
நாம் இலங்கையில் தான் வசிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் சில அடிப்படை ஆதாரங்கள்..
ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் உயிர்ப்பலிகளின்எண்ணிக்கை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் தவிர ஏனைய எல்லாப் பக்கங்களிலும் இடம்பெறும்.(கடைசிப் பக்கம் பொதுவாக விளையாட்டு செய்திகளுக்கானது)
குண்டு வீச்சு,குண்டு வெடிப்பு போன்றவற்றினால் எங்களை சலனப்படுத்திவிட முடியாது.(எத்தனையப் பார்த்திட்டோம்.. ) இவை எல்லாமே எங்களுக்கு சாதாரணமான,அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.டக்கென்று சுதாரித்து விடுவோம்.
வன்னிப் பிரதேசத்தின் வரைபடமே இப்போது மனப்பாடம் ஆகியிருக்கும்.(இதை பதிந்து கொண்டே இருக்கும் பொது தான் அரச தொலைக்காட்சியில் கிளிநொச்சியைக் கிட்டத் தட்ட இராணுவம் கைப்பற்றியதாகத் தகவல் சொல்லப்பட்டது)
பொருள் விலைகள் கூடினாலும் நாம் பொருமுவதொடு சரி, பொங்கிஎழ மாட்டோம்;
பெட்ரோல்,எரிவாயு விலை குறைந்தாலும் (அண்மையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விலைகள் குறைக்கப்பட்டன) பூரித்துப் போக மாட்டோம்.
மறுபடி திடுதிப்பென்று கூடுமென்று தெரியுமே..
பாண் தான் எங்கள் தினசரி காலை உணவாக இருக்கும்.
ஆட்சிக் கவிழ்ப்பு,நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற எதிர்க்கட்சிகளின் புராணங்கள் கேட்டுக் கேட்டு எம் காதுகள் புளித்திருக்கும்.
(இதோ அரசைக் கவிழ்க்கிறோம் என்று இவர்கள் புறப்படும் நேரம்,இவர்களைக் கவிழ்த்து விட்டு ஆளும் தரப்புக்கு மாறி அவர்கள் அமைச்சர்கள் ஆவது வரலாறு)
கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது குறைந்தது பாண் விலையாவது கூடுமென்று சரியாக ஊகிப்போம்.
தமிழராகப் பிறந்ததனால் ஏமாளிகள்,இளிச்சவாயர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்குத் தயாராக இருப்போம்.
எல்லாவற்றிற்குமே தமிழகத்தையும்,இந்தியாவையும், இவற்றிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, ஐரோப்பா,ஐக்கிய நாடுகள் சபையை நம்பி இருப்போம்..
(இந்தியாவிலிருந்து உதவிகள்,சினிமா,பாடல்கள்,சஞ்சிகைகள்,சேலைகள்,இன்னும் எல்லாமே.. )

நன்றி : Daily Mirror
எந்த வேளையிலும்,எந்தப் பாதையும்(வீதியும்) தற்காலிகமாகவோ,நிரந்தரமாகவோ மூடப்படும் என்பதனால் தயாராகவே இருப்போம்.
இலங்கையிலே உள்ள தொலைக்காட்சிகளிலும் கூட, இந்தியத் தமிழ்ப் படங்கள்,மெகா சீரியல்கள்,ஏன் நகைச்சுவை காட்சிகள் இன்னும் பலவும் தொடர்ச்சியாகப் பார்ப்பதிலேயே பாதி ஆயுள் கழிப்போம்.(மீதியை அறுவை பேட்டிகளிலும் ,அர்த்தமில்லா புலம்பல்களிலும், சில வேலை எங்கள் வானொலிகலோடும் போய் முடியும்)
எங்கள் குடும்பங்களில் ஒருவராவது வெளிநாடொன்றில் நிச்சயம் இருப்பார்.(குறைந்த பட்சம் இந்தியாவிலாவது)
வாரத்தில் ஒரு நாளாவது கோவில் போகிறோமோ இல்லையோ வங்கிக்கும்,சூப்பர் மார்கெட்டுக்கும்(கவனிக்க மார்க்கெட் அல்ல) போய் வருவோம்.
பொய்கள் கேட்டுப் பழகி இருப்போம்.. எல்லா இடங்கள்,தரப்புக்களிடமும் இருந்து..
நம்பிக்கையே எங்களுக்கு வாழ்க்கையாக இருக்கும்.. அவநம்பிக்கைகள் தான் அதிகமாக கிடைத்திருக்கும்.
பி.கு : இன்றைய என் பதிவை இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியும், நேற்று முதல் எங்கள் ஊடகத் துறையை தன் மேலான பார்வைக்குக் கீழ் கொண்டு வந்து எங்களையெல்லாம் காத்து ரட்சிக்க இருப்பவருமான மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றி : Sunday times
27 comments:
யதார்த்ததை பதிவாக்கியிருக்கிறீர்கள்.
உங்கள் துணிச்சல் வியக்கவைக்கிறது.
வாழ்த்துக்கள்............
“இடுக்கண் வருங்கால் நகுக.”
- ஐயன் திருவள்ளுவன்
ஹா ஹா ஹாஹா! ஹோஹோ!
ஹீஹி ஹிஹீ! ஹா ஹாஹா!
ஹோஹோ!ஹாஹா!
ஹீஹி ஹிஹீ! ஹோஹோ!
ஹா ஹா ஹாஹா! :-D
:-)
தலைப்பும் ஆக்கமும் நன்றாக இருக்கிறது
மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா
நேற்றைய தினம் இந்த செய்தியை இணையத்தில் உடாக நான் வாசிக்கும் பொது ஏனே தெரியாமல் சிலரது முகங்கள் என் கண்முன் வந்து போனது சிலவற்றை உகிக்க கூடியதாகவும் இருந்தது புது வருடம்மாம் ................
யாருக்கு என்று தெரிய வில்லை
Interesting view, nicely projected.
உண்மையை மறுக்கும் அல்லது மறைக்கும் தேசத்தின் உண்மை முகம்....
உங்களின் பதிவு உண்மையை எடுத்துக் காட்டுகிறது. எனினனும் பாண்தான் எங்கள் காலை உணவு என்பதை ஏற்க முடியாது - நீங்கள் நடுத்தர அல்லது உயர்தர வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம். அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் அப்பாவி மக்கள் பலர் வன்னியிலும் சரி ஏனைய வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் சரி ஏன் முழு நாட்டிலுமே காலை உணவைத் தவிர்த்தே வருகின்றனர்.
ஒரு அலுவல் பார்ப்பதற்கு தமிழன் படும் பாட்டை நீங்கள் குறிப்பிடவில்லையே. அது யாழ்ப்பாணம் போன்ற தமிழ்ப் பிரதேசமாக இருந்தாலும் சரி - அல்லது தலை நகர் மற்றும் மலையகப் பகுதிகளில் மக்கள் வீணாக - தமிழ் மக்கள் அல்லல் படுவதை விட்டுவிட்டீர்களே! யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கோ அல்லது ஏனைய பகுதிகளுக்குச் செல்லவோ பாதுகாப்புப் படையினரிடமும் வன்னியிலிருந்து வெளியேற விடுதலைப் புலிகளிடமும் அனுமதி பெறுவது பற்றி மூச்சே காட்டவில்லையே என்ன காரணம் என்று அறிய முடியுமா?
பொதுவாக பத்திரிகையாளர்கள் நடுநிலை தவறிவருபவர்கள் என்பது எனது அபிப்பிராயம். இதில் நீங்களும் ........... விதிவிலக்கில்லையே!
மன்னிக்க வேண்டும் நான் எதையும் வெளிப்படையாகவே சொல்பவன் - அதனால்தான் எழுத வேண்டீயிருந்தது - எழுதினேன்.
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அண்ணா.
"போலிஸ் பதிவும்,கிராம உத்தியோகஸ்தரின் சான்றிதலும், அடையால அட்டையும்தான் எங்களின் சுவாசம் இது இல்லையேல் நாங்கள் நாசம்."
எந்நாளும்,எந்நேரமும் எங்கள் வீட்டு கதவு திறந்தேயிருக்கும் படையினரின் சோதனைக்காக வேதனை தாண்டி"
உண்மையை சொல்லறதுக்கு எதுக்கு பயப்பட வேணும்,இது யாருக்கும் தெரியாத ஒன்றையும் லோஷன் எழுதவில்லையே ஏதோ புலம்பவேணும் எண்டு நினைக்கிறதை தன்னுடைய இடத்தில புலம்பி இருக்கிறார்..
இப்படி புலம்ப முடியாத நிறையப்பேர் வீட்டுக்குள் புலம்புகினை எண்டுறதுதான் உண்மை
இலங்கைல தமிழ் ஆக்கள் அரசியல் கதைக்கிற இடம் அவையவையவையின்ர வீட்டு குசினி எண்டுறது தெரியாதோ உங்களுக்கு...
லோஷன் அண்ணா..இலங்கை திருநாட்டில் உண்மையை பேசுவது என்பது மிகப் பயங்கரமானது..பேசுறத/எழுதுறத பாத்து எழுதுங்க..
அண்ணா உண்மையை அழகாக புரியவைத்து இருக்கிறீர்கள்.
EXPO AIR இல் TICKET எடுத்து பயணம் செய்வதில்லில் உள்ள கடினத்தை சொல்லலை!!!!
அங்கே மட்டும் தான் time இக்கு எல்லாம் நடக்கும் பாருங்கோ!!!
ஒருமுறை நான் 12.00 மணிக்கு 5 minutes late ஆக போனதாலை system lock ஆகி 1 மாதத்துக்கு முதல் book பண்ணின ticket cancel ஆகிடுத்து!!!!
அந்த ticket என்ன விலை போனது என்பது யாருக்கு தெரியும்!!!!!!
லோசன் அண்ணே!
ரொம்ப நாளைக்கு பிறகு அதே சூட்டோடு இந்த பதிவு..இவ்வாறே தொடர எனது வாழ்த்துக்கள் ஊடக துறையில் இருந்து கொண்டு தமிழ் பிணம் தின்னி மகிந்தா, தமிழக கருங்காலிகளின் முகத்திரையை நாசுக்காக கிழிக்க வேண்டுகிறேன்
ஓ அப்போ..ஏராளமான பேர் தான் EXPO AIR அராஜகங்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீங்கள் போல..
Nice Post..What you said was entirely true.
யதார்த்தத்தை குறிப்பிட்டுள்ளீர்கள், தமிழனாக பிறந்தால் கைது என்பது மட்டுமல்ல,இப்போது உண்மையை பேசுகிறவர்களும் கைது செய்யப்படும் நிலைமை,
ம்ம்ம்! இதையெல்லாம் யாரிடம் போய் சொல்வது.
நம்பிக்கையே எங்களுக்கு வாழ்க்கையாக இருக்கும்.. அவநம்பிக்கைகள் தான் அதிகமாக கிடைத்திருக்கும்.//
லோசன் கலக்குறீங்கள்..... உள்ளூரில் கலைஞர்கள் இருக்க தென்னிந்திய கலைஞர்களை அழைத்து வந்து எம் நாட்டில் நிகழ்ச்சி நடத்துபவர்களை விட்டு விட்டீர்களே???? இன்னும் நிறைய நிறைய இத்தியாதி விடயங்கள்........பதிவு யதார்த்தம்,, அனுபவம் நிறைந்த ஓர் ஆய்வு... தொடருங்கோ.....
Congratulations Mr. Loshan.
Readers please enter into this web site also which publish in more than 12 languages including Tamil. World Socialist Web Site. www.wsws.org.
Regards,
Samhirdi
ok brother very good article.one question why prahba decide to vote mr rajapakse on presitent election
Very good work. Keep on doing it but be careful.
சஞ்சய்.. இதிலேன்னைய்யா துணிச்சல் இருக்கு? உண்மையை சொன்னேன். :) நன்றி
ஆதித்தன்.. அவருக்கென்ன சொல்லிடு போய்ட்டாரு,, அதுக்காக இப்படியா சிரிக்கிறது?
டொன் லீ :) :)
நன்றி வதீஸ்..
அனானி.. எனது முகம் வராமலிருக்கும் வரை நிம்மதி.. ;)
விபுலானந்தா , நன்றி
சுகன், ஒரே முகம் தான்.. பற்பல முகமூடிகள் பல நாடுகளில்.. ;)
தங்கமுகுந்தன், பொதுவாக சில குணங்களைத் தான் நான் இங்கே சொன்னேன்.. இலங்கை என்று சொன்னதாலேயே தமிழர்,சிங்களவர் என்று பிரித்து நான் சொல்லவில்லை..
பத்திரிக்கையாளர் என்று சொல்கிறீர்களா அல்லது ஊடகவியலாளர் என்று சொல்கிறீர்களா? காரணம் நான் பத்திரிகையாளன் என்ற வகைக்குள் அடங்க மாட்டேன்..
அடுத்தது இலங்கையில் வாழாத எவரும் இலங்கையில் இருந்து ஊடகங்களில் தொழில் புரியும் எம் போன்றவரின் நிலை புரியாது என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..இலங்கையின் எல்லை தாண்டியதன் பின்னர் எதை வேண்டுமானாலும்,எவர் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.. ஆனால் இங்கிருக்கும் போது????
இன்று சகோதர மொழி பேசும் லசந்தவுக்கு என்னாயிற்று?
அதனால் இப்போதைக்கு நாம் எல்லோருமே.. பே பே பே தான்.. (வாயிருந்தும் பேசத் தெரிந்த ஊமைகள்)
கலை.. உண்மை தான்.. இந்த கட்டாய ஏற்பாடுகள் இப்போ இனம்,பிரதேசம் தாண்டி தமிழருக்கு மட்டுமல்லாமல் சிங்களவருக்கும் ஏற்பட்டிருப்பது தான் கொஞ்சம் வித்தியாசம்..
கிங், அது தானே.. வாங்கய்யா நம்ம பக்கம்.. நாங்கள் எல்லாம் புரட்சி வாதிகள் இல்லை.. புலம்பல் வாதிகள்.. ;)
ஆனா ஒரு விஷயம் இப்ப குசினி சுவர்களுக்கும் காதுகள் உண்டு..
நன்றி தியாகி என் மீதான அக்கறைக்கு..
நன்றி அனானி.
அனானி, இது பற்றி நிறையப் பேர் சொல்லி அழுதது கேட்டுள்ளேன்.. :(
அட்டாக். இப்ப சந்தோஷமா? ;) இல்லண்ணே நீங்க சொன்ன எல்லாம் விளங்குது. அந்த ஒரு பெயர் மட்டும் விளங்கல அண்ணே..
சிவபாலன், அப்படித் தான் சொல்கிறார்கள்..
wellwisher, நன்றி
நஜிமுதீன்.. ம்ம்ம்ம்
கமல், நன்றி.. ம்ம்ம் விடமாட்டீங்களே.. ஹி ஹி.. அவை பற்றித் தாக்கிறதுக்கு அருகதை தேடிக் கொண்டிருக்கிறேன்.. தகுதி வந்தபிறகு பார்க்கலாம்..
samhirdi, :)
anonymous, you have to ask him..:)
நன்றி பாபு.. அப்படித் தான் இருக்கிறேன்.. ;)
வாழத்துக்கள் லோசன் பாராட்டுக்கள் உங்களுடைய எழுத்துக்கள் வியக்கவைக்கின்றன
though late, i just read this and enjoyed!
Very good.
இந்த தங்கமுகுந்தன் என்பவர் ஆனந்தசங்கரியின் காலை நக்கி வாழ்க்கை நடத்தியவர். இவர் இப்போ பெரிதாக கதைக்க வந்துவிட்டார். என்ன கொடுமை
Post a Comment