வானொலி ஒலிபரப்பு என்பது ஒரு டென்ஷன் மிகுந்த,பரபரப்பான தொழில் என்றாலும் கூட அன்றாடம் நடக்கின்ற பல்வேறு கலகலப்பான நிகழ்வுகளால் மன இறுக்கங்கள் குறைந்து நாமும் புத்துணர்ச்சி பெறுவதுண்டு..
அந்த வேளைகளில் பெரும் பிழையாக இருந்து எங்களுக்கு சங்கடங்களைத் தருகின்ற பல விடயங்கள் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நினைவுகளில் மீட்டிப் பார்க்கும் போது மிக வேடிக்கையான விஷயமாக மாறிப் போவதுண்டு..
அவற்றில் சில இங்கே வறுவல்களாக ..
(அவியல்,கூட்டு,கிச்சடி எல்லாம் போட்டுட்டாங்க ..வானொலிக்குப் பொருத்தமாக நான் வறுவல்கள் என்று பெயர் வைத்தேன்)
###################
நடக்காத போட்டியின் ஸ்கோர்
ஒருமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வந்திருந்தது.அப்போது நான் ஷக்தி FMஇல் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.வழமை போல இடையிடையே கிரிக்கெட் ஸ்கோர் விபரங்களைப் பாடல்களுக்கிடையில் கொடுத்துக் கொண்டிருந்தோம்.வழமையாக டிவியில் போட்டிகள் காட்டப்பட்டால் நேரடியாக அதைப் பார்த்தே ஸ்கோர் சொல்வதுண்டு.. தொலைக்காட்சியில் காட்டப்படாத போட்டிகளாயின் மட்டும் இணையத்தளங்கள் மூலமாக ஸ்கோர் விபரங்களைப் பார்த்து அறிந்து நேயர்களுக்கு வழங்குவோம்..
அன்றும் அதுபோலத் தான் தொலைக்காட்சியில் பார்த்து ஸ்கோர் விபரங்களைக் கொடுக்கலாம் என்று எண்ணி இருந்த நேரம்.. மழை காரணமாக அன்றைய நாள் ஆட்டம் ஆரம்பமாவது தாமதமாகியது - அது ஒரு டெஸ்ட் போட்டி.(இலங்கையில் எந்த கிரிக்கெட் அணியாவது விளையாட வந்தால் ஒன்றில் குண்டு வெடிக்கும்,இல்லை மழை பெய்யும்)
என்னுடைய நிகழ்ச்சி முடிந்து வந்து நான் அலுவலக அறைக்குள் இருக்கிறேன். உள்ளே வானொலியில் நிகழ்ச்சி கேட்டுக் கொண்டே நான், இன்னும் அங்கிருந்த ஒரு சிலரும் பேசிக் கொண்டிருந்தோம்..
கிரிக்கெட் போட்டி நடிபெராதது பற்றி, நேற்று நடந்த ஆட்டத்தின் சில கட்டங்கள் பற்றி,இன்னும் ஏராளமான விஷயங்கள் பற்றி கதை போய்க்கொண்டிருந்தது..
சற்று வானொலிப் பக்கம் காதை திருப்பினால் கடமையில் இருந்த அறிவிப்பாளர் கிரிக்கெட் ஸ்கோர் விபரங்கள் கொடுக்கிறார். "இதோ இன்சமாம் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுகிறார்.. வேகமாக ஓட்டங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் வேகமாக ஓட்டங்கள் பெறப்படுகின்றன" இப்படி சரமாரியாக விபரங்கள் சொல்லிக் கொண்டுபோகிறார்.
என்னடா இது வெளியிலே மழை விட்ட மாதிரி இல்லையே.. எப்படி போட்டி நடக்கும் என்று பார்த்தால், "இதோ இன்சமாம் அதற்குள் அரைச் சதத்தைக் கடந்து விட்டார்.. மிக வேகமான இன்னிங்க்ஸ்.. நம்பவே முடியவில்லை.. இவ்வளவு வேகமான டெஸ்ட் இன்னிங்க்ஸ்"என்று நம்மவர் பிளந்து கட்டுகிறார்..
அப்போது தான் எனக்குப் பொறி தட்டியது.. அடப்பாவி இன்சமாம் நேற்றே அரைச் சதம் அடிச்சு ஆட்டமும் இழந்தாச்சே.. பிறகெப்படி இன்று மறுபடியும்?
பதறியடித்துக் கொண்டு கலையகதுக்குள் ஓடினால் நம்ம அறிவிப்பாளர் கூலாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு தலையாட்டிக் கொண்டே டிவியில் போகும் ஹைலைட்ஸ் பார்த்துக்கொண்டு ஸ்கோர் விபரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்..
வந்த கோபத்தில் திட்டு திட்டு என்று திட்டிவிட்டு வந்தாலும், சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..
கொஞ்ச நாளுக்கு அவரது பெயரே ஹைலைட்ஸ் என்று மாறிப்போனது..
###################################
குனித்த புருவமும் ராக்கம்மாவும்
இதுவும் 99-2000 காலத்தில் நடந்த நிகழ்வு..
அதிகாலைவேளையில் பக்திப் பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி இருந்தது.. (இப்பவும் தான்)
அதைப் பொதுவாக இரவுக் கடமையில் இருக்கும்(நள்ளிரவு முதல் அதிகாலை ஆறு மணிவரை) அறிவிப்பாளர் தொகுத்து வழங்க வேண்டும்.
நான் ஒரு நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் வந்து ஆறுமணிக்குப் பொறுப்பேற்றுக் கொள்வேன்.. அந்த நேரம் மாற்ற போட்டி வானொலிகளையும் கேட்டுக் கொள்வதுண்டு..என்ன நடக்குதென்று பார்க்க..
அன்றொரு நாளும் இப்படித் தான் பயணம் செய்த அலுவலக வாகனத்தில் நம்ம போட்டி வானொலியைக் கேட்டுக் கொண்டே பயணித்தேன்.. வேடிக்கைக்குப் பெயர் போன அந்த அறிவிப்பாளர் பக்திப் பாடல்கள் ஒலிக்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
அவர் ஏதாவது வித்தியாசமாக,வேடிக்கையாக செய்வார் என்பதால் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டே இருந்தேன்.
வழமையான பக்திப் பாடல்களாக அல்லாமல், கிறீஸ்தவ,இஸ்லாமியப் பாடல்களோடு, இந்து மதப்பாடல்களை மட்டும் திரைப்படங்களில் வந்த பக்திப்பாடல்களாய்ப் பார்த்து தெரிவு செய்து தந்துகொண்டிருந்தார்..
இடையில் ஒலித்தது "குனித்த புருவமும்..".. உடனேயே எனக்கு விளங்கிவிட்டது அது தளபதி திரைப்படத்தில் வந்த ராக்கம்மா கையத் தட்டு பாடலின் இடையிலே வரும் தேவாரப் பகுதியென்று..ஆகா நுணுக்கமாக எடிட் செய்து ஒலிபரப்புராரே என்று மனதுக்குள் நினைத்தபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.. அப்படியே அந்தத் தேவாரம் முடிந்து எஸ்.பீ.பீ "அடி ராக்கம்மா கையத் தட்டு" என்று விரல் சொடுக்கிக் கொண்டு தொடங்கி விட்டார்..
நம்ம வேடிக்கை மனிதர் பாட்டை வெட்டுவதாக இல்லை.. ஒன்றிரண்டு நிமிடங்கள் போன பிறகு தான் அவசர அவசரமாக "பக்திப் பாடல் ஒன்று(!) கேட்டீர்கள்" என்ற அவரின் அறிவிப்பு பாடலை இடைவெட்டி வந்தது..
மாலையில் அவரது வானொலியைச் சேர்ந்த இன்னொரு நண்பர் மூலமாகத் தான் தெரியவந்தது அந்தப் பாடலின் இடையே நம்ம அறிவிப்பாளர் தூங்கிவிட்டார் என்று..
அதற்கிடையில் தான் ராக்கம்மா பக்திப்பாடலுக்கிடையில் வந்திருக்கிறார்.
##########################
இன்னும் பல வரும்.. வறுவல்கள் மூலமாக யாரையும் பெயர் சொல்லி வறுப்பதாய் எண்ணமில்லை..ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் வானொலிகள் கேட்டவர்களுக்கு இலகுவாக ஊகிக்கலாம்..
மீதி வறுவல்கள் நாளை மாலை..
30 comments:
i didn't read yet
so I'll post my next comment after reading.......
வானொலி கேட்டதேயில்லை.
ஆனாலும்
கற்பனை செய்து பார்த்த போது சிரிப்பு வந்தது...
கிரிக்கெட் நிகழ்வு பயங்கரம்..:P
சுவாரசியம்!!:-))
அண்ணா தலைப்பை பார்த்தவுடனேயே எதோ வில்லங்கம் இருக்கு என்று புரிந்துவிட்டது.
நண்பியுடன் சேர்ந்து வாசித்தேன்............
நன்றாக சிரித்தோம்.
என்ன அண்ணா...... வலைப்பூவுடன் நேரத்தை செலவிடுவதாக முடிவு செய்துள்ளீர்களோ....?
நாளை வெற்றியின் விடியலில் சந்திக்கலாம்........
Sinthu
Bangladesh
ஹா..ஹா..நல்ல வர்ணனையாளர்கள். நல்ல வேளை நேற்று நடந்த மேட்சை ஐலைட்ஸாக போட்டார்கள். இதே இலங்கை வேறு நாட்டினருடன் விளையாடிய பழைய மேட்சை போட்டிருந்தால் இன்னும் காமெடியாக இருந்திருக்கும் :-)
இது எந்த வானொலி யார் அறிவிப்பாளர் என சொல்ல மாட்டேன்.
நடந்தது இதுதான்
வணக்கம்
வணக்கம்..
யார் போசுகிறீர்கள்?
....
....
.....
.....
திருமணமாகி விட்டதா?
இல்லை..
நல்லது எத்தனை குழந்தைகள் ?
??????
லோசன் முந்தி 1999/2000 ம் என்று நினைக்கிறேன். இலங்கை வானொலியில் ஒரு பெண் அறிவிப்பாளர் செய்தி வாசித்தவா?? எப்படி என்று தெரியுமோ??? ''சிறு நீர் சேகரிப்புத் திட்டத்திற்கு அரசாங்கம் குளங்களை அமைத்து பல நவீனமுறையில் ஊக்குவிப்புக்களை வழங்கவுள்ளதாம். இதில் ஆர்வமுள்ளவர்க்ள் உடனடியாக தமது தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம்,..... என்ன ஏதாவது புரியுதோ???
யோ அந்தாள் பாவம்...முந்தி சனிக்கிழமை என்றால் அந்தாளின்ர இரவுக்கு எல்லோரும் றேடியோவுக்குப் பக்கத்தில இருப்பினம்..... பாவம் அந்த பா......வி.. அது சரி உதே போல் தான் 2004 இல் உங்கட போட்டி வானொலியில் ஒரு பெண் அறிவிப்பாளினி சமையல் குறிப்பு வாசித்தவா??? எப்படி என்று தெரியுமோ???? ''அவருக்காய் சமையல் செய்வது எப்படி??? தேவையான பொருட்கள்.. அவரைக்காய்....மற்றும்,.... அவா எல்லாம் சொல்லி முடித்து ஒரு பாடலை ஒலிபரப்பிய பிறகு தான் என்ன சொன்னா தெரியுமோ?? நேயர்களே மன்னிக்கவும்.. அது 'அவருக்காய் சமையல் அல்ல. அவரைக்காய் சமையல் செய்வது எப்படி???? இது எப்படி?????
சமையல் குறிப்பு பற்றிக் கேட்க ....
http://melbkamal.blogspot.com/2008/11/blog-post_29.html
He is an idiot!
Hi Loshan,
nice article,
Can't u tell abt ur old Sooriyan FM incidents? It will be more funny.
Waiting for ur next article.
PS-I don't know, how to type in Tamil. Very sorry abt that.
Ram-UK
சயந்தன் குறிப்பிட்ட சம்பவம் சூரியனில் நடந்தது. இது பற்றி ஒரு நிகழ்ச்சியே (ஆண்டு விழா) நடந்தது. அதாவது எல்லா அறிவிப்பாளர்களும் தாங்கள் விட்ட பிழைகளை சொல்லவேண்டும். அப்போது அந்த பெண் அறிவிப்பாளர் இதனைக் குறிப்பிட்டார். (பெயர் சொல்ல விரும்பவில்லை).
லோசன் அண்ணா அப்போது சக்தியில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்..
ஹா ஹா ஹா
வறுவல்கள் சிறப்பாக உள்ளன..நாளையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் :)
ஹா ஹா ஹா
வறுவல்கள் சிறப்பாக உள்ளன..நாளையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் :)
இந்தப்பக்கம் நாளை மாலையும் நிச்சயம் வருவேன்.
LOL, was funny to read. நாளை பதிவை எதிர்பார்க்கிறோம்..:)
@சயந்தன்: Hehe :)
மீதி வறுவல்களுக்காக........
வறுவல்கள் மிக(நகை)ச்சுவை
YA YA.... I CAN REMEMBER THOSE FUNNY INCIDENTS....U HAD MENTIONED........
AWAITING REST........
(VAANOLI VARUVALHAL)
U HAD GIVEN A CATHCHY NAME FOR THIS STUFF .....
இதே கூத்து இங்கும் ஒரு முறை நடந்தது
நியூசிலாந்துடன் (1999 என்று நினைக்கிறேன்) ஒரு டெஸ்ட் போட்டி மழையால் தடைபட அதில் முந்தைய ஆட்டத்தை ஒலிபரப்பிணார்கள்
காலை செய்திகளில் அந்த பழைய ஆட்டத்தின் ஸ்கோரை கூறிவிட்டார்கள்
:)
அண்மையில் நடந்த ஒரு வறுவல்
ஒரு பிரபல வானொலியில் மதிய உணவுவின் மறுபெயர் கொண்ட நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் பெயரைக்கொண்ட அறிவிப்பாளர் ஒரு நேயருடன் கதைத்துவிட்டு அந்த நேயர் அவரைப் பற்றி சொல்லிய கவிதையில் மயங்கி நான் என் குரலால் தான் சுவாசிக்கின்றேன் என்றார். எனக்கு சிரிப்புத் தாங்கமுடியாமல் பஸ்சினுள் சிரித்துவிட்டேன் ஏனையோர் வித்தியாசமாகப் பார்த்தாகள்.
அண்ணா மிக மிக சுவாரசியம் நன்றாக சிரித்தேன்................. நாளையுன் எதிர்பார்க்கிறேன்
Thusha
Bangladesh
இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் உங்கள் ரசிக, ரசிகைகள் இங்கையும் படுத்திறாங்களே.. வலைப்பதிவிலாவது லோஷனை லோஷனாக விட்டு வைங்கப்பா...
எரிச்சலாக இருக்கு...
நன்றி சிந்து.
தூயா, கேட்காதது நல்லதுன்னு இப்ப யோசிக்கிறீங்களா?
ஆமாம் அப்போ அது பயங்கரம்.. இப்ப அதுவே வறுவலாய் ..
(உங்க ட்ரேட் மார்க் சிரிப்பைக் காணவில்லை)
நன்றி சந்தனமுல்லை..
சிந்து, இந்த வாரம் கூட செலவிடவில்லை என்றால் எப்படி.. விடியலையும் விடமாட்டேன்.. நன்றி
நான் ஆதவன்,, உண்மை தான்.. அதுவும் டெஸ்ட் மேட்ச் நேரம் ஒரு நாள் போட்டி ஸ்கோர் சொல்லி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ;)
நானும் கேள்விப்பாடேன் சயந்தன்.. ஆனா கேக்கலை..ஆனா அந்த நேரம் அந்த வானொலியில் நான் இல்லை.. (அப்பாட அது நான் இல்லை என்று சொல்லியாச்சு)
கமல், ஹீ ஹீ.. நல்லாவே விளங்கிச்சு..
ம்ம்ம் அது நான் கேட்டபோது நடந்தது.. விழுந்து விழுந்து சிரித்தேன்.. (உந்த நேரமும் நான் அங்கே வேலை செய்யல ;) )
நன்றி கமல்..
அனானி.. யாரைப் பற்றி சொன்னீர்கள்? யாராக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்களே அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவேண்டும் ;)
நன்றி ராம்.. ஆங்கிலம் என்றாலும் பரவாயில்லை.. படித்து, ரசித்தாலே (அது ரொம்ப முக்கியம்) போதும். நிச்சயமாக எழுதுகிறேன்
He will accept ;)
இதெல்லாம் வானொலியில சகஜமப்பா!!! 22 வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்தது, 60 வயது யுவதி காணாமற்போயுள்ளார்.. என்று செய்தியே வாசிச்சிருக்கிறம்..
புருனோ.. :) :)
நன்றி கிங்
வந்தி.. ஹையோ ஹையோ.. நானும் அந்தக் கூத்தைக் கேட்டுக் கொண்டு தானிருந்தேன்..உங்கள் பின்னூட்டத்தை சம்பந்தப் பட்டவரிடமே படித்தும் காட்டினேன்..இன்று அலுவலகம் முழுவதும் சிரிப்போ சிரிப்பு..
நன்றி துஷா
முடியல, உங்க துன்பம் விளங்குது,,எனக்காகவும் நீங்கள் கொண்ட அக்கறையும் தெரியுது..நான் எங்கேயும் நான் தான் என்ற காரணத்தால்,எனக்கு இது பெரிதாக சிரமம் இல்லை.. :)
வாங்க கிருஷ்ணா, அது சரி.. உதைப் பற்றியும் எழுதலாம் என்று தான் நினைத்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க..
எத்தனையைக் கண்டிட்டோம்.. ;)
ஆமாம் டொன் லீ சரியாக ஞாபகம் வைத்துள்ளீர்கள்.. நான் அந்த நேரம் ஷக்தியில் என்பதும் சரியே..
நன்றி ரிஷான் .. இன்றைய வறுவலும் சிரிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன்..
நன்றி ஆதிரை
நன்றி மது.. இன்றும் வறுத்துள்ளேன் :)
நன்றி கலை, அக்னிப்பார்வை
நன்றி Dyena,
tx for the appreciation.. as a genuine listener from those days i m sure you know the persons too.. :)
Post a Comment