப்பாக செல்பேசி இணைப்புக்களை மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை. இதனால் தான் இலங்கையில் குற்றச் செயல்கள் முக்கியமாக பயங்கரவாத சம்பவங்களும் குண்டுவெடிப்புகளும் அதிகரித்திருப்பதாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிக்கையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இந்தியாவில் விரிந்து பரந்து இந்தியாவின் முதன்மை செல்பேசி நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள பாரதி எயார்டெல் நிறுவனம் இலங்கையிலும் தனது சேவையை ஆரம்பிக்கப் போவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகின.
எனினும் ஓநாய் வருது..ஓநாய் வருது (வழமையாகச் சொல்லும் விலங்கின் பெயர் இப்போதைய நிலையில் இலங்கையில் பயன்படுத்த முடியாது என்பதாலேயே ஓநாய்) கதையாக இதோ இதோ என்று சொல்லப்பட்டதே தவிர எயார்டெல் வருகிறது. ஆனால் இப்போதில்லை என்பதாக கிட்டத்தட்ட ஒருவருடம் ஒடிய பின்னர் கடந்த வாரம் தான் எயார்டெல் இலங்கையில் தனது சேவையை ஆரம்பிக்கும் உறுதியான நியதியை அறிவித்துள்ளது.
ஆனால் கடந்த 9 மாத காலமாகவே நிறுவனமாகத் தனது ஆரம்பகட்ட திட்டமிடல் செயற்பாடுகளை எயார்டெல் முன்னெடுத்திருந்தது. ஒரு பெரிய இந்திய நிறுவனம் இலங்கையிலும் வேர்விட்டுள்ளது என்றவுடனேயே பல்வேறு நிறுவன ஊழியர்களும் பாய்ந்தடித்துக் கொண்டு எயார்டெல்லின் இணைந்தனர். குறிப்பாக இப்போது இலங்கையின் முன்னணி செல்பேசி நிறுவனமான டயலொக்கில் இருந்து மட்டும் மாறியவர்கள் பல நூறு என்று சொல்லப்படுகிறது. அதிலும் கடந்த மாதம் தொடங்கிய எயார்டெல் பரபரப்பில் (Airtel fever) பங்குச்சந்தை முதல் மிஸ்கோல் அடிக்கும் பஞ்சப் பரதேசிகள் வரை யாரும் தப்பவில்லை.
கேபிள் தொலைக்காட்சிகள் மூலமாக ஏற்கெனவே நாம் ஏயார்டெல்லின் குறியிசைகள் (ஏ.ஆர்.ரஹ்மானின் கைவண்ணம்) ஷாருக்கான் முதல் பல பிரபலங்கள் எங்களுக்கு ஹாய் சொல்லியிருப்பதைப் பார்த்திருந்ததால் எயார்டெல் இலங்கையிலும் செல்பேசிப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
சலுகைகள் இலவசம் என்றே நாம் பழகி அடிமையாகிப் போய் இருந்ததனால் எயார்டெல் தரப்போகும் புதிய சலுகைகள் மற்றும் எயார்டெல்லின் போட்டியை எதிர்கொள்ள டயலொக்,மொபிடெல்,ஹட்ச்,டீகோ ஆகியன தரப்போகும் வேறு புதிய சலுகைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்தன எங்கள் அப்பாவி (அல்ப) மனங்கள்!
இதற்கிடையில் மின்னஞ்சல் உள்பெட்டியைத் திறந்தால் (email inboxஐக் கொஞ்சம் தீவிரமாய்த் தமிழப்படுத்தினேனுங்க) ஆசையைக் காட்டுகிறமாதிரி எயார்டெல்லே அனுப்புற மாதிரி out going இலவசமாக தருவதாக அறிவித்து சில ஆசைகாட்டும் மின்னஞ்சல்கள்.
எயார்டெல் சேவை இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்போகிறது என்றவுடனேயே இன்னொரு தொல்லை அதிகரித்தது.
எயார்டெல் இலங்கையில் எயார்டெல்லின் சலுகை என்ற பெயரிலெல்லாம் பல்வேறு சங்கிலித்தொடரான மின்னஞ்சல்கள் வந்து இன்பொக்சை ஒவ்வொருநாளும் நிரப்பும். இதில் வேறு அழைப்புக்கட்டணங்கள் பற்றி வரிகள் அடங்கலான விபரங்களும் வந்து சேர்ந்தன. எனது நண்பியொருத்தி எயார்டெல்லில் இலங்கைப்பிரிவின் பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பதால் அவளிடமே இதனை forward செய்து உண்மையா? என்று கேட்டபோது, தங்கள் நிறுவனம் ரஜினிகாந்த் மாதிரி என்று பதில் வந்தது.
'எப்ப வருவோம்; எப்படி வருவோம்னு யாருக்குமே தெரியாது'
எனினும் நத்தாருக்கு கொழும்பின் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் பெயர் குறிப்பிடாமல் சிவப்பு – வெள்ளை நிறங்களில் ஏராளமாக அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிகள் எயார்டெல் களத்தில் குதிக்கப்போவதைச் சொல்லாமல் சொல்லியது.(நேற்று முன்தினம் முதலே எயார்டெல்இன் பெயர் இதில் சேர்க்கப்பட்டது)
நத்தார் வாரத்திலிருந்து மேலும் களேபரம் - ஒவ்வொருநாளும் பத்துப் பதினைந்து மின்னஞ்சல்கள், புதிதாக எயார்டெல்லில் நியமனம் கிடைத்த ஆர்வக்கோளாறு ஏஜென்டுகளின் அழைப்புக்கள் மட்டுமில்லாமல் பேஸ்புக் (facebook) திறந்தால் அங்கும் எக்கச்செக்கமான அழைப்புக்கள், அதிகரிப்புக்கள், குரூப்புக்கள்.....ரொம்ப ஓவரப்பா!
திடீரென்று இந்தியத்தொலைக்காட்சிகளில் இதுவரை காலமும் ஹலோ சொல்லி வந்த ஷாருக்கான் இலங்கைத் தொலைக்காட்சிகளிலும் ஹலோ சொல்ல ஆரம்பித்தார்.அது சரி இலங்கையர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் ஆகியோர் எப்போது ஹாய் சொல்லப் போகிறார்கள்?

ஹிந்தித் திரைப்படங்களே தெய்வ தரிசனம் என்றிருக்கும் எங்கள் சிங்கள இனத்தவருக்கு கேட்கவா வேண்டும்?
இலக்கங்களை இப்போதே முன்பதிவு செய்யலாம் என்றவுடன் - சலுகை என்றால் சாப்பாடே மறந்து போகும் எம்மவர் எயார்டெல்லின் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட கிளைகளின் முன்னால் பரபரப்பாகக்கூடியது இருக்கிறதே – கோவில் திருவிழாக்கள், முன்னைய இந்தியத் தூதுவராலயத்துக்கு விசாவுக்காக நிற்கும் கூட்டம் தோற்றுப்போய்விடும்.
சிம்கார்ட் இலவசம், முன்பதிவுக்கட்டணமில்லை, கட்டணங்கள் குறைவு, fancy இலக்கங்கள் பதிவு செய்யலாம் என்ற பரவிய கதைகளே காரணம்! நானும் இந்தக் கூட்டக்களேபரங்களுக்குள் கலந்து கொள்ளாமலேயே நம்ம செல்வாக்கினாலே இரண்டு fancy இலக்கங்களை எடுத்திட்டேன்.
இதுக்குள்ளே இந்திய நிறுவனம் என்றபடியால் ஒருபக்கம் இந்தியாவுக்கான ரோமிங் இலவசம் என்ற பேச்சு ஒருபக்கம் - மறுபக்கம் இந்தியன் எம்மைச் சுரண்டப்பார்க்கிறான் என்று துவேஷம் நிறைந்த சிங்கள விஷமப் பிரச்சாரமும் பரவியிருக்கிறது.. இதனாலோ போட்டி நிறுவனமொன்றின் தூண்டுதலாலோ கண்டியில் எயார்டேல்லின் விளம்பரப் பலகை ஒன்று உடைக்கப்பட்டுள்ளது..
எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயார் எனும் பாங்கில் கடந்த வியாழன் முதல் கொழும்பு எங்கும் , எல்லா ஊடகங்களிலும் விளம்பர மழையை பொழிய ஆரம்பித்துள்ளது.
12ஆம் திகதி முதல் இலங்கையில் எயார்டெல் திருவிழா ஆரம்பம்.. பார்ப்போம் எப்படி,எது வரை இது செல்லும் என்று.. மற்றப் போட்டி நிறுவனங்கள்,குறிப்பாக இதுவரை இலங்கையின் செல்பேசி ராஜாங்கம் நடத்திவந்த டயலொக் இந்த இந்திய ராஜாவை எப்படி எதிர்கொள்ளும் என்பதையும் பார்ப்போம்.
அதுபோல அரசாங்க ஆதரவு கொண்ட மொபிடெல் என்ன செய்யும் என்பதும் எம் போன்றவர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தந்துள்ளது.
பி.கு- இந்தப் பதிவை நான் எழுதிப் பகிரங்கப் படுத்துமுன் யாராவது இது பற்றி வேறு பார்வை பார்துள்ளார்களா என்று தேடிய வேளையில் நண்பர் ஹரன் என்பவர் ஒரு ஆழமான பார்வையை இந்திய நோக்கில் பார்த்துள்ளார். அதையும் கொஞ்சம் பார்த்து விடுங்கள்.
20 comments:
லோசன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்... ஓசியில ஊசி என்றால் ஏசி கூட ஈசியாகிடுமாம்....???
அட 'Express yourself' என்பது எயார்டெல்லின் வாசகமா???
இதை நம்ம 'டீ'யில தொடங்கி 'கோ'ல முடியுற கம்பனி காப்பியடிச்சிட்டாங்களா???
என்ன கொடுமை சரவணன் இது???
//அட 'Express yourself' என்பது எயார்டெல்லின் வாசகமா???
இதை நம்ம 'டீ'யில தொடங்கி 'கோ'ல முடியுற கம்பனி காப்பியடிச்சிட்டாங்களா???///
டீகோ தான் எயார்டெல்லை பாத்து காப்பியடிச்சிச்சு...
இலங்கையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
Dialog - Malaysian
Mobitel - Japanese/SL
Tigo - European (Luxembourg)
Hutch - Hong Kong
Airtel - Indian
"AIR TEL" இலங்கையில் தடம் பதிக்கிறது...!
Airtel புரட்சி இலங்கையில்
அடடா அசத்துறீங்க கமல்.. நல்லா இருக்கே இது,நான் வழமியா சொல்லுறது 'ஒசீயில கொடுத்தா ஒயில் கூடக் குடிப்போம்'
ஆமாம் வேத்தியன், நம்மவங்க எதைத்தான் உருப்படியா செஞ்சிருக்காங்க?? ;)
அது சரி என் சரவணனைக் கூப்பிட்டீங்க? அவரு யாரு? ;)
கார்த்திக் , டீகோ, மற்றும் மொபிடெல் ஆகிய நிறுவனங்களின் அதிக பங்குகள் இலங்கையருக்கும் இருக்கின்றன..
நீங்கள் தந்திருப்பவை எல்லாம் செல்பேசி நிறுவனங்கள் மாத்திரமே..
land line providers
Sri lanka telecom
Lanka bell
Suntel
நன்றி ..இப்போ தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்..
மயூரன், உங்கள் பதிவையும் பார்த்தேன்.. நீங்கள் அப்போதே எழுதி இருக்கிறீர்கள்.. உங்கள் பார்வைக் கோணம் அருமை..
நானும் இதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன் ஆனால் இனி மேலதிக பதிவுகள் தேவையில்லை என்றளவிற்கு நீங்கள் போட்டுவிட்டிங்க.
//இதற்கிடையில் மின்னஞ்சல் உள்பெட்டியைத் திறந்தால் (email inboxஐக் கொஞ்சம் தீவிரமாய்த் தமிழப்படுத்தினேனுங்க) ஆசையைக் காட்டுகிறமாதிரி எயார்டெல்லே அனுப்புற மாதிரி out going இலவசமாக தருவதாக அறிவித்து சில ஆசைகாட்டும் மின்னஞ்சல்கள்.//
எங்கட நிறுவன உரிமையாளர் இந்த மின் மின்னஞ்சல் எலாத்தையும் எனக்கு அனுப்பி இப்படி ஒரு எழுதிக் கொல்லுராரு
"Check the airtel rates & Compare with Dialog . i think airtel will give cheap rates. ASAP go an book easy numbers"
ம்ம்ம் அங்கு போய் வரிசையில் இருந்து No Book பன்னியதெல்லாம் தனி கொடுமை அண்ணா
ஆனால் அந்த Nos எதுவுமே கிடைக்கவில்லை என்பது அதைவிட கொடுமை!!!!!
காலைப் பொழுதில் அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக மெயில் செக்கப் தான்! வழமை போல இன்று காலையும் கணினி முன் உட்கார்ந்து லொகின் செய்தவுடன் வந்த முதல் மெயிலே ஏயர்டெல் சலுகைகளை பற்றியதாகவே இருந்தது.
அதில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது 1000 இலவச எஸ்.எம்.எஸ், 500 நிமிட இலவச வெளிச்செல்லும் அழைப்புக்கள் என நீண்டதொரு மெயிலாக இருந்தது. எதிர்பார்ப்புடன் அனைத்தையும் படித்தேன். இறுதியில் எயர்டெல் சிம்மை பெற (குறிப்பிட்ட இ.மெயில் முகவரி தந்திருந்தார்கள்) இந்த முகவரிக்கு உங்கள் தகவல்களை அனுப்புங்கள் எனவும், நாங்கள் வெகு விரைவில் தொடர்பு கொள்வோம். என்று குறிப்பிட்டிருந்தார்கள். நான் இந்த சலுகைகளையோ மெயிலையோ நம்பவில்லை. ஏனென்றால் இதுபோல பல தடவைகள் ஏமாற்றத்தை சந்தித்ததால் முதலே Alert ஆகிட்டன்.
ஆசை விட்டுவைக்கவில்லை தான் எனினும் மொட்டைக்கடிதம் போல ஒரு வெறும் ஹாய் போட்டு மெயில் பண்ணினேன். உடனேயே இன் -பொக்ஸில் அநாதையாக ஒரு மெயில் வந்திருந்தது. அதில் அழகாக கீழ் குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் காட்சியளித்தன!!!
Hey idiots, this is a spam message....don't forward this to anyone......
காலைவேளையில் ஒரு 'குட்மோனிங்' சொல்லுவம் என்டில்லை இப்படி திட்டி வருதே சகுணம் சரியில்லை போல இருக்கு என மனதுக்குள்ள நினைத்து விட்டு பணிகளை பார்க்க தொடங்கினேன்.
நண்பர்களே! வாசகர்களே!
இப்படிபட்ட பல ஏமாற்ற வித்தைக்காரர்கள் இணையத்தளத்தில் இருக்கும் வரை ஏமாளிகளும் இருக்கதான் செய்வார்கள். எனவே இவ்வாறு மெயில்கள் வந்தால் தெளிவாக இருக்கவும். ஜாக்கிரதை!!
//LOSHAN said...
அது சரி என் சரவணனைக் கூப்பிட்டீங்க? அவரு யாரு? ;)\\
அவரு தாங்க...
சீரியஸான விஷயத்தை கூட நல்லா காமெடியா ஃபீல்(Feel) பண்ணுவாரே..
அவர் தான் :)))
நன்றி அண்ணா,
Airtel தொடர்பான என்னுடைய பதிவுக்கு
இணைப்பு கொடுத்தமைக்கு உங்களுக்கும் , வந்து பார்த்துச் சென்றமைக்காக உங்களுடைய வாசகர்களுக்கும்.
டயலாக் உடன் ஒப்பிடுகையில் இந்தி திரை நட்சத்திரங்கள் மட்டுமே கூடுதல் பலம். டயலாக் தேசப்பற்றை காட்டி விளம்பரம்
செய்தால் அதுவும் இலகுவாக முறியடிக்கப்படலாம் .....
karthik: Airtel முற்றுமுழுதான இந்திய நிறுவனம் அல்ல . 45 சதவீத பங்குகள் சிங்கப்பூர் telecom co,vodofone மற்றும் பல வெளிநாட்டு கம்பனிகளுக்கு சொந்தமானது.
ஒன்றரை வருடத்துக்கு முன், Airtel இலங்கையினுள் நுழையப்போகிறது என்றதும் உஷாராகிவிட்டேன்.நான் தீவிர Rahman இரசிகன்.Airtel குறியிசை, அதன் பல்வேறுபட்ட remix வடிவங்கள் என்றெல்லாம் சேர்த்து வைத்திருந்தேன்.A/L முடிந்து Airtel இன் மின்னஞ்சல் முகவரிக்கு என் CV யை கூட அனுப்பினேன்.பதிலே இல்லை.எப்படியும் Airtel sim ஒன்று வாங்க வேண்டும் என்று உறுதி பூண்டேன்.அதற்கிடையில் இங்கே UK வந்து விட்டேன்.
Airtel பற்றிய பதிவு ஒன்று எப்போ வரும் என்று காத்திருந்தேன்.வந்துவிட்டட்டது.
''சூப்பர் விளம்பரம் Airtel இற்கு'' அப்படின்னு ராமசாமி அண்ணே சொல்ல சொன்னாரு.....
ஒரு கணிதரீதியான எயார் டெல் பற்றிய பதிவு http://eksaar.blogspot.com/
//(வழமையாகச் சொல்லும் விலங்கின் பெயர் இப்போதைய நிலையில் இலங்கையில் பயன்படுத்த முடியாது என்பதாலேயே ஓநாய்)//
:))
Villu Tamil Movie Hits Big Screen from Today
For details | www.cityhits.blogspot.com
I think like India Airtel will giv charges in cheap rate...
wat evr its make roaming to india cheap...
ஏர் டெல் தமிழ் நாட்டில் ரூபாய் 400 க்கு
800 நிமிடம் இலவசம் .
அதே போல 800 SMS இலவசம் . பொறகு 30 பைசா ஏர் டெல் க்கு . மத்ததுக்கு 50 பைசா .
லோஷன்,
இந்தியாவில் செல்பேசி பல நிறுவனங்கள் இருந்தாலும் (Aircel,Airtel,IDEA,BSNL,MTNL,Spice & Vodafone) Aitel தான் சேவை தரத்திலும்,பயனாளர் சேவையிலும் சிறந்து விளங்குகிறது.பார்க்கலாம் இலங்கையின் அரசியலில் இவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறதா என்று.
ஹாய் அண்ணா பொறுந்திருந்து பார்ப்போம் எது முதல் எடம் என்று ,எதோ குறைந்த கட்டணத்தில் தெளிவை பேச முதேந்தால் நல்லம்தானே. பதிவு மிகவும் நன்று .
சுதன்
இந்தியாவிற்கு கதைப்பதற்கு இப்பொழுது சாதாரணமாக ரூபா 8 தொடக்கம் 15 வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. ஏர்டெல் இந்தியாவில் இருந்து வருவதால் இதந்த கட்டணத்தை குறைத்தால் ஏர்டெல் எல்லோராலும் விரும்பப்படும். குறிப்பாக வடகிழக்கு தமிழர்களால்.
Post a Comment