
அண்மையில் வெளிவந்த சிம்புவின் சிலம்பாட்டம் பற்றிப் பலவாறான (எல்லாமே பொதுவாகத் திட்டித் தான்) விமர்சனங்களைப் படித்தேன்.. எல்லாரும் தாக்குகின்ற அளவுக்கா சிலம்பாட்டம் மோசம்? அண்மையில் எனக்கும் தற்செயலாக சிலம்பாட்டம் பார்க்கக் கிடைத்தது. உண்மையில் பூ படம் பார்க்கத் தான் திரையரங்கு போனோம்.. அந்தப் படத்தை தூக்கிவிட்டு வேறு படங்கள் போட்டிருந்தார்கள்.. அதிலொன்று தான் சிலம்பாட்டம்.இந்தப் படத்தின் பாடல்களை ஏற்கெனவே தொலைக்காட்சிகளில் பார்த்திருந்த என் அலுவலக நண்பர்கள் விமலும்,பிரதீப்பும் சனா கானைப் பார்க்கவேண்டும் என்று அடம்பிடிக்கவே சிலம்பாட்டம் பார்க்கவேண்டியதாப் போச்சு..(ஹீ ஹீ நமக்கும் இவங்க சொன்னதைக் கேட்டு ஒரு ஆசை தான்.. அதில வேற பாட்டுல சின்ன rambaa என்று சிம்பு எழுதிட்டாரா.. பார்க்கவே வேணும் என்றாயிட்டுது)
இந்த சிலம்பாட்டத்தில் இருந்து நாம் கற்கவேண்டிய வாழ்க்கைப் பாடங்களைச் சொல்வதே எனது இந்தப்பதிவின் நோக்கம்..
சிம்புவின் கடந்த படங்களில் இருந்து எப்படி சிலம்பாட்டம் வேறுபட்டுள்ளது என்றால்.. சிம்பு இதுவரை நடிக்காத பிராமண வேடம்.. கதாநாயகிகள் இரண்டு பேருமே சிம்புவுடன் இதுவரை ஜோடி போட்டவர்களில்லை.. (திரைப்படங்களில்)
இதுக்கு மேல வேற என்ன தான் வித்தியாசம் காட்ட முடியும்?
ஆ .. மறந்துட்டனே.. இன்னொன்னு.. சிம்புவே சிம்புக்கு தந்தையாக நடிப்பதும் இதுவே முதல் தடவை.. (யப்பா பேசாமல் விஜய.டி.ஆரையே கூப்பிட்டிருக்கலாம்)
படத்தின் தொடக்கத்திலேயே இயற்கை உபாதைகளைக் கூட எவ்வாறு நல்ல (!) நகைச்சுவை ஆக்கலாம் என்ற அற்புதமான பாடம் சொல்லித் தருகிறார் சந்தானம். வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வாரிசு ஒருவர் வந்துவிட்டார்.
இதுவரை தமிழ் சினிமாக்களில் சொல்லாத அளவுக்கு கு_,கு_ _ போன்ற வார்த்தைகளைத் தாராளமாகப் பயன்படுத்திய பெருமையும் சிம்பு,சந்தானம் குழுவினருக்குப் போய்ச் சேருகிறது.
இந்தப்படத்தைப் பார்த்த பிறகு சில தயாரிப்பாளர்கள்,இயக்குனர்களுக்குப் புதிய ஐடியாக்கள் தோன்றி இருக்கக் கூடும். ஒரு கதாநாயகிக்கு எவ்வாறெல்லாம் ஆடை சிக்கனம் செய்யலாமா என்பது தான் அது..
சனா கான் பாத்திரத்தில் அக்ரகாரப் பெண்.ஆனால் ஆடும் ஆட்டங்களிலோ கிட்டத் தட்ட முக்கால் வாசி அவிழ்த்து விடுகிறார்..
இயக்குனர்களும் இனி மேல் குடும்பப்பாங்கான பாத்திரங்களையும் கனவுப் பாடல் காட்சி என்ற போர்வையில் கவர்ச்சி மழையில் நனைய வைக்கலாம்.
மானாட மயிலாட,ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஜென்ம சாபல்யம் சிம்புவின் நடனங்களால் கிடைத்துள்ளது.. சும்மாவா நடனத்தோடு உடற்பயிற்சி,ஜிம்னாச்டிச்ஸ் எல்லாம் செய்கிறார்.
பாடல் காட்சிகளில் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் கொடுத்து கொஞ்சம் டொல்பின், அப்படி இப்படின்னு மெருகேற்றி இருக்கலாமோன்னு தோனுது.. (ஒ அவங்க கிட்ட இவரு கொடுக்க மாட்டாரு.. இல்லே)
வச்சுக்கவா பாடலில் சிம்பு,சனா கான்,குழுவினரின் கால்கள் ஆடியதைவிட பிருஷ்டப் பகுதிகள் தான் கூடுதலாக ஆடுகின்றன.. (டிக்கி ஆட்டம்???)
இந்தப் பாட்டைப் பார்த்தால் சயந்தன் சந்தோஷப்படுவார். அவரும் ஒரு டிக்கி தானே.. ஹீ ஹீ
இந்தப்பாடலுக்கு முன்னதாக வருகின்ற காட்சிகள் மூலமாகவும் ,பஞ்சாமிர்தம் செய்கிற(பினைகிற என்று சொன்னால் தான் சரியோ??) காட்சிகள் மூலமாகவும் S.J.சூரியாவுக்கும் சவால் விடுகிறார் சிம்பு..
தத்ரூபமான நடிப்பில் சிவாஜி,கமல் எல்லோரையும் இந்தக் காட்சிகளில் பிரிச்சு மேய்கிறார்.. !!
இனிமேலும் கோவில்களில் பஞ்சாமிர்தத்துக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்..

இந்தப்படத்திலிருந்து மொக்கை,ஆபாச,அருவருப்பு நகைச்சுவைகளுக்கு வகை,வகையாக சிரிப்பது எப்படி என்று வகுப்பே எடுக்கிறார் சந்தானம்..
விஜயகுமார்,ராதாரவி,நிழல்கள் ரவி வரிசையில் இளைய திலகம் பிரபுக்கும் நல்ல எதிர்காலம் உண்டென சிலம்பாட்டம் காட்டுகிறது.. (ஏன்யா நல்லாத் தானே இருந்தீங்க? என்னாச்சு?)
ஆகா மறுபடி விரல் வேலை தொடங்கீட்டாரையா சிம்பு.. அப்பா சிம்பு வில்லன்கள் தொடக்கம் சிநேகா வரை (எங்கள் காதுகளையும் சேர்த்து) பிரிச்சு மேயிறாறு..
அப்பா சிம்பு (அது தாங்க பிரிச்சு மேயிறவர்) வைத்த மீசை அருமையாக இருக்கிறது.. பாவம் சிநேகா தான் கஷ்டப்பட்டிருப்பார்.
சின்னப்பையன் கொலை செய்யும் இடங்கள் தமிழ் சினிமாவில் இல்லாத வரலாற்றுப் புதுமை..காலமுள்ளவரை இயக்குனர் சரவணனுக்கு தமிழ் சினிமா கடன் பட்டுள்ளது.
காளை படம் ஓடாத கவலையை ரசனையே இல்லாத நமது ரசிகர்கள் அந்தப்படத்தை வெற்றி பெற வைக்காத கவலையை காளையை வைத்துக் கொண்டே வில்லன்களை மடக்கிக் காட்டுகிறார் சிம்பு..
எங்கெங்கெல்லாம் பாடல் காட்சி எப்போது வரும் என்றே தெரியாதளவுக்கு தமிழ் சினிமாவில் வந்துள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய அற்புதமான படங்களில் ஒன்றாக சிலம்பாட்டத்தைத் தந்தமைக்காக சரவணனையும் சிம்புவையும் பாராட்டி என்ன விருது தந்தாலும் தகும்.
பத்து படங்களின் பலவகைக் கதைகளையும் ஒன்றாக்கி படம் இயக்கம் வித்தை தெரிந்த சரவணனை தமிழ் திரையுலகம் நன்கு பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.
பொல்லாதவன்,ஜெயம்கொண்டான் படங்களில் மிரட்டிய வில்லன் கிஷோர் சிலம்பாட்டம் போல இன்னுமோர் படம் நடித்தால் எங்கேயோ போய் விடுவார்..
அந்த கிளைமாக்ஸ் காட்சியை அப்படி நீட்டிய ஐடியாவுக்கே ஒரு கை தரலாம்.. கொட்டாவிகளை வரப்பண்ணி எங்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
பாண்டியில் அப்படி நடித்த சிநேகாவை இப்படிக் காட்டுவீங்கன்னு கொஞ்சம் கூட நாங்க ,குறிப்பாக சிம்புவிடம் எதிர்பார்க்கலை.. (நம்ம விமல் சொல்றாரு சிம்பு மட்டும் பார்க்கலாம் என்று) அதில மட்டும் தான் சிம்பு கொஞ்சம் வம்பு பண்ணீட்டார்.
கண்டியில் எடுத்த டிரெயின் காட்சிகள் அவ்வளவு நல்லா இல்லீங்கண்ணா..
இளையராஜா ஐயா எத்தனை பேருக்குப் பாடிய உங்கள் உதடுகள் இவருக்கும் பாடிப் பெருத்த புண்ணியம் தேடிக் கொண்டன..
யுவன் தான் தெரியாமல் எல்லாப் பாடல்களையும் ஆட வைக்கும் பாடல்களாகக் கொடுத்து படத்தையே மானாட மயிலாட ஆக்கிட்டார்.
அஜித் உண்மையில் பெருமையடைவார்.. சிம்பு இவர் ரசிகர் என்று மறுபடி ஊரறியச் சொன்னதால்.. அஜித் பெரிய தலையாம்.. இவரு சின்ன தலையாம்.. தலை வெடிக்குது சாமி..
நல்ல காலம் அஜித் தப்பினார் பில்லாவுக்கு முதல் சிலம்பாட்டம் வந்திருந்தால் சிலவேளை விஷ்ணுவர்த்தன் அஜித்துக்குப் பதில் சிம்புவை அதில் நடக்க சாரி நடிக்க வைத்திருப்பார்.

மொத்தத்தில் சிம்பு மீண்டும் ஒரு தடவை நிரூபிச்சிட்டார்.. எவ்வளவு தான் தான் சகலகலா 'வல்லவனாக' இருந்தாலும், தன் படத்தை தானே கவிழ்க்கிறதில தான் ரொம்ப நல்லவன்னு..
பி.கு- என்னைப் பார்த்து நானே கேட்டது.. போவியா? சிம்பு படத்தைக் காசு குடுத்து தியேட்டரில பார்க்கப் போவியா?
ஆனா ஒன்னு மூஞ்சி மட்டும் கொஞ்சம் பழைய பித்தளை செம்பு மாதிரி இருந்தாலும் சனா கானுக்காக ஒரே ஒரு தடவை பார்க்கலாம் சிலம்பாட்டம்.. ;) நான் சொல்லலீங்கோ சக பதிவர் ராமசாமி (அது தாங்க ஜல்சா குளியல்,கில்மா படங்கள் எல்லாம் போடுவார் அவரே தான்) சொன்னது
34 comments:
அம்மாடியோவ் தப்பிச்சேன்டா சாமி நல்ல நேரம் இதில பிரிச்சு மேஞ்சது
(ஒ அவங்க கிட்ட இவரு கொடுக்க மாட்டாரு.. இல்லே)
lol, that was a good review. But what u have said is so true! It was worthless of paying money and time. Nalla funny'a eluthi irukinga. I didn't like that film.
வதீஸ், என் புண்ணியத்தில் நீங்க தப்பிடீங்க.. யார் புண்ணியமும் என்னைக் காப்பாத்தலையே....
ஆனந்த்.. ஹீ ஹீ..
மது.. நன்றி BUTTERFLY :) .. அப்படியா? அப்படியிருந்து எப்படி சிம்ம்புவுக்கு தொடர்ந்தும் பெண் ரசிகைகள் கூடிட்டே போறாங்க.. அதுவும் இதே மாதிரிப் படங்களையே அவர் தொடர்ந்தும் நடிக்கிறார்? ;)
படம் தொடங்கி வச்சுக்கவா பாடல் வரை சிடியில் பார்த்தேன், இனிமேல் இப்படி ஒரு துன்பம் என் எதிரிக்கும் நேரக்கூடாது என்று ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.
பஞ்சமிருதம், வாயுத்தொல்லை - சிம்புவின் ரசனை எவ்வளவு கேவலமானது என்பதற்கு இதை விட ஏதாவது இருக்கா.
ஹா, ஹா..!!
இனிமேல் நான் இந்தப்படம் பார்க்க தியேட்டர் போகவே மாட்டேனே..!! :)
பிரபா அண்ணா வாங்க.. உண்மை தான்.. திறமைகள் பல இருந்தும் வீணடிக்கிறார் சிம்பு
சுகன், ஆகா மற்றொருவர் திருந்திட்டாரையா.. நல்ல விஷயம்.. (சனா கான் பற்றி சொல்லியுமா? நம்ப முடியலையே ;))
//இயக்குனர்களும் இனி மேல் குடும்பப்பாங்கான பாத்திரங்களையும் கனவுப் பாடல் காட்சி என்ற போர்வையில் கவர்ச்சி மழையில் நனைய வைக்கலாம்.//
அதத்தான் பல வருஷமா பண்ணிட்டு இருக்காங்களே!
//என்னைப் பார்த்து நானே கேட்டது.. போவியா? சிம்பு படத்தைக் காசு குடுத்து தியேட்டரில பார்க்கப் போவியா? //
)))))))))))))
//மானாட மயிலாட,ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஜென்ம சாபல்யம் சிம்புவின் நடனங்களால் கிடைத்துள்ளது.. சும்மாவா நடனத்தோடு உடற்பயிற்சி,ஜிம்னாச்டிச்ஸ் எல்லாம் செய்கிறார்.//
haahaa....
சூப்பர்..
இப்படி எல்லாம் இருக்கும் எண்டு தேரிந்து தான் நான் அப்பவே முடிவு பண்ணிட்டன். சிம்பு, பேரரசு படங்கள் பார்க்கிறது என்றால் நூறு ரூபாவிற்கு மூன்று தான் ( வெள்ளவத்தை PAYMENT இல் வலம் வருவோற்குப் புரியும் )
kikikikiki
என்ன ராமசாமி இப்படி சொல்லீட்டாரு????????????
இனி இந்த படம் பார்ப்பதாக இல்லை அண்ணா.. பதிவின் மூலம் எங்களைக் காப்பற்றியதட்கு கோடி கோடி நன்றிகள்.....
Sinthu
Bangladesh
ஆஹா அப்படியா சங்கதி.....
தப்பித்தேன்
அண்ணா,
இந்த லூஸ கண்டாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும்..'சிலம்பாட்டம்', இரட்டை வேடம் என்றதுமே ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்ற உணர்ந்து கொண்டேன்.இது வரைக்கும் மன்மதன் மாட்டுமே யான் பார்த்த சிம்பு படம்..தப்பித்துக்கொண்டேன் சாமி...
But good post...........
"அந்த கிளைமாக்ஸ் காட்சியை அப்படி நீட்டிய ஐடியாவுக்கே ஒரு கை தரலாம்.. கொட்டாவிகளை வரப்பண்ணி எங்களை உற்சாகப்படுத்தியுள்ளார்."
நல்லா இருக்கே இது........
நன்று நன்று...
நானும் இந்தப்படத்தைப் போய் பார்த்து ஏமாந்தவர்களில் ஒருவன் தான்..
இதப்பத்தி நானும் எழுதி இருக்கிறேன்...
வாசித்துப் பாருங்களேன்..
http://jsprasu.blogspot.com/2009/01/blog-post_04.html
லோசன் ஒட்டு மொத்தமாய் சொல்லப் போனால் இது தான் இன்றைய தமில் சினிமா??? தாங்க முடியலையே???? Ha....Ha,,,,,,,
நம்ம சிம்பு இவளவும் செய்வார் ( பிரிச்சு மேயுரதை) என்று தெரிந்தும் நாம கோச்சி பிடிச்சு போய் அதுவும் வருஷ முதல் நாள் படம் பார்த்துட்டு வந்து சத்தம் போடாம இருக்கிறம் இல்ல ..!!!
எனக்கு சிம்பு என்றால் எப்பவும் ஒரு allergy, போதாக்குறைக்கு நீங்க வேற……!, உங்க விமர்சனம் போதும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு, சிம்பு சார் பல்லாண்டு காலம் பொள்ளூண்றி வாழ்க என வாழ்த்துகிறேன்.
அவரது வயதுக்கு மிகுந்த திறமைகள் கைவரப்பட்டவர். ஆனால் அவரது வக்கிரமான எண்ணங்களால் பலரது வெறுப்பையும் சம்பாதித்துவருகிறார்.
சிலம்பாட்டத்தை பிரிச்சு மேஞ்சிட்டீங்க
கண்டன அறிக்கையும், வார்த்தைப் பிரயோகப் பிழையை சுட்டிக்காட்டலும்
----------------
மேலேயுள்ள வம்பு சாரி சிம்பு பதிவில் நானும் விமலும் சனாகானைப் பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்ததாக குறிப்பிட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
'அடம்பிடிக்கிறோம்' என்று அது மாற்றப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காரணம் - திரைப்படத்துக்கு செல்வதற்கு முன் எனக்கோ விமலுக்கோ சனாகானின் பெருமைகள் தெரிந்திருக்கவில்லை என்பதே முற்றிலும் உண்மையாகும் (சத்தியமாத்தான், நம்புங்கோ!!)!! ஆனால் திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து அவரது அருமை பெருமைகளை நன்றாகவே உணர்ந்துகொண்டோம். அதனால்தான் இப்போது சனாகானின் 'சிலம்பாட்டம்' படத்தை (சிம்புவா? யாரது??) மறுபடியும் பார்க்கவேண்டும்; பார்த்தேயாகவேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மையாகும்.
-பிரதீப்.
நிறுவுனர்,அகில உலக சனாகான் நற்பணி(??) மன்றம்.
----------
வெறுமனே சூரியா என்று குறிப்பிடுகிறீர்களே.. இனிஷலைப் போடுங்கய்யா.
சரவணகுமாரன், ஆமா ஆனா இவர் பண்ணுறதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை?
அத்திரி.. ஹி ஹி..
நன்றி டொன் லீ :)
சுபாங்கன் சொன்னது புரியாதவங்க, வெள்ளவத்தை பக்கம் வந்தீங்க எண்டு சொன்னா ஆங்கிலத்தில் இருந்து இனி மேல் தான் வெளிவர இருக்கிற எந்திரன்,மர்மயோகி வரை DVD எடுக்கலாம்.. விலை நூறு ரூபாய் மட்டுமே..
தூயா :)
சஞ்சய், இது மட்டுமா சொன்னாரு? இன்னும் என்னவெல்லாமோ சொன்னாரு.. ;)
சிந்து, அப்படியெல்லாம் சொல்லப் படாது.. பிறகு சிம்பு மாமா (;)) என்னோட கோவிச்சுகுவாறு..
கலை.. :)
தியாகி, அநியாயத்துக்கு நல்லவனா இருக்கீங்களே.. சிம்புவுக்காக யாராவது படம் பார்ப்பமா? யாரோ ஜோடின்னு பார்த்தில்ல நாங்க படம் பார்க்கப் போறது.. ;)
நன்றி வேத்தியன், பார்க்கிறேன்.. உங்கள் பெயர் எனக்குப் பழைய என்னுடைய ரோயல் நண்பர்களை ஞாபகப்படுத்துகிறது..
கமல், ஆமாங்கய்யா.. நம்மாலயும் முடியல..
பிரியன், இது தேவையா? பேசாம நான் சொன்ன இடத்துக்காவது பொய் இருக்கலாம் தானே.. ;)
நஜீம், நன்றி.. :) உங்க வாழ்த்து இல்லேன்னாலும் போகிற போக்கில் பொல்லூன்றி வாழுவார் போலத் தான் தெரியுது..
அருண்மொழிவர்மன், ஆமாம்.. பிஞ்சிலேயே பழுத்தவர்.. ஆனால் பழுத்தவர்களையும் விட மாட்டேன் என்கிறார்.. ;)
நன்றி அனானி.. :)
சனா கான் படையின் தலைவர் பிரதீப்,(அடப் பாவி அசின் ரசிகர் மன்றம் என்னாவது??)
இனிஷல் போட்டுட்டேன்.. நன்றி சுட்டிக் காட்டியதற்கு..
அடம் பிடிப்பது இப்போ.. அப்போ பிடிததுக்குப் பெயர் என்ன? ;)
அது சரி எனக்கு மட்டும் சொல்லுங்க, அந்த அருமை,பெருமை என்று சொன்ன விஷயங்கள் என்னென்ன? ;)
எங்க 'தல' பத்தி தப்பா பேசாததால தப்பிச்சிங்க...
---நல்லா பிரிச்சி மேய்ந்ததற்கு பாராட்டுக்கள்...
//LOSHAN said...
நன்றி வேத்தியன், பார்க்கிறேன்.. உங்கள் பெயர் எனக்குப் பழைய என்னுடைய ரோயல் நண்பர்களை ஞாபகப்படுத்துகிறது..\\
நல்லது தானே???
பாடசாலைப் பெயரை மறக்க முடியாமல் தான் நம்ம வலைக்கும் அதே பெயரை வச்சுட்டேன்...
ஷாஜி, நான் உங்க 'தல' பத்தி மட்டுமில்ல, உங்க,அவரது தலை பத்தியும் எதுவும் பேசல.. ஆனால் இந்த சொமபு.. சாரி சிம்பு பில்லா நடை நடந்து 'தல'ய கலி செய்யிறாரே ... ரசிகர்லாம் ஒரு போராட்டம் நடத்த மாட்டேங்களா என்றெல்லாம் நான் கேட்கல.. ராமசாமி என்று ஒரு சக பதிவர் கேட்கிறாரு.. ;)
வேத்தியன், ஆமாம் .. நல்ல விஷயமே தான்.. நல்ல பழக்கமும்,படித்த பாடசாலையும் மறக்கவே கூடாது.. :)
டிக்கி ஆட்டம்???)சூப்பர்
இத பத்தி நானும் எழுதினேன்! பார்க்க
http://eksaar.blogspot.com
ஆனா இந்த படத்த சினிமால மட்டம் தான் பார்க்கலாம் !
hermes birkin bag
hermes birkin
hermes bag
hermes handbags
gucci handbags
simbu dance is better than vijay, surya & ajith
Post a Comment